17.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் அனைவரையும் தேவதைகளின் உலகவாசிகளாக ஆக்க வேண்டும். நீங்கள் அனைவருக்கும் நன்மையளிப்பவர்கள்;. ஏழைகளைச் செல்வந்தர்கள் ஆக்குவதே உங்கள் கடமையாகும்.

கேள்வி:
தந்தையின் எப்பெயர்கள் சாதாரணமாக இருப்பினும், அப்பெயர்களின் மூலம் அவர் செய்யும் பணிகள் மிகவும் மகத்துவமாக உள்ளன?

பதில்:
பாபா பூந்தோட்டத்தின் அதிபதி என்றும், படகோட்டி என்றும் அழைக்கப்படுகின்றார். இப் பெயர்கள் மிகவும் சாதாரணமானவையாகும், இருப்பினும் மூழ்கிக் கொண்டிருப்பவர்களைக் கரையேற்றுதல் மிகவும் மகத்துவமான பணியாகும். கரையேற்றப்பட வேண்டிய ஒருவர் சுழியோடிகளின் கரங்களைப் பற்றிக் கொள்வதைப் போன்று நீங்களும் தந்தையின் கரங்களைப் பற்றிக் கொள்வதன் மூலம் சுவர்க்கவாசிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் மாஸ்டர் படகோட்டிகள் ஆவீர்கள்; அனைவரும் தங்கள் படகுகளைக் கரையேற்ற அவர்களுக்கு நீங்கள் வழிகாட்டுகின்றீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் நினைவுசெய்தவாறே அமர்ந்திருப்பீர்கள். உங்களுக்குச் சரீரங்கள் இருந்த போதிலும், உங்களை ஆத்மாக்கள் என்றே நீங்கள் கருத வேண்டும். நீங்கள் சரீரங்கள் இல்லாது, இ;ங்கமர்ந்திருக்கின்றீர்கள் என்றில்லை. தந்தை கூறுகின்றார்: சரீர உணர்வைக் கைவிட்டு, ஆத்ம உணர்வு ஸ்திதியில் இங்கே அமருங்கள். ஆத்ம உணர்வு தூய்மையானது, ஆனால் சரீர உணர்வு தூய்மையற்றதாகும். நாங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதனால், தூய்மையானவர்களாகவும், சுத்தமானவர்களாகவும் ஆகுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சரீர உணர்வுடையவர்கள் ஆகுவதால், நாங்கள் தூய்மையற்றவர்களாகவும், சுத்தமற்றவர்களாகவும் ஆகினோம். மக்கள் கூவி அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தூய உலகம் இருந்தது, ஆனால் அது இப்பொழுது தூய்மையற்றதாகி உள்ளது. எனவே, நிச்சயமாக மீண்டும் ஒருமுறை தூய உலகம் உருவாகும். உலகச் சக்கரம் தொடர்ந்தும் சுழலும். இவ் உலகச் சக்கரத்தை அறிந்தவர்கள் சுய தரிசனச் சக்கரதாரிகள் என அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆவீர்கள். ஆத்மாவான சுயம், உலகச் சக்கரத்தின் ஞானத்தைப் பெற்றுள்ளார். ஞானத்தைக் கொடுத்தவர் யார்? அவரும் நிச்சயமாகச் சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்றுபவராகவே இருக்க வேண்டும். தந்தையால் மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்க முடியும்; எந்த மனிதர்களாலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாது. பரமாத்மாவான தந்தையே குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். சத்தியயுகத்தில் ஞானத்திற்கான தேவையோ அல்லது இக் கற்பித்தல்களைக் கொடுக்க வேண்டிய தேவையோ அல்லது அங்கு பக்தியோ இருக்க மாட்டாது. நீங்கள் இந்த ஞானத்தின் மூலமாக உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார்; நீங்கள் இவ்வாறாகவே மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்;கள். நீங்கள் இடுகாட்டில் இருந்தீர்கள் என்பதையும், தந்தை இப்பொழுது உங்களை மேன்மையான தேவதை உலகவாசிகள் ஆக்குகின்றார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப் பழைய உலகம் ஓர் இடுகாடாக மாற உள்ளது. மரண பூமியே இடுகாடு (கபிரிஸ்தான்) எனப்படுகின்றது. புதிய உலகம் தேவதைகளின் பூமி (பரிஸ்தான்) என அழைக்கப்படுகின்றது. தந்தை நாடகத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். இம் முழு உலகமும் வைக்கோற்போர் என அழைக்கப்படுகின்றது. இராவண இராச்சியம் இப்பொழுது முழு உலகிலும் விரிவடைந்துள்ளது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். மக்கள் தசேராவைக் (இராவணனின் கொடுப்பாவியை எரித்தல்) கொண்டாடி, அதிகளவு சந்தோஷப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் துன்பத்தில் இருந்து விடுதலை செய்வதற்காக நானும் இராவணனின் பழைய உலகிற்கு வரவேண்டியுள்ளது. இதனையிட்டுக் கூறப்பட்ட கதை ஒன்றும் உள்ளது. ஒருவரிடம் முதலில் என்ன வேண்டும் என்று கேட்கப்பட்டது: சந்தோஷமா அல்லது துன்பமா? அவர் தனக்கு முதலில் சந்தோஷமே வேண்டும் என்று பதிலளித்தார், ஏனெனில் சந்தோஷத்திற்குள் செல்வதாயின், எம்மரண தூதுவனாலும்; அவரிடம் வர முடியாது என்பதால் ஆகும். அது ஒரு கதையே ஆகும். சந்தோஷதாமத்திற்குள் என்றுமே மரணம் பிரவேசிக்க மாட்டாது எனத் தந்தையும் உங்களிடம் கூறுகின்றார். அது அமரத்துவ உலகமாகும்; நீங்கள் மரணத்தை வெல்கின்றீர்கள். நீங்கள் அவ்வாறான சர்வ சக்திவான் ஆகுகின்றீர்கள். அங்கே நீங்கள் இன்னார் மரணித்து விட்டார் என என்றுமே கூறுவதில்லை. அங்கே மரணம் என்ற குறிப்பே இல்லை. அவர்கள் அங்கே தங்கள் ஆடையை மாற்றி இன்னொன்றை அணிந்து கொள்கின்றார்கள். பாம்பு தனது தோலை நீக்குவது போல, நீங்களும் உங்கள் பழைய தோலை நீக்கி விடுகின்றீர்கள். அதாவது, நீங்கள் புதியதொரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றீர்கள். அங்கே பஞ்ச தத்துவங்களும் சதோபிரதானாக உள்ளன. அனைத்தும் சதோபிரதான் ஆகுகின்றன. பழங்கள் உட்பட அனைத்துமே அதி சிறந்தவையாக இருக்கின்றன. சத்தியயுகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. அங்கே அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர். அவர்களைப் போன்று மிகவும் சந்தோஷமான உலக அதிபதிகள் வேறு எவரும் இருக்க முடியாது. நீங்களே அவர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். ஆகையால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அனைவரையும் தேவதை உலகவாசிகள் ஆக்க வேண்டும். நீங்கள் பலருக்கும் நன்மை செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுகின்றீர்கள். ஏனைய அனைவரும் ஏழைகள் ஆவார்கள். உங்கள் கரங்களை அவரது கரங்களோடு இணைத்துக் கொள்ளும் வரை, உங்களால் சுவர்க்கவாசிகள் ஆக முடியாது. அனைவருமே தந்தையின் கரங்களைப் பற்றிக் கொள்வார்கள் என்றில்லை; நீங்கள் மாத்திரமே தந்தையின் கரங்ளைப் பற்றிக் கொள்கின்றீர்கள். பின்னர் மற்றவர்கள் உங்கள் கரங்களைப் பற்றுகின்றனர். சுழியோடிகள் ஒருவர் பின் ஒருவரைக் கரையேற்றுவதைப் போன்று, பின்னர் அவர்கள் ஏனையோரின் கரங்களைப் பற்றுகின்றார்கள். நீங்களும் மாஸ்டர் படகோட்டிகள் ஆவீர்கள். உங்களில் பலர் படகோட்டிகள் ஆகுகின்றீர்கள். இதுவே உங்கள் வியாபாரம் ஆகும். நாங்கள் அனைவருக்கும் அவர்களின் படகுகளைக் கரையேற்ற வழி காட்டுகின்றோம். படகோட்டியின் குழந்தைகளும் படகோட்டிகள் ஆகுகின்றார்கள். படகோட்டி, பூந்தோட்டக்காரர் என்ற அவரது பெயர்கள் மிகவும் சாதாரணமானவையே. இப்பொழுது உங்களால் இதனை நடைமுறையில் காண முடியும். நீங்கள் இப்பொழுது தேவதைகளின் உலகத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். உங்கள் ஞாபகார்த்தங்கள் உங்கள் முன்னிலையில் உள்ளன. நீங்கள் தரையில் அமர்ந்து இராஜயோக தபஸ்யா செய்வதும், உங்களுக்கு மேலே இராச்சியம் இருப்பதுவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. தில்வாலா என்ற பெயர் மிகவும் சிறந்ததாகும். தந்தை அனைவரது இதயங்களையும் வெல்கின்றார். அவர் அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். உங்கள் இதயங்களை வெல்பவர் யார்? இதனை எவருமே அறியாதுள்ளார்கள். சிவபாபா பிரம்மாவினதும் தந்தையாவார். எல்லையற்ற தந்தையே அனைவரதும் இதயத்தையும் வெல்கின்றார். அவர் தத்துவங்கள் போன்றவற்றிற்கும் நன்மையளிக்கின்றார். இதுவும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய சமயங்களின் சமயநூல்கள் அனைத்தும் நிரந்தரமாக உள்ளன. நீங்கள் இந்த ஞானத்தைச் சங்கமயுகத்தில் பெறுகின்றீர்கள். அதன் பின்னர் விநாசம் இடம்பெற்று, எச்சமயநூலும் எஞ்சுவதில்லை. சமயநூல்கள் அனைத்தும் பக்திமார்க்கத்தின் அடையாளங்கள் ஆகும். இது ஞானமாகும். உங்களால் வித்தியாசத்தை இனங்காண முடியும், அல்லவா? அதிகளவு பக்தி உள்ளது. அவர்கள் இறைவிகள் போன்றோரை வழிபடும்போது, அதிகளவு செலவழிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அதனைச் செய்வதனால் அவர்;கள் தற்காலிகமான சந்தோஷத்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் கொண்டிருக்கும் பக்தி உணர்வுகள் நிறைவேற்றப்படுகின்றன. இறைவிகளை அலங்கரித்து வழிபடும்போது, அவர்கள் காட்சிகளைக் கண்டு, அதனால் சந்தோஷம் அடைகின்றார்கள். எவ்வாறாயினும், அதில் எப்பயனும் இல்லை. மீராவின் பெயர் நினைவுகூரப்பட்டுள்ளது. பக்தர்களின் மாலையும் உள்ளது. பெண்களில் மீராவும், ஆண்களில் நாரதரும் அதிமேன்மையான பக்தர்கள் என நினைவுகூரப்பட்டுள்ளனர்; குழந்தைகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளீர்கள். மாலையில் பல மணிகள் உள்ளன. உச்சியில் மலரான பாபா குஞ்சமாகவும், அதன் பின்னர் இரட்டை மணிகளும் உள்ளன. அனைவரும் மலரை வணங்குகின்றார்கள். ஒவ்வொரு மணியையும் அனைவரும் வணங்குகின்றார்கள். அவர்கள் உருத்திர யாகத்தை உருவாக்கும் போது, சிவனையே அதிகளவு வழிபடுகின்றார்கள். அவர்கள் சாலிகிராம்களை அந்தளவிற்கு வழிபடுவதில்லை. அவர்களின் முழுக் கவனமும் சிவனிலேயே உள்ளது. ஏனெனில் நீங்கள் இப்பொழுது தூய்மையாகுவதைப் போன்று, சிவபாபாவின் மூலமே சாலிகிராம்கள் திறமைசாலிகள் ஆகுகின்றார்கள். தூய்மையாக்குகின்ற தந்தையின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் தூய்மையாக்குபவர்கள் ஆவீர்கள். நீங்கள் பிறருக்குப் பாதையைக் காட்டாது விட்டால், நீங்கள் சில சதப் பெறுமதியான அந்தஸ்தையே பெறுவீர்கள். இருப்பினும், குறைந்தபட்சம் நீங்கள் தந்தையைச் சந்தித்திருக்கின்றீர்கள். அது சிறிய விடயமல்ல. அந்த ஒரேயொருவரே அனைவரதும் தந்தை ஆவார். கிருஷ்ணரை இட்டு இவ்வாறு நீங்கள் கூறுவதில்லை. கிருஷ்ணர் யாருக்குத் (லௌகீக) தந்தை ஆகுகின்றார்? கிருஷ்ணர் தந்தை என அழைக்கப்படுவதில்லை. ஒரு குழந்தையை நீங்கள் தந்தையென அழைக்க முடியாது. அவர்; தம்பதியரில் ஒருவராகிக் குழந்தைகளை உருவாக்கும்போதே அவர் தந்தை என அழைக்கப்பட முடியும். பின்னர் அவர்கள் அவரைத் தந்தை என அழைப்பார்கள். அவரை வேறு எவரும் தந்தை என அழைக்க முடியாது. எவ்வாறாயினும், முதியவர் ஒருவரையும் தந்தை என அழைக்கலாம். இவரோ அனைவரதும் தந்தை ஆவார். அவர்கள் சகோதரத்துவத்தைப் பற்றிப் பாடுகின்றார்கள். கடவுளைச் சர்வவியாபி எனக் கூறுவதன் மூலம் அது தந்தைத்துவம் ஆகுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் பெரிய ஒன்றுகூடல்களில் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் சொற்பொழிவொன்று ஆற்றச் செல்லும் முன்னர், நீங்கள் எப்பொழுதும் முதலில் அதற்குரிய தலைப்பைக் கடைந்து, அதனைப் பற்றி எழுதிக் கொள்ள வேண்டும். தந்தைக்கு ஞானத்தைக் கடைய வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு கல்பத்திற்கு முன்னர் உங்களுக்கு எதனைக் கூறினாரோ, அதனை மாத்திரம் கூறிய பின்னர், திரும்பிச் சென்று விடுகின்றார். நீங்கள் தலைப்புகளை விளங்கப்படுத்த வேண்டும். முதலில் அதனை எழுதிக் கொண்டு, பின்னர் அதனை மீண்டும் வாசியுங்கள். சொற்பொழிவொன்றை ஆற்றிய பின்னர் நீங்கள் கூறத் தவறிய குறிப்பிட்ட கருத்துக்களைப் பற்றி நினைக்கின்றீர்கள்: இதனை விளங்கப்படுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அவ்வாறு நடைபெறுகின்றது. நீங்கள் எதாவது ஒரு கருத்தை மறந்து விடுகின்றீர்கள். முதலில் அவர்களிடம் கூறுங்கள்: சகோதர சகோதரிகளே, ஆத்ம உணர்வில் இருங்கள். இதனை என்றும் மறக்காதீர்கள். அத்தகைய செய்திகளை எவரும் எழுதுவதில்லை. முதன்முதலில், அனைவரிடமும் கூறுங்கள்: ஆத்ம உணர்வில் இருங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்கள். தந்தை இப்பொழுது வந்து, உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சரீரதாரிகளை நினைவுசெய்யாதீர்கள். உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். நாங்கள் அவ்விடத்து வாசிகள் ஆவோம். எங்கள் பாபா உபகாரியான, சிவன் ஆவார், ஆத்மாக்களாகிய நாங்கள் அவரின் குழந்தைகள். தந்தை கூறுகின்றார்;: ஆத்ம உணர்வில் இருங்கள். நான் ஓர் ஆத்மா. தந்தையை நினைவு செய்வதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவை கங்கையில் நீராடுவதால் அழிக்கப்படுவதில்லை. தந்தையின் வழிகாட்டல்: என்னை நினைவுசெய்யுங்கள். அவர்கள் கீதையைக் கற்று, அதனை மேற்கோள் காட்டுகின்றார்கள்: அதர்மம் தழைத்தோங்கும் போது, நான் வருகின்றேன். அவர்கள் இதனைக் கூறினரிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை சேவையையிட்டு உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார். சிவபாபா கூறுகின்றார்;: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். கிருஷ்ணரே அதனைக் கூறியதாக அவர்கள் நம்புகின்றார்கள். சிவபாபா குழந்தைகளாகிய எங்களிடம் என்னை நினைவுசெய்யுங்கள் எனக் கூறுகின்றார் என நீங்கள் கூறுகின்றீர்கள். என்னை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் சதோபிரதான் ஆகி, உயர்ந்ததோர் அந்தஸ்தையும் கோருகின்றீர்கள். உங்கள் இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. நீங்கள் முயற்சி செய்வதன் மூலம் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர வேண்டும். வேறிடங்களில் உள்ளவர்கள் தத்தமது சமயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்;கள். நாங்கள் ஏனையோரின் சமயங்களுக்குள் செல்வதில்லை; அவை பின்னரே வருகின்றன. தங்களுக்கு முன்னர் வைகுந்தம் இருந்தது என அவர்கள் அறிந்துள்ளார்கள். பாரதமே அதிபுராதன தேசமாகும், ஆனால் அது எப்பொழுது இருந்தது என்பதை எவரும் அறிய மாட்டார்கள். அவர்கள் அவர்களை இறைவர், இறைவி என அழைக்கின்றார்கள். ஆனால் தந்தை கூறுகின்றார்: அவர்களை இறைவர், இறைவி என அழைக்க முடியாது. நான் ஒருவர் மாத்திரமே கடவுள் ஆவேன். நீங்கள் பிராமணர்கள். தந்தை பிராமணர் என அழைக்கப்படுவதில்லை. அவர் அதிமேலான கடவுள் ஆவார். அவருக்குச் சரீரப் பெயர் இல்லை. நீங்கள் அனைவருமே உங்கள் சரீரத்திற்கான பெயரைக் கொண்டிருக்கின்றீர்கள். ஓர் ஆத்மா, ஆத்மாவே. அவர் பரமாத்மா ஆவார். அந்த ஆத்மாவின் பெயர் சிவன் ஆகும். அவர் அசரீரி ஆவார். அவருக்குச் சூட்சும சரீரமோ, பௌதீகச் சரீரமோ இல்லை. ஆகையால் அவருக்கு ஒரு வடிவம் இல்லை என்று அர்த்தம் அல்ல. பெயர் உள்ள எதற்கும் நிச்சயமாக ஒரு வடிவமும் உள்ளது. பெயரோ, வடிவமோ இல்லாது எதுவும் இருப்பதில்லை. தந்தையான கடவுள் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவர் எனக் கூறுவது மிகப் பெரிய அறியாமையாகும். தந்தை பெயரிற்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவராயின், குழந்தைகளும் பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டவராகவே இருந்திருக்க வேண்டும், அவ்வாறாயின் உலகமே இருக்க மாட்டாது. இப்பொழுது உங்களால் மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும். இறுதியில் குருமார்களும் புரிந்து கொள்வார்கள். இப்பொழுது இது அவர்களின் இராச்சியம் .நீங்கள் இப்பொழுது இரட்டை அகிம்சைவாதிகள் ஆகுகின்றீர்கள். தேவர்களின் பரம தர்மமாகிய அகிம்சை, இரட்டை அகிம்சா தர்மம் என நினைவுகூரப்பட்டுள்ளது. ஒருவரைப் பௌதீகமாக அடித்தல் அல்லது எவருக்கும் துன்பம் கொடுத்தல் என்பதும் வன்முறையாகும். தினமும் தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களினால் என்றுமே துன்பம் விளைவிக்காதீர்கள். உங்கள் எண்ணங்களில் ஏதோ ஒன்று நிச்சயமாகத் தோன்றிக் கொண்டிருக்கும். சத்தியயுகத்தில் உங்கள் எண்ணங்களில் அவ்வாறு எதுவும் தோன்றாது. இங்கே, அது உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் பிரவேசிக்கின்றது. அங்கே நீங்கள் இவ் வார்த்தைகளைக் கேள்விப்பட மாட்டீர்கள், சத்சங்கம் போன்ற எந்த ஒன்றுகூடலும் அங்கே இருக்கவும் மாட்டாது. உண்மையானவர் ஆகுவதற்காகச் சத்தியமானவருடன் கூடும் ஒரேயொரு உண்மையான ஒன்றுகூடல் மாத்திரமே உள்ளது. ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியமாவார். சாதாரண மனிதரிலிருந்து சத்திய நாராயணன் ஆகுகின்ற கதையைத் தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குக் கூறுகின்றார். இதனைச் செவிமடுப்பதனால், நீங்கள் நாராயணன் ஆகுகின்றீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்தில், நீங்கள் சத்தியநாராயணன் ஆகும் கதையை அதிகளவு அன்புடன் செவிமடுக்கின்றீர்கள். உங்கள் ஞாபகார்த்தமான தில்வாலா ஆலயம் எவ்வளவு சிறப்பானது எனப் பாருங்கள். தந்தை நிச்சயமாகச் சங்கமயுகத்தில் அனைவரின் இதயத்தையும் வென்றிருக்க வேண்டும். ஆதிதேவரும், தேவியும், குழந்தைகளும் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். இதுவே உண்மையான ஞாபகார்த்தமாகும். உங்களை அன்றி வேறு எவருக்கும் அதன் வரலாறும் புவியியலும் தெரியாது. அது உங்கள் ஞாபகார்த்தமாகும். இதுவும் ஓர் அற்புதமாகும். நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்குச் செல்லும் போது, நீங்கள் அவர்களைப் போன்றவர்கள் ஆகுகின்றீர்கள் என அவர்களிடம் கூறுங்கள். கிறிஸ்துவும் இங்கே உள்ளார். கிறிஸ்து இப்பொழுது தனது பிச்சைக்கார வடிவில் எங்கோ இருப்பதாகப் பலரும் கூறுகின்றார்கள். தமோபிரதான் என்றால் அவர் பிச்சைக்காரன் என்று அர்த்தமாகும், இல்லையா? அவர் நிச்சயமாக மறு பிறப்பெடுக்கின்றார். இளவரசர் ஸ்ரீகிருஷ்ணரும் இப்பொழுது பிச்சைக்காரராகவே உள்ளார்: அவலட்சணமானவரும், அழகானவரும்;. பாரதம் எவ்வாறாக இருந்தது என்பதும், அது இப்பொழுது என்னவாகியுள்ளது எனபதும் உங்களுக்கத் தெரியும். தந்தையே ஏழைகளின் பிரபு ஆவார். மக்கள் கடவுளின் பெயரில் ஏழைகளுக்குத் தானம் செய்வதுடன் புண்ணியமும் செய்கின்றார்கள். பலரிடம் போதிய தானியம் கூட இல்லாதுள்ளது. நீங்கள் முன்னேறிச் செல்கையில், செல்வந்தர்களும் போதிய தானியத்தைப் பெறாதிருப்பதைப் பார்ப்பீர்கள். ஒவ்வொரு நகரத்திலும் கொள்ளையரினால் கொள்ளையடிக்கப்பட்ட செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். அந்தஸ்;தில் வேறுபாடு உள்ளது, இல்லையா? தந்தை கூறுகின்றார்;: நீங்கள் முதல் இலக்கத்தினர் ஆகுவதற்குரிய முயற்சியைச் செய்யுங்கள். உங்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது ஆசிரியரின் கடமையாகும். நீங்கள் திறமைச்சித்தி எய்த வேண்டும். இது எல்லையற்ற பாடசாலையாகும். இந்த இராஜயோகம், இராச்சியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கானதாகும். பழைய உலகின் விநாசம் மீண்டும் இடம்பெற உள்ளது. இல்லாவிடின் நீங்கள் எங்கே ஆட்சி செய்வீர்கள்? இவ் உலகம் தூய்மையற்றதாகும். கங்கையே தூய்மையாக்குபவர் என மக்கள் கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த நேரத்தில் பஞ்ச தத்துவங்களும் தூய்மையற்றுள்ளன. குப்பை கூளங்கள் அனைத்தும் கடலுக்கே செல்கின்றன. மீனும் அதிலேயே வாழ்கின்றது. அது நீராலான உலகம் போன்றுள்ளது. பல உயிரினங்கள் நீரில் வாழ்கின்றன. பெரிய சமுத்திரங்களில் இருந்து மக்கள் அதிகளவு உணவைப் பெறுகின்றனர். எனவே, அதுவும் ஒரு நகரம் போன்றதே, அல்லவா? ஒரு நகரத்தை எவ்வாறு தூய்மையாக்குபவர் என அழைக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் சரீரங்களும் தூய்மையற்றதாகி உள்ளன. இப்பொழுது என்னை நினைவுசெய்தால் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் அழகான உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கே வேறு எத்தேசமும் இருக்க மாட்டாது. பாரதமே சகலதுறைப் பாகங்களையும் கொண்டிருக்கின்றது. நீங்கள் அனைவரும் சகலகலா வல்லுனர்கள். ஒரு நாடகத்திலும், நடிகர்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே பிரவேசிக்கின்றார்கள். இங்கும் அவ்வாறே. பாபா கூறுகின்றார்;;: கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் தந்தையாகிய கடவுளான தூய்மையாக்குபவரின் மாணவர்கள். அனைத்தும் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இதில் தூய்மையாக்குபவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார், அவரே குருவும், ஆசிரியரும் ஆவார். அவர் தந்தையும் ஆவார். அவர் அசரீரியானவரும் ஆவார். இது அசரீரியான இறை-தந்தையின் உலகப் பல்கலைக்கழகமாகும். இது அத்தகைய சிறந்த பெயராகும். மக்கள் கடவுளை அதிகளவு புகழ்கின்றார்கள். அவர்கள் ஒரு புள்ளியைப் பற்றி அறியும் போது, வியப்படைகின்றார்கள். அவர்கள் கடவுளை அதிகளவு புகழ்ந்த போதிலும், அவர் எவ்வாறானவர்? ஒரு புள்ளியாவார். அவருக்குள் மிகவும் மகத்துவமான பாகம் பதியப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: ஒரு சரீரத்தில் இருந்து, வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போதும், சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். பக்திமார்க்கத்தில் தீவிர பக்தி செய்பவர்கள் சதோபிரதான் தீவிர பக்தர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் பக்தி மிகவும் தீவிரமானதாகும். இப்பொழுது நீங்கள் தீவிர வேகத்தில் நினைவைக் கொண்டிருப்பது அவசியம். தீவிரமான நினைவைக் கொண்டிருப்பவர்களின் பெயர்கள் மாத்திரமே போற்றப்படும். அவர்கள் வெற்றி மாலையில் மணிகள் ஆகுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சாதாரண மனிதரிலிருந்து நாராயணன் ஆக வேண்டுமாயின், தினமும் உண்மையான செவிமடுங்கள். சத்திய சகவாசத்தை வைத்திருங்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் ஒருபோதும் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.

2. வெற்றி மாலையில் ஒரு மணியாகி, திறமைச்சித்தி எய்துவதற்கு, உங்கள் நினைவின் வேகத்தை அதிகரியுங்கள். மாஸ்டர் தூய்மையாக்குபவராகி, அனைவரையும் தூய்மையாக்குவதற்கு அவர்களுக்குச் சேவை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
மரணித்து வாழ்வது என்ற உங்கள் பிறவியின் விழிப்புணர்வுடன், ஒரு கர்மயோகியாகவிருந்து, சகல கர்ம பந்தனங்களையும் முடிப்பீர்களாக.

மரணித்து வாழ்தல் என்ற இந்தத் தெய்வீகப் பிறப்பானது ஒரு கர்ம பந்தனம் அல்ல. இது கர்மயோகி வாழ்வாகும். இந்த அலௌகீக தெய்வீக வாழ்க்கையில், பிராமண ஆத்மாக்கள் சுதந்திரமானவர்கள், தங்கியிருப்பவர்கள் அல்ல. அந்தச் சரீரங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. பழைய சரீரங்கள் அனைத்தையும் தந்தை சக்தியினால் நிரப்பி, முழு உலகின் சேவைக்காக பயன்படுத்துகிறார். அது தந்தையின் பொறுப்பாகும், உங்களுடையது அல்ல. எவ்வாறு செயற்படுவது என்பதற்கான வழிகாட்டல்களை தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ளார். நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள், அனைவரையும் செயற்படுத்தும் அந்த ஒருவரே அனைவரையும் இயக்குகிறார். இந்த விசேடமான கிரகித்தலுடன், சகல கர்ம பந்தனங்களையும் முடித்து ஒரு கர்மயோகி ஆகுங்கள்.

சுலோகம்:
எல்லையற்ற விருப்பமின்மைக்கான அத்திவாரமே நேரத்தின் அண்மித்தலாகும்.