15.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரேயொரு தந்தை மாத்திரமே அனைவருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுப்பவராகிய, பேரானந்தமிக்கவர். தந்தை மட்டுமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகின்றார். அவரைத் தவிர, எவராலும் உங்கள் துன்பத்தை அகற்ற முடியாது.

பாடல்:
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இரண்டிலுமே தத்தெடுப்பது என்ற வழமை இருக்கின்றது, ஆனாலும், அவற்றில் உள்ள வேறுபாடு என்ன?

பதில்:
பக்தி மார்க்கத்தில் ஒருவர் தத்தெடுக்கப்படும்பொழுது, குருவும் சீடனும் என்ற உறவு ஏற்படுகின்றது. தத்தெடுக்கப்படுகின்ற ஒரு சந்நியாசி தன்னைக் (குருவை) பின்பற்றுபவர் என்று அழைப்பார், ஆனால், ஞான மார்க்கத்தில் நீங்கள் பின்பற்றுபவர்களோ அல்லது சீடர்களோ அல்ல. நீங்கள் தந்தையின் குழந்தைகளாகி விட்டீர்கள். ஒரு குழந்தையாகுவது என்றால், ஓர் ஆஸ்திக்கான உரிமையைப் பெறுவதாகும்.

பாடல்:
ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். இது பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனின் புகழாகும். அவர்கள் கூறுகின்றார்கள்: நமசிவாய (சிவனுக்கு வந்தனங்கள்). அவர்கள் கூறுவதில்லை: உருத்திரருக்கு வந்தனங்கள் அல்லது சோமநாதருக்கு வந்தனங்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நமசிவாய. அவரே பெருமளவில் போற்றப்படுகின்றவர். நமசிவாய என்பதன் அர்த்தம் தந்தையே ஆகும். தந்தையாகிய கடவுளின் பெயர் சிவன்;. அவர் அசரீரியானவர். ‘ஓ, தந்தையாகிய கடவுளே’ என்று கூறியவர் யார்? ஆத்மாவே அவ்வாறு கூறினார். ஆத்மா ஒருவர் ‘ஓ தந்தையே’ என்று மாத்திரம் கூறினால்;, அது பௌதீகத் தந்தையைக் குறிக்கின்றது. ‘ஓ தந்தையாகிய கடவுளே!’ என்ற கூற்று ஆன்மீகத் தந்தையைக் குறிக்கின்றது. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தேவர்கள் தெய்வீகப் புத்தி கொண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவர்களே உலக அதிபதிகளாக இருந்தார்கள். இப்பொழுது எவருமே அதிபதியாக இல்லை. எவருமே பாரதத்தின் பிரபுவாகவோ அல்லது அதிபதியாகவோ இல்லை. ஓர் அரசரைத் தந்தை அல்லது உணவளிப்பவர் என்று அழைக்கிறார்கள். இப்பொழுது அரசர்கள் எவருமே இல்லை. எனவே ‘சிவனுக்கு வந்தனங்கள்’ என்று கூறியவர் யார்? அவரே தந்தை என்று எவ்வாறு நீங்கள் கூறமுடியும்? அநேக பிரம்மாகுமார்களும், குமாரிகளும் உள்ளனர். அவர்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகள் ஆகுகின்றார்கள். அவர் பிரம்மா மூலம் அவர்களைத் தத்தெடுக்கிறார். நாங்கள் பிரம்மாகுமார்களும், குமாரிகளும் என்று அவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். அச்சா. பிரம்மா யாருடைய குழந்தை? சிவனுடைய குழந்தை ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மூவருமே சிவனுடைய குழந்தைகள். சிவபாபாவே அசரீரி உலகவாசியான, அதிமேலான கடவுள் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகவாசிகள். நல்லது, மனித உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது? அவர் கூறுகிறார்: நாடகத்திற்கேற்ப, நான் பிரம்மாவின் சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, அவரை மக்களின் தந்தை (பிரஜாபிதா) ஆக்குகிறேன். பிரம்மா என்று பெயரிடப்பட்டவருக்குள்ளேயே நான் பிரவேசிக்க வேண்டும். அவர் தத்தெடுக்கப்பட்ட பின்னர், அவரது பெயர் மாற்றமடைகின்றது. சந்நியாசிகளும் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் அவர்கள் இல்லறத்தில் உள்ளவர்களுக்கே பிறக்கின்றார்கள், அதன்பின்னர், தங்கள் சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே சமயநூல்கள் போன்றவற்றைக் கற்று, பின்னர் விருப்பமின்மையைக் கொண்டிருக்கின்றனர். பின்னர் அவர்கள் ஒரு சந்நியாசியிடம் சென்று, அங்கே தத்தெடுக்கப்படுகின்றார்கள். ‘இவர் என் குரு’ என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அவரை (குரு) ‘தந்தை’ என அழைக்க மாட்டார்கள். அவர்கள் குருவின் சீடர்களாகவோ அல்லது பின்பற்றுபவர்களாகவோ ஆகுகின்றார்கள். குரு சீடனைத் தத்தெடுத்துக் கூறுகின்றார்: நீங்கள் என் சீடர் அல்லது என்னைப் பின்பற்றுபவர். இந்தத் தந்தையோ “நீங்கள் என் குழந்தைகள்” என்றே கூறுகிறார். பக்தி மார்க்கத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைக் கூவியழைத்;து வருகின்றீர்கள், ஏனெனில், இங்கேயே பெருமளவு துன்;பம் இருக்கின்றது; பெருமளவில் விரக்தியில் கதறி அழுவதும் இருக்கின்றது. ஒரேயொருவரே தூய்மையாக்குபவராகிய தந்தை. ஆத்மாக்கள் அசரீரியான சிவனுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். தந்தை எப்பொழுதும் இருக்கிறார். தந்தையாகிய கடவுளை நோக்கி அவர்கள் பாடுகிறார்கள்: நீங்களே தாயும், நீங்களே தந்தையும். தந்தை இருப்பதால், தாயும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றார். தாயும் தந்தையுமானவர் இன்றிப் படைப்பு இடம்பெற முடியாது. தந்தை நிச்சயமாகக் குழந்தைகளிடம் வர வேண்டும். உலகச் சக்கரம் எவ்வாறு மீண்டும் மீண்டும் சுழல்கிறது என்று அறிந்துகொள்வதும், அதன் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்து கொள்வதுமே திரிகாலதரிசி ஆகுவதாகும். மில்லியன் கணக்கான நடிகர்கள் இருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய பாகமும் அவரவருக்கே உரியது. இந்த நாடகம் எல்லையற்றது. தந்தை கூறுகிறார்: நானே படைப்பவராகவும், இயக்குனராகவும், பிரதான நடிகராகவும் இருக்கிறேன். நானும் நடிக்கின்றேன், இல்லையா? என் ஆத்மா பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வோர் ஆத்மாவின் வடிவமும், பரமாத்மாவின் வடிவமும் ஒரே மாதிரியானவை. உண்மையில், ஆத்மா ஒரு புள்ளி வடிவானவரே. நட்சத்திரமாகிய ஆத்மா நெற்றியின் மத்தியில் வசிக்கிறார். ஆத்மா அதி சூட்சுமமானவர்; ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஓர் ஆத்மா சூட்சுமமானவர், ஆத்மாக்களின் தந்தையும் சூட்சுமமானவர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் புள்ளிகளைப் போன்றவர்கள். சிவனாகிய நானும் ஒரு புள்ளியே. எவ்வாறாயினும், நான் அதிமேலான படைப்பவரும், இயக்குனரும் ஆவேன். நானே ஞானக் கடல். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானம் என்னிடம் இருக்கின்றது. நானே ஞானம் நிறைந்தவரும், பேரானந்தம் மிக்கவரும் ஆவேன். நான் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அளிக்கின்றேன். அனைவரையும் நான் சற்கதிக்குள் அழைத்துச் செல்கிறேன். ஒரேயொரு தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். சத்திய யுகத்தில் எவருமே சந்தோஷமற்று இருப்பதில்லை. அது இலக்ஷ்மி, நாராயணருடைய இராச்சியம் மாத்திரமே. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானே மனித உலக விருட்சத்தின் விதை. உதாரணமாக, ஒரு மாமரம் இருக்கிறது, அதில் உயிரற்ற விதை உள்ளது, எனவே, அதனால் பேச முடியாது. அது உயிருள்ளதாக இருந்தால், அது கூறியிருக்கும்: இந்தக் கிளைகள், சிறு கிளைகள், இலைகள் போன்ற அனைத்தும் விதையாகிய என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இந்த ஒரேயொருவர் உயிருள்ளவர். இது கல்ப விருட்சம் எனக் கூறப்படுகின்றது. பரமாத்மாவாகிய பரமதந்தையே மனித உலக விருட்சத்தின் விதையாவார். தந்தை கூறுகிறார்: நானே வந்து, அதன் ஞானத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறேன். குழந்தைகளாகிய உங்களை நான் என்றென்றும் சந்தோஷமானவர்கள் ஆக்குகிறேன். மாயையே உங்களைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்குகிறாள். பக்தி மார்க்கம் முடிவடைய வேண்டும். நாடகச் சக்கரம் நிச்சயமாகச் சுழல வேண்டும். இதுவே எல்லையற்ற உலகின் வரலாறும், புவியியலும் ஆகும். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. கலியுகம் சத்திய யுகமாக மாற வேண்டும். ஒரேயொரு உலகம் மாத்திரம் இருக்கின்றது. தந்தையாகிய கடவுளும் ஒரேயொருவரே. அவருக்கென்று ஒரு தந்தை இல்லை. அவர் ஆசிரியராகவும் இருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் பேசுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். மக்களுக்குத் தாயும் தந்தையுமானவரைத் தெரியாது. நீங்களே அசரீரியான சிவபாபாவின் அசரீரியான குழந்தைகள் என்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். பின்னர் நீங்கள் சரீரதாரியாகிய பிரம்மாவின் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். அசரீரியான குழந்தைகள் அனைவரும் சகோதரர்களும், பிரம்மாவின் குழந்தைகள் அனைவரும் சகோதர, சகோதரிகளும் ஆவர். தூய்மையாக இருப்பதற்கான வழி இதுவேயாகும். சகோதரர்களும், சகோதரிகளும் எவ்வாறு விகாரத்தில் ஈடுபட முடியும்? விகாரமே தீயை மூட்டுகிறது, இல்லையா? காமத் தீ என்று கூறப்படுகின்றது. அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழியைத் தந்தை உங்களுக்குக் காட்டுகின்றார். முதலாவதாக, இங்கே கிடைக்கும் பேறு மிகவும் உயர்ந்தது. நாங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றினால், எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவோம். நினைவின் மூலம் மாத்திரமே நாங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றோம். புராதன பாரதத்தின் யோகம் மிகப் பிரபல்யமானது. தந்தை கூறுகிறார்: தொடர்ந்தும் என்னை நினைவுசெய்வதன் மூலம், நீங்கள் தூய்மையாகுவதுடன், உங்கள் பாவங்களும் அழிக்கப்படும். தந்தையின் நினைவில் உங்கள் சரீரங்களை விட்டு நீங்கினால், நீங்கள் என்னிடம் வருவீர்கள். இப் பழைய உலகம் முடிவடைய உள்ளது. இது அதே மகாபாரத யுத்தமாகும். தந்தைக்கு உரியவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சுவர்க்க அதிபதிகள் ஆகுவதற்காகக் கடவுள் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அதன்பின்னர் இராவணனாகிய மாயை உங்களை நரக அதிபதிகள் ஆக்குகின்றாள். நீங்கள் அவ்வாறான ஒரு சாபத்தைப் பெறுவதைப் போல உள்ளது. தந்தை கூறுகிறார்: அன்புக்குரிய குழந்தைகளே, என் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்களாக! அதன்பின்னர் இராவண இராச்சியம் ஆரம்பமாகும்பொழுது, இராவணன் கூறுகிறான்: ஓ கடவுளின் குழந்தைகளே, நீங்கள் நரகவாசிகள் ஆகுவீர்களாக! நிச்சயமாக நரகத்தின் பின்னர் சுவர்க்கம் வர வேண்டும். இது நரகம், இல்லையா? எங்கும் அளவற்ற வன்முறை நிலவுகிறது. சத்திய யுகத்தில் சண்டை அல்லது சச்சரவுகள் இருக்காது. பாரதமே சுவர்க்கமாக இருந்தது; அங்கே வேறெந்த இராச்சியமும் இருக்கவில்லை. இப்பொழுது பாரதம் நரகமாக இருப்பதால், எண்ணற்ற சமயங்களும் இருக்கின்றன. நான் பல சமயங்களை அழித்து, ஒரேயொரு தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு வர வேண்டும் என்று நினைவுகூரப்பட்டிருக்கின்றது. நான் ஒருமுறையே அவதரிக்கின்றேன். தந்தை தூய்மையற்ற உலகிற்குள் வர வேண்டும். பழைய உலகம் முடிவடையவுள்ளபொழுதே, அவர் வருகிறார். அதற்கு யுத்தமும் தேவைப்படுகின்றது. தந்தை கூறுகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் சரீரமற்றவர்களாக வந்தீர்கள், இப்பொழுது நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் பாகங்களைப் பூர்த்திசெய்து விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். நான் உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக்கி, திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். 5000 வருடங்களில் தேவர்களின் ஆத்மாக்கள் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். இந்த ஒரு கணக்கு இருக்கின்றது. அனைவரும் 84 பிறவிகளை எடுக்க மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்து, உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உலகச் சக்கரம் உங்கள் புத்தியில் சுழலட்டும். நாங்கள் நடிகர்கள் ஆவோம். ஒரு நடிகனாக இருந்தும், நாடகத்தின் படைப்பவரையும், இயக்குனரையும், பிரதான நடிகரையும் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் விவேகமற்றவர்கள். இதன் மூலம் பாரதம் மிகவும் ஏழையாகி விட்டது. தந்தை வந்து, அதனைச் செழிப்பானதாக்குகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாரத மக்களாகிய நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். நிச்சயமாக நீங்கள் 84 பிறவிகளை எடுக்க வேண்டியிருந்தது. இப்பொழுது உங்கள் 84 பிறவிகளும் முடிவடைந்து விட்டன. இந்த இறுதிப் பிறவி மாத்திரமே இப்பொழுது எஞ்சியுள்ளது. கடவுள் பேசுகிறார்: அனைவருக்கும் கடவுள் ஒருவரே. ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களில் எவரும் கிருஷ்ணரைக் கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அசரீரியானவரை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவரே சகல ஆத்மாக்களுக்கும் தந்தை. அவர் கூறுகிறார்: நான் இவருடைய பல பிறவிகளில் இறுதிப் பிறவியில் வந்து, இவருக்குள்ளே பிரவேசிக்கிறேன். இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டவுடன், விநாசம் ஆரம்பமாகி, நான் வீடு திரும்புகின்றேன். இது மிகவும் மகத்தான யாகம். ஏனைய யாகங்கள் அனைத்தும் இதற்குள்ளே அர்ப்பணிக்கப்பட உள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள குப்பைகள் இதற்குள்ளே வீழ்ந்து விடுகின்றன, பின்னர் வேறெந்த யாகமும் உருவாக்கப்படுவதில்லை; பக்தி மார்க்கம் முடிவுக்கு வருகின்றது. சத்திய, திரேதா யுகங்களின் பின்னர் பக்தி ஆரம்பமாகுகின்றது. பக்தி இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. எனவே, இவை அனைத்தும் சிவபாபாவின் புகழாகும். அவர்கள் அவருக்குப் பல பெயர்களைக் கொடுத்துள்ளார்கள், இருப்பினும், அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அவர் சிவன் ஆவார், பின்னர் அவர் உருத்திரர், சோமநாதர், பபுல்நாதர் (முட்களை மலராக மாற்றுபவர்) என்றும் அழைக்கப்படுகின்றார். அவர்கள் ஒரேயொருவருக்கே பல பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் செய்த சேவைக்கேற்ப, அவருக்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் உங்களுக்கு அருந்துவதற்கு அமிர்தத்தைக் கொடுக்கிறார். தாய்மார்களாகிய நீங்களே சுவர்க்கத்தின் வாயிலைத் திறப்பதற்குக் கருவிகளாகி இருக்கிறீர்கள். தூய்மையானவர்களே போற்றப்படுகிறார்கள். தூய்மையற்றவர்கள் தூய்மையானவர்களைப் போற்றுகிறார்கள். அனைவரும் குமாரிகளுக்குத் தலை வணங்குகிறார்கள். பிரம்மாகுமார்களும்;, குமாரிகளுமாகிய நீங்கள் பாரதத்தை ஈடேற்றுகிறீர்கள். நீங்கள் தூய்மையாகி, தந்தையிடமிருந்து தூய உலகம் எனும் உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுது, நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு முயற்சி தேவை. காமமே கொடிய எதிரி. அவர்களுக்கு விகாரமின்றி இருக்க முடியாதபொழுது, அவர்களை அடிக்க ஆரம்பிக்கிறார்கள். உருத்திர யாகத்தில் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனர். அப்பாவிகளைத் துன்புறுத்துகின்றவர்களுடைய பாவக் கலசம் நிறையும்பொழுது, விநாசம் இடம்பெறுகின்றது. பாபாவை என்றுமே நேரில் பார்த்திருக்காத, பல புதல்வியர் இருக்கிறார்கள், அவர்கள் எழுதுகிறார்கள்: பாபா, எனக்கு உங்களைத் தெரியும். உங்களிடமிருந்து என் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வதற்காக நான் நிச்சயமாகத் தூய்மையாகுவேன். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பக்தி மார்க்கத்தில் சமயநூல்களைக் கற்றுக் கொண்டும், பௌதீக யாத்திரைகள் சென்று கொண்டும் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, என்னுடன் யோகம் செய்யுங்கள். ஏனைய அனைவரிடமிருந்தும் உங்களைத் துண்டித்து, என்னுடன் மாத்திரமே உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் சென்று, பின்னர் உங்களைச் சுவர்க்கத்திற்கு அனுப்புவேன். அதுவே அமைதி தாமம். அங்கே ஆத்மாக்கள் பேசுவதில்லை. சத்திய யுகம் சந்தோஷ தாமமும், இது துன்ப உலகமும் ஆகும். இப்பொழுது இத் துன்ப உலகில் வாழ்ந்தவாறு, நீங்கள் அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவுசெய்ய வேண்டும், பின்னர் நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்து விட்டீர்கள். குலங்களின் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. முதலில், உச்சிக்குடுமிகளான பிராமணர்களும், பின்னர் தேவ குலமும், அதன்பின்னர்; சத்திரிய குலமும் உள்ளன. நீங்கள் குட்டிக்கரணம் எனும் விளையாட்டை விளையாடுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாகுவீர்கள். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இதை அறிந்து கொள்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுகின்றீர்கள். உங்களுக்கு எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி தேவை. ஆகவே, நீங்கள் நிச்சயமாகத் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அசரீரியான பரமாத்மா வந்து, இந்தப் பௌதீகச் சரீரத்தில் பிரவேசித்துள்ளார் என்று நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்;கள். ஆத்மாக்களாகிய நாம் அசரீரியானவர்களாக இருந்தபொழுது, நாங்கள் அங்கேயே இருக்கின்றோம். இந்தச் சூரியனும், சந்திரனும் ஒளியைக் கொடுக்கின்றன. இது எல்லையற்ற பகலும். இரவும் என்று அழைக்கப்படுகின்றது. சத்திய, திரேதா யுகங்கள் பகலும், துவாபர, கலியுகங்கள் இரவும் ஆகும். தந்தை வந்து, உங்களுக்குச் சற்கதிக்கான பாதையைக் காட்டுகிறார். உங்களுக்கு அத்தகையதொரு சிறந்த விளக்கம் கிடைக்கின்றது. சத்திய யுகத்தில் சந்தோஷம் இருக்கின்றது. அதன்பின்னர் அது சிறிதுசிறிதாகக் குறைவடைகின்றது. சத்திய யுகத்தில் 16 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன, பின்னர் திரேதா யுகத்தில் 14 சுவர்க்கக் கலைகள் இருக்கின்றன. இந்த விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அங்கே அகால மரணம் இடம்பெறுவதேயில்லை. அங்கே அழுவதுமில்லை, சண்டையிடுவதுமில்லை. அனைத்தும் எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியிருக்கிறது. இதனைக் கற்பதால் மட்டுமே நீங்கள் மனிதனிலிருந்து தேவர்களாக மாற முடியும். கடவுள் எங்களைத் தேவதேவியர்கள் ஆக்குவதற்கே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அக்கல்விகள் ஒரு சில சதங்கள் மட்டுமே பெறுமதி வாய்ந்தவை. இக் கல்வி வைரங்கள் பெறுமதியானது. அது இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாகுவதற்கான விடயமாகும். இந்த இராஜயோகம்; அனைத்திலும் அதி இலகுவானது. ஆனால், சட்டநிபுணர் ஆகுவதற்குக் கற்;பது இந்தளவிற்கு இலகுவானதல்ல. இங்கே, தந்தையையும் சக்கரத்தையும் நினைவுசெய்வதனால், நீங்கள் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுகுகின்றீர்கள். உங்களுக்குத் தந்தையைத் தெரியாதென்றால், உங்களுக்கு எதுவுமே தெரியாது. தந்தை உலக அதிபதியாகுவதில்லை. அவர் குழந்தைகளாகிய உங்களை அவ்வாறு ஆக்குகின்றார். சிவபாபா கூறுகிறார்: இந்தப் பிரம்மா சக்கரவர்த்தி ஆகுவார். நான் அவ்வாறு ஆகுவதில்லை. நான் நிர்வாணா தாமத்தில் இருக்கிறேன். நான் குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகளாக்குகிறேன். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையால் மாத்திரமே உண்மையான, தன்னலமற்ற சேவையைச் செய்ய முடியும்; மனிதர்களால் அதைச் செய்ய முடியாது. கடவுளைக் கண்டு கொள்வதனால், நீங்கள் முழு உலகிற்கும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஆகாயம், பூமி அனைத்திற்குமே அதிபதிகள் ஆகுகிறீர்கள். தேவர்கள் உலக அதிபதிகளாக இருந்தார்கள், இல்லையா? இப்பொழுது பல பிரிவினைகள் இருக்கின்றன. இபபொழுது தந்தை கூறுகிறார்: நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். நீங்கள் மாத்திரமே சுவர்க்கத்தில் இருந்தீர்கள். பாரதம் சுவர்க்க அதிபதியாக இருந்தது. இப்பொழுது அது ஏழையாகி விட்டது. தாய்மார்களாகிய உங்கள் மூலம் பாரதம் மீண்டும் ஒருமுறை உலக அதிபதியாகுகின்றது. பெரும்பாலானோர் தாய்மார்கள், இதனாலேயே “தாய்மார்களுக்கு வந்தனங்கள்” என்று கூறப்படுகின்றது. குறுகிய காலமே எஞ்சியிருக்கின்றது, உங்கள் சரீரங்களுக்கு உத்தரவாதம் இல்லை; அனைவரும் மரணிக்க வேண்டும். இப்பொழுது அனைவருக்குமே ஓய்வு பெறும் ஸ்திதியாகும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். கடவுள் எங்களுக்கு இதைக் கற்பிக்கின்றார். அவர் ஞானம் நிறைந்தவரும், அமைதி நிறைந்தவரும், பேரானந்தம் மிக்கவரும் என அழைக்கப்படுகின்றார். அவரே எங்களைச் சகல தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும், பதினாறு சுவர்க்கக் கலைகளில் முழுமையாகத் தூய்மையானவர்களாகவும் ஆக்குகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்கின்ற, முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இக் கல்வி உங்களை ஒரு வைரம் போல் ஆக்குகின்றது. ஆகவே, நன்றாகக் கற்று, ஏனைய அனைவரிடமிருந்தும் துண்டித்து, ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்கள் சுவர்க்க ஆஸ்தியை முழுமையாகப் பெறுங்கள். நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும் தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் “என்னுடையது” என்ற உணர்வைத் துறந்து, சதா திருப்தியான ஆத்மா ஆகுவதால், ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகச் சேவை செய்வீர்களாக.

நீங்கள் உங்களுடைய குடும்பத்துடன் வாழ்ந்து, சேவை செய்யும்பொழுது, எப்பொழுதும் நினைவுசெய்யுங்கள்: “நான் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர், ஒரு சேவகர்.” உங்களுக்குச் சேவை செய்யும்பொழுது, “என்னுடையது” எனும் உணர்வு எதுவும் இல்லாதபொழுதே, உங்களால் திருப்தியானவராக முடியும். “என்னுடையது” எனும் உணர்வுகள் சில இருக்கும்பொழுது, நீங்கள் தொந்தரவுக்குள்ளாகி, சிந்திக்கின்றீர்கள்: “என்னுடைய குழந்தை இதனைச் செய்கின்றார்…” “என்னுடையது” எனும் உணர்வு இருக்கும்பொழுது, நீங்கள் தொந்தரவிற்கு உள்ளாகுகின்றீர்கள், ஆனால் உங்களுக்கு “உங்களுடையது” (தேரா) எனும் உணர்வு இருக்கும்பொழுது, உங்களால் அக்கரைக்கு நீந்திச் (தேர்னா) செல்ல முடிகின்றது, “உங்களுடையது, உங்களுடையது” என்று கூறுவதெனில், உங்கள் சுய மரியாதையில் நிலைத்திருப்பது என்றும், “என்னுடையது, என்னுடையது” என்று கூறுவதெனில், அகங்காரத்தைக் கொண்டிருப்பது என்றும் அர்த்தமாகும்.

சுலோகம்:
ஒவ்வொரு கணத்திலும் உங்கள் புத்தியால் தந்தையையும், அவருடைய ஸ்ரீமத்தையும் அறிந்திருங்கள், அப்பொழுது நீங்கள் தனது இதயத்தால் அர்ப்பணித்துள்ள ஓர் ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.