16.09.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை அனைவரினதும் துன்பத்தை அகற்றி, அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கவே வந்துள்ளார், ஆகவே நீங்கள் துன்பத்தை அகற்றுபவரின் குழந்தைகள் என்பதால், எவருக்கும் துன்பத்தை விளைவிக்கக்கூடாது.

கேள்வி:
ஒரு மேன்மையான அந்தஸ்தைக் கோரவுள்ள குழந்தைகளின் பிரதான அறிகுறிகள் யாவை?

பதில்:
1. அவர்கள் எப்பொழுதும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள்.

பாடல்:
நீங்கள் இரவை உறக்கத்திலும், பகலை உண்பதிலும் வீணாக்கினீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த மொழியைப் புரிந்துகொள்கின்றீர்கள்; புதியவர் எவராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. வேறு எவருமே ஓ ஆன்மீகக் குழந்தைகளே எனக் கூற மாட்டார்கள். வேறு எவருக்கும் இதனை எவ்வாறு கூறுவது எனவும் தெரியாது. எவரும் உண்மையில் மிகச்சரியாக அறிந்துகொள்ளாத, ஆன்மீகத் தந்தையின் முன்னால் நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சகோதர ஆத்மாக்கள் என்றும், நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் என்றும், ஒரேயொருவரே தந்தை என்றும் நீங்கள் புரிந்துகொண்டபொழுதிலும், இதனை மிகச்சரியாக எவருமே உண்மையில் அறிந்திருக்கவில்லை. நீங்கள் புரிந்துகொள்வதற்கு இங்கு நேரடியாக வரும்வரை, எவ்வாறு உங்களால் புரிந்துகொள்ள முடியும்? நீங்களும் நேரடியாகத் தந்தையின் முன்னால் வரும்பொழுதே, உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் பிராமணர்கள். உங்கள் முதற்பெயர் பிராமண குலத்தின் பிரம்மகுமார்களும், பிரம்மகுமாரிகளும் என்பதாகும். ஆத்மாக்கள் அனைவரும் சிவனுக்குரியவர்கள். உங்களை சிவகுமார்கள் அல்லது சிவகுமாரிகள் என்று அழைப்பதில்லை. அந்த வார்த்தைகள் தவறானவை. குமார்கள், குமாரிகள் இருசாராரும் உள்ளனர். ஆத்மாக்கள் என்ற வகையில், நீங்கள் அனைவரும் சிவனுக்குரியவர்கள். நீங்கள் மனிதர்களின் குழந்தைகள் ஆகும்பொழுது, குமார்கள், குமாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். சிவனின் குழந்தைகள் நிச்சயமாக அசரீரியான ஆத்மாக்கள் ஆவர். சாலிகிராம்கள் என அழைக்கப்படுகின்ற, ஆத்மாக்கள் மாத்திரமே ஆத்ம உலகில் வசிக்கிறார்கள். நீங்கள் இங்கு வரும்பொழுது, பௌதீகமான குமார்களும், குமாரிகளும் ஆகுகின்றீர்கள். உண்மையில் நீங்கள் சிவபாபாவின் குழந்தைகளான குமாரர்கள் ஆவீர்கள்;. நீங்கள் சரீரங்களில் பிரவேசிக்கும்பொழுது, குமார்களும், குமாரிகளும் ஆகுகின்றீர்கள். நீங்கள் பிரம்மகுமார்களும், குமாரிகளும் என்பதால் சகோதர, சகோதரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். நீங்கள் இந்நேரத்திலேயே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். பாபா எங்களைத் தூய்மையாக்கி, தன்னுடன் மீண்டும் எங்களை அழைத்துச் செல்வார் என நீங்கள் அறிவீர்கள். எந்தளவிற்கு ஆத்மாக்கள் தந்தையை நினைவுசெய்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்கள் தூய்மையாகுவார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் பிரம்மாவின் வாய் மூலமாகக் கொடுக்கப்பட்ட இந்த ஞானத்தைக் கற்கின்றீர்கள். படங்களிலும் தந்தையின் ஞானம் மிகத்தெளிவாக உள்ளது. சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். எங்களுக்கு கிருஷ்ணர் கற்பிக்கவுமில்லை, கிருஷ்ணர் மூலம் தந்தையால் எங்களுக்குக் கற்பிக்கவும் முடியாது. கிருஷ்ணர் சுவர்க்கத்தின் இளவரசர். இதனையும் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். கிருஷ்ணர் சத்தியயுகத்துப் பெற்றோரின் குழந்தை. அவர் சத்திய யுகத்துத் தந்தையொருவரின் குழந்தை. அவர் வைகுந்தத்தின் இளவரசர். எவருமே அவரை அறியார். கிருஷ்ணரின் பிறந்தநாளில் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலும், ஆலயங்களிலும், அவருக்காக ஓர் ஊஞ்சல் கட்டுகிறார்கள். தாய்மார்கள் ஆலயத்திற்குச் சென்று அங்குள்ள உண்டியலில் பணத்தை இட்டு விட்டுத் தங்கள் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். இந்நாட்களில் கிருஷ்ணரைப் போன்றே கிறிஸ்துவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்: கிருஷ்ணர் சித்தரிக்கப்பட்டதைப் போன்று, அவருக்கும் கிரீடம் அணிவித்து, அவருடைய தாயின் மடியில் வைத்துள்ளார்கள். கிருஷ்ணர், கிறிஸ்து என்ற பெயர்களின் ஓசை ஒத்ததாகவே இருக்கின்றன. ஆனால், கிருஷ்ணரின் பிறப்பிற்கும், கிறிஸ்துவின் பிறப்பிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. கிறிஸ்துவின் ஆத்மாவின் பிறப்பு ஒரு சிறு குழந்தையின் ரூபத்தில் இல்லை. கிறிஸ்துவின் ஆத்மா வந்து வேறொருவரில் பிரவேசிக்கின்றார். அவர் விகாரத்தின் மூலம் பிறப்பு எடுக்க முடியாது. முன்னர், அவர்கள் கிறிஸ்துவை ஒரு சிறு குழந்தையாக என்றுமே சித்தரிக்கவில்லை; அவர்கள் எப்பொழுதும் அவரை ஒரு சிலுவையிலேயே சித்தரித்துள்ளனர். அவர்கள் இப்பொழுது அவரை இவ்வாறாகக் காட்டுகின்றார்கள். ஒரு சமயத்தை ஸ்தாபிக்கின்ற எவருமே அவ்வாறாகக் கொலை செய்யப்பட முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகவே, அவர்கள் யாரைக் கொன்றார்கள்? அவர் பிரவேசித்துள்ள சரீரமே வேதனை அடைந்தது. ஒரு சதோபிரதான் ஆத்மா எவ்வாறு வேதனையடைய முடியும்? அந்தளவு வேதனையைப் பெறுவதற்கு அவர் என்ன கர்மத்தைச் செய்திருப்பார்? ஆத்மாக்கள் சதோபிரதான் நிலையிலேயே (முற்றிலும் தூய்மையாக) வருகிறார்கள். அனைவருடைய கணக்கும் தீர்க்கப்பட வேண்டும். இப்பொழுது தந்தை அனைவரையும் தூய்மையாக்குகின்றார். முற்றிலும் தூய்மையான (சதோபிரதான்) ஆத்மா அங்கிருந்து வந்து வேதனையை அனுபவம் செய்ய முடியாது. ஆத்மாவே வேதனைக்கு உட்படுகிறார். ஆத்மா தனது சரீரத்தில் உள்ளபொழுதே வேதனையையும், துன்பத்தையும் அனுபவம் செய்கிறார். நான் வேதனைப்படுகின்றேன் எனக் கூறியது யார்? சரீரத்தில் வசிப்பவரே கூறுகின்றார். அனைவரிலும் பரமாத்மா இருக்கின்றார் என அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் அவர் (கடவுள்) நான் வேதனைப்படுகின்றேன் எனக் கூறப் போவதில்லை. பரமாத்மா எவ்வாறு அனைவரிலும் இருக்க முடியும்? பரமாத்மா எவ்வாறு வேதனைப்பட முடியும்? ஆத்மாக்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே, எங்கள் வேதனையை அகற்றி விடுங்கள்! பரலோகத் தந்தையையே ஆத்மாக்கள் கூவி அழைக்கின்றார்கள், தந்தை இப்பொழுது வந்துள்ளார் என்றும், அவர் உங்கள் வேதனையை அகற்றுவதற்கான வழியை உங்களுக்குக் காட்டுகின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரங்களில் இருக்கும்பொழுதே என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பதாக ஆத்ம உலகில் நீங்கள் கூறமாட்டீர்கள். அங்கு ஓர் உலகம் இல்லை. அங்கு அமைதி மாத்திரமே உள்ளது. அங்கு நீங்கள் ஆதிதர்மமான அமைதி நிலையில் இருக்கிறீர்கள். அனைவருடைய வேதனையையும் அகற்றி அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். எனவே அவர் குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: நீங்கள் என்னுடையவர் ஆகிவிட்டீர்கள். ஆகவே, எவரையும் புண்படுத்தாதீர்கள். இது ஒரு யுத்தகளம், ஆனால் இது மறைமுகமானது. மற்றையது கண்ணால் பார்க்கக்கூடியது. இந்த யுத்தகளத்தில் மரணிப்பவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள் என்ற கூற்றின் அர்த்தத்தை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த யுத்தம் எவ்வளவு முக்கியமானது எனப் பாருங்கள்! வேறு எந்த யுத்தத்திலும் மரணிப்பவர்கள் எவருமே சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கடவுள் பேசுகின்றார் எனக் கீதையில் கூறப்படுகின்றது. அவரை நீங்கள் நம்புகின்றீர்கள், அல்லவா? கடவுள் யாருடன் பேசினார்? அவர் இதனை அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்குக் கூறினாரா அல்லது அவர் உங்களிடம் கூறினாரா? அதனை அவர் இருசாராரிடமும் கூறுகிறார். அவர்களுக்கும் கூறப்பட்டுள்ளது, உங்களை ஆத்மாக்களாகக் கருதி தந்தையை நினைவுசெய்யுங்கள்! இந்தச் சேவையும் செய்யப்பட வேண்டும்! நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமாயின், முயற்சி செய்ய வேண்டும்! ஒரு யுத்தத்தில் அனைத்துச் சமயத்தவர்களும் உள்ளார்கள். சீக்கியர்களும் அதில் உள்ளார்கள். அவர்கள் சீக்கிய சமயத்திற்குள் செல்வார்கள். அவர்கள் வந்து பிராமணர்களாகிய உங்களிடமிருந்து ஞானத்தைப் பெற்றால் மாத்திரமே சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான சாத்தியம் அவர்களுக்கு உள்ளது. அவர்கள் பாபாவிடம் வரும்பொழுது, சண்டையிடும்பொழுது சிவபாபாவின் நினைவில் நிலைத்திருந்தால், உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும் என பாபா அவர்களுக்கு விளங்கப்படுத்துவார். எனினும், அவர்கள் சுவர்க்கத்தில் ஓர் அரசராகலாம் என்றில்லை; இல்லை. மேலும் அதிகமாக அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. அவர்களுக்கு ஒரு சிறிதளவு ஞானத்தை மாத்திரம் விளங்கப்படுத்தலாம். அவர்கள் ஒரு யுத்தகளத்தில் இருக்கும்பொழுது, தங்கள் இஷ்டதேவரை நிச்சயமாக நினைவுசெய்கிறார்கள். ஒருவர் சீக்கியராக இருந்தால், குரு கோவிந்தருக்கு வெற்றி எனக் கூறுவார். எவருமே தங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி பரமாத்மாவை நினைவுசெய்வதில்லை. எனினும் தந்தையின் அறிமுகத்தை ஏற்றுக்கொள்பவர்களே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். தூய்மையாக்குபவரான, அந்த ஒரேயொருவரே அனைவரினதும் தந்தை. அவர் தூய்மையற்றவர்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நான் ஸ்தாபிக்கின்ற, சந்தோஷ உலகிற்கு நீங்கள் செல்வீர்கள். இந்த யுத்தத்தில் இருக்கையில், நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்தால், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள், அந்த யுத்தகளம் இதிலிருந்து வேறுபட்டது. தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் என்றுமே அழிக்கப்பட முடியாது. அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள், இப்பொழுது சிவபாபா கூறுகின்றார்: என்னை மாத்திரம் நினைவு செய்வதனால், முக்தி தாமத்தில் என்னிடம் நீங்கள் வருவீர்கள். இப்பொழுது கற்பிக்கப்படுகின்ற இந்த ஞானத்தைக் கற்பதனால், நீங்கள் சுவர்க்க இராச்சியத்தைப் பெற முடியும். இது மிகவும் இலகுவானது! நீங்கள் சுவர்க்கத்தின் பாதையை ஒரு விநாடியில் கண்டுகொள்வீர்கள். ஆத்மாவாகிய நான், தந்தையை நினைவுசெய்கின்றேன். இந்தச் சந்தோஷத்துடன் யுத்தகளத்திற்குச் செல்லுங்கள்! நாங்கள் செயல்கள் செய்ய வேண்டும். ஒருவரின் நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது. அங்கு ஒரேயொரு தர்மமே உள்ளது. அங்கு கருத்து வேறுபாடு பற்றி ஒருபொழுதும் கேள்விப்பட மாட்டீர்கள். ஆனால் இங்கோ பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. நீர், நிலம் போன்றவற்றின் மீது சண்டைகள் இடம்பெறுகின்றன. அவர்களுக்கான நீர் வழங்குதல் நிறுத்தப்பட்டால், அவர்கள் கற்களை வீச ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் தானியங்களை ஒருவருக்குக் கொடுக்காவிட்டால், சண்டை இடம்பெறுகின்றது. நாங்கள் எங்கள் சுய இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இந்தக் கல்வியின் மூலம் நாங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றோம். ஒரு புதிய உலகம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்பட வேண்டும்; அது நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் ஏற்பட வேண்டும்! எதற்காகவும் சண்டை சச்சரவுகள் இருக்க வேண்டியதில்லை. நாங்கள் மிக எளிமையாக வாழவேண்டும். நீங்கள் உங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்லப்போகின்றீர்கள் என்பதால், இப்பொழுது அஞ்ஞாதவாசத்தில் இருக்கின்றீர்கள் (நஒடைந) என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மாக்கள் அனைவரும் செல்வார்கள்; ஆனால் சரீரங்கள் செல்ல மாட்டாது. சரீரத்தின் ஆணவம் துண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் ஆத்மாக்கள், எங்கள் 84 பிறவிகளும் இப்பொழுது முடிவடைகின்றன. பாரதம் சுவர்க்கமாக இருந்தது, இப்பொழுது கலியுகமாகியுள்ளது என பாரத மக்களிடம் கூறுங்கள். கலியுகத்தில் எண்ணற்ற பல சமயங்கள் உள்ளன. சத்தியயுகத்தில், ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. பாரதம் மீண்டும் ஒருமுறை சுவர்க்கம் ஆகுகின்றது. கடவுள் வந்துள்ளார் என்பதை மக்களிற் சிலர் புரிந்துகொள்கின்றனர். நீங்கள் முன்னேற்றம் அடையும்பொழுது, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே கூறுவார்கள். அவர்கள் சூழலைப் பார்ப்பார்கள், அல்லவா? எனவே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை அனைவருக்கும் உரியவர். அனைவருக்கும் அவர் மீது உரிமையுண்டு. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது வந்துள்ளதால் என்னை மாத்திரம் நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என நான் உங்கள் அனைவருக்கும் கூறுகின்றேன். இப்பொழுது யுத்தம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என மனிதர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். அது நாளையும் ஆரம்பிக்கலாம். யுத்தத்திற்காக படையைச் சேர்ப்பதற்கு அதிகக் காலம் தேவையில்லை. எனினும், எங்கள் இராச்சியம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆகவே எவ்வாறு விநாசம் இடம்பெறும்? இன்னமும் நீங்கள் தந்தையின் செய்தியை அனைவருக்கும் நாலா பக்கங்களிலும் கொடுக்கவில்லை. தூய்மையாக்குபவரான, தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இந்தச் செய்தி, அனைவருடைய செவிகளையும் சென்றடைய வேண்டும். போர் மூண்டு, குண்டுகள் வெடித்தாலும், எங்கள் இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படவுள்ளது, அதுவரைக்கும் விநாசம் இடம்பெற முடியாது என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பீர்கள். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும், உலக யுத்தம் இடம்பெற்றால் உலகம் அழிக்கப்பட்டு விடும் என்றும் மக்கள் கூறுகின்றார்கள். இது ஓர் ஆன்மீகப் பல்கலைக்கழகம்; நீங்கள் உலகம் முழுவதற்கும் ஞானத்தைக் கொடுக்கின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே வந்து உலகை மாற்றமடையச் செய்கின்றார். சக்கரம் மில்லியன்கணக்கான வருடங்கள் உடையது என அம்மக்கள் கூறுகின்றார்கள். அதன் காலம் 5000 வருடங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்லாமினதும், பௌத்தத்தினதும் காலத்தைக் கணக்கிட்டுள்ளார்கள். அந்த இரு சமயங்களுக்கும் முன்னர் வேறு எவரைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் அனைத்தையும் மிகச்சரியாக, திகதி திகதியாக வெளிப்படுத்தலாம். ஆகவே நீங்கள் அதிகளவு போதை கொண்டிருக்க வேண்டும். சண்டை, சச்சரவுகள் என்ற கேள்விக்கே இடமில்லை. அனாதைகளாக உள்ளவர்களே சண்டையில் ஈடுபடுபவர்;கள். இப்பொழுது என்னென்ன முயற்சிகளை நீங்கள் செய்கின்றீர்களோ, அதுவே உங்கள் 21 பிறவிகளுக்கான வெகுமதி ஆகுகின்றது. நீங்கள் சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டால், உங்களால் மேன்மையான அந்தஸ்தைப் பெறமுடியாது. நீங்கள் தண்டனையையும் அனுபவம் செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும், உங்களுக்கு என்ன வேண்டுமோ, தந்தையிடம் வந்துவிடுங்கள்! அரசாங்கமும் கூறுகின்றது: சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்காதீர்கள்! உங்களில் சிலருக்கு வெளிநாட்டு சப்பாத்தில் விருப்பம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது அஞ்ஞாதவாசத்தில் வாழ்கின்றீர்கள். அங்கு நீங்கள் மிகச்சிறந்த பொருட்கள் பலவற்றைப் பெறுவீர்கள். தந்தை சரியானவற்றை மாத்திரமே உங்களுக்குக் கூறுவார். அவர் கூறுவார்: இது சரியல்ல. இங்கு அத்தகைய பொருட்களை நீங்கள் ஏன் விரும்புகின்றீர்கள்? நீங்கள் மிக எளிமையாக இங்கு வாழ வேண்டும். இல்லாவிட்டால், சரீர உணர்வு இருக்கும். இதில் நீங்கள் உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றக்கூடாது. பாபா கூறுகின்றார்: உங்களுக்கு நோய் இருந்தால், நீங்கள் ஒரு வைத்தியரை அழைக்கலாம். மருந்தினால் அனைவருக்கும் சிகிச்சை செய்யலாம். எனினும், தந்தை இங்கிருப்பார். ஸ்ரீமத் என்றால் ஸ்ரீமத் தான்! நம்பிக்கை எங்குள்ளதோ, அங்கு வெற்றியுண்டு. நீங்கள் இவை அனைத்தையும் புரிந்துகொள்கிறீர்கள். தந்தையின் ஆலோசனையைப் பின்பற்றுவதில் நன்மையே உள்ளது. நாங்கள் எங்களுக்கும் நன்மையை ஏற்படுத்த வேண்டும். ஒருவரையேனும் உங்களால் ஒரு பவுண்ட் பெறுமதி வாய்ந்தவராக்க முடியாவிட்டால், அப்பொழுது நீங்களும் ஒரு சதப்பெறுமதி அற்றவர்களாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் ஒரு பவுண்ட் பெறுமதியானவர் ஆகுவதற்குத் தகுதி வாய்ந்தவரல்ல, இங்கு உங்களுக்குப் பெறுமதி இல்லாவிட்டால், அங்கும் உங்களுக்கு எப்பெறுமதியும் இல்லை. சேவை செய்யும் குழந்தைகள் சேவை செய்வதில் ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சேவை செய்யாவிட்டால் உங்களை உபகாரி என்றோ அல்லது கருணை நிறைந்தவர் என்றோ அழைக்க முடியாது. பாபாவை நீங்கள் நினைவுசெய்யா விட்டால், நீங்கள் தொடர்ந்தும் சீரழிவான செயல்களைச் செய்து, ஒரு குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் சிவபாபாவுடன் யோகம் செய்கின்றீர்கள் என்றோ எவ்வாறாயினும் நீங்கள் பிரம்மகுமாரர்கள், குமாரிகள்தானே என்றோ இல்லை! பிரம்மபாபாவினுடாகவே சிவபாபா உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் சிவபாபாவை மாத்திரம் நினைவுசெய்தால் எவ்வாறு முரளியைச் செவிமடுப்பீர்கள்? அதன் பெறுபேறு எவ்வாறிருக்கும்? நீங்கள் கற்காவிட்டால், என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? அனைவரும் மேன்மையான ஒரு பாக்கியத்தைக் கொண்டிருக்க முடியாது என்பது உங்களுக்கும் தெரியும். அங்கேயும் அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே இருக்கும். அனைவரும் தூய்மையாக வேண்டும். ஆத்மாக்களால் தூய்மையாகாமல் அமைதி தாமத்திற்குச் செல்ல முடியாது. தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் இந்த ஞானத்தை அனைவருக்கும் கொடுங்கள். அவர்கள் இப்பொழுது அதனைச் செவிமடுக்காவிட்டாலும் நிச்சயமாக எதிர்காலத்தில் செவிமடுப்பார்கள். இப்பொழுது எவ்வளவு தடைகளும், புயல்களும் மிகுந்த விசையுடன் வந்தாலும் பரவாயில்லை, நீங்கள் பயப்படக்கூடாது, ஏனெனில் ஒரு புதிய தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. நீங்கள் ஒரு மறைமுகமான இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். பாபா சேவை செய்யும் குழந்தைகளைப் பார்க்கையில் பூரிப்படைகின்றார். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, உங்களுக்கு இராச்சிய திலகத்தை இட்டுக்கொள்ள வேண்டும். இதில் நீங்கள் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. காரணமின்றி, ஓர் இழப்பை அனுபவம் செய்ய உங்களை அனுமதிக்காதீர்கள். பாபா கூறுகின்றார். குழந்தைகளே, சேவை செய்பவராகவும், உபகாரியாகவும் ஆகுங்கள். ஆசிரியர் மாணவர்களாகிய உங்களிடம் கூறுகின்றார்: நன்றாகக் கற்று, பாய்ந்து முன்னேறிச் செல்லுங்கள்! நீங்கள் 21 பிறவிகளுக்கான சுவர்க்கத்தின் புலமைப்பரிசிலைப் பெறவுள்ளீர்கள். இந்த வம்சத்திற்குள் செல்வதே பெரும் புலமைப்பரிசிலாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இச்சங்கம யுகத்தில் மிகவும் எளிமையாகவும், சாதாரணமாகவும் இருங்கள். ஏனெனில் இது அஞ்ஞாதவாசத்துக்குரிய காலம். இங்கு எந்த எதிர்பார்ப்பையும் கொண்டிராதீர்கள். என்றுமே சட்டத்தை உங்கள் சொந்தக் கைகளில் எடுக்காதீர்கள். ஒருபொழுதும் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள்.

2. விநாசம் இடம்பெறுவதற்கு முன்னர், புதிய இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு, தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள்: என்னை நினைவுசெய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தூய்மையாகுவீர்கள்; எனத் தந்தை கூறுகின்றார்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிவாக இருந்து, இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்பொழுது, தந்தையிடமிருந்து வெற்றித் திலகத்தைப் பெறுவீர்களாக.

ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில், பாக்கியத்தை அருள்பவராகிய தந்தை தனது கீழ்ப்படிவான குழந்தைகள் அனைவருக்கும் வெற்றித் திலகத்தைக் கொடுக்கின்றார். கீழ்ப்படிவான பிராமணக் குழந்தைகளால், கடின உழைப்பு அல்லது சிரமம் எனும் வார்த்தைகளைத் தங்கள் பேச்சிலோ அல்லது தங்கள் எண்ணங்களிலோ பயன்படுத்த முடியாது. அவர்கள் இலகுயோகிகள் ஆகுவதால், என்றுமே மனந்தளர்வதில்லை, ஆனால் அவர்கள் எப்பொழுதும் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பதுடன், கருணை மிக்கவர்களாகவும் உள்ளனர். அவர்கள் நான் எனும் உணர்வு எதனையும் அல்லது சந்தேக உணர்வு எதனையும் முடித்து விடுகின்றார்கள்.

சுலோகம்:
உலக மாற்றத்திற்கான திகதியைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், ஆனால் உங்கள் சொந்த மாற்றத்திற்கான கணத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.