16.05.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது இந்நாடகச் சக்கரம் முடிவடைகிறது. எனவே, புதிய உலகிற்குச் செல்வதற்கு, நீங்கள் பாலும் சீனியும் போன்று இருக்கவேண்டும். அங்கு அனைவரும் பாலும் சீனியும் போன்று இருப்பார்கள், ஆனால் இங்கோ அனைவரும் உவர்நீர் போன்றவர்கள் ஆவர்.

கேள்வி:
ஞானம் என்ற மூன்றாவது கண்ணைக் கொண்ட குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஞானத்தை அறிந்துகொள்வதால், முக்காலங்களையும் அறிந்தவர்கள் ஆகுகிறீர்கள்?

பதில்:
நீங்கள் இப்பொழுது முழு உலகின் வரலாறினதும், புவியியலினதும் ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். சத்திய யுகத்தின் ஆரம்பத்திலிருந்து கலியுகத்தின் இறுதி வரையிலான வரலாற்றையும் புவியியலையும் பற்றி நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு, இன்னுமொன்றை எடுக்கிறார். ஒவ்வோர் ஆத்மாவிலும் சம்ஸ்காரங்கள் உள்ளன. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது பெயரிலிருந்தும், ரூபத்திலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுங்கள். உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள்.

பாடல்:
ஓ மனிதா, பொறுமையாக இரு! உனது சந்தோஷ நாட்கள் வரப்போகின்றன.

ஓம் சாந்தி.
இது ஒவ்வொரு கல்பத்திலும் குழந்தைகளுக்குக் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்களும் இதை அறிவீர்கள். சத்தியயுகம் விரைவில் வரவேண்டும், அப்பொழுதே நீங்கள் இத்துன்ப உலகிலிருந்து விடுவிக்கப்பட முடியும் என்பதே உங்கள் இதயங்களின் விருப்பம் ஆகும். எவ்வாறாயினும், நாடகம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது. தந்தை உங்களுக்குப் பொறுமையைக் கொண்டிருக்குமாறு கூறுகிறார்: மிகச்சொற்ப நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவ்வுலகம் மாறவேண்டும் என்று முக்கியஸ்தர்கள் ஓசை எழுப்புகின்றார்கள். தலைவர்கள் அனைவரும், உதாரணத்திற்கு பாப்பரசர் போன்றவர்கள் உலகம் மாறப்போகிறது என்று கூறுகிறார்கள். அச்சா, அவ்வாறாயின் அங்கு எவ்வாறு அமைதி இருக்க முடியும்? தற்பொழுது, அனைவரும் உவர்நீரைப் போன்றவர்கள். இங்கு, நாங்கள் பாலும் சீனியும் போன்றவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறோம், மறுபுறத்தில் உள்ளவர்களோ, நாளுக்கு நாள் மேலும் மேலும் உவர்நீரைப் போன்றவர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் மத்தியில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொலை செய்துவிடுகின்றார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு வருகின்றன. இப்பொழுது நாடகச் சக்கரம் முடிவடைகிறது. பழைய உலகம் முடிவடையவுள்ளது, புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. புதிய உலகம் பழையதாகிப் பின்னர் பழைய உலகம் மீண்டும் புதியதாக்கப்படுகிறது. இதுவே உலகச் சக்கரம் என அழைக்கப்படுகிறது, அது தொடர்ந்தும் சுழல்கிறது. நூறாயிரக் கணக்கான வருடங்களின் பின்னர் பழைய உலகம் புதியதாகிறது என்பதல்ல. இல்லை. பக்தியானது ஞானத்திலிருந்து முற்றாக வேறுபட்டது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் தெட்டத் தெளிவாக அறிவீர்கள். பக்தி இராவணனுடன் தொடர்புபட்டது, ஞானம் இராமருடன் தொடர்புபட்டது. இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்துகொள்கிறீர்கள். ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து புதிய உலகை ஸ்தாபியுங்கள் என நீங்கள் தந்தையைக் கூவியழைத்துப் பிரார்த்திக்கிறீர்கள். நிச்சயமாகப் புதிய உலகில் சந்தோஷம் உள்ளது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை இளைய, முதிய குழந்தைகள் இருசாராரும் அறிவார்கள். இப்பொழுது இ;ந்நாடகம் முடிவடைகிறது. மீண்டும் ஒருமுறை, நாங்கள் சத்திய யுகத்துக்குச் செல்லவேண்டும், பின்னர் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வரவேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்களை இனங்கண்டு கொண்டுள்ளோம். ஆத்மாக்களாகிய நாங்கள் ஞானம் என்ற மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளோம், அதாவது எங்களுக்கு உலகச் சக்கரம் பற்றித் தெரியும். இதுவே திரிநேற்றியாக இருத்தல் என அழைக்கப்படுகிறது. உங்களுக்கு இப்பொழுது மூன்றாவது கண் உள்ளது, ஏனைய மனிதர்கள் அனைவருக்கும் வெறுமனே அவர்களின் பௌதீகக் கண்களே உள்ளன. அவர்கள் எவருக்கும் ஞானக் கண் கிடையாது. ஆத்மா ஞானத்தைப் பெறுகின்ற, மூன்றாவது கண்ணை அவர்கள் கொண்டிருக்கும்பொழுது மட்டுமே அவர்கள் முக்காலங்களையும் அறிபவர்கள் ஆகமுடியும். ஆத்மாவே ஒரு சரீரத்தை நீக்கி, இன்னுமொன்றை எடுக்கிறார். ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் உள்ளன. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: பெயரிலிருந்தும் ரூபத்திலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுங்கள். உங்களை ஒரு சரீரமற்ற ஆத்மாவாகக் கருதுங்கள். உங்களை ஒரு சரீரமாகக் கருதாதீர்கள். நீங்கள் அரைக் கல்பமாக, பரமாத்மாவை நினைவுசெய்து வருகிறீர்கள் என்பதையும், உங்களுக்குப் பெருமளவுக்குத் துன்பம் உள்ளபொழுது, நீங்கள் அவரை அதிகளவில் நினைவுசெய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது பெரும் துன்பம் உள்ளது. முன்னர், அதிகளவு துன்பம் இருக்கவில்லை. அந்நியர்கள் வந்தபொழுது, அந்த அரசர்கள் தங்கள் மத்தியில் சண்டையிட ஆரம்பித்தார்கள். அவர்கள் பிளவுபட்டனர். சத்தியயுகத்தில் ஒரேயொரு இராச்சியமே இருந்தது. சத்தியயுக ஆரம்பத்திலிருந்து கலியுக இறுதிவரைக்குமான வரலாற்றையும் புவியியலையும் நாங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறோம். சத்திய, திரேதா யுகங்களில் ஒரேயொரு இராச்சியமே இருந்தது. இல்லாவிட்டால், வழக்கமாக ஒரு வம்சம் மட்டும் இருப்பதில்லை. கிறிஸ்தவர்களைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் பிளவுபட்டிருக்கின்றார்கள். அங்கு, சத்தியயுகத்தில் ஒரேயொருவரது கரத்திலேயே முழு உலகமும் உள்ளது. அது சத்திய, திரேதா யுகங்களில் மட்டுமே உள்ளது. இந்த எல்லையற்ற வரலாறும் புவியியலும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளன. வேறு சத்சங்கங்களில் நீங்கள் வரலாறும் புவியியலும் என்ற வார்த்தைகளைச் செவிமடுத்திருக்க மாட்டீர்கள். அங்கு, நீங்கள் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மட்டுமே செவிமடுக்கிறீர்கள். அவ்விடயங்கள் இங்கு இருப்பதில்லை. இங்கு, நீங்கள் உலகின் வரலாற்றையும் புவியியலையும் கொண்டுள்ளீர்கள். உங்கள் தந்தையே அதிமேலானவர் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. இந்த ஞானம் அனைத்தையும் பேசியுள்ள தந்தைக்கு நன்றிகள். ஒரு விருட்சம் ஆத்மாக்களுக்கானதும், மற்றைய விருட்சம் மனிதர்களுக்கானதும் ஆகும். மனித விருட்சத்தின் உச்சியில் நின்று கொண்டிருப்பதாக யார் காண்பிக்கப்பட்டுள்ளார்? பிரம்மா மாத்திரமே முப்பாட்டனார் என அழைக்கப்படுகிறார். பிரம்மாவே பிரதானமானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் எவரும் பிரம்மாவின் வரலாற்றையும் சுயசரிதத்தையும்; அறியார். அதிமேன்மையான தந்தை பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் சூட்சும லோகத்தைப் பற்றியும் அறிவீர்கள். மனிதர்களாகிய நீங்கள் தேவதைகளாக மாறவுள்ளீர்கள். இதனாலேயே சூட்சும லோகம் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆத்மாக்களாகிய நீங்கள் அங்கு செல்கிறீர்கள்; உங்கள் சரீரங்கள் சூட்சுமலோகத்துக்குச் செல்வதில்லை. நீங்கள் எவ்வாறு அங்கு செல்கிறீர்கள்? அது மூன்றாவது கண் என அழைக்கப்படுகிறது. அது தெய்வீகப் பார்வை அல்லது திரான்ஸ் என அழைக்கப்படுகிறது. நீங்கள் திரான்ஸில் செல்லும்பொழுது, பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பார்க்கிறீர்கள். சங்கரரின் கண் திறந்தபொழுது, விநாசம் இடம்பெறுவதாக மக்கள் காண்பித்துள்ளார்கள். அதிலிருந்து எவரும் எதையும் புரிந்துகொள்ள முடியாது. நாடகத்துக்கேற்ப, விநாசம் இடம்பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் தங்கள் மத்தியில் சண்டையிடும் பொழுது விநாசம் இடம்பெறும். எவ்வாறாயினும், சங்கரர் என்ன செய்கிறார்? நாடகத்துக்கேற்ப, அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என மூவர் இருப்பதை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். பிரம்மா ஸ்தாபனைக்கெனவும் விஷ்ணு பராமரிப்புக்கெனவும், சங்கரர் விநாசத்துக்கெனவும் காண்பிக்கப்பட்டுள்ளனர். உண்மையில், இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. சங்கரருக்கு நடிப்பதற்கென பாகம் கிடையாது. சக்கரம் முழுவதும் பிரம்மாவும் விஷ்ணுவும் நடிக்கின்ற பாகம் உள்ளது. பிரம்மா விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு பிரம்மா ஆகுகிறார். பிரம்மாவின் 84 பிறவிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், விஷ்ணுவின் 84 பிறவிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சங்கரர் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர் ஆவார். இதனாலேயே அவர்கள் சிவனையும் சங்கரரையும் இணைத்துள்ளனர். உண்மையில், சிவனுக்கே அதிமகத்துவமான பாகம் உள்ளது. அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். கடவுள் ஞானம்-நிறைந்தவர் என அழைக்கப்படுகிறார். அவர் தனது பணியைத் தூண்டுதலினூடாக மேற்கொண்டிருப்பின், அவர் எவ்வாறு எங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஞானத்தைக் கொடுப்பார்? இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே, இதில் தூண்டுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை இங்கு வந்தாக வேண்டும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, என்னிடம் உலகச் சக்கரத்தின் ஞானம் உள்ளது. நான் நடிப்பதற்கென இப்பாகத்தைப் பெற்றுள்ளேன். இதனாலேயே நான் ஞானம்-நிறைந்தவரான, ஞானக்கடல் என அழைக்கப்படுகிறேன். நீங்கள் ஞானத்தைப் பெறும்பொழுதே, ஞானம் என்றால் என்ன என்பதை அறிய முடியும். நீங்கள் அதைப் பெற்றிராது விட்டால், எவ்வாறு அதன் அர்த்தத்தை அறியமுடியும்? முன்னர், கடவுள் தூண்டுதல்களைக் கொடுக்கிறார் எனவும், அவர் அனைத்தையும் அறிவார் எனவும், நாங்கள் செய்த பாவங்களையெல்லாம் கடவுள் பார்க்கிறார் எனவும் நீங்கள் கூறுவது வழக்கமாகும். பாபா கூறுகிறார்: நான் அத்தொழிலைச் செய்வதில்லை. நீங்கள் செய்த செயல்களுக்கெல்லாம், நீங்களே தண்டனையை அனுபவம் செய்ய வேண்டியிருக்கும். நான் அதை எவருக்கும் கொடுப்பதில்லை. நான் எவரையும் பார்ப்பதுமில்லை, நான் தூண்டுதலினூடாகத் தண்டனையைக் கொடுப்பதுமில்லை. தூண்டுதலினூடாக நான் எதையாவது செய்தால், அது நான் தண்டனை கொடுத்ததைப் போன்றிருக்கும். நான் ஒருவருக்கு மற்றவரைக் கொல்லுமாறு கூறினால், நான் குற்றம் சுமத்தப்படுவேன். மற்றையவருக்குக் கூறுபவர் சிக்கிக்கொள்வார். சங்கரர் தூண்டுதலைக் கொடுத்திருந்தால், அவரும் சி;க்கிக்கொண்டிருப்பார். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் என்னைப் புகழ்கிறீர்கள். நீங்கள் பாடுகிறீர்கள்: பாபா, வந்து எங்கள் துன்பத்தை அகற்றுங்கள். நான் உங்களுக்கு எத்துன்பத்தையும் விளைவிப்பதில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்; தந்தையின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் இருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். பாபா எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற நேரடி உணர்வை நீங்கள் இங்கு பெறுகிறீர்கள். இது ஒரு சந்திப்பு (மேளா) என அழைக்கப்படுகிறது. நீங்கள் நிலையங்களிற்குச் செல்கிறீர்கள், ஆனால், அங்கு பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு என நீங்கள் அதனை அழைக்க மாட்டீர்கள். இங்கேயே பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு இடம்பெறுகிறது. இப்பொழுது சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். தந்தை தனது குழந்தைகளின் மத்தியில் வந்திருக்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் இங்கேயே உள்ளார்கள். ஆத்மாவே தந்தையை நினைவுசெய்து அவரை வருமாறு அழைக்கின்றார். இதுவே சிறந்த சந்திப்பு ஆகும். தந்தை வந்து இராவண இராச்சியத்திலிருந்து ஆத்மாக்கள் அனைவரையும் விடுவிக்கிறார். எனவே, இது ஒரு சிறந்த சந்திப்பு, இல்லையா? இதனூடாக மனிதர்கள் தெய்வீகப் புத்தி உடையவர்கள் ஆகுகின்ற ஒரு சந்திப்பு இதுவே ஆகும். மனிதர்கள் அம்மேளாக்களில் (திருவிழாக்களில்) அழுக்காகுகிறார்கள். அவர்கள் எதையும் பெறுவதில்லை, ஆனால் தங்கள் பணத்தைத் தொடர்ந்தும் வீணாக்குகிறார்கள். அவை மாயையின் அசுர மேளாக்கள் என அழைக்கப்படுகின்றன. இது கடவுளின் மேளா ஆகும். பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு; உள்ளது. நீங்களும் அசுர மேளாக்களுக்கு உரியவர்களாக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் இப்பொழுது கடவுளின் மேளாவுக்கு உரியவர்கள் ஆவீர்கள். பாபா வந்துவிட்டார் என்பதை நீங்களும் அறிவீர்கள். இதை அனைவரும் அறிந்திருந்தால், இங்கு எவ்வளவு சனக்கூட்டம் இருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. மக்கள் தங்குவதற்கான பல்வேறு கட்டடங்களையும் பாபா எங்கிருந்து பெறுவார்? ஓ கடவுளே! உங்கள் நாடகம் அற்புதமானது! என மக்கள் இறுதியில் பாடியதாக நினைவுகூரப்படுகிறது. எந்த நாடகம்? உலகத்தை மாற்றுவதற்கான நாடகம். இதுவே மகத்துவமான, அற்புதமான நாடகமாகும். பழைய உலகம் அழிக்கப்பட முன்னர், புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆகவே, நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும்பொழுது, எல்லாவற்றுக்கும் முதலில், எப்பொழுதும் ஸ்தாபனையைப் பற்றியும் பின்னர் விநாசத்தைப் பற்றியும் அதன்பின்னர் பராமரிப்பைப் பற்றியும் பேசுங்கள். ஸ்தாபனை பூர்த்தி செய்யப்படும்பொழுது, விநாசம் ஆரம்பிக்கும், பின்னர் பராமரிப்பு இடம்பெறும். ஆகவே, நீங்களே சுயதரிசனச் சக்கரதாரிகளாகிய பிராமணக் குழந்தைகள் என்ற சந்தோஷம் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. பின்னர் நீங்கள் பூகோளத்தை ஆட்சி செய்பவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்களின் இராச்சியத்துக்கு என்ன நடந்தது என்பதை எவரும் அறியார். அதன் பெயரும் சுவடும் தொலைந்து விட்டன. தங்களை தேவர்கள் என அழைப்பதற்குப் பதிலாக, அவர்கள் இந்துக்கள் என அழைக்கிறார்கள். இந்துஸ்தானில் வசிப்பவர்கள் இந்துக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் ஒருபொழுதும் அவ்வாறு அழைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தேவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். ஆகவே, நாடகத்துக்கேற்ப, நீங்கள் இந்த மேளாவுக்கு வந்துள்ளீர்கள். நாடகத்தில் இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் படிப்படியாகத் தொடர்ந்தும் இடம்பெறும். நீங்கள் இப்பொழுது என்ன பாகத்தை நடிக்கிறீர்களோ, அடுத்த சக்கரத்திலும் அதே பாகத்தையே நடிப்பீர்கள். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இராவண இராச்சியத்தில் உங்களுக்கு அசுரப் பராமரிப்பு இருந்துள்ளது. நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். பின்னர் நீங்கள் தேவர்களின் குழந்தைகளாகவும், அதன் பின்னர் சத்திரியர்களின் குழந்தைகளாகவும் ஆகுவீர்கள். நீங்கள் தூய்மையற்ற இல்லறப் பாதையில் ஒருவராக ஆகினாலும், இப்பொழுது தூய இல்லறப் பாதையின் ஒருவராக ஆகுகிறீர்கள். அவர்களும் மனிதர்களே, ஆனால் அவர்களிடம் தெய்வீகக் குணங்கள் இருந்தன. அவர்கள் பல கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். விஷ்ணு யார் என்பதை எவராலும் உங்களுக்குக் கூற இயலாது. அவர்கள் மகா இலக்ஷ்மியை வழிபடுகிறார்கள். மக்கள் ஒருபொழுதும் ஜெகதாம்பாளிடம் செல்வத்தை வேண்டுவதில்லை. அவர்கள் பெருமளவு பணத்தைப் பெற்றால், அது அவர்கள் இலக்ஷ்மியை வழிபட்டதால், இலக்ஷ்மி அவர்களின் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்பியதாகக் கூறுகிறார்கள். இங்கு, நீங்கள் ஜெகதாம்பாளினூடாக, பரமாத்மா பரமதந்தை சிவனிடமிருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அவரே அருள்பவர் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் பாப்தாதாவை விடவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஜெகதாம்பாளுக்காக, எத்தனை திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன என்று பாருங்கள். பிரம்மாவுக்கு அத்தனை திருவிழாக்கள் நடத்தப்படுவதில்லை. பிரம்மா ஓரிடத்தில் மாத்திரமே அமருமாறு செய்யப்பட்டார். அஜ்மீருக்கு அருகில் பிரம்மாவுக்கென ஒரு பெரிய ஆலயம் உள்ளது. நீங்கள் இப்பொழுது செய்யும் விடயங்கள் அனைத்தினதும் புகழ் காரணமாக இறைவிகளுக்குப் பல ஆலயங்கள் உள்ளன. நீங்கள் பாரதத்துக்குச் சேவை செய்வதனால் அதிகளவில் வழிபாடு செய்யப்படுகிறீர்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஜெகதாம்பாள் ஒருபொழுதும் சர்வவியாபி என அழைக்கப்படுவதி;ல்லை. நீங்கள் புகழப்படுகிறீர்கள். ஒருபொழுதும் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைச் சர்வவியாபி என அழைப்பதில்லை, ஆனால் நான் ஒவ்வொரு துணிக்கையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறேன்! நீங்கள் என்னை அதிகளவு அவமரியாதை செய்கிறீர்கள். நான் உங்களுடைய புகழை அதிகளவு அதிகரிக்கிறேன்! பாரத மாதாவுக்கு வெற்றி என்று கூறப்படுகின்றது. நீங்கள் பூமியல்ல, பாரதத்தின் தாய்மார்கள் ஆவீர்கள். இப்பொழுது தமோபிரதானாகவுள்ள பூமி, பின்னர் சத்தியயுகத்தில் சதோபிரதானாக இருக்கும். தேவர்கள் ஒருபொழுதும் தங்கள் பாதங்களை இத்தூய்மையற்ற பூமியில் வைப்பதில்லை என இதனாலேயே கூறப்பட்டுள்ளது. தேசம் சதோபிரதானாக ஆகும்பொழுதே, அவர்கள் வருகிறார்கள். இப்பொழுது நீங்கள் சதோபிரதானாக வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றித் தந்தையை நினைவுசெய்தால், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். உங்களுக்கு இந்த அக்கறை இருக்கவேண்டும். நீங்கள் பாபாவை நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுவீர்கள். சத்தியயுகத்தில், ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகி இருப்பீர்கள். ஆகவே, நீங்கள் தூய்மையான சரீரங்களைப் பெறுவீர்கள். தங்கத்தினுள் கலப்படம் கலக்கப்;பட்டிருக்கும் பொழுது, அதிலிருந்து செய்யப்படும் அணிகலனும் அவ்வாறே இருக்கும். அதேபோன்று, ஆத்மாக்கள் பொய்யானவர்களாக இருக்கும்பொழுது, அவர்களின் சரீரங்களும் பொய்யானவையாகவே இருக்கும். தங்கத்தில் கலப்படம் கலக்கப்பட்டிருக்கும்பொழுது, அதன் பெறுமதி குறைகிறது. இப்பொழுது உங்களுக்குப் பெறுமதி இல்லை. முன்னர், நீங்கள் உலக அதிபதிகளாக, 24 கரட் தங்கமாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் ஒன்பது கரட் தங்கமெனக் கூறப்படுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுடன் தந்தை இந்த இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருக்கிறார். அவர் இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் களிப்பூட்டுகிறார். ஆகவே, அவரைச் செவிமடுப்பதால் மட்டுமே, நீங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவீர்கள். அங்கு வைரங்களாலும் இரத்தினங்களாலும் ஆன மாளிகைகள் இருக்கும். சுவர்க்கம் வேறு எவ்வாறு இருக்கும்? நீங்கள் அங்கு (திரான்ஸில்) மாம்பழச் சாற்றையும் பருகிவிட்டு பின்னர் இங்கு திரும்பி வருகிறீர்கள். அங்கு பழம் மிகப்பெரியதாக இருக்கும். இங்கு நீங்கள் அத்தகைய பழத்தைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள். சூட்சும லோகத்தில் எதுவும் இல்லை. விரைவில் நீங்கள் அங்கு நடைமுறையில் செல்ல இருக்கிறீர்கள். இதுவே பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு ஆகும். இச்சந்திப்பினூடாக நீங்கள் சுத்தமாகவும் பிரகாசமாகவும் ஆகுகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இங்கு வரும்பொழுது, சுதந்திரமாக (ஓய்வாக) இருக்கிறீர்கள், ஏனெனில் உங்களுக்கு உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் பற்றிய கவலைகள் எதுவும் இருக்காது. ஆகவே, நீங்கள் இங்கு இருக்கும்பொழுது, நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதற்கு, உங்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் இருக்கிறது. அங்கு, நீங்கள் உங்கள் வீட்டையும் அனைத்தையும் நினைவுசெய்கிறீர்கள். இங்கு, நினைவுசெய்வதற்கு எதுவுமேயில்லை. நீங்கள் காலையில் இரண்டு மணிக்கு விழித்தெழுந்து இங்கு அமரலாம். உங்களால் நிலையங்களுக்கு இரவில் செல்ல முடியாது. இங்கு, இது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் வந்து சிவபாபாவின் நினைவில் அமர முடியும். வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள். இங்கு நீங்கள் உதவியையும் பெறுகிறீர்கள். நேரத்துக்கு உறங்கச் சென்று நேரத்துக்கு விழித்தெழுங்கள். வாருங்கள், மூன்றிலிருந்து ஐந்து மணி வரை இங்கு அமருங்கள். பாபா வருவார், குழந்தைகளாகிய நீங்களும் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். யோகத்தைக் கற்பிப்பவர் பாபாவே ஆவார். இவரும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஆகவே, பாப்பும் தாதாவும் இருவரும் இங்கு வருவார்கள். நினைவில் இங்கு அமர்வதற்கும் அங்கு அமர்வதற்கும் இடையிலான வேறுபாட்டை பின்னர் நீங்கள் அவதானிப்பீர்கள். நீங்கள் இங்கு வேறு எதையும் நினைவுசெய்ய வேண்டியதில்லை. இதில் பெருமளவு நன்மை உள்ளது. இது மிகவும் சிறந்தது என பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களால் விழித்தெழ முடியுமா என நாங்கள் இப்பொழுது பார்ப்போம். உங்களிற் சிலருக்கு அதிகாலையில் விழித்தெழும் பயிற்சி உள்ளது. நீங்கள் ஐந்து விகாரங்களையும் துறந்துள்ளதுடன், பழைய உலகம் முழுவதிலும் விருப்பமின்மையைக் கொண்டுள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உலகை மாற்றுகின்ற அற்புதமான செயல் இப்பொழுது இடம்பெறுகிறது. ஆகவே, உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பாலும் சீனியும் போன்று ஒன்றாக வாழுங்கள்;.

2. அதிகாலையில் விழித்தெழுந்து ஒரேயொரு தந்தையின் நினைவில் அமருங்கள். அந்நேரத்தில் வேறு எவரையும் நினைவுசெய்யாதீர்கள். பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருப்பதுடன், ஐந்து விகாரங்களையும் துறவுங்கள்.

ஆசீர்வாதம்:
எதிலிருந்தும் நீங்கள் ஒதுங்கியிருப்பதை விடுத்து, உங்கள் புத்தியில் நம்பிக்கையை கொண்டிருப்பதனால், தந்தையின் ஆதாரத்தை ஒவ்வொரு கணமும் அனுபவம் செய்வதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

வெற்றி சொரூபங்கள் என்ற ஆசீர்வாதத்தை பெற்ற ஆத்மாக்கள், ஒவ்வொரு கணமும் ஆதாரத்தை கொண்டிருப்பவர்கள் என தம்மை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் ஆதாரமற்றிருக்கின்ற அல்லது தனியாக இருக்கின்ற எண்ணத்தைச் சற்றேனும் தம் மனதில் கொண்டிருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் கவலைப்படுவதோ அல்லது எல்லைக்குட்பட்ட தற்காலிக ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதோ இல்லை. அவர்கள் என்றுமே எந்தப் பணியிலிருந்தும், பிரச்சினையிலிருந்தும், நபரிடமிருந்தும் ஒதுங்கி இருக்க மாட்டார்கள், ஆனால் சகல செயல்களையும் செய்யும் வேளையில், அனைத்தையும் முகங்கொடுப்பதுடன், ஒத்துழைப்பையும் வழங்கி, எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தைப் பேணுவார்கள்.

சுலோகம்:
ஒரேயொரு தந்தையின் சகவாசத்தில் நிலைத்திருந்து, அவரை உங்கள் சகபாடி ஆக்குங்கள்.