19.10.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் மிக மிக எளிமையாக இருக்க வேண்டும். நீங்கள் விலையுயர்ந்த, நவநாகரீகமான உடைகளை அணியும்பொழுது சரீர உணர்வு ஏற்படுகின்றது.

கேள்வி:
குழந்தைகளின் பாக்கியத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்திற்கான பாக்கியம் இல்லாதபொழுது அவர்கள் எந்த விடயத்தில் சோம்பேறித்தனமாக உள்ளார்கள்?

பதில்:
பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களைச் சீர்திருத்துவதற்கு உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். உங்கள் நினைவு அட்டவணையை வைத்திருப்பதில் பெருமளவு நன்மை உள்ளது. உங்களுடன் எப்பொழுதும் ஒரு குறிப்புப் புத்தகத்தையும் வைத்திருங்கள். நீங்கள் தந்தையின் நினைவில் எந்தளவு நேரம் இருந்தீர்கள் எனச் சோதியுங்கள். உங்கள் பதிவேடு எவ்வாறு உள்ளது? உங்கள் நடத்தை தெய்வீகமானதாக உள்ளதா? அனைத்தையும் செய்யும்பொழுது நீங்கள் பாபாவின் நினைவில் இருக்கிறீர்களா? நீங்கள் நினைவில் இருந்தால் மாத்திரமே உங்கள் துரு அகற்றப்பட்டு, உங்கள் பாக்கியம் மேன்மையானதாக முடியும்.

பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவரும் இல்லை.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக உங்கள் வீடுகளில் இலக்;ஷ்மி நாராயணனின் படத்தை வைத்திருக்க வேண்டும். அதனைப் பார்க்கையில், நீங்கள் பெரும் சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். ஏனெனில், இதுவே கல்வியின் இலக்கும், இலட்சியமும் ஆகும். நீங்கள் மாணவர்கள் என்பதையும், கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் இறை மாணவர்கள். நீங்கள் இக்கல்வியைக் கற்கின்றீர்கள். அனைவரது இலக்கும் ஒன்றேயாகும். இப்படத்தைப் பார்க்கும்பொழுது, பெரும் சந்தோஷம் ஏற்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அவர் கள்ளங்கபடமற்ற பிரபு. சிலர் சங்கரரையே கள்ளங்கபடமற்ற பிரபு எனக் கருதுகின்றார்கள். அவர்கள் சிவனையும், சங்கரரையும் ஒன்றாகக் கலந்துள்ளார்கள். சிவன் அதிமேலான கடவுள் என்பதையும், சங்கரர் ஒரு தேவர் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எனவே அவர்கள் இருவரும் எவ்வாறு ஒருவராக இருக்க முடியும்? அவர் பக்தர்களைக் காப்பாற்றுபவர் என்பதை நீங்கள் பாடலிலும் கேட்டீர்கள். பக்தர்கள் நிச்சயமாக அனர்த்தங்களை அனுபவம் செய்கின்றார்கள். அனைவருக்கும் ஐந்து விகாரங்கள் என்ற அனர்த்தங்கள் உள்ளன. அனைவரும் பக்தர்களே. எவரையும் ஞானம் நிறைந்த ஆத்மா என அழைக்க முடியாது. சிவனும், சங்கரரும் வேறுபட்டவர்கள், அதேபோன்று ஞானமும், பக்தியும் முற்றிலும் வேறுபட்டவை. நீங்கள் ஒருமுறை ஞானத்தைப் பெற்றதும், பக்தி இருப்பதில்லை. நீங்கள் சந்தோஷ தாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அரைக்கல்பத்திற்குச் சற்கதியைப் பெறுகின்றீர்கள். ஒரேயொரு சமிக்ஞையில் நீங்கள் அரைக்கல்பத்திற்கான உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பக்தர்களுக்கு எவ்வளவு சிரமங்கள் உள்ளன என்பதை நீங்கள் பார்க்க முடியும். ஞானத்தின் மூலம் நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் பக்தர்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது, அதாவது, அவர்கள் இயற்கை அனர்த்தங்களையும் துன்பத்தையும் அனுபவம் செய்யும்பொழுது, தந்தை வருகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நாடகத்திற்கு ஏற்ப கடந்த காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் மீண்டும் இடம்பெற வேண்டும். பின்னர், வழிபாடு ஆரம்பமாகும்பொழுது, பாவப் பாதை, அதாவது, தூய்மையற்றவர்கள் ஆகுவதற்கான பாதை ஆரம்பமாகுகின்றது. இதில் முதல் இலக்க விகாரம் காமம் ஆகும். இதனையிட்டுக் கூறப்படுகின்றது: காமத்தை வெற்றி கொள்பவதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர் ஆகுகிறீர்கள். அவர்கள் வெற்றி அடைவதில்லை. இராவண இராச்சியத்தில் எவருமே விகாரம் இல்லாது பிறப்பெடுக்க முடியாது. இராவண இராச்சியம் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. அங்கும் இராவணன் இருப்பானாயின் கடவுளால் ஸ்தாபிக்கப்படுகின்ற இராம இராச்சியம் எதற்கு? ஒரு லௌகீகத் தந்தை தனது குழந்தைகள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதில் அதிகளவு அக்கறை கொண்டிருக்கிறார். தனது குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதற்காக அவர்களுக்குக் கொடுப்பதற்குச் செல்வத்தைச் சேமிக்கின்றார். எவ்வாறாயினும், இங்கு அவ்வாறு இல்லை. இது துன்ப உலகமாகும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: அங்கே நீங்கள் பிறவிபிறவியாகச் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். அங்கே உங்களுக்குப் பெருமளவு செல்வம் கிடைக்கின்றது. அங்கே நீங்கள் 21 பிறவிகளுக்குத் துன்பத்தை அனுபவம் செய்வதில்லை. அங்கே எவருமே கடனாளிகள் ஆகுவதில்லை. உங்கள் புத்தி இவ்விடயங்களைக் கிரகித்தால், உள்ளார்த்தமாக நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருக்க முடியும். உங்கள் ஞானமும், யோகமும் முற்றிலும் மறைமுகமானவை. உங்களிடம் பௌதீக ஆயுதங்கள் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இது ஞான வாள். அவர்கள் பெண் தெய்வங்களிடம் உள்ள பௌதீக ஆயுதங்களை இதன் அடையாளமாகக் காட்டியுள்ளார்கள். சமயநூல்கள் போன்றவற்றைக் கற்பவர்கள் இது ஞான வாள் என்றோ அல்லது இது ஞானக் காப்பு (டிசயஉநடநவ) என்றோ ஒருபொழுதும் கூறுவதில்லை. எல்லையற்ற தந்தையால் மாத்திரமே இதனை விளங்கப்படுத்த முடியும். சக்திசேனை வெற்றியீட்டியதால் நிச்சயமாக அவர்களிடம் பௌதீக ஆயுதங்கள் இருந்திருக்க வேண்டுமென அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை வந்து இத்தவறுகள் அனைத்தையும் பற்றி உங்களுக்குக் கூறுகின்றார். உங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் பலரும் செவிமடுப்பார்கள். கல்விமான்கள் போன்றோரும் ஒருநாள் உங்களிடம் வருவார்கள். அவரே எல்லையற்ற தந்தை, அல்லவா? ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள் நன்மை அடைய முடியும். அப்பொழுது உங்கள் சரீர உணர்வு துண்டிக்கப்படும். ஆகையாலேயே செல்வந்தர்கள் இங்கே வருவதில்லை. தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரப் பெருமை அனைத்தையும் துறந்துவிடுங்கள். மக்கள் தம்மிடம் உள்ள சிறந்த ஆடைகளை இட்டுப் பெரும் போதை கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது எளிமையான நிலையில் இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் புகுந்த வீட்டிற்குச் செல்கின்றீர்கள். அங்கே நீங்கள் அணிவதற்கு ஏராளமான ஆபரணங்கள் இருக்கும். இங்கே நீங்கள் விலையுயர்ந்த ஆடையை அணியக்கூடாது. தந்தை கூறுகின்றார்: மிகவும் எளிமையாக இருங்கள். நான் என்ன செயல்களைச் செய்கின்றேனோ. குழந்தைகளாகிய நீPங்களும் மிக எளிமையாக இருக்க வேண்டும். இல்லையேல் சரீர உணர்வே இருக்கும். அவை அனைத்தும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்களுடைய புகுந்த வீட்டிற்குச் செல்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கே நீங்கள் பெருமளவு ஆபரணங்களைப் பெறுவீர்கள். இங்கே நீங்கள் ஆபரணங்கள் போன்றவற்றை அணியக்கூடாது. இக்காலத்தில் அதிகளவு திருட்டு போன்றனவும் இடம்பெறுகின்றன. வீதிகளில் திருடர்கள் உங்களிடம் கொள்ளை அடிக்கின்றார்கள். நாளுக்கு நாள், இத்தகைய குழப்பங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கும். ஆகையாலே தந்தை கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி என்னை நினைவுசெய்யுங்கள். சரீர உணர்விற்கு வருவதால், நீங்கள் தந்தையை மறந்துவிடுகின்றீர்கள். இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். பின்னர், பக்தி மார்க்கத்தில் நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். தந்தை அதிமேன்மையான சங்கமயுகத்தில் வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். யுத்தம் நிச்சயமாக இடம்பெறும். பல அணுகுண்டுகள் தொடர்ந்தும் உற்பத்தி செய்யப்படும். அதனைத் தடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும், அது சாத்தியமில்லை; அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிக்கும்பொழுதும், அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். மரணம் நிச்சயமாக இடம்பெற வேண்டும். ஆகையால், அவர்களால் எவ்வாறு அதனைச் செய்வதை நிறுத்த முடியும்? அவர்கள் அனைத்தையும் புரிந்துகொண்டாலும். அவற்றை உற்பத்தி செய்வதை நிறுத்துவதில்லை. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. யாதவர்களும், கௌரவர்களும் அழிக்கப்பட வேண்டும். யாதவர்கள் ஐரோப்பாவில் வாழும் மக்கள். விநாசம் இடம்பெறக் காரணமாகவுள்ள தமது விஞ்ஞானத்தையிட்டு அவர்கள் பெருமை கொண்டுள்ளார்கள். பின்னர், மௌனத்தின் பெருமையின் மூலம் வெற்றி உள்ளது. உங்களுக்கு மௌனத்தின் பெருமையைக் கொண்டிருப்பதற்குக் (மௌன சொரூபம் ஆகுவதற்கு) கற்பிக்கப்படுகின்றது. தந்தையை நினைவுசெய்யுங்கள்: மயான அமைதி. ஆத்மாவாகிய நான் இச்சரீரத்திலிருந்து விடுபட்டுள்ளேன். நாங்கள் செய்வதைப் போன்று, தனது சரீரத்தை விட்டு நீங்குவதற்கு வேறு எவராயினும் முயற்சி செய்கின்றார்களா? உலகம் முழுவதும் சென்று தேடிப் பாருங்கள்: ஓ ஆத்மா, நான் இப்பொழுது இச் சரீரத்தை விட்டு நீங்க வேண்டும் என்று கூறுகின்ற வேறு எவராவது இருக்கின்றார்களா? தூய்மையாகுங்கள்! அவ்வாறில்லாவிட்டால், தண்டனை அனுபவம் செய்யப்படும். தண்டனையை அனுபவம் செய்பவர் யார்? ஆத்மாக்களே. அந்நேரத்தில் தாம் செய்துள்ள பாவங்களினதும், அப் பாவங்களுக்காகத் தாங்கள் பெறவுள்ள தண்டனைகளினதும் காட்சிகளை ஆத்மாக்கள் பெறுகின்றனர். அத்தகைய நேரத்தில், பல பிறவிகளின் பாவங்களுக்கான தண்டனையைத் தான் பெறுவதைப் போன்று அந்த ஆத்மா உணர்கிறார். அதிகளவு துன்பம் அனுபவம் செய்யப்படுவதனால், சந்தோஷம் எந்தளவிற்கு எஞ்சியிருக்கப் போகின்றது? தந்தை கூறுகின்றார்: நீங்கள் மேலும் பாவச்செயல்களைச் செய்யக்கூடாது. உங்கள் பதிவேட்டை வைத்திருங்கள். எல்லாப் பாடசாலைகளிலும் அவர்கள் ஒவ்வொருவரின் செயல்களினதும், நடத்தையினதும் பதிவேட்டை வைத்திருக்கின்றார்கள். கல்வி அமைச்சரும் கூறகின்றார்: பாரதத்தின் நடத்தை இப்பொழுது சீராக இல்லை. அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் இப்பொழுது எங்கள் நடத்தைகளை இலக்ஷ்மி நாராயணனைப் போன்று ஆக்குகின்றோம். உங்களுடன் எப்பொழுதும் இலக்ஷ்மி நாராயணனின் ஒரு படத்தை வைத்திருங்கள். அதுவே உங்கள் இலக்கும், இலட்சியமும் ஆகும். நாங்கள் அவர்களைப் போல் ஆகுகின்றோம். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், ஆதி சனாதன தேவதேவியரின் தர்மத்தை ஸ்தாபிக்கின்றோம். அனைவரது செயற்பாடும், நடத்தையும் இங்கேயே சீர்திருத்தப்படுகின்றன. இங்கே நீங்கள் ஒரு நீதிமன்றத்தையும் கூட்டுகின்றீர்கள். சகல நிலையங்களில் உள்ள குழந்தைகளும் ஒரு நீதிமன்றத்தைக் கூட்ட வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையை வைத்திருப்பதனால், உங்களைச் சீர்திருத்த முடியும். அது அவரின் பாக்கியத்தில் இல்லாதிருந்தால், அவர் சோம்பல் அடைகின்றார். உங்கள் அட்டவணையை வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த, 84 பிறவிச் சக்கரத்தை அறிந்துகொள்வதனால், நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இது மிகவும் இலகுவானது! எவ்வாறாயினும், நீங்களும் தூய்மையாக வேண்டும். உங்கள் நினைவு யாத்திரையின் அட்டவணையையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். இதனைச் செய்வதனால் நீங்கள் பெருமளவு நன்மையை அடைவீர்கள். நீங்கள் அதனைக் குறித்து வைக்காது விட்டால், நீங்கள் பாபாவை நினைவுசெய்யவில்லை என்பது அப்பொழுது புரிந்துகொள்ளப்படுகின்றது. நீங்கள் உங்களுடன் எப்பொழுதும் குறிப்புப் புத்தகத்தை வைத்திருக்க வேண்டும். உங்கள் அட்டவணையை நீங்கள் பேண வேண்டும்: நான் எவ்வளவு நேரம் தந்தையை நினைவுசெய்தேன்? நீங்கள் நினைவுசெய்யும் வரை, உங்கள் துருவை அகற்ற முடியாது. ஒன்றிலிருந்து துருவை அகற்றுவதற்கு, அப் பொருள் பரஃவினில் (pயசயககin) இடப்படுகின்றது. அனைத்தையும் செய்யும்பொழுதும், நீங்கள் தந்தையை நினைவுசெய்தால், உங்கள் முயற்சிக்கான பலனைப் பெறுவீர்கள். அதற்கு முயற்சி தேவை. நீங்கள் வெறுமனே முடி சூட்டிக் கொள்ள முடியாது. பாபா உங்களுக்கு அத்தகைய உயர்ந்த அந்தஸ்தைக் கொடுக்கின்றார். ஆகையால், சில முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இங்கு நீங்கள் கைகள், கால்கள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இக்கல்வி மிகவும் இலகுவானது. நீங்கள் பிரம்மாவின் ஊடாக சிவபாபாவினால் என்னவாக ஆக்கப்படுகின்றீர்கள் என்பதை உங்கள் புத்தி அறிந்துள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பட்ஜை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: உண்மையில் இதுவே எங்கள் இலட்சினையாகும் (ஊழயவ ழக யுசஅள). பிறருக்கு விளங்கப்படுத்துவதில் பெரும் இராஜரீகம் இருக்க வேண்டும். பெருமளவு இனிமையுடன் விளங்கப்படுத்துங்கள். இலட்சினையை விளங்கப்படுத்துங்கள். அன்பான புத்தி என்றால் என்ன, அன்பற்ற புத்தி என்றால் என்ன என்பதையும் விளங்கப்படுத்துங்கள். உங்களுக்குத் தந்தையைத் தெரியுமா? உங்கள் லௌகீகத் தந்தையை நீங்கள் கடவுள் என அழைக்க மாட்டீர்கள். எல்லையற்ற தந்தையே தூய்மையாக்குபவரும், சந்தோஷக் கடலும் ஆவார். அவர் மூலமே நீங்கள் அபரிதமான சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அறியாமைப் பாதையில் அவர்கள் தமது தாயும் தந்தையுமே தமக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதாக நம்புகின்றார்கள். பின்னர் அவர்கள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். உங்களுடையது எல்லையற்ற புகுந்த வீடு; அதுவோ எல்லைக்குட்பட்டது. ஒருவேளை அந்தத் தாயும், தந்தையும் உங்களுக்கு ஐந்து முதல் ஏழு மில்லியன் அல்லது பில்லியன்களைக் கொடுக்கக்கூடும். தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள பெயர்: பற்பல மடங்கு கோடீஸ்வரர்கள் ஆகுகின்ற குழந்தைகள். அங்கே, செல்வம் என்ற கேள்விக்கே இடமில்லை; அங்கு நீங்கள் அனைத்தையும் பெறுகின்றீர்கள். அங்கேயுள்ள மாளிகைள் மிகவும் அழகானவை. நீங்கள் பிறவிபிறவியாக மாளிகைகளைப் பெறுகிறீர்கள். சுதாமாவின் (குசேலரின்) உதாரணமும் உள்ளது. மக்கள் ஒரு கைப்பிடி அரிசியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதால், அவர்கள் இங்கும் அதனைக் கொண்டு வருகின்றார்கள். எவ்வாறாயினும், உங்களால் வெறும் அரிசியை உண்ண முடியாது. எனவே அவர்கள் பலசரக்குகளையும் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அதனை மிகவும் அன்புடன் கொண்டு வருகின்றார்கள். பாபா தமக்குப் பிறவிபிறவியாகக் கொடுப்பார் என அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். அதனாலேயே அவர் அருள்பவர் என அழைக்கப்படுகின்றார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் கடவுளின் பெயரில் கொடுக்கின்றீர்கள். ஆகையாலேயே குறுகிய காலத்திற்கான பயனை உங்கள் அடுத்த பிறவியில் பெறுகின்றீர்கள். ஒருவர் ஏழைகளுக்குத் எதனையேனும் கொடுத்தாலோ அல்லது ஒரு கல்லூரியை ஆரம்பித்தாலோ அந்தத் தர்மத்தின் பலனாக அவர் தமது அடுத்த பிறவியில் கல்வியைப் பெறுகின்றார். அவர் யாத்திரீகர்கள் தங்குவதற்கு மடம் ஒன்றைக் கட்டினால், அங்கே பலரும் தங்கிச் சந்தோஷத்தை அனுபவம் செய்ததால், அவர் வாழ்வதற்கு நல்ல வீட்டைப் பெறுகின்றார். இங்கே, இது பிறவிபிறவிக்கான விடயமாகும். நீங்கள் சிவபாபாவிற்கு எதைக் கொடுத்தாலும், அது உங்களுக்காகவே பயன்படுத்தப்படவுள்ளது என்பதை அறிவீர்கள். சிவபாபா தனக்கென எதனையும் வைத்திருப்பதில்லை. அவர் இவரிடம் கூறினார்: உங்களிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தால், நீங்கள் உலக அதிபதி ஆகுவீர்கள். அவருக்கு விநாசத்தின் காட்சியும், இராச்சியத்தின் காட்சியும் அருளப்பட்டன. பாபா தன்னை உலக அதிபதி ஆக்குகின்றார் என்று இவர் அதிகளவு போதை கொண்டிருந்தார். கீதையில், அர்ஜுனனுக்குக் காட்சி ஒன்று அருளப்பட்டு, அவரிடம் கூறப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது: என்னை நினைவுசெய்தால் இவ்வாறு நீங்கள் ஆகுவீர்கள். அவருக்கு விநாசத்தினதும், இராச்சியத்தினதும் காட்சிகள் அருளப்பட்டன. இவரது சந்தோஷப் பாதரசமும் ஆரம்பம் முதல் அதிகரித்தது. இதுவே நாடகத்தின் பாகமாக இருந்தது. எவருக்கும் இந்தப் பாக்கிய இரதத்தைத் தெரியாது. ஆகையால், குழந்தைகளாகிய நீங்கள் இந்த இலக்கையும், இலட்சியத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும்: நாங்கள் இவ்வாறு ஆகுகின்றோம். நீங்கள் முயற்சி செய்யுமளவிற்கேற்ப, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். தந்தையைப் பின்பற்றுங்கள் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அது இந்நேரத்தையே குறிக்கின்றது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கொடுக்கின்ற ஆலோசனையைப் பின்பற்றுங்கள். இவர் என்ன செய்தார் என்பதையும் நான் உங்களுக்குக் கூறகின்றேன். கடவுள் வியாபாரியும், இரத்தின வியாபாரியும், மந்திரவாதியும் என்றும் அழைக்கப்படுகின்றார். பாபா சடுதியாக அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். முன்னர், அவர் பௌதீக இரத்தினங்களின் வியாபாரியாக இருந்தார். இப்பொழுது அவர் அழியாத ஞான இரத்தினங்களின் வியாபாரி ஆகியுள்ளார். நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுவது என்பது பெரிய மந்திர வித்தையாகும். அவர் வியாபாரியும் ஆவார். பாபா குழந்தைகளாகிய உங்களுடன் அத்தகைய சிறந்த பேரம் ஒன்றைப் பேசுகின்றார். அவர் உங்கள் வைக்கோல்களையும், கைப்பிடி அரிசியையும் எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உங்களுக்கு மாளிகைகளைக் கொடுக்கின்றார். அவர் அத்தகைய பெரிய வருமானத்தை நாம் ஈட்டுவதற்கு எங்களுக்கு உதவுகின்றார். வைரத்தினதும், இரத்தினங்களினதும் வியாபாரமும் இவ்வாறாகவே இடம்பெறுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் வரும்பொழுது, அவரிடம் 100 ரூபாய் பெறுமதியான பொருளிற்கு ரூபாய் 500 முதல் 1000 ரூபாய்கள் வரை அறவிடப்படுகின்றது. அவர்கள் அவரிடம் பெருமளவு பணத்தை அறவிடுகிறார்கள். உங்களிடம் அனைத்திலும் அதிபுராதனமானவை உள்ளன, அதுவே இந்தப் புராதன யோகமாகும். நீங்கள் இப்பொழுது கள்ளங்கபடமற்ற பிரபுவைக் கண்டுகொண்டீர்கள். அவர் கள்ளங்கபடம் அற்றவர்! அவர் உங்களை எவ்வாறானவர்கள் ஆக்குகின்றார் எனப் பாருங்கள்! உங்கள் வைக்கோலுக்குப் பதிலாக அவர் உங்களை 21 பிறவிகளுக்கு எவ்வாறானவர் ஆக்குகின்றார் என்று பாருங்கள்! மனிதர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. சிலவேளைகளில் அவர்கள் கள்ளங்கபடமற்ற பிரபுவே தமக்குச் சிலவற்றைக் கொடுத்ததாகக் கூறுகின்றார்கள். சிலவேளைகளிலோ அம்பாள் அதனைத் தங்களுக்குக் கொடுத்ததாகக் கூறுகின்றார்கள். சிலவேளைகளில் தமது குரு அதனைத் தமக்குக் கொடுத்தார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இங்கே, இது ஒரு கல்வியாகும். நீங்கள் ஓர் இறை பல்கலைக்கழகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். இந்தக் கீதையும் இறை பல்கலைக்கழகம் என்றே அழைக்கப்படுகின்றது. கடவுள் பேசுகின்றார்; எனக் கீதையில் எழுதப்பட்டுள்ளது, ஆனால்; கடவுள் யார் என்பதை எவருமே அறியார். எவரிடமாவது வினவுங்கள்: பரமாத்மாவான பரமதந்தையை நீங்கள் அறிவீர்களா? தந்தை பூந்தோட்ட அதிபதியாவார். அவர் உங்களை முட்களிலிருந்து மலர்களாக மாற்றுகின்றார். அதுவே அல்லாவின் பூந்தோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஐரோப்பியர்கள் வைகுந்தத்தைப் பற்றி பேசுகின்றார்கள். பாரதம் உண்மையிலேயே தேவதைகளின் பூமியாக இருந்தது; இப்பொழுது அது மயானபூமியாகும். நீங்கள் இப்பொழுது மீண்டும் தேவதைகளின் பூமியின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். உறங்கிக் கொண்டிருப்பவர்களை விழித்தெழச் செய்வதற்குத் தந்தை வந்து விட்டார். இதனை நீங்கள் செய்கின்ற முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக அறிவீர்கள். விழித்தெழுந்தவர்களும் பிறரை விழித்தெழுமாறு செய்கின்றார்கள். ஒருவர் இன்னொருவரை விழித்தெழச் செய்யாதிருந்தால், அவர் இன்னமும் விழித்தெழவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். ஆகவே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பாடல்கள் போன்றவையும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. சில பாடல்கள் மிகவும் சிறந்தவை. நீங்கள் சந்தோஷமற்று இருக்கும்பொழுது, இப்பாடல்ளை ஒலிக்கச் செய்;தால், மிகவும் சந்தோஷம் அடைவீர்கள். ஓ இரவுப் பயணியே, களைப்படையாதே. இப் பாடலும் மிக நல்லது. இரவு இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. கூடுதலான பக்தியைச் செய்யும்பொழுது, தாங்கள் விரைவில் கடவுளைக் கண்டடைவார்கள் என்று அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் அனுமன் போன்றோரின் காட்சிகளைக் காணும்பொழுது, தாம் கடவுளையே கண்டதாக நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அக்காட்சிகள் போன்ற அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை. அவர்கள் யார் மீது பக்தி உணர்வுகளைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களின் காட்சிகளை அவர்கள் பெறுகின்றார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறாக எவரும் இல்லை. தந்தை கூறியுள்ளார்: நீங்கள் அனைவரும் உங்கள் பட்ஜை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். பலவகையான பட்ஜுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜ் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கு மிகவும் சிறந்ததாகும். நீங்கள் ஆன்மீக சேனையினர். இராணுவத்தினரும் எப்பொழுதும் தமக்கெனச் சின்னங்களைக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் பட்ஜைக் குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடன் வைத்திருக்கும்பொழுது, நீங்கள் இவ்வாறானவர் ஆகுகின்றீர்கள் என்ற போதையைக் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் மாணவர்கள். பாபா எங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றார். மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றார்கள். தேவர்கள் தேவர்களை வழிபடுவதில்லை. இங்கே, சாதாரண மனிதர்கள் தேவர்களை வழிபடுகின்றார்கள், ஏனெனில், தேவர்கள் மேன்மையானவர்கள்;. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியில் எப்பொழுதும் உங்கள் இலக்கையும், இலட்சியத்தையும் வைத்திருங்கள். உங்களுடன் எப்பொழுதும் இலக்ஷ்மி நாராயணனின் படத்தை வைத்திருங்கள். நீங்கள் அவர்களைப் போலாகுவதற்கே கற்கின்றீர்கள் என அறிந்துள்ளதால், சந்தோஷத்தில் இருங்கள். நாங்கள் இப்பொழுது இறை மாணவர்கள்.

2. உங்களிடம் உள்ள பழைய வைக்கோலையும், ஒரு கைப்பிடி அரிசியையும் கொடுத்து, அதற்குப் பதிலாக ஒரு மாளிகையைப் பெறுங்கள். தந்தை பிரம்மாவைப் பின்பற்றி அழியாத ஞான இரத்தினங்களின் வியாபாரி ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களால்; சரீரமற்றவர் என்னும் ஊசி மூலம் உங்கள் மனத்தை ஒருமைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் கூடியவராக ஆவீர்களாக.

இந்நாட்களில், ஒருவர் கட்டுப்பாடு அற்றவராக இருந்தால், பெருமளவு தொந்தரவு கொடுத்தால், சுற்றிலும் பாய்ந்து அல்லது பித்துப் பிடித்தவர் ஆகினால், அவரைச் சாந்தப்படுத்துவதற்கு, அவருக்கு ஓர் ஊசி போடப்படுகின்றது. அதேபோன்று உங்கள் எண்ணச் சக்தியானது உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாது விட்டால், சரீரமற்றவர் ஆகுகின்ற ஊசியை உங்களுக்குக் கொடுங்கள். அப்பொழுது உங்கள் எண்ணச் சக்தி வீணாக மாட்டாது. உங்களால் இலகுவாக மன ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க இயலும். எவ்வாறாயினும் உங்கள் புத்தியின் கடிவாளத்தைத் தந்தையிடம் கொடுத்து விட்டு, அவற்றைத் திரும்பவும் பெற்றால், உங்கள் மனம் தேவையில்லாமல் கடின உழைப்பை உருவாக்கும். இப்பொழுது தேவையற்ற, கடின உழைப்பிலிருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

சுலோகம்:
உங்கள் மூதாதை ரூபத்தை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து, ஆத்மாக்கள் அனைவர் மீதும் கருணைகொள்ளுங்கள்.