17.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, தந்தையின் கழுத்து மாலை ஆகுவதற்கு, ஞானத்திலும் யோகத்திலும் விரைந்தோடுங்கள். முழு உலகிற்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே உங்கள் கடமையாகும்.
பாடல்:
உங்கள் நோய் குணமாகுவதற்கு, எப் போதையை நீங்கள் சதா பேண வேண்டும்?பதில்:
ஞானத்தினதும் யோகத்தினதும் போதையைப் பேணுங்கள். அப் பழைய சரீரத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். சரீரத்தை நோக்கி உங்கள் புத்தி ஈர்க்கப்படுமளவுக்கு, உங்களுக்கு அதிகளவு பேராசை இருக்கும், நோயும் அதிகரிக்கும். உங்கள் சரீரத்தை அலங்கரிப்பதற்கு, பவுடர், கிரீம்; போன்றவற்றை இடுவது அனைத்தும் பயனற்றதாகும். நீங்கள் ஞானத்தினாலும் யோகத்தினாலும் உங்களை அலங்கரிக்க வேண்டும். இதுவே உங்கள் உண்மையான அலங்காரமாகும்.பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகின்றது...ஓம் சாந்தி.
தந்தையுடன் இருப்பவர்கள்...., உலகில் பல தந்தையர் உள்ளனர். ஆனால் ஒரேயொருவரே அவர்கள் அனைவரையும் படைப்பவராகிய, தந்தை ஆவார். அவர் மாத்திரம் ஞானக்கடல் ஆவார். பரமாத்மாவான பரமதந்தையே ஞானக்கடல் என்பதை நீங்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தின் மூலம் மாத்திரமே சற்கதி பெறப்படுகின்றது. சத்தியயுகம் ஸ்தாபிக்கப்படும் பொழுதே மனிதர்களால் சற்கதியைப் பெற முடியும். தந்தை மாத்திரமே சற்கதியை அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். சங்கமயுகத்தின் பொழுது ஞானக்கடல் வந்து உங்களைச் சீரழிவிலிருந்து சற்கதிக்கு அழைத்துச் செல்வார். பாரதமே அனைத்திலும் மிகவும் புராதனமானதாகும். பாரத மக்களையிட்டே 84 பிறவிகள் நினைவுகூரப்பட்டுள்ளன. நிச்சயமாக, முதலில் வந்த மனிதர்கள் 84 பிறவிகளை எடுப்பார்கள். தேவர்களின் 84 பிறவிகள் என்று நீங்கள் கூறுவதால், பிராமணர்களுக்கும் 84 பிறவிகள் இருக்கின்றன. பிரதானமானவர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். இவ்விடயங்களைப் பற்றி எவரும் அறியார். அவர் நிச்சயமாகப் பிரம்மாவினூடாக உலகைப் படைக்கின்றார். எல்லாவற்றிற்கும் முதலில், அவர் சூட்சும உலகைப் படைத்து, பின்னர் இப் பௌதீக உலகைப் படைக்க வேண்டும். சூட்சும உலகம் எங்குள்ளது என்றும், அசரீரி உலகம் எங்குள்ளது என்றும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம் ஆகியவையே மூன்று உலகங்கள் ஆகும். நீங்கள் மூவுலகங்களின் பிரபுவைப் பற்றிப் பேசுவதால், அதற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். மூவுலகங்கள் இருக்க வேண்டும், இல்லையா? உண்மையில், ஒரேயொரு தந்தையையும் அவரின் குழந்தைகளையுமே திரிலோகநாதர் (மூவுலகங்களின் பிரபு) என்று அழைக்க முடியும். இங்கே, சிலர் திரிலோகநாதர், சிவன், பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார்கள். பாரத மக்கள் தங்களுக்குத் தாங்களே .இப் பெயர்களைக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் இராதாகிருஷ்ணன், இலக்ஷ்மிநாராயணன் என்ற இரட்டைப் பெயர்களையும் கொண்டிருக்கின்றார்கள். இராதையும், கிருஷ்ணரும் வெவ்வேறு இராச்சியங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை எவரும் அறியார். கிருஷ்ணர் ஓர் இராச்சியத்தின் இளவரசராக இருந்தார், இராதை வேறோரு இராச்சியத்தின் இளவரசியாக இருந்தார். இந் நேரத்தில் நீங்கள் இதனை அறிவீர்கள். இக்கருத்துக்;கள் மிகவும் நல்ல குழந்தைகளின் புத்தியில் மிகவும் நன்றாகக் கிரகிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு திறமையான வைத்தியர் பல்வேறு மருந்துகளின் பெயர்களை அறிந்திருப்பார். இங்கும், பல புதிய கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. நாளுக்கு நாள், புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. நன்றாகப் பயிற்சி செய்பவர்கள் புதிய கருத்துக்களைக் கிரகிப்பார்கள். நீங்கள் கிரகிக்காது விட்டால், உங்களை மகாராத்திகளின் வரிசையில் சேர்க்க முடியாது. அனைத்தும் புத்தியிலேயே தங்கியுள்ளது. அத்துடன் அது பாக்கியத்தைப் பற்றிய விடயமும் ஆகும். இது நாடகத்திலும் உள்ளது, இல்லையா? எவரும் நாடகத்தை அறியவும் மாட்டார்கள். நீங்கள் உங்கள் பாகங்களைச் சேவைக் களத்தில் நடிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறியாதிருந்தால், நீங்கள் எதனையுமே அறியாதிருக்கின்றீர்கள். நீங்கள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். தந்தை வந்துள்ளார் என்பதால், அவரது அறிமுகத்தை ஏனையோருக்குக் கொடுக்க வேண்டியது குழந்தைகளாகிய உங்கள் கடமையாகும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முழு உலகிற்கும் கூற வேண்டியது உங்கள் கடமையாகும். அப்பொழுதே எவரும் தாங்கள் இதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று கூற மாட்டார்கள். பலரும் உங்களிடம் வருவார்கள். பலர் புத்தகங்களையும் வாங்குவார்கள். குழந்தைகள் ஆரம்;பத்தில் பல காட்சிகளைக் கண்டார்கள். கிறிஸ்துவும், ஏபிரகாமும் பாரதத்திற்கு வந்தார்கள். உண்மையில் பாரதம் அனைவரையும் தொடர்ந்தும் ஈர்க்கிறது. உண்மையில், பாரதமே எல்லையற்ற தந்தையின் பிறப்பிடமாகும். எவ்வாறாயினும், இப்பாரதமே கடவுளின் பிறப்பிடம் என்பதை அம்மக்கள் அறியார்கள். அவர்கள் பரமாத்மா சிவனைப் பற்றிப்; பேசுகின்றார்கள், ஆனால் அனைவருமே பரமாத்மா என்று கூறுவதனால், அவர்கள் எல்லையற்ற தந்தையின் முக்கியத்துவம் இழக்கப்படுமாறு செய்;து விட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விளங்கப்படுத்துகின்றீர்கள்: பாரத தேசமே அனைத்திலும் அதி மகத்துவமான யாத்திரைத் தலம் ஆகும். வருகின்ற தூதுவர்கள் அனைவரும் தங்கள் சொந்தச் சமயங்களை ஸ்தாபிப்பதற்கே வருகின்றார்கள். ஏனைய சமயத்தவர்கள் அனைவரும் அவர்களைப் பின்பற்றி, தொடர்ந்தும் கீழே வருகின்றார்கள். இப்பொழுது இது இறுதியாகும். மக்கள் திரும்பிச் செல்ல முயற்சி செய்கின்றார்கள், ஆனால் உங்களை இங்கே அழைத்து வந்தவர் யார்? கிறிஸ்து வந்து, கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபித்து, உங்களையும் இங்கே ஈர்த்துக் கொண்டார். இப்பொழுது, அனைவரும் சலிப்படைந்;திருப்பதால், வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றார்கள். நீங்கள் இதனை விளங்;கப்படுத்த வேண்டும். அனைவரும் அவரவர் பாகத்தை நடிப்பதற்கு வருகின்றார்கள். நீங்கள் உங்கள் பாகங்களை நடிக்கும் பொழுது, துன்பத்திற்குள் வர வேண்டியுள்ளது. அப்பொழுது உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, உங்களைச் சந்தோஷத்திற்குள் அழைத்துச் செல்வது தந்தையின் கடமையாகும். பாரதம் தந்தையின் பிறப்பிடமாகும். குழந்தைகளாகிய உங்கள் மத்தியிலும், நீங்கள் அனைவருமே இதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளீர்கள் என்றில்லை. இதனைப் புரிந்துகொண்டுள்ள சிலர் உள்ளார்கள், அவர்களின் போதை உயர்வாக உள்ளது. ஒவ்வொரு கல்பத்திலும் தந்தை பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். நீங்கள் இதனை அனைவருக்கும் கூற வேண்டும். நீங்கள் அவர்களை அழைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் இச் சேவையைச் செய்ய வேண்டும். நீங்கள் புத்தகங்களைப் பிரசுரிக்க வேண்டும். நீங்கள் அனைவருக்கும் ஓர் அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும். வேறு எவருக்குமே படைப்பவரினது அல்லது படைப்பினது ஞானம் இல்லை. நீங்கள் சேவையாளராகி உங்கள் பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும். அனைவரும், பல கருத்துக்களையும் தங்கள் புத்தியில் வைத்துள்ள திறமைசாலிக் குழந்தைகளின் உதவியை நாடுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் இக் குழந்தைகளின் பெயர்களையே கூறிக் கொண்டிருக்கின்றார்கள். முதலில், அவர்கள் சிவபாபாவின் பெயரையும், பின்னர், பிரம்மபாபாவின் பெயரையும், அதன்பின்னர் வரிசைக்கிரமமாக இக் குழந்தைகளின் பெயர்களையும் கூறுகின்றார்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் பௌதீகமாக மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள். இப்பொழுது, நீங்கள் உங்கள் உதடுகளினால் கூறுகின்றீர்கள்: ‘இன்னார் மிகவும் நன்றாகச் சேவை செய்பவர்கள், அவர் ஆணவமற்றவரும், மிகவும் இனிமையானவரும், எச் சரீர உணர்வும் அற்றவரும் ஆவார். ‘நீங்கள் இனிமையானவராக இருந்தால், பிறரும் உங்களுடன் இனிமையானவர்களாக இருப்பார்கள்’ என்று கூறப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் சந்தோஷமற்றுள்ளீர்கள், இப்பொழுது என்னை நினைவு செய்தால், நான் உதவுவேன். உங்களுக்கு வெறுப்பு இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? இது நீங்கள் உங்களை வெறுப்பதைப் போன்றதாகும். அவ்வாறாயின், நீங்கள் ஓர் அந்தஸ்தைப் பெற மாட்டீர்கள். நீங்கள் அதிகளவு செல்வத்தைப் பெறுகின்றீர்கள். ஒருவர் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்லும் பொழுது, மிகவும் சந்தோஷம் அடைகின்றார். பல்வேறு பரிசுகள் உள்ளன. முதற் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு போன்றவை உள்ளன. அவ்வாறே, இது ஆன்மீக ஓட்டப் பந்தயமாகும். இதுவே ஞானத்தினதும் யோகசக்தியினதும் ஓட்டப் பந்தயமாகும், இதில் விரைந்து செல்பவர்கள் தந்தையின் கழுத்து மாலையாகி, சிம்மாசனத்தில் மிகவும் அண்மையில் அமர்வார்கள். இவை அனைத்தும் உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் வீடுகளையும் பராமரித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் கர்மயோகிகள் ஆவீர்கள். நீங்கள் வகுப்பில், ஒரு மணித்தியாலத்திற்குக் கற்று, பின்னர் வீட்டிற்குச் சென்று இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பாடசாலையிலும் அவர்கள் இதனையே செய்கின்றார்கள். அவர்கள் கற்ற பின்னர் வீட்டிற்குச் சென்று, தங்கள் வீட்டுவேலையைச் செய்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஒரு மணித்தியாலமோ அல்லது அரை மணித்தியாலமோ கற்றிடுங்கள். ஒரு நாளில் எட்டு மணித்தியாலங்கள் உள்ளன. அதிலும், தந்தை கூறுகின்றார்: ஒரு மணித்தியாலம் கற்றிடுங்கள். தவறினால் அரை மணித்தியாலம் கற்றிடுங்கள். 15 நிமிடம் முதல் 20 நிமிடங்களாவது வகுப்பிற்குச் செல்லுங்கள். அதனைக் கிரகித்த பின்னர் உங்கள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். ஆரம்ப நாட்களில், பாபா உங்களை நினைவில் அமர்ந்திருக்கச் செய்து, உங்களைச் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுமாறு கூறினார். நினைவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்து, சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றி, பின்னர் உறக்கம்; வரும்பொழுது, உறங்குங்கள். அப்பொழுது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்வதுடன், அதிகாலையில் நீங்கள் விழித்தெழும் பொழுது, அக் கருத்துக்களை நினைவு செய்வீர்கள். அப் பயிற்சியைக் கொண்டிருப்பின், நீங்கள் உறக்கத்தை வென்றவர்கள் ஆகுவீர்கள். ஒன்றைச் செய்பவர்கள் அதன் வெகுமதியையும் பெறுவார்கள். நீங்கள் ஒன்றைச் செய்யும் பொழுது, அது தெரியவருகிறது. உங்;களின் நடத்தை அதனை வெளிப்படுத்துகின்றது. எதனையுமே செய்யாதவர்களின் நடத்தை முற்றிலும் வேறுபட்டதாகும். இக் குழந்தை ஞானக்கடலைக் கடைந்து, ஞானத்தைக் கிரகிக்கின்றார், அவருக்குப் பேராசை போன்ற எதுவும்; கிடையாது என்பது புலப்படுகின்றது. அந்தச் சரீரங்கள் பழையவை ஆகும். நீங்கள் ஞானத்தையும் யோகத்தையும் கிரகிக்கும் பொழுது, அச்சரீரம் நன்றாக இருக்கும். தாரணை இல்லாதிருந்தால், சரீரம் தொடர்ந்தும் மேலும் அதிகமாகச் சீர்கெட்டு விடும். நீங்கள் எதிர்காலத்தில் புதியதொரு சரீரத்தைப் பெற உள்ளீர்கள். நீங்கள் உங்கள் ஆத்மாவைத் தூய்மையாக்க வேண்டும். அது ஒரு பழைய சரீரமாகும். நீங்கள் எவ்வளவுதான் பவுடர், உதட்டுச்சாயம் போன்றவற்றைப் பூசினாலும் அதனை நீங்கள் எவ்வளவு தான் அலங்கரித்தாலும் அது ஒரு சதப் பெறுமதியும் அற்றதாகும். அந்த அலங்காரம் அனைத்தும் பயனற்றதே. நீங்கள் அனைவரும் சிவபாபாவோடு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள். ஒரு திருமணம் இடம்பெறும் பொழுது, முதலில் அந்நாளில் மணப்பெண் பழைய ஆடையை அணிகின்றாள். நீங்கள் இப்பொழுது உங்கள் சரீரத்தை அலங்கரிக்கக்கூடாது. நீங்கள் உங்களை ஞானத்தாலும் யோகத்தாலும் அலங்கரித்தால், எதிர்காலத்தில் இளவரசர்களாகவும் இளவரசிகளாகவும் ஆகுவீர்கள். இது ஞான ஏரியாகும் (மன்சரோவார்). ஞானத்தில் தொடர்ந்தும் மூழ்கி எழுந்தால், நீங்கள் சுவர்க்கத்தின் தேவதை ஆகுவீர்கள். பிரஜைகளைத் தேவதைகள் என்று அழைக்க முடியாது. ‘கிருஷ்ணர் பெண்களைக் கடத்தி, அவர்களைச் சக்கரவர்த்தினிகள் ஆக்கினார்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவர் அவர்களைக் கடத்தி, அவர்களைப் பிரஜைகளின் சுடலையாண்டிகளாக ஆக்கினார் என்று கூறப்படுவதில்லை. அவர் அவர்களைச் சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆக்குவதற்கே கடத்தினார். நீங்களும் இம் முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் எந்த அந்தஸ்தைப் பெற்றாலும் பரவாயில்லை எனச் சந்தோஷம் அடையக்கூடாது. இங்கு கல்வியே பிரதான விடயமாகும். இது ஒரு பாடசாலையாகும். பலரும் கீதா பாடசாலைகளை ஆரம்பிக்கின்றார்கள். அம்மக்கள் அமர்ந்திருந்து கீதையை உரைத்து, அதனை உங்களை இதயபூர்வமாகக் கற்குமாறு செய்கின்றார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட சுலோகத்தைத் தேர்ந்தெடுத்து அதைப் பற்றி அரை அல்லது முக்கால் மணித்தியாலத்திற்குப் பேசுகின்றார்கள். அதில் எந்த நன்மையும் இல்லை. தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார். உங்கள் இலக்கும் இலட்சியமும் தெளிவாக உள்ளன. வேதங்களையும் சமயநூல்களையும் வாசிப்பதிலோ அல்லது ஓதுவதிலோ அல்லது தபசியா செய்வதிலோ எந்த இலக்கும் இலட்சியமும் இல்லை. தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள், அவ்வளவுதான். எவ்வாறாயினும், நீங்கள் எதனைப் பெறுவீர்கள்? மக்கள் அதிகளவு பக்தி செய்யும்பொழுது, கடவுளைக் காண்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இரவிற்குப் பின்னர் நிச்சயமாகப் பகல் வர வேண்டும். அவை அனைத்தும் சரியான நேரத்தில் இடம்பெறும். சக்கரத்தின் கால எல்லையைச் சிலர் ஒருவிதமாகவும், ஏனையோர் இன்னுமொரு விதமாகவும் கூறுகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது, அவர்கள் கூறுவார்கள்: சமயநூல்கள் எவ்வாறு தவறாக இருக்க முடியும்? கடவுள் பொய் சொல்ல மாட்டார். உங்களுக்கு விளங்கப்படுத்துவதற்குச் சக்தி தேவையாகும். ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்கு யோக சக்தி தேவையாகும். யோக சக்தியின் மூலம் அனைத்தும் இலகுவாகுகிறது. உங்களால் சில செயல்களைச் செய்ய முடியாதிருந்தால், உங்களுக்குச் சக்தி இல்லை, நீங்கள் யோகம் செய்யவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். சில சந்தர்ப்பங்களில் பாபாவும் உதவுகின்றார். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் இடம்பெறுகின்றன. நாங்கள் இதனைப் புரிந்து கொள்கின்றோம். வேறு எவரும் நாடகத்தைப் புரிந்து கொள்வதில்லை. விநாடிக்கு விநாடி, ஒவ்வொரு விநாடியும் தொடர்ந்தும் கடந்து செல்;கிறது. நாங்கள் ஸ்ரீமத்திற்கேற்;ப செயற்படுகின்றோம். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், எவ்வாறு மேன்மையானவர்கள் ஆகுவீர்கள்? அனைவருமே ஒரேமாதிரி ஆக முடியாது. அம்மக்கள் தாங்கள் அனைவரும் ஒன்றாகுவோம் என்று நினைக்கிறார்கள். ஒன்றாகுதல் என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரி;ந்துகொள்வதில்லை. அவர்கள் எதில் ஒன்றாக வேண்டும்? அவர்கள் அனைவரும் ஒரே தந்தை ஆக வேண்டுமா அல்லது அவர்கள் அனைவரும் ஒரே சகோதரர் ஆக வேண்டுமா? தாங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆக வேண்டும் என்று கூறியிருப்பின், அது நல்லது. ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், நாங்கள் உண்மையில் ஒன்றாக முடியும். நீங்கள் அனைவரும் ஒரேயொரு வழிகாட்டலையே பின்பற்றுகின்றீர்கள். ஒரேயொருவரே உங்கள் தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்றாதவர்களால் மேன்மையானவர்களாக ஆக இயலாதுள்ளது. நீங்கள் ஸ்ரீமத்தை சற்றேனும் பின்பற்றரிருந்தால், நீங்கள் முழுமையாக முடிவடைந்து விடுவீர்கள். ஓர் ஓட்;டப்பந்தயத்தில், அவர்கள் தகுதியானவர்களை மாத்திரமே சேர்த்துக் கொள்வார்கள். பெரிய ஓட்டப்பந்தயமாயின், அவர்கள் மிகவும் சிறந்த முதற்தரமான குதிரைகளையே வைத்திருப்பார்கள், ஏனெனில் அவர்கள் பெரும் அதிர்ஷ்ட இலாபத்தைப் பந்தயமாக வைக்கிறார்கள். இதுவும் ஒரு குதிரைப் பந்தயமே. அவர்கள் ஹ{சைனின் குதிரையைப் பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் யுத்தகளத்தில் ஹ{சைனை ஒரு குதிரையில் காட்டியுள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இரட்டை அகிம்சைவாதிகள் ஆவீர்கள். காமம் என்ற வன்முறையே முதல் இலக்கமாகும். எவரும் இவ்விதமான வன்முறையைப் பற்றி அறியார்;. சந்நியாசிகளுமே அதனை அவ்வாறு கருதுவதில்லை. அவர்கள் அதனை ஒரு விகாரம் என்றே கூறுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. இதுவே உங்களுக்கு அதன் ஆரம்பத்திலிருந்து மத்தியினூடாக அதன் இறுதிவரை துன்பத்தை விளைவிக்கின்றது. இதுவே இல்லறப்பாதைக்கான உங்கள் இராஜயோகம் என்பதையும், அவர்களுடையது ஹத்தயோகம் என்பதையும் நீங்கள் அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அவர்கள் சங்கராச்சாரியாரிடமிருந்து ஹத்தயோகத்தைக் கற்கின்றார்கள். நாங்கள் ஆசிரியரான சிவனிடமிருந்து இராஜயோகத்தைக் கற்கின்றோம். நீங்கள் அவர்களுக்குச் சரியான நேரத்தில் இவ்விடயங்களை கூற வேண்டும். ‘தேவர்கள் 84 பிறவிகளை எடுத்தால், கிறிஸ்தவர்கள் எத்தனை பிறவிகள் எடுப்பார்;கள்?’ என்று எவராயினும் உங்களிடம் வினவினால் அவர்களிடம் கூறுங்கள்: நீங்களே அதனைக் கணக்கிட முடியும். 5000 வருடங்களில் 84 பிறவிகள் இருக்கின்றன. கிறிஸ்து வந்து 2000 வருடங்கள் ஆகிவிட்டன. இப்பொழுது அவர்கள் சராசரியாக எத்தனை பிறவிகளை எடுப்பார்;கள் எனக் கணக்கிடுங்கள். அவர்கள் ஒருவேளை 30 முதல் 32 பிறவிகளை எடுப்பார்கள். இது தெளிவானது. அதிகளவு சந்தோஷத்தைக் காண்பவர்களே அதிகளவு துன்பத்தையும் காண்பார்கள். அம்மக்கள் குறைந்தளவு சந்தோஷத்தைக் காண்பதனால், குறைந்தளவு துன்பத்தையே பெறுகிறார்;கள். நீங்கள் சராசரியைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். தாமதமாக வருகின்றவர்கள் குறைந்தளவு பிறவிகளையே பெறுகின்றார்கள். புத்தரும் ஏபிரகாமும் எத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள் என்றும் நீங்கள் கணக்கிட்டுப் பார்க்க முடியும். ஒருவேளை, ஓரிரு பிறவிகளின் வித்தியாசம் இருக்கலாம். ஆகவே, இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றி நீங்கள் ஞானக்கடலைக் கடைய வேண்டும். எவரும் எங்களிடம் வினவினால், நாங்கள் எதனை விளங்கப்படுத்த வேண்டும்? அவர்களிடம் நீங்கள் கூற வேண்டும்: எல்லாவற்றுக்கும் முதலில், நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். குறைந்தபட்சம் தந்தையை நினைவு செய்யுங்கள்! நீங்கள் எவ்வளவு பிறவிகளைப் பெறவுள்ளீர்களோ, அத்தனை பிறவிகளையே பெறுவீர்கள். குறைந்தபட்சம் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுங்கள். நீங்கள் இதனை மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். இதற்கே முயற்சி தேவையாகும். முயற்சி செய்வதனால் நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுவீர்கள். ஒரு பரந்த, எல்லையற்ற புத்தியே தேவைப்படுகிறது. பாபாவின் மீதும், பாபாவின் செல்வத்தின் மீதும் அதிகளவு அன்பு இருக்க வேண்டும். சிலர் முற்றிலும் இச் செல்வத்தைப் பெறுவதில்லை. ஓ! குறைந்தபட்சம் ஞான இரத்தினங்களைக் கிரகியுங்கள்! அவர்கள் கூறுகிறார்கள்: நான் என்ன செய்வது? என்னால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களால் புரிந்துகொள்ள முடியாதுவிட்டால், அது உங்கள் விதியாகும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. எவரையும் வெறுக்காதீர்கள். அனைவருடனும் மிகவும் இனிமையாக இருங்கள். ஞானத்திலும் யோகத்திலும் விரைந்தோடி, தந்தையின் கழுத்து மாலை ஆகுங்கள்.2. உறக்கத்தை வென்றவர் ஆகுங்கள். அதிகாலையில் விழித்தெழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். நீங்கள் செவிமடுக்கின்ற ஞானத்தைக் கடைகின்ற பழக்கத்தைப் வளர்த்துக் கொள்ளுங்கள்;.
ஆசீர்வாதம்:
வழிகாட்டல்களுக்கு ஏற்ப, உங்கள் புத்தியை மேன்மையானதொரு ஸ்திதியில் ஸ்திரப்படுத்தி ஓர் மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுவீர்களாக.சில குழந்தைகள் யோகத்தில் அமரும் போது, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுவதற்கு பதிலாக, அவர்கள் சேவையை பற்றி சிந்திக்கிறார்கள். எவ்வாறாயினும், அது அவ்வாறாக இருக்கக் கூடாது, ஏனெனில், இறுதி கணத்தில் சரீரமற்றவர் ஆகுவதற்குப் பதிலாக நீங்கள் சேவையை இட்டு எண்ணங்களை கொண்டிருந்தால், நீங்கள் ஒரு விநாடிக்கான பரீட்சையில் தோல்வி அடைவீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் வேறு எதனையும் சிந்திக்காது ஆனால் தந்தையை மட்டுமே நினைவுசெய்ய வேண்டும். அசரீரியாகவும், விகாரமற்றவராகவும், அகங்காரமற்றவராகவுமே இருக்க வேண்டும். சேவையை பற்றி நினைவுசெய்வதால், நீங்கள் பௌதீக உணர்வுக்குள் வருகிறீர்கள். ஆகையால் ஒரு குறிப்பிட்ட ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்தும் போது, அதில் மட்டுமே ஸ்திரமாக இருப்பதை பயிற்சி செய்யுங்கள். அப்பொழுதே நீங்கள் கட்டுப்படுத்தும் மற்றும் ஆட்சிசெய்யும் சக்திகளையுடைய மாஸ்டர் சர்வசக்திவான் என அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
ஒரே சக்தியும் ஒரே ஆதாரத்தையும் கொண்டிருப்பதே எந்த சூழ்நிலையையும் கடந்து செல்வதற்கான இலகுவான வழியாகும்.