17.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, நினைவில் நிலைத்திருந்;து உங்கள் பாவங்களுக்காக மனதார வருந்துவதன் மூலம் நீங்கள் பாவச் செயல்களை வென்றவர்களாகுவதால் உங்கள் பழைய கர்மக்கணக்குகள் யாவும் தீர்க்கப்படும்.

கேள்வி:
எத்தகைய குழந்தைகளால் இலகுவில் அனைத்தையும்; துறக்க முடியும்?

பதில்:
உள்ளார விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் குழந்தைகளாலேயே இலகுவில் அனைத்தையும் துறக்க முடியும். குழந்தைகளாகிய நீங்கள் 'இதை நான் அணிய வேண்டும்", 'இதை நான் உண்ண வேண்டும்", 'இதை நான் செய்ய வேண்டும்" என்ற எத்தகைய ஆசையையும் இனிமேலும் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் சரீரம் உட்பட, முழு உலகையும் நீங்கள் துறந்தாக வேண்டும். தந்தை உங்கள் உள்ளங்கையில் சுவர்க்கத்தை அளிப்பதற்காகவே வந்திருக்கிறார். ஆகவே உங்கள் புத்தியின் யோகமானது இப் பழைய உலகிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

பாடல்:
தாயே, ஓ தாயே, அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவர் நீங்களே!...

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் தாயின் புகழைச் செவிமடுத்தீர்கள். பல குழந்தைகள் இருக்கிறார்கள். தந்தை இருப்பதனால் நிச்சயமாக ஒரு தாயும் இருக்க வேண்டும் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. படைப்பை உருவாக்குவதற்கு ஒரு தாய் நிச்சயமாக இருக்க வேண்டும். அன்னையின் மிகச் சிறந்த புகழ் பாரதத்திலேயே பாடப்படுகிறது. உலகத் தாயான ஜெகதாம்பாளிற்குப் பெரிய கூட்டம் ஒன்று இடம்பெறுகிறது. அவர்கள் தாயை ஏதாவது ஒரு வழியில் வழிபடுகிறார்கள். தந்தையும் வழிபாடு செய்யப்படுகிறார். அவர் உலகத் தாயாகவும், ஜெகத்பிதாவாகிய இவர் உலகத் தந்தையாகவும் இருக்கிறார்கள். ஜெகதம்பாள் சரீர வடிவில் இருக்கின்றார், ஜெகத்பிதாவும் சரீர வடிவில் இருக்கின்றார். அவர்கள் இருவருமே படைப்பவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் சரீரமுடையவர்கள். அசரீரியான ஒருவரே கடவுளாகிய தந்தை எனப்படுகிறார். தாயினதும் தந்தையினதும் இரகசியம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. கனிஷ்ட தாயும், சிரேஷ்ட தாயும் இருக்கிறார்கள். கனிஷ்ட தாயானவர் தத்தெடுக்கப்பட்டிருப்பினும் அவருக்கான புகழ் உள்ளது. இந்தத் தாயும் தத்தெடுக்கப்பட்டவர். எனவே இவர் (பிரம்ம பாபா) சிரேஷ்ட தாய் ஆகியுள்ளார். எவ்வாறாயினும் புகழ் அனைத்தும் கனிஷ்ட தாயினதே. நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சொந்தச் செயல்களுக்கான கர்மக் கணக்கின் வேதனையைத் தீர்த்தாக வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால் நாங்கள் பாவச் செயல்களை வென்றவர்களாக இருந்தபோதிலும் இராவணன் எங்களைப் பாவச் செயல்களைச் செய்பவர்களாக ஆக்கினான். பாவம் செய்கின்றவர்களின் யுகமும், பாவச் செயல்களை வென்றவர்களின் யுகமும் இருக்கிறது. முதல் அரைச்சக்கரத்திற்குப் பாவச் செயல்களை வென்றவர்களின் யுகமும் பின்னர் பாவச் செயல்களின் யுகமும் ஆரம்பிக்கிறது. அது அரைச்சக்கரத்திற்கு நீடிக்கின்றது. குந்தைகளாகிய நீங்களே இப்பொழுது உங்கள் பாவச் செயல்கள் மீது வெற்றியைப் பெற்று, பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் செய்த பாவங்களுக்காக மனதார வருந்தி அவற்றை நீங்கள் யோக சக்தியின் மூலமாக அழிக்கவும் செய்கின்றீர்கள். நினைவின் மூலம் மாத்திரமே உங்களால் மனதார வருந்த முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளே நினைவில் நிலைத்திருங்கள், மனதார வருந்துதலால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அதாவது துருவானது அகற்றப்பட்டுவிடும். உங்கள் தலை மீது பல பிறவிகளின் பாவச் சுமை உள்ளது. முதல் தரமான தூய தர்மாத்மாவே முதல் தரமான பாவாத்மா ஆகுகின்றார் என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆத்மாவானவர் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். அவரே உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர் ஆகுகின்றார். ஆகவே நிச்சயமாக அவரும் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும். யாராவது நோய்வாய்ப்பட்டால் அது அவர்களின் செயல்களின் காரணத்தினாலேயே என்று கூறப்படுகிறது. நீங்கள் பல பிறவிகளாகப் பாவச் செயல்களைச் செய்ததனால், நீங்கள் அவற்றுக்காக வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே, நீங்கள் இதனையிட்டுப் பயப்படக்கூடாது. நீங்கள் சந்தோஷமாக நோயினைக் கடந்து செல்ல வேண்டும், ஏனெனில் அவை உங்கள் சொந்தச் செயல்களின் கர்மக் கணக்குகளே. ஒரேயொரு தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே மனதார வருந்துதல் இருக்க முடியும். குழந்தைகளாகிய நீங்கள் மரணிக்கும்வரை ஞான அமிர்தத்தைப் பருக வேண்டும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் இருமல் போன்றவற்றைக் கொண்டுள்ளீர்கள். ஏனெனில் இன்னமும் பாவச் செயல்களுக்கான கணக்கு இருக்கின்றது. நீங்கள் இங்கேயே உங்கள் சகல கர்மக் கணக்குகளையும் முடித்து விடுவீர்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறது. அவை இன்னமும் மீதமாக இருந்தால் உங்களால் திறமைச்சித்தி அடைய முடியாது. தண்டனையைப் பெற்ற பின்னர் வெகுமதியைப் பெற்றுக்கொள்வது என்பது மரியாதைக் குறைவாகும். பல வகையான துன்பங்களினதும் வேதனை இருக்கிறது. இங்கே உள்ள பல வகையான துன்பங்களுக்கும் எல்லையே கிடையாது. அங்கே சந்தோஷத்திற்கு எல்லை இல்லை. அதன் பெயரே வைகுந்தம். கிறிஸ்தவர்கள் சுவர்க்கத்தைப் பற்றியும், சுவர்க்கத்தின் தந்தையாகிய கடவுளைப் பற்றியும் பேசுகிறார்கள். நீங்கள் இந்த விடயங்கள் அனைத்தையும் அறிவீர்கள். இந்தச் சந்தோஷம் அனைத்தும் காக்கையின் எச்சத்தைப் போன்றதே என்று துறவறப் பாதைக்குரிய சந்நியாசிகள் கூறுகிறார்கள். உண்மையில், இவ்வுலகில் அவ்வாறே இருக்கிறது. எவ்வளவுதான் சந்தோஷத்தை ஒருவர் கொண்டிருந்தாலும் அது தற்காலிக சந்தோஷமே. நிரந்தர சந்தோஷம் கிடையாது. அமர்ந்திருக்கும்பொழுது பல அனர்த்தங்கள் ஏற்படுவதுடன் இதய வழுவலும் கூட ஏற்படுகிறது. ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து இன்னொன்றை எடுக்கின்றார். சரீரம் இயல்பாகவே மண்ணோடு மண்ணாகிவிடுகின்றது. விலங்குகளின் சரீரங்களாலேனும் பயன் உண்டு. ஆனால் மனிதர்களின் சரீரங்களால் எந்தப் பயனுமேயில்லை. தூய்மையற்ற தமோபிரதான் சரீரத்தால் எவ்விதப் பயனுமேயில்லை. இது சிப்பியைப் போன்றது. தேவர்களின் சரீரங்கள் வைரத்தைப் போன்றன. அவை எந்தளவிற்கு வழிபாடு செய்யப்படுகின்றன எனப் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்தப் புரிந்துணர்வைப் பெற்றிருக்கிறீர்கள். இவரே அரைச்சக்கரமாக நீங்கள் நினைவு செய்த அதி அன்பிற்கினிய எல்லையற்ற தந்தை ஆவார். பிராமணர்கள் ஆகியவர்களுக்கு மாத்திரமே தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதற்கான உரிமை இருக்கிறது. உண்மையான பிராமணர்கள் மிகத் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். உண்மையான கீதையைக் கற்றவர்கள் தூய்மையாக இருக்கவேண்டும். பொய்யான கீதையைக் கற்றவர்கள் தூய்மையாக இருப்பதில்லை. காமமே மிகக் கொடிய எதிரி எனக் கீதையிலே எழுதப்பட்டுள்ளது. ஆனால் கீதையை உபதேசிப்பவர்கள்; தூய்மையாக இருப்பதில்லை. கீதையே அனைத்து சமயநூல்களினதும் இரத்தினமாவதுடன் அதன் மூலமாகவே தந்தை சிப்பிகளை வைரங்களாக்குகின்றார். நீங்கள் மாத்திரமே இதனைப் புரிந்துகொள்கிறீர்கள். காரணம், கீதையைக் கற்பவர்களால் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் இதனைக் கிளிகளைப் போன்று தொடர்ந்தும் கற்கிறார்கள். அனைத்துப் புகழும் ஒருவருடையதே. வேறு எவருடைய புகழுமே இல்லை. பிரம்மா, விஷ்ணு அல்லது சங்கரனினது கூட இல்லை. எவ்வளவுதான் நீங்கள் அவர்கள் முன் தலை வணங்கினாலும் அல்லது உங்களை அவர்களுக்கு அர்ப்பணித்தாலும் உங்களால் ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. மக்கள் காசியில் தங்களை அர்ப்பணிக்கின்றார்கள். அரசாங்கம் இப்பொழுது அதனைத் தடை செய்து விட்டது, இல்லாவிடின் பலரும் தம்மைக் காசியில் அர்ப்பணிப்பதாகத் தற்கொலை செய்கிறார்கள். அவர்கள் தாமாகவே சென்று கிணற்றினுள் பாய்வார்கள். சிலர் தம்மை ஒரு தேவிக்கும், மற்றவர்கள் தம்மை சிவனுக்கும் அர்பணிக்கின்றார்கள். தேவர்களுக்கு உங்களைத் தியாகம் செய்வதால் எந்த நன்மையுமே கிடையாது. மக்கள் தங்களைக் காளிக்கு அர்ப்பணம் செய்கிறார்கள். அவர்கள் காளியை அவலட்சணமாகச் செய்து இருக்கிறார்கள். சத்திய யுகத்திற்கு உரியவர்களாக இருந்தவர்கள் அனைவரும் இப்பொழுது கலியுகத்திற்கு உரியவர்களாகி இருக்கிறார்கள். ஒருவரே அம்பாள் (தாய்) எனப்படுகிறார், நீங்கள் தந்தையை ஒருபொழுதுமே அம்பாள் என்று அழைக்க முடியாது. எவருமே இதனை அறியமாட்டார்கள். உலகத் தாயாகிய சரஸ்வதியும் பிரம்மாவின் மகளே ஆவார்;. பிரம்மா நிச்சயமாக மக்களின் தந்தையாகவே இருப்பார். அவர் சூட்சும உலகில் இருக்கப்போவதில்லை. சரஸ்வதியே பிரம்மாவின் மகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர்கள் பிரம்மாவின் மனைவியைக் காட்டுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் புத்திரி சரஸ்வதியை இந்த பிரம்மாவின் மூலம் தத்தெடுத்திருக்கிறேன். புத்திரியும் கூட தந்தை தன்னைத் தத்தெடுத்திருக்கிறார் என்று புரிந்து கொள்கிறார்.ன பிரம்மாவும் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவை மிக ஆழமான விடயங்கள். இவை வேறு எவரது புத்தியிலும் இல்லை. தந்தை இங்கிருந்து, உங்களுக்குத் தன்னைப் பற்றிய ஆழமான விடயங்களை விளங்கப்படுத்துவதால், அவர் அதனை நிச்சயமாக உங்களுக்குத் தனிப்பட்ட முறையிலேயே கூறுவார். அதனை அவர் உங்களுக்குத் தூண்டுதல் மூலம் கொடுக்க மாட்டார். கடவுள் பேசுகிறார்: ஓ குழந்தைகளே. அவர் நிச்சயமாக ஒரு சரீரத்தில் வந்தே, இதனைக் கூறலாம். அசரீரியான தந்தை இங்கிருந்து, நமக்கு இவர் மூலம் கற்பிக்கிறார். பிரம்மா எங்களுக்குக் கற்பிக்கவில்லை. பிரம்மாவை ஞானக்கடல் என அழைக்க முடியாது. தந்தை ஒருவர் மாத்திரமே இவ்வாறு அழைக்கப்படுகின்றார். லௌகீகத் தந்தை அல்லாது, நாங்கள் ஓர் ஆஸ்தியைக் கோருகின்ற பரலோகத் தந்தையே எங்களுக்கு கற்பிக்கின்றார் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். சுவர்க்கம் பரலோகம் எனப்படமாட்டாது. அதுவோ அமரத்துவ உலகம், ஆனால் இதுவோ ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்கின்ற மரணலோகம். இது பரலோகம் அல்ல. ஆத்மாக்களாகிய நாங்களே இந்த உலகிற்கு வருகிறோம். பரலோகமே ஆத்மாக்களின் உலகம். நீங்கள் பாரதத்தில் ஆட்சி செய்தீர்களே அன்றி, பரலோகத்தில் அல்ல. நீங்கள் பரலோகத்தின் அரசர்கள் எனப்படமாட்டீர்கள். மக்கள் கூறுகின்றனர்: மனித உலகும், இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட உலகும் சௌகரியமானது. இது பௌதீக உலகம். பின்னர் பரலோகம் சௌகரியமானதாக ஆகுகின்றது. அந்த பாரதமே வைகுந்தமாக இருந்தது. அது அவ்வாறே மீண்டும்மொருமுறை ஆகுகின்றது. இதுவே மரண பூமியாகும். மனிதர்கள் ஓர் உலகில் வசிக்கிறார்கள். அவர்கள் தாம் சுவர்க்கத்திற்குச் செல்லவேண்டும் தில்வாலா ஆலயத்திலே நீங்கள் கீழே அமர்ந்திருந்து தபஸ்யா செய்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. மேலே (கூரையில்) அவர்கள் சுவர்க்கத்தின் படங்களைக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் இன்ன இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும் சுவர்க்கம் இங்கேயே இருக்கிறது. மேலே அல்ல. இன்று இது தூய்மையற்ற உலகம். பின்னர் நாளை அது மீண்டும் தூய்மையான உலகம் ஆகும். தூய்மையான உலகம் இருந்தது. அது இப்பொழுது கடந்த காலம் ஆகிவிட்டது. இதனாலேயே அவர்கள் பரலோகத்தைப் பற்றி பேசுகிறார்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அது இப்பொழுது நரகமாகிவிட்டது. ஆகவே சுவர்க்கமானது வெகு தூரத்திற்குச் சென்று விட்டது. இப்பொழுது நாடகத்திற்கேற்ப நீங்கள் பாவப் பாதையைப் பின்பற்றிய பொழுது சுவர்க்கம் அப்பாற் செல்கிறது. இதனாலேயே அவர்கள் பரலோகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: நாங்கள் மீண்டும் ஒருமுறை இங்கு புதிய உலகிற்கு வந்து எங்கள் பாக்கியமாகப் பெற்ற புதிய உலக இராச்சியத்தை மீண்டுமொருமுறை ஆட்சி செய்வோம். ஒவ்வொருவரும் தமக்காகவே முயற்சியைச் செய்கின்றார்கள். எதனையாவது செய்பவர்கள் அதன் வெகுமதியை பெற்றுக் கொள்வார்கள். அனைவரும் இதனைச் செய்யமாட்டார்கள். நன்றாகக் கற்பவர்கள் நவாப் (பிரபுக்கள்) அதாவது சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். நீங்களே இந்த உலகைத் தங்க உலகமாக மாற்றுகிறீர்கள். அவர்கள் தங்கத்தால் ஆக்கப்பட்ட தங்க நகரமான தங்க துவாரகை கடலின் அடியில் மூழ்கி மறைந்துவிட்டதாக கூறுகிறார்கள். அதனை யாராவது மீண்டும் மேலே கொண்டு வருவதற்கு அது இப்பொழுது அங்கே இல்லை! பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது தேவர்கள் அங்கு ஆட்சிசெய்தார்கள். இப்பொழுது அங்கு எதுவுமேயில்லை, ஆகவே அனைத்தும் மீண்டும் தங்கத்தினால் ஆக்கப்பட வேண்டும். அங்கிருந்து தங்க மாளிகைகள் மீண்டும் மேலெழும் என்றில்லை. நீங்களே அனைத்தையும் செய்ய வேண்டும். நீங்களே இளவரசர்களும் இளவரசிகளும் ஆகுகின்றீர்கள் என்ற போதையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதுவோ இளவரசிகளும் இளவரசர்களும் ஆகுவதற்கான கல்லூரியாகும், அது இளவரசனும் இளவரசியும் கற்கின்ற கல்லூரியாகும். நீங்கள் ஓர் இராச்சியத்தைப் கோருவதற்காக கற்கிறீர்கள். அவர்கள் தமது கடந்த பிறவிகளிலே தான தர்மங்களைச் செய்ததால் அரசன் ஒருவனுக்குப் பிறப்பெடுத்து, இளவரசன் ஆகுகின்றார்கள். அந்தக் கல்லூரிகள் எவ்வளவு சிறந்தவையாக இருக்கும். அங்கே மிக நல்ல பயிற்றுனர்கள் இருப்பார்கள். ஆசிரியரும்கூட மிக நல்ல பயிற்றுனர்களைக் கொண்டிருப்பார்கள். சத்திய, திரேதா யுகத்து இளவரச இளவரசிகளின் கல்லூரிகள் எவ்வளவு நன்றாக இருக்கும். அவர்கள் மொழியைக் கற்பதற்காகக் கல்லூரிக்குச் செல்வார்கள் அப்படி இல்லையா? சத்திய யுக இளவரசர், இளவரசிகளின் கல்லூரிகளையும், துவாபரயுக விகாரம் நிறைந்த இளவரசர், இளவரசிகளின் கல்லூரிகளையும் பாருங்கள். இளவரசர், இளவரசிகள் ஆகுகின்ற உங்களுடைய கல்லூரி எத்தனை சாதாரணமாக இருக்கின்றது என்பதையும் பாருங்கள். உங்களுக்கு மூன்று சதுர அடி நிலமேனும் இல்லை. அங்கே இளவரசர்கள், இளவரசிகள் எப்படி கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே அவர்கள் நடக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் மாளிகைக்கு வெளியே வந்தவுடன் விமானம் அவர்களை அழைத்துச் செல்லும். அங்கே உள்ள கல்லூரிகள் மிகவும் அழகானவை. அங்கே மிகவும் அழகான தோட்டங்கள், மாளிகைகள் முதலியன இருக்கும். அங்கே உள்ள யாவும் முதற் தரமானவையாகவும், புதியவையாகவும், மேன்மையானவையாகவும் இருக்கும். பஞ்ச தத்துவங்களும் சதோபிரதான் ஆனவையாகவே இருக்கும். உங்களுக்கு யார் சேவை செய்வார்கள்? இந்தப் பஞ்ச தத்துவங்கள் உங்களுக்காக மிகச் சிறந்தவற்றை வழங்கும். எங்கேயாவது மிக நல்ல பழங்கள் வளரும் போது அதனை அவர்கள் அரசனுக்கும் அரசிக்கும் பரிசாக அனுப்புவார்கள். இங்கே சிவபாபாவே உங்கள் அதிமேலான தந்தை. நீங்கள் அவருக்கு எதை ஊட்டுவீர்;கள்? அவருக்கு இதை உண்ணவேண்டும் அல்லது இதை அணிய வேண்டும் அல்லது இதைச் செய்யவேண்டும். என எந்த ஆசையும் கிடையாது. குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறான ஆசைகளைக் கொண்டிருக்கக் கூடாது. இங்கே நீங்கள் அவற்றையெல்லாம் கொண்டிருந்தால் அது அங்கே குறைக்கப்படும். இப்பொழுது நீங்கள் முழு உலகையும் துறக்கவேண்டும். உங்களுடைய சரீரம் உட்பட, அனைத்திலும் விருப்பமின்மையைக் கொண்டிருப்பதுடன் அனைத்தையும் துறக்க வேண்டும். நீங்கள் விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் பொழுது அனைத்தையும் இயல்பாகவே துறந்துவிடுகிறீர்கள். பாபா கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்கத்தை உங்கள் உள்ளங்கையில் தருவதற்காக வருகிறேன். அவரே உங்கள் பாபா என நீங்கள் அறிவதால் நீங்கள் அவரை நிச்சயமாக நினைவு செய்தே ஆகவேண்டும். உதாரணமாக குமாரி ஒருவர் நிச்சயதார்த்தம் செய்யப்படும் பொழுது அல்லது திருமணம் ஏற்பாடு செய்யப்படும் பொழுது தனது கணவரைத் தன்னால் நினைக்கமுடியாது எனக் கூறுவதில்லை. ஏனெனில் அது வாழ்நாள் முழுவதற்குமான உறவாகும். அவ்வாறே இதுவும் தந்தையும் குழந்தையும் எனும் உறவு முறையாகும். எவ்வாறாயினும் மாயை உங்களை மறக்கச் செய்கிறாள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். முக்தி, ஜீவன்முக்தி ஆகிய இரண்டும் இதனுள் அடங்குகிறது, ஆகவே நீங்கள் ஏன் இதை மறந்து விடுகின்றீர்கள்? இதற்குப் புத்தி தேவைப்படுகிறது. உங்கள் நாவினால் எதனையும் சொல்ல வேண்டுமென்றில்லை, உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையாக இருந்து, தூய உலகிற்கான ஆஸ்தியைக் கோர வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது புரிந்து கொள்வதற்கான விடயமே அன்றி பேசுவதற்கான விடயமல்ல. நாங்கள் இப்பொழுது பாபாவிற்கு உரியவர்கள். சிவபாபாவே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர். அவர் கூறுகிறார்: தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள். மன்மனாபவ என்பதே இதுவாகும். கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார் என அவர்கள் எழுதியுள்ளார்கள். தூய்மையாக்குபவர் ஒருவரே. உங்கள் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் ஒரே ஒருவரே .நீங்கள் ஒருவரையே நினைவு செய்ய வேண்டும். அவர் கூறுகின்றார்: உங்கள் தந்தையாகிய என்னை மறந்து விடுவதாலேயே நீங்கள் தொடர்ந்தும் பலரை நினைவு செய்கிறீர்கள். என்னை நினைவு செய்வீர்களாயின் நீங்கள் அரசர் விக்ரமாஜீத் (பாவங்களை வென்ற அரசர்) ஆகுவீர்கள். விக்ரமாஜீத் அரசனுக்கும், அரசன் விக்ரமிற்கும் (பாவச் செயல்களைச் செய்கின்ற அரசர்களுக்கும்) இடையிலான வித்தியாசம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பூஜை செய்யப்படத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்து, நீங்கள் பூஜை செய்பவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் கீழிறங்கி வர வேண்டும். நீங்கள் வைசிய வம்சத்திற்கும், பின்னர் சூத்திர வம்சத்திற்கும் இறங்கி வரவேண்டி உள்ளது. வைசிய வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகுவது என்றால் பாவப் பாதையைப் பின்பற்றுவதாகும். நீங்கள் முழு வரலாற்றையும் புவியியலையும் உங்கள் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். இதைப் பற்றிய பல கதைகள் உள்ளன. அங்கே பற்று என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கே குழந்தைகள் பெருமளவு சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் இயல்பாகவே மிக நன்றாகப் பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் எப்பொழுதும் பணிப்பெண்களும் வேலைக்காரர்களும் இருக்கிறார்கள். ஆதலால் உங்கள் பாக்கியத்தைப் பாருங்கள், நீங்கள் யாவரும் எதிர்கால இளவரசர்களும், இளவரசிகளும் ஆகுகின்ற ஒரு கல்லூரியில் இப்பொழுது இருக்கிறீர்கள். நீங்கள் கலியுகத்தின் இளவரசர்களுக்கும், இளவரசிகளுக்கும் சத்திய யுகத்தின் இளவரசர்களுக்கும் இளவரசிக்கும், சக்கரவர்த்தி, சக்கரவர்த்;தினிக்கும், அரசர் அரசிக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியமாட்டீர்களா? பலர் இலக்ஷ்மி நாராயணன், ராதாகிருஷ்ணன் போன்ற பெயர்களைக் கொண்டுள்ளனர். எனவே அதே பெயரைக் கொண்டிருக்கின்ற அவர்கள் ஏன் இலக்ஷ்மியையும், நாராயணனையும், ராதையையும், கிருஷ்ணரையும் வழிபடுகிறார்கள்? பெயர்கள் ஒன்றே. ஆம். அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள். இந்த ஞானம் எந்தச் சமயநூல்களிலும் இல்லை என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பக்தி செய்தல், யாகம் வளர்த்தல், தவம் செய்தல், தானம் செய்தல் முதலியவற்றால் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்பதை நீஙகள்; புரிந்து கொள்கிறீர்கள். நாடகத்திற்கு ஏற்ப உலகம் பழையதாக வேண்டும். மனிதர்கள் யாவரும் தமோபிரதானாகவே வேண்டும். அவர்கள் அனைத்திலும் கோபப்படுவதிலும், பேராசைப்படுவதிலும் கூட தமோபிரதானாகவே இருக்கிறார்கள். இவர் ஏன் என்னுடைய காணியில் தலையிடுகிறார்? அவரைச் சுட்டுவிடுங்கள் என்று அவர்கள் தம்மிடையே சண்டையிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் கொல்வதற்கு அவர்களுக்கு நேரம் எடுக்காது. ஒரு குழந்தை தந்தையின் ஆஸ்தியைப் பெறுவதற்காகத் தனது தந்தை எப்போது மரணிப்பார் என்றே எண்ணிக் கொண்டிருப்பார். இத்தகைய தமோபிரதான் உலகம் நிச்சயமாக அழிக்கப்படவே வேண்டும். அப்பொழுதே சதோபிரதான் உலகம் வரும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தூய, தர்மாத்மா ஆகுவதற்கு, நினைவில் நிலைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் முடித்து, திறமைச்சித்தி அடைந்து கௌரவமாக வீடு திரும்ப வேண்டும். ஆதலால் கடந்த காலச் செயல்களின் கர்ம வேதனையையிட்டுப் பயப்பட வேண்டாம். உங்கள் கணக்குகளைச் சந்தோஷமாகத் தீர்த்து விடுங்கள்.

2. நீங்களே எதிர்கால இளவரசரும் இளவரசிகளும் ஆகுகின்றீர்கள் என்ற போதையில் எப்பொழுதும் இருங்கள். இது இளவரசனும் இளவரசியும் ஆகுவதற்கான ஒரு கல்லூரியாகும்.

ஆசீர்வாதம்:
உங்களுடைய அசைக்க முடியாத ஸ்திதியினால், உலக உபகாரியாகவும் மாஸ்டர் அருள்பவராகவும் ஆகுவீர்களாக.

அசைக்க முடியாத ஸ்திதியில் இருப்பவர்கள் தமக்குள் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருக்கின்றார்கள். ஆகையால், நீங்கள் ஒவ்வொருவருமே அசைக்க முடியாதவராக ஆக வேண்டும். அசைக்க முடியாதவர்களின் விசேட தெய்வீகக் குணம் கருணை நிறைந்தவராக இருப்பதாகும். அவர்கள் எப்பொழுதும் ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் அருள்பவராக இருக்கின்ற உணர்வை கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான விசேட பட்டம், உலக உபகாரி என்பதாகும். அவர்கள் என்றுமே எந்த ஆத்மாவையிட்டும் வெறுப்பான, முரண்படும், பொறாமையான, விமர்சிக்கின்ற உணர்வுகளைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் உபகாரமான உணர்வுகளையே கொண்டிருப்பார்கள்.

சுலோகம்:
மௌன சக்தி மாத்திரமே பிறரிடம் உள்ள கோபத்தீயை அணைப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும்.