15.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உணர்ச்சிவசப்பபடுவது சரீர உணர்வாகும். முகங்கோணுதல் அல்லது அழுதல் போன்ற எந்தவொரு அசுர சம்ஸ்காரமும் குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக்கூடாது. நீங்கள் சந்தோஷத்தையும், துன்பத்தையும், மரியாதையையும், அவமரியாதையையும் சகித்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி:
சேவையில் பின்னடைவதற்கான பிரதான காரணம் யாது?

பதில்:
சரீர உணர்வினால் நீங்கள்; ஏனையேரரின் பலவீனங்களைப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது, சேவை பின்னடைகின்றது. ஒருவருடன் ஓத்துப்போகாமையும் சரீர உணர்வே ஆகும். நான் இன்னாருடன் வாழ முடியாது, என்னால் இங்கு இருக்க முடியாது எனக் கூறுவதும் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதாகும். இவ்வார்த்தைகளைக் கூறுவதென்பது ஒரு முள்ளாகவும், கீழ்ப்படிவற்றவராகவும் ஆகுவதாகும். பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்களே ஆன்மீகச் சேனை ஆகவே நீங்கள் ஒரு கட்டளையைப் பெற்றவுடன் பிரசன்னமாக வேண்டும். எதைப் பற்றியும் சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். உங்களை ஆத்மாக்களாகக் கருதுவதே, குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்ற முதலாவது கற்பித்தல் ஆகும். சரீர உணர்வை விடுத்து, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். நான் ஓர் ஆத்மா. நான் ஆத்ம உணர்வுடையவராக ஆகும்பொழுது மாத்திரமே, என்னால் தந்தையை நினைவுசெய்ய முடியும். அது அறியாமைப் பாதையும், இது ஞான மார்க்கமும் ஆகும். அனைவருக்கும் சற்கதியை அருள்கின்ற ஒரேயொரு தந்தையே ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் அசரீரியானவர், அதாவது, அவருக்கு மனித வடிவம் இல்லை. மனித வடிவத்தையுடைய எவரும் கடவுளாக முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் அசரீரியானவர்கள்;. ஆயினும், சரீர உணர்வுடையவராக ஆகுவதனால், அவர்கள் தாங்கள் ஆத்மாக்கள் என்பதையே மறந்துவிட்டார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யும்பொழுது மாத்திரமே, உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இதனைச் செய்வதற்கு வேறெந்த வழியும் இல்லை. தூய்மையற்றவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே, தூய்மையானவர்கள் ஆகுவதும் ஆத்மாக்களே. சத்திய, திரேதா யுகங்களில் தூய ஆத்மாக்கள் உள்ளார்கள் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். பின்னர் இராவண இராச்சியத்தில் ஆத்மாக்கள் தூய்மையற்றவர்கள் ஆகுகிறார்கள். தூய்மையாக இருந்தவர்கள் எவ்வாறு தூய்மையற்றவர்கள் ஆகினார்கள் என்பது ஏணிப் படத்திலும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 5000 வருடங்களுக்கு முன்னர், ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதி தாமத்தில் இருந்தபொழுது, நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். அது நிர்வாணா தாமம் எனவும் அழைக்கப்படுகிறது. பின்னர், கலியுகத்தில், நீங்கள் தூய்மையற்றவர் ஆகியபொழுது, நீங்கள் கூவியழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நான் மாத்திரமே உங்களைத் தூய்மையற்றவலிருந்து தூய்மையாக மாறுவதற்கான ஞானத்தைக் கொடுக்க முடியும். பின்னர் இந்த ஞானம் மறைந்துவிடுகிறது. எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கு தந்தையே வர வேண்டும். இங்கு, மனிதர்கள் பல சமயநூல்களை உருவாக்கியுள்ளார்கள். சத்தியயுகத்தில் சமயநூல்கள் இல்லை. அங்கு பக்தி மார்க்கத்தின் ஒரு சுவடேனும் இல்லை. தந்தை கூறுகிறார்: என் மூலமாக மாத்திரமே, உங்களால் தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக முடியும். நிச்சயமாகத் தூய உலகம் உருவாக்கப்பட வேண்டும். நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். முகங்கோணுவது அல்லது அழுவது என்றால் அசுர சுபாவத்தைக் கொண்டிருப்பதாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷத்தையும், துன்பத்தையும், மரியாதையையும், அவமரியாதையையும் சகித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதிகளவுக்கு உணரச்சிவசப்படுபவராக இருக்கக் கூடாது. என்னால் இவ்விடத்தில் இருக்க முடியாது எனக் கூறுவதும் உணர்ச்ச்சிவசப்படுபவராக இருப்பதாகும். இவரின் சுபாவம் இதைப் போன்றது, இவர் அதைப் போன்றவர் போன்ற அத்தகைய எந்த எண்ணங்களும் உங்களுக்கு இருக்கக் கூடாது. உங்கள் உதடுகளிலிருந்து சதா மலர்கள் மாத்திரமே வெளித்தோன்ற வேண்டும். உங்கள் உதடுகளிலிருந்து முட்கள் வெளிப்படுவதை அனுமதிக்காதீர்கள். இருப்பினும் பல குழந்தைகள் தங்கள் உதடுகளிலிருந்து முட்கள் வெளிப்படுவதை அனுமதிக்கிறார்கள். ஒருவருடன் கோபப்படுவதும் ஒரு முள்ளாக இருப்பதாகும். பல குழந்தைகளால் ஒருவரோடெருவர் ஒத்துப்போக இயலாதிருக்கிறது. சரீர உணர்வுடையவர்களாக இருக்கின்றதனால், அவர்கள் தொடர்ந்தும் மற்றவர்களின் பலவீனங்களைப் பார்க்கிறார்கள், இதனாலேயே அவர்களுடைய சொந்தப் பலவீனங்கள் அவர்களில் எஞ்சியுள்ளன. இதனாலேயே சேவை பின்னடைகின்றது. இதுவும் நாடகத்திற்;கேற்ப நடைபெறுகின்றது என்பதை பாபா புரிந்துகொள்கிறார். ஒவ்வொருவரும் சீர்திருத்தப்பட வேண்டும். இராணுவம் யுத்தத்திற்குச் செல்லும்பொழுது, எதிரியுடன் சண்டையிடுவது அவர்களுடைய கடமையாகும். வெள்ளம் அல்லது சில குழப்பங்கள் ஏற்படும்பொழுதும் இராணுவம் அழைக்கப்படுகிறது. அப்பொழுது, இராணுவம் கூலியாட்களின் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறது. சேறு போன்றவற்றைச் சுமக்குமாறும் அரசாங்கம் இராணுவத்திற்;குக் கட்டளை பிறப்பிக்கின்றது. எவராவது அங்கு செல்லாவி;ட்டால், அவர் சுடப்படுவார். அரசாங்கத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தந்தை கூறுகிறார்: நீங்களும் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளீர்கள். எங்கெல்லாம் சென்று சேவை செய்யுமாறு தந்தை கூறுகின்றாரோ, அங்கே நீங்கள் உடனடியாகச் சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீங்கள் இந்த இராணுவத்தில் ஒருவராகக் கணக்கிடப்பட மாட்டீர்கள். அத்தகையவர்களால் தந்தையின் இதயத்தில் அமர இயலாது. நீங்களே அனைவருக்கும் செய்தியைக் கொடுப்பதில், தந்தையின் உதவியாளர்களாக இருக்கிறீர்கள். உதாரணமாக, எங்காவது 10 மைல்களுக்கப்பால் ஒரு பெரிய அருங்காட்சியகம் திறக்கப்படும்பொழுதும், நீங்கள் அங்கு சென்று சேவை செய்ய வேண்டும். நீங்கள் செலவைப் பற்றிச் சிந்திக்கக்கூடாது. தர்மராஜ் வலதுகரமாக இருக்கின்ற, எல்லையற்ற தந்தையின், அதிமேன்மையான அரசாங்கத்திடமிருந்து நீங்கள் கட்டளைகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றாதுவி;ட்டால், நீங்கள் வீழ்கிறீர்கள். ஸ்ரீமத் கூறுகிறது: உங்கள் கண்களைக் குற்றமற்றதாக(உiஎடை) ஆக்குங்கள். காமத்தை வெல்லும் தைரியத்தைக் கொண்டிருங்கள். இவையே பாபாவின் கட்டளைகள்;. நீங்கள் அவற்றைப் பின்பற்றாதுவி;ட்டால், நீங்கள் முற்றாகவே நொறுக்கப்படுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்கு இராச்சியத்தைக் கோருவதை இழப்பீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவராலும் என்னை அறிய முடியாது. முன்னைய கல்பத்தில் வந்தவர்கள், மீண்டும் படிப்படியாகத் தொடர்ந்தும் வெளி;ப்படுவார்கள். இவை முற்றிலும் புதிய விடயங்களாகும். இதுவே கீதையின் யுகமாகும். எவ்வாறாயினும், சமயநூல்களில் சங்கமயுகத்தைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் கீதையைத் துவாபர யுகத்தில் காட்டியுள்ளார்கள், ஆனால் இராஜயோகம் கற்பிக்கப்பட்ட பொழுதே, அது நிச்சயமாகச் சங்கமயுகமாகவே இருக்க வேண்டும். இவ்விடயங்கள் எவருடைய புத்தியிலும் இல்லை. உங்களுக்கு இப்பொழுது ஞானத்தின் போதை உள்ளது, அம்மக்களுக்கோ பக்தி மார்க்கத்தின் போதை உள்ளது. அவர்கள் கூறுகிறார்கள்: கடவுள் வந்திருப்பினும், நாங்கள் பக்தி செய்வதை நிறுத்த மாட்டோம். எழுச்சியையும், வீழ்ச்சியையும் காட்டுகின்ற ஏணியின் இந்தப் படம் சிறந்ததாகும். அப்படியிருந்தும், மக்களின் கண்கள் திறப்பதில்லை. அவர்கள் முற்றாகவே மாயையின் போதையில் இருக்கிறார்கள். ஞானத்தின் போதை உயர்வதற்கு, நீண்ட காலம் எடுக்கின்றது. எல்லாவற்றுக்கும் முதலில், தெய்வீகக் குணங்கள் தேவைப்படுகின்றன. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற கட்டளைகள் அனைத்திற்கும், நீங்கள் எந்தச் சாக்குப்போக்குகளையும் கூறக் கூடாது. நான் அதனைச் செய்ய முடியாது எனக் கூறுவதும் கீழ்ப்படிவின்மை ஆகும். நீங்கள் எதனையாவது செய்வதற்கான ஸ்ரீமத்தைப் பெறும்பொழுது, அது சிவபாபாவின் மேன்மையான வழிகாட்டல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிவபாபாவே சற்கதியை அருள்பவர்;. அருள்பவரால் ஒருபொழுதுமே பிழையான வழிகாட்டல்களைக் கொடுக்க முடியாது. தந்தை கூறுகிறார்: இவருடைய பல பிறவிகளின் இறுதியில், நான் இவரில் பிரவேசிக்கிறேன். எவ்வாறு இலக்ஷ்மி அவரை விட முன்னேறிச் செல்கிறார் எனப் பாருங்கள். பெண்கள் எப்பொழுதும் முன்னணியில் நிறுத்தப்படுகிறார்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. முதலில், இலக்ஷ்மியும், பின்னர் நாராயணனும்; உள்ளார்கள்;. அரசரையும், அரசியையும் போன்றே, பிரஜைகளும் இருக்கிறார்கள். நீங்கள் மேன்மையானவர்கள் ஆக வேண்டும். இப்பொழுது உலகம் முழுவதிலும் இராவண இராச்சியமே உள்ளது. தங்களுக்குக் கடவுளின் (இராமர்) இராச்சியம் வேண்டும் என அனைவரும் கூறுகிறார்கள். இப்பொழுது சங்கமயுகமாகும். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தபொழுது, இராவண இராச்சியம் இருக்கவில்லை. எவ்வாறு மாற்றம் நடைபெற்றது என்பது எவருக்கும் தெரியாது. அனைவரும் காரிருளில் இருக்கிறார்கள். இன்னமும் கலியுகம் தனது குழந்தைப் பருவத்திலும், தவழும் ஸ்திதியிலும் உள்ளது என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே, மக்கள் மேலும் ஆழ்ந்த உறக்கத்தில் உறங்குகிறார்கள். ஆன்மீகத் தந்தை மாத்திரமே, ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். கிருஷ்ணர் ஆன்மீகத் தந்தை என அழைக்க முடியாது. அவர் ஒருபொழுதும் கூற மாட்டார்: ஓ ஆன்மீகக் குழந்தைகளே! நீங்கள் எழுதவும் வேண்டும்: ஞானம் நிறைந்தவரான, ஆன்மீகத் தந்தையே, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உலகில் மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வடையவர்கள். தாங்கள் ஆத்மாக்கள் என்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகிறார்: ஆத்மா எப்பொழுதுமே இரண்டறக் கலக்க முடியாது. தசேரா, தீபாவளி என்றால் என்ன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் புரிகின்ற வழிபாடுகள் அனைத்தும் குருட்டு நம்பிக்கையாகும். அது பொம்;மை விளையாட்டு என அழைக்கப்படுகிறது. அது கல்லை வழிபடுதல் எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தியையுடையவர்களாக ஆகுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் கல்லை வழிபடுவதில்லை. மக்கள் விக்கிரகங்களின் முன்னர் சென்று தலைவணங்குகிறார்கள், ஆனால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. கூறப்பட்டுள்ளது: ஞானம், வழிபாடு, விருப்பமின்மை. ஞானம் அரைக்கல்பத்திற்;கு நீடிக்கின்றது, பின்னர் வழிபாடு ஆரம்பமாகுகின்றது. நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஆகவே, பக்தியில் விருப்பமின்மை உள்ளது. இவ்வுலகம் மாறுகிறது. கலியுகத்தில் பக்தி உள்ளது. சத்தியயுகத்தில் பக்தி இல்லை. அங்கு, அனைவரும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள். தந்தை வினவுகிறார்: குழந்தைகளே, நீங்கள் ஏன் தலைவணங்குகிறீர்கள்? அரைக்கல்பமாக, நீங்கள் தரையில் உங்கள் நெற்றியைத் தேய்த்து, உங்கள் பணம் அனைத்தையும் செலவழித்துவிட்டதுடன், எதையும் அடையவில்லை. மாயை உங்களை மிகவும் ஏழ்மை ஆக்கி விட்டாள். அனைவருடைய புத்தியையும் சரியாக்குவதற்காகத் தந்தை இப்பொழுது வந்துவிட்டார். இப்பொழுது, ஐரோப்பியர்களில் சிலரும் படிப்படியாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள். பாரத மக்கள் முற்றாகவே தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஏனைய சமயத்தவர்கள் தாமதமாகவே வருகிறார்கள். ஆகவே, அவர்கள் குறைந்தளவு சந்தோஷத்தையும், குறைந்தளவு துன்பத்தையுமே அனுபவம் செய்கிறார்கள். பாரத மக்கள் பெருமளவு சந்தோஷத்தையும், பெருமளவு துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். ஆரம்பத்தில், அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் உலக அதிபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய சமயத்தவர்கள் முதலில் செல்வந்தர்களாக இருக்கவில்லை. தங்களுடைய சமயம் விரிவடைந்த பின்னரே, அவர்கள் படிப்படியாகச் செல்வந்தவர்கள் ஆகினார்கள். பாரதம் இப்பொழுது அனைத்திலும் ஏழ்மையாகி விட்டது. பாரதத்திலேயே குருட்டு நம்பிக்கையுடையவர்கள் இருக்கிறார்கள். இதுவும் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: நான் சுவர்க்கமாக மாற்றியது, இப்பொழுது நரகமாக மாறிவிட்டது. இங்குள்ள மக்கள் குரங்குப் புத்தியை உடையவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களை ஓர் ஆலயத்தில் அமர்வதற்குத் தகுதியானவர்களாக ஆக்குவதற்கே, நான் வருகிறேன். விகாரங்கள் மிகவும் வலிமையானவை. அதிகளவு கோபம் உள்ளது. உங்களுக்குக் கோபம் இருக்கக் கூடாது. முற்றிலும் இனிமையானவராகவும், அமைதி நிறைந்தவராகவும் ஆகுங்கள்; மிதமிஞ்சிய இனிமையானவர்கள் ஆகுங்கள். ஓர் இராஜ அந்தஸ்தைக் கோருவதற்குப் பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரே வெளிப்படுவார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்கு நான் வந்துவிட்டேன். அதில், பிரதான எட்டு இரத்தினங்கள் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களின் மத்தியில் தந்தையுடன் எட்டு இரத்தினங்களும் உள்ளார்கள். எட்டுப் பேர் திறமைச்சித்தி எய்துகிறார்கள். அதுவும் அவர்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே உள்ளது. சரீர உணர்வைத் துண்டிப்பதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படு;கிறது. சரீர உணர்வு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். பிரம்ம தத்துவத்தின் ஞானத்தில் உறுதியாக நம்பிக்கையுடைய சிலரும் அவ்வாறே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சரீரங்களை எங்காவது அமர்ந்திருக்கும்பொழுது, துறக்கிறார்கள். எங்காவது அமர்ந்திருந்து அவர்கள் தங்கள் சரீரங்களை விட்டு நீங்கும்;பொழுது, சூழல் முழுமையாகவே அமைதி நிறைந்ததாகுகிறது. பெரும்பாலும், தூய்மையான, அதிகாலை வேளையில் அவர்கள் தங்கள் சரீரங்களை விட்டு நீங்குகிறார்கள். இரவில், மனிதர்கள் அழுக்கான செயல்களைப் புரிகிறார்கள், காலையில் குளித்த பின்னர் அவர்கள் கடவுளை நினைவுசெய்ய ஆரம்பித்து, அவரை வழிபடுகிறார்கள். தந்தை தொடர்ந்தும் அனைத்து விடயங்களையும் விளங்கப்படுத்துகிறார். கண்காட்சிகள் போன்றவற்றில், எல்லாவற்றுக்கும் முதலில், அல்பாவின் அறிமுகத்தைக் கொடுங்கள். முதலில் அல்பாவும், பின்னர் இராச்சியமாகிய பீற்றாவும். தந்தை ஒரேயொருவரே. அவர் அசரீரியானவர். படைப்பவராகிய தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுக்கிறார். அதே தந்தையே கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். சரீர உறவுகள் அனைத்தையும் துறவுங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கெர்டுக்கும்பொழுது, கேள்விகளைக் கேட்கின்ற தைரியம் எவருக்கும் இருக்காது. அவர்கள் தந்தையில் நம்பிக்கை வைத்ததும், அவர்களிடம் கூறுங்கள்: இவ்வாறே நாங்கள் 84 பிறவிகளை எடுக்கிறோம். அவர்கள் சக்கரத்தையும், தந்தையையும் புரிந்துகொண்டதும், அவர்களுக்கு எக்கேள்விகளும் எழ மாட்டாது. நீங்கள் முதலில் அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்காமல், தொடர்ந்தும் பேசி, அவர்;களுக்கு ஞானத்தைக் கொடுக்கும்பொழுது, நீங்கள் பெருமளவு நேரத்தை வீணாக்குவதுடன், உங்கள் தொண்டையும் அடைக்கிறது. எல்லாவற்றுக்கும் முதலில், அல்பா என்னும் விடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்தும் பேசும்பொழுது, அவர்களால் எதையும் புரிந்துகொள்ள இயலாதிருக்கும். அவர்களுடன் அமர்ந்திருந்து, மிகவும் மெதுவாக, ஓர் எளிமையான முறையில் விளங்கப்படுத்துங்கள். ஆத்ம உணர்வுடையவர்களால் நன்றாகப் புரிந்துகொள்ள இயலும். நன்றாக விளங்கப்படுத்துபவர்கள், பெரிய அருங்காட்சியகங்களில் உதவி செய்ய வேண்டும். சில நாட்களுக்கு உங்கள் நிலையத்தை விட்டுச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் இல்லாதபொழுது நிலையத்தைப் பராமரிப்பதற்காகச் சிலரை நியமனம் செய்யுங்கள். நீங்கள் உங்களைப் போன்றும், நிலையத்தைப் பராமரிப்பதற்குத் தகுதியானவராகவும் எவரையாவது தயார்ப்படுத்தாவிட்டால், உங்களால் பயனில்லை எனவும், நீங்கள் சேவை செய்யவில்லை எனவும் தந்தை எண்ணுவார். சில குழந்தைகள் பாபாவுக்கு எழுதிக் கூறுகிறார்கள்: நான் எவ்வாறு இச்சேவையை விட்டு, அங்கு செல்ல முடியும்? ஒரு கண்காட்சி நடக்கும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சேவை செய்யுமாறு, தந்தை உங்களுக்குக் கட்டளை இடுகிறார். நிலையத்தைப் பராமரிப்பதற்குத் தகுதியானவராக நீங்கள் எவரையாவது நியமனம் செய்யாவிட்டால், உங்களால் என்ன பயன் உள்ளது? பாபா உங்களுக்குக் கட்டளை இட்டுள்ளார். ஆகவே, நீங்கள் அங்கு விரைவாக ஓடிச் செல்ல வேண்டும். அத்தகைய ஆசிரியர்கள் மகாராத்திகள் என அழைக்கப்படுகிறார்கள். ஏனைய அனைவரும் குதிரைப்படையும், காலாட்படையும் ஆவர். அனைவரும் சேவையில் உதவி செய்ய வேண்டும். நீங்கள் இத்தனை வருடங்களில் எவரையாவது உங்களைப் போன்று ஆக்கியிருக்காதுவிட்டால், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீண்ட காலத்தின் பின்னரும், நீங்கள் எவரையாவது நிலையத்தைப் பராமரிக்கக்கூடிய, ஒரு தூதுவராக ஆக்கவில்லையா? இங்கு பல்வேறு விதமான மக்களும் வருகிறார்கள். ஆகவே, எவ்வாறு அவர்களுடன் பேசுவது என அறியும் விவேகம் உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் நிச்சயமாக ஒவ்வொரு நாளும் முரளியைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் முரளியைச் செவிமடுக்காதுவிட்டால், நீங்கள் சமூகமளிக்காததற்குரிய புள்ளியைப் பெறுகிறீர்கள். குழந்;தைகளாகிய நீங்கள் முழு உலகையும் முற்றுகையிட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகிற்கும் சேவை செய்கிறீர்கள், இல்லையா? தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குவது எனில், முற்றுகையிடுவதாகும், இல்iயா? அனைவருக்கும் முக்திதாமத்திற்கும், ஜீவன்முக்தி தாமத்திற்குமான பாதையைக் காட்டி, அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அமைதி நிறைந்தவர்களாகவும், மிதமிஞ்சிய இனிமையானவர்களாகவும் ஆகுங்கள், ஒருபொழுதும் கோபப்படாதீர்கள். உங்கள் கண்களை மிக மிகக் குற்றமற்றதாக ஆக்குங்கள்.

2. தந்தையின் கட்டளைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படியுங்கள். முழு உலகையும் தூய்மையற்றதிலிருந்து தூய்மையானதாக ஆக்கும் சேவையைச் செய்யுங்கள். அதாவது, அதை முற்றுகையிடுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் என்றும் ஏற்றப்பட்ட ஒளிவிளக்குகளாக இருந்து, உங்கள் சொந்த முக்கியத்துவத்தையும் பணியையும் அறிந்தவர்களாகுவீர்களாக.

குழந்தைகளாகிய நீங்கள் உலக ஒளிவிளக்குகள் என்பதால் உங்கள் மாற்றத்தினூடாக உலக மாற்றம் இடம்பெறுகின்றது. எனவே, கடந்தது கடந்ததாக இருக்கட்டும், உங்கள் சொந்த முக்கியத்துவத்தை அறிந்திருங்கள், உங்கள் பணியை அறிந்திருங்கள் அத்துடன் எப்பொழுதும் ஏற்றப்பட்ட ஒளிவிளக்குகள் இருங்கள். சுயமாற்றத்தினூடாக உங்களால் ஒரு விநாடியில் உலக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒரு கணம் கர்மயோகிகளாகவும் மறுகணம் உங்கள் கர்மதாத்தீத் ஸ்திதியிலும் இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள். உங்கள் படைப்பான, ஆமை ஒரு விநாடியில் தனது சகல புலன்களையும் எவ்வாறு விடபடச் செய்கின்றதோ அவ்வாறே, மாஸ்டர் படைப்பாளிகளாகிய நீங்கள் அமிழ்த்தும் சக்தியினால் உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் அமிழ்த்தி ஒரே எண்ணத்தில் ஸ்திரமாகவிருங்கள்.

சுலோகம்:
அன்பில் மூழ்கியுள்ள ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, நினைவிற்கும், மறதிக்கும் இடையான போராட்டத்தை முடியுங்கள்.