15.11.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.87     Om Shanti     Madhuban


கர்மாதீத் ஸ்திதியின் அடையாளங்கள்.


இன்று, அவ்யக்த பாப்தாதா, நீங்கள் அவ்யக்த ஸ்திதியைப் பெறுவீர்களாக என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள தனது குழந்தைகளை, அவ்யக்த தேவதைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். கல்பம் முழுவதிலும், ஒரேயொரு தடவையே, இந்தச் சங்கமயுகத்திலேயே, இந்த அவ்யக்த சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. சத்தியயுகத்தில் தேவர்களின் சந்திப்புக்கள் இடம்பெறும். ஆனால், தேவதைகளின் அவ்யக்த சந்திப்புக்கள் இந்த வேளையில் மட்டுமே இடம்பெறும். அசரீரியான தந்தையும் அவ்யக்த பிரம்மாபாபாவின் மூலம் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறார். அசரீரியானவர் இந்த தேவதைகளின் ஒன்றுகூடலை மிக ஆழமாக நேசிக்கிறார். இதனாலேயே, அவர் தனது தேசத்தை விட்டு, உங்களைச் சந்திப்பதற்காக சூட்சும மற்றும் பௌதீக உலகிற்கு வருகிறார். தேவதைக் குழந்தைகளின் அன்பின் கவர்ச்சியால், தந்தையும் தனது ரூபத்தையும் ஆடையையும் மாற்றி, குழந்தைகளின் உலகிற்கு வந்துள்ளார். இந்த சங்கமயுகம் தந்தையினதும் குழந்தைகளினதும் மிகவும் தனித்துவமான, அழகான உலகமாகும். அன்பே கவர்கின்ற மிக மகத்தான சக்தியாகும். அது பந்தனத்தில் இருந்தும் சரீரத்தில் இருந்தும் விடுபட்டுள்ள பரமாத்மாவை அன்பெனும் பந்தனத்தில் கட்டுகிறது. அது சரீரமற்றவரையும் சரீரத்தின் கடனைப் பெற்று ஒரு சரீரதாரி ஆக்குகிறது. இதுவே குழந்தைகளின் அன்பின் நடைமுறை அத்தாட்சியாகும்.

எங்கும் உள்ள பல குழந்தைகளின் அன்பு நதிகள் அன்புக் கடலுடன் அமிழ்ந்த தினம் இதுவேயாகும். நாம் பாப்தாதாவைச் சந்திக்க வந்திருக்கிறோம் எனக் குழந்தைகள் சொல்கிறார்கள். குழந்தைகள் தந்தையைச் சந்திப்பதற்காகவா வந்திருக்கிறார்கள்? அல்லது, தந்தை குழந்தைகளான உங்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறாரா? அல்லது, இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதற்காக மதுவனத்திற்கு வந்திருக்கிறார்களா? குழந்தைகள் அன்புக் கடலில் நீராட வந்துள்ளார்கள். ஆனால், தந்தையோ ஆயிரக்கணக்கான கங்கைகளில் நீராட வந்துள்ளார். இதனாலேயே, கடலினதும் கங்கைகளினதும் மேளா(சந்திப்பு) தனித்துவமானது. நீங்கள் அன்புக்கடலில் அமிழ்ந்து, கடலைப் போல் ஆகியுள்ளீர்கள். இந்தத் தினம் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கான தினம் - நினைவு தினம், அதாவது, சக்தி தினம் என்று அழைக்கப்படுகிறது. ஏன்? இந்தத் தினமே, பிரம்மாபாபா தந்தைக்குச் சமமானவராகவும் சம்பூரணமானவராகவும் முழுமையானவராகவும், ஒரு குழந்தையாகவும் தந்தை பிரம்மாவாகவும் ஆகிய தினமாகும். ஏனென்றால், பிரம்மா ஒரு குழந்தையாகவும் அத்துடன் ஒரு தந்தையாகவும் இருக்கிறார்.

இந்தத் தினத்தில்,

பிரம்மா அன்பின் ரூபத்தில் தகுதிவாய்ந்த ஒரு குழந்தையாக இருக்கும் அத்தாட்சியை வழங்கினார்.

அவர் சமமானவர் ஆகும் அத்தாட்சியை வழங்கினார்.

அதிகபட்ச அன்பானவராகவும் முற்றிலும் பற்றற்றவராகவும் இருக்கும் அத்தாட்சியையும் அவர் கொடுத்தார்.

தந்தைக்குச் சமமான கர்மாதீத் ஆகவுள்ள அத்தாட்சியையும் அவர் வழங்கினார். அதாவது, தந்தையைப் போல் எந்தவொரு கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கும் அத்தாட்சியை அவர் வழங்கினார்.

கல்பம் முழுவதிலும் செய்த செயல்களின் எந்தவிதமான கர்மக்கணக்குகளில் இருந்து விடுபட்டிருக்கும் அத்தாட்சியையும் அவர் வழங்கினார்.

சேவைக்கான அன்பு பந்தனத்தைத் தவிர, வேறு எந்த பந்தனங்களும் இல்லை. சேவை செய்வதிலும், அவர் சேவையின் எந்தவிதமான பந்தனத்தாலும் கட்டுப்படும் ஆத்மா இல்லை. ஏனென்றால், சிலர் பந்தனத்தில் இருந்து விடுபட்ட சேவையைச் செய்கிறார்கள்;. ஆனால், மற்றவர்கள் சேவையின் பந்தனத்தில் கட்டுப்பட்ட சேவையைச் செய்கிறார்கள். தந்தை பிரம்மாவும் ஒரு சேவையாளரே. எவ்வாறாயினும், சேவையில் இராஜரீக வடிவிலான ஆசைகளை வைத்திருப்பதும் சிலரைச் சேவையின் கர்மக்கணக்குகளின் பந்தனத்தில் கட்டிவிடுகிறது. ஆனால், உண்மையான சேவையாளர்கள் அந்தக் கர்மக் கணக்குகளில் இருந்து விடுபட்டிருப்பார்கள். இது கர்மாதீத் ஸ்திதி எனப்படுகிறது. சரீரத்தினதும் சரீர உறவுகளினதும் பந்தனங்கள் இருப்பதைப் போல், சேவை செய்வதில் இருக்கும் சுயநலமான நோக்கங்களும் ஒரு பந்தனம் ஆகிவிடுகின்றன. நீங்கள் கர்மாதீத் ஆகுவதற்கு அவை தடையாகின்றன. கர்மாதீத் ஆகுவதென்றால், அந்த இராஜரீக கர்மக்கணக்குகளில் இருந்து விடுபடுவதாகும்.

வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் சேவையாளர்களும் கீதா பாடசாலைகளின் கருவிகளும் ஆவார்கள். எனவே, சேவை என்றால் மற்றவர்களை விடுதலை ஆக்குதல் என்ற அர்த்தம். மற்றவர்களை விடுதலை ஆக்கும்போது, நீங்கள் உங்களை எந்தவிதமான பந்தனத்திலும் கட்டி விடுவதில்லை, அல்லவா? உங்களின் பௌதீகமான குழந்தைகள் போன்றவற்றின் மீதான பற்றுக்கள் அனைத்தையும் துறந்து, பற்றை வென்றவர் ஆகுவதற்குப் பதிலாக, உங்களின் மாணவர்களின் மீது நீங்கள் பற்று வைக்கவில்லை, அல்லவா? இவர் மிகவும் நல்லவர், அவர் மிகவும் நல்லவர் எனக் கூறி, ஒருவரை அந்த முறையில் நல்லவராகக் கருதியவண்ணம், அவர் உங்களுக்குச் சொந்தமானவர் என்ற விருப்பத்தின் பந்தனத்தில் நீங்கள் உங்களைக் கட்டிக் கொள்ளவில்லை, அல்லவா? உங்களுக்குத் தங்கச் சங்கிலிகளில் விருப்பமில்லை, அல்லவா? எனவே, இன்றைய தினத்தை எனது என்ற எல்லைக்குட்பட்ட உணர்வுகளில் இருந்து விடுபட்ட தினமாகக் கொண்டாடுங்கள். அதாவது, கர்மாதீத் ஆகும் அவ்யக்த தினமாகக் கொண்டாடுங்கள். இது அன்பின் அத்தாட்சியைக் கொடுத்தல் எனப்படுகிறது. கர்மாதீத் ஆகவேண்டும் என்ற அனைவரின் இலக்கும் நல்லதே. இப்போது, நீங்கள் கர்ம பந்தனத்தில் இருந்து எந்தளவிற்கு விடுபட்டுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். முதலில், லௌகீகம் மற்றும் அலௌகீகம் இரண்டிலும், செயல்களிலும் உறவுமுறைகளிலும் எந்தளவிற்கு சுயநல நோக்கங்களில் இருந்து விடுபட்டுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். இரண்டாவதாக, நீங்கள் உங்களின் கடந்த பிறவிகளில் செய்த செயல்களின் கர்மக்கணக்குகளில் இருந்து விடுபட்டுவிட்டீர்களா? அத்துடன் தற்சமயம் செய்யும் முயற்சிகளில் உள்ள பலவீனத்தால் வீணான சுபாவம் மற்றும் வீணான சம்ஸ்காரங்களின் எந்தவிதமான ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டுள்ளீர்களா? ஏதாவது பலவீனமான சுபாவம் அல்லது சம்ஸ்காரங்கள், கடந்த காலத்தின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்கள் எந்த வேளையிலாவது உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தினால், நீங்கள் பந்தனத்தில் கட்டுப்பட்டே இருக்கிறீர்கள். பந்தனத்தில் இருந்து விடுபட்டு அல்ல. இது நிகழ வேண்டும் என்பது எனது விருப்பமல்ல, ஆனால், எனது சுபாவமும் சம்ஸ்காரங்களும் என்னை இவ்வாறு செய்ய வைத்துவிட்டன என நினைக்காதீர்கள். இதுவும் பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஒருவரின் அடையாளம் இல்லை. ஆனால், பந்தனத்தில் கட்டுப்பட்டவரின் அடையாளமாகும். இன்னொரு விடயம்: உங்களின் ஆதி ஸ்திதி, உங்களின் மேன்மையான ஸ்திதி, எந்தவொரு சேவை சூழ்நிலையாலும் எந்தவொரு ஒன்றுகூடலாலும் அல்லது பஞ்சபூதங்களாலும் தளம்பல் அடையுமாயின், அதுவும் பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஸ்திதி இல்லை. அந்த பந்தனத்தில் இருந்தும் விடுபடுங்கள். மூன்றாவதாக, பழைய உலகில் உங்களின் இறுதி பழைய சரீரத்தில் ஏற்படும் எந்தவிதமான நோயினூடாகவும் உங்களின் மேன்மையான ஸ்திதிக்கு ஏற்படும் குழப்பத்தில் இருந்தும் விடுபட்டிருங்கள். நோய் வருவது ஒரு விடயம். ஆனால், அந்த நோய் உங்களைத் தளம்பல் அடையச் செய்வது வேறொரு விடயம். அது வருவது நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களின் ஸ்திதி தளம்பல் அடைந்தால், அது பந்தனத்தில் கட்டுப்பட்டிருப்பதன் அடையாளமாகும். சரீரத்தின் எந்தவிதமான நோயின் எண்ணங்களில் இருந்தும் விடுபட்டிருங்கள். அதற்குப் பதிலாக, உங்களின் ஆதி சுயத்தைப் பற்றியும், ஞானத்தைப் பற்றியும் எண்ணங்களைக் கொண்டிருங்கள். அத்துடன் மற்றவர்களைப் பற்றிய தூய, சாதகமான எண்ணங்களைக் கொண்டிருங்கள். ஏனென்றால், சடப்பொருளைப் பற்றி அதிகம் சிந்தித்தல், கவலையின் ரூபமாக மாறிவிடும். எனவே, அதில் இருந்து விடுபடுதலே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகிறது. அந்த பந்தனங்கள் அனைத்தையும் துறத்தல், கர்மாதீத் ஸ்திதியின் அடையாளமாகும். தந்தை பிரம்மா இந்த சகல வகையான பந்தனங்களில் இருந்தும் விடுபட்டு, கர்மாதீத் ஸ்திதியை அடைந்தார். எனவே, இன்று தந்தை பிரம்மாவைப் போல் கர்மாதீத் அடைவதற்கான நாள் ஆகும். இந்தத் தினத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அச்சா.

இன்றைய ஒன்றுகூடல், குறிப்பாக விசேட சேவையாளர்களின் ஒன்றுகூடல் ஆகும். அதாவது, தூய, புண்ணியாத்மாக்கள் ஆகுபவர்களின் ஒன்றுகூடல் ஆகும். கீதா பாடசாலை ஒன்றைத் திறப்பதெனில், ஒரு தூய, புண்ணியாத்மா ஆகுதல் என்று அர்த்தம். ஒவ்வோர் ஆத்மாவையும் அவர்களின் பல பிறவிகளின் பாவங்களில் இருந்து எல்லா வேளைக்கும் விடுவிப்பதே அனைத்திலும் மகத்தான புண்ணியம் ஆகும். கீதா பாடசாலை என்ற பெயர் மிகவும் நல்லது. எனவே, கீதா பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்றால், கீதையின் பாடங்களைக் கற்பதுடன், மற்றவர்களுக்கும் கற்பிப்பவர்கள் என்று அர்த்தம். கீதா ஞானத்தின் முதலாவது பாடம், சரீரமற்ற ஆத்மா ஆகுவதாகும். கடைசிப் பாடம், பற்றை வென்றவராகி, நினைவின் சொரூபம் ஆகுவதாகும். எனவே, முதலாவது பாடம், பயன்படுத்துவதற்கான வழிமுறையாகும். கடைசிப் பாடம், அந்தப் பாடத்தைக் கற்பதனால் பெறுகின்ற பெறுபேறாகும். எனவே, கீதா பாடசாலையைச் சேர்ந்தவர்களான நீங்கள், ஒவ்வொரு கணமும் இந்தப் பாடத்தைக் கற்கிறீர்களா? அல்லது நீங்கள் வெறுமனே முரளியை வாசிக்கிறீர்களா? உண்மையான கீதா பாடசாலையை வைத்திருப்பதற்கான வழிமுறை, அனைத்திற்கும் முதலில் நீங்கள் கற்க வேண்டும். அதாவது, நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். பின்னர் ஒரு கருவியாகி, மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எனவே, கீதா பாடசாலையைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் இந்த முறையில் சேவை செய்கிறீர்களா? ஏனென்றால், நீங்கள் அனைவரும் உலகின் முன்னால் இந்த இறை படிப்பிற்கு மாதிரிகளாக இருக்கிறீர்கள். மாதிரி என்பது முக்கியமானது. ஒரு மாதிரி என்பது பல ஆத்மாக்களுக்கு அவ்வாறு ஆகுவதற்கான தூண்டுதலைக் கொடுக்கும். எனவே, கீதா பாடசாலையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. மாதிரிகள் ஆகுவதில் நீங்கள் சிறிதளவு பலவீனத்தைக் காட்டினாலும், பல ஆத்மாக்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, ஆத்மாக்கள் பலர் தமது பாக்கியத்தை உருவாக்குவதைத் தடுப்பதற்கு நீங்கள் கருவிகள் ஆகிவிடுவீர்கள். ஏனென்றால், கருவி ஆத்மாக்களான உங்களைப் பார்த்து, நீங்கள் சொல்வதைக் கேட்பவர்கள், பௌதீக ரூபத்தில் அதைச் செய்கிறார்கள். தந்தை மறைமுகமானவர், இல்லையா? ஆகவே, மேன்மையான செயல்களைச் செய்வதன் மூலம் இதைச் செய்து காட்டுங்கள். அவர்கள் உங்களின் மேன்மையான செயல்களைப் பார்க்கும்போது, ஆத்மாக்கள் பலர் மேன்மையான செயல்களைச் செய்வார்கள். அத்துடன் அவர்களின் பாக்கிய ரேகையையும் அவர்களால் மேன்மையாக்க முடியும். எனவே, முதலில், எப்போதும் உங்களை மாதிரிகள் எனக் கருதிக் கொள்ளுங்கள். இரண்டாவதாக, எப்போதும் உங்களின் அடையாளத்தை நினைவில் வைத்திருங்கள். கீதா பாடசாலையைச் சேர்ந்தவர்களின் சின்னம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு தாமரை மலர். ஒரு தாமரை மலராகி, இதைப் பயிற்சி செய்யுங்கள் என பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். தாமரை மலராகுவதற்கான வழிமுறை, அதை நடைமுறையில் செய்வதாகும். நீங்கள் அதை நடைமுறையில் செய்யாவிட்டால், உங்களால் ஒரு தாமரை மலர் ஆகமுடியாது. ஆகவே, நான் ஒரு மாதிரி என்பதை எப்போதும் உங்களின் புத்தியில் வைத்திருங்கள். அத்துடன் தாமரை மலரின் சின்னத்தை உங்களின் புத்தியில் வைத்திருங்கள். சேவை எந்தளவிற்கு அதிகரித்தாலும், சேவை செய்யும்போது அன்பாகவும் பற்றற்றவராகவும் இருங்கள். வெறுமனே அன்பானவராக இருக்காதீர்கள். ஆனால் அன்பானவராகவும் பற்றற்றவராகவும் இருங்கள். இது ஏனென்றால், சேவை செய்ய விரும்புவது நல்ல விடயமே. ஆனால், அந்த அன்பானது பற்றாக மாறாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவே பற்றற்றவராக இருக்கும்போது, அன்பானவராக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் சேவைக்குக் கருவிகள் ஆகுகிறீர்கள். அது மிகவும் நல்லதே. குறைந்தபட்சம் தூய, புண்ணியாத்மாக்கள் என்ற பட்டத்தை நீங்கள் பெறுகிறீர்கள். ஆகவே, நீங்கள் ஒரு புண்ணியச் செயலைச் செய்ததால், உங்களுக்கு ஒரு விசேடமான அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது, பாபா உங்களுக்குக் கற்பித்த பாடத்தினால் வெற்றி ஸ்திதியுடன் தொடர்ந்து எதிர்காலத்தில் முன்னேறுங்கள். நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? அச்சா.

இன்று, நீங்கள் அனைவரும் குறிப்பாக ஒரு விடயத்திற்காகக் காத்திருக்கிறீர்கள். அது என்ன? (பாபா எங்களுக்குப் பெறுபேற்றைக் கூறுவார்) நீங்கள் பெறுபேறுகளைக் கொடுப்பீர்களா? அல்லது தந்தை பெறுபேறுகளைக் கொடுப்பாரா? பாப்தாதா என்ன கூறினார்? அவர் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வாரா அல்லது பெறுபேறுகளை வழங்குவாரா? நாடகத்திட்டத்தின்படி, எது நடந்ததோ, அது எவ்வாறு நடந்ததோ, அது நல்லது என்றே சொல்லப்படும். உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல இலட்சியம் இருந்தது. உங்களின் சொந்தக் கொள்ளளவிற்கேற்ப, உங்களின் செயல்களினூடாக நீங்கள் தகைமைகளைக் காட்டினீர்கள். நீண்ட காலப்பகுதிக்கு என்ற ஆசீர்வாதத்தை வரிசைக்கிரமமாக நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் பெற்ற அந்த ஆசீர்வாதம், இப்போதும் உங்களை ஆசீர்வாதங்களை அருளும் ரூபமாக ஆக்கியுள்ளது. நீங்கள் தொடர்ந்து தந்தையைப் போல் ஆசீர்வாதங்களை அருள்பவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்போது பாப்தாதா எதை விரும்புகிறார்? நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளீர்கள். இப்போது, இந்த வருடம், நீண்ட காலப்பகுதிக்குப் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பதைப் பயிற்சி செய்தவண்ணம், அதாவது, தந்தையைப் போல் கர்மாதீத் ஸ்திதியைக் கொண்டிருந்தவண்ணம், பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருக்கும் அனுபவத்தை உலகிற்கு வழங்குங்கள். இப்போது சிலவேளைகளில் மட்டும் இதை அனுபவம் செய்யும் வழிமுறையை மாற்றுங்கள். நீண்ட காலத்திற்கு ஆட்ட, அசைக்க முடியாதவராகவும் தடைகளில் இருந்தும் பந்தனங்கள், பாவகரமான எண்ணங்கள், பாவச் செயல்களில் இருந்தும் விடுபட்டிருப்பதை அனுபவம் செய்யுங்கள். அதாவது, அசரீரியாகவும் விகாரமற்றவராகவும் அகங்காரமற்றவராகவும் ஆகுங்கள். நடைமுறையில் உலகின் முன்னால் இந்த ஸ்திதியைக் கொண்டு வாருங்கள். இது தந்தைக்குச் சமமாக ஆகுதல் எனப்படுகிறது. உங்களுக்குப் புரிகிறதா?

பெறுபேறுகளில், உங்களில் எத்தனை பேர் உங்களுடன் திருப்தியாக இருக்கிறீர்கள்? முதலில், சுயத்துடன் திருப்தி. இரண்டாவதாக, பிராமணக் குடும்பத்தின் திருப்தி. மூன்றாவதாக, தந்தையின் திருப்தி. இந்த மூன்று பெறுபேறுகளிலும், நீங்கள் இப்போது அதிகளவு மதிப்பெண்களைப் பெற வேண்டும். எனவே, திருப்தியானவராகி, மற்றவர்களையும் திருப்திப்படுத்துங்கள். தந்தையின் திருப்தி இரத்தினங்களாகி, எப்போதும் தொடர்ந்து பிரகாசியுங்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களில் மதிப்பு வைத்திருக்கிறார். இதனாலேயே, அவர் உங்களுக்கு மறைமுகமான பதிவேடுகளைக் காட்டுகிறார். நீங்களே எதிர்காலத்தில் இவ்வாறு ஆகப் போகிறவர்கள். இதனாலேயே, தந்தை உங்களின் சதா முழுமையான ஸ்திதியைப் பார்க்கிறார். அச்சா.

நீங்கள் அனைவரும் திருப்தி இரத்தினங்கள், இல்லையா? விரிவாக்கத்தைப் பார்க்கும்போது, சந்தோஷமாக இருங்கள்! நீங்கள் அனைவரும் அபு ரோட்டில் இருந்து வரிசைகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். இப்போது, இந்த மண்டபம் நிரம்பிவிட்டது. ஆனால், அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போது நீங்கள் தூங்குவீர்களா? அல்லது நீங்கள் இரவு முழுவதும் சதா யோகம் செய்வீர்களா? இதுவும் நிகழும். ஆகவே, சிறிதளவுடன் சந்தோஷப்படுங்கள். மூன்றடி நிலத்திற்குப் பதிலாக, நீங்கள் ஓரடி நிலத்தைப் பெற்றாலும், அதனால் சந்தோஷப்படுங்கள். முன்னர், இவ்வாறு இருந்தது என நினைக்காதீர்கள். குடும்பம் வளர்கிறது என்ற சந்தோஷத்தைக் கொண்டாடுங்கள். வானத்திலும் பூமியிலும் ஒருபோதும் இடம் இல்லாமல் போவதில்லை. பல மலைகள் உள்ளன. இது இருக்க வேண்டும், எனக்கு இது வேண்டும்...... என நீங்கள் நினைத்தால், நீங்கள் அதைப் பெரிய விடயம் ஆக்குகிறீர்கள். அதன்பின்னர், தாதிகளும் என்ன செய்வது என்றும், எவ்வாறு அதைச் செய்வது என்றும் நினைக்க வேண்டியிருக்கும். நீங்கள் பகலில் சூரிய வெளிச்சத்தில் தூங்கி, இரவில் விழித்திருக்க வேண்டிய ஒரு நாளும் வரும். அந்த மக்கள் ஒரு நெருப்பை மூட்டி, அதைச் சுற்றியிருந்து, தங்களைச் சூடாக வைத்துக் கொள்வார்கள். நீங்கள் அனைவரும் யோக நெருப்பை வளர்த்து, அங்கு அமர்ந்திருப்பீர்கள். நீங்கள் இதை விரும்புகிறீர்களா? அல்லது, உங்களுக்குக் கட்டில்கள் வேண்டுமா? இருப்பதற்குக் கதிரைகள் வேண்டுமா? மலையின் ஆதாரத்தை உங்களின் கதிரை ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களிடம் வசதிகள் இருக்கும்போது, அவற்றில் இருந்து சௌகரியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் அவை இல்லாதபோது, மலையை உங்களின் ஆசனம் ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களின் முதுகை மட்டும் ஓய்வில் வைக்க வேண்டும், வேறு எதுவும் தேவையில்லை. 5000 பேர் வந்தால், கதிரைகளை எடுக்க வேண்டி நேரிடலாம். வரிசை ஒன்று உருவாகும்போது, நீங்கள் உங்களின் கட்டில்களையும் துறக்க வேண்டிவரும். எதற்கும் தயாராக இருங்கள். உங்களுக்கு ஒரு கட்டில் கிடைத்தால், ஹா ஜி. நிலத்தில் தூங்கச் சொன்னால், அதற்கும் ஹா ஜி. நீங்கள் ஆரம்பத்தில் இதை அதிகளவில் பயிற்சி செய்தீர்கள். இரண்டு வாரங்களுக்கு, மருந்தகம் மூடியிருக்கும். ஆஸ்த்மா நோயாளிகளும் தானியத்திலான சப்பாத்திகளும் லஸியும் (தயிரும் நீரும் கலந்த கலவை) உண்ண வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், அவர்கள் நோய்வாய்ப்படவில்லை. அனைவரும் ஆரோக்கியமாக ஆகினார்கள். இது ஆரம்பத்தில் அவர்களின் பயிற்சியால் செய்து காட்டப்பட்டது. இது இறுதியிலும் நிகழும். இல்லாவிடின், இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். ஆஸ்த்மா நோயாளி ஒருவரை லஸி அருந்தச் சொன்னால், அந்த நோயாளி அதைக் குடிப்பதற்குப் பயப்படுவார். எவ்வாறாயினும், ஆசீர்வாதங்கள் என்ற மருந்து அதில் கலந்திருக்கும்போது, அது களிப்பின் ரூபம் ஆகுகிறது. அது ஒரு பரீட்சைத்தாள் போன்று உணரப்படுவதில்லை. அது கஷ்டமாக இருப்பதில்லை. அந்த வேளையில், அது ஒரு தியாகம் போல் உணரப்படவில்லை. ஆனால் ஓர் உல்லாசப்பயணம் போன்றே இருந்தது. எனவே, நீங்கள் அனைவரும் தயாரா? அல்லது, சகல வசதிகளையும் வழங்குபவர்களிடம் ஆசிரியர்கள் ஒரு பட்டியலைக் கொடுப்பீர்களா? இதனாலேயே, பலர் இங்கு அழைக்கப்படவில்லை. காலம் வரும்போது, நீங்கள் உங்களின் ஆன்மீக முயற்சியில் வெற்றியின் ரூபத்தை, இந்த வசதிகள் அனைத்தில் இருந்தும் அப்பாற்பட்டிருப்பதை அனுபவம் செய்வீர்கள். நீங்களும் ஆன்மீக இராணுவத்தினர், அல்லவா? நீங்களும் அந்த இராணுவத்தினரின் பாகத்தை நடிக்க வேண்டியுள்ளது. இது இப்போது ஓர் அன்பான குடும்பம். இது ஒரு வீடு. நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்கள், இல்லையா? எவ்வாறாயினும், காலம் வரும்போது, நீங்கள் அந்த அன்புள்ள ஆன்மீக இராணுவம் ஆகுவீர்கள். வருகின்ற எத்தகைய சூழ்நிலைகளையும் வெற்றி கொள்வீர்கள். இதுவும் இராணுவத்தின் சிறப்பியல்பே ஆகும். அச்சா.

என்றும் தயாராக இருக்கும் விசேடமான ஆசீர்வாதம் குஜராத்திற்கு உள்ளது. நீங்கள் சாக்குப்போக்குகள் செய்வதில்லை: நாங்கள் என்ன செய்வது? எவ்வாறு நாங்கள் இதைச் செய்வது? அவர்கள் எந்தவிதமான முன்பதிவுகளும் செய்யாமல் இங்கே வந்துள்ளார்கள். நெருக்கமாக இருப்பதில் நன்மை உள்ளது. கீழ்ப்படிவானவராக இருக்கும் விசேடமான ஆசீர்வாதமும் குஜராத்திற்கு உள்ளது. ஏனென்றால், சேவை செய்வதற்கும் நீங்கள் ஹா ஜி என்று சொல்கிறீர்கள். கடின உழைப்புத் தேவைப்படும் சேவை அனைத்தும் குஜராத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சப்பாத்திகள் செய்யும் சேவையை யார் செய்கிறார்கள்? தங்குமிடத்தை வழங்கும் சேவையையும் ஓடித் திரியும் சேவையையும் யார் செய்கிறார்கள்? அது குஜராத்தே. பாப்தாதா அனைத்தையும் பார்க்கிறார். பாப்தாதா அனைத்தையும் அறியாமல் இருக்கிறார் என்பதல்ல. முயற்சி செய்பவர்கள் குறிப்பாக அதியன்பிற்குரியவரிடமிருந்து அன்பைப் பெறுகிறார்கள். நீங்கள் நெருக்கமாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் பாக்கியத்தை அதிகரிக்கும் நல்ல வழிமுறையையும் நீங்கள் பேணியுள்ளீர்கள். தமது பாக்கியத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது அனைவருக்கும் தெரியாது. சிலர் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் அந்தளவை மட்டும் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதை எவ்வாறு அதிகரிப்பது என்பது தெரியாது. எவ்வாறாயினும், குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாக்கியமும் இருக்கிறது. அதை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும் அவர்கள் அறிவார்கள். இவ்வாறே நீங்கள் உங்களின் பாக்கியத்தை அதிகரிக்கிறீர்கள். இதைக் காண்பதில் பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். தந்தையிடமிருந்து விசேடமான ஆசீர்வாதங்களைப் பெறுவதும் ஒரு பாக்கியத்தின் அடையாளமாகும். உங்களுக்குப் புரிகிறதா?

எங்கும் இருந்து இங்கு வந்துள்ள அன்பான குழந்தைகள் அனைவருக்கும், பாப்தாதா இந்தத் தேசத்திலும் வெளிநாடுகளிலும் எங்கும் உள்ள அன்பான குழந்தைகளுக்கு, உங்களின் அன்பிற்குப் பிரதிபலனாக, நீங்கள் அநாதியாக அன்பானவர்களாக இருப்பீர்களாக என்ற ஆசீர்வாதத்தை வழங்குகிறார். அன்பினால் தொலைவில் இருந்து நீங்கள் இங்கே ஓடோடி வந்திருப்பதைப் போல், பௌதீகமாக நீங்கள் ஓடோடி வந்து, பாபாவிற்கு நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையில் முன்னாலும் வந்திருப்பதைப் போல், உங்களின் முயற்சிகளிலும், உங்களின் பறக்கும் ஸ்திதியால் தந்தைக்குச் சமமானவர் ஆகுங்கள். அதாவது, எப்போதும் தந்தைக்கு நெருக்கமாக இருங்கள். நீங்கள் இங்கே தனிப்பட்ட முறையில் தந்தைக்கு முன்னால் வந்திருப்பதைப் போல், உங்களின் பறக்கும் ஸ்திதியால் எப்போதும் தந்தைக்கு நெருக்கமாக இருங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? உங்களின் இதயபூர்வமான அன்பு, நீங்கள் இங்கே வருவதற்கு முன்னரே, இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தையை வந்தடைகிறது. இந்தத் தினத்தில், தனிப்பட்ட முறையில் பாபாவிற்கு முன்னால் இருந்தாலென்ன அல்லது பௌதீகமாகத் தொலைவில் இருந்தாலென்ன, இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளில் இருந்தாலென்ன, வெகு தொலைவில் இருந்தபோதும், குழந்தைகள் அனைவரும் அனைவரிலும் நெருக்கமாக இருப்பதுடன் இதய சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். எனவே, அனைத்திலும் நெருக்கமான இடம், இதயமே ஆகும். எனவே, நீங்கள் வெளிநாட்டிலோ அல்லது இந்தத் தேசத்தில் எங்கேயாவதோ இருக்கவில்லை. ஆனால், இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் நெருக்கமானவர்கள், இல்லையா? குழந்தைகள் அனைவரினதும் அன்பும் நினைவுகளும் முறைப்பாடுகளும், அவர்களின் இனிமையான இதயபூர்வமான உரையாடல்களும் பரிசுகளும் தந்தையை வந்தடைந்துள்ளன. பாப்தாதா அன்பான குழந்தைகள் அனைவருக்கும் விசேடமான ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் அன்பிலே திளைத்திருப்பதன் மூலம் கடின உழைப்பில் இருந்து எப்போதும் விடுபட்டிருப்பீர்களாக. எனவே, நீங்கள் அனைவரும் அதற்கான பிரதிபலனைப் பெற்றுள்ளீர்கள், இல்லையா?

அன்பான குழந்தைகள் அனைவருக்கும், எப்போதும் நெருக்கமாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், எந்தவிதமான கர்ம பந்தனங்களில் இருந்தும் விடுபட்டு, நீண்ட காலத்திற்கு கர்மாதீத் ஸ்திதியை அனுபவம் செய்யும் விசேடமான ஆத்மாக்களுக்கும், இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருப்தி இரத்தினங்கள் அனைவருக்கும், அவ்யக்த ஸ்திதி என்ற ஆசீர்வாதத்துடன் பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் இரவு வணக்கமும் காலை வணக்கங்களும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் பழைய கணக்குகள் அனைத்தையும் முடிப்பதன் மூலமும் புதிய சம்ஸ்காரங்கள் என்ற புதிய ஆடைகளை அணிவதன் மூலமும் சம்பூரணமாகவும் முழுமையானவராகவும் தந்தைக்குச் சமமானவராகவும் ஆகுவீர்களாக.

தீபாவளி தினத்தில், மக்கள் புதிய ஆடைகளை அணிவார்கள். அதேபோல், மரணித்து வாழும் இந்தப் புதிய பிறப்பிலும், புதிய சம்ஸ்காரங்கள் என்ற ஆடைகளை அணிவதன் மூலம் புது வருடத்தைக் கொண்டாடுங்கள். உங்களின் பலவீனங்கள், குறைபாடுகள், வலிமை இன்மை, உணர்ச்சிவசப்படுதல் என்பவற்றின் பழைய கணக்குகள் இன்னமும் எஞ்சியிருந்தால், அவை அனைத்தையும் முடித்து, உண்மையான தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தப் புதிய பிறவியில், புதிய சம்ஸ்காரங்களைக் கிரகியுங்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
தூய எண்ணங்களின் பொக்கிஷங்களைச் சேமியுங்கள். உங்களின் நேரம் வீணான எண்ணங்களால் வீணாக்கப்படமாட்டாது.


அறிவித்தல்: இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல இராஜயோகி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை தியானத்தைப் பயிற்சி செய்யுங்கள். தூய உணர்வுகள் என்ற மேன்மையான மனோபாவத்துடன், உங்களின் மனதால் மகாதானி ஆகி, அனைவருக்கும் பயமற்றவராக இருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கும் சேவையைச் செய்யுங்கள்.