16.03.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களான சகோதரர்களாகக் கருதி, ஒருவர் மீது ஒருவர் ஆன்மீக அன்பைக் கொண்டிருங்கள். நீங்கள் சதோபிரதான் ஆக விரும்பினால், எவரிலும் குற்றம் காணாதீர்கள்.

கேள்வி:
எதன் அடிப்படையில் நீங்கள் தந்தையிடமிருந்து பல மில்லியன் மடங்கு ஆஸ்தியைப் பெற முடியும்?

பதில்:
தந்தையிடமிருந்து பல மில்லியன் மடங்கு ஆஸ்தியைப் பெறுவதற்கு, நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். தந்தையைத் தவிர ஏனைய அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் நேரத்தை இவர் இவ்வாறானவர், அவர் அதைச் செய்கின்றார் போன்ற விடயங்களையிட்டு வீணாக்காதீர்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது என்பதால், எப்பொழுதும் சதோபிரதான் ஆகவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருங்கள். தொடர்ந்தும் அன்போடு தந்தையைப் பற்றிக் கொண்டிருங்கள். உங்களைச் சூட்சும நிலையில் தொடர்ந்தும் சோதித்தால், உங்களால் உங்கள் முழுமையான ஆஸ்தியைப் பெற முடியும்.

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை, மீண்டும் ஒருமுறை உங்களைச் சதோபிரதான் ஆக்குகின்றார் என்பது இப்போது இங்கு அமர்ந்திருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். உங்களை ஆத்மாக்களான, சகோதரர்கள் என்று கருதுங்கள் என்பதே அவர் உங்களைப் பயன்படுத்துமாறு கூறுகின்ற பிரதான வழிமுறை. ஒருவருக்கொருவர் அதிகளவு ஆன்மீக அன்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே உங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற முக்கிய கற்பித்தலாகும். நீங்கள் ஆன்மீக அன்பைக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது அதனைக் கொண்டிருப்பதில்லை. அசரீரி உலகில் அன்பு என்ற கேள்வி எழுவதில்லை. ஆகவே எல்லையற்ற தந்தை வந்து, கற்பித்தலைத் தருகிறார்: குழந்தைகளே, இன்று, நாளை என்று நீங்கள் கூறும்போது நேரம் கடந்து விடுகிறது. நாட்கள், மாதங்கள், வருடங்களும் கடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள், இலக்ஷ்மி, நாராயணன் போன்று இருந்தீர்கள் என்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். உங்களை அவ்வாறு ஆக்கியவர் யார்? தந்தையேயாவார். எவ்வாறு நீங்கள் கீழிறங்கி வந்தீர்கள் என்பதையும், தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் படிப்படியாக மேலேயிருந்து, கீழிறங்கி வருவதால், காலம் கடந்து செல்கின்றது. அந்த நாள் கடந்து விட்டது; அந்த மாதம் கடந்து விட்டது; அந்த வருடம் கடந்து விட்டது. அந்தக் காலமும் கடந்துவிட்டது. ஆரம்பத்தில் நீஙகள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்; நீங்கள் ஒருவருடன் ஒருவர் அதிகளவு அன்பைக் கொண்டிருந்தீர்கள். சகோதரர்களாகிய நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கற்பித்தலைத் தந்தை சகோதரர்களாகிய உங்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளார். நான் உங்கள் தந்தை. நான் உங்களை அதிகளவு அன்புடன் கவனித்து வருகிறேன். நான் உங்களைத் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆக்குகிறேன். உங்கள் இலக்கும்;, குறிக்கோளும் சதோபிரதான் ஆகுவதாகும். நீஙகள் எவ்வளவுக்கு அதிகமாகச் சதோபிரதான் ஆகுகின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். சகோதரர்களாகிய நீங்கள் ஒருவருடனொருவர் அதிகளவு அன்புடன் வாழ்ந்து வந்தீர்கள். நீங்கள் தேவர்களாக, ஒருவருடனொருவர் மிகவும் அன்பாக இருந்தீர்கள் என்பதை இப்போது தந்தையிடமிருந்து அறிந்து கொள்கிறீர்கள். அந்தத் தேவர்களுக்கும், அவர்களின் சுவர்க்கத்திற்கும் பெருமளவு புகழ் உள்ளது. நீங்களும் சுவர்க்கவாசிகளாக இருந்தீர்கள். பின்னர், இன்றும், நாளையும் என்று கூறிக்கொண்டு, தொடர்ந்து நீங்கள் முதல் நாளிலிருந்து, இன்று வரை கீழிறங்கியுள்ளீர்கள். 5000 வருடங்களுள், இன்னும் சில வருடங்களே எஞ்சியுள்ளன. ஆரம்பத்திலிருந்து எவ்வாறு நீங்கள் உங்கள் பாகங்களை நடித்துக் கொண்டிருந்தீர்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இப்போது சரீர உணர்வு காரணமாக, ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருப்பதில்லை. நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொருவரினதும் குறைபாடுகளையே பார்க்கிறீர்கள்: இன்னார் இவ்வாறு உள்ளார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருந்தபோது, ஒருபோதும் மற்றவர்களில் குற்றம் காணவில்லை. நீங்கள் ஒருவருடனொருவர் பெருமளவு அன்பைக் கொண்டிருந்தீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் அதே ஸ்திதியைக் கிரகிக்க வேண்டும். இங்கு உங்கள் மத்தியில் சண்டை, சச்சரவு செய்ய ஆரம்பிக்கக் கூடியவகையில் நீங்கள் ஒருவரையொருவர் அந்தப் பார்வையுடன் பார்க்கிறீர்கள். இதனை எவ்வாறு முடிவுக்குக்; கொண்டு வரலாம்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானாக, பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள். பின்னர் படிப்படியாகக் கீழிறங்கும்போது, நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள். நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் இனிமையானவர்கள் போன்று ஆகவேண்டும். நீங்கள் சந்தோஷத்தை அருள்பவர்களாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் துன்பத்தைக் கொடுப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். இராவண இராச்சியத்தில் நீங்கள் காம வாளைப் பயன்படுத்த ஆரம்பித்து, ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கிறீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது, காம வாளைப் பயன்படுத்தவில்லை. இந்த ஐந்து விகாரங்களே உங்கள் எதிரிகள். இது விகார உலகம். இராம இராச்சியம் எனக் குறிப்பிடப்படுவதும், இராவண இராச்சியம் என்று குறிப்பிடப்படுவதும் எது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இன்று, நாளை என்று நீங்கள் கூறும்போது சத்திய, திரேதா, துவாபர யுகங்கள் முடிவுக்கு வந்தன. கலியுகமும் இப்போது முடிவுக்கு வரவுள்ளது. நீங்கள் சதோபிரதானிலிருந்து, தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். உங்களது ஆன்மீக சந்தோஷம் மறைந்து, உங்கள் ஆயுட்காலமும் குறைந்துவிட்டது. இப்போது நான் வந்திருக்கிறேன். ஆகவே நான் நிச்சயம் உங்களை மீண்டும் சதோபிரதான் ஆக்குவேன். நீங்கள் கூவியழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வொரு 5000 வருடத்திலும், சங்கம யுகத்தில் நான் வருகிறேன். இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் என்னை எவ்வளவுக்கு அதிகமாக நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாகத் தொடர்ந்தும் உங்கள் குறைபாடுகள் நீக்கப்படும். நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது, உங்களில் குறைபாடுகள் இருக்கவில்லை. நீங்கள் உங்களைத் தேவர்கள் என அழைத்தீர்கள். இப்போது அந்தக் குறைபாடுகளை எவ்வாறு நீக்கலாம்? ஆத்மாக்களே அமைதியிழந்தவர்கள் ஆகுகின்றனர். ஏன், நீங்கள் அமைதி அற்றவர்கள் ஆகினீர்கள் என இப்போது நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் உங்களைச் சகோதரர்களாகக் கருதியபோது, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பெருமளவு அன்பைக் கொண்டிருந்தீர்கள். அதே தந்தை இப்போது வந்திருக்கிறார். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களான, சகோதரர்களாகக் கருதுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பைக் கொண்டிருங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதால், நீங்கள் ஒருவரிலொருவர் பிழை கண்டுபிடிக்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு நீங்கள், உங்கள் சொந்த முயற்சியைச் செய்யுங்கள். அத்தகைய ஓர் ஆஸ்தியைத் தருவதனால், தந்தை உங்களை முழுமையாக நிரம்பியவர்கள் ஆக்கியுள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். தந்தை இப்போது வந்துள்ளார். ஆகவே ஏன் நாங்கள் அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, மீண்டும் ஒருமுறை முழுமையான ஆஸ்தியைப் பெறக்கூடாது? நாங்கள் தேவர்களாக இருந்து, பின்னர் 84 பிறவிகளை எடுத்தோம். இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் சிறிதும் அசைக்க முடியாதவர்களாக இருந்தீர்கள். உங்களுக்கிடையே முரண்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. அத்துடன் நீங்கள் எவரையும் இழிவுபடுத்தவுமில்லை. இப்பொழுது ஏதாவதொரு பலவீனம் அல்லது வேறொன்றுள்ளது. ஆகவே அது நீக்கப்பட வேண்டும். நாங்கள் அனைவரும் சகோதரர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்ய வேண்டும். சதோபிரதான் ஆகவேண்டும் என்ற அக்கறை மாத்திரமே இருக்க வேண்டும். இன்னார் இவ்வாறு இருக்கிறார், இன்னார் இதனைச் செய்தார் - அவ்வாறான அனைத்தையும் இப்போது மறந்துவிடுங்கள். தந்தை கூறுகிறார்: அவ்வாறான விடயங்களை ஒருபுறம் விட்டு, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இப்போது சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதாலேயே, நீங்கள் மற்றவர்களிலுள்ள குறைபாடுகளைப் பார்க்கிறீர்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். ஒருவரையொருவர் சகோதரர்களாகப் பாருங்கள். நீங்கள் நற்குணங்களை மாத்திரமே பார்ப்பீர்கள். மற்றவர்கள் நற்குணங்களை உடையவர்கள் ஆகுவதற்குத் தூண்டும் முயற்சியைச் செய்யுங்கள். எவராவது ஏதாவது தவறு செய்தால், அந்நபர் தமோ அல்லது ரஜோபிரதான் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. ஆகவே அவரது நடத்தை நிச்சயமாக அவ்வாறே இருக்கும். தந்தையிடமே அதிகளவு சிறந்த குணங்கள் உள்ளன. ஆகவே, தந்தையிடமிருந்து அனைத்துச் சிறந்த குணங்களையும் கிரகித்துக்கொண்டு, ஏனைய அனைத்தையும் துறந்துவிடுங்கள். குறைபாடுகளைத் துறந்து, நற்குணங்களைக் கிரகியுங்கள். தந்தை உங்களை மிகவும் நற்குணங்களை உடையவர்கள் ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்களும் என்னைப் போன்று நற்குணங்களை உடையவர்கள் ஆகவேண்டும். தந்தை சந்தோஷத்தை அருள்பவர். நாங்களும் சந்தோஷத்தை அருள்பவர்களாக ஆகவேண்டும். நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும் என்ற ஒரேயொரு அக்கறையை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும். வேறு எதனையும் செவிமடுக்காதீர்கள், அல்லது எவரையும் இழிவுபடுத்தாதீர்கள். ஒவ்வொருவரிலும் ஏதாவதொரு பலவீனமுள்ளது. நீங்கள் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாதவாறு அத்தகைய குறைபாடுகள் உள்ளன. மற்றவர்கள், அவரில் குறைபாடு உள்ளது எனப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அவரோ, தான் மிகவும் நல்லவர் என்று கருதுகின்றார். எவ்வாறாயினும், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், அவரிலிருந்து தவறான வார்த்தைகள் வெளிவருகின்றன. சதோபிரதான் ஸ்திதியில் இருக்கும்பொழுது, அவ்வாறானவை நிகழாது. இங்கு, உங்களில் குறைபாடுகள் உள்ளன. ஆனால் அதனைப் புரிந்துகொள்ளாததால், நீங்கள் உங்களைச் சாமர்த்தியசாலிகள் என்று கருதுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: நானே அனைவரிலும் சாமர்த்தியசாலி. நான் உங்கள் அனைவரையும் சாமர்த்தியமானவர்களாக, அனைவரிலும் இனிமையானவர்களாக, ஆக்குவதற்கே வந்துள்ளேன். உங்கள் குறைபாடுகள் போன்றவற்றைத் துறந்துவிடுங்கள். நீங்களே உங்கள் நாடியைச் சோதியுங்கள்: மிகவும் இனிமையான, ஆன்மீகத் தந்தையை எந்தளவுக்கு நான் அன்புடன் நினைவுசெய்கிறேன்? இவ்விடயங்களை நீங்கள் எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறீர்கள்?; எந்தளவுக்கு நீங்கள் அவற்றைப் பிறருக்கு விளங்கப்படுத்துகிறீர்கள்? சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதால், எவ்வித நன்மையுமில்லை. உலகம் இப்போது தமோபிரதானாக உள்ளது என விளங்கப்படுத்துவதே பிரதானமானது. அது சதோபிரதானாக இருந்தபோது, அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. இப்பொழுது நீங்கள் 84 பிறவிகளை எடுத்து, தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருதடவை சதோபிரதான் ஆகவேண்டும். பாரத மக்களே தமோபிரதான் ஆகுகின்றார்கள். மீண்டும் அவர்களே சதோபிரதான் ஆகுவார்கள். வேறு எவரையும் சதோபிரதான் என அழைக்கமுடியாது. சத்திய யுகத்தில் வேறெந்தத் தர்மமும் இல்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் எண்ணற்ற தடவைகள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகியுள்ளீர்கள். இப்போது நீங்கள் மீண்டும் அவ்வாறு ஆகவேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, என்னை நினைவுசெய்யுங்கள். இந்த ஓர் அக்கறையையே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்கள் தலையில் அதிகளவு பாவச்சுமை உள்ளது. தந்தை இப்போது உங்களை விழித்தெழச் செய்துள்ளார். பக்தர்கள் தேவர்களுக்கு முன்னால் சென்று, நாங்கள் விகாரமுள்ளவர்கள் என்று கூறுகிறார்கள். ஏனெனில், தேவர்களிடம் தூய்மை என்ற அந்தக் கவர்ச்சி உள்ளது. இதனாலேயே மக்கள் அவர்கள் முன்னால் சென்று, இதனைக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் அவர்கள் வீட்டிற்குச் சென்றவுடன், இதனை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தேவர்களுக்கு முன்னால் சென்றதும், தங்களில் ஒரு விருப்பமின்மையை உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன், அந்த விருப்பமின்மையை மறந்துவிடுகிறார்கள். தங்களை அவ்வாறு ஆக்கியவர் யார் என்பதை அவர்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. தந்தை இப்போது கூறுகிறார்: நீங்கள் ஒரு தேவராக விரும்பினால், நிச்சயமாகக் கற்க வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றவேண்டும். தந்தை கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில் நீங்கள் உங்களைச் சதோபிரதான் ஆக்கவேண்டும். ஆகவே சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். வம்பு பேசாதீர்கள். நீங்கள் இவ்வாறு ஆகவேண்டும் என்ற ஓர் அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள். தந்தை கூறுகிறார்: ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் நீங்களே. பின்னர் நீங்கள் எங்கு சென்றீர்கள்? இந்த ஒருவரின் 84 பிறவிகளின் கதை எழுதப்பட்டுள்ளது. இப்போது நாங்கள் இவ்வாறு ஆகவேண்டும். நாங்கள்; தெய்வீகக் குணங்;களைக் கிரகிக்க வேண்டும். ஒருவரையொருவர் சகோதரர்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தந்தையிடமிருந்து, உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். மக்கள் தொடர்ந்தும் கடவுளைப் புகழ்ந்தும், அவதூறு செய்தும் வரு;கிறார்கள் என்பது உங்கள் புத்தியில் பதியவேண்டும். உண்மையில் புகழ்ச்சி எதுவுமில்லை, இகழ்ச்சி மாத்திரமே உள்ளது ஒருபுறம்; அவர்கள் அவரைப் புகழ்கிறார்கள். மறுபுறம், அவர்களுக்கு அவரைத் தெரியாததால், அவரை இகழ்கிறார்கள். ஒரு பக்கத்தில் அவர்கள் தந்தையைப் புகழ்கிறார்கள். மறு பக்கத்தில் அவர்கள் அவரைச் சர்வவியாபி என்று கூறுகிறார்கள். கடவுள் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கிறார் என்று கூறுவதால், அவர்கள் கடவுளிலிருந்து விலகிச்சென்றுவிட்டார்கள். விநாசத்தின்போது, கடவுளிலிருந்து விலகிச் சென்ற புத்தியானது அழிவை நோக்கி இட்டுச் செல்லப்படும். கடவுளில் அன்பைக் கொண்டிருந்த புத்திகளும், கடவுளின் முன்னே நேரடியாக உள்ளவர்களும் வெற்றியடைவார்கள். இயன்றவரை தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள். முன்னர் நீங்கள் அவரை நினைவுசெய்தீர்கள். ஆனால் நீங்கள் பலரை நினைவுசெய்ததால், அந்த நினைவு கலப்படமாக இருந்தது. தந்தை இப்போது கூறுகிறார்: கலப்படமற்ற நினைவில் இருங்கள். என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். பக்தி மார்க்கத்தில் எண்ணற்ற உருவங்கள் உள்ளன. அவற்றையும் நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும். பக்தி மார்க்கம் அங்கு இருக்க மாட்டாது என்பதால், அங்கு நீங்கள் நினைவுசெய்ய வேண்டிய தேவையில்லை. தந்தை கூறுகிறார்: எவ்வாறு நீங்கள் சதோபிரதான் ஆகலாம் என்ற அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள். எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்ற ஞானத்தை இப்போது நீங்கள் பெற்றுள்ளீர்கள். இது மிகவும் இலகுவானது. அச்சா, இதனை உங்களில் எவரும் விளங்கப்படுத்த முடியாவிட்டால், எவ்வாறு நீங்கள் சதோபிரதானிலிருந்து, தமோபிரதான் ஆகினீர்கள் என்பதையும், இப்போது நீங்கள் நிச்சயம் மீண்டும் சதோபிரதான் ஆகவேண்டும் என்பதையுமாவது குறைந்தபட்சம் உங்கள் புத்தி புரிந்துகொள்ள முடியும். ஒருவரால் பேச முடியாவிட்டால், அது அவரின் பாக்கியமும், நியதியும் என்று கூறப்படும். தந்தை உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு வழிமுறையைக் காட்டியுள்ளார். பட்ஜை உபயோகித்து விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது: இது எல்லையற்ற தந்தையைப் பிரதிநிதிப்படுத்துகிறது. அவரிடமிருந்தே நாங்கள் எங்கள் ஆஸ்தியைப் பெறுகிறோம். தந்தை நிச்சயம் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பார். அவர் அதனை நிச்சயமாக இங்கேயே உருவாக்குவார். சிவனின் பிறப்பு என்றால் சுவர்க்கத்தின் பிறப்பு என அர்த்தமாகும். தேவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்படி அவ்வாறு ஆகினார்கள்? மிகவும் மங்களகரமான சங்கமயுகத்தில் கற்றதனால் அவர்கள் தேவர்கள் ஆகினார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். ஆகவே நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். இதுவே உங்கள் இலகு ஞானமும், இலகு யோகமும், இலகு ஆஸ்தியும் ஆகும். எவ்வாறாயினும் இங்குள்ளவர்களில் சிலர் சதங்கள் பெறுமதியான ஆஸ்தியைப் பெறுகிறார்;கள். ஏனையோர் பல மில்லியன்கள் பெறுமதியான ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். நீங்கள் எவ்வளவுக்குக் கற்கின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நினைவு யாத்திரையில் இருந்துகொண்டு, ஏனைய அனைத்தையும் மறந்து விடுங்கள். இன்னார் இவ்வாறு உள்ளார் - இதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இலக்கு மிகவும் உயர்ந்தது. நீங்கள் சதோபிரதான் ஆகுவதில், மாயை தடைகளை ஏற்படுத்துகிறாள். இந்த ஞானத்தைக் கற்பதில் எந்தத் தடைகளும் இல்லை. பாபா கூறுகிறார்: உங்களிடம் எவ்வளவு அன்புள்ளது என்று சோதித்துப் பாருங்கள். நீங்கள் தந்தையைப் பற்றிக்கொண்டு இருக்கின்ற அளவுக்கு உங்கள் அன்பு இருக்கவேண்டும். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார்; உங்களுக்குக் கற்பிப்பது, இவரின் ஆத்மா அல்ல. இவரும் கற்கின்றார். பாபா, நீங்கள் என்னை மிகவும் விவேகமானவர் ஆக்குகிறீர்கள்! நீங்களே அதிமேலானவர். இந்த மனித உலகில், நீங்களே என்னை அதிமேன்மையானவர் ஆக்குபவர். இவ்வாறு நீங்கள் உள்ளார பாபாவைப் புகழ வேண்டும். பாபா, நீங்கள் அவ்வாறான அற்புதங்களைச் செய்கிறீர்கள்!. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, வந்து மீண்டும் ஒருமுறை உங்கள்; இராச்சியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். சதா சந்தோஷத்துடன், என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் உங்களைக் கேட்கவேண்டும்: நான் எந்தளவுக்கு பாபாவை நினைக்கிறேன்? கூறப்படுகிறது: சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு வேறு எதுவுமில்லை. தந்தையைக் கண்டுபிடித்த சந்தோஷம் உள்ளது. எவ்வாறாயினும், சில குழந்தைகள் அந்தச் சந்தோஷத்தை உள்ளாரப் பேண முடியாதுள்ளார்கள். இல்லாவிட்டால், அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும் என்று மனச்சாட்சி கூறுகின்றது. இந்தக் கல்வியின் மூலம் நாங்கள் அரசர்கள்; ஆகுவோம். நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். பரம பாபா எங்களுக்குக் கற்பிக்கிறார். பாபா கருணை நிறைந்தவர்! அவர் எவ்வாறு இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்குப் புதிய விடயங்களை விளங்கப்படுத்துகிறார் என்று பாருங்கள். வேறு எவரது புத்தியிலும் இல்லாத, பல புதிய விடயங்கள் இப்போது உங்கள் புத்தியில் உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஆத்ம உணர்வு ஸ்திதியைக் கிரகித்து, சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள். எவரிலும் பிழை கண்டுபிடிக்காதீர்கள். ஒருவரோடொருவர், மிகுந்த அன்புடன் வாழுங்கள். அபிப்பிராய பேதங்கள் எதனையும் கொண்டிருக்காதீர்கள்.

2. ஒரேயொரு தந்தையிடமிருந்து, நற்ணங்களைக் கிரகித்து, ஏனைய அனைத்தையும் துறந்து விடுங்கள், சதோபிரதான் ஆகுகின்ற அக்கறையை மாத்திரம் கொண்டிருங்கள். எவரது அவதூறையும் செவிமடுக்காதீர்கள். நீங்களும் எவரையும் அவதூறு செய்யாதீர்கள். உங்களை மிகவும் திறமைசாலி என்று கருதாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒளியின் அடிப்படையில் ஞானம், யோகம் எனும் சக்திகள் மூலம் பரிசோதனை செய்வதால், பரிசோதனை செய்கின்ற ஓர் ஆத்மாவாக இருப்பீர்களாக.

விஞ்ஞானத்தின் பல நடைமுறைப் பரிசோதனைகள் இயற்கை ஒளியாலேயே காட்டப்படுவதைப் போன்று, அதேவிதமாக, ஞானமும் யோகமும் எனும் சக்திகளால் அழிவற்ற கடவுளின் ஒளியையும், ஆத்ம உணர்வு எனும் ஒளியையும், உங்கள் நடைமுறை ஸ்திதி எனும் ஒளியையும் பரீட்சித்துப் பார்க்க முடியும். உங்கள் ஸ்திதியும் ரூபமும் இலேசாகவும், ஒளியாகவும் இருந்தால், அப்பொழுது உங்கள் பரிசோதனைகளில் உங்களால் மிகவும் இலகுவாக வெற்றியடைய முடியும். ஒவ்வொருவரும் சுயத்தின் மூலம் பரீட்சித்துப் பார்க்க ஆம்பிக்கும்பொழுது, பரீட்சித்துப் பார்க்கின்ற ஒரு சக்திவாய்ந்த ஆத்மாக்களின் ஒன்றுகூடல் உருவாக்கப்படும்.

சுலோகம்:
தடைகளின் சுவடுகள், சந்ததிகள் அனைத்தையும் முடித்து விடுபவர்களே, தடைகளை அழிப்பவர்கள் ஆவர்.