19.07.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    25.02.86     Om Shanti     Madhuban


மதுவனத்தில் 50 இரட்டை வெளிநாட்டு சகோதர, சகோதரிகளின் அர்ப்பணிப்பு விழாவின்போது அவ்யக்த பாப்தாதாவின் மேன்மையான வாசகங்கள்.


இன்று, பாப்தாதா குறிப்பாக இந்த மேன்மையான தினத்திற்காக விசேடமான அன்பு நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். இன்று என்ன வைபவத்தை நீங்கள் கொண்டாடினீர்கள்? புறக் காட்சி அழகானதாகவே இருந்தது. அனைவரின் இதயங்களில் இருந்தும் ஊக்கம் உற்சாகத்தின் ஒலியும் அவர்களின் திடசங்கற்பத்தின் ஒலியும் இதயங்களுக்கு சௌகரியம் அளிக்கும் தந்தையை வந்தடைந்தன. எனவே, இன்றைய தினத்தை ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் விழா என்று அழைக்க முடியும். நீங்கள் முதலில் தந்தைக்குச் சொந்தமான வேளையில் இருந்து, ஓர் உறவுமுறையை ஏற்படுத்தினீர்கள். அது தொடரும். எவ்வாறாயினும், நீங்கள் இந்த விசேடமான தினத்தை ஒரு விசேடமான முறையில் கொண்டாடினீர்கள். இதுவே திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. என்ன நிகழ்ந்தாலும், மாயையின் புயல்கள் அடித்தாலும், மனிதர்களினூடாக வெவ்வேறு சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், இயற்கையின் குழப்பங்கள் என்ற காட்சிகள் இருந்தாலும், உங்களின் லௌகீக மற்றும் அலௌகீக உறவுமுறைகளில் எந்த வகையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அவற்றின் இடையே உங்களின் மனதில் மிகப் பலம் வாய்ந்த எண்ணங்களின் புயல்கள் இருக்குமாயின், நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கே சொந்தமானவர்கள். ஒரே நம்பிக்கையும் ஒரே ஆதாரமும் என்ற திடசங்கற்பமான எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? அல்லது, நீங்கள் வெறுமனே மேடையில் அமர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் இரட்டை ஸ்ரேஜில் இருக்கிறீர்களா அல்லது ஒரு ஸ்ரேஜில் இருக்கிறீர்களா? ஒன்று, இந்தப் பௌதீகமான மேடை. மற்றையது, திடசங்கற்பமான எண்ணத்தின் ஸ்திதி. திடசங்கற்பத்திற்குரிய ஸ்திதி. எனவே, நீங்கள் இரட்டை ஸ்ரேஜில் இருந்தீர்கள், அல்லவா? நீங்கள் அழகான மாலைகளை அணிந்திருந்தீர்கள். அந்த மாலைகளை மட்டும் அணிந்திருந்தீர்களா? அல்லது, அத்துடன் வெற்றி மாலைகளையும் அணிந்திருந்தீர்களா? வெற்றி என்பது உங்களின் கழுத்து மாலை ஆகும். இந்தத் திடசங்கற்பமே வெற்றியின் அடிப்படை ஆகும். இந்தப் பௌதீக மாலைகளுடன், நீங்கள் வெற்றி மாலைகளையும் அணிந்திருந்தீர்கள், அல்லவா? பாப்தாதா எப்போதும் ஓர் இரட்டைக் காட்சியையே பார்ப்பார். அவர் பௌதீகமான காட்சியை மட்டும் பார்ப்பதில்லை. அந்தப் பௌதீகக் காட்சியுடன், அவர் மனதின் ஆத்ம உணர்வு ஸ்திதியையும், திடசங்கற்பமான எண்ணத்தையும் வெற்றி என்ற மேன்மையான மாலையையும் பார்த்தார். இரட்டை மாலைகளையும் இரட்டை ஸ்ரேஜையும் பாபா பார்த்தார். உங்கள் அனைவருக்கும் ஒரு திடசங்கற்பமான எண்ணம் இருந்தது. மிகவும் நல்லது. என்னதான் நிகழ்ந்தாலும், உங்களின் உறவுமுறைக்கான பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். கடவுளின் அன்பிற்கான பொறுப்பை எப்போதும் நிறைவேற்றுவதன் மூலம் நீங்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி உங்களின் கழுத்து மாலை என்பதற்கு உத்தரவாதம் உள்ளது. வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்கு உரியவர் ஆகுவதே திடசங்கற்பமான எண்ணம் ஆகும். உங்களிடம் ஒரேயொருவரே இருக்கும்போது, நீங்கள் இயல்பாகவும் இலகுவாகவும் நிலையான, ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பீர்கள். சகல உறவுமுறைகளினதும் அழியாத நூலை நீங்கள் கட்டியிருக்கிறீர்கள், இல்லையா? ஓர் உறவுமுறை இல்லாமல் போனாலும், தளம்பல் ஏற்படும். இதனாலேயே, சகல உறவுமுறைகளுக்குமான நூலை நீங்கள் கட்டியிருக்கிறீர்கள். நீங்கள் ஓர் இணைப்பை ஏற்படுத்தினீர்கள். அந்த எண்ணத்தை உருவாக்கினீர்கள். நீங்கள் சகல உறவுமுறைகளையும் பேணுகிறீர்களா அல்லது பிரதானமான மூன்று உறவுமுறைகள் மட்டுமா? நீங்கள் சகல உறவுமுறைகளையும் பேணினால், சகல பேறுகளையும் நீங்கள் பெறுவீர்கள். சகல உறவுமுறைகளும் இல்லாவிட்டால், ஏதாவதொரு பேறு இல்லாமல் போய்விடும். இது அனைவருக்குமான விழா, இல்லையா? இந்தத் திடசங்கற்பமான எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம், உங்களின் எதிர்கால முயற்சிகளிலும் நீங்கள் ஒரு விசேடமான உயர்த்தியைப் பெறுவீர்கள். இந்த வழிமுறையானது குறிப்பாக உங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும். திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் விழாவிற்காக பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அத்துடன், நீங்கள் எப்போதும் அழியாதவர் ஆகுவீர்களாக, நீங்கள் அமரர்கள் ஆகுவீர்களாக என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறார்.

இன்று, ஆசியாவில் இருந்து வந்துள்ள குழுவினர் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். ஆசியாவின் சிறப்பியல்பு என்ன? வெளிநாட்டுச் சேவைக்காக முதலில் சென்ற குழு, ஜப்பானுக்குச் சென்ற குழுவே ஆகும். எனவே, அதுவே ஒரு சிறப்பியல்பு, இல்லையா? சாகார் பாபாவின் தூண்டுதல்களுக்கேற்ப, குறிப்பாக வெளிநாட்டுச் சேவைக்கான அழைப்பிதழ், ஜப்பானில் இருந்தே வந்தது. வெளிநாட்டுச் சேவை அங்கிருந்தே ஆரம்பமாகியது. எனவே, ஆசியா ஸ்தாபனையில் இலக்கத்தில் முன்னணியில் உள்ளது. அதுவே வெளிநாட்டில் இருந்து வந்த முதல் அழைப்பிதழ் ஆகும். ஆசியாவிலேயே, ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து வந்த அழைப்புக்களின் மூலம் சேவை ஆரம்பமாகியது. எனவே, ஆசியா மிகவும் அதிர்ஷ்டசாலி! ஆசியாவின் இரண்டாவது சிறப்பியல்பானது, அது பாரதத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. நெருக்கமாக இருப்பவர்கள் அதியன்பிற்குரியவர்கள் எனக் கூறப்படுகிறது. அதியன்பிற்குரிய குழந்தைகள் மறைந்திருக்கிறார்கள். ஒவ்வோர் இடத்திலும், மிக நல்ல இரத்தினங்கள் பலர் வெளிப்பட்டுள்ளார்கள்;. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தரம் உள்ளது. உங்களின் சேவையின் பலன் நல்லது. இந்த முறையில், எண்ணிக்கையும் மெதுவாக அதிகரிக்கிறது. நீங்கள் அனைவரும் அன்பானவர்கள். நீங்கள் அனைவரும் அழகானவர்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிக அன்புகொண்டவர். இதுவே பிராமணக் குடும்பத்தின் சிறப்பியல்பு ஆகும். நீங்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களை விட அதிகளவு அன்பு கொண்டிருப்பதையும், தந்தையும் உங்களிடமே அதிகளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும், பாப்தாதா உங்களை மட்டுமே முன்னேறச் செய்கிறார் என்பதையும் அனுபவம் செய்கிறீர்கள். இதனாலேயே, பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் மிக நல்ல அர்த்தமுள்ள ரூபத்தைச் செய்துள்ளார்கள். அவர்கள் வல்லபரை (கிருஷ்ணரை) ஒவ்வொரு கோபியுடனும் காட்டியுள்ளார்கள். அவர் ஒரு இராதையுடனோ அல்லது எட்டு இளவரசிகளுடனோ மட்டும் இல்லை. கோபிவல்லபர் ஒவ்வொரு கோபியுடனும் காட்டப்படுகிறார். உதாரணமாக, நீங்கள் தில்வாலா ஆலயத்திற்குச் செல்லும்போது, எது உங்களின் ரூபம் அல்லது எது உங்களின் மூலஸ்தானம் என்பதை நீங்கள் குறித்துக் கொள்கிறீர்கள். எனவே, இந்த ஒன்றுகூடலில் உள்ள உங்கள் ஒவ்வொருவரினதும் ஒரு ரூபம் நடனம் ஆடுபவர்களில் உள்ளதா? இது மகா நடனம் (மகாராஸ்) என்று அழைக்கப்படுகிறது. இந்த மகா நடனத்திற்கு மகத்தான புகழ் உள்ளது. பாப்தாதா உங்கள் ஒவ்வொருவரிலும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். ஒவ்வொருவரிலும் அடுத்தவரை விட அதிகளவு அன்பு வைத்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையினதும் மேன்மையான பாக்கியத்தைக் கண்டு பாப்தாதா களிப்படைகிறார். அது யாராக இருந்தாலும், நீங்கள் அனைவரும் பலமில்லியன்களில் கையளவினர் ஆவீர்கள். நீங்கள் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆவீர்கள். உலகுடன் ஒப்பிடும்போது, நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடியினர், இல்லையா? ஜப்பான் மிகப்பெரியது. ஆனால் தந்தையின் குழந்தைகள் எத்தனை பேர் அங்கு இருக்கிறார்கள்? எனவே, நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடியினர், இல்லையா? பாப்தாதா ஒவ்வொருவரினதும் சிறப்பியல்பையும் பாக்கியத்தையும் பார்க்கிறார். நீங்கள் பலமில்லியன்களில் கைப்பிடி அளவிலான அதியன்பிற்குரியவர்கள். தந்தைக்கு, நீங்கள் எல்லோரும் விசேடமான ஆத்மாக்களே. சிலரைச் சாதாரணமானவர்கள் என்றும் சிலரை விசேடமானவர்கள் என்றும் தந்தை பார்ப்பதில்லை. எல்லோரும் விசேடமானவர்கள். இந்தப் பக்கம், மகத்தான விரிவாக்கம் இடம்பெற உள்ளது. ஏனெனில், இந்த முழுப் பக்கத்திலும் விசேடமான இரட்டை சேவை இடம்பெறுகிறது. முதலில், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அத்துடன் இந்தப் பக்கத்தில் சிந்தில் இருந்து வெளிப்பட்ட பல ஆத்மாக்கள் இருக்கிறார்கள். உங்களால் அவர்களுக்கும் சேவை செய்ய முடியும். நீங்கள் அவர்களை நெருக்கமாகக் கொண்டுவந்தால், அவர்களின் ஒத்துழைப்பால், உங்களால் ஏனைய மதங்களை அடைவது இலகுவாக இருக்கும். இரட்டைச் சேவை செய்வதன் மூலம், உங்களால் இரட்டை விரிவாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஏதோவொரு முறையில், அது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ, அவர்களில் விதை விதைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறிமுகத்தைப் பெற்றிருப்பதனால், அவர்களால் இலகுவாக உறவுமுறையில் வரமுடியும். உங்களால் அதிகளவு சேவை செய்ய முடியும். ஏனெனில், இது சகல ஆத்மாக்களினதும் (சகல மதங்களில் இருந்தும் வந்திருப்பவர்களின்) குடும்பம் ஆகும். பிராமணர்கள் சகல மதங்களிலும் பரவியுள்ளார்கள். பிராமணர்கள் போகாத மதமே கிடையாது. அவர்கள் இப்போது சகல மதங்களில் இருந்தும் வெளிப்பட்டு, இங்கு வருகிறார்கள். பிராமணக் குடும்பத்திற்கு முன்னால் வந்ததும், உங்களுக்கு சொந்தமாக இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. ஏதோவொரு கர்மக்கணக்கால் நீங்கள் அங்கு சென்றீர்கள். இப்போது உங்களின் குடும்பத்திற்குத் திரும்பி வந்துள்ளீர்கள். கருவிகளாகி, உங்களின் சேவையின் பாக்கியத்தைப் பெறுவதற்காகவே நீங்கள் எங்கும் இருந்து இங்கே வந்துள்ளீர்கள். இது சிறியதொரு பாக்கியம் இல்லை. இது மிகவும் மேன்மையான பாக்கியம். நீங்கள் புண்ணியாத்மாக்கள் அனைவரிலும் மகத்தானவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் மகாதானிகளின், மகத்தான சேவையாளர்களின் பட்டியலில் இடம்பெறுகிறீர்கள். எனவே, கருவிகள் ஆகுவதும் விசேடமானதொரு பரிசே ஆகும். இரட்டை வெளிநாட்டவர்கள் இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். உங்களுக்கு சிறிதளவு அனுபவம் கிடைக்கிறது. அதன்பின்னர் நீங்கள் ஒரு நிலையத்தைத் தாபிப்பதற்குக் கருவிகள் ஆகுகிறீர்கள். எனவே, இது பிந்தி வந்து விரைவாகச் செல்லும் ஒரு விசேடமான பரிசு ஆகும். சேவை செய்வதன் மூலம், உங்களில் பெரும்பாலானோரிடம் இந்த விழிப்புணர்வு உள்ளது : கருவிகளான நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது எவ்வாறு செயற்பட்டாலும், உங்களைப் பார்க்கும் மற்றவர்கள் அதையே செய்வார்கள். எனவே, இது இரட்டைக் கவனம் ஆகுகிறது. இரட்டைக் கவனத்தைச் செலுத்துவதன் மூலம், உங்களுக்கு இரட்டை உயர்த்தி கிடைக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? இரட்டை வெளிநாட்டவர்கள் இரட்டை உயர்த்தியைப் பெற்றுள்ளார்கள். எங்கும் உள்ள நிலங்கள் இப்போது மிக நல்லதாக ஆகியுள்ளன. நிலத்தை உழுத பின்னர், அந்த நிலம் நல்லதாகும், இல்லையா? அதன்பின்னர், அதில் இலகுவாக மிக நல்ல பழம் கிடைக்கும். அச்சா. ஆசியாவின் பெரிய மைக்குகளின் சத்தம் விரைவில் பாரதத்தை வந்தடையும். ஆகவே, இத்தகைய மைக்குகளைத் தயாரியுங்கள். அச்சா.

மூத்த தாதிகளிடம்: உங்களின் புகழை என்னவென்று சொல்வது? தந்தையைப் பற்றிக் கூறும்போது, கடலை மையாக மாற்றி, பூமியைக் கடதாசியாக ஆக்கினாலும் என்பதைப் போல், தாதிகளான உங்கள் அனைவரின் புகழும் உள்ளன. பாபா உங்களைப் புகழ ஆரம்பித்தால், அது இரவு பகலாக நீடிக்கும். அது முழுமையான ஏழு நாள் பாடநெறியைப் போன்றே இருக்கும். நீங்கள் நல்லவர்கள். உங்கள் அனைவருக்கும் இடையே உள்ள நடனம் (ஒத்திசைவு) நல்லதே. உங்கள் அனைவரினதும் ஜாதகம் (ராசி) ஒன்றேயாகும். நீங்கள் அனைவரும் மிக நல்ல நடனத்தை (ராஸ்) ஆடுகிறீர்கள். கையோடு கைகோர்த்துச் செல்வது, அதாவது, உங்களின் எண்ணங்களை ஒத்திசைப்பதே இந்த நடனம் ஆகும். எனவே, தாதிகளான உங்கள் அனைவரினதும் இந்த நடனத்தை பாப்தாதா தொடர்ந்து அவதானிக்கிறார். இது விசேடமான எட்டு இரத்தினங்களின் நடனம் ஆகும். தாதிகளான நீங்கள் குடும்பத்தின் விசேடமான அலங்காரம் ஆவீர்கள். அலங்காரம் இல்லாவிட்டால், எந்தவிதமான அழகும் இருக்காது. எனவே, அனைவரும் உங்களை அந்த அன்புடனேயே பார்க்கிறார்கள்.

தாதி பிரிஜேந்திராவிடம்: நீங்கள் லௌகீக மற்றும் அலௌகீக வாழ்க்கைகளில் குழந்தைப்பருவத்தில் இருந்தே மற்றவர்களை அலங்கரிக்கிறீர்கள். தொடர்ந்து அலங்கரிப்பதன் மூலம், நீங்கள் இப்போது அலங்கரிக்கப்பட்டுள்ளீர்கள். அவ்வாறுதானே? பாப்தாதா எப்போதும் மகாவீர், மகாராத்திக் குழந்தைகளை நினைப்பது மட்டுமல்ல, பாப்தாதா அவர்களைத் தனக்குள் கலந்துள்ளார். தனக்குள் கலந்திருப்பவர்களை நினைவு செய்ய வேண்டியதில்லை. பாப்தாதா எப்போதும் ஒவ்வொரு விசேட இரத்தினத்தையும் உலகின் முன்னால் வெளிப்படுத்துகிறார். எனவே, நீங்கள் உலகின் முன்னால் வெளிப்படுத்தப்படவுள்ள விசேடமான இரத்தினங்கள் ஆவீர்கள். அனைவரின் சந்தோஷத்தாலும் நீங்கள் மேலதிக உதவியைப் பெறுகிறீர்கள். உங்களின் சந்தோஷத்தைப் பார்க்கையில், அனைவரும் சந்தோஷம் என்ற போஷாக்கைப் பெறுகிறார்கள். ஆகவே, நீங்கள் தொடர்ந்து அனைவரிடமிருந்தும் அன்பான ஆசீர்வாதங்களைப் பெறுவதனால், உங்கள் அனைவரினதும் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. நீங்கள் இப்போது அதிகளவு பணியைச் செய்ய வேண்டும். எனவே, நீங்களே குடும்பத்தின் அலங்காரம் ஆவீர்கள். அனைவரும் மிகுந்த அன்புடன் உங்களைப் பார்க்கிறார்கள். ஒருவரின் தலையில் இருந்து குடையை நீக்கினால், அது எவ்வாறிருக்கும்? எப்போதும் ஒரு குடையை வைத்திருப்பவர்கள், அதை நீக்கினால், அது எவ்வாறிருக்கும்? எனவே, நீங்கள் அனைவரும் இந்தக் குடும்பத்தின் பாதுகாப்புக் குடை ஆவீர்கள்.

தாதி நிர்மல்சாந்தாவிடம்: நீங்கள் சதா உங்களின் ஞாபகார்த்தத்தை மதுவனில் காண்கிறீர்கள். ஞாபகார்த்தங்கள் நினைப்பதற்காகவே உள்ளன. எவ்வாறாயினும், உங்களின் நினைவு ஒரு ஞாபகார்த்தத்தை உருவாக்குகிறது. நடக்கும்போதும் அசையும்போதும், முழுக் குடும்பமும் கருவிகள் ஆகிய ஆதாரமூர்த்திகளை நினைவுசெய்கிறது. எனவே, நீங்கள் ஓர் ஆதாரமூர்த்தி. ஸ்தாபனைப் பணியில் நீங்கள் ஒரு வலுவான ஆதார மூர்த்தியாக இருந்ததால், இந்த விரிவாக்கம், முன்னேற்றம் என்ற கட்டடமும் மிகவும் பலமானதாக உள்ளது. ஏன்? ஏனென்றால் ஆதாரம் பலமானது.

இலேசாகவும் ஒளியாகவும் ஆகுங்கள். (அவ்யக்த முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற இரத்தினங்கள்)

டபிள் லைற் ஆக இருத்தல் என்றால், ஆத்மாவின் ஒளி ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, பின்னர் இயல்பாகவே இலேசாக ஆகுதல் என்று அர்த்தம். இலேசாகவும் ஒளியாகவும் இருப்பவர்கள் மட்டுமே தேவதைகள் ஆவார்கள். தேவதைகள் ஒருபோதும் எவரின் பந்தனத்திலும் கட்டுப்படுவதில்லை. அவர்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதனால், இந்தப் பழைய உலகின் கவர்ச்சிகளால் அவர்கள் ஒருபோதும் கவரப்படுவதில்லை.

டபிள் லைற் ஆக இருத்தல் என்றால், சதா பறக்கும் ஸ்திதியை அனுபவித்தல். இலேசாக இருப்பவர்கள் சதா உயரே பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சுமையைக் கொண்டிருப்பவர்கள் இங்கு கீழேயே இருப்பார்கள். எனவே, இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஆத்மா என்றால், எந்தவிதமான சுமையும் கிடையாது. ஏனெனில், எந்தவொரு முறையாலும் உங்களுக்குள் சுமை ஏற்பட்டால், உயரே பறப்பதில் இருந்து நீங்கள் தடுக்கப்படுவீர்கள். இரட்டைப் பொறுப்பு இருந்தாலும், இரட்டை லைற் ஆக இருங்கள். இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதன் மூலம், உங்களின் லௌகீகப் பொறுப்புக்களால் நீங்கள் ஒருபோதும் களைப்படைய மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பீர்கள். நம்பிக்கைப் பொறுப்பாளர் ஒருபோதும் களைப்படைய மாட்டார். இல்லறம் அல்லது குடும்பம் உங்களுடையது என நீங்கள் நினைத்தால், உங்களுக்குள் சுமை ஏற்படும். எவ்வாறாயினும், எதுவுமே உங்களுடையது இல்லாதபோது, எந்தவிதமான சுமையும் இருக்காது. முழுமையாக அன்பானவராகவும் பற்றற்றவராகவும் இருங்கள். ஒரு அதிபதியாகவும் ஒரு குழந்தையாகவும் இருங்கள்.

எப்போதும் உங்களைத் தந்தையிடம் ஒப்படையுங்கள். நீங்கள் எப்போதும் இலேசாக இருப்பீர்கள். உங்களின் பொறுப்புக்களைத் தந்தையிடம் ஒப்படையுங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களின் சுமைகளைத் தந்தையிடம் ஒப்படையுங்கள். நீங்கள் இலேசானவர் ஆகுவீர்கள். உங்களின் புத்தியால் உங்களை அர்ப்பணியுங்கள். உங்களின் புத்தியால் உங்களை அர்ப்பணித்தால், புத்தியில் வேறு எதுவும் இருக்காது. அவ்வளவே. அனைத்தும் தந்தைக்குச் சொந்தமானது. அனைத்தும் தந்தையில் உள்ளது. அப்போது வேறு எதுவும் இருக்காது. டபிள் லைற் என்றால், உங்களின் சுபாவத்தாலும் அல்லது சம்;ஸ்காரத்தாலும் சுமையற்றவராக இருத்தல் என்று அர்த்தம். எந்தவிதமான சுமையும் இல்லாமல் இருப்பதே இலேசான தன்மை எனப்படுகிறது. உங்களின் வீணான எண்ணங்களின் சுமையும் இருக்கமாட்டாது. எந்தளவிற்கு நீங்கள் இலேசாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களால் இலகுவாகப் பறக்கும் ஸ்திதியை அனுபவம் செய்ய முடியும். யோகம் செய்வதற்கு சிறிதளவேனும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டியிருந்தால், நிச்சயமாக உங்களுக்குள் ஏதாவது சுமை உள்ளது. எனவே, பாபா, பாபா! என்ற ஆதாரத்துடன் தொடர்ந்து பறவுங்கள்.

சதா தந்தைக்குச் சமமானவர் ஆகும் உங்களின் இலக்கை நினைவு செய்யுங்கள். நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும்போது, பலவீனம் அடைகிறீர்கள். ஆகவே, தந்தையைப் பார்த்து, தந்தையைப் பின்பற்றுங்கள். பறக்கும் ஸ்திதிக்குள் செல்வதற்கான மேன்மையான வழிமுறை, அனைத்தும் உங்களுடையதே என்ற ஒரேயொரு கூற்றே ஆகும். எனவே, என்னுடையது என்ற வார்த்தையை உங்களுடையது என்று மாற்றுங்கள். நான் உங்களுடையவர் என நீங்கள் கூறும்போது, ஆத்மா இலேசானவர் ஆகுகிறார். அனைத்தும் அவருக்குச் சொந்தமாக இருப்பதனால், நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் ஆகுகிறீர்கள். ஆரம்பத்தில், ஓர் ஒளி கடந்து செல்வதைப் போல் மற்றவர்கள் உணரும் வகையில் நீங்கள் ஒரு ஸ்திதியைப் பயிற்சி செய்தீர்கள். அவர்களால் உங்களின் சரீரங்களைப் பார்க்க முடியவில்லை. இதைப் பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு வகையான பரீட்சைத்தாளிலும் சித்தி எய்தினீர்கள். இப்போது காலம் மிகவும் தீங்கானதாக இருப்பதனால், இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் பயிற்சியை அதிகரியுங்கள். உங்களை சதா உங்களின் ஒளி ரூபத்தில் காணும்போது, நீங்கள் சதா பாதுகாப்பாக இருப்பீர்கள். உங்களின் சேவைத்தலத்திற்கு அவர்கள் வந்தவுடன் ஒளிக்கோட்டையை அவர்கள் காணவேண்டும்.

பெரியதொரு இயந்திரம் மின்சாரத்தால் இயங்குவதைப் போல், எதையாவது செய்யும்போது, நீங்கள் அனைவரும் சதா இணைப்பின் மூலம் சக்தியூட்டப்படுவதன் அடிப்படையில் இலேசாகவும் ஒளியாகவும் ஆகுகிறீர்கள். இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஸ்திதியின் அடிப்படையில் சகல முயற்சிகளும் சிரமங்களும் முடிவடைகின்றன. ஏதாவது உங்களுக்குச் சொந்தம் என்ற உணர்வை முடித்துவிடுங்கள். சதா உங்களை இறைசேவை செய்யும் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என உணருங்கள். நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் ஆகுவீர்கள். உங்களுடன் நெருங்கிய தொடர்பில் வரும் எவரும், நீங்கள் ஆன்மீகமாகவும் அலௌகீகமாகவும் இருப்பதை உணர வேண்டும். அவர்கள் உங்களின் தேவதை ரூபத்தை மட்டுமே பார்க்க வேண்டும். தேவதைகள் எப்போதும் மேலேயே இருப்பார்கள். தேவதைகள் இறக்கைகளுடன் காட்டப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் பறக்கும் பறவைகள்.

உங்களின் மனதில் திடசங்கற்பமும், உங்களின் ஸ்திதி இலேசாகவும் ஒளியாகவும் இருந்தால் மட்டுமே, உங்களால் சதா சந்தோஷ ஊஞ்சலில் ஆடுவதுடன், எந்தவிதமான தடைகளையும் நீக்கி, மற்றவர்களின் கஷ்டங்களையும் நீக்க முடியும். எதுவும் என்னுடையதல்ல. அனைத்தும் தந்தைக்குச் சொந்தமானது. நீங்கள் ஒரு சுமையை உங்களுக்குள் வைத்திருந்தால், சகல வகையான தடைகளும் ஏற்படும். எதுவும் என்னுடையது என்று இல்லாதபோது, நான் தடைகளில் இருந்து விடுபட்டிருப்பேன். எப்போதும் உங்களை இலேசாகவும் ஒளியாகவும் கருதி, தொடர்ந்து சேவை செய்யுங்கள். சேவையில் நீங்கள் எந்தளவிற்கு இலேசாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிக இலேசாக உங்களால் பறக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் மற்றவர்கள் பறப்பதற்கும் தூண்ட முடியும். இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதுடன் நினைவில் இருப்பதன் மூலம் சேவை செய்வதே, வெற்றிக்கான அடிப்படை ஆகும்.

உங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுவது அத்தியாவசியமானதே. எனினும், உங்களின் பொறுப்புக்கள் எந்தளவிற்கு அதிகமாக உள்ளதோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் டபிள் லைற்றாக இருக்க வேண்டும். உங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றும்போது, எந்த முறையிலும் அவற்றின் சுமையை உணராதவராக இருங்கள். இதுவே தந்தையை நேசித்தல் எனப்படும். உங்களுக்குப் பல பொறுப்புக்கள் இருப்பதனால், நீங்கள் என்ன செய்வது எனக் கவலைப்படாதீர்கள். நான் இதைச் செய்வதா வேண்டாமா? இதைச் செய்வது மிகவும் கடினம் என நினைக்காதீர்கள். இதை அனுபவம் செய்தல் என்றால் சுமையுடன் இருத்தல் என்று அர்த்தம். இலேசாகவும் ஒளியாகவும் இருத்தல் என்றால், இந்த உணர்விற்கு அப்பால் செல்லுதல் என்று அர்த்தம். பொறுப்புக்களின் சுமையுணர்வால் எந்தவிதத்திலும் உங்களின் ஸ்திதி தளம்பல் அடைய அனுமதிக்காதீர்கள். சதா தமது புத்திகளில் முழுமையான நம்பிக்கையை வைத்திருப்பவர்கள், எப்போதும் இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஸ்திதியில் இருப்பார்கள். அத்துடன் முற்றிலும் கவலையற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் பறக்கும் ஸ்திதியில் இருப்பார்கள். பறக்கும் ஸ்திதியே அனைத்து ஸ்திதிகளிலும் அதியுயர்ந்த ஸ்திதி ஆகும். இத்தகைய ஆத்மாக்களின் புத்திகளின் பாதங்கள் தரையைத் தொட மாட்டாது. தரையைத் தொடாமல் இருத்தல் என்றால், சரீர உணர்விற்கு அப்பால் செல்லுதல் என்று அர்த்தம். எப்போதும் சரீர உணர்வெனும் தரைக்கு மேலே இருப்பவர்கள், எப்போதும் தேவதைகளாக இருப்பார்கள்.

இப்போது, உங்களின் தெய்வீகப் புத்தியெனும் வாகனத்தால் உங்களை அதியுயர்ந்த உச்சியில் ஸ்திரமாக்கும்படியாக இலேசாகவும் ஒளியாகவும் ஆகுங்கள். அதன்பின்னர், உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒளி மற்றும் சக்திக்கதிர்களை வழங்கி, உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் ஒத்துழைப்பின் அலைகளைப் பரவச் செய்யுங்கள். இந்த வாகனத்தில் உயரே பறப்பதற்கான வழிமுறை, பாப்தாதாவின் தெளிந்த, மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதே ஆகும். எந்த வழியிலும் உங்களின் சொந்த மனம் அல்லது மற்றவர்களின் கட்டளைகள் என்ற குப்பை சிறிதளவேனும் இருக்கக்கூடாது.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு விநாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதன் மூலம் உங்களின் புண்ணியக் கணக்கில் சேமிக்கும் பல்கோடீஸ்வரர் ஆகுவீர்களாக.

புண்ணியாத்மாக்களான உங்களால் அசாத்தியமானதையும் சாத்தியமாக்கக்கூடிய வகையில் உங்களின் எண்ணங்களில் விசேடமான சக்தி உள்ளது. உதாரணமாக, தற்காலத்தில், விசேடமான கருவிகளைப் பயன்படுத்தி பாலைவனங்களில் எதையாவது வளரச் செய்கிறார்கள். மலைகளில் பூக்கள் மலரச் செய்கிறார்கள். அதேபோல், உங்களின் மேன்மையான எண்ணங்களால், உங்களால் நம்பிக்கை அற்று இருக்கும் ஆத்மாக்களில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு விநாடியினதும் ஒவ்வோர் எண்ணத்தினதும் மதிப்பை அறிந்து, ஒவ்வொரு விநாடியையும் ஒவ்வோர் எண்ணத்தையும் அந்த விழிப்புணர்வுடன் பயன்படுத்தி, உங்களின் புண்ணியக் கணக்கில் சேமியுங்கள். உங்களின் எண்ணங்களின் சக்தியானது அதிமேன்மையானது. ஓர் எண்ணமும் உங்களைப் பல்கோடீஸ்வரர் ஆக்கும்.

சுலோகம்:
சகல உரிமைகளையும் கொண்ட ஒருவர் என்ற நம்பிக்கையுடனும் போதையுடனும் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். சகல சிரமங்களும் முடிந்துவிடும்.


அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரையான தியானத்தின்போது, குறிப்பாக பக்தர்களின் அழைப்பைச் செவிமடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இஷ்ட தெய்வம், கருணைநிறைந்த அருள்பவர்கள் என்ற உங்களின் ரூபத்தில் ஸ்திரமாக இருந்து, அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் சேவையைச் செய்யுங்கள்.