18.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, 21 பிறவிகளுக்கான சுய இராச்சியத் திலகத்தைக் கோருவதற்கு, உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீர உணர்வை மறந்து, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
ஏழைக் குழந்தைகளின் விவேகத்தின் எவ்விடயம் தந்தையைச் சந்தோஷமாக்குகிறது? அத்தகைய குழந்தைகளுக்கு அவர் கொடுக்கின்ற ஆலோசனை என்ன?

பதில்:
தங்களுடைய பெறுமதியற்ற உடைமைகள் அனைத்தையும் பாபாவின் சேவையில் ஒரு தகுதிவாய்ந்த வழியில் பயன்படுத்தி, எதிர்கால 21 பிறவிகளுக்கான தங்கள் பாக்கியத்தைச் சேகரிக்க எண்ணும் ஏழைக் குழந்தைகளின் விவேகத்தைப் பார்ப்பதில் பாபா பூரிப்படைகின்றார். பாபா அவர்களுக்கு முதற்தரமான ஆலோசனையைக் கொடுக்கிறார்: குழந்தைகளே, நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆகுங்கள். பொருட்களை உங்களுக்குச் சொந்தமெனக் கருதாதீர்கள். உங்கள் குழந்தைகளைப் பராமரியுங்கள். அனைத்தையும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகப் பராமரியுங்கள். உங்கள் வாழ்க்கையை ஞானத்தின் மூலம் முன்னேற்றி, அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுங்கள்.

பாடல்:
நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்தவாறே வந்துள்ளேன்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இரு வரிகளைக் கேட்டீர்கள். புதிய உலகத்துக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டு, நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். ஒருவர் பாக்கியத்தை உருவாக்குவதற்கு அவர் முயற்சி செய்ய வேண்டும். இங்கே நாங்கள் ஸ்ரீமத்தைப் பெறுகிறோம், நாங்கள் மகா மந்திரமாகிய மன்மனபவ வைப் பெறுகிறோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இவ்வார்த்தைகள் உள்ளன. உங்களுக்கு இந்த மந்திரத்தைக் கொடுப்பவர் யார்? கடலாகிய, அதிமேலானவரே வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். நாங்கள் அவரிடமிருந்து ஒருமுறை மாத்திரமே வழிகாட்டல்களைப் பெறுகிறோம். நாடகத்தில் ஏற்கெனவே நடைபெற்றவை அனைத்தும், 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் நடைபெறும். இந்த ஒரு மகா மந்திரத்தினூடாக மாத்திரமே உங்கள் படகு அக்கரைக்குச் செல்ல முடியும். தூய்மையாக்குபவராகிய தந்தை ஒருமுறை மாத்திரமே வந்து, ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். யார் தூய்மையாக்குபவர்? பரமாத்மாவாகிய பரமதந்தையே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கி, அவர்களைத் தூய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார். அவர் மாத்திரமே தூய்மையாக்குபவர் எனவும், சற்கதியை அருள்பவர் எனவும் அழைக்கப்பட முடியும். நீங்கள் அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். அவரே உங்களுக்கு அனைத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதிமேலானவரே எங்கள் பாக்கியத்தை உருவாக்குபவர் ஆவார். நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து இம்மகா மந்திரத்தைப் பெறுகிறோம் என்னும் நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. அவரே தந்தையாவார். ஒருவர் அசரீரியானவரும், மற்றவர் பௌதீகமானவரும் ஆவார். குழந்தைகள் அவரை நினைவு செய்கிறார்கள், தந்தையும் குழந்தைகளை நினைவு செய்கிறார். கல்பம் கல்பமாக, பாபா தனது குழந்தைகளுடன் மாத்திரமே பேசுகிறார். தந்தை கூறுகிறார்: அனைவருக்கும் சற்கதியை அருள்வதற்கு ஒரேயொரு மந்திரமே உள்ளதுடன், ஒரேயொருவரே அதனைக் கொடுக்கிறார். சற்குரு மாத்திரமே உண்மையான மந்திரத்தைக் கொடுக்கிறார். சந்தோஷ உலகிற்;கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். சத்தியயுகம் சந்தோஷ உலகம் எனவும் அழைக்கப்படுகிறது, ஆனால் இதுவோ துன்ப உலகம் ஆகும். பிரம்மாவின் வாயினூடாக, பிராமணர்கள் ஆகுபவர்களுக்கு மாத்திரமே சிவபாபா மந்திரத்தைக் கொடுக்கிறார், ஆகவே அவர் நிச்சயமாக ஒரு சரீரத்திற்குள் வர வேண்டும். வேறு எவ்வாறு அவர் மந்திரத்தைக் கொடுப்பார்? அவர் கூறுகிறார்: கல்பம் கல்பமாக, நான் உங்களுக்கு இந்த மகா மந்திரத்தைக் கொடுக்கிறேன்: சதா என்னை நினைவு செய்யுங்கள், சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, உங்கள் சரீரத்தையும், சரீர உறவுமுறைகள் அனைத்தையும் மறந்து விடுங்கள். நீங்கள் உங்களை ஒரு சரீரமாகக் கருதினால், சரீர உறவினர்கள் அனைவரும், அதாவது, தந்தை வழி, தாய் வழி மாமன்மார்களும், குருமார்கள், புனிதர்கள் அனைவரும் நினைவு செய்யப்படுகிறார்கள். இவர் கூறுகிறார்: நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு முழு உலகமும் மரணிக்கிறது. தந்தையும் கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஒரு மந்திரத்தைக் கொடுக்கிறேன்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிச் சரீரமற்றவர் ஆகுங்கள். சரீர உணர்வைத் துறந்து விடுங்கள். இங்கே, அனைவரும் சரீர உணர்வுடையவர்கள், ஆனால் சத்தியயுகத்தில் உள்ள அனைவரும் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆவார்கள். இச்சங்கமயுகத்தில், நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகிறீர்கள், நீங்கள் கடவுளை அறிந்தவர்களாகிய, ஆஸ்திகர்களாகவும் ஆகுகிறீர்கள். ஓர் ஆஸ்திகர் என்பவர் பரமாத்மாவாகிய பரமதந்தையையும், அவருடைய படைப்பையும் அறிந்தவர். சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ ஆஸ்திகர்கள் இருப்பதில்லை; அவர்கள் சங்கமயுகத்தில் மாத்திரமே இருக்கிறார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள், பின்னர் நீங்கள் சென்று சத்தியயுகத்தில் ஆட்சி செய்கிறீர்கள். இங்கு மாத்திரமே ஆஸ்திகரையும், நாஸ்திகரையும் பற்றிய கேள்வி எழுகிறது; அங்கு அது எழுவதில்லை. முன்னர் நாஸ்திகர்களாக இருந்த பிராமணர்கள், ஆஸ்திகர்களாகி விட்டார்கள். தற்சமயத்தில், முழு உலகமும் நாஸ்திகராக உள்ளது. எவரும் தந்தையையோ அல்லது அவருடைய படைப்பையோ அறியார்கள். அவர் சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். எல்லையற்ற தந்தையுடன் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு தொடர்பு உள்ளது. நீங்கள் அவரிடமிருந்தே ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள், அதாவது, அவர் உங்களை முயற்சி செய்வதற்குத் தூண்டுகிறார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீர உணர்வை மறந்து விடுங்கள், வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இதுவே உங்கள் பாக்கியத்தை உருவாக்குகின்ற மகா மந்திரம் என அழைக்கப்படுகிறது. நீங்கள் 21 பிறவிகளுக்கான சுய இராச்சிய திலகத்தைப் பெறுகிறீர்கள். அது வெகுமதி ஆகும். கீதையானது ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாறுவதற்கு, அதாவது, ஒரு சாதாரண மனிதனிலிருந்து தேவராக ஆகுவதற்கானதாகும். இவ்வுலகம் மாறுகிறது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் புதிய உலகத்துக்கான உங்கள் பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். இதுவே மரண உலகம் ஆகும். இங்குள்ள மக்களின் பாக்கியம் என்னவெனப் பாருங்கள்! அதன் பெயரே துன்ப உலகம் ஆகும். இதனைக் கூறியவர் யார்? ஆத்மா ஆவார். நீங்கள் இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆத்மா கூறுகிறார்: இது துன்ப பூமி. பாபா வசிக்கின்ற இடமே நாங்கள் வசிக்கின்ற பரந்தாமம் ஆகும். இப்பொழுது தந்தை ஞானத்தைக் கொடுத்து, எங்கள் பாக்கியத்தை உருவாக்குகிறார். அவர் ஒரு மகா மந்திரத்தைக் கொடுக்கிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் அதனை ஒரு சரீரதாரியிடமிருந்து செவிமடுக்கலாம், ஆனால் சரீரமற்றவராகிய என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக அவரை ஒரு சரீரிதாரியினூடாகவே செவிமடுக்க வேண்டும். பிரம்மகுமார்களும், குமாரிகளும் தங்கள் வாய்களினூடாகப் பேசி, தூய்மையாக்குபவரை நினைவு செய்யுமாறு தூய்மையற்றவர்களுக்குக் கூறுகிறார்கள். நீங்கள் நினைவுச் சக்தியினூடாக, உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமைகளை எரிக்க வேண்டும். நீங்கள் நோயிலிருந்து விடுபட்டவராக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கு பாபா வந்துள்ளார் என்பதையும், அவர் உங்களுக்கு மிகவும் இலகுவானதொரு பாதையைக் காட்டுகிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை நினைவு செய்ய மறந்து விடுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டும்! நீங்கள் உங்களைத் தூய்மையற்றவர் ஆக்குகின்ற அந்த லௌகீகத் தந்தையை நினைவு செய்கின்றீர்கள், உங்களைத் தூய்மையாக்குபவரும், சதா நினைவில் நிலைத்திருப்பதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் எனவும் உங்களுக்குக் கூறுகின்ற அந்தப் பரலோகத் தந்தைக்கு நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களை மறந்து விட்டேன்! பாபா கூறுகிறார்: நான் உங்களை ஓர் ஆலயத்தில் இருப்பதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்காக வந்துள்ளேன். பாரதம் நாங்கள் ஆட்சி செய்த, சிவாலயமாக (சிவனின் ஆலயம்) இருந்தது என்பதையும், பின்னர், நாங்கள் ஆலயங்களில் எங்கள் உருவங்களை வழிபட ஆரம்பித்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்களும் தேவர்களாக இருந்தோம் என்பதை நாங்கள் மறந்துவிட்டோம். உங்கள் மம்மாவும் பாபாவும் வழிபடத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்து, பின்னர் வழிபடுபவர்கள் ஆகினார்கள். உங்கள் புத்தியில் இந்த ஞானம் உள்ளது. விருட்சத்தில் பிரதான கருத்து காண்பிக்கப்பட்டுள்ளது: ஆதிசனாதன தேவிதேவதா தர்மமே அத்திவாரம். அது இப்பொழுது இல்லை. 5000 வருடங்களுக்கு முன்னர், அது சத்தியயுகம் ஆகியது, அது இப்பொழுது கலியுகமாக உள்ளது. கலியுகத்தின் பின்னர், மீண்டும் சத்தியயுகம் வரும். நிச்சயமாக, ஸ்ரீமத்தைக் கொடுப்பவர் வர வேண்டும். நிச்சயமாக உலகம் மாற வேண்டும். நீங்கள் முரசைக் கொட்டியவாறே (அனைவருக்கும் அறிவித்தவாறே) இருக்கிறீர்கள், ஆனால் விருட்சம் விரைவாக வளர முடியாதுள்ளது. பாதையில் பல தடைகள் வருகின்றன. அவர்கள் பல்வேறு பெயர்களிலும் ரூபங்களிலும் அகப்பட்டுக் கொள்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் இல்லறத்தில் இருந்தவாறே, தந்தையை நினைவு செய்து, தூய்மையாக இருங்கள். கடவுள் பேசுகிறார்: காமமே கொடிய எதிரி. முன்னர், இதனைக் கீதையின் கடவுளே கூறியுள்ளார், அவர் அதனை மீண்டும் ஒருமுறை கூறுகிறார். நிச்சயமாகக் கீதையின் கடவுள் உங்களைக் காமத்தை வெல்லுமாறு செய்திருக்க வேண்டும். ஒன்று இராவண இராச்சியமும், மற்றையது இராம இராச்சியமும் ஆகும். இராம இராச்சியம் பகலும், இராவண இராச்சியம் இரவும் ஆகும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது இந்த இராவண இராச்சியம் முடிவடையவுள்ளது. இதற்காக அனைத்து விடயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார், பின்னர் உங்களுக்கு ஓர் இராச்சியம் தேவைப்படும். நீங்கள் இத்தூய்மையற்ற உலகில் ஆட்சிசெய்ய மாட்டீர்கள், இல்லையா? சிவபாபாவுக்குத் தரையில் பதிப்;பதற்குப் பாதங்கள் எவையும் இருப்பதில்லை. தேவர்கள் இத்தூய்மையற்ற உலகில் பாதங்களைப் பதிக்க முடியாது. நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பதையும், நீங்கள் பாரதத்துக்கு வருவீPர்கள் என்பதையும் ஆனால் உலகம் கலியுகத்திலிருந்;து சத்தியயுகமாக மாற்றமடைந்திருக்கும் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். பல குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, பல புயல்கள் வருகின்றன. தந்தை கூறுகிறார்: நீங்கள் தந்தையை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் அவருடைய ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. நீங்கள் தந்தையிடமிருந்து அதிமேலான வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள்: குழந்தைகளே, சீரழிந்தவர்கள் ஆகாதீர்கள். ஒரேயொருவரே உங்களுக்குக் கற்பித்துக் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இவருடைய இரதத்தைக் கூட நினைவு செய்யாதீர்கள். இரதத்தைச் செலுத்துபவரும், இரதத்தின் உரிமையாளரும் உள்ளார்கள். அது ஒரு குதிரை இரதத்தைப் பற்றிய கேள்வி அல்ல. ஒருவர் அதில் இருந்து, ஞானத்தைக் கொடுப்பாரா? இந்நாட்களில், மக்கள் ஆகாய விமானத்தில் பயணிக்கிறார்கள். விஞ்ஞானம் முழு விசையுடன் உள்ளது. மாயையின் பகட்டும் முழு விசையுடன் உள்ளது. தற்சமயத்தில், அவர்கள் அனைவருக்கும் அதிகளவு கௌரவம் கொடுக்கின்றார்கள். ஒரு குறித்த நாட்டின் பிரதம மந்திரிக்கு அதிகளவு கௌரவம் கொடுக்கப்பட்;டிருக்கலாம். 15 நாட்களின் பின்னர், அந்தக் கௌரவம் மீளப் பெறப்படுகிறது. அரசர்களுக்கும் இப்பிரச்சனை உள்ளது: அவர்கள் சதா அச்சத்தில் உள்ளார்கள். நீங்கள் அத்தகைய இலகுவான ஞானத்தைப் பெறுகிறீர்கள். உங்களிடம் ஒரு சிப்பி கூட இல்லாத மிக ஏழையாக உள்ளீர்கள். நீங்கள் பாபாவை நம்பிக்கைப் பொறுப்பாளராக்கிக் கூறுகிறீர்கள்: பாபா, இவை அனைத்தும் உங்களுக்கு உரியவை, பாபா கூறுகிறார்: அச்சா, நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் வசிக்க வேண்டும். இன்னமும் நீங்கள் அனைத்தும் உங்களுக்கு உரியவை எனக் கருதினால், அது விவேகியாக இருப்பது என்பதல்ல. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக உள்ளவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவார்கள். நீங்கள் ஏழைகள், ஆகவே நீங்கள் உங்களுடைய பெறுமதியற்ற உடைமைகள் அனைத்தையும் பாபாவுக்குக் கொடுக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள். பாபா உங்களுக்கு முதற்தரமான ஆலோசனையைக் கொடுக்கிறார். அவர் கூறுகிறார்: நீங்கள் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். இந்நேரத்தில், இப்பொழுது உங்களுடைய எதிர்காலத்தைச் சீர்திருத்துகின்ற ஞானத்தைப் பெற்று, அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுகிறீர்கள். ஆலோசனை கொடுப்பது தந்தையின் கடமையாகும். தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் அனைவரையும் குழியில் வீழ்வதிலிருந்து காப்பாற்றுவதற்கான கருணையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் பெரும் சாதுரியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். சூர்ப்பனகையும் பூட்னாவும் (பெண் அசுரர்கள்) உள்ளார்கள். தற்சமயத்துக்கே அஜாமிலும் துரியோதனனும் பொருத்தமாக உள்ளார்கள். ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் தற்சமயத்தின் இந்தக் காட்சி வெளியாகும். அந்தத் தந்தை ஞானத்தைக் கொடுப்பதற்கு நேரடியாக வருகிறார். அவர் உங்களை மனிதரிலிருந்து தேவ அந்தஸ்தைப் பெறச் செய்கிறார். நீங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் செய்ததைப் போன்றே, ஓர் ஆஸ்தியைப் பெறுவதற்கு வந்துள்ளீர்கள். முன்னரும், மகா யுத்தம் இருந்தது. அது இதனுடனேயே தொடர்புபட்டுள்ளது. தந்தை அனைத்தையும் மிகச்சரியாக விளங்கப்படுத்தி, உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து தேவ அந்தஸ்தைப் பெறச் செய்கிறார். நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கே வந்துள்ளீர்கள். நீங்கள் பிரம்மாவிடமிருந்தோ அல்லது ஜெகதாம்பாவிடமிருந்தோ அல்லது வேறெந்த பிரம்மகுமாரியிடமிருந்தோ ஓர் ஆஸ்தியைப் பெறப் போவதில்லை. அவர்களும் தந்தையிடமிருந்தே தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். அவர்கள் ஏனையோருக்கும் விளங்கப்படுத்துகிறார்கள். நீங்கள் ஜெகத்பிதாவின் (உலகத் தந்தை) குழந்தைகள் ஆகி, அவரினூடாக உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அவர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! இந்த அம்பு உங்கள் மீது நேரடியாக எய்யப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டும். ஒரு நண்பரோ அல்லது உறவினரோ மரணித்தாலும், தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறப்பட வேண்டும். நீங்கள் உங்கள் பாக்கியத்தை உருவாக்க வந்துள்ளதால், இதிலேயே ஒருவருக்கு அதிகளவு சந்தோஷம் தேவையாகும். பாபா உங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை அறிவீர்கள், ஆகவே நீங்கள் அதற்கேற்ப பண்புகளையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் உங்களை விகாரங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தூய்மையானவர்களாகவும் விகாரமற்றவர்களாகவும் ஆகுகிறோம். நீங்கள் நாடகத்தையும், விருட்சத்தையும் புரிந்து கொண்டுள்ளீர்கள். வேறு சிரமங்கள் கிடையாது. அது மிகவும் இலகுவானதாகும். இருப்பினும், நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, நான் உங்களை மறந்து விட்டேன். ஒரு தீய ஆவி வந்தது. பாபா கூறுகிறார்: தீய ஆவிகளை விரட்டி விடுங்கள். உங்கள் இதயக் கண்ணாடியில் நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்களா எனப் பாருங்கள். நாங்கள் சாதாரணமானவர்களிலிருந்து நாராயணனாக ஆகவேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, நூறு மடங்கு பாக்கியசாலிக் குழந்தைகளே, நீங்கள் நூறு மடங்கு பாக்கியசாலிகள் ஆகுவதற்கே இங்கு வந்துள்ளீர்கள். தற்சமயத்தில், அனைவரும் துர்ப்பாக்கியசாலிகளாக உள்ளார்கள். பாரதவாசிகள் மாத்திரமே மிகவும் பாக்கியசாலிகளாக இருந்தார்கள்; அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள். அது பாரதத்தைப் பற்றிய விடயமாகும். தந்தை கூறுகிறார்: இப்பொழுது உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், ஏனெனில் நீங்கள் என்னிடம் வர வேண்டும், பின்னர் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்குக்கு இட்டுச் செல்லும். இப்பொழுது நாடகம் முடிவடையவுள்ளது, நாங்கள் எக்கணத்திலும் வீடு திரும்பிச் செல்வோம். அவர் உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார்: அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டவர்கள் ஆகுங்கள், நீங்கள் ஒரு தூய, புண்ணியாத்மா ஆகுவீர்கள். அது தூய, புண்ணியாத்மாக்களின் உலகமாக இருந்தது, அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகிறது. பழைய உலகம் மாற்றமடைந்து, புதியதாக வேண்டும். பாரதம் புராதன தேசமாக இருந்தது எனவும், அது சுவர்க்கமாக இருந்தது எனவும் அவர்கள் நம்புகிறார்கள். தந்தையாகிய, சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தைப் படைக்கிறார். அவர் எப்பொழுது வந்தார்? அவர் இந்நேரத்தில் மாத்திரமே வருகிறார். இது நன்மையளிக்கும் தந்தை வருகின்ற காலம் என அறியப்படுகிறது. இராவணனின் சமுதாயம் மிகவும் பெரியது, ஆனால் இராமரின் சமுதாயமோ மிகவும் சிறியதாகும். இங்கே விரிவாக்கம் தொடர்ந்தும் இடம்பெறுகிறது. தந்தையிடமிருந்து மீண்டும் ஒருமுறை ஆஸ்தியைப் பெறுவதற்குக் குழந்தைகள் தொடர்ந்தும் வருவார்கள். அவர்கள் கண்காட்சிகளையும் புரொஜெக்டர்களையும் பயன்படுத்தித் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகிறார்கள். இப்பொழுது நீங்கள் அதிகளவு சேவையைச் செய்ய வேண்டும். பாபா கூறிக் கொண்டிருக்கிறார்: அன்பிற்கினிய குழந்தைகளே, இதுவே நாடகம். எவ்வாறாயினும், இதுவரை இடம்பெற்றவை அனைத்தும் மிகச்சரியான நாடகம் எனக் கூறப்படும். தந்தை கூறுகிறார்: நானும் நாடகத்தில் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளேன். குழந்தைகளே, நானும் தூய்மையற்ற உலகினுள் வர வேண்டும். எவ்வாறு நான் பரந்தாமத்தை விட்டு இறங்கி குழந்தைகளாகிய உங்களுக்காக இங்கு வருகிறேன் எனப் பாருங்கள்! வைத்தியர்கள் பிளேக் நோய் உள்ள இடத்திலிருந்து ஓட மாட்டார்கள், அவர்கள் வர வேண்டும். மக்கள் பாடுகிறார்கள்: தூய்மையாக்குபவரே, வாருங்கள்! வந்து எங்களை ஐந்து விகாரங்களிலிருந்தும் தூய்மையாக்குங்கள், அதாவது, எங்களை அவற்றிலிருந்து விடுவியுங்கள். எங்களைத் துன்ப உலகிலிருந்து சந்தோஷ உலகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். கடவுளே முக்தியளிப்பவர் ஆவார். அவரே அனைவருக்கும் விடுதலை அளிப்பவர் ஆவார். அவர் வழிகாட்டியாகி, எங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார், பின்னர் நாங்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகிறோம். சூரிய வம்சமும், சந்திர வம்சமும், உள்ளன, பின்னர் துவாபர யுகம் ஆரம்பிக்கும்பொழுது, நீங்கள் வழிபடுபவர்கள் ஆகுகிறீர்கள். தேவர்கள் பாவப் பாதையைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள் எனப் பாடப்பட்டுள்ளது. அவர்கள் பாவப் பாதையின் படங்களைக் காட்டுகிறார்கள். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது நடைமுறை ரீதியில் புரிந்துகொள்கிறீர்கள். இக்கருத்துக்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் இலகுவானவை ஆகும். அவை புத்தியினால் மிகச்சரியாகக் கிரகிக்கப்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதற்கே வந்துள்ளீர்கள். இங்கு, தந்தை உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறார், ஆனால் ஆசிரியர்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆவார்கள். இங்கே, பிரஜாபிதா பிரம்மாவின் வாயினூடாக, கடவுள் உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைக் கூறியுள்ளார். பிரம்மாவே முதலில் அதனைச் செவிமடுப்பார். அவர்கள் சூட்சும உலகத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் காட்டியுள்ளார்கள். எவ்வாறாயினும், விஷ்ணு சத்தியயுகத்தின் அதிபதியும், பிரம்மா சங்கமயுகத்தின் அதிபதியும் ஆவார். இங்கேயே பிரம்மா தேவைப்படுகிறார், ஆகவே பின்னர் பிராமணர்களால் தேவர்கள் ஆக முடியும். இதுவே உருத்திர (அசரீரியானவர்) ஞான யாகமாகும். முன்னரும் யாகம் உருவாக்கப்பட்டது. இந்த யக்ஞத்தில் முழு உலகமும் அர்ப்பணிக்கப்படும். அனைத்தும் அழிக்கப்படும். பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் புதிய உலகில் ஆட்சி செய்வதற்குச் செல்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களிலுள்ள தீய ஆவிகளை அகற்றி, ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள். உங்கள் இதயக் கண்ணாடியில் நீங்கள் எந்தளவுக்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள் என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

2. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சரீரமற்றவராகித் தந்தையை நினைவு செய்யுங்கள். சரீரத்தின் உணர்வை மறப்பதற்குப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
சந்தோஷ இதயமுடையவராகவும், மலர்ச்சி நிறைந்தவர்களாகவும் ஆகி, தூய்மையின் இராஜரீகத்தினால் சதா முகமலர்ச்சி நிறைந்தவராக இருப்பீர்களாக.

இராஜரீகமான அதாவது மெய்யான தூய்மையை கொண்டிருக்கும் ஆத்மாக்கள் சதா சந்தோஷத்தில் நடனமாடுகின்றார்கள். அவர்களின் சந்தோஷம் சிலவேளைகளில் குறைவாக இருக்கின்றது. நாளுக்;கு நாள் அவர்களின் சந்தோஷம் தொடர்ந்தும் படிப்படியாக அதிகரிக்கின்றது. அவர்கள் உள்ளே ஒன்றாகவும் வெளியே வேறொன்றாகவும் இருப்பதில்லை. அவர்கள் தமது மனோபாவம், பார்வை, வார்த்தைகள், நடத்தை ஆகியவற்றில் உண்மையானவர்களாக இருக்கின்றார்கள். அத்தகைய உண்மையான இராஜரீகமான ஆத்மாக்கள் தமது இதயத்திலும், தமது கண்களிலும் தமது சாயல்களிலும் சதா சந்தோஷமாக இருக்கின்றார்கள். அவர்கள் அநாதியாக சந்தோஷ இதயமுடையவராகவும் முகமலர்ச்சி நிறைந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.

சுலோகம்:
உலகிலேயே அதி மேன்மையான சக்தி தூய்மை சக்தியாகும்.