15.09.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது அமரத்துவ பூமிக்கான யாத்திரையில் இருக்கின்றீர்கள். இது உங்களின் புத்திக்கான ஆன்மீக யாத்திரையாகும்; உண்மையான பிராமணர்களாகிய உங்களாலேயே இந்த யாத்திரை செல்ல முடியும்

கேள்வி:
நீங்கள் உங்களுடனே பேச வேண்டிய விடயங்கள் எவை? ஓர் ஒன்றுகூடல் மங்களகரமாக இருப்பதற்கு, நீங்கள் உங்கள் மத்தியிலே எதனைக் கூற வேண்டும்?

பதில்:
உங்களுடனேயே பேசுங்கள்: ஆத்மாவாகிய நான், எனது அசுத்தமான, பழைய சரீரத்தை நீக்கி, வீடு திரும்புவேன். இந்தச் சரீரத்தால் எந்தப் பயனும் இல்லை. நான் இப்பொழுது பாபாவுடன் வீடு திரும்புவேன். நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது, எவ்வாறு சேவையை விரிவாக்குவது என்றும், அனைவருக்கும் எவ்வாறு நன்மை பயக்க முடியும் என்றும், எவ்வாறு அனைவருக்கும் பாதையைக் காட்டலாம் என்றும் உங்கள் மத்தியிலே பேசுங்கள். இதுவே ஒரு மங்களகரமான ஒன்றுகூடல் என அழைக்கப்படுகின்றது.

பாடல்:
இதயத்தின் ஆதாரம் துண்டிக்கப்படக்;கூடாது!

ஓம் சாந்தி.
அனைத்து நிலையங்களிலும் உள்ள பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களான, பிராமணக் குலத்தின் அதிமேன்மையான அலங்காரங்கள் அனைவரும், தாங்கள் எந்தக் குலத்திற்கு உரியவர்கள் என்பதையும், அது தாழ்ந்த குலமா அல்லது நல்ல குலமா என்பதையும் அறிவார்கள் என இனிமையிலும், இனிமையான ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொருவரும் தனது சொந்தக் குலத்தை அறிவதுடன், ஒருவருடைய குலம் நல்லது என்பதையும் புரிந்துகொள்கின்றார். நீங்கள் அதைக் குலம் அல்லது சாதி என்று அழைத்தாலும், பிராமணர்களாகிய உங்களைத் தவிர, உலகிலுள்ள எவருமே, பிராமணக் குலமே அனைத்திலும் அதிமேன்மையான குலம் என அறியார். பிராமணர்களாகிய உங்களது குலமே முதல்தரமான குலமாகும். பிராமணக் குலமே, இறை குலமாகும். முதலில் நீங்கள் அசரீரியான குலத்தில் இருக்கின்றீர்கள், பின்னர் நீங்கள் சரீர உலகிற்கு வருகின்றீர்கள். சூட்சும உலகில் எந்தக் குலங்களும் இருப்பதில்லை. பௌதீக ரூபத்தில் உள்ள அனைத்திலும் அதிமேன்மையான குலம் பிராமணர்களுடைய உங்களுடையதாகும். உங்கள் மத்தியிலும் பிராமணர்களான நீங்கள் சகோதர, சகோதரிகளாக இருக்கின்றீர்கள். நீங்கள் சகோதர, சகோதரிகளாக இருப்பதால், விகாரத்தில் ஈடுபட முடியாது. தூய்மையாக இருப்பதற்கான மிக நல்ல வழி இதுவென நீங்கள் அனுபவரீதியாகக் கூறலாம். நீங்கள் ஒரு பிரம்மாகுமார் அல்லது குமாரி என நீங்கள் ஒவ்வொருவரும் கூறுகின்றீர்கள். அனைவரும் சிவனின் குலத்திற்குச் சொந்தமானவர்கள், நீங்கள் சரீர ரூபத்திற்கு வருகின்றபொழுது, பிரஜாபிதாவின் பெயர் இருக்கின்றமையால், நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளாவீர்கள். பிரஜாபிதா பிரம்மா இருப்பதால், அவர் நிச்சயமாகப் படைப்பதுடன், தத்தெடுக்கின்றார். நீங்கள் கருப்பை மூலம் பிறந்த பிறப்பல்ல, ஆனால் வாய்வழித்தோன்றல் ஆவீர்கள். மக்கள் கருப்பை மூலம் பிறந்த படைப்பு அல்லது வாய்வழித் தோன்றல் என்பதன் அர்த்தத்தையேனும் புரிந்துகொள்வதில்லை. வாய்வழித் தோன்றல் என்றால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பதாகும். கருப்பை மூலம் பிறந்த படைப்பு என்றால் பிறப்பெடுக்கின்ற குழந்தைகளாவர். இது உங்கள் ஆன்மீகப் பிறப்பாகும். லௌகீக, ஆன்மீக, அப்பாலுள்ள உலகத் தந்தையர்கள் உள்ளனர். பிரஜாபிதா பிரம்மா, சூட்சுமத் தந்தை என அழைக்கப்படுகின்றார். அனைவருக்கும் ஒரு லௌகீகத் தந்தை உள்ளார்; அது பொதுவானது. உலகிற்கு அப்பாலுள்ள தந்தையும் அனைவரதும் தந்தையாவார். பக்தி மார்க்கத்தில் அனைவரும் ஓ கடவுளே! ஓ பரமாத்மா பரமதந்தையே! எனக் கூவி அழைக்கின்றனர், ஆனால் எவருமே எப்பொழுதும் இவ்விதமாக இந்த பாபாவைக் (பிரஜாபிதா பிரம்மா) கூவியழைப்பதில்லை. இவர் பிராமணக் குழந்தைகளின் பாபா ஆவார். அனைவரும் அந்த இரு தந்தையரையும் அறிவார்கள், ஆனால் பிரம்மா சூட்சும வதனத்தில் இருப்பதாக அவர்கள் நம்புவதால், பிரம்மாவின் படத்தின் மூலம் அவர்கள் குழப்பமடைகின்றார்கள்;; அவர் இங்கே காட்டப்படவில்லை. அவர்களுடைய பிரம்மாவின் படங்களில், அவரைத் தாடி, மீசையுடன் சித்தரித்துள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மா இந்த உலகில் இருப்பதானாலேயே இவ்வாறு காட்டப்பட்டுள்ளது. சூட்சும உலகில் மக்களை உருவாக்க முடியாது. இது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இந்த ஆன்மீக யாத்திரையும் நினைவுகூரப்படுகின்றது. இந்த ஆன்மீக யாத்திரையானது நீங்கள் திரும்பி வராத ஒன்றாகும். அனைவரும் பிறவிபிறவியாக ஏனைய யாத்திரைகளுக்குச் செல்கின்றார்கள்; அவர்கள் அங்கே சென்று, பின்னர் திரும்புகின்றார்கள். அவை லௌகீக யாத்திரைகள், ஆனால் இது உங்களின் ஆன்மீக யாத்திரையாகும். இந்த ஆன்மீக யாத்திரை செல்வதன் மூலம் நீங்கள் மரணபூமிக்குத் திரும்ப மாட்டீர்கள். தந்தை அமரத்துவ பூமிக்கான யாத்திரையையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்கள் காஷ்மீருக்கு அருகிலுள்ள அமர்நாத்திற்கு யாத்திரை செல்கின்றார்கள். அது உண்மையில் அமரத்துவமான பூமியல்ல. ஓர் அமரத்துவ பூமி ஆத்மாக்களிற்கு உரியது, மற்றையது மனிதர்களுக்கானது; அது சுவர்க்கம் அல்லது அமரத்துவ பூமி என அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்கள் நிர்வாணா தாமத்திற்குச் சொந்தமானவர்கள். அமரத்துவ பூமி, சத்தியயுகமும், மரணபூமி கலியுகமுமாகும். நிர்வாணா தாமமே, ஆத்மாக்கள் வசிக்கின்ற, அமைதி தாமமாகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது அமரத்துவ பூமிக்கான யாத்திரையில் உள்ளீர்கள். அந்த யாத்திரைகள் அனைத்தும் அவர்கள் கால்நடையாகச் செல்கின்ற, பௌதீக யாத்திரைகளாகும். இந்த யாத்திரை ஆன்மீகமானது. ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே இதை உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஒருமுறையே தந்தை வந்து, அதனைக் கற்பிக்கின்றார். மற்றையது நீங்கள் பிறவிபிறவியாகச் செயவதாகும். இதுவே மரணபூமியின் இறுதி யாத்திரையாகும். பிராமணக் குல அலங்காரங்களான நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். ஆன்மீக யாத்திரை என்றால் நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதாகும். நினைவுகூரப்படுகின்றது: உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். நீங்கள் பாபாவின் வீட்டையே நினைவுசெய்கின்றீர்கள். நாடகம் இப்பொழுது முடிவடையவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இது ஒரு பழைய ஆடையும், பழைய சரீரமுமாகும். ஆத்மாவில் கலப்படம் கலக்கப்பட்டவுடன், அது சரீரத்திலும் கலக்கப்படுகின்றது. ஆத்மாக்களான நீங்கள் தூய்மையாகுகின்றபொழுது, தூய சரீரங்களைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். வெளியிலுள்ள மக்கள் இதில் எதையுமே புரிந்துகொள்வதில்லை. அவர்களில் சிலர் புரிந்துகொள்வதை உங்களால் காண முடியும். ஏனையோரின் புத்தியில் எந்த ஞானமும் இருப்பதில்லை. ஒருவர் புரிந்துகொண்டால், அவர் நிச்சயமாக ஏனையோருக்கும் விளங்கப்படுத்துவார். மக்கள் யாத்திரை செல்லும்பொழுது, தூய்மையாக இருக்கின்றார்கள். பின்னர் அவர்கள் வீடு திரும்பும்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். அவர்கள் ஓரிரு மாதங்களுக்குத் தூய்மையாக இருக்கின்றனர். யாத்திரை செல்வதற்கான பருவ காலங்களும் உள்ளன. ஒருவர் எப்பொழுதும் யாத்திரை சென்று கொண்டிருக்க முடியாது. மழைக்காலமாக அல்லது குளிராக இருக்கின்றபொழுது, எவருமே செல்லமுடியாது. உங்களுடைய யாத்திரையில் சூடு அல்லது குளிர் என்ற கேள்வியே இல்லை. நீங்கள் உங்களின் தந்தையின் வீட்டுக்குச் செல்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்தியால் புரிந்துகொள்ள முடியுயும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நாங்கள் தந்தையின் வீட்டுக்குச் சென்று, பின்னர் புதிய உலகிற்குச் செல்வோம். பாபாவே இதை விளங்கப்படுத்துகின்றார். இங்கே குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். உண்மையில் நீங்கள் இந்த யாத்திரையை மறக்கக்கூடாது, ஆனால் மாயை உங்களை இதை மறக்கச் செய்கிறாள். இதனாலேயே நீங்கள் பாபா, நான் உங்களை நினைவுசெய்ய மறந்துவிட்டேன் என எழுதுகின்றீர்கள். ஓ! நினைவு யாத்திரையே உங்களை என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆக்குகின்றது, இருந்தும் நீங்கள் இந்த மருந்தை எடுக்க மறக்கின்றீர்கள்! தந்தையை நினைவுசெய்வது மிக இலகுவானது எனவும் நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் உங்களுடனேயே பேச வேண்டும்: ஆத்மாவாகிய நான், முதலில் சதோபிரதானாக இருந்தேன், நான் இப்பொழுது தமோபிரதானாகி விட்டேன். சிவபாபா எங்களுக்கு மிக நல்ல வழிமுறையைக் காட்டுகின்றார், ஆனால் நாங்கள் அதைப் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் சிந்திப்பதற்குக் கண்களை மூடத் தேவையில்லை. (பாபா இதைச் செய்து காட்டினார்.) இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள்: ஆத்மாவாகிய நான், சதோபிரதானாக இருந்து, அங்கே ஆட்சிசெய்தேன், அது சத்தியயுகத்து உலகமாக இருந்தது, பின்னர் நாங்கள் திரேதா, துவாபர, கலியுகங்களுக்குள் சென்றோம். இது இப்பொழுது கலியுக இறுதியாகும், இதனாலேயே பாபா வந்துள்ளார். பாபா ஆத்மாக்களாகிய எங்களுக்கே கூறுகின்றார்: என்னையும், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அந்த வீட்டையும் நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்களுடைய இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். நீங்கள் அங்கே திரும்பிச் செல்ல வேண்டும். அதிகாலை வேளையில் விழித்தெழுந்து, உங்களுடனேயே பேசுகின்ற இந்த வழிமுறையைத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். எவ்வாறு தானும் அதிகாலை வேளையில் விழித்தெழுந்து ஞானக்கடலைக் கடைகின்றார் என்பதை இவர் உங்களுக்கு நடித்துக் காட்டுகின்றார். நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதிகாலை வேளையின் பிரபுவே, எனக்கு ஒரு நல்ல வாடிக்கையாளரைத தாருங்கள்!; அந்தப் பிரபுவை நினைவுசெய்வதனால், உங்கள் படகு அக்கரை செல்லும். தான்; என்னவெல்லாம் செய்தார், எப்படிச் செய்தார் என்று பாபா குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதில் முரண்படுதல் என்ற கேள்வியே இல்லை. இதுவே ஒரு வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான மிக நல்ல முறையாகும். அல்பாவை நினைவுசெய்வதனால், நீங்கள் நிச்சயமாக இராச்சியத்தைப் பெறுவீர்கள். நீங்கள் இராஜயோகம் கற்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபாவே விதையானவரும், ஞானம் நிறைந்தவருமாவார். நாங்களும் விருட்சத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளோம்; இது வெளிப்படையான ரூபத்தில் உள்ள ஞானமுமாகும். ஆரம்பத்தில் எவ்வாறு விருட்சம் வளர்கின்றது, எவ்வாறு அது இறுதியை அடைகின்றது, எவ்வாறு புயல்கள் வருகின்றபொழுது, இலைகள் வீழ்கின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். எவ்வாறாயினும் மனித உலக விருட்சத்தின் முதல் அத்திவாரமான, தேவதர்மம் மறைந்து விட்டது. அது நடைபெற வேண்டும். அது மறைகின்றபொழுது மாத்திரமே மீண்டும் ஒருமுறை ஒரே தர்மத்தின் ஸ்தாபனையும், எண்ணிக்கையற்ற மதங்களின் அழிவும் உள்ளன என்று கூறப்பட முடியும். இந்தத் தர்மம் ஒவ்வொரு சக்கரத்திலும் மறைந்து விடுகின்றது. ஆத்மாக்களில் கலப்படம் கலக்கப்படும்பொழுது, ஆபரணங்களும் போலியானவை ஆகுகின்றன. ஆத்மாக்களாகிய எங்களில் கலப்படம் உள்ளது என்றும், நாங்கள் இப்பொழுது சுத்தமாகி ஏனையோருக்கும் பாதையைக் காட்ட வேண்டும் என்றும் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். உலகம் தமோபிரதானானது. முதலில் அது சதோபிரதான் சுவர்க்கமாக இருந்தது. ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலை வேளையில் விழித்தெழுந்து, உங்களுடனேயே பேச வேண்டும். நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். பின்னர் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை ஏனையோருக்கும் விளங்கப்படுத்துங்கள். யார் 84 பிறவிகள் எடுக்கின்றார்கள், எவ்வாறு அதை அவர்கள் எடுக்கின்றார்கள்? நிச்சயமாக முதலில் வருபவர்களே அதை எடுக்கின்றார்கள். தந்தை பாரதத்திலே வருகின்றார். அவர் வந்து 84 பிறவிகளின் சக்கரத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை எங்கே வந்துள்ளார் என்பதையும் மக்கள் அறியார்கள். தந்தை வந்து, தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன்: மன்மனாபவ! என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவர்கள் கீதை போன்றவற்றை உரைத்தபொழுதிலும், அவர்களில் எவராலுமே இவ்வாறான விளக்கத்தைக் கொடுக்க முடியாது. மக்கள் தொடர்ந்தும் அங்கே செல்கின்றார்கள். கடவுள் எப்பொழுதோ வந்து ஞானத்தைப் பேசியிருக்க வேண்டும். அவர் மீண்டும் வரும்பொழுது, அதைத் திரும்பவும் பேசுகின்றார். அம்மக்கள் கீதையை எடுத்து, அதை உரைக்கின்றனர். இங்கே, கடவுளே ஞானக்கடல். அவர் எதையும் எடுத்து, வாசிக்கத் தேவையில்லை. அவர் எதையுமே கற்பதில்லை. அவர் முன்னைய கல்பத்திலும் சங்கமயுகத்தில் வந்து குழந்தைகளான உங்களுக்குக் கற்பித்தார். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். இது நினைவு யாத்திரையாகும். உங்களுடைய புத்தி மாத்திரமே இதை அறியும். பிரம்மாவின் வாய்மூலம் பிறந்தவர்களாகிய உங்களைத் தவிர வேறு எந்த மனிதரும் இந்த ஞானத்தைக் கொண்டிருப்பதில்லை. அனைவரும் சர்வவியாபி என்ற எண்ணக் கருத்து நிறைந்தவர்களாகவே இருக்கின்றனர். கடவுள்; ஒரு புள்ளி என எவருமே அறியார். அவரே ஞானக்கடலும், தூய்மையாக்குபவருமாவார். அவர்கள் அதைத் தொடர்ந்தும் பாடுகின்றனர். மக்கள் தொடர்ந்தும் தங்களுடைய குரு தங்களுக்குக் கற்பிப்பவை அனைத்திற்கும் அது உண்மை என்றே கூறுகின்றனர். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அது உண்மையா அல்லது இல்லையா என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்படுவதில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. என்ன செயல்களை நீங்கள் செய்தாலும், உங்களுடைய புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். ஸ்ரீநாத்துவாரில் அவர்கள் உணவு சமைக்கின்றபொழுது, தங்களுடைய புத்தியில் ஸ்ரீநாதரையே நினைவுசெய்கின்றார்கள். அவர் ஆலயத்தில் அமர்ந்திருக்கின்றார். தாங்;கள் அதை ஸ்ரீ நாதருக்கே சமைக்கின்றனர் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்கள் உணவைச் சமைத்து, பிரசாதம் படைத்து விட்டு, பின்னர் தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளை நினைவுசெய்கின்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய வாயை மூடியவாறே உணவு சமைக்கின்றனர்; அவர்கள் எதுவுமே பேசுவதில்லை. மனதின் மூலம் பாவங்கள் செய்யப்படுவதில்லை. அவர்கள் ஸ்ரீநாதரின் ஆலயத்தில் இருக்கின்றார்கள், ஆனால் இங்கே நீங்கள் சிவபாபாவுடன் அமர்ந்திருக்கின்றீர்கள். இங்கே பாபா தொடர்ந்தும் உங்களுக்கு வழிமுறைகளைக் கொடுக்கின்றார். குழந்தைகளே, பயனற்ற விடயங்களைப் பேசாதீர்கள்! எப்பொழுதும் தந்தையுடன் இனிய விடயங்களையே பேசுங்கள். தந்தை எவ்வாறோ, குழந்தைகளும் அவ்வாறே இருக்கின்றார்கள். எவ்வாறு இந்தச் சக்கரம் சுழல்கின்றது எனத் தந்தை அறிவார். இதனாலேயே அவர் வந்து குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகின்றார். உங்களுடைய பாபாவே மனித உலக விருட்சத்தின் விதையானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் அவரே உணர்வுள்ளவராவார். இது அத்தகையதோர் இலகுவான விடயம்! ஆயினும் அவர்கள் இன்னமும் எதையும் புரிந்துகொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் கல்லுப்புத்தியைக் கொண்டுள்ளார்கள். ஒரு விதையை உணர்வுள்ளது என மக்;கள் கூறுவதில்லை. அவர் ஞானம் நிறைந்தவரும், உணர்வுள்ளவரும் ஆவார். அவர் ஒரேயொருவரே, ஆனால் வேறு பலவிதமான விதைகளும் உள்ளன. கடவுளே மனித உலக விருட்சத்தின் விதையானவர் என்று கூறப்படுவதால், அவரே தந்தையாவார். பரமாத்மாவே ஆத்மாக்களின் தந்தை ஆவார், எனவே அனைவரும் சகோதரர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் இடத்திலேயே தந்தையும் வசிக்கின்றார். தந்தையும், குழந்தைகளும் நிர்வாணா தாமத்தில் வசிக்கின்றார்கள். இந்நேரத்தில் நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான, சகோதர, சகோதரிகள், இதனாலேயே நீங்கள் சிவனின் குலத்திற்குச் சொந்தமான பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். பிரம்மாகுமாரர்கள், குமாரிகளாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் என நீங்களும் எழுத வேண்டும். பிரம்மாவின் மூலம் தந்தை உலகைப் படைக்கின்றார். எனவே நீங்கள் சகோதர, சகோதரிகளாவீர்கள். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் உங்களை இவ்வாறே படைக்கின்றார். அவர் தொடர்ந்தும் உங்களைத் தத்தெடுக்கின்றார். வேறு எந்த மனிதரையும் பிரஜாபிதா என அழைக்க முடியாது. பாபா என்று நீங்கள் கூறுகின்றபொழுதிலும், அவர்கள் எல்லைக்குட்பட்டவர்கள், ஆனால் பல குழந்தைகள் இருப்பதால், இவர் பிரஜாபிதா பிரம்மா என்று அழைக்கப்படுகின்றார். எல்லையற்ற தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். இந்த உலகம் முற்றிலும் சீரழிந்ததும், அழுக்கானதுமாகும். அவர் இப்பொழுது உங்களை அற்புதங்களின் உலகிற்கு அழைத்துச் செல்கின்றார். உங்களில் பலர் இதை மறந்து விடுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என நினைத்திருந்தால், நீங்கள் தந்தையையும், குருவையும் நினைவுசெய்திருப்பீர்கள். பின்னர் நீங்கள் உங்களுடைய பழைய சரீரங்களை விட்டு விடுவீர்கள், ஏனெனில் உங்கள் சரீரங்களினால் எந்தப் பயனுமில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையாகுவதால், உங்கள் சரீரங்களும் தூய்மையாக வேண்டும். நீங்கள் அமர்ந்திருந்து இந்த விடயங்கள் பற்றி உங்கள் மத்தியில் பேச வேண்டும். இதுவே நீங்கள் மிகவும் நல்ல விடயங்கள் பற்றிப் பேசுகின்ற மங்களகரமான ஒன்றுகூடல் என அழைக்கப்படுகின்றது. எவ்வாறு சேவை வளர்ச்சி அடைய முடியும் என்றும், மற்றவர்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கலாம் என்றும் நீங்கள் சிந்திக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் பொய் கூறுகின்ற அழுக்கான ஒன்றுகூடல்களைக் கொண்டுள்ளார்கள். இங்கே பொய் என்ற கேள்வியில்லை. இது ஓர் உண்மையான ஒன்றுகூடல் என அழைக்கப்படுகின்றது. எவ்வாறு இது கலியுகம் எனவும், எவ்வாறு சத்தியயுகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது என்ற கதையும் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. பாரதம் சுவர்க்கமாக இருந்தது. பாரத மக்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள். இப்பொழுது இது இறுதியாகும். நீங்கள் இப்பொழுது தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள். இங்கே நீங்கள் கங்கை போன்றவற்றில் நீராடத் தேவையில்லை. கடவுள் பேசுகின்றார்: நானே அனைவரதும் தந்தை. கிருஷ்;ணாhல் அனைவரதும் தந்தையாக இருக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் அன்றி, ஸ்ரீ நாராயணனே ஓரிரு குழந்தைகளின் தந்தையாவார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு குமார் ஆவார். இந்தப் பிரஜாபிதா பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் உள்ளனர். கடவுள் கிருஷ்ணரின் வாசகங்களுக்கும், கடவுள் சிவனின் வாசகங்களுக்கும் இடையில் பெருமளவு வேறுபாடுள்ளது. அவர்கள் அத்தகைய பெரிய தவறைச் செய்து விட்டார்கள்! நீங்கள் கண்காட்சி நடாத்தும்பொழுது, கீதையின் கடவுள் யார்? இவரா அல்லது அவரா என்ற பிரதான விடயத்தை விளங்கப்படுத்துங்கள். முதலில் சிவனே கடவுள் என்பதை விளங்கப்படுத்துங்கள். இதை அவர்களது புத்தியில் உறுதியாக்குங்கள் நீங்கள் இது பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். நீங்கள் கீதையின் கடவுள் பற்றிய பெரிய நிரந்தரமான படத்தை வைத்திருக்க வேண்டும். அதற்குக் கீழே எழுதுங்கள்: நீங்களே தீர்மானியுங்கள், வந்து புரிந்துகொள்ளுங்கள். அவர்களை இதை எழுதச் செய்து, அதில் கையெழுத்திடவும் செய்யுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மத்தியில் மங்களகரமான ஒன்றுகூடலை ஒழுங்குசெய்து, சேவையின் வளர்ச்சிக்காகத் திட்டங்களைத் தீட்டுங்கள். உங்களுக்கும், ஏனைய அனைவருக்கும் நன்மை பயக்கின்ற வழிமுறைகளை உருவாக்குங்கள். உங்கள் மத்தியில் வீணான அல்லது பயனற்ற விடயங்கள் பற்றி என்றுமே பேசாதீர்கள்.

2. அதிகாலை வேளையில் விழித்தெழுந்து, உங்களுடன் பேசுங்கள். ஞானக்கடலைக் கடையுங்கள். உணவு சமைக்கும்பொழுதும், ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். உங்கள் எண்ணங்கள் வெளியே அலைபாயாதவாறு கவனம் செலுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு சூட்சும ஒளி ரூபத்தைக் கொண்டிருந்து, விநாச வேளையில் உங்கள் பரீட்சைத் தாளில் சித்தியடைவீர்களாக.

விநாச வேளையில். பரீட்சையில் சித்தியடைவதற்கும், பாதகமான சூழ்நிலைகள் அனைத்துக்கும் முகங்கொடுப்பதற்கும் ஒரு சூட்சுமமான ஒளி ரூபத்தை உடையவராக இருங்கள். நீங்கள் ஒரு நடமாடும் வெளிச்ச வீடு ஆகும்பொழுது, உங்கள் பௌதீக ரூபம் தென்பட மாட்டாது. அது நீங்கள் உங்களுடைய பாகத்தை நடிப்பதற்கு ஓர் அடையை அணிவது போலவும், உங்களுடைய பாகத்தை முடித்தவுடன் அதனை அகற்றி விடுவதைப் போலவும் இருக்கும். ஒரு விநாடி அதனை அணிந்து கொள்ளுங்கள், பின்னர் ஒரு விநாடியில் அதனை அகற்றி விடுங்கள், அதாவது, பற்றற்றவர் ஆகுங்கள். உங்களுக்கு இந்தப் பயிற்சி இருக்கும்பொழுது, உங்களைப் பார்ப்பவர்கள் நீங்கள் ஒளியாலான ஓர் ஆடையை அணிந்திருப்பதையும், அந்த ஒளியானது உங்கள் அலங்காரம் என்பதையும் காண்;பார்கள்,

சுலோகம்:
உங்களுடைய ஊக்கமும், உற்சாகமும் எனும் இறக்கைகளை உங்களில் கொண்டிருங்கள், நீங்கள் ஒவ்வொரு பணியிலும் இலகுவாக வெற்றியடைவீர்கள்.