18.01.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நம்பிக்கைக்குரியவராகி, நீங்கள் எந்தளவிற்கு சம்பூரணம் ஆகியுள்ளீர்கள் என நேர்மையுடன் உங்களை சோதித்துப் பாருங்கள். சம்பூரணமானவர் ஆகுவதற்கு நீங்கள் தொடர்ந்தும் சரீர உணர்வின் பலவீனங்களை அகற்றிடுங்கள்.

பாடல்:
எதிர்காலத்திற்காக குழந்தைகளாகிய நீங்கள் தந்தையுடன் செய்து கொண்டிருக்கும் பேரம் என்ன? அந்த பேரத்தினால் சங்கமயுகத்தில் உங்களுக்கான நன்மை என்ன?

பதில்:
உங்கள் சரீரம் உட்பட உங்களிடமுள்ள அனைத்தும் வைக்கோற் பெறுமதியானவையே, நீங்கள் அவை அனைத்தையும் அர்ப்பணித்து விட்டு கூறுகிறீர்கள்: பாபா, உங்களிடமுள்ள அனைத்தையும் நாங்கள் அங்கே (எதிர்காலத்தில்) பெற்றுக் கொள்வோம். இதுவே அனைத்திலும் சிறந்த பேரமாகும். இதனைச் செய்வதனால், உங்களுடைய அனைத்தும் பாபாவின் களஞ்சியத்தில் பாதுகாப்பாக இருப்பதால், நீங்கள் இன்னமும் ஒரு குறுகிய காலத்திற்கே இங்கே இருப்பீர்கள் என்றும் அதன் பின்னர் உங்கள் இராச்சியத்தில் இருப்பீர்கள் என்ற அளவற்ற சந்தோஷத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் எவரும் வினவினால், அவரிடம் கூறுங்கள்: ஆஹா! எங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியை பெறுகிறோம். நாங்கள் இப்பொழுது என்றென்றும் ஆரோக்கியமாகவும் என்றென்றும் செல்வந்தராகவும் ஆகிக் கொண்டிருக்கின்றோம்.

ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இங்கே வந்து அமரும் போது, ஆத்ம உணர்வுடன், தந்தையின் நினைவில் அமர்ந்திருங்கள். நீங்கள் இக் கவனத்தை என்றென்றும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உயிருடன் இருக்கும் போது, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் அவரை நினைவுசெய்யாத போது, பிறவிப் பாவங்கள் அழிய மாட்டாது. படைப்பவரின் சுய தரிசன சக்கரமும் மற்றும் படைப்பின் ஆரம்பம் மத்தி இறுதி உங்கள் புத்திகளில் சுழன்றுக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் வெளிச்ச வீடுகள், அப்படித்தானே? ஒரு கண்ணில், நீங்கள் அமைதி தாமத்தையும் இன்னொரு கண்ணில் சந்தோஷதாமத்தையும் கொண்டிருங்கள். அமர்ந்திருக்கும் போதும், நிற்கும் போதும், நடமாடித் திரியும் போதும், உங்களை ஒரு வெளிச்சவீடாகக் கருதுங்கள். உங்களை ஒரு வெளிச்ச வீடாகக் கருதுவதனால், நீங்கள் உங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்கிறீர்கள். பாபா உங்களுக்கு பல வழிமுறைகளை காட்;டுகிறார். நீங்கள் வீதியில் ஒரு நபரை சந்தித்தால், அவரிடம் கூறுங்கள்: இது துன்ப உலகம். உங்களுக்கு அமைதிதாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் செல்ல விருப்பமா? அவருக்கு ஒரு சமிக்சையை கொடுங்கள். ஒரு வெளிச்ச வீடும் சமிக்சை கொடுக்கும். அது பாதையை காட்டுகிறது. நீங்களும்; சந்தோஷதாமத்திற்கும் அமைதிதாமிக்கும் பாதையை காட்ட வேண்டும். இரவு பகலாக, இந்த ஓர் அக்கறையை மாத்திரமே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். யோகசக்தியுடன் சிறிதளவு நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தினாலும், அம்பு விரைவில் இலக்கைத் தாக்கும். அம்பினால் தாக்கப்பட்டவர் விரைவில் காயப்படுவார். முதலில், அவர்கள் தாக்கப்பட்டு காயப்படுவார்கள், அதன் பின்னர் பாபாவிற்கு உரியவர்கள் ஆகுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அன்புடன் நினைவுசெய்வதால், தந்தை ஈர்க்கப்படுகிறார். சிலர் அவரை நினைவுசெய்வதே இல்லை என்பதால் தந்தை கருணை கொண்டிருக்கிறார். இருப்பினும் அவர் கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, தொடர்ந்தும் முன்னேறுங்கள். முயற்சி செய்து முதல் இலக்கத்தைக் கோருங்கள். தூய்மையாக்குபவர், சற்கதி அருள்பவர், ஒரேயொரு தந்தை மாத்திரமே, அந்தத் தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். தந்தையை மாத்திரம் அல்ல, நீங்கள் இனிய வீட்டையும் நினைவுசெய்ய வேண்டும். இனிய வீடு மட்டுமல்ல, உங்களுக்;கு சௌபாக்கியமும் தேவை என்பதால் சுவர்க்க பூமியையும் நினைவுசெய்யுங்கள்.

தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களை சம்பூர்ணமாக ஆக்கவே வந்துள்ளார். எனவே, நம்பிக்கைக்கு உரியவராகி, உங்களை நேர்மையாக சோதியுங்கள்: நான் எந்தளவிற்கு சம்பூர்ணமடைந்துள்ளேன்? தந்தை தொடர்ந்தும் நீங்கள் சம்பூரணம் ஆகுவதற்கான வழியை காட்டுகின்றார். பிரதானமான பலவீனம் சரீர உணர்வாகும். சரீர உணர்வு உங்கள் ஸ்திதியில் நீங்கள் முன்னேறுவதற்கு அனுமதிப்பதில்லை என்பதால் உங்கள் சரீரங்களையும் நீங்கள் மறக்க வேண்டும். தந்தைக்கு குழந்தைகள் மீது அதிகளவு அன்பு உள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். எனவே, நீங்கள் அவ்வாறே மகிழ்ச்சி அடைய வேண்டும். தந்தையை நினைவு செய்வதனால் உங்களுக்கு சந்தோஷம் பொங்கி எழ வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களுடைய சந்தோஷ பாதரசம் உயர்வாக இருக்க வேண்டும். நினைவுயாத்திரையினால் பாதரசம் அதிகரிக்கும். அது படிப்படியாக அதிகரிக்கும். வெற்றியும் தோல்வியும் இருப்பதன் மூலம், உங்கள் முயற்சிக்கு ஏற்ப, உங்கள் அந்தஸ்தை முன்னைய கல்பத்திற்கு ஏற்ப நீங்கள் கோருவீர்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராக பாப்தாதா தொடர்ந்தும் குழந்தைகளின் ஸ்திதியை பார்ப்பார். அத்துடன் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துவார். பாப், தாதா இருவருக்குமே உங்கள் மீது அதிகளவு அன்பு உள்ளது, ஏனெனில், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் மிக அழகாக சேவை செய்கிறீர்கள், அதனை நீங்கள் மிகுந்த அன்புடன் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், குழந்தைகள் ஸ்ரீமத்தைப் பின்பற்றாத போது, தந்தையால் என்ன செய்ய முடியும்? தந்தை அதிகளவு கருணை கொள்கிறார். மாயை உங்களை தோற்கடிக்கின்றாள், தந்தை உங்களை மீண்டும் எழச் செய்கின்றார். அனைவரிலும் அதி இனிமையிலும் இனிமையானவர் அந்தத் தந்தை ஆவார். கள்ளங்கபடமற்ற கடவுளான, சிவன் எவ்வளவு இனிமையானவரும் எவ்வளவு அழகானவரும் ஆவார்! கள்ளங்கபடமற்றவர் என்ற பெயர் ஒரேயொரு சிவனுக்கு மட்டுமே ஆகும்.

இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது மிக மிக பெறுமதிவாய்ந்த வைரங்கள் ஆகுகிறீர்கள். நகைவியாபாரிகள் எப்பொழுதும் தமது பெறுமதியான வைரங்களை, வங்கியில் தமது பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதுண்டு. பிராமண குழந்தைகளாகிய நீங்களும் பெறுமதியானவர்கள். நீங்கள் சிவபாபாவின் வங்கியில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது பாபாவின் பெட்டகத்தில் இருப்பதுடன் அமரத்துவம் ஆகுகிறீர்கள். நீங்கள் மரணத்தை வென்றவர்களாகவும் ஆகுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் சிவபாபாவிற்கு உரியவர்கள் என்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள், இருப்பினும் நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். உலகிலுள்ள மக்களிடம் எவ்வளவு செல்வம் போன்றன இருந்தாலும், அவை அனைத்தும் முடிவடைய உள்ளன. எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது எதுவும் இல்லை. அந்த சரீரங்கள் கூட இல்லை. அவற்றையும் நீங்கள் தந்தையிடம் கொடுங்கள். ஒன்றுமே இல்லாதவர்களுக்கு, அனைத்தும் உள்ளதைப் போன்றாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையோடு எதிர்கால புதிய உலகிற்காக ஒரு பேரம் பேசியுள்ளீர்கள். நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எங்களிடம் வைக்கோற் பெறுமதியாக உள்ளதையும், அந்தச் சரீரங்களையும், அவை அனைத்தையும் உங்களிடம் கொடுக்கின்றோம், அதன் பின்னர் நாங்கள் அங்கே இருக்கும் போது உங்களிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்வோம். எனவே, நீங்கள் பாதுகாப்பாக உள்ளதை போன்றிருக்கின்றது. இப்பொழுது அனைத்தும் பாபாவின் பொக்கிஷ-களஞ்சியத்தில் பாதுகாப்பாக உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இன்னமும் சிறிது காலமே உள்ளது, அதன் பின்னர் நாங்கள் எங்கள் இராச்சியத்திற்குச் செல்வோம்; என்ற சந்தோஷம் உங்களுக்குள் இருக்க வேண்டும். எவராவது உங்களிடம் வினவினால், ஆஹா! நாங்கள் எங்கள் எல்லையற்ற சந்தோஷத்தை எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம். நாங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும், செல்வந்தராகவும் ஆகுகின்றோம். எங்கள் இதயத்திலுள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றது. இந்தத் தந்தை மிகவும் அழகானவரும் தூய்மையானவரும் ஆவார். அவர் ஆத்மாக்களை தன்னைப் போன்றே தூய்மையாக்குகிறார். தந்தையை நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு நினைவுசெய்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அழகானவர் ஆகுவீர்கள். தேவர்கள் மிகவும் அழகானவர்கள், இப்பொழுதும் அவர்களின் உயிரற்ற விக்கிரங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன. எனவே குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு அழகாக ஆகவேண்டும். நீங்கள் எந்த சரீரதாரியையோ அல்லது வேறு எதனையுமே இறுதியில் நினைவுசெய்யக் கூடாது. பாபா, நாங்கள் உங்களிடமிருந்து அனைத்தையும் பெற்று விட்டோம்.

இனிய குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்குள் சத்தியம் செய்ய வேண்டும்: எனது மனம் உறுத்தும் வகையில் நான் எந்த பாவகாரியங்களையும் செய்ய மாட்டேன். ஆகையால், இயன்றளவு, தொடர்ந்தும் சீராகுங்கள். உயர்ந்த அந்தஸ்தைக் கோர முயற்சி செய்யுங்கள். ஆம், அனைவரும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். நகைகளும் வரிசைக்கிரமமாக உள்ளன. சிலவற்றில் அதிகளவு குறைபாடும், சிலவோ முற்றிலும் தூய்மையாகவும் உள்ளன. தந்தையும் ஒரு நகைவியாபாரியே, அப்படித்தானே? ஆகையால், தந்தை ஒவ்வொரு நகையையும் மிகவும் கவனமாக பரீட்சிக்க வேண்டும். இவர் எந்த நகை ஆவார், அவரிடம் என்ன குறைபாடு உள்ளது? தந்தை மிக நல்ல, தூய நகைகளை அதிளவு அன்புடன் பார்க்கின்றார். மிக நன்று, தூய நகைகள் தங்கப் பெட்டியில் வைக்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு தாம் என்ன வகையான நகை என்பதும், தம்மிடம் என்ன குறைபாடு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் இப்பொழுது கூறுகிறீர்கள்: ஆஹா! சற்குரு, ஆஹா! நீங்கள் இப்பாதையை எங்களுக்குக் காட்டியிருக்கிறீர்கள். ஆஹா பாக்கியமே! ஆஹா நாடகம்! ஆஹா! உங்கள் இதய ஆழத்திலிருந்து நீங்கள் கூறுகிறீர்கள்: நன்றி பாபா, எங்களிடமிருந்து நீங்கள் இரு கைப்பிடி அளவு அரிசியை பெற்றுக் கொண்டு பாதுகாத்து, நூறு மடங்காக எதிர்காலத்தில் கொடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், இதிலும், குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் ஞான செல்வம் என்ற பொக்கிஷத்தை அதிகளவாகப் பெறுகிறீர்கள். ஆகையால் நீங்கள் அளவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் இதயம் எந்தளவிற்கு தூய்மையாக உள்ளதோ, அந்தளவிற்கு நீங்கள் ஏனையோரை தூய்மை ஆக்குவீர்கள். யோக ஸ்திதியின் ஊடாக மாத்திரமே, உங்கள் இதயம் தூய்மை ஆகுகின்றது. குழந்தைகளாகிய உங்களுக்கு நீங்கள் ஒரு யோகி ஆகி, பிறரையும் யோகி ஆக்க வேண்டும் என்ற ஆழமான ஆர்வம் இருக்க வேண்டும். உங்களுக்கு உங்கள் சரீரத்தின் மீதும் சரீர உணர்வின் மீதும் பற்று இருக்குமாயின், உங்கள் ஸ்திதி மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம உணர்வுடைய குழந்தைகளே, உண்மையான வைரங்கள் ஆகுகிறார்கள், எனவே இயன்றளவு ஆத்ம உணர்வை பயிற்சி செய்து, தந்தையை நினைவு செய்யுங்கள். பாபா என்ற வார்த்தை அனைத்திலும் அதி இனிமையானதாகும். தந்தை உங்களை மிகவும் அன்பாக தனது கண் இமைகளில் அமர்த்தி, உங்களை தன்னுடன் அழைத்துச் செல்வார். அத்தகைய தந்தையின் நினைவுடன் இருப்பதால், நீங்கள் முற்றிலும் போதை கொண்டிருக்க வேண்டும். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால், நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும், சாந்தமாகவும் ஆகுவீர்கள். தன்னை அவதூறு செய்பவர்களையும் தந்தை ஈடேற்றுவதைப் போன்று, அவ்வாறே நீங்களும் தந்தையை பின்பற்றுங்கள். சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நாடகத்தின் இரகசியங்களை அறிவீர்கள். தந்தை உங்களுக்கு அசரீர, சூட்சும, பௌதீக உலகங்களின் செய்திகளை கொடுக்கின்றார். ஆத்மா கூறுகின்றார்: நாங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்வதற்கு ஆயத்தம் ஆகுகின்றோம். நாங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு தகுதியானவர் ஆகுகின்றோம். நாங்கள் எங்களுக்கும் பிறருக்கும் நன்மை செய்வோம். அச்சா. தந்தை இனிய குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: தந்தை துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர் என்பதால், குழந்தைகளாகிய நீங்களும் அனைவருக்கும் சந்தோஷத்தை அருள வேண்டும். நீங்கள் தந்தையின் வலது கரங்கள் ஆக வேண்டும். அத்தகைய குழந்தைகளின் மீது தந்தைக்கு அன்பு உள்ளது. வலது கரம் மங்களகரமான பணிகளை செய்வதற்கு பயன்படுகின்றது. எனவே, தந்தை கூறுகின்றார்: அனைத்திலும் தர்மம் காத்திடுங்கள். ஒரேயொரு தந்தையை நினைவு செய்தால், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். இப் பழைய உலகின் மீதுள்ள பற்றை அகற்றுங்கள். இது ஓர் இடுகாடாகும். உங்கள் வியாபாரம், உங்கள் குழந்தைகளை நினைத்துக் கொண்டு நீங்கள் மரணித்தால், நீங்கள் அனைத்தையும் அநியாயமாக இழப்பீர்கள். சிவபாபாவை நினைவுசெய்வதனால், நீங்கள் அதிகளவு செழிப்படைவீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகினால், அனைத்தும் முற்றிலும் பாழாகுகிறது. ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதனால், நீங்கள் மிகவும் செழிப்படைகிறீர்கள். நீங்கள் செல்வத்தின் மீது அதிகளவு பேராசை கொள்ளக்கூடாது. அதனைப் பற்றி கவலைப்படுவதால், நீங்கள் சிவபாபாவையும் மறந்து விடுவீர்கள். நீங்கள் தந்தையிடம் அனைத்தையும் எந்தளவிற்கு அர்ப்பணிக்கிறீர்கள் என்பதையும், எந்தளவிற்கு நீங்கள் அவரின் ஸ்ரீமத்தை பின்பற்றுகிறீர்கள் என்பதையும் பாபா பார்க்கின்றார். ஆரம்பகாலத்தில், தந்தையுமே நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகி, அதனை செய்து காட்டினார். அவர் அனைத்தையும் அர்ப்பணித்து தான் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகினார். நான் அனைத்தையும் கடவுளின் பணிக்கே பயன்படுத்த வேண்டும். நீங்கள் என்றுமே தடைகளைக் கண்டு பயப்படக்கூடாது. இயன்றளவு உங்களுடைய அனைத்தையும் சேவைக்காக, தகுதிவாய்ந்த முறையில்; பயன்படுத்துங்கள். அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு, ஒரு நம்பிக்கை பொறுப்பாளராக இருங்கள்.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தந்தையும் தாயுமான பாப்தாதாவிடமிருந்து காலை வந்தனங்கள். ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

அவ்யக்த மேன்மையான வாசகங்கள் - 1977

உங்களுடைய சப்தத்திற்கு அப்பாற்பட்ட வடிவத்தில் உங்களால் ஸ்திரமாக நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்கின்ற அனுபவத்தைக் கொண்டிருக்க முடிகின்றதா? உங்களால் சப்தத்திற்குள் வருகின்ற அனுபவத்தில் நீண்டநேரத்திற்கு நிலைத்திருக்க முடிகின்றதா அல்லது சப்தத்திற்கு அப்பாலுள்ள ஸ்திதியின் அனுபவத்தில் நீண்ட நேரத்திற்கு நிலைத்திருக்க முடிகின்றதா? உங்கள் இறுதி ஸ்திதியை அதாவது கர்மாதீத் ஸ்திதியை நீங்கள் எந்தளவிற்கு நெருங்கி வருகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதிகளவு சப்தத்திற்கு அப்பாலுள்ள மௌன ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருக்க விரும்புவீர்கள். இந்த ஸ்திதியில் நிலைத்திருக்கும் போது, உங்களால் சதா அதீந்திரிய சுக அனுபவத்தைப் பெற முடியும். இந்த அதீந்திரிய சுக ஸ்திதியில் உங்களால் ஏனைய ஆத்மாக்களை இலகுவாக வரவழைக்க முடியும். இந்த சக்திமிக்க ஸ்திதியே உலக உபகாரி ஸ்திதியாகும். இக்காலத்தில், அறிவியலின் உதவியுடன் உங்களால் பொருட்களை மிக அருகாமையில் அனுபவம் செய்ய முடிவதைப் போன்றே அதாவது தொலைவில் கேட்கும் சப்தத்தை தொலைபேசியினூடாக அருகாமையில் கேட்கவும், தொலைவில் இடம்பெறுகின்ற ஒரு காட்சியை தொலைகாட்சியினூடாக மிக அருகாமையில் மிகத் தெளிவாகவும் பார்க்க முடிகின்றது. அவ்வாறே, ஆத்மாக்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், மௌனத்தினூடாக உங்களால், செய்தியை அவர்களிடம் கொண்டு செல்ல முடிகின்றதா? அவர்கள் பௌதிக வடிவில் எவரோ வந்து தமக்கு செய்தியை கொடுத்த அனுபவத்தை பெறட்டும். தொலைவில் அமர்ந்திருக்கும் போதும், அவர்கள் மேன்மையான ஆத்மாக்களான உங்கள் காட்சியையும் கடவுளின் தெய்வீகச் செயற்பாடுகளையும் தமக்கு முன்னால் இடம்பெறுகின்ற அனுபவத்தைப் பெறுவார்கள். நீங்கள் எண்ணங்களினூடாகத் தென்படுவீர்கள், அதாவது எண்ணங்களினூடாக சப்தத்திற்கு அப்பாலிருந்து வெற்றியீட்டுகின்ற பாகத்தை நடிப்பீர்கள். எவ்வாறாயினும், மௌன வடிவத்தில், உங்களால் அதிகபட்ச நேரம் ஸ்திரமாக இருப்பதே இந்த வெற்றிக்கான வழியாகும். ஆகையாலேயே கூறப்படுகின்றது: மௌனம் பொன்னானது. இதுவே சத்தியயுக ஸ்திதியாகும்.

இந்த ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருப்பதால், உங்களால் குறைந்தளவு செலவில், அதிகளவில் மகிமைப்படுத்த முடியும். உங்கள் பொக்கிஷங்களான நேரம், பௌதீக வளங்கள் ஆகியவற்றை குறைந்தளவு செலவழித்து, அதிகளவு பெறுபேறை கொண்டிருக்க முடியும். இதற்கு நீங்கள் ஒரேயொரு வார்த்தையை நினைவுசெய்தால் போதும், அந்த ஒரு வார்த்தை என்ன? சமநிலை. உங்களுடைய ஒவ்வொரு செயலிலும், எண்ணத்திலும், வார்த்தையிலும் உங்கள் உறவுமுறைகள் தொடர்புகளிலும் சமநிலை இருக்கட்டும். அப்பொழுது சாதாரணமாக இருப்பதற்குப் பதிலாக, உங்கள் வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள், உறவுமுறைகள் தொடர்புகள் அலெகீகமாக பார்க்கப்படும். அதாவது, அவை அதிசயமாக பார்க்கப்படும். அனைவரது உதடுகளிலும், மனதிலும் இது அதிசயம் என்ற வார்த்தையே வெளிப்படும். நேரத்திற்கு ஏற்ப, உங்களுடைய முயற்சியின் வேகமும், உலக சேவையின் வேகமும் மிகவும் விரைவாக இருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் உபகாரி என அழைக்கப்படுவீர்கள்.

உலகில் உள்ள அதிகளவு ஆத்மாக்கள் விசேடமாக நேசிக்கப்படுகின்ற ஆத்மாக்களினதும், தந்தையினதும் வெளிப்பாட்டை அழைக்கிறார்கள். அந்தளவிற்கு விசேட ஆத்மாக்கள் அந்த ஆத்மாக்களை வரவழைப்பதில்லை. இதற்கான காரணம் என்ன? நீங்கள் உங்களுடைய சுபாவங்கள், சம்ஸ்காரங்கள் என்ற உங்கள் சொந்த எல்லைக்குட்ட இல்லறத்திற்காக, நீங்கள் அதிகளவு நேரத்தை எடுக்கிறீர்கள். ஞானமற்ற ஆத்மாக்களுக்கு, ஞானத்தை செவிமடுக்க நேரம் இல்லாததைப் போன்று, பல பிராமணர்களுக்கு இந்த சக்திமிக்க ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருக்க நேரம் இல்லாதுள்ளது. ஆகையாலேயே நீங்கள் எரிமலையாக ஆகுவதற்கான தேவை உள்ளது.

அனைவரதும் இல்லறத்தைக் காணும் போது, பாப்தாதா புன்னகைக்கின்றார், ஏனெனில், அனைவரும் மிகவும் மும்முரமாக இருக்கிறார்கள். நீங்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறீர்கள், அப்படித்தானே? உங்களுடைய ஆதி ஸ்திதியில், நீங்கள் சதா ஓய்வாக இருப்பீர்கள். நீங்கள் வெற்றி ஈட்டுவீர்கள், அத்துடன் ஓய்வாகவும் இருப்பீர்கள். அறிவியல் சாதனங்கள் விண்வெளிக்குச் செல்லும் போது, அதனை பூமியில் இருந்து கட்டுப்படுத்த முடிவதைப் போன்றும், அவ்வாறே விண்வெளி கப்பல்களை தேவையான வகையில் திசைதிருப்ப முடிவதைப் போன்றும், மௌனசக்தியின் சொரூபங்களான உங்களால், உங்கள் மேன்மையான எண்ணங்களின் அடிப்படையில், சரீர உலகில் நீங்கள் விரும்புகின்ற எந்த சேவையினாலும் எந்த ஆத்மாக்களுக்கும் சேவை செய்ய முடியாதா? எவ்வாறாயினும், உங்கள் இல்லறத்திற்கு அப்பால் நீங்கள் இருக்க வேண்டும். நீங்கள் மேலே நிலைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு பொக்கிஷங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது, அவை அனைத்தையும் பயன்படுத்தி, உங்களுக்காக மட்டுமல்லாது, ஆனால் முழு உலகிற்காகவும் பயன்படுத்துங்கள். நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்களா? பௌதீக சாதனங்களினால் சப்தத்தினூடாக சேவை செய்வதிலும், சூட்சுமமாக சப்தத்திற்கு அப்பால் மகத்துவத்துடன் மேன்மையான எண்ணங்களின் சக்தியினால் சேவை செய்வதிலும் ஒரு சமநிலையை காட்டுங்கள். அப்பொழுது விநாச முரசு கொட்டும். உங்களுக்குப் புரிகின்றதா? நீங்கள் பல திட்டங்களை வகுக்கிறீர்கள், பாப்தாதாவும் தனது திட்டங்களை பகிர்ந்து கொள்கிறார்;. சரியான சமநிலை இல்லாததால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஒரு விசேட பணியை மேற்கொண்ட பின்னர், நீங்கள் பொதுவாக விசேடமாக ஓய்வெடுக்கிறீர்கள். எவ்வாறாயினும், இறுதி திட்டத்தில், நீங்கள் களைபற்ற ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். அச்சா.

உலக நன்மைக்காக தமது சகல சக்திகளையும் பயன்படுத்துகின்ற ஆத்மாக்களுக்கும், தமது எண்ணங்களினால் வெற்றியின் சொரூபமான ஆத்மாக்களுக்கும், தமது இல்லறத்திலிருந்து விடுபட்டிருப்பவர்களுக்கும், சதா தமது மௌன ஸ்திதியிலில் இருக்கின்ற மேன்மையான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
மாஸ்டர் அமைதியை அருள்பவர்களாக இருந்து, மௌனசக்தியினால் புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு கருவிகள் ஆகுவீர்களாக.

மௌனசக்தியை சேமிப்பதற்கு, உங்கள் சரீரத்திற்கு அப்பாலிருந்து சரீரமற்றவர் ஆகுங்கள். இந்த மௌனசக்தி மிகவும் சிறந்த சக்தியாகும் - இதனைக் கொண்டே புது உலகம் உருவாக்கப்படுகின்றது. சப்தத்திற்கு அப்பால், தமது மௌன வடிவத்தில் ஸ்திரமாக இருப்பவர்களால் ஸ்தாபனை பணியை மேற்கொள்ள முடியும். ஆகையால், அமைதியை அருள்பவராக அதாவது அமைதியின் சொரூபமாகவிருந்து, அமைதியற்ற ஆத்மாக்களுக்கு அமைதிக் கதிர்களை அருளுங்கள். குறிப்பாக மௌனசக்தியை அதிகரியுங்கள். இதுவே அனைத்திலும் மிகப் பெரிய தானமாகும். இதுவே அதிகளவு விரும்பப்படுகின்ற சக்திமிக்க விடயமாகும்.

சுலோகம்:
ஒவ்வொரு ஆத்மாக்களின் மீதும் மற்றும் சடப்பொருட்;களின் மீதும் நல்லாசிகள்
கொண்டிருப்பதே உலக உபகாரியாக இருப்பதாகும்.