19-11-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, இந்த முழு உலகும் நோயாளிகளின் பெரியதொரு வைத்தியசாலையாகும். முழு உலகையும் நோயிலிருந்து விடுவிப்பதற்காகவே பாபா வந்துள்ளார்.

கேள்வி:

நீங்கள் என்றுமே வாடிவிடாமலும், துன்ப அலைகளை அனுபவம் செய்யாமலும் இருப்பதற்கு, நீங்கள் எந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும்?

பதில்:

நாங்கள் இப்பொழுது இப்பழைய சரீரங்களையும் இப் பழைய உலகையும் விட்டு, மீண்டும் வீட்டிற்;குச் சென்று, பின்னர் புதிய உலகில் மறுபிறவி எடுப்போம். நாங்கள் இராச்சியத்திற்கு செல்வதற்காகவே இப்பொழுது இராஜயோகம் கற்கின்றோம். தந்தை குழந்தைகளாகிய எங்களுக்காக ஆன்மீக அரசர்களின் பூமியை (இராஜஸ்தான்) ஸ்தாபிக்கின்றார். இந்த விழிப்புணர்வை நீங்கள் பேணிக்கொண்டால், எந்தத் துன்ப அலைகளும் இருக்க மாட்டாது.

பாடல்:

நீங்களே தாயும் நீங்களே தந்தையும்...

ஓம் சாந்தி. இப்பாடல் குழந்தைகளாகிய உங்களுக்கானதல்ல. புதியவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காகவே இது இசைக்கப்பட்டது. இங்குள்ள அனைவரும் விவேகமானவர்கள் என்றல்ல. இல்லை. விவேகமற்றவர்களையே விவேகமானவர்களாக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எந்தளவிற்கு விவேகம் அற்றவர்கள் ஆகினீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்;. பாடசாலையில் மாணவர்கள் கற்பதன் மூலம் விவேகமானவர்களாக ஆகுவதைப் போன்று, தந்தையும் இப்பொழுது உங்களை விவேகமானவர்கள் ஆக்குகின்றார். அவர்களின் புரிந்துணர்விற்கேற்ப அவர்கள் ஒரு சட்ட நிபுணராகவோ அல்லது ஒரு பொறியிலாளராகவோ ஆகுகின்றார்கள். இங்கு, ஆத்மாக்களாகிய நீங்கள் விவேகமானவர்களாக வேண்டும். ஆத்மாவே சரீரத்தின் ஊடாகக் கற்கின்றார். எனினும் நீங்கள் வெளியிலிருந்து பெறும் கல்வி உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்கான ஒரு தற்காலிக காலத்திற்கானதேயாகும். சில இந்துக்கள், கிறிஸ்தவ சமயத்திற்கு மாறுகின்றார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றார்கள்? சிறிதளவு சந்தோஷத்தை அடைவதற்காகவும், இலகுவாக ஒரு வேலையைப் பெற்று கொள்வதற்கும், தங்கள் ஜீவனோபாயத்திற்காகப் பணம் சம்பாதிப்பதற்காகவும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லாவற்றிற்கும் முதலில், ஆத்ம உணர்வுடையவராக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவே முதன்மையான விடயமாகும், ஏனெனில் இவ்வுலகம் நோயிற்றுள்ளது. நோயற்ற ஒரு மனிதரேனும் இல்லை. நிச்சயமாக ஏதோவொரு நோய் உள்ளது. இந்த முழு உலகமும், மிகப் பெரிய வைத்தியசாலையாகும். அதில் அனைத்து மனிதர்களும் தூய்மையற்றும், நோயுற்றும் உள்ளார்கள். அவர்களின் ஆயுட்காலமும் மிகவும் குறுகியதாகும். அவர்கள் தீடிரென மரணத்தை அனுபவம் செய்கின்றார்கள். அவர்கள் மரணப் பிடியில் அகப்பட்டு விடுகின்றார்கள். இவ்விடயங்களைக் குழந்தைகளாகிய நீங்களே புரிந்து கொண்டுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மறைமுகமான முறையில் பாரதத்திற்கு மாத்திரமல்ல, முழு உலகிற்குமே சேவை செய்கின்றீர்கள். எவருக்கும் தந்தையை தெரியாதிருப்பதே பிரதானமான விடயமாகும். அவர்கள் மனிதர்களாக இருந்த போதிலும், இவ்வுலகிற்கு அப்பாலுள்ள தந்தையை அறியாதுள்ளார்கள். அவர்களுக்கு அவர் மீது அன்பில்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது என்மீது அன்பு கொள்ளுங்கள்! என்மீது அன்பு கொண்டிருக்கும் போதே நீங்கள் என்னுடன் வீடு திரும்புவீர்கள். நீங்கள் வீட்டிற்கு திரும்பி வரும்வரை, நீங்கள் இந்த அழுக்கான உலகிலேயே இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில், சரீர உணர்விலிருந்து ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள்! அப்பொழுதே உங்களால் இந்த ஞானத்தைக் கிரகித்து, தந்தையை நினைவு செய்ய முடியும். ஆத்ம உணர்வுடையவராக, ஆக முடியாதவர்களால் எப்பயனுமில்லை. அனைவரும் சரீர உணர்வுடையவர்களாகவே இருக்கின்றார்கள். ஆத்ம உணர்வுடையவராக ஆகாமலும், தந்தையை நினைவு செய்யாமலும் இருப்பவர்கள் மாறாது, முன்னர் இருந்ததைப் போன்றே இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்திருக்கின்றீர்கள். பிரதான விடயம் ஆத்ம உணர்வுடையவராகுவது, படைப்பை அறிவது அல்ல. படைப்பவரினதும், படைப்பினதும் ஞானம் நினைவு கூரப்பட்டுள்ளது. ‘படைப்பின் ஞானம் முதலாவதும், பின்னரே படைப்பவரின் ஞானமும்’ எனக் கூறப்படுவதில்லை. இல்லை. முதலில் தந்தையாகிய படைப்பவர். ‘ஓ தந்தையான கடவுள்!’ என்றே கூறப்பட்டுள்ளது. அவர் வந்து குழந்தைகளாகிய உங்களைத் தனக்குச் சமமானவராக்குகின்றார். தந்தை எப்பொழுதும் ஆத்ம உணர்வில் இருப்பதாலேயே அவர் பரமனாக உள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் ஆத்ம உணர்வுடையவராவேன். நான் பிரவேசிக்கின்றவரையும் ஆத்ம உணர்வுடையவராக ஆக்குகின்றேன். அவரை மாற்றுவதற்காக நான் அவரினுள் பிரவேசிக்கின்றேன், ஏனெனில் அவரும் சரீர உணர்விலேயே இருந்தார். நான் அவரிடம் கூறுகின்றேன்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, என்னை மிகச் சரியாக நினைவு செய்யுங்கள். ஆத்மாக்கள் உயிருள்ளவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் எனப் பலரும் நம்புகின்றார்கள். ஆத்மா சரீரத்தைவிட்டு நீங்கிச் செல்வதால் இரு விடயங்கள் இருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். நீங்கள் ஒவ்வொருவருமே, ஆத்மாவே எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாவே மறுபிறவி எடுக்கின்றார். ஆத்மாக்கள் சரீரங்களை ஏற்றுத் தங்கள் பாகங்களை நடிக்கின்றார்கள். பாபா மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்! இதற்கு அதிகளவு முயற்சி தேவை. ஏகாந்தத்திலிருந்து கற்பதற்காக மாணவர்கள் பூந்தோட்டத்திற்குச் செல்கின்றார்கள். போதகர்கள் உலாவச் செல்லும் போது, மௌனமாகவே நடக்கின்றார்கள். அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பதில்லை. அவர்கள் கிறிஸ்துவின் நினைவிலேயே இருக்கின்றார்கள். வீட்டில் இருக்கும் போதும், அவர்களால் அவரை நினைவு முடியும், ஆனால் அவர்கள் விசேடமாக ஏகாந்தத்தில் அமர்ந்திருந்து, வேறு எங்கும் பார்க்காது கிறிஸ்துவை மாத்திரம் நினைவு செய்கின்றார்கள். கிறிஸ்துவை நினைவு செய்தாவாறே தாம் அவரிடம் சென்றுவிடுவோம் என நம்புகின்ற மிகவும் நல்லவர்களும் உள்ளனர். கிறிஸ்து சுவர்க்கத்தில் இருக்கின்றார் என்றும், தாமும் சுவர்க்கதிற்குச் செல்வோம் என்று அவர்கள் நம்புகின்றார்கள். கிறிஸ்து தந்தையாகிய சுவர்க்கக் கடவுளிடம் சென்றுவிட்டார் என்றும், அவரை நினைவு செய்வதன் மூலம் தாங்களும் அவரிடம் செல்லலாம் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் அந்த ஒரேயொருவரின் (கடவுளின்) குழந்தைகளே. அவர்களிடம் சரியான ஞானம் சிறிதளவு உள்ள போதிலும், கிறிஸ்து ஆத்மா மீண்டும் மேலே வீட்டிற்குச் செல்லவில்லை என்பதால், அவர்கள் அதனை பிழையாகவே புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும். "கிறிஸ்து” என்ற பெயர் சிலுவையில் அறையப்பட்ட சரீரத்தினுடையதாகும். ஓர் ஆத்மாவை சிலுவையில் அறைய முடியாது. கிறிஸ்து ஆத்மா தந்தையாகிய கடவுளிடம் சென்றுவிட்டார் எனக் கூறுவது பிழையாகும். இப்பொழுது எவராலும் எவ்வாறு வீட்டிற்குச் செல்ல முடியும்? நிச்சயமாக ஒவ்வொரு சமய ஸ்தாபகர்களும் தமது ஸ்தாபனையை மேற்கொண்ட பின், தமது சமயத்தைப் பராமரிக்க வேண்டும். ஒரு கட்டடம் வெள்ளையடிக்கப்படும் போது, அதுவும் பராமரித்தல் ஆகும். இப்பொழுது நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது. நீங்களே உங்களுக்கு நன்மையை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் நோயிலிருந்து விடுபட்டு நோயற்றவர்கள் ஆக வேண்டும். இதுவே நோயாளிகளின் மிகப்பெரிய வைத்தியசாலையாகும். முழு உலகமுமே நோயாளிகளின் வைத்தியசாலையாகும். நோயாளிகள் நிச்சயமாக விரைவில் மரணிப்பார்கள். தந்தை வந்து முழு உலகையும் நோயிலிருந்து விடுவிக்கின்றார். நீங்கள் இங்கு நோயிலிருந்து விடுதலையாகுவீர்கள் என்றில்லை. தந்தை கூறுகின்றார்: புதிய உலகிலேயே நீங்கள் நோயிலிருந்து விடுதலையடைவீர்கள், பழைய உலகில் நோயிலிருந்து விடுதலையாக முடியாது. இலக்ஷ்மியும் நாராயணனும் நோயிலிருந்து விடுதலையாகி, என்றென்றும் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். அங்கு அவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றார்கள். விகாரமுடையவர்கள் நோயாளிகள் ஆவார்கள். விகாரமற்றவர்கள் நோயற்றவர்களே. அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். தந்தையே கூறுகின்றார்: இந்நேரத்தில் பொதுவாக முழு உலகமும், குறிப்பாக பாரதம் நோய்வாய்ப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் முதலில், நோயிலிருந்து விடுபட்ட உலகிற்கு வருகின்றீர்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதன் மூலமே நீங்கள் நோயிலிருந்து விடுபடுவீர்கள். நினைவின் மூலமே நீங்கள் உங்கள் இனிய வீட்டிற்குச் செல்வீர்கள். இதுவும் ஒரு யாத்திரையே. ஆத்மாக்கள் பரமாத்மாவாகிய தந்தையிடம் செல்வதற்கான யாத்திரையில் உள்ளார்கள். இது ஓர் ஆன்மீக யாத்திரையாகும். இவ்வார்த்தைகளை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. நீங்களும் இதனை வரிசைக்கிரமமாகவே புரிந்து கொண்டாலும் அதனை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். இதுவே பிரதான விடயமாகும். விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவானதாகும். எனினும், ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருப்பவர்களால் மாத்திரமே பிறருக்கு விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இந்த யாத்திரையில் நிலைத்திருக்காமல் ஏனையோருக்கு கூறுவதற்கு முயற்சித்தால், உங்கள் அம்பு இலக்கைத் தாக்கமாட்டாது. சத்தியத்தின் சக்தியும் இருக்க வேண்டும். நாங்கள் பாபாவை அதிகளவு நினைவு செய்கின்றோம்! ஒரு மனைவி தனது கணவனை அதிகளவு நினைவு செய்கின்றாள். அவர் (கடவுள்) கணவருக்கெல்லாம் கணவரும், தந்தையர்களுக்கெல்லாம் தந்தையும், குருமார்களுக்கெல்லாம் குருவும் ஆவார். குருமார்களுமே ஒரேயொரு தந்தையையே நினைவு செய்கிறார்கள். கிறிஸ்துவும் தந்தையையே நினைவு செய்கின்றார். எனினும், எவருக்குமே அவரைத் தெரியாது. தந்தை வரும் போதே, அவரால் தனது அறிமுகத்தைக் கொடுக்க முடியும். பாரத மக்களுக்கே தந்தையைத் தெரியாத போது, ஏனையோரால் அவரை எவ்வாறு அறிந்திருக்க முடியும்? மக்கள் வெளிநாட்டிலிருந்து யோகம் கற்பதற்காக வருகின்றார்கள். புராதன யோகத்தை கடவுள் கற்பித்தார் என அவர்கள் நம்புகிறார்கள். இதில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும், ஒரு முறையே வந்து, உங்களுக்கு உண்மையான புராதன யோகத்தைக் கற்பிக்கின்றேன். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்பதே முதன்மையான விடயமாகும். இது ஆன்மீக யோகம் எனப்படுகின்றது. ஏனைய அனைத்தும் பௌதீகமான யோகமாகும். அவர்கள் பிரம்ம தத்துவத்துவமான ஒளியுடன் யோகம் செய்கின்றார்கள். அது தந்தையல்ல. அது வசிப்பிடமான மகா தத்துவமாகும். ஓ, ஒரேயொரு தந்தையே சரியானவர். ஒரேயொரு தந்தையே சத்தியம் என அழைக்கப்படுகின்றார். பாரத மக்களுக்கு, தந்தை எவ்வாறு சத்தியமானவர் என்பது தெரியாது. அவர் மாத்திரமே சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். சத்திய பூமியும் பொய்மையான பூமியும் உள்ளது. சத்திய பூமியில் நீங்கள் வாழும் போது, இராவண இராச்சியம் இருப்பதில்லை. அரைக் கல்பத்தின் பின்னரே பொய்மையான உலகமாகிய, இராவண இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. சத்தியயுகம் முழுவதும் சத்திய பூமி என்று அழைக்கப்படுகின்றது. கலியுக முடிவில், முழு உலகமும் பொய்மையான உலகமாக இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் இங்கும் இல்லை, அங்கும் இல்லை. இப்பொழுது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். ஆத்மாவே பயணம் செய்கின்றார். சரீரம் அல்ல. தந்தை வந்து எவ்வாறு பயணம் செய்வதென உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு எவ்வாறு இங்கிருந்து அங்கு செல்வது எனக் கற்பிக்கின்றார். அவர்கள் சந்திரன், நட்சத்திரம் முதலானவற்றிற்கு பயணம் செய்கின்றார்கள். அதில் எவ்வித நன்மையும் இல்லையென்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறான விடயங்களின் மூலம் விநாசம் இடம்பெறும். அவர்கள் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகும். அவர்கள் விஞ்ஞானத்தின் மூலம் உருவாக்குகின்ற விடயங்கள் அனைத்தும் எதிர்க்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. எல்லையற்ற தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். எனவே நீங்கள் அவர்மீது அதிகளவு மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும். பொதுவாக ஆசிரியர்களுக்கு அதிகளவு மரியாதை கொடுக்கப்படுகின்றது. ஓர் ஆசிரியர் நன்றாகக் கற்று சித்தியடைவதற்காக உங்களுக்கு அறிவுரைகள் கூறுகின்றார். நீங்கள் உங்கள் ஆசிரியருக்கு கீழ்ப்படியாவிட்டால், நீங்கள் சித்தியடைய மாட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை உலகின் அதிபதிகளாக்குவதற்காக உங்களுக்குக் கற்பிக்கின்றேன். இலக்ஷ்மியும் நாரயணனும் அதிபதிகள். அவர்களுடைய பிரஜைகளும் அதிபதிகளே, ஆயினும், அந்தஸ்த்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. பாரத மக்கள் அனைவரும் தாங்கள் பாரதத்தின் அதிபதிகள் என்றே கூறுகின்றார்கள். ஏழைகளும் தங்களை பாரதத்தின் அதிபதிகள் என்றே கருதுகின்றார்கள். எவ்வாறாயினும், ஓர் அரசனுக்கும் அவர்களுக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. ஞானத்தினாலேயே அந்தஸ்து வேறுபடுகின்றது. ஒருவர் ஞானத்தில் திறமைசாலியாக இருக்க வேண்டும். தூய்மையும் அத்தியாவசியமாகும், ஆரோக்கியமும் செல்வமும் தேவையாகும். சுவர்க்கத்தில் அனைத்துமே இருக்கின்றன. தந்தை உங்களுக்கு இலக்கையும் இலட்சியத்தையும் விளங்கப்படுத்துகின்றார். உலகில் உள்ள வேறு எவருமே இந்த இலக்கையும் இலட்சியத்தையும் தமது புத்தியில் வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் இவ்வாறே ஆகுகின்றீர்கள் என்று நீங்கள் உடனடியாகவே கூறுகின்றீர்கள். முழு உலகிலும் எங்கள் இராச்சியமே நிலவும். இப்பொழுது மக்கள் மக்களை ஆட்சி செய்கிறார்கள். முதலில், இரட்டைக் கிரீடம் அணிந்தவர்கள் இருந்தார்கள், பின்னர் ஒற்றைக் கிரீடம் அணிந்தவர்கள் இருந்தார்கள், இப்பொழுது கிரீடம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். ஒற்றைக் கிரீடத்தை அணிந்தவர்கள், இரட்டைக் கிரீடம் அணிந்தவர்களை வழிபடுகின்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்று பாபா ஒரு முரளியில் உங்களுக்குக் கூறியுள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களை இரட்டை கிரீடம் அணிந்த, அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக ஆக்குகின்றேன். அவர்கள் குறுகிய காலத்திற்கு அரசர்களாக இருக்கின்றார்கள், ஆனால் இது 21 பிறவிகளுக்கான விடயமாகும். தூய்மை ஆகுவதே முதலாவதும் பிரதானமானதுமான விடயமாகும். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்க வாருங்கள் என்று நீங்கள் என்னைக் கூவியழைத்தீர்கள். அரசர்களாக்குமாறு நீங்கள் கேட்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற துறவறத்தைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் இந்த உலகை விட்டுவிட்டு, வீடு சென்ற பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். உங்களுக்குள் இந்த சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் வீடு சென்று, பின்னர் உங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளதால், நீங்கள் வாடி, ஏன் துன்பத்தை அனுபவம் செய்கின்றீர்கள்? ஆத்மாக்களாகிய நாங்கள் வீடு சென்று, புதிய உலகில் மறுபிறப்பெடுப்போம். குழந்தைகளாகிய நீங்கள் ஏன் நிரந்தரமான சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை? ஏனெனில் மாயையிடமிருந்து அதிகளவு எதிர்ப்புகள் வருவதால், உங்கள் சந்தோஷம் குறைவடைகின்றது. தூய்மையாக்குபவரே கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் சுயதர்ஷன சக்கரதாரிகளாக ஆகுகின்றீர்கள். உங்கள் இராம இராச்சியத்திற்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு பல்வேறு வகையான அரசர்கள் இருந்திருக்கிறார்கள். இப்பொழுது ஆன்மீக ராஜஸ்தான் (அரசர்களின் பூமி) வரப்போகின்றது. நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆகுவீர்கள். சுவர்க்கம் என்றால் என்னவென்பதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள். முக்திதாமத்தையே அவர்கள் சுவர்க்கம் என்று அழைக்கின்றார்கள். தந்தையாகிய சுவர்க்கக் கடவுள், சுவர்க்கத்தில் வசிக்கின்றார் என்றில்லை. அவர் அமைதி தாமத்தில் வசிக்கின்றார். நீங்கள் இப்பொழுது வைகுண்டத்திற்கு செல்வதற்காக முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இந்த வேறுபாட்டைக் காட்ட வேண்டும். தந்தையாகிய கடவுள் முக்தி தாமத்தில் வசிப்பவர், ஆனால் புதிய உலகமே சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு (புதிய உலகில்) கிறிஸ்தவர்கள் இருப்பதில்லை. தந்தை மாத்திரமே வந்து, வைகுண்டத்தை ஸ்தாபிக்கின்றார். அமைதி தாமம் என்று நீங்கள் அழைக்கும் இடத்தையே அவர்கள் சுவர்க்கம் என்றழைக்கின்றார்கள். இவ் விடயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் மிகவும் இலகுவானது. இந்த ஞானம் தூய்மை ஆகுவதற்கும், முக்தி தாமத்திற்கும் சந்தோஷ பூமிக்கும் செல்வதற்கே ஆகும். தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். ஒருவர் தூக்கிலிடப்படும் போது, தான் கடவுளிடம் செல்கின்றேன் என அவர் தனக்குள்ளே நினைக்கின்றார். தண்டனையை நிறைவேற்றுபவர், கடவுளை நினைக்கும்படி அவருக்கு கூறுகிறார், எனினும் இருவருக்குமே கடவுளைத் தெரியாது. அவர் அந்நேரத்தில் தன்னுடைய நண்பர்கள், உறவினர்களையே நினைவு செய்கின்றார். நினைவு கூரப்படுகின்றது: "இறுதியில் தன்னுடைய மனைவியை நினைவு செய்பவர்...” அவர் நிச்சயமாக வேறு எவரோ ஒருவரையே நினைவு செய்கின்றார். சத்தியயுகத்தில் மாத்திரமே அவர்கள் பற்றை வென்றவர்களாக இருக்கின்றார்கள். அங்கே, அவர்கள் தங்கள் சரீரங்களை நீக்கி விட்டு, புதியதை எடுப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அங்கே நினைவு செய்ய வேண்டிய தேவையில்லை. இதனாலேயே கூறப்பட்டுள்ளது: அனைவரும் துன்பம் வரும் பொழுதே கடவுளை நினைவு செய்கின்றார்கள். இங்கு துன்பம் உள்ளது. எனவே கடவுளிடமிருந்து ஏதாவதொன்றை பெறுவதற்காக, அவர்கள் அவரை நினைவு செய்கின்றார்கள். அங்கே, அவர்கள் அனைத்தையும் ஏற்கனவே பெற்றுள்ளார்கள். மனிதர்களை ஆஸ்திகர்களாக ஆக்குவதும், அவர்களை பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்களாக ஆக்குவதுமே உங்கள் இலட்சியமாகும் என்று உங்களால் கூற முடியும். இப்பொழுது அனைவரும் அநாதைகளாக இருக்கின்றார்கள். நாங்கள் இப்பொழுது பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்களாக இருக்கின்றோம். தந்தை மாத்திரமே சந்தோஷம், அமைதி, செழிப்பு எனும் ஆஸ்தியை கொடுக்கின்றார். இலக்ஷ்மியும் நாராயணனும் நீண்ட காலம் வாழ்கின்றார்கள். பாரத மக்கள் முன்னர் நீண்டகாலம் வாழ்ந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அவர்கள் குறுகிய ஆயுளைக் கொண்டிருக்கின்றார்கள். அது ஏன் மிகவும் குறுகியதாக ஆகியதென்பது எவருக்கும் தெரியாது. இதனை நீங்கள் புரிந்துகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். இதுவும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. ஒவ்வொருவரது விளக்கமும் அவருக்கே உரியதாகும். நீங்கள் கிரகிப்பதற்கேற்ப விளங்கப்படுத்துகிறீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. தந்தை எப்பொழுதும் ஆத்ம உணர்வில் இருப்பதைப் போன்று, நீங்களும் ஆத்மா உணர்வில் இருப்பதற்கு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் இதயத்தால் ஒரேயொரு தந்தையின் மீது இதயபூர்வமான அன்பு செலுத்தியவாறே நீங்கள் அவருடனேயே வீடு திரும்ப வேண்டும்.
  2. எல்லையற்ற தந்தை மீது முழுமையான மரியாதையைக் கொண்டிருங்கள், அதாவது தந்தையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். தந்தையின் முதலாவது அறிவுறுத்தல்: குழந்தைகளே, நன்றாகக் கற்று, சித்தியடையுங்கள்! இவ் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

ஆசீர்வாதம்:

விவேகத்தினதும் சாராம்சத்தினதும் சமநிலையை பேணி, சுயத்தின் சகல உணர்வையும் அர்ப்பணிப்பதன் மூலம் உலகை மாற்றுபவர் ஆகுவீர்களாக.

விவேகம் என்றால் ஞானக்கருத்துக்களை புரிந்து கொள்வதாகும். சாராம்சம் என்றால் சக்தியின் சொரூபமாக, சகல சக்திகளினதும் சொரூபத்தின் விழிப்புணர்வை கொண்டிருப்பதாகும். இவை இரண்டினதும் சமநிலையை நீங்கள் கொண்டிருந்தால், சுயத்தின் சகல உணர்வும், பழைய விடயங்கள் அனைத்தும் அர்ப்பணிக்கப்படும். ஒவ்வொரு கணத்தையும், ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு செயலையும் உலக மாற்றத்திற்காக பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இயல்பாகவே உலகை மாற்றுபவர் ஆகுவீர்கள். தம்மையும், தமது சொந்த சரீரத்தின் விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பவர்களால், தமது மேன்மையான அதிர்வுகளினால் சூழலை இலகுவாக மாற்ற முடியும்.

சுலோகம்:

உங்கள் பேறுகளை நினைவுசெய்தால், துன்ப விடயங்களும் விரக்தியும் மறக்கப்படும்.


---ஓம் சாந்தி---