16.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நீங்கள் சரீரதாரிகள் எவரதும் பெயரிலோ, உருவத்திலோ அகப்பட்டுக் கொள்ளக்கூடாது. சரீரமற்றவராகி, தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், நீங்கள் தொடர்ந்தும் நோய்களிலிருந்து விடுபட்டவராக ஆகுவீர்கள்.

கேள்வி:
விவேகமான குழந்தைகளின் பிரதான அறிகுறிகள் எவை?

பதில்:
1. விவேகமான குழந்தைகள் முதலில் ஞானத்தைத் தங்களுக்குள் கிரகித்து, பின்னர் மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டுவார்கள். மேகங்கள் தங்களை நிரப்பிப் பின்னர் சென்று மற்றவர்கள் மீது பொழிகின்றன. அவர்கள் கற்கின்ற நேரத்தில் கொட்டாவி விடமாட்டார்கள். தங்களை நிரப்பி புத்துணர்ச்சி பெற்றபின்னர், சென்று மற்றவர்கள் மீதும் பொழிகின்றவர்களை மாத்திரம் இங்கு அழைத்து வருவதே ஆசிரியர்களின் பொறுப்பாகும். 2. யோகத்தில் மிகச்சரியாக இருப்பவர்களும், சக்தி வாய்ந்த சூழலை உருவாக்க உதவி புரிபவர்களும், தடைகளை உருவாக்காதவர்களும் மாத்திரமே இங்கு வரவேண்டும். இங்கே, சுற்றிலும் அமைதி பேணப்பட வேண்டும், எவ்வித சத்தமும் எழக்கூடாது.

பாடல்:
ஓம் நமசிவாய....

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி என்பதன் கருத்து விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்;: ஆத்மாவும், பரமாத்மாவும் அமைதி சொரூபங்கள். தந்தையைப் போலவே குழந்தைகளும்;; இருப்பார்கள்;. எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: எப்படியாயினும், நீங்கள் அமைதி சொரூபங்களே. நீங்கள் அமைதியை வெளியிலிருந்து பெறுவதில்லை. இது இராவணனின் இராச்சியமாகும். இந்நேரத்தில் நீங்கள் உங்களது தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். நான் இவரில் பிரசன்னமாகியுள்ளேன், எனவே நான் உங்களுக்குக் கொடுக்கின்ற வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். பாபா உங்களை எவரதும், பெயரிலோ, உருவத்திலோ சிக்கவைப்பதில்லை. இவரது பெயரும் உருவமும் வெளிப்படையானவை, நீங்கள் அவரது உருவத்தினால் சிக்கிவிடக் கூடாது. முழு உலகுமே அனைவரையும் பெயரிலும் உருவத்திலும் சிக்க வைக்கிறது. பாபா கூறுகிறார்;: இவை அனைத்தும் பெயரையும், உருவத்தையும் கொண்டுள்ளன, அவற்றை நினைவு செய்யாதீர்கள். உங்களது. தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், நீங்கள் தொடர்ந்து நோய்களிலிருந்து விடுபட்டவராக ஆகுவீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் உங்களைப் போலவே இருந்தார்கள், ஆனால் அவர்கள் அலங்கரிக்கப் பட்டிருந்தார்கள். அவர்கள் முகடு (சீலிங்) அளவு உயரத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதல்ல. மனிதர்கள் மனிதர்களே. எனவே தந்தை கூறுகின்றார்: சரீரதாரிகள் எவரையுமே நினைவு செய்யாதீர்கள். உங்களது சரீரத்தை மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் அந்த சரீரத்தை நீக்க வேண்டும். இன்னுமொரு விடயம்: கவனயீனமாக இருக்காதீர்கள்! உங்களது தலைமீது பெருமளவு பாவச் சுமை உள்ளது. மிகப்பெரிய சுமை உள்ளது. ஒரே தந்தையின் நினைவு இல்லாமல் அது குறைக்கப்படமாட்டாது. தூய்மையாகி, அதி மேன்மையானவர்கள் ஆகுபவர்களே பின்னர் அதி தூய்மையற்றவர்களாக ஆகுகின்றனர் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. நீங்கள் உங்களைப் பார்ப்பதுடன், தந்தையையும் பெருமளவில் நினைவு செய்ய வேண்டும். உங்களால் இயன்ற அளவிற்குத் தந்தையை நினைவு செய்யுங்கள். அது மிக இலகுவானது. நடக்கும் போதும், உலாவித் திரியும்போதும் அத்தகைய அன்பிற்குரிய தந்;தையை நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! என நீங்கள் கூவியழைத்த அந்த ஒருவர், அவரே ஆவார். ஆனால், எவருமே அவர்மீது உண்மையான, ஆழமான அன்;பைக் கொண்டிருக்கவில்லை. அவர்களின் அன்பு அவர்களது கணவன்மார், குழந்தைகள் போன்றோர் மீதே செல்கிறது. அவர்கள் கூறுவதுண்டு: ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! தந்;தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்திலேயே வருகின்றேன். உருத்திரனின் ஞான யாகம் நினைவு கூரப்படுகிறது. கிருஷ்ணர் சத்தியயுகத்தின் இளவரசர் ஆவார். அவரால் வேறு எந்தப் பெயரிலோ, உருவத்திலோ, இடத்திலோ அல்லது நேரத்திலோ வரமுடியாது. நேருவும் ஒரு கல்பத்தின் பின்னர் அதே உருவத்திலும், பெயரிலுமே வருவார். அதேபோல், ஸ்ரீகிருஷ்ணரும் சத்தியயுகத்திற்கு வருவார். அவரது முகச்சாயல்கள்; மாற்றமடைய மாட்டாது. இந்த யக்ஞத்தின் பெயர் உருத்திரனின் ஞான யாகம் என்பதாகும். சுயஇராச்சியத்தைப் பெறுவதற்காக இந்த யாகத்தில் குதிரை அர்ப்பணிக்கப்படுகிறது. ஓர் இராச்சியத்தைப் பெறுவதற்காக உங்களை அர்ப்பணித்தல் என்றால், அவருக்குச் சொந்தமாகுதல் என்பதாகும். இப்பொழுது நீங்கள் தந்தைக்குச் சொந்;தமாகியுள்ளீர்கள், எனவே அவரை மாத்திரமே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் எல்லைக்குட்பட்ட தொடர்புகளை விடுத்து, எல்லையற்றவருடனேயே தொடர்பை வைத்திருக்க வேண்டும். தந்தை மிகவும் மகத்தானவர். தந்;;தை வரும்போது எவற்றைக் கொடுக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். எவராலுமே கொடுக்க முடியாத எல்லையற்ற ஆஸ்தியை எல்லையற்ற தந்தை உங்களுக்குக் கொடுக்கிறார். மனிதர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் குத்தி கொலையும் செய்கிறார்கள். இது முன்னர் ஒருபோதுமே நிகழ்ந்ததில்லை. பாபா மீண்டும் ஒரு தடவை வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் கூறுகிறார்: ஒவ்வொரு கல்பத்தின் சங்கமத்;திலும், புதிய உலகம் ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ளபோது நான் வருகின்றேன். மக்கள் இராமரின் புதிய இராச்சியமாகிய புதிய உலகைக் கேட்கிறார்கள். அங்கே சந்தோஷமும், செழிப்பும் அனைத்துமே உள்ளது. அங்கு எவருமே சண்டையிடவோ வாக்குவாதப்படவோ மாட்டார்கள். சமய நூல்களில் அவர்கள் சத்திய, திரேதா யுகங்களை நரகமாக்கியுள்ளனர். அது தவறாகும். அவர்கள் பொய்களைக் கூறுகிறார்கள், தந்தையோ உண்மையைப் பேசுகிறார். தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னைச் சத்தியம் என அழைக்கிறீர்கள். நான் வந்து, உங்களுக்கு உண்;மைக் கதையைக் கூறுகின்றேன். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் யாருடைய இராச்சியம் இருந்தது? 5000 வருடங்களுக்கு முன்னர் நிச்சயமாக இலக்ஷ்மி, நாராயணனது இராச்சியமே இருந்தது என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். கிறிஸ்துவிற்கு 3000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் வைகுண்டமாக இருந்தது எனக் கூறப்படுகிறது. இது நேரடியான கணக்காகும். அவர்கள் வினவுகிறார்கள்: நீங்கள் ஏன் கல்பத்தின் கால அளவு, இவ்வளவு என்று கூறுகிறீர்கள்? ஓ! ஆனால் அதைக் கணக்கிட்டுப் பாருங்கள்! கிறிஸ்து இந்தளவு காலத்திற்கு இங்கு இருந்தார். நான்கு யுகங்கள் மாத்திரமே உள்ளன. பகலுக்கு அரைக் கல்பமும், இரவுக்கு அரைக் கல்பமும் எடுக்கின்றன. மிக நன்றாக விளங்கப்படுத்தக்கூடிய ஒருவர் தேவைப்படுகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்;: காமமே கொடிய எதிரி. தேவர்கள் தெய்வீக குணங்களால் நிறைந்தவர்கள் என்றும், 16 கலைகளும் நிரம்பப் பெற்றவர்கள் என்றும், தேவர்களின் புகழை பாரத மக்களே பாடுகிறார்கள். எனவே, 16,108 அரசிகள் எங்கிருந்து வந்தனர்? அங்கே எவ்வித சமய நூல்களும் இல்லை. ஒரு சமய நூல் என்பது அந்தச் சமயத்தின் ஸ்தாபகரினால் உபதேசிக்கப்படுவதாகும். ஒரு சமய நூலானது அச்சமயத்தின் ஸ்தாபகரின் பெயரினாலேயே உருவாக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்கிறீர்கள், இவையனைத்தும் பழையவையும், தமோபிரதானமானவையும் ஆகும். இதனாலேயே தந்தை கூறுகிறார்;: உங்களது புத்தியின் யோகத்தை பழைய விடயங்களிலிருந்து அகற்றி, என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஒருவர் கவனயீனமாக இருந்தால், பாபா நினைப்பார்: அவ்வளவே அவரது பாக்கியமாகும்! இது மிகவும் இலகுவான விடயமாகும். இவ்விடயங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? அனைத்து இடங்களிலுமுள்ள பற்றின் இழைகளை அகற்றி, ஒரேஒரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள், அப்பொழுது 21 பிறவிகளுக்கு நீங்கள் எவ்வித துன்பத்தையுமே அனுபவம் செய்ய மாட்டீர்கள். அங்கவீனமானவர்களும் ஆக மாட்டீர்கள். அங்கே, ஆயுட்காலம் முடிவடையும்போது, நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. பாம்பின் உதாரணம் உள்ளது. விலங்குகளின் உதாரணமும் கொடுக்கப்படுகிறது. நிச்சயமாக அவைகளுக்கும் சிறிதளவு விளக்கம் இருக்கிறது. விலங்குகள் இன்றைய மனிதர்களை விடவும் அதிகளவு விவேகமாக உள்ளன. ரீங்காரமிடும் விட்டில் பூச்சிகள், சிறிய பூச்சிகளை மாற்றுகின்ற உதாரணமும் இங்கே பொருத்தமானது - அவை பூச்சிகளை எவ்வாறு கொண்டு செல்கின்றன எனப் பாருங்கள். உங்களது சந்தோஷ நாட்கள் இப்பொழுது வருகின்றன. புத்திரிகள் கூறுகிறார்கள்: நாங்கள் தூய்மையாக இருக்க விரும்புகிறோம், இதனாலேயே பெருமளவில் நாங்கள் தாக்கப்படுகிறோம். ஆம் குழந்தைகளே, நீங்கள் சில விடயங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும். கூறப்படுகிறது: அப்பாவிகளே தாக்கப்படுகிறார்கள். தாக்குதல்கள் உள்ளபோதே பாவக் கலசம் நிறையும். உருத்திர ஞான யாகத்தில் பல தடைகள் உருவாக்கப்படும், அது அப்பாவிகளின் மீதான தாக்குதலே ஆகும். இது சமய நூல்களில் நினைவு கூரப்படுகிறது. புத்திரிகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் உங்களைச் சந்தித்தோம், நாங்கள் சுவர்க்கத்திற்கான ஆஸ்;தியைப் பெற்று, சக்கரவர்த்தினிகள் ஆகினோம். பாபா கூறுகிறார்;: ஆம் புத்திரிகளே, நீங்கள் அந்தளவுக்கு முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் இவரையன்றி, சிவபாபாவையே நினைவு செய்ய வேண்டும். அவர் (பிரம்மா) குரு அல்லர். அவரது காதுகளும் செவிமடுக்கின்றன. பாபாவே உங்களது தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். நீங்கள் அவரிடமிருந்து கற்று, மற்றவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள். அனைவரதும் தந்தை ஒருவரே ஆவார். அவரே எங்களுக்குக் கற்பிக்கிறார். அதனாலேயே நாங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். பிரம்மாவும், விஷ்ணுவும் கணவன்மாருக்கெல்லாம் கணவன் என அழைக்கப்பட முடியாது. சிவபாபா மாத்திரமே கணவன்மாருக்கெல்லாம் கணவன் என அழைக்கப்பட முடியும். எனவே, நாங்கள் ஏன் அவரை இறுகப் பற்றி பிடிக்கக் கூடாது? நீங்கள் அனைவரும் முதலில் உங்களது பெற்றோரின் வீடாகிய அசரீரி உலகிற்குச் செல்வீர்கள், பின்னர் உங்களது மாமியார் வீட்டிற்குச் செல்வீர்கள். முதலில், நாங்கள் அனைவரும் சிவபாபாவிற்கு வணக்கம் செலுத்திவிட்டு, பின்னர் சத்தியயுகத்திற்குச் செல்வோம்;. இது சில சதங்களே பெறுமதியான மிக இலகுவான விடயமாகும். பாபா குழந்தைகளில் எவராவது தூங்குகிறார்களா என அவர்கள் அனைவரையும் பார்க்கிறார். நீங்கள் தூங்கினாலோ, அல்லது கொட்டாவி விட்டாலோ உங்களது புத்தியின் யோகம் நீங்கிவிடும். ஏனெனில், புத்தியின் யோகம் வெளியில் அலைந்து திரிவதால் அது சூழலையே நாசமாக்கிவிடும். எனவே, பாபா எப்பொழுதும் கூறுகிறார்: புத்துணர்ச்சி பெற்றுச் சென்று, ஞானத்தை ஏனையோர் மீதும் ஞானத்தை பொழிகின்ற அத்தகைய முகில்களையே இங்கே அழைத்து வாருங்கள். அல்லாவிடில், அவர்கள் இங்கே வரும்போது வேறு என்னதான் செய்வார்கள்? அவர்களை இங்கே அழைத்து வருபவர்களுக்கு பொறுப்பு உள்ளது. தன்னை நிரப்பி, பின்னர் சென்று மற்றவர்களுக்கும் பொழிகின்ற விவேகமான ஆசிரியர் யார்? அத்தகையவர்களை நீங்கள் இங்கே அழைத்து வரவேண்டும். மற்றவர்களை அழைத்து வருவதால் என்ன நன்மை இருக்கிறது? நீங்கள் இவ்விடயங்களைச் செவிமடுத்து, அவற்றைக் கிரகிப்பதுடன், மற்றவர்களையும் அவற்றைக் கிரகிக்குமாறு தூண்ட வேண்டும்;;. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இப்;பொக்கிஷக் களஞ்சியத்திலிருந்து நீங்கள் உண்ணும்போது, உங்களது வலியும், துன்பமும் முடிவடைகிறது. மிகச் சரியாக யோகத்தில் நிலைத்திருப்பவர்களே இங்கே வரவேண்;டும். அல்லாவிடில், அவர்கள் சுற்றாடலை நாசமாக்கிவிடுவார்கள். இந்நேரத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புகைப்படங்கள் எடுத்தல் போன்ற கேள்விக்கே இடமில்லை. உங்களால் இயன்றவரை நீங்கள் நிச்சயமாக தந்;தையின் நினைவில் இருந்தவாறு யோக தானம் செய்ய வேண்டும். சுற்றிலும் அமைதி பேணப்பட வேண்டும். வைத்தியசாலைகள் எப்பொழுதும் சத்தம் எதுவும் இல்லாத இடத்திலேயே உள்ளன, ஏனெனில் நோயாளிகளுக்கு அமைதி தேவை. நீங்கள் அந்த அமைதியில் நிலைத்திருப்பதற்காக வழிகாட்;டல்களைப் பெறுகிறீர்கள். தந்தையை நினைவு செய்வதே உண்மையான அமைதியாகும். ஏனையவை செயற்கையானவையாகும். 'இரண்டு நிமிடங்களுக்கு மரண அமைதி" என மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அந்த இரு நிமிடங்களிலும் புத்தியானது எங்கும் அலைகின்றது. எவராலுமே உண்மையான அமைதியைப் பேண முடியாது. நீங்கள் பற்றற்றவர்களாக ஆகுகிறீர்கள். 'நான் ஓர் ஆத்மா" என்றால், உங்களது ஆதி தர்மத்தில் நிலைத்திருப்பதாகும். அவதியுற்றபின்னர் அமைதியைப் பேண முயற்சி செய்தல் உண்மையான அமைதி ஆகமாட்டாது. சரீரமற்றவராகி, 3 நிமிடங்கள் அமைதியில் நிலைத்திருங்கள். இதனைக் கூறுவதற்குரிய சக்தி எவருக்குமே இல்லை. தந்தையின் மகத்தான வாசகங்கள் இவையாகும்: அன்பிற்;குரிய குழந்;தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், உங்களுடைய ஒவ்வொரு பிறவியினதும் பாவங்கள் அழிக்கப்படும். அல்லாவிடில், உங்களது அந்தஸ்து அழிக்கப்படுவதுடன், நீங்கள் தண்டனையையும் அனுபவம் செய்வீர்கள். சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதில் அதிக நன்மைகள் உள்ளன. சதா தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களால் இயன்றவரை அதி இனிமையான தந்தையை நினைவு செய்யுங்கள். மாணவர்களுக்கு அவர்களது ஆசிரியரின் கௌரவத்தைப் பேணுவதில் மிகுந்த அக்கறை இருக்க வேண்டும். பல மாணவர்கள் சித்தியெய்தாவிட்டால், ஆசிரியர்கள் ஒரு வெகுமதியைப் பெறமாட்டார்கள். இங்கே, ஆசீர்வாதம், அல்லது கருணை என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் அனைவரும் உங்கள் மீது ஆசீர்வாதங்களையும், கருணையையும் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் மீது கருணை கொண்டுள்ளனர், அவர்கள் முயற்சி செய்கின்றனர். இதுவும் ஒரு கல்வியாகும். நீங்கள் யோகத்தில் இருக்கும் அளவிற்கேற்ப, பாவங்களை வென்றவர்களாக ஆகுவதுடன், உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெறுவீர்கள். நினைவின் மூலமாக நீங்கள் நோய்களிலிருந்து விடுபட்டவராக ஆகுவீர்கள். மன்மனாபவ! கிருஷ்ணரால் இதனைக் கூறமுடியாது. அசரீரியான தந்தை கூறுகிறார்: சரீரமற்றவர் ஆகுங்கள்! இது ஓர் எல்லையற்ற இறைகுடும்பமாகும். தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள் உள்ளனர், அவ்வளவே! ஆனால் வேறு எந்த உறவுமுறைகளும் இல்லை. ஏனைய உறவுமுறைகளில் பெரிய தந்தை, சிறிய தந்தை போன்ற உறவுமுறைகள் உள்ளன. ஆனால், இங்கு சகோதர சகோதரிகள் என்ற உறவுமுறை மாத்திரமே உள்ளது. வேறெந்த வேளையிலும் இவ்வாறு இருப்பதில்லை. சங்கமயுகத்தில் மாத்திரமே இவ்வாறு உள்ளது. தாய் தந்தையிடமிருந்து நாங்கள் ஆஸ்தியைப் பெறுவதால், எங்களுக்குப் பெருமளவு சந்தோஷம் கிடைக்கிறது. இராவணனின் இராச்சியத்தில் பெருமளவு துன்பம் உள்ளது. இராமரின் இராச்சியத்தில் பெருமளவு சந்தோஷம் உள்ளது, அதற்காகவே நீங்கள் இப்போது முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு முயற்சியை இப்பொழுது எடுக்கிறீர்களோ, அது ஒவ்வொரு கல்பத்திலும் நிச்சயிக்கப்பட்டிருக்கும். பேறு மிகவும் மகத்தானது. கோடீஸ்வரர்களின் செல்வம் அனைத்தும் தூசாகிவிடும். ஒரு சிறிய யுத்தம் ஆரம்பிக்கும்போது என்ன நிகழ்கிறது எனப் பாருங்கள். எவ்வாறாயினும், கதையானது உங்களுடையதே ஆகும். உண்மையான கதையைச் செவிமடுப்பதால் நீங்கள் சத்திய பூமியின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் இந்த உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளீர்கள். நம்பிக்கை இல்லாத எவராலும் இங்கு வர முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் கவனயீனமானவர்களாக இருக்கக்கூடாது. மம்மாவையும், பாபாவையும் போன்று, நீங்கள் உங்களது முழு ஆஸ்தியையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சரீரத்திலிருந்து பற்றற்றவராகி, உங்களது சுயதர்மத்தில் உங்களை ஸ்திரப்படுத்துவதற்கான பயிற்சியைச் செய்யுங்கள். உங்களால் இயன்றவரை அதி அன்பிற்குரிய தந்தையை நினைவு செய்யுங்கள். அனைத்தின் மீதும் உள்ள பற்றின் இழைகளை அகற்றிவிடுங்கள்.

2. கல்வியின் மீது முழுக்கவனம் செலுத்துங்கள், உங்கள் மீது ஆசீர்வாதங்களையும், கருணையையும் கொண்டிருங்கள். உங்களது புத்தியின் யோகத்தை எல்லைக்குட்பட்டதிலிருந்து அகற்றி, எல்லையற்றவருடன் தொடர்புபடுத்துங்கள். தந்தைக்குரியவராக ஆகி, உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள்.

ஆசீர்வாதம்:
சதா சத்திய சகவாசத்தைக் கொண்டிருந்து, உங்கள் பலவீனங்கள் அனைத்;தையும் முடிப்பதன் மூலம் ஓர் இலகு யோகியாகவும்;, ஞான யோகியாகவும் ஆகுவீர்களாக.

நீங்கள் சத்தியத்திடமிருந்து விலகி, ஏனைய சகவாசத்தைக் கொண்டிருக்கும் போதே எந்த பலவீனங்களும் வருகின்றன. ஆகையாலேயே அவர்கள் பக்தியில் கூறுகின்றார்கள்: சதா சத்திய சகவாசம் கொண்டிருங்கள். சத்தியசகவாசம் என்றால் சதா உண்மையான தந்தையின் சகவாசத்தில் இருப்பதாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு உண்மையான தந்தையின் சகவாசத்தில் இருப்பது இலகுவாகும், ஏனெனில், நீங்கள் அவருடன் நெருக்கமான உறவுமுறையை கொண்டிருக்கின்றீர்கள். எனவே சதா சத்திய சகவாசத்தில் நிலைத்திருந்து, சகல பலவீனங்களையும் முடிக்கின்ற, ஓர் இலகு யோகி ஆத்மாவாகவும், ஞான ஆத்மாவாக இருங்கள்.

சுலோகம்:
சதா சந்தோஷமாக இருப்பதற்கு, எந்தப் புகழையும் செவிமடுக்கும் ஆசையை துறந்திடுங்கள்.

மாதேஸ்வரிஜியின் விலைமதிப்பிட முடியாத மேன்மையான வாசகங்கள்

முக்தியினதும் ஜீவன்முக்தியினதும் ஸ்திதிகள்

முக்தி, ஜீவன்முக்தி இரண்டு ஸ்திதிகளும் அவற்றிற்கே உரியன. முக்தி என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது, ஒரு சரீரத்தில் நடிக்கின்ற பாகத்திலிருந்து விடுதலை அடைவதாகும். ஓர் ஆத்மாவிற்கு, இந்த பூமியில் இனிமேலும் சரீரத்தில் நடிக்கும் பாகம் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். ஓர் ஆத்மா ஒரு மனிதன் என்ற பாகத்தைக் கொண்டிருக்காத போது, ஆத்மா அசரீரி உலகில் இருக்கின்றார் என்பதே அதன் அர்த்தமாகும். அந்த ஆத்மா இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட உலகில் இருக்கின்றார். இதுவே முக்தியின் ஸ்திதி எனப்படுகின்றது. அது ஜீவன்முக்தி என்ற அந்தஸ்து அல்ல. ஒர் ஆத்மா கர்ம பந்தனங்கள் அனைத்திலும் விடுபட்டு, அதாவது, ஒரு சரீரத்தில் ஒரு நடிகராக இருந்த போதிலும் எந்தக் கர்ம பந்தனங்களிலும் பற்றற்றவராக இருப்பதே ஜீவன்முக்தியாகும். அனைத்திலும் அதியுயர்வான ஸ்திதியாகும். அதுவே தேவர்களாகும் எங்கள் வெகுமதியாகும். இப் பிறவியில் முயற்சி செய்வதால், நாங்கள் சத்தியுகத்தின் தேவர்கள் என்ற வெகுமதியை பெறுகின்றோம். அதுவே எங்களுக்கான மிக உயர்வான அந்தஸ்தாகும். ஆனால் ஒரு பாகத்தை நடிக்காத ஆத்மாக்கள் ஓர் அந்தஸ்தைக் கொண்டிருக்கின்றார்கள் என நாங்கள் எவ்வாறு கூறுவது? ஓர் ஆத்மாவிற்கு மேடையில் ஒரு பாகம் இல்லாத போது, அந்த ஆத்மாவிற்கு முக்தி என்ற அந்தஸ்து இருக்க மாட்டாது. மனிதர்கள் அனைவருமே சத்தியயுகத்திற்குச் செல்வார்கள் என்றில்லை. ஏனெனில், அங்கே மனித சமுதாயம்; மிகச் சிறியதாகும். கடவுளுடன் யோகம் செய்து, கர்மாதீத் ஆகுகின்றவர்கள், சத்தி;யயுகத்தின் ஜீவன்முக்தி பெற்ற தேவர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். ஏனைய அனைவரும் தர்மராஜிடம் தண்டனையை பெற்று, கர்மாவிலிருந்து விடுதலை அடைவார்கள். அவர்கள் முக்தியும் தூய்மையும் அடைந்து, முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். அவர்கள் முக்தி அடைந்திருந்தாலும், அவர்களுக்கு முக்திதாமத்தி;ல் எந்த அந்தஸ்தும் இருப்பதில்லை. அந்த ஸ்தி;தி இயல்பாகவே உரிய நேரத்தில் அதற்கென எந்த முயற்சியும் செய்யமாலே பெறப்படுகின்றது. துவாபரயுகத்தி;ல் இருந்து கலியுக இறுதிவரை பிறப்பு இறப்பு சக்கரத்திற்குள் வரக்கூடாது என்ற மனிதர்களுக்கான ஆசை இப்பொழுது நிறைவேற்றப்படுகின்றது. ஆத்மாக்கள் அனைவருமே நிச்சயமாக முக்திதாமத்தை கடந்த செல்ல வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். அச்சா.