19.06.22    Avyakt Bapdada     Tamil Lanka Murli    06.04.91     Om Shanti     Madhuban


கர்மாதீத் ஸ்திதியின் அடையாளங்கள்.


நீங்கள் தொடர்ந்து கர்மாதீத் ஸ்திதிக்கு நெருக்கமாக வருகிறீர்களா? செயல்கள் அதிகரிக்கின்றன. ஆனால், கர்மாதீத் ஆகுதல் என்றால் செயல்களின் எந்தவொரு பந்தனத்தின் பாதிப்பிற்கும் அப்பாற்பட்டிருப்பதாகும். இந்த அனுபவம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். பற்றற்ற நிலை இருக்க வேண்டும். ஆத்மாவான நான், இந்தச் சரீரத்தினூடாகச் செயல்களைச் செய்துவிட்டுப் பின்னர் அதிலிருந்து பற்றற்றவர் ஆகுகிறேன். அதனால் எந்தவொரு பணியாலும் நான் பாதிக்கப்படுவதில்லை. நீங்கள் செய்யும் எந்தவொரு செயலின் விளைவு எதுவாக இருந்தாலும், அந்தப் பணியின் பலனை அடைவதில் பற்றற்ற நிலை இருக்க வேண்டும். செயலின் பலன் என்றால், என்ன பெறுபேறு வந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், முற்றிலும் பற்றற்ற நிலையைத் தொடர்ந்து அனுபவம் செய்வதாகும். யாரோ ஒருவர் உங்களைக் கொண்டு செய்வித்தார் என்றும், நீங்கள் அதைச் செய்தீர்கள் என்றும் இருக்க வேண்டும். யாரோ உங்களைக் கொண்டு செய்வித்தார், நீங்கள் வெறுமனே கருவியாக இருந்தீர்கள் என்பதாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், ஒரு கருவியாக இருப்பதிலும் நீங்கள் பற்றற்றவராக இருக்க வேண்டும். இந்த முறையில் உங்களின் கர்மாதீத் ஸ்திதி அதிகரிப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

மகாராத்திகளின் ஸ்திதிகள், மற்றவர்களின் ஸ்திதிகளுடன் ஒப்பிடும்போது, தெளிவாக வேறுபட்டதாகவும் அன்பானதாகவும் உள்ளதல்லவா? தந்தை பிரம்மா மிகத் தெளிவாக இருந்ததைப் போல், பௌதீக ரூபங்களில் உள்ள கருவி ஆத்மாக்களும் வரிசைக்கிரமமாகத் தமது பௌதீக ரூபங்களில் வரிசைக்கிரமமாகத் தெளிவானவர்கள் ஆகுகிறார்கள். கர்மாதீத் என்றால் அன்பாகவும் பற்றற்றவராகவும் ஆகுதல் என்று அர்த்தம். மற்றவர்களும் செயல்களைச் செய்கிறார்கள். நீங்களும் செயல்களைச் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்தச் செயல்களைச் செய்யும் முறை வித்தியாசமானது. ஸ்திதியில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் அதிலிருந்து பற்றற்றவர் ஆகுகிறீர்கள். நீங்கள் செயல்களைச் செய்கிறீர்கள். அந்தச் செயல்களைச் செய்த பின்னர், நீங்கள் எதையும் செய்யாதது போல் உணர்கிறீர்கள். உங்களைச் செய்யத் தூண்டியவர், உங்கள் மூலமாக அதைச் செய்வித்தார். நீங்கள் தொடர்ந்து இத்தகைய ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் இலேசாக உணர்வீர்கள். செயல்களைச் செய்யும்போது, சரீரத்திலும் இலேசான தன்மை காணப்படும். உங்களின் மனதின் ஸ்திதியிலும் இலேசான தன்மை காணப்படும். செயல்களின் பெறுபேறு உங்களின் மனதை இழுக்காது. உங்களிடம் இத்தகைய ஸ்திதி உள்ளதா? பணிகள் எந்தளவிற்குத் தொடர்ந்தும் அதிகரிக்கிறதோ, அந்தளவிற்கு உங்களின் இலேசானதன்மையும் அதிகளவில் அதிகரிக்கும். செயல்கள் உங்களைத் தம்மை நோக்கி இழுக்காது. ஆனால், அதிபதி செயல்களைச் செய்யத் தூண்டுவதாகவும், கருவி அவற்றைக் கருவியாகச் செய்வது போன்றும் நீங்கள் அவற்றைச் செய்வீர்கள்.

ஆத்மாவில் இலேசானதன்மை இருப்பதன் அடையாளம், ஆத்மாவின் விசேட சக்திகளான மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் என்பவையும் தொடர்ந்து அதே முறையில் இலேசானவை ஆகும். உங்களின் எண்ணங்கள் உங்களுக்கு முழுமையான இலேசான தன்மையின் ஸ்திதியின் அனுபவத்தைக் கொடுக்கும். புத்தியின் தீர்மானிக்கும் சக்தியும் அது எதையும் செய்யாததைப் போல் செயல்படும். எந்தவிதமான சம்ஸ்காரமும் உங்களைக் கவராது. தந்தையின் சம்ஸ்காரங்களே செயல்படுவதைப் போல் இருக்கும். நீங்கள் மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் என்ற மூன்று சூட்சுமமான சக்திகளிலும் இலேசான தன்மையை அனுபவம் செய்வீர்கள். எல்லோருடைய இதயத்தில் இருந்தும் உதடுகளில் இருந்தும், தந்தையைப் போன்றே குழந்தைகளும், அன்பானவர்களும் பற்றற்றவர்களும் ஆவார்கள் என்பது இயல்பாகவே வெளிப்படும். ஏனென்றால், காலத்திற்கேற்ப, வெளியிலுள்ள சூழல் நாளுக்கு நாள் தொடர்ந்தும் துன்பம் தருவதாக ஆகிக்கொண்டிருக்கிறது. வெளியிலுள்ள சூழல் எந்தளவிற்குத் துன்பம் தருவதாக ஆகுகின்றதோ, அந்தளவிற்கு விசேடமான அதியன்பிற்குரிய குழந்தைகளின் எண்ணங்களும், செயல்களும், உறவுமுறைகளும் தொடர்ந்து இலேசானதாக ஆகும். இந்த இலேசான தன்மையால், உங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து மிகவும் இலேசானதாகும். சூழல் தமோபிரதானாக இருப்பதனால், மற்றவர்கள் பல்வேறு வழிமுறைகளில் சுமையை அனுபவம் செய்வார்கள். இயற்கையும் சுமையாக இருக்கும். மனித ஆத்மாக்களின் மனோபாவத்திலும் சுமையான தன்மை காணப்படும். இதற்கும், உங்களின் இலேசானதன்மை மற்றவர்களையும் இலேசாக்கும். அச்சா. அனைத்தும் நன்றாக உள்ளதுதானே? நீங்கள் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், உங்களால் அந்தச் செயல்களில் ஒரு விளைவை ஏற்படுத்த முடிகிறது. நீங்கள் என்ன செய்தாலும் அல்லது எதைக் கேட்டாலும், உங்களின் இலேசான தன்மையின் ஸ்திதியானது அந்தப் பணியில் ஒரு விளைவை ஏற்படுத்தும். செயல்களில் ஏற்படும் எந்தவொரு தளம்பலும் உங்களைப் பாதிப்பதில்லை. அசைவற்ற ஸ்திதி, எந்தவொரு பணியையும் அசைக்க முடியாததாக ஆக்குகிறது. ஒவ்வொரு வழிமுறையிலும் அசாத்தியமான ஒரு பணியும் இலகுவாக சாத்தியமாகும். தொடர்ந்து இது நிகழும். அச்சா.

19ஃ06ஃ2022 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுவனம் 10ஃ04ஃ1991

இதய சிம்மாசனத்திலும் உலக சிம்மாசனத்திலும் இருப்பதற்கு, சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைப் பெறுங்கள்.

இன்று, உலக அதிபதியானவர், குழந்தைகளாகவும் (பாலக்) அதிபதிகளாவும் (மாலிக்) இருக்கும் தனது குழந்தைகளைப் பார்க்கிறார். தற்சமயம் குழந்தைகள் எல்லோரும் தங்களுக்கே அதிபதிகளாக இருக்கிறார்கள். ஏனைய பிறவிகளிலும், அவர்கள் உலகின் அதிபதிகள் ஆகுவார்கள். இறை குழந்தைகள் அதிபதிகள் ஆகுகிறார்கள். பிராமண ஆத்மாக்கள் என்றால், அதிபதிகளாக இருக்கும் ஆத்மாக்கள் என்று அர்த்தம். தற்சமயம், நீங்கள் உங்களின் புலனங்கங்கள் அனைத்திற்கும் அதிபதிகள் ஆவீர்கள். நீங்கள் தங்கியிருக்கும் ஆத்மாக்கள் அல்ல. நீங்கள் உரிமையுள்ள ஆத்மாக்கள். அதாவது, நீங்கள் மாஸ்ரர்கள். நீங்கள் உங்களின் புலனங்கங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுவதில்லை. இதனாலேயே, குழந்தைகளான நீங்கள் அதிபதிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும் இறை போதையைப் பேணுகிறீர்கள். அத்துடன் நீங்கள் சுய இராச்சிய அதிகாரியாக இருக்கும் போதையையும் அனுபவம் செய்கிறீர்கள். உங்களிடம் இரட்டைப் போதை உள்ளது. போதையின் அடையாளம், அழியாத ஆன்மீக சந்தோஷமாகும். நீங்கள் உங்களை முழு உலகிலும் சந்தோஷ பாக்கியத்தைக் கொண்ட ஆத்மாக்களாக சதா அனுபவம் செய்கிறீர்களா? ஆஹா! எனது மேன்மையான பாக்கியமே, அதாவது, எனது மேன்மையான அதிர்ஷ்டமே. உங்களிடம் சந்தோஷ பாக்கியம் உள்ளது. அத்துடன் நீங்கள் சதா சந்தோஷப் போஷாக்கை உண்பதுடன் மற்றவர்களுக்கும் அதைப் பரிமாறுகிறீர்கள். அத்துடன்கூடவே, நீங்கள் எப்போதும் சந்தோஷ ஊஞ்சலிலும் ஆடுகிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு சந்தோஷம் என்ற மகா தானத்தைக் கொடுத்து, அவர்களின் சந்தோஷ பாக்கியத்தையும் உருவாக்குகிறீர்கள். அதேபோல், நீங்கள் உங்களின் வாழ்க்கையையும் வைரம் போன்று பெறுமதி மிக்கதாக ஆக்கியுள்ளீர்களா? அல்லது இன்னமும் அவ்வாறு ஆக்கிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஏற்கனவே அதைச் செய்து விட்டீர்களா? அல்லது இப்போதும் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்களா? பிராமண வாழ்க்கை என்றால் சந்தோஷமாக இருத்தல், சந்தோஷப் போஷாக்கை உண்ணுதல், சந்தோஷ ஊஞ்சலில் ஆடுதல் என்று அர்த்தம். நீங்கள் அத்தகைய பிராமணர்கள்தானே? சந்தோஷத்தைத் தவிர வாழ்க்கையில் வேறு என்ன உள்ளது? உங்களின் வாழ்க்கையே சந்தோஷமாகும். உங்களுக்குச் சந்தோஷம் இல்லாவிட்டால், உங்களுக்கு ஒரு பிராமண வாழ்க்கை இல்லை. சந்தோஷமாக இருப்பது, வாழத் தகுதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதாகும்.

இன்று, பாப்தாதா குழந்தைகள் எல்லோருடைய புண்ணியக் கணக்கையும் பார்த்தார். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் புண்ணியாத்மாக்களே. நீங்கள் எண்ணற்ற பிறவிகளுக்குப் புண்ணியக் கணக்குகளைச் சேமிக்கிறீர்கள். நாள் முழுவதும் நீங்கள் எத்தனை புண்ணியங்களைச் சேமிக்கிறீர்கள்? நீங்களே உங்களுக்குள் இதைச் சோதித்துப் பார்க்க முடியும்தானே? ஒன்று, தானம் கொடுப்பது. மற்றையது, புண்ணியத்தைச் செய்வது. தானத்தை விடப் புண்ணியத்திற்கு மகத்தான முக்கியத்துவம் உள்ளது. ஒரு புண்ணியச் செயல் என்பது சுயநலமற்ற சேவையாகும். புண்ணியச் செயல் என்பது பகட்டிற்காகச் செய்யப்படுவதல்ல. ஆனால் உங்களின் இதயபூர்வமாகச் செய்யப்படுவது. தானம் என்பது ஒன்றில் பகட்டுக்காகவும் இருக்கலாம் அல்லது உங்களின் இதயபூர்வமாகவும் இருக்கலாம். ஒரு புண்ணியச் செயல் என்பது ஆத்மாக்களுக்குத் தேவை ஏற்படும்போது, நீங்கள் ஒத்துழைக்கும் ஒரு செயலைச் செய்வதாகும். அதாவது, நீங்கள் அவர்களுக்குப் பயனுள்ளவர் ஆகுவதாகும். புண்ணியச் செயல்களைச் செய்யும் ஓர் ஆத்மா, பல ஆத்மாக்களின் இதயபூர்வமான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் தமது உதடுகளால் மட்டும் வெறுமனே நன்றி சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்களின் இதயபூர்வமான ஆசீர்வாதங்கள் என்ற பேறுகள் மறைமுகமான முறையில் சேமிக்கப்படும். ஒரு புண்ணியாத்மா, இறைவனின் ஆசீர்வாதங்களாலும் ஆத்மாக்களின் ஆசீர்வாதங்களாலும் பெறுகின்ற உடனடிப் பலனால் நிரம்பி வழிவார். ஒரு புண்ணியாத்மாவின் பார்வையும் மனோபாவமும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்களின் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு புண்ணியாத்மாவின் முகத்தில் மனநிறைவினதும் திருப்தியினதும் பிரகாசம் சதா புலப்படும். தான் பெற்ற பலனால், ஒரு புண்ணியாத்மா எப்போதும் அகங்காரம் உடையவராக இருப்பதில் இருந்து அல்லது அவமதிக்கப்பட்ட உணர்வில் இருந்து விடுபட்டிருப்பார். ஏனென்றால், அந்த ஆத்மா நிரம்பி வழிகின்ற சக்கரவர்த்தியாக இருப்பார். அவர் அகங்காரம் உடையவராகவோ அல்லது அவமதிக்கப்பட்ட உணர்வைக் கொண்டிருப்பதில் இருந்தோ விடுபட்ட கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பார். ஒரு புண்ணியாத்மா, தனது புண்ணியத்தின் சக்தியைத் தனது ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு குழப்பமான கணத்திலும் ஒவ்வொரு செயலிலும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவார். புண்ணியக் கணக்கில் சேமிக்கப்படுவதன் அடையாளம், வீணானவை முடிந்து விடுவதாகும். இத்தகையதொரு புண்ணியாத்மா, உலக இராச்சிய சிம்மாசனத்தைப் பெறுவார். எனவே, உங்களின் கணக்கைச் சோதித்துப் பாருங்கள்: நான் எந்தளவிற்கு ஒரு புண்ணியாத்மா ஆகியுள்ளேன்? நீங்கள் எல்லோரும் புண்ணியாத்மாக்களா? என உங்களிடம் கேட்டால், நீங்கள் எல்லோரும் ஆமாம் என்றே பதிலளிப்பீர்கள், இல்லையா? நீங்கள் எல்லோரும் புண்ணியாத்மாக்களே. ஆனால் வரிசைக்கிரமம் ஆனவர்கள். அல்லது, நீங்கள் எல்லோரும் முதலாம் இலக்கத்தவர்களா? நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள்தானே? எத்தனை பேர் தங்க, வெள்ளி யுகங்களில் சிம்மாசனத்தில் அமர்வீர்கள்? நீங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்வீர்களா? எனவே, நீங்கள் எல்லோரும் வரிசைக்கிரமமானவர்கள், இல்லையா? இலக்கம் ஏன் உருவாக்கப்படுகிறது? இதற்கான காரணம் என்ன? பாப்தாதா குறிப்பாகக்

குழந்தைகளின் ஒரு விசேடமான விடயத்தைச் சோதித்துப் பார்த்தார். நீங்கள் முதலாம் இலக்கத்தவர் ஆகுவதற்கு அந்த ஒரு விடயமே ஒரு தடை ஆகுகிறது.

இப்போது, தபஸ்யா வருடத்தில், எல்லோருக்கும் சம்பூரணம் ஆகுகின்ற இலக்கு உள்ளதா? அல்லது வரிசைக்கிரமம் ஆகுவீர்களா? நீங்கள் சம்பூரணமானவர் ஆகவே விரும்புகிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் எல்லோரும் ஒரு சுலோகனைக் கூறுகிறீர்கள். அதை நீங்கள் எழுதிக் காட்சிப்படுத்துகிறீர்கள். சந்தோஷத்தைக் கொடுத்து, சந்தோஷத்தைப் பெறுங்கள், துன்பம் கொடுக்க வேண்டாம், துன்பத்தைப் பெறவும் வேண்டாம் என்பதே அந்த சுலோகனாகும். இந்த சுலோகன் உறுதியாக உள்ளது. எனவே, பாபா கண்ட பெறுபேறு என்ன? துன்பம் கொடுக்காமல் இருப்பதில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துகிறார்கள். எவ்வாறாயினும், அரைவாசி சுலோகன் ஓகேயாக உள்ளது. துன்பம் கொடுப்பதில், நீங்கள் துன்பம் கொடுக்கக்கூடாது என நினைக்கிறீர்கள். ஆனால், துன்பத்தை எடுப்பது என்று வரும்போது, அவர் எனக்குத் துன்பம் கொடுத்தார், அதனாலேதான் இது நடந்தது அவர் இவ்வாறு சொன்னார், இவர் அவ்வாறு செய்தார், அதனாலேயே இது நிகழ்ந்தது என நீங்கள் சொல்கிறீர்கள். இந்த முறையில் நீங்கள் ஒரு தீர்ப்பைச் சொல்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் உங்களுக்கே ஒரு வக்கீலாகி, இந்த விடயங்களுடன் உங்களின் வழக்கை முன்வைக்கிறீர்கள். எனவே, அரைவாசி சுலோகனில் நீங்கள் நன்றாகக் கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் அதை மிக நன்றாகக் கீழ்க்கோடிட வேண்டும். குறைந்தபட்சம் அரைவாசி சுலோகனில் கவனம் செலுத்தப்பட்டது! எவ்வாறாயினும், மிகுதி அரைவாசி சுலோகனில் செலுத்தப்பட்ட கவனம் பெயரளவிலேயே இருந்தது. அவர் துன்பம் கொடுத்தால், நீங்கள் ஏன் அதை எடுத்தீர்கள்? யார் அதை உங்களுக்கு எடுக்கச் சொன்னது? துன்பத்தை எடுப்பதும், உங்களின் மடிகளைத் துன்பத்தால் நிரப்புங்கள் என்பதும் தந்தையின் ஸ்ரீமத்தா? எனவே, துன்பத்தைக் கொடுக்காதீர்கள். துன்பத்தை எடுக்காதீர்கள். அப்போதுதான் நீங்கள் புண்ணியாத்மா ஆகுவீர்கள். அப்போதுதான் நீங்கள் தபஸ்வி ஆத்மா ஆகுவீர்கள். ஒரு தபஸ்வி ஆகுவதென்றால், மாற்றத்தை ஏற்படுத்துதல் என்று அர்த்தம். ஆகவே, அவர்கள் கொடுக்கும் துன்பத்தைச் சந்தோஷத்தின் வடிவில் ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அப்போது மட்டுமே நீங்கள் ஒரு தபஸ்வி என்று அழைக்கப்படுவீர்கள். இகழ்ச்சியையும் புகழ்ச்சியாகக் கருதுங்கள். அப்போது நீங்கள் ஒரு புண்ணியாத்மா என்று அழைக்கப்படுவீர்கள். அன்னை ஜெகதாம்பா எப்போதும் குழந்தைகள் எல்லோரிலும் இந்தப் பாடத்தை உறுதியாக்கினார்: உங்களை இகழுகின்ற அல்லது உங்களுக்குத் துன்பம் கொடுக்கின்ற ஆத்மாக்களைக் கருணை சொரூபமான பார்வையுடன் பாருங்கள். அவர்களை இகழும் பார்வையுடன் பார்க்காதீர்கள். அவர்கள் உங்களை இகழக்கூடும். ஆனால் நீங்கள் அவர்களுக்கு மலர்களையே கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒரு புண்ணியாத்மா என்று அழைக்கப்படுவீர்கள். உங்களை இகழ்பவர்களையும் உங்களின் இதயபூர்வமாக அணைத்துக் கொள்ளுங்கள். மேலோட்டமாக அவர்களை அணைக்காதீர்கள். ஆனால், உங்களின் இதயபூர்வமாக, மனப்பூர்வமாக அரவணையுங்கள். எனவே, உங்களின் புண்ணியக் கணக்கில் நீங்கள் சேமிப்பதற்குத் தடையாக ஆகும் விடயம் இதுவேயாகும். நான் துன்பம் கொடுக்கக்கூடாது. நான் துன்பம் கொடுக்கவும் கூடாது. துன்பத்தை எடுத்துக் கொள்ளவும் கூடாது. அது எதுவுமே நல்லதாக இல்லாதபோது, நீங்கள் ஏன் அந்தக் குப்பையை எடுத்துச் சேகரிக்கிறீர்கள்?

நீங்கள் துன்பத்தை எடுக்கும்போது, குப்பையைச் சேகரிக்கிறீர்கள். குப்பையில் இருந்து என்ன தோன்றும்? பாவத்தின் சுவடுகள் என்ற வடிவில் கிருமிகள். நீங்கள் பெரிய பாவங்களைச் செய்ய மாட்டீர்கள். பாவத்தின் சுவடுகள் இப்போது எஞ்சியுள்ளன. ஆனால் ஒரு சுவடேனும் எஞ்சியிருக்கக்கூடாது. பல குழந்தைகள் பாபாவிற்கு மிக நல்ல இனிமையான விடயங்களைக் கூறுகிறார்கள். எல்லோரும் இதயபூர்வமாக உரையாடி, மிக இனிமையான விடயங்களைச் சொல்கிறார்கள். எல்லோரிடமும் ஒரு சுலோகம் உறுதியாகி உள்ளது. அது நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது. அது நடக்க வேண்டும் என நீங்கள் விரும்பாவிட்டால், வேறு யார் அது நிகழ வேண்டும் என விரும்பினார்கள், நீங்கள் அது நடந்து விட்டது எனக் கூறுகிறீர்கள்? வேறு யாராவது ஆத்மா இருக்கிறாரா? அது நடந்திருக்கக்கூடாது, ஆனால் அது நடந்துவிட்டது. யார் இதைச் சொல்வது? வேறோர் ஆத்மா சொல்கிறாரா அல்லது நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களா? இந்த விடயங்களால் நீங்கள் உங்களின் தபஸ்யாவை நிரூபிக்க முடியாது. என்ன நிகழக்கூடாதோ, அதைச் செய்யக்கூடாது : ஏதாவதொன்று நிகழ்வதும் நிகழாமல் இருப்பதும் புண்ணியாத்மாவின் அடையாளம் ஆகும். பாப்தாதா ஒவ்வொரு நாளும் பல குழந்தைகளிடமிருந்து இவ்வாறான கதைகளைக் கேட்கிறார். அவர்கள் பேசும்போது, மிகவும் சுவாரசியமான முறையில் ஒருவர் கேட்கும் வகையில் ஒரு கதை சொல்கிறார்கள். உங்களில் சிலருக்கு நீண்ட கதைகளை உருவாக்கும் பழக்கம் உள்ளது. ஏனையோர் சிறுகதைகள் சொல்கிறார்கள். எப்படியாயினும் நீங்கள் பல கதைகளைச் சொல்கிறீர்கள். இன்று, இந்த வருடச் சந்திப்புக்களின் இறுதியான மூழ்கி எழுதலாகும். நீங்கள் எல்லோரும் மூழ்கி எழுவதற்காகவே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? பக்தி மார்க்கத்திலும், அவர்கள் கடைசியாக மூழ்கி எழும்போது, நிச்சயமாக ஏதாவதொன்றை நினைப்பார்கள். ஒன்றில் அவர்கள் எதையாவது தியாகம் செய்வார்கள். அல்லது ஏதாவது சுயநலமான நோக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இரண்டு வகையான எண்ணங்களும் அவர்களிடம் இருக்கும். தபஸ்யா வருடத்திலும், நாள் முழுவதும், எனது எண்ணங்களால், எனது வார்த்தைகளால், எனது செயல்களால், நான் ஒரு புண்ணியாத்மாவாக இருந்து புண்ணியத்தைச்

செய்வேன் என்ற எண்ணத்தைக் கொண்டிருங்கள். புண்ணியத்தின் அடையாளத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. புண்ணியத்தின் உடனடிப் பலன் என்னவென்றால், ஒவ்வோர் ஆத்மாவிடமிருந்தும் ஆசீர்வாதங்கள் பெறப்படுகின்றன. ஒவ்வோர் எண்ணத்திலும் புண்ணியம் சேமிக்கப்படுகிறது. உங்களின் வார்த்தைகளால் ஆசீர்வாதங்கள் சேமிக்கப்படுகின்றன. உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் உங்களின் ஒத்துழைப்பால் எல்லோருடைய இதயத்தில் இருந்தும் நன்றிகள் வெளிப்பட வேண்டும். இதுவே தபஸ்யா எனப்படுகிறது. இத்தகைய தபஸ்யா உலக மாற்றத்திற்கான அடிப்படை ஆகும். இத்தகைய பெறுபேற்றினால் நீங்கள் ஒரு பரிசைப் பெறுவீர்கள். எனவே, என்ன நிகழ்ந்தது என்று எந்தக் கதைகளும் சொல்லாதீர்கள். உண்மையில், ஆசிரியர்கள் எல்லோரும் முதல் பரிசைப் பெற வேண்டும். அவர்களுடன், மதுவனவாசிகளும் அதைப் பெற வேண்டும். ஏன் அது? மதுவனத்தின் அலையும், கருவி ஆசிரியர்களின் அலையும் இலகுவாக இல்லறத்தில் இருப்பவர்களையும் இறை மாணவர்களையும் சென்றடையும். எனவே, நீங்கள் எல்லோரும் முன்னணியில் ஓரிலக்கத்தைப் பெறுவீர்கள். பரிசிற்காக யாருடைய பெயர்கள் வருகின்றன என இப்போது பார்ப்போம். ஆசிரியர்களின் பெயர்களா, மதுவனவாசிகளின் பெயர்களா அல்லது இறை மாணவர்களின் பெயர்களா? இரட்டை வெளிநாட்டவர்களும் தீவிர முயற்சிகளைச் செய்கிறார்கள். பாப்தாதாவிடம் பல பரிசுகள் உள்ளன. அவற்றைப் பெறவிரும்புவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பரிசுகளில் எந்தவிதக் குறைவுமில்லை. பொக்கிஷக் களஞ்சியம் நிறைந்துள்ளது. அச்சா.

நீங்கள் எல்லோரும் இந்த ஒன்றுகூடலுக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் அதை இரசிக்கிறீர்களா அல்லது ஏதாவது கஷ்டம் உள்ளதா? மழை உங்களை வரவேற்றது. இயற்கையும் உங்களில் அன்பு வைத்துள்ளது. நீங்கள் பயப்படவில்லைத்தானே? நீங்கள் நல்ல பிரம்மாபோஜனத்தைப் பெற்றுள்ளீர்கள்தானே? நீங்கள் 63 பிறவிகளாக அங்குமிங்கும் தள்ளப்பட்டீர்கள். இப்போது இலக்கைக் கண்டடைந்துள்ளீர்கள். குறைந்தபட்சம் உங்களுக்கு மூன்று சதுரஅடி நிலமாவது உள்ளது! பெரியதொரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எனவே, அந்த மண்டபத்தின் அழகை நீங்கள் அதிகரித்துள்ளீர்கள். இந்த மண்டபம் பயனுள்ள முறையில் உபயோகிக்கப்படுகிறது. எந்தவிதமான கஷ்டமும் இல்லைத்தானே? எவ்வாறாயினும், இவ்வாறான ஒன்றுகூடல்களை நீங்கள் செய்து கொண்டேயிருத்தல் என்பது இதன் அர்த்தமில்லை. படைப்புடன் வசதிகளும் அதிகரிக்க வேண்டும். அச்சா.

குழந்தைகளாகவும் அதனால் அதிபதிகளாகவும் உள்ள மேன்மையான ஆத்மாக்கள் எல்லோருக்கும், ஒவ்வோர் அடியிலும் சதா புண்ணியத்தைச் சேமிக்கும் புண்ணியாத்மாக்களுக்கும், சதா இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதுடன், உலக சிம்மாசனத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், மாஸ்ரர் சந்தோஷக்கடல்களாக இருந்து, சதா சந்தோஷத்தைக் கொடுத்து சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆத்மாக்களுக்கும், மாஸ்ரர் அருள்பவர்களாக இருந்து, சதா எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும்.

பாப்தாதா தாதிகளிடம் பேசுகிறார்:

மகாராத்திகள் எல்லோரும் எல்லோரையும் சக்திவாய்ந்தவர்களாக ஆக்குவதற்குத் தமது இதயபூர்வமாக மிக நல்ல சேவை செய்வதை பாப்தாதா கண்டார். அதனால் உங்களுக்கு பாபா நன்றி சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் உங்களின் கணக்குகளில் சேமித்துள்ளீர்கள். நீங்கள் மிக நல்ல கணக்குகளைச் சேமித்துள்ளீர்கள். மகாவீர் குழந்தைகளின் தைரியத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்த்து பாப்தாதா பலமில்லியன் மடங்குகள் சந்தோஷப்படுகிறார். நீங்கள் தைரியத்தைப் பேணினீர்கள். ஒன்றுகூடல் எப்போதும் அன்பெனும் இழையால் கட்டப்பட்டுள்ளது. அதனால் வெற்றி ஏற்படுகிறது. ஒன்றுகூடல் வலிமையானதுதானே? சிறிய மாலை வலிமையானது. கைக்காப்பு தயாராக உள்ளது. மாலை தயாராக இல்லை. ஆனால் கைக்காப்பு தயாராக உள்ளதுதானே? இதனாலேயே, சிறியதொரு மாலையும் பூஜிக்கப்படுகிறது. பெரிய மாலையும் இன்னமும் தயாராக ஆகிக் கொண்டிருக்கிறது. அதுவும் தயாராகும். அதைத் தயார் செய்ய வேண்டும். பெரிய மாலைக்குச் சில மணிகள் தயாராக உள்ளன என உங்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. மணிகளை ஒன்றாகச் சேர்ப்பதற்குச் சிறியதொரு எல்லை காணப்படுகிறது. சிறியதொரு மாலையும் மிக நன்றாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மாலையால், இலகுவான வெற்றி ஏற்படுகிறது. மாலையின் மணிகளின் கழுத்துக்களில் எப்போதும் வெற்றி மாலை இருக்கும். வெற்றித் திலகம் இடப்பட்டுள்ளது. பாப்தாதா சந்தோஷப்படுகிறார். பலமில்லியன் மடங்கு பாராட்டுக்கள். நீங்களே கருவிகள். தந்தையே கரவன்ஹார் (தூண்டுகின்ற ஒருவர்). யார் அதைச் செய்வது? நீங்களே அதைச் செய்கின்ற கருவிகள் ஆவீர்கள். தந்தையே முதுகெலும்பாக இருக்கிறார். இதனாலேயே, இது மிகவும் நல்லது. நீங்கள் அன்பின் பொறுப்பையும் பராமரிப்பையும் மிக நன்றாக நிறைவேற்றினீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நல்ல எண்ணங்களின் விதைகளில் இருந்து நல்ல பழத்தைப் பெறுவதன் மூலம் நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

வெற்றி சொரூபங்கள் ஆக இருக்கும் ஆத்மாக்களுக்கு, அவர்களின் ஒவ்வோர் எண்ணமும் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பலனுள்ளதாக இருக்கும். அவர்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியைப் பெறுகிறார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும். இதனாலேயே, அவர்கள் உண்மையான வாசகங்கள் எனப்படுகிறார்கள். வெற்றி சொரூபங்களாக இருக்கும் ஆத்மாக்களின் ஒவ்வோர் எண்ணமும் வார்த்தையும் செயலும் வெற்றியை ஏற்படுத்தும். அவை வீணாகிப் போகாது. எண்ணங்களின் விதை மிக நன்றாக இருந்து, அதிலிருந்து வெளிவரும் பழம் நன்றாக இல்லாவிட்டால், திடசங்கற்பமான தாரணை என்ற நிலம் நன்றாக இல்லை. அல்லது அவர்கள் அதில் கவனம் செலுத்துவதில் ஏதோ குறைகிறது.

சுலோகம்:
நீங்கள் துன்ப அலைகளில் இருந்து விடுபட விரும்பினால், ஒவ்வொரு செயலையும் ஒரு கர்மயோகியாகச் செய்யுங்கள்.

ஓம் சாந்தி
அறிவித்தல்: இன்று, மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை உலக தியான வேளை. சகல இராஜயோகி தபஸ்வி சகோதரர்களும் சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை விசேடமான தியானத்தில் அமருங்கள். குறிப்பாக யோகம் செய்யும் வேளையில், உங்களின் சூட்சுமமான தேவதை ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். உலகைச் சுற்றி வரும் வேளையில், சகல ஆத்மாக்களுக்கும் சடப்பொருளுக்கும் ஒளியையும் சக்தியையும் கொடுக்கும் சேவையைச் செய்யுங்கள்.