17.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பிராமணர்களாகிய நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். பாரதத்தை நீங்கள் சுவர்க்கம் ஆக்குகிறீர்கள். எனவே, நீங்கள் பிராமண குலத்திற்குரியவர்கள் என்ற போதையைக் கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி:
உண்மையான பிராமணர்களின் பிரதான அடையாளங்கள் யாவை?

பதில்:
1) உண்மையான பிராமணர்களின் நங்கூரங்கள் இந்தப் பழைய உலகத்திலிருந்து உயர்த்தப்படுகின்றன. இது அவர்கள் இந்தப் பழைய உலகின் கரையை விட்டு அப்பால் சென்று விட்டதைப் போன்றுள்ளது. 2) உண்மையான பிராமணர்கள் தங்களுடைய கைகளால் அனைத்தையும் செய்யும்பொழுதும், தங்கள் புத்திகளைத் தந்தையின் நினைவில் வைத்திருக்கின்றார்கள், அதாவது, அவர்கள் கர்மயோகிகளாக இருக்கின்றார்கள். 3) பிராமணர் என்றால் ஒரு தாமரை மலரைப் போன்றவர் என்பதாகும். 4) பிராமணர் என்றால், ஆத்ம உணர்வுடையவராக இருப்பதற்குச் சதா முயற்சி செய்பவர். 5) பிராமணர் என்றால், கொடிய எதிரியான, காமத்தை வெல்பவர் என்று அர்த்தமாகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். எந்தக் குழந்தைகள்? பிராமணர்களாகிய நீங்கள் ஆவீர்கள். பிராமணர்களாகிய நீங்களே தேவர்களாகப் போகின்றீர்கள் என்பதை என்றும் மறக்காதீர்கள். நீங்கள் வேறுபட்ட குலங்களையும் நினைவுசெய்ய வேண்டும். இங்கு பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இருக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை பிராமணர்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த பிரம்மா உங்களுக்குக் கற்பிப்பதில்லை. சிவபாபா பிரம்ம பாபாவின் மூலம் உங்களுக்குக்; கற்பிக்கின்றார். அவர் பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார். ஒருவர் முதலில் பிராமணர் ஆகாமல், சூத்திரரிலிருந்து தேவராக ஆகமுடியாது. நீங்கள் உங்களுடைய ஆஸ்தியை சிவபாபாவிடமிருந்து பெறுகின்றீர்கள். அந்த சிவபாபா அனைவரதும் தந்தையாவார். இந்த பிரம்மா முப்பாட்டனார் என்று அழைக்கப்படுகின்றார். அனைவரும் ஒரு லௌகீகத் தந்தையைக் கொண்டிருக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் அனைவரும், இந்த உலகிற்கு அப்பாலுள்ள தந்தையை நினைவுசெய்கிறார்கள். இவரே எவரும் அறியாத, சூட்சுமமான தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். பிரம்மாவிற்கு ஆலயம் இருந்தபொழுதிலும் மகாவீரர் அல்லது தில்வாலா எனச் சிலரால் அழைக்கப்படும், பிரஜாபிதா ஆதிதேவனுக்கும் இங்கு ஆலயம் இருக்கின்றது. உண்மையில், ஆதிதேவனான பிரஜாபிதா பிரம்மா அன்றி, சிவபாபாவே உண்மையான தில்வாலா (இதயங்களை வென்றவர்) ஆவார். ஒரேயொரு தந்தை மாத்திரமே ஆத்மாக்கள் அனைவரையும் சதா சந்தோஷமுடையவர்களாக்கி, அவர்களுக்குக் களிப்பூட்டுகின்றார். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். உலகில் உள்ள மக்களுக்கு எதுவும் தெரியாது; அவர்கள் சீரழிந்த புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். பிராமணர்களாகிய நாங்கள் சிவபாபாவிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். நீங்கள் இதையும் மீண்டும் மீண்டும் மறக்கின்றீர்கள். நினைவு மிகவும் இலகுவானது. சந்நியாசிகள் யோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் தந்தையையே நினைவுசெய்கிறீர்கள். யோகம் என்ற வார்த்தை பொதுவானது. இங்கே தந்தையும் குழந்தைகளும் அமர்ந்திருப்பதால், இந்த இடத்தை யோக ஆச்சிரமம் என்று அழைக்க முடியாது. தங்களின் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்வது குழந்தைகளின் கடமை. நாங்கள் பிராமணர்கள், நாங்கள் எங்களுடைய பாட்டனாரின் ஆஸ்தியை பிரம்மாவின் மூலம் பெறுகின்றோம். இதனாலேயே சிவபாபா கூறுகின்றார்: இயன்றவரை நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் நினைவுசெய்வதற்கு உதவியாக ஒரு படத்தையும் வைத்திருக்கலாம். நாங்கள் பிராமணர்கள், நாங்கள் தந்தையிடமிருந்து எங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றோம். பிராமணர்கள் தங்களுடைய குலத்தை எப்பொழுதாவது மறக்கின்றார்களா? நீங்கள் சூத்திரர்களின் சகவாசத்தினுள் செல்லும்பொழுது, நீங்கள் ஒரு பிராமணர் என்பதை மறந்து விடுகின்றீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் என்பதால், பிராமணர்கள் தேவர்களை விடவும் மேன்மையானவர்கள். கடவுள் ஜனிஜனன்ஹார் என்று அழைக்கப்படுகிறார். அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. அவர் அமர்ந்திருந்து, ஒவ்வொருவருடைய இதயத்திலும் என்ன உள்ளதென்பதைப் பார்க்கின்றார் என்பதல்ல் இல்லை. அவர் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். அவர் விதையாவார். அவருக்கு விருட்சத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றித் தெரியும். எனவே அத்தகைய தந்தையை நீங்கள் அதிகளவு நினைவுசெய்ய வேண்டும். இவருடைய ஆத்மாவும் அந்தத் தந்தையை நினைவுசெய்கின்றார். அந்தத் தந்தை கூறுகின்றார்: இந்த பிரம்மாவும் என்னை நினைவுசெய்கின்றார், ஏனெனில் அப்பொழுதே அவர் அந்த அந்தஸ்தைப் பெறுகின்றார். நீங்கள் என்னை நினைவுசெய்யும்பொழுது மாத்திரமே, ஓர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். ஆரம்பத்தில், நீங்கள் சரீரமற்றவர்களாகவே இங்கு வந்தீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் சரீரமற்றவர்களாகி வீடு திரும்ப வேண்டும். ஏனைய அனைவரும் உங்களுக்குத் துன்பத்தையே கொடுக்கிறார்கள், நீங்கள் ஏன் அவர்களை நினைவுசெய்ய வேண்டும்? எனவே, நீங்கள் என்னைக் கண்டறிந்துள்ளதால், நான் உங்களைப் புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே துன்பம் இல்லை. அவர்கள் அங்கே தெய்வீக உறவுமுறைகளையே கொண்டுள்ளார்கள். இங்கு கணவன், மனைவி உறவுமுறையிலேயே முதன்மையான துன்பம் உள்ளது, ஏனெனில் அவர்கள் விகாரமுடையவர்கள் ஆகுகின்றார்கள். நான் இப்பொழுது விகாரம் என்ற குறிப்பே இல்லாத உலகிற்கு, உங்களைத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகின்றேன். கொடிய எதிரியான காமம் நினைவுகூரப்படுகிறது, ஏனெனில் இதுவே அதன் ஆரம்பம் முதல் மத்தியினூூடாக இறுதிவரை துன்பத்தை விளைவிக்கிறது. கோபத்தைப் பற்றி, அது ஆரம்பம் முதல்;, மத்தியினூடாக இறுதி வரை துன்பம் விளைவிப்பதாக நீங்கள் கூறமாட்டீர்கள்; இல்லை. காமம் வெல்லப்பட வேண்டும். இதுவே அதன் ஆரம்பம் முதல் மத்தியினூடாக இறுதி வரை துன்பத்தை விளைவிக்கிறது; அது உங்களைத் தூய்மையற்றவர்கள் ஆக்குகின்றது. 'தூய்மையற்றது" என்ற வார்த்தை காம விகாரத்தையே குறிக்கிறது. இந்த எதிரியை வெல்ல வேண்டும். நீங்கள் சுவர்க்கத்தின் தேவர்கள் ஆகுகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த நம்பிக்கை ஏற்படும்வரை உங்களால் எதையுமே அடைய முடியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் மிகச்சரியானவர்கள் ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகின்றீர்கள் என்பது எவருக்குமே தெரியாது. நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, அவர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் ஓர் உலகத்தையும், ஓர் இராச்சியத்தையும், ஒரு தர்மத்தையும் ஒரு மொழியையும், விரும்புகிறார்கள். இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர் அங்கே ஓர் இராச்சியமும், ஒரு தர்மமும் உள்ள சத்தியயுகம் இருந்தது எனவும், அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது எனவும் உங்களால் விளங்கப்படுத்த முடியும். இராம இராச்சியத்தைப் பற்றியும், இராவண இராச்சியத்தைப் பற்றியும் எவரும் அறியார். நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக, 100மூ சீரழிந்த புத்தி உடையவர்களிலிருந்து ஒரு தூய, சுத்தமான புத்தியுடையவர்களாக மாறுகிறீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். தந்தை கூறுகிறார்: இப்பழைய உலகில் வாழும்பொழுது தாமரை மலர் போல் தூய்மையாக இருங்கள். தொடர்ந்தும் என்னை நினைவுசெய்யுங்கள்! தந்தை ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்த அங்கங்கள் மூலம் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்கே நான் வந்துள்ளேன். ஆத்மாக்களான நீங்கள் உங்களின் அங்கங்களினால் செவிமடுக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். இது ஓர் அழுக்கான பழைய சரீரம். பிராமணர்களாகிய நீங்கள் பூஜிக்கத் தகுதியற்றவர்கள். நீங்கள் புகழப்படுவதற்குத் தகுதியானவர்கள், தேவர்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். நீங்கள் ஸ்ரீமத்தை பின்பற்றுவதால் இவ்வுலகைத் தூய சுவர்க்கமாக ஆக்குகிறீர்கள், இதனாலேயே நீங்கள் புகழப்படுகிறீர்கள். உங்களைப் பூஜிக்க முடியாது. தேவர்களன்றி, பிராமணர்களாகிய நீங்களே புகழப்படுகிறீர்கள். தந்தை உங்களைச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாற்றுகிறார். அவர்கள் ஜெகதாம்பாளுக்கும், பிரம்மாவுக்கும் ஆலயங்களைக் கட்டியபொழுதிலும் அவர்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. பிரம்மா உலகத் தந்தையாவார். நீங்கள் அவரை ஒரு தேவர் என அழைக்க மாட்டீர்கள். தேவர்களின் ஆத்மாக்கள், சரீரங்கள் இரண்டுமே தூய்மையானவை. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையாகுகிறீர்கள். உங்கள் சரீரங்கள் தூய்மையானவையல்ல. கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் நீங்கள் இப்பொழுது பாரதத்தைச் சுவர்க்கமாக்குகிறீர்கள். நீங்கள் சுவர்க்கத்திற்குத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சதோபிரதானாக வேண்டும். பிராமணர்களான நீங்கள் மாத்திரமே தந்தையினால் கற்பிக்கப்படுகிறீர்கள். பிராமண விருட்சம் தொடர்ந்தும் வளரும். உறுதியான பிராமணர்களாக ஆகுபவர்கள், பின்னர் தேவர்கள் ஆகுவார்;கள். அது ஒரு புதிய விருட்சமாகும். இங்கு மாயையின் புயல்களும் உள்ளன. சத்தியயுகத்தில் புயல்கள் எதுவும் இருக்காது. இங்கே நீங்கள் பாபாவின் நி;னைவில் இருந்து, தமோவிலிருந்து சதோபிரதானாக விரும்பினாலும் மாயை உங்களை விடுவதில்லை. அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. பாரதத்தின் புராதன யோகம் பிரபல்யமானது. ஒருவர் வந்து தங்களுக்குப் புராதன யோகத்தைக் கற்பிக்க வேண்டும் என்பதில் வெளிநாட்டவர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இரண்டு விதமான யோகங்கள் உள்ளன. ஹத்தயோகிகளும், இராஜயோகிகளும் இருக்கிறார்கள். நீங்கள் இராஜயோகிகள். இதுவே தந்தையால் மாத்திரம் கற்பிக்கப்படுகின்ற, பாரதத்தின் புராதன இராஜயோகம் ஆகும். கீதையில் எனது பெயருக்குப் பதிலாக அவர்கள் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தி விட்டார்கள். அது எவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது, சிவனின் பிறந்ததினத்தைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் இராச்சியம் இருக்கின்ற, உங்கள் சுவர்க்கத்தின் பிறந்ததினம் வருகின்றது. சிவனின் பிறந்ததினம் வரும்பொழுது கீதையின் பி;றந்ததினமும் வருகின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் அனைவரும் தூய்மையாக இருக்கின்ற, சுவர்க்கத்தின் பிறந்ததினமும் வருகின்றது. அதன் ஸ்தாபனை சென்ற கல்பத்தில் நிகழ்ந்ததைப் போன்றே நிகழ்கின்றது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நீங்கள் அவரை நினைவுசெய்யாதபொழுது, மாயை உங்களை ஏதோ ஒரு பாவச்செயலை செய்ய வைக்கிறாள். நீங்கள் நினைவுசெய்யாதபொழுது அறையப்படுகிறீர்கள். நீங்கள் நினைவில் இருந்தீர்களாயின், அறையப்பட மாட்டீர்கள். ஒரு குத்துச்சண்டை இடம்பெறுகின்றது. உங்கள் எதிரி ஒரு மனிதன் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இராவணனே உங்கள் எதிரி. தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில் திருமணம் செய்வதென்பது உங்களையே சீரழித்துக் கொள்வதாகும். இங்கே அவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்தும் சீரழிக்;கிறார்கள். எல்லாவற்றிக்கும் அப்பாலுள்ள தந்தை இப்பொழுது ஒரு கட்டளை இட்டுள்ளார். குழந்தைகளே, காமமே மிகக் கொடிய எதிரி. அதனை வென்று தூய்மையாக இருப்பதற்கான சத்தியம் செய்யுங்கள்! எவருமே தூய்மையற்றவர்கள் ஆகக்கூடாது. இவ்விகாரத்தினாலேயே நீங்கள் பிறவி பிறவியாகத் தூய்மையற்றவர் ஆகினீர்கள். இதனாலேயே காமமே மிகக் கொடிய எதிரி எனப்படுகிறது. சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! சத்திய யுகத்தில் எவருமே தூய்மையற்றவராக இருப்பதில்லை. தந்தை வந்து ஞானத்தின் மூலம் அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். தற்பொழுது, அனைவருமே சீரழிந்தவர்களாக உள்ளனர். வேறு எவராலும் ஞானத்தைக் கொடுக்க முடியாது. ஞானக் கடல் மாத்திரமே ஞானத்தைக் கொடுக்கின்றார். ஞானத்தின் மூலமே பகல் ஏற்படுகிறது. பகல் இராமருடையது. இரவு இராவணனுடையது. இவ்வார்த்தைகளின் மிகச்சரியான அர்த்தத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் உங்களது முயற்சியில் பலவீனமாக இருக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் முழு 84 பிறவிகளையும் எடுத்துள்ளீர்கள், நீங்கள் இப்பொழுது தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால் ஆத்மாக்களாகிய நாங்கள் பின்னர் ஆட்சிபுரியவுள்ள, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறோம் எனும் தூய பெருமையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அரசராகவோ, அரசியாகவோ அல்லது பிரஜைகளாகவோ ஆகினாலும், நீங்கள் பெறும் அந்தஸ்தானது நீங்கள் இப்பொழுது செய்யும் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. அரசர்களும், அரசிகளும் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் காணமுடியும். தந்தையைப் பின்பற்றுங்கள்! எனப்படுகிறது. இது இந்நேரத்தையே குறிக்கிறது. இது லௌகீக உறவுமுறையைக் குறிக்கவில்லை. தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கிறார்: சதா என்னை மட்டும் நினைவுசெய்யுங்கள்;, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் எத்தனையோ பேருக்குச் சேவை செய்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் தந்தையிடம் வரும்பொழுது சிவபாபா உங்களை ஞானத்தினால் களிப்பூட்டுகின்றார். இவரும் கற்கின்றார். சிவபாபா கூறுகின்றார்: நான் காலையில் வருகின்றேன். அச்சா. பின்னர் எவராவது பாபாவைச் சந்திக்க வரும்பொழுது, இவரால் வருபவருக்கு விளங்கப்படுத்த முடியாதா? பாபா, நீங்கள் வந்து விளங்கப்படுத்துங்கள், ஏனெனில் என்னால் விளங்கப்படுத்த முடியாமல் இருக்கிறது என இவர் கூறுவாரா? இவை மிகவும் ஆழமான, மறைமுகமான விடயங்கள். நான் அனைத்திலும் அதிசிறந்ததை விளங்கப்படுத்துகிறேன். சிவபாபாவே விளங்கப்படுத்துகிறார் என்று நீங்கள் ஏன் நினைக்கின்றீர்கள்;? இவரால் விளங்கப்படுத்த முடியாதா? இவர் சென்ற கல்பத்தில் விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்., இதனாலேயே இவர் இந்த அந்தஸ்தினைப் பெற்றார் என நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். மம்மாவும் விளங்கப்படுத்துவது வழக்கம். மம்மாவும் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றார். மம்மாவும், பாபாவும் சூட்சும உலகத்தில் காட்டப்பட்டுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். ஏழைகளே தங்களை அர்ப்பணிக்கிறார்கள்; செல்வந்தர்களால் அதைச் செய்ய முடியாது. பாபா, இவையெல்லாம் உங்களுக்கே உரியவை என்று ஏழைகள் கூறுகின்றார்கள். சிவபாபாவே அருள்பவர்;. அவர் ஒருபொழுதும் எதனையும் பெறுவதில்லை. அவர் குழந்தைகளிடம் கூறுகின்றார்: இவை அனைத்தும் உங்களுடையவை. இங்கோ அல்லது அங்கோ நான் எனக்கென ஒரு மாளிகை கட்டுவதில்லை. நான் உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகின்றேன். நீங்கள் இப்பொழுது ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிரப்ப வேண்டும். மக்கள் ஆலயத்துக்குச் சென்று எனது மடியை நிரப்புங்கள்! எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் எந்த மடியை? அதனை எதனால் நிரப்புவது? இலக்ஷ்மியே உங்களுக்குச் செல்வத்தை அளித்து, உங்கள் மடியை நிரப்புகிறார். அவர்கள் சிவனிடம் செல்வதே இல்லை அவர்கள் சங்கரனிடமே சென்று இதனைக் கூறுகிறார்கள். சிவனும் சங்கரனும் ஒருவரே என அவர்கள் நம்புகிறார்கள், ஆனால் அது அவ்வாறில்லை. தந்தை வந்து உங்களுக்கு உண்மையான விடயங்களைக் கூறுகிறார்: தந்தையே துன்பத்தை அகற்றுபவரும், சந்தோஷத்தை அருள்பவரும் ஆவார். குழந்தைகளான நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசிக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய தொழிலையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக ஆலோசனை கேட்கிறீர்கள்: பாபா, நான் இவ்விடயத்தைப் பற்றிப் பொய் சொல்;ல வேண்டியுள்ளது. தந்தை ஒவ்வொருவருடைய நாடித் துடிப்பையும் உணர்ந்து அதற்கேற்ப ஆலோசனை கூறுகிறார்: குழந்தைகளால் பின்பற்ற முடியாத ஆலோசனையை நான் ஏன் கூறவேண்டும்? எனத் தந்தை எண்ணுகிறார். அவர் அவர்களது நாடித் துடிப்பை உணர்ந்து அவர்களால் பின்பற்றக்கூடிய ஆலோசனைகளைக் கூறுகிறார். நான் எதனையாவது செய்யும்படி அவர்களிடம் கூறி அவர்களால் அதனைச் செய்ய முடியாது விட்டால், அவர்கள் கீழ்ப்படிவற்ற ஆத்மாக்களின் வரிசையில்; வருவார்கள். ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தக் கர்மக் கணக்குகள் உள்ளன. ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணரே இருக்கிறார், நீங்கள் அவரிடம் செல்ல வேண்டும் அவர் உங்களுக்கு முழு ஆலோசனை வழங்குவார். நீங்கள் அனைவரும் பாபாவிடம் வினவ வேண்டும்: பாபா எவ்வாறு நான் இச்சூழ்நிலையில் மற்றவர்களுடன் பழகுவது? நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.? தந்தை உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்புகின்றார். நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகப்போகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் இப்பொழுது சங்கம யுகவாசிகள். நீங்கள் இப்பொழுது நரகத்திலும் இல்லை, சுவர்க்கத்திலும் இல்லை. பிராமணர்கள் ஆகிவிட்டவர்களின் நங்கூரங்கள் இத் தீய உலகிலிருந்து உயர்த்தப்பட்டு விட்டன. நீங்கள் கலியுக உலகின் கரையை விட்டுப் புறப்பட்டு விட்டீர்கள். சில பிராமணர்கள் நினைவு யாத்திரையில் விரைவாகவும் மற்றவர்கள் மெதுவாகவும் முன்னேறிச் செல்கிறார்கள். சிலர் பாபாவின் கையை விட்டுச் சென்றுவிடுகிறார்கள், அதாவது, அவர்கள் கலியுகத்திற்குத் திரும்பிச் சென்று விடுகிறார்கள். இப்பொழுது படகோட்டி உங்களை அழைத்துச் செல்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். பலவிதமான யாத்திரைகள் உள்ளன. ஆனால் உங்கள் யாத்திரை ஒன்றே. இந்த யாத்திரை முற்றிலும் தனித்துவமானது. புயல்கள் வரும்பொழுது, அவை உங்கள் நினைவைத் துண்டிக்கின்றன. இந்த நினைவு யாத்திரையை மிகவும் உறுதிவாய்ந்ததாக்குங்கள். முயற்சி செய்யுங்கள்! நீங்கள் கர்ம யோகிகள். உங்கள் கைகள் வேலை செய்யும் அதே வேளையில் உங்கள் இதயம் நினைவில் இருக்கட்டும். இதை இயன்றளவு செய்யுங்கள். அரைக் கல்பமாக, காதலிகளான நீங்கள் அன்பிற்கினியவரை நினைவுசெய்து, பாபா இங்கு பெரும் துன்பம் நிலவுகின்றது. இப்பொழுது எங்களைச் சந்தோஷதாமத்தின் அதிபதிகள் ஆக்குங்கள்" எனக் கூறி வந்தீர்கள். நீங்கள் நினைவு யாத்திரையில் இருக்கும்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றீர்கள், ஆனால் பின்னர் அதனைத் தொலைத்து விட்டீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது; இதனாலேயே அவர்கள் புராதன பாரதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் பாரதத்துக்குப் பெரும் மரியாதை கொடுக்கின்றார்கள். அதுவே மிக மகததானதும், மிகப் பழையதுமான பூமி. பாரதம் இப்பொழுது மிகவும் ஏழ்மை அடைந்துள்ளது, இதனாலேயே அனைவரும் அதற்கு உதவிகள் வழங்குகிறார்கள். தங்களிடம் பெருமளவு தானியம் இருக்கும் எனவும், தாங்கள் வேறு எங்கேனும் இருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை எனவும் அம்மக்கள் நம்புகிறார்கள், ஆனால் விநாசம் முன்னிhலேயே உள்ளது. இதை நன்றாகப் புரிந்துகொள்பவர்கள். பெருமளவு உள்ளார்ந்த சந்தோஷம் உடையவர்களாக இருப்பார்கள். பலரும்; கண்காட்சிகளுக்கு வருகிறார்கள். 'நீங்கள் உண்மையைக் கூறுகிறீர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் தாங்கள் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறவேண்டும் என்பது அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. அங்கிருந்து வெளியேறியதும் அவர்களுக்கு அனைத்தும் முடிவடைந்து விடுகிறது. பாபா உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்புகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் அங்கே கருப்பைச் சிறையோ அல்லது வேறு எந்தச் சிறைகளோ இருப்பதில்லை. இப்பொழுது சிறைக்கு யாத்திரை செல்வது மிக இலகுவாகி விட்டது. பின்னர் சத்திய யுகத்தில் சிறைச்சாலையைக் காணவும் மாட்டீர்கள்; சிறைச்சாலை அங்கே இருப்பதுமில்லை. இங்கே இருப்பதெல்லாம் மாயையின் ஆடம்பரம். அவர்கள் முக்கியஸ்தர்களை முடித்து விடுகின்றனர். இன்று அவர்கள் எவரேனும் ஒருவருக்குப் பெரும் மரியாதை செய்கிறார்கள், நாளையே அம்மரியாதை அற்றுப் போய் விடுகிறது. இந்நாட்களில் நிகழ்வன எல்லாம் மிக விரைவாக நிகழ்ந்து முடிகின்றன. மரணமும் மிக விரைவாக முடியும். சத்தியயுகத்தில் இத்தகைய குழப்பங்கள் இல்லை நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது என்ன நிகழ்கின்றது எனப் பாருங்கள். காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக இருக்கும். நீங்கள் அவற்றின் காட்சிகளைக் கண்டுள்ளீர்கள். நினைவு யாத்திரையே குழந்தைகளாகிய உங்களுக்கான முக்கிய விடயம்;. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் மிக மிகச் சரியானவர்கள் ஆகுங்கள். ஒரு பிராமணராகிய பின்னர் சூத்திரரின் செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

2. கீழ்ப்படிவுள்ளவர்களாகி, பாபாவிடமிருந்து நீங்கள் பெறும் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு செயலையும் ஒரு கர்மயோகியாகச் செய்யுங்கள். அனைவருடைய புத்தியையும் ஞான இரத்தினங்களால் நிரப்புங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அமிர்த வேளையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, அதனை மிகச்சரியாகப் பயன்படுத்துவதால், சதா சக்திவாய்ந்தவராக இருப்பீர்களாக.

உங்களைச் சகதியால் நிறைப்பதற்கு, ஒவ்வொரு நாளும் அமிர்த வேளையில், உங்கள் சரீரத்தின் மூலம் அன்றி, உங்கள் மனதின் மூலம் சுற்றுலா செல்லுங்கள். அமிர்த வேளையில், உங்களுக்குக் காலைப் பொழுதின் உதவி உள்ளதுடன், சதோபிரதான் ஸ்திதியில் உள்ள புத்தியின் உதவியும் உள்ளது. ஆகவே, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தில், மனமும் ஒரு சக்திவாய்ந்த ஸ்திதியி;ல் இருக்க வேண்டும். சக்திவாய்ந்த ஸ்திதி என்றால், தந்தையைப் போன்ற விதை ஸ்திதி என்று அர்த்தமாகும். ஒரு சாதாரண ஸ்திதியில் உங்களால் தொடர்ந்தும் செயல்களைச் செய்ய முடியும், ஆனால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தை மிகச்சரியான முறையில் பயன்படுத்துங்கள், அப்பொழுது பலவீனங்கள் அனைத்தும் முடிவடையும்.

சுலோகம்:
உங்களுடைய சக்திகள் எனும் பொக்கிஷத்தின் மூலம் வெளிப்புற ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்ற சக்தியற்ற ஆத்மாக்களைச் சக்திவாய்ந்தவர்கள் ஆக்குங்கள்.