18.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சந்தோஷத்தைக் கொடுக்கின்ற ஒரே தந்தையை நினைவு செய்யுங்கள். இக்குறுகிய காலத்தில் யோக சக்தியைச் சேமித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இறுதியில் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கேள்வி:
எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்ட குழந்தைகளாகிய நீங்கள் சதா என்ன விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும்?

பதில்:
நீங்கள் சதா கொண்டிருக்க வேண்டிய விழிப்புணர்வு: இச்சரீரம் எனது அழுக்கான ஆடை, நான் இப்பொழுது அதை நீக்கி, வீடு திரும்ப வேண்டும். வேறு எதையுமன்றி, தந்தையையும், ஆஸ்தியையும் மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதுவே எல்லையற்ற விருப்பமின்மையாகும். செயல்களைச் செய்யும்போது, உங்கள் தலை மீதுள்ள பாவச் சுமை அகற்றப்பட்டு ஆத்மா தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகும் வகையில் நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஓம் சாந்தி.
தந்தை தினமும் குழந்தைகளாகிய உங்களுக்கு மிக இலகுவான விடயங்களை விளங்கப் படுத்துகின்றார். இது இறை பல்கலைக்கழகம் ஆகும். கடவுள் பேசுகின்றார் என கீதை கூறுகின்றது. அனைவரதும் தந்தையான கடவுள் ஒருவரே. வேறு எவரும் கடவுளாக இருக்க முடியாது. ஆம், அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகளாக இருக்க முடியும். தந்தை நிச்சயமாக சுவர்க்கம் என்ற புதிய உலகை ஸ்தாபிக்கின்றார் என்பது உங்களின் புத்தியில் புகவேண்டும். நாங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து சுவர்க்கம் என்ற ஆஸ்தியைப் பெற்றுள்ளோம். சிவ ஜெயந்தி பாரதத்தில் மாத்திரமே நினைவுகூரப்படுகின்றது. எவ்வாறாயினும், தந்தை மாத்திரமே வந்து, எவ்வாறு சிவஜெயந்தி நிகழ்கின்றது என விளங்கப்படுத்துகின்றார். தந்தை குழந்தைகளைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக்கி, அதாவது அவர்களின் ஆஸ்தியை அவர்களுக்குக் கொடுப்பதற்காக சங்கம யுகத்தில் வருகின்றார். இந்நேரத்தில் அனைவரும் இராவணனால் சபிக்கப்பட்டுள்ளனர். இதனாலேயே அனைவரும் சந்தோஷமற்றுள்ளனர். இப்பொழுது இது கலியுகத்து பழைய உலகமாகும். நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள் என்பதை எப்பொழுதும் நினைவு செய்யுங்கள். தங்களை பிரம்ம குமாரர்களாகவும், குமாரிகளாகவும் கருதுபவர்கள், தாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மா மூலம் பாட்டனாரின் ஆஸ்தியைப் பெறுவதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேறு எவரும் ஏராளமான குழந்தைகளைக் கொண்டிருக்க முடியாது. அவரே அனைவரதும் தந்தையாவார். பிரம்மாவும் ஒரு குழந்;தையே. அனைத்துக் குழந்தைகளும் பாட்டனாரிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். சத்திய யுக இராச்சியமே அவரது ஆஸ்தியாகும். எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பதால், நாங்கள் நிச்சயமாக சுவர்க்க இராச்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், எங்களிடம் சுவர்க்க இராச்சியம் இருந்ததை நாங்கள் மறந்துவிட்டோம். எவ்வாறு அசரீரியான தந்தை அதை எங்களுக்குக் கொடுக்கின்றார்? அவர் நிச்சயமாக பிரம்மா மூலமே அதைக் கொடுக்கின்றார். பாரதத்தில் அவரது இராச்சியமே இருந்தது. இப்பொழுது இது சக்கரத்தின் சங்கம யுகம் ஆகும். பிரம்மா சங்கம யுகத்தில் இருப்பதாலேயே நீங்கள் பிரம்ம குமாரர்கள், குமாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். குருட்டு நம்பிக்கை என்ற கேள்வி இருக்கக்கூடாது. இது தத்தெடுத்தல் ஆகும். நீங்கள் பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். பிரம்மா சிவபாபாவின் குழந்தையாவார். நாங்கள் மீண்டும் ஒரு தடவை சிவபாபாவிடமிருந்து சுவர்க்க இராச்சியத்தைப் பெறுகின்றோம். நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னரும் அதைப் பெற்றோம். நாங்கள் தேவ தர்மத்திற்குரியவர்களாக இருந்தோம். இறுதி வரைக்கும் விரிவாக்கம் இடம்பெறும். உதாரணமாக, கிறிஸ்து வந்தார், கிறிஸ்தவ சமயம் இன்னமும் இருப்பதுடன், அது தொடர்ந்தும் வளர்கின்றது. தாங்கள் கிறிஸ்து மூலம் கிறிஸ்தவர்களாகியிருப்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தார். அது இப்பொழுது வளர்ச்சியடைகின்றது. அனைத்தும் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்கின்றது. சத்தியயுகத்தில் நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள். அதன் பின்னர் நீங்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து சென்றீர்கள். தமோபிரதான் உலகம் நிச்சயமாக மீண்டும் சதோபிரதான் ஆகுகின்றது. புதிய உலகில் ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. பிரதான சமயங்கள் நான்கு உள்ளன. உங்களின் தர்மம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. இங்கும்கூட, நீங்கள் அந்த தர்மத்திற்குரியவர்களாகவே இருக்கின்றீர்கள். எனினும், விகாரம் நிறைந்தவர்கள் ஆகிவிட்டதால், நீங்கள் உங்களை தேவர்கள் என அழைப்பதில்லை. நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், ஆனால் நீங்கள் பாவப் பாதைக்குச் சென்றபோது தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். இதனாலேயே நீங்கள் உங்களை இந்துக்கள் என அழைத்தீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். சிவபாபாவே அதிமேலானவர். பின்னர், பிராமணர்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களின் பிராமண குலமே அனைத்திலும் அதிமேலானது. நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். எனினும், நீங்கள் பிரம்மாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதில்லை. சிவபாபா பிரம்மா மூலம் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை அறிவீர்கள். தந்தை கூறுகின்றார்: என் மூலமாக என்னை அறிந்துகொண்டதால், நீங்கள் உலகச் சக்கரத்தின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய முழு ஞானத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். என்னிடம் அந்த ஞானம் உள்ளது. நான் ஞானக்கடலும், பேரானந்தக் கடலும், தூய்மைக் கடலும் ஆவேன். நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய்மையாக இருந்து, பின்னர் நச்சுக் கடலினுள் வீழ்ந்துவிடுகின்றீர்கள். இப்பொழுது, ஞானக்கடலான தந்தை உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்குகின்றார். கங்கை நீரால் உங்களைத் தூய்மையாக்க முடியாது. மக்கள் அங்கு நீராடச் செல்கின்றார்கள், எனினும் அத் தண்ணீர் தூய்மையாக்குபவர் இல்லை. இந்த நதிகள் சத்திய யுகத்திலும் இருந்தன, அவை இப்பொழுது கலியுகத்திலும் உள்ளன. தண்ணீரில் எந்த வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் சற்கதி அருள்பவர் இராமர் ஒருவரே. அவர் மாத்திரமே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். என்றும் அவர்கள் கூறுகின்றனர். பாபா வந்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அதன் மூலம் நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகின்றீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் பக்தி, சமய நூல்கள் போன்றவை கிடையாது. நீங்கள் தந்தையிடமிருந்து நிலையான சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் கங்கைக்குச் சென்று நீராட வேண்டுமென்றோ அல்லது யாத்திரை செல்ல வேண்டுமென்றோ இல்லை. இது எந்தவொரு மனிதராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாத ஆன்மீக யாத்திரையாகும். தந்தையே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். எண்ணற்ற பௌதீகத் தந்தைமார் உள்ளனர். ஆனால், ஆன்மீகத் தந்தை ஒரே ஒருவரே உள்ளார். இதை மிக உறுதியாக நினைவு செய்யுங்கள். உங்களுக்கு எத்தனை தந்தைமார் உள்ளனர் என பாபா கேட்கும்போது, நீங்கள் குழப்பமடைந்து, பாபா என்ன கேட்கின்றாரென ஆச்சரியப்படுகின்றீர்கள். அனைவருக்கும் ஒரு தந்தையே உள்ளார். எவ்வாறு ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று தந்தைமார் இருக்க முடியும்? தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சந்தோஷமற்றிருக்கும்போது பரமாத்மாவான தந்தையை நினைவு செய்கின்றீர்கள். துன்பத்திலுள்ளபோது அவர்கள் கூறுகின்றனர்: ஓ பரம தந்தை, பரமாத்மாவே எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! எனவே, இரு தந்தையர் உள்ளனர். ஒருவர் பௌதீகத் தந்தை, மற்றையவர் நீங்களே தாயும், தந்தையும். நாங்கள் உங்களின் குழந்தைகள். உங்களின் கருணையால் பெருமளவு சந்தோஷம் ஏற்படுகின்றது. என்று புகழ் பாடப்படுகின்ற ஆன்மீகத் தந்தை. பௌதீகப் பெற்றோரிடமிருந்து அந்தளவு சந்தோஷத்தை உங்களால் பெறமுடியாது. மக்கள் துன்பத்தை அனுபவிக்கும்போது, அவர்கள் அத்தந்தையை நினைவுசெய்கின்றனர். அத்தந்தையால் மாத்திரமே அத்தகைய கேள்வியைக் கேட்கமுடியும், வேறு எவராலும் இக்கேள்வியைக் கேட்க முடியாது. பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடுகின்றீர்கள்: பாபா, நீங்கள் வரும்போது நான் வேறு எவரையுமன்றி, உங்களை மாத்திரமே செவிமடுப்பேன். ஏனைய அனைவரும் துன்பத்தையே விளைவிக்கின்றனர். நீங்கள் மாத்திரமே சந்தோஷத்தைக் கொடுக்கின்றீர்கள்! எனவே, தந்தை வந்து, நீங்கள் கூறியதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். நீங்கள் மாத்திரமே பிரம்ம குமாரர்கள், குமாரிகள் என அழைக்கப்படுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரம்ம குமாரிகள் யார், மம்மாவும் பாபாவும் யாவர் என்பதையேனும் புரிந்து கொள்ளாத அளவிற்கு மக்கள் கல்லுப் புத்தியைக் கொண்டுள்ளனர். அவர்கள் சாதுக்களோ, புனிதர்களோ அல்லர். சாதுக்களும், புனிதர்களும் குரு என்றே அழைக்கப்படுகின்றனர், அவர்கள் தாய் தந்தை என அழைக்கப்படுவதில்லை. அத்தந்தை வந்து, தேவ தர்மத்தின் அரசியும், அரசனுமான இலக்ஷ்மி நாராயணன் ஆட்சி புரியும் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். முதலில் அவர்கள் தூய்மையாக இருந்து, பின்னர் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றனர். பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பவர்கள் பின்னர் 84 பிறவிகளை எடுக்கின்றனர். முதலில் நீங்கள் 21 பிறவிகளுக்கு சந்தோஷம் என்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள். ஒரு குமாரி 21 குலங்களை ஈடேற்றுபவர். உங்களைப் பற்றி இவ்வாறு நினைவுகூரப்படுகின்றது. நீங்கள் குமாரிகள், இல்லறத்தவர்களல்ல. நீங்கள் வளர்ந்துவிட்டாலும், அனைவரும் மரணித்து வாழ்வதுடன், இப்பொழுது தந்தையின் குழந்தைகளாக உள்ளீர்கள். பிரஜாபிதா பிரம்மாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர், அவர்களின் எண்ணிக்தை தொடர்ந்தும் அதிகரிக்கும். பின்னர், அவர்கள் அனைவரும் தேவர்கள் ஆகுவார்கள். இது சிவபாபாவின் யாகம் ஆகும். இது சுயராச்சியத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் சுயராச்சியத்திற்கான யாகம் எனப்படுகின்றது. ஆத்மாக்கள் சுவர்க்க இராச்சியம் என்ற தங்களின் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகின்றனர். இந்த யாகத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களின் சரீரம் உட்பட அனைத்தையும் நீங்கள் அதில் அர்ப்பணிக்க வேண்டும். இந்த யாகத்தின் மூலம் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறுவீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடியதைத் தந்தை உங்களுக்கு நினைவூட்டுகின்றார்: பாபா, நீங்கள் வரும்போது நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன்! நான் என்னை உங்களிடம் அர்ப்பணிப்பேன். இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்களை பிரம்ம குமாரர்கள், குமாரிகளாகக் கருதுகின்றீர்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தினருடன் வாழலாம், ஆனால் ஒரு தாமரையைப் போன்று தூய்மையாக வாழவேண்டும். உங்களை ஆத்மாவாகக் கருதுங்கள்! நாங்கள் பாபாவின் குழந்தைகள். ஆத்மாக்களாகிய நீங்கள் காதலிகள். தந்தை கூறுகின்றார்: நான் ஒருவரே அன்பிற்கினியவர். நீங்கள் அன்பிற்கினியவரான என்னைக் கூவியழைத்தீர்கள். நீங்கள் அரைக் கல்பமாக காதலிகளாக இருக்கின்றீர்கள். பரம தந்தை, பரமாத்மா என அழைக்கப்படுபவர் அசரீரியானவர் ஆவார். இச்சரீரம் மூலமாக ஒரு பாகத்தை நடிக்கின்ற ஆத்மாவும் அசரீரியானவரே. நீங்கள் பக்தி மார்க்கத்திலும் உங்கள் பாகங்களை நடிக்கவேண்டியுள்ளது. பக்தி இரவாகும். மக்கள் இருளில் தடுமாறித் திரிகின்றனர். நீங்கள் துவாபர யுகத்திலிருந்து தடுமாறித் திரிகின்றீர்கள். இந்நேரத்தில் நீங்கள் பெருந் துன்பத்தை அனுபவிக்கின்றீர்கள். இப்பொழுது இது கலியுகத்தின் இறுதிக் கட்டமாகும். அவர்களின் பணம் போன்ற அனைத்தும் தூசாகப் போகின்றது. ஒரு கோடீஸ்வரன் அல்லது ஓர் அரசனுக்குக் குழந்தை இருந்தால், தனது செல்வம் முழுவதும் தனது குழந்தைக்கே என்றும், அவரது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் அச்செல்வத்திலிருந்து உண்பார்கள் என்றும் அவர் நினைக்கின்றார். எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: அவர்கள் அதிலிருந்து எதையும் உண்ணமாட்டார்கள்! இவ்வுலகம் அழியப்போகின்றது. மிகவும் சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. பல தடைகள் வரும். மக்கள் தங்கள் மத்தியில் சண்டையிடுவார்கள். இறுதியில் இரத்த ஆறு ஓடும் வகையில் அவர்கள் சண்டையிடுவார்கள். நீங்கள் எவருடனும் சண்டையிடுவதில்லை. நீங்கள் உங்களின் யோக சக்தியைப் பேணுகின்றீர்கள். நீங்கள் நினைவில் இருந்தால், எவராவது தீய எண்ணங்களுடன் உங்களின் முன்னால் வந்தாலும் அவர் பயங்கரக் காட்சிகளைக் கண்டு, உடனடியாகவே ஓடிவிடுவார். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்வீர்கள், அவர் ஓடிவிடுவார். மிக உறுதியான குழந்தைகள் வேறு எவருக்குமன்றி சிவபாபாவிற்கு மாத்திரமே சொந்தமாக இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உங்கள் கைகள் வேலை செய்யட்டும், உங்கள் இதயம் தந்தையை நினைவு செய்யட்டும். குழந்தைகளாகிய நீங்கள் உங்களின் வீட்டையும் பராமரிக்க வேண்டும். எவ்வாறாயினும், ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவு செய்தால், பாவச் சுமை அகற்றப்படும். என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள், ஆனால் அதுவும் நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாகவே இருக்கும். பின்னர் நீங்கள் அனைவரும் உங்களின் சரீரங்களை நீக்குவீர்கள், பாபா ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று மீண்டும் அழைத்துச் செல்வார். உலகிலுள்ள ஏனையவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். வெகு சிலர் மாத்திரமே அப்பொழுது பாரதத்தில் இருப்பார்கள். அதற்காகவே இந்த மகாபாரத யுத்தம் ஆகும். இங்கு பெருமளவு விரிவாக்கம் இடம்பெறும். கண்காட்சிகள் மூலமும், புரொஜெக்டர் போன்றவை மூலமும் பலர் இவற்றைச் செவிமடுப்பார்கள். பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்பட வேண்டும். ஒருவர் மாத்திரமே அரசராக இருப்பார், ஏனையவர்கள் பிரஜைகளாக இருப்பார்கள். ஆலோசகர்கள்கூட பிரஜைகளின் வரிசையிலேயே சேர்க்கப்படுவார்கள். பல பிரஜைகள் உள்ளனர். ஒரு அரசனுக்கு ஏறத்தாழ நூறாயிரம் பிரஜைகள் இருப்பார்கள். எனவே, அரசனும், அரசியும் முயற்சி செய்யவேண்டும். தந்தை கூறுகின்றார்: அனைத்தையும் செய்யும்போதும் சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். ஒரு காதலியும், காதலனும் ஒருவர் மீதொருவர் பௌதீகமான அன்பைக் கொண்டுள்ளனர். குழந்தைகளாகிய நீங்கள் இந்நேரத்தில் காதலிகள் ஆவீர்கள். உங்களின் அன்பிற்கினியவர் வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கின்றார். கற்ற பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். நினைவின் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும், நீங்கள் எல்லாக் காலத்திற்கும் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தையும் நினைவு செய்யவேண்டும்: சத்திய யுகத்தில் நாங்கள் இத்தனை பிறவிகள் எடுத்தோம், திரேதா யுகத்தில் இத்தனை பிறவிகள் எடுத்தோம். தேவ தர்மத்தைச் சார்ந்த நாங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை முழுமையாகச் சுற்றிவந்துள்ளோம். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது உங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். நீங்கள் ஆயிரக் கணக்கான நிலையங்களைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஒவ்வொரு வீதியிலும் விளங்கப்படுத்துவீர்கள்: தந்தையையும், உங்களின் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இது ஓர் அழுக்கான ஆடையாகும். இது எல்லையற்ற விருப்பமின்மை ஆகும். சந்நியாசிகள் தங்களின் எல்லைக்குட்பட்ட வீட்டையும், குடும்பத்தையும் துறக்கின்றார்கள். அவர்கள் ஹத்த யோகிகள். அவர்களால் இராஜ யோகம் கற்பிக்க முடியாது. பக்தி அநாதியானது என அவர்கள் கூறுகின்றனர். தந்தை கூறுகின்றார்: துவாபர யுகத்திலிருந்தே பக்தி ஆரம்பமாகின்றது. நீங்கள் 84 படிகளில் கீழிறங்கி, தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள். தாங்கள் கிறிஸ்தவர்கள் எனக் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். நீங்கள் சத்திய யுகத்தில் இருந்தீர்கள் என்பதை அறிவீர்கள். தந்தை தேவ தர்மத்தை ஸ்தாபித்துள்ளார். இலக்ஷ்மி நாராயணனாக இருந்தவர்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளனர். சத்திய யுகத்தில் ஒரு அரசனும், அரசியும், ஒரு மொழியுமே இருந்தது. குழந்தைகள் அதையும் காட்சியாகக் கண்டுள்ளனர். நீங்கள் அனைவரும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்திற்குச் சொந்தமானவர்கள். நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், கடவுள் சர்வவியாபகர் என்றும் மக்கள் கூறுவது தவறாகும். ஒவ்வொரு மனிதரினுள்ளும் ஆத்மா இருக்கின்றார். எனவே, அவர்கள் கூறுவது போன்று எவ்வாறு கடவுள் அனைவரினுள்ளும் இருக்க முடியும்? அப்படியாயின், அனைவரும் தந்தையாக அல்லவா இருக்கவேண்டும்! அவர்கள் மிகவும் தமோபிரதான் ஆகிவிட்டார்கள்.! முன்னர் நீங்கள் கேட்டதையெல்லாம் நம்பினீர்கள். தந்தை இப்பொழுது வந்து உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். அவர் உங்களுக்கு மூன்றாவது ஞானக் கண்ணைக் கொடுக்கின்றார். அதன் மூலம் நீங்கள் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிப் புரிந்துகொள்கின்றீர்கள். இது அமரத்துவக் கதையும் ஆகும். எவ்வாறாயினும், சூட்சும வதனத்தில் எவ்வித கதைகளும் கிடையாது. அவையனைத்தும் பக்தி மார்க்க நாற்றுகளாகும். நீங்கள் அமரத்துவமானவர்கள் ஆகுவதற்காக அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். அங்கு, நீங்கள் உங்களின் சரீரத்தை நீக்கி, அதிக சந்தோஷத்துடன் இன்னொன்றை எடுக்கின்றீர்கள். இங்கு, எவராவது மரணித்துவிட்டால், அவர்கள் அழுது புலம்புகின்றார்கள். அங்கு நோய் எதுவும் இருக்காது. அங்கு, அவர்கள் என்றும் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருப்பார்கள். அங்கு தூய்மையின்மை எதுவும் கிடையாது. நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள் என்பதையும், பாபா எங்களை மீண்டும் அழைத்துச் செல்ல இப்பொழுது வந்துவிட்டார் என்பதையும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அவர் தூய்மையாகுவதற்கான வழியையும் உங்களுக்குக் கூறுகின்றார். அவர் கூறுகின்றார்: தந்தையாகிய என்னையும், உங்களின் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். சத்திய யுகத்தில் நீங்கள் 16 கலைகளும் நிறைந்திருக்கின்றீர்கள், பின்னர் கலைகள் குறைவடைகின்றன. இப்பொழுது உங்களில் கலைகள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. தந்தை மாத்திரமே உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, சந்தோஷத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இதனாலேயே அவர் விடுதலையளிப்பவர் என அழைக்கப்படுகின்றார். அவர் அனைவரையும் தன்னுடன் திரும்ப அழைத்துச் செல்கின்றார். உங்களின் குருமார் உங்களைத் தங்களுடன் திரும்ப அழைத்துச் செல்வதில்லை. அந்த குருமாரில் ஒருவர் மரணிக்கும்போது, அவரது சீடர்களில் ஒருவர் அவரது ஆசனத்தில் அமர்ந்துகொள்கின்றார். சீடர்களின் மத்தியில் பின்னர் பெருமளவு குழப்பம் ஏற்படுகின்றது. அவர்கள் ஆசனத்திற்காகத் தங்கள் மத்தியில் சண்டையிடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் ஆத்மாக்களாகிய உங்களை என்னுடன் திரும்ப அழைத்துச் செல்கின்றேன். நீங்கள் சம்பூர்ணமாகாவிட்டால் தண்டனை அனுபவிக்க நேரிடுவதுடன், உங்களின் அந்தஸ்தும் இல்லாமல் போய்விடும். இராச்சியம் இங்கு ஸ்தாபிக்கப்படுகின்றது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களின் முன்னால் தீய எண்ணங்களுடன் வரும் எவரும் மாற்றமடையும் வகையில் நினைவைப் பயிற்சி செய்யுங்கள். வேறு எவருக்குமன்றி, ஒரேயொரு சிவபாபாவிற்கு மாத்திரமே சொந்தமாக இருக்கும் முயற்சியைப் பேணுங்கள்.

2. சுயராச்சியத்தைப் பெறுவதற்கு, சரீரம் உட்பட உங்களிடமுள்ள அனைத்தையும் அர்ப்பணியுங்கள். சரீரம் உட்பட உங்களிடமுள்ள அனைத்தையும் இந்த யாகத்தில் அர்ப்பணிக்கும் போது, நீங்கள் ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

ஆசீர்வாதம்:
ஞானம் நிறைந்ததோர் ஆத்மாவாக, ஞானத்திலும் ஞானக்கடலில் உங்களை அமிழ்த்தி, சகல பேறுகளின் சொரூபம் ஆகுவீர்களாக.

ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் எப்பொழுதும், ஞானத்திலும் ஞானக்கடலிலும் அழிந்திருப்பார்கள். சகல பேறுகளின் சொரூபமாக இருப்பதால், நீங்கள் இயல்பாகவே ஆசை என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆகுகிறீர்கள். தமது சுபாவங்களிலும் சம்ஸ்காரங்களிலும் சிறிதளவு தங்கியிருந்தாலுமே, அவர்கள் பெயர், மரியாதை, கௌரவத்தை விரும்புகிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் கேட்பவர்களை, கூவியழைப்பவர்களை, அகத்தில் ஒருவராகவும் புறத்தில் வேறொருவராகவும் இருப்பவர்களை ஞான ஆத்மாக்கள் என அழைக்க முடியாது.

சுலோகம்:
தமது வாழ்வில் அதீந்திரிய சுகத்தையும் பேரானந்தத்தையும் அனுபவம் செய்பவர்கள் மாத்தி;ரமே இலகு யோகிகள் ஆவார்கள்.