19.11.23    Avyakt Bapdada     Tamil Lanka Murli    03.04.96     Om Shanti     Madhuban


சேவை செய்வதோடு எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தால் உங்கள் பழைய, வீணான சம்ஸ்காரங்களிலிருந்து விடுபடுங்கள்


இன்று எல்லையற்ற தந்தை தன் எல்லையற்ற எப்போதும் ஒத்துழைக்கும் குழந்தைகளைப் பார்க்கிறார். நாலா திசைகளிலும் உள்ள எப்பொழுதுமே ஒத்துழைக்கும் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் இதயத்தில், அவரது இதயம் என்ற சிம்மாசனளனத்தில் எப்போதும் வீற்றிருக்கிறீர்கள். அசரீரியான தந்தையிடம் தனக்கென்று ஒரு அமரத்துவ சிம்மாசனம் கூட இல்லை. ஆனால், குழந்தைகளாகிய உங்களிடம் எத்தனையோ சிம்மாசனங்கள் இருக்கின்றன. அதனால், குழந்தைகளாகிய நீங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பதைப் பார்க்கும் போது பாப்தாதாவுக்கு எப்போதும் சந்தோஷமே. ஆகா! சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் என் குழந்தைகள்! குழந்தைகளுக்கு தந்தையைக் காண்பதில் எப்போதும் சந்தோஷமே. பாப்தாதாவைக் காண்பதில் நீங்கள் எல்லோருமே சந்தோஷத்தை அனுபவிக்கிறீர்கள். பாப்தாதாவுக்கும் குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி. ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையும் விசேடமான ஆத்மா. ஒரு குழந்தை கடைசி இலக்கத்தில் இருந்தாலும், கடைசி இலக்கமாக இருக்கும் அதே சமயம் பல்கோடியில் கையளவினர் என்ற பட்டியலிலும் இருக்கிறார். எனவே, ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும் போது பாப்தாதாவுக்கு அதிக சந்தோஷமா அல்லது உங்களுக்கு அதிக சந்தோஷமா? (இருவருக்கும்) தந்தைக்கு எத்தனையோ குழந்தைகள்! எத்தனை அதிக குழந்தைகள் இருக்கிறார்களோ அவ்வளவு அதிக சந்தோஷம் அவருக்குள்ளது – ஆனால், உங்களுக்கு இரு மடங்கு சந்தோஷம் மட்டுமே! உங்களுக்கு குடும்பம் என்ற சந்தோஷம் இருக்கிறது. ஆனால் தந்தையின் சந்தோஷம் நிரந்தரமானது. உங்கள் சந்தோஷம் நிரந்தரமானதா அல்லது தளம்புவதுண்டா?

பிராமண வாழ்வின் மூச்சு சந்தோஷம் என்றே பாப்தாதா நம்புகிறார். சந்தோஷம் இல்லையென்றால், உங்களிடம் பிராமண வாழ்வே இல்லை. அதுவும் அழிவற்ற சந்தோஷம் - சிலசமயங்களில் மட்டும் சதவீதமாக அனுபவிக்கும் சந்தோஷம் இல்லை. சந்தோஷம் என்றால் சந்தோஷம். இன்றைக்கு உங்களுக்கு 50 சதவீத சந்தோஷமும் நாளைக்கு 100 சதவீத சந்தோஷமும் என்றால் உங்கள் உயிர்மூச்சு தடுமாறுகிறது. சரீரத்தையே விட்டு நீங்கினாலும் உங்கள் சந்தோஷம் மறையக்கூடாது என்று முன்பே பாப்தாதா உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். எனவே, இந்தப் பாடம் உறுதியாக இருக்கிறதா அல்லது அதில் சற்று பலவீனமாக இருக்கிறீர்களா? “சதா” என்ற வார்த்தையைக் கீழ்க்கோடிட்டிருக்கிறீர்களா? சிலசமயங்களில் மட்டும் இதை அனுபவிப்பவர்கள் என்ன ஆகுவார்கள்? எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள் அதிவிசேட சித்தி அடைபவர்கள். ஆனால், சிலசமயங்களில் மட்டுமே அதை அனுபவிப்பவர்கள் தர்மராஜ்புரியைக் கடக்க வேண்டி வரும். அதிவிசேட சித்தி அடைபவர்கள் ஒரு நொடியில் தந்தையோடு திரும்பிச் செல்வார்கள். அவர்கள் எங்கேயும் இடைநிறுத்த மாட்டார்;கள். எனவே, நீங்கள் எல்லோரும் எந்த வகையினர்? தந்தையோடு திரும்பிச் செல்பவர்களா அல்லது இடையில் நின்றுவிடுபவர்களா? (தந்தையோடு திரும்பிச் செல்பவர்கள்) உங்கள் அட்டவணையில் இது தெரிகிறதா? வைரவிழா வருடத்தில் ஒவ்வொரு குழந்தை மீதும் பாப்தாதாவுக்கு இருக்கும் விசேட எதிர்பார்ப்பு என்னவென்று உங்கள் எல்லோருக்குமே தெரியும், இல்லையா?

எல்லாக் குழந்தைகளின் அட்டவணையையும் பாப்தாதா பார்த்தார். பாபா அவர்களில் பார்த்தது என்ன? தற்சமயம், குறிப்பிட்ட ஒரு விடயத்தில் மேலதிக விசேட அவதானம் தேவைப்படுகிறது. சேவையில் அளவற்ற ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் முன்னேறுகிறீர்கள். வைர விழாவுக்கு சேவை செய்வதில் எல்லோருக்கும் விசேட ஆர்வமும் உற்சாகமும் இருக்கிறது. அதில் நீங்கள் எல்லோருமே சித்தியடைந்திருக்கிறீர்கள். அவரவர் இயலுமைக்கேற்ப ஒவ்வொருவரும் சேவை செய்வதோடு, தொடர்ந்தும் செய்வீர்கள். ஆனால், இப்போது விசேடமாகத் தேவைப்படுவது என்ன? காலம் நெருங்கி வருகிறது என்பதால், கால நேரத்துக்கு ஏற்ப இப்போது நிலவ வேண்டிய அலை என்ன? (ஆர்வமின்மை) எப்படிப்பட்ட ஆர்வமின்மை, எல்லையற்றதா, எல்லைக்குட்பட்டதா? உங்களுக்கு ஆர்வம், உற்சாகம் இருக்கும் அளவுக்கு, காலத்தின் தேவைக்கேற்ப எல்லையற்ற ஆர்வமின்மை என்ற ஸ்திதி இருக்கிறதா? உங்கள் சேவையின் வெற்றி என்பது, கூடிய விரைவில் பிரஜைகள் உருவாக்கப்படுவதே ஆகும். அதனால் தான் சேவை செய்கிறீர்கள், இல்லையா? கருவி ஆத்மாக்களாகிய உங்களுக்கு எல்லையற்ற ஆர்வமின்மை ஏற்படும் வரையில், ஏனையோருக்கு எல்லையற்ற ஆர்வமின்மை ஏற்படாது. எல்லோருக்கும் தந்தையின் அறிமுகம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், உங்களுக்கு எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவம் வரும் வரை அவர்களுக்கு அது கிடைக்காது. எல்லையற்ற ஆர்வமின்மை என்பது நிரந்தர ஆர்வமின்மை. காலத்திற்கேற்ப அல்லது சூழ்நிலைக்கேற்ப உங்களுக்கு ஆர்வமின்மை தோன்றினால், காலம் முதலிடத்தையும் நீங்கள் இரண்டாமிடத்தையுமே பெற்றுக் கொள்வீர்கள். ஏனென்றால், காலமும் சூழ்நிலைகளுமே உங்களை ஆர்வமின்மை கொள்ளச் செய்தன. சூழ்நிலைகள் முடிந்து காலம் மாறியதும் உங்கள் ஆர்வமின்மையும் முடிந்து போகும். இதை என்னவென்று சொல்வீர்கள்? எல்லையற்ற ஆர்வமின்மையா, எல்லைக்குட்பட்டதா? அதனால், இப்போது எல்லையற்ற ஆர்வமின்மை உடையவர் ஆக வேண்டும். ஆர்வமின்மையை இழப்பதன் பிரதான அடிப்படை சரீரங்கள் பற்றிய உணர்வு. சரீர உணர்வில் ஆர்வமின்மை வரும் வரை, எதிலுமே நிரந்தர ஆர்வமின்மை ஏற்படாது. தற்காலிக ஆர்வமின்மையே தோன்றும். உறவுகளில் ஆர்வமின்மை ஏற்படுவது ஒன்றும் பெரிய விடயமில்லை. உலகத்து மக்கள் பலருக்கும் அவரவர் இதயங்களில் ஆர்வமின்மை இருக்கிறது. ஆனால், இங்கே பலவகைப்பட்ட சரீர உணர்வுகள் இருக்கின்றன. அந்த வகையறாக்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியும், இல்லையா? உங்கள் எண்ணற்ற பலதரப்பட்ட சரீர உணர்வுகள் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால், பலதரப்பட்ட சரீர உணர்வு பற்றித் தெரிந்த நிலையில், உங்களுக்கு எல்லையற்ற ஆர்வமின்மை தோன்றியிருக்க வேண்டும், உங்கள் சரீர உணர்வு ஆத்ம உணர்வாக மாறியிருக்க வேண்டும். சரீர உணர்வு இயல்பாகியிருப்பது போல ஆத்ம உணர்வும் இயல்பானதாக ஆக வேண்டும். எந்த சூழ்நிலையிலும் முதலாவதாக வரும் வார்த்;தை “சரீரம்” என்பதாகும். உறவுகள் என்று வரும் போது, சரீர உறவுகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். உடமைகளாக இருந்தால் அவை சரீர உடமைகளாக இருக்கின்றன. எனவே பிரதான அடிப்படை சரீர உணர்வாகவே இருக்கிறது. சரீர உணர்வு எந்த ரூபத்திலாவது இருக்குமானால் உங்களால் எல்லையற்ற ஆர்வமின்மை கொண்டவர் ஆக முடியாது. தற்சமயம் பாப்தாதா என்ன பார்த்தார் என்றால், சரீரத்தின் பழைய சம்ஸ்காரங்களில் உங்களுக்கு ஆர்வமின்மை இல்லாதிருப்பதே சரீர உணர்வு என்ற தடைக்குக் காரணமாக அமைகிறது. எல்லாவற்றுக்கும் முதல், உங்களுக்கு சரீரத்தின் பழைய சம்ஸ்காரங்களில் ஆர்வமின்மை ஏற்பட வேண்டும். சம்ஸ்காரங்கள் உங்கள் ஸ்திதியைக் கீழே கொண்டு வருகின்றன. சம்ஸ்காரங்கள் காரணமாக உங்கள் சேவையிலும் உறவுகள், தொடர்புகளிலும் உங்களுக்கு தடைகள் உருவாகின்றன. உங்கள் பழைய சம்ஸ்காரங்களில் உங்களுக்கு ஆர்வமின்மை தோன்றும் வரை உங்களால் எப்போதும் எல்லையற்ற ஆர்வமின்மையோடு இருக்க முடியாது என்பதையே பாப்தாதா பெறுபேறுகளில் கண்டார். சம்ஸ்காரங்கள் உங்களைப் பல வழிகளிலும் ஈர்க்கின்றன. ஏதேனும் ஒன்றில் சிறிதளவேனும் ஈர்ப்பு இருக்குமானால், ஆர்வமின்மை இருக்க முடியாது. எனவே, பரிசோதித்துப் பாருங்கள்: எனது பழைய வீணான சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு இருக்கிறேனா? நீங்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் - ஆர்வமின்மை என்ற மனோபாவத்துக்காக நீங்கள் முயற்சிக்காமல் இல்லை – சிலருக்கு அல்லது பெரும்பாலானவர்களுக்கு சில விடயங்களில் மிக உறுதியான சம்ஸ்காரங்கள் இருப்பதால் அவை உங்களைத் தம்மை நோக்கி ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. எனவே, முதலில் பழைய சம்ஸ்காரங்களில் ஆர்வமின்மை ஏற்பட வேண்டும். உங்கள் விருப்பத்துக்கு எதிராக சம்ஸ்காரங்கள் தோன்றுவது ஏன்? உங்களுக்கு விருப்பமில்லை, ஆனால் அவை தோன்றுகின்றன. ஏனென்றால், அவற்றின் சூட்சும ரூபத்தை நீங்கள் இன்னும் எரிக்கவில்லை. அவற்றின் சுவடு எஞ்சியிருக்கிறது. அவை மறைந்திருக்கின்றன. சில சமயங்களில் இஷ்டமின்றியே அவை தோன்றுகின்றன. அதன் பிறகு, “நான் விரும்பவில்லை, அப்படி நடந்து விட்டது. நான் என்ன செய்வது? அப்படி நடந்து போய் விட்டது.” என்கிறீர்கள். இப்படிச் சொல்வது யார்? சரீர உணர்வா அல்லது ஆத்ம உணர்வா?

அதனால், உங்கள் சம்ஸ்காரங்களில் ஆர்வமின்மை என்ற மனோபாவம் இருப்பதில் இன்னுமே நீங்கள் பலவீனமாக இருப்பதை பாப்தாதா பார்த்தார். அவற்றுக்கு முடிவு கட்டி விட்டீர்கள். ஆனால், அதன் சுவடு கூட இல்லாத அளவுக்கு அவற்றுக்கு நீங்கள் முடிவுகட்டவில்லை. சுவடு இருக்குமிடத்தில், அதன் வம்சமும் இருக்கும். இன்றைக்கு இலேசான சுவடு இருக்குமானால், காலப்போக்கில் வம்சமே தளைத்து விடும். அது உங்களை புற ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து விடும். நீங்கள் எல்லோருமே சொல்வது என்ன? தந்தை ஞானம் நிறைந்தவராக இருப்பது போல, நாமும் ஞானம் நிறைந்தவர்கள். ஆனால், சம்ஸ்காரங்கள் உங்களைத் தாக்கும் போது நீங்கள் யார் - ஞானம் நிறைந்தவர்களா அல்லது ஞானம் இழுப்பவர்களா? எனவே, ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதற்குப் பதிலாக, ஞானத்தால் இழுபடுபவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக இல்லை. உங்களில் யாரையாவது கேட்டால், “இப்படி நடக்கக்கூடாது என்று எனக்குப் புரிகிறது. நான் அப்படிச் செய்யக்கூடாது, ஆனால் நடக்கிறது.” என்றே சொல்வீர்கள். எனவே அந்த நேரத்தில் நீங்கள் ஞானம் நிறைந்தவர்களா அல்லது ஞானத்தால் இழுபடுபவர்களா? ஞானம் நிறைந்தவர்கள் எந்த சம்ஸ்காரத்தாலோ, உறவாலோ அல்லது உடமையாலோ தாக்கப்பட முடியாது.

நீங்கள் வைர விழா கொண்டாடுகிறீர்கள். வைர விழா என்றால் வைரம் ஆகுவது. அதாவது, எல்லையற்ற ஆர்வமின்மை உடையவராகுவது. சேவையில் உற்சாகம் இருக்கும் அளவுக்கு எல்லையற்ற ஆர்வமின்மை உடையவராக இருப்பதில் அந்தளவு கவனம் செலுத்தப்படுவதில்லை. பின்வருமாறு சொல்லும் போது, கவனயீனம் காணப்படுகிறது: “எல்லாம் சரியாகத்தான் போகிறது. இதெல்லாம் சகஜம். சரியான சமயத்தில் எல்லாம் சரி வரும்.” காலம் உங்கள் ஆசிரியரா அல்லது பாபா உங்கள் ஆசிரியரா? உங்கள் ஆசிரியர் யார்? காலத்திற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்கிறீர்கள் என்றால், காலம் தான் உங்கள் ஆசிரியர். உங்கள் படைப்பு உங்களுக்கு ஆசிரியராக இருப்பது, சரியா? அப்படியான சூழ்நிலைகள் வரும் போது என்ன சொல்கிறீர்கள்? “அந்த நேரம் சரியாகி விடும். சரியாக வரும்.” தந்தைக்கே கூட “கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகி விடும். சரியான சமயத்தில் நாங்கள் முன்னேறுவோம்” என்று உறுதிப்படுத்துகிறீர்கள். காலத்தை உங்கள் ஆசிரியராக்குவது மாஸ்டர் படைப்பவர்களாகிய உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா? உங்களுக்கு அது பிடித்திருக்கிறதா? இல்லை. காலம் உங்கள் படைப்பு, நீங்களே மாஸ்டர் படைப்பாளிகள். உங்கள் படைப்பு மாஸ்டர் படைப்பாளிகளாகிய உங்களுக்கே ஆசிரியராகுவது என்பது மாஸ்டர் படைப்பாளிகளாகிய உங்களுக்குப் பொருத்தமாக இல்லை. எனவே, இப்போது பாப்தாதா உங்களுக்குத் தந்த காலப்பகுதிக்குள்ளே உங்கள் எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தை வெளிப்படச் செய்யுங்கள். சேவையின் ஈர்ப்பு இருக்கும் போது, ஆர்வமின்மை என்ற மனோபாவம் முடிவுக்கு வந்து விடுகிறது. ஏனெனில், சேவை செய்வதால் உங்களுக்குச் சந்தோஷமும் சக்தியும் கிடைப்பதோடு உடனடிப் பலனும் கிடைக்கிறது. சேவை செய்யும் போது எல்லையற்ற மனோபாவம் முடிந்து போகிறது. அதனால், இந்த எல்லையற்ற மனோபாவத்தை உங்களுக்குள் தட்டியெழுப்புங்கள். ஒரு சக்கர காலத்துக்கு முன்பு இப்படி ஆகியது நீங்களா, அல்லது வேறு யாராவதா? நீங்களே அது, இல்லையா? இப்போது அமிழ்ந்திருப்பதை வெளித்தோன்றச் செய்யுங்கள். சேவைக்கு நடைமுறைக்குச் சாத்தியமான திட்டங்களைத் தோன்றச் செய்வது போல – அதனால் தான் வெற்றியும் அடைகிறீர்கள் - எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தையும் அது போல் தோன்றச் செய்யுங்கள். எவ்வளவு வசதிவாய்ப்புகளை அடைந்திருந்தாலும் - நாட்செல்லச் செல்ல இன்னும் அதிக வசதிவாய்ப்புகளைப் பெறுவீர்கள் - எல்லையற்ற ஆர்வமின்மை உடையவராக இருக்கும் உங்கள் ஆன்மீக முயற்சியை அமிழ்ந்து போக விடாதீர்கள், அதை வெளிப்படச் செய்யுங்கள். வசதிவாய்ப்புகளுக்கும் உங்கள் ஆன்மீக முயற்சிகளுக்கும் இடையில் சமநிலை இருக்கட்டும். மேலும் முன்னேறுகையில் பஞ்சபூதங்கள் உங்கள் சேவகனாகும். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஆனால், எல்லாம் இருந்தாலும் உங்கள் ஆர்வமின்மை என்ற மனோபாவத்தை குறைய விடாதீர்கள். உங்களுக்குள்ளே எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தின் சூழலை அனுபவிக்கிறீர்களா அல்லது சேவையில் மும்முரமாகி விட்டீர்களா? உலகத்தவரால் உங்கள் சேவையின் தாக்கத்தைப் பார்க்கக் கூடியதாக இருப்பதைப் போல, உங்கள் எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தின் தாக்கத்தையும் அவர்களால் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் உங்கள் எல்லோருடைய ஸ்திதியும் எப்படியிருந்தது? கராச்சியில் இருந்த போது சேவை எதுவுமே இருக்கவில்லை. உங்களிடம் வசதிவாய்ப்புகள் இருந்தன. ஆனாலும், எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தின் சூழலை உருவாக்கியே சேவையை அதிகரித்தீர்கள். எனவே, வைர விழா கொண்டாடும் அனைவருக்கும் ஆதி சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது அவை அமிழ்ந்து போயிருக்கின்றன. இப்போது இந்த மனோபாவத்தை மீண்டும் வெளிப்படச் செய்யுங்கள். ஆதி இரத்தினங்களின் எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவமே ஸ்தாபனையை இடம்பெறச் செய்தது. அதனால், இப்போது புதிய உலகத்தை ஸ்தாபி;ப்பதற்காக அதே மனோபாவத்தை, அதே சூழலை மீண்டும் தோன்றச் செய்யுங்கள். எனவே, என்ன தேவை என்பதைக் கேட்டீர்களா?

உங்களிடம் எந்த வசதிவாய்ப்பும் இல்லாத நிலையில், உங்களுக்கு ஆர்வமின்மை இருக்கிறது என்று சொன்னால், யார் உங்களை நம்பப் போகிறார்கள்? வசதிவாய்ப்புகள் இருக்கும் போதே ஆர்வமின்மை இருக்க வேண்டும். ஆரம்ப கால வசதிவாய்ப்புகளுக்கும் இப்போதைய வசதிவாய்ப்புகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. ஆன்மீக முயற்சி மறைந்தும் வசதிவாய்ப்புகள் வெளிப்படையாகவும் ஆகியிருக்கிறது. அச்சா, வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. தாராளமாகவே பயன்படுத்துங்கள், ஏனென்றால் அவை உங்களுக்காகத்தான். ஆனால், ஆன்மீக முயற்சி அமிழ்ந்து போக அனுமதிக்காதீர்கள். முழுமையான சமநிலை இருக்க வேண்டும். உலக மக்களை தாமரை மலர் போலாகுமாறு கூறுகிறீர்கள். எல்லா வசதிவாய்ப்புகளும் இருக்கும் போதே தாமரை மலர் போலாகுமாறு சொல்கிறீர்கள். வசதிவாய்ப்புகள் தவறானவை அல்ல. உண்மையில் அவை உங்கள் கர்மத்தினதும் யோகத்தினதும் பலாபலனே ஆகும். ஆனால், இது உங்கள் மனோபாவம் பற்றிய விடயமாகும். வசதிவாய்ப்புகளின் விரிவாக்கத்தில் நீங்கள் அகப்பட்டு அவற்றின் ஆதிக்கத்துக்கு உட்படக் கூடாது, இல்லையா? தாமரை மலர் போல பற்றற்று விலகி தந்தையை நேசிப்பவர் ஆகுங்கள். அவற்றைப் பயன்படுத்தும் போது, அவற்றின் ஆதிக்கத்துக்கு உட்படாதீர்கள். விலகியிருங்கள். உங்கள் ஆர்வமின்மை என்ற மனோபாவத்தை வசதிவாய்ப்புகளால் அமிழ்ந்து போகச் செய்ய விடாதீர்கள். தற்சமயம், இதற்கு மாபெரும் அவசியம் நிலவுகிறது. உலகில் எல்லாமே வரையறையைத் தாண்டிச் செல்கிறது. அதனால், உண்மையான ஆர்வமின்மை என்ற மனோபாவம் இருக்க வேண்டும். அந்த சூழலை உருவாக்குபவர்கள் நீங்களே – முதலில் உங்களுக்குள், அதன் பின் உலகத்தில் உருவாக்குதல்.

எனவே, வைரவிழா கொண்டாடுபவர்கள் என்ன செய்வீர்கள்? இந்த அலையைப் பரப்புவீர்கள், இல்லையா? நீங்கள் எல்லோருமே அனுபவசாலிகள். ஆரம்பத்தில் இதை அனுபவித்தீர்கள். உங்களிடம் எல்லாமே இருந்தது. உங்களுக்கு வேண்டிய அளவு வெண்ணெய் சாப்பிடுங்கள். ஆனால், எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவம் உடையவராக இருங்கள். உலகத்தவர்கள் வெண்ணெய் சாப்பிடுகிறார்கள். நீங்களோ அதை அருந்தினீர்கள். நீங்கள் வெண்ணெய் ஆறாக ஓடுவதைக் கண்டவர்கள். வைரவிழாவைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் இப்போது ஒன்றாக இருப்பதால், உங்களுக்கு இப்போதைய விசேட பணி மனப்பூர்வ உரையாடல் ஆகும். சேவைக்கு கூட்டங்கூடுவது போல, பாப்தாதா சொல்லும் இதற்கும் இப்பொழுது கூட்டங்கூடுங்கள். ஒரு நொடியில் சரீரமற்றராக விரும்பினால், அதன் அத்திவாரம் இந்த எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவமே ஆகும். இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் ஒரு நொடியில் இப்படி ஆக முடியாது. போராட்டத்தில் அகப்பட்டுக் கொள்வீர்கள். ஆர்வமின்மை இருக்கும் இடம் வளமான பூமி. அங்கே நீங்கள் எதை விதைத்தாலும் உடனடியாகப் பலன் கிடைக்கும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கும் எல்லையற்ற ஆர்வமின்மை வேண்டும் என்று நீங்களும் எல்லோரும் உணர வேண்டும். அச்சா. என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குப் புரிந்ததா? இது சிரமமா, சுலபமா? சிறிதளவு ஈர்ப்பு இருக்குமா, இல்லையா? வசதிவாய்ப்புகள் உங்களைத் தம்மை நோக்கி ஈர்க்குமா?

இப்பொழுது நீங்கள் பின்வருவதைப் பயிற்சி செய்ய வேண்டும்: எப்போது வேண்டுமோ, எங்கே வேண்டுமோ, எப்படி வேண்டுமோ அந்த ஸ்திதியில் உங்களை நீங்கள் ஒரு நொடியில் நிலைநிறுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். சேவை செய்ய வேண்டி வரும் போது அந்த சேவையை செய்யுங்கள். சேவையிலிருந்து விலக வேண்டி வரும் போது, விலகுங்கள். சேவை உங்களை ஈர்ப்பதாகவும் அதனால், சேவை செய்யாமல் உங்களால் இருக்க முடியவில்லை என்றும் இருக்கக் கூடாது. என்ன வேண்டுமோ, எப்படி வேண்டுமோ, எப்போது வேண்டுமோ அதை செய்வதற்கு மனவலிமை வேண்டும். உங்களுக்கு மன வலிமை இருக்கிறதா? “நிறுத்து” என்ற சொன்ன கணம் அதை நிறுத்தும் மன வலிமை உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் முற்றுப்புள்ளி இட அது கேள்விக்குறி ஆகுவதாக இருக்கக் கூடாது. முற்றுப்புள்ளி! புள்ளியும் அல்ல, முற்றுப்புள்ளி! நடைமுறையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். இப்படி ஆக விரும்புகிறீர்கள், ஆனால் அது சிரமமாக இருக்கிறது – என்பதை எப்படி அழைப்பீர்கள்? உங்களுக்கு மன வலிமை இருக்கிறதா அல்லது வெறும் வலிமை தான் இருக்கிறதா? வீணானவை எல்லாவற்றுக்கும் முடிவு கட்டும் எண்ணம் வந்த உடனே ஒரு நொடியில் முடிவு கட்டுங்கள்.

பின்வருமாறு பல குழந்தைகளும் கூறுவதை முன்பே பாப்தாதா உங்களுக்குக் கூறியிருக்கிறார்: யோகத்தில் இருக்கிறோம், ஆனால், யோகத்துக்குப் பதிலாக போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் யோகியர் அல்ல, போராளிகள். நீண்ட காலப்பகுதிக்கு போராடும் சம்ஸ்காரங்கள் கொண்டவராக இருப்பீர்களானால், என்ன ஆகுவீர்கள்? சூரிய வம்சத்தில் ஒருவரா, சந்திர வம்சத்தில் ஒருவரா? நீங்கள் நினைத்ததும் நடக்க வேண்டும். நீங்கள் நினைத்ததும், அது நடப்பது என்பது ஒரு நொடிப்பொழுது விடயமே ஆகும். இதுவே மனவலிமை ஆகும். உங்களிடம் மனவலிமை இருக்கிறதா? அல்லது நீங்கள் மிக நல்ல திட்டங்கள் தீட்டுவதாகவும் அதில் பத்துத் திட்டங்களில் ஐந்தே இடம்பெறுவதாகவும் இருக்கிறதா? அப்படி இல்லை தானே? “இப்படிச் செய்வோம். இப்படி நடக்கும்.” என்றெல்லாம் நன்கு நினைக்கிறீர்கள். ஆனால், நடைமுறையில் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கிறது. எனவே இப்போது, ஏதாவது ஒன்றை நினைத்ததுமே அதை ஏற்கனவே நடந்து முடிந்த ஒன்றாகவே அனுபவிக்கும் அளவுக்கு உங்களுக்கு மனவலிமை இருக்க வேண்டும். அமிர்தவேளையில் பாபாவோடு இதயபூர்வமாகப் பேசும் போது, “இப்படிச் செய்வேன், அப்படிச் செய்வேன்.” என்று மிக நல்ல விடயங்கள் எல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், இரவாகும் போது பெறுபேறு எப்படி இருக்கிறது? அத்தனை இனிமையான, அத்தனை நல்ல விடயங்களைப் பேசி பாபாவை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்கள். பாபாவும் “ஆகா என் குழந்தைகள்” என்று மிகவும் சந்தோஷப்பட்டுப் போகிறார். பாபா, நீங்கள் எங்களுக்கு என்னவெல்லாம் சொல்லியிருக்கிறீர்களோ அவையெல்லாம் நடக்க வேண்டும், அவை ஏற்கனவே நடந்தவையே என்றெல்லாம் சொல்;கிறீர்கள். மிக நல்ல விதமாக எல்லாம் பேசுகிறீர்கள். சிலர் பாபாவுக்கு மிகவும் உறுதிப்படுத்தி, “நாங்கள் இல்லையென்றால் வேறு யார்? பாபா, ஒவ்வொரு கல்பமும் நாங்களே அவர்கள்|| என்று கூறி அவர்களள் சந்தோஷப்படுகிறார்கள். பின்னால் இருப்பவர்கள் கவனமாகக் கேட்கிறார்களா? முன்னால் இருப்பவர்களுக்கு முதல் பின்னால் இருப்பவர்கள் இதைச் செய்வார்களா? நீங்கள் பின்னால் இருந்தாலும் இதயத்துக்கு நெருக்கமானவர்கள். ஏன்? மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் சேவையைச் செய்தவர்கள் நீங்கள். அதனால், சேவையாளர்கள் எப்போதும் தந்தையின் இதயத்தில் இருப்பார்கள். நீங்களும் தாதிமாராக இருந்தால் நீங்களும் கூட…. என்று ஒருபோதும் சிந்திக்காதீர்கள். நீங்கள் முன்னால் இல்லையென்றாலும் இதயத்தில் இருக்கிறீர்கள். இதயமும் சாதாரண இதயம் அல்ல, இதயசிம்மாசனம். நீங்கள் இதயசிம்மாசனத்தில் இருப்பவர்கள், இல்லையா? நீங்கள் ஒரு மூலையிலோ, கீழேயோ, மொழிபெயர்ப்பு அறைக்குள்ளேயே, எங்கே இருந்தாலும் தந்தையின் இதயத்தில் இருக்கிறீர்கள்.

அதி மேலான பாக்கியத்தைக் கொண்ட சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் நாலா திக்கில் இருக்கும் ஆத்மாக்களுக்கும், சூழலை எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவம் நிறைந்ததாக ஆக்கும் விசேட ஆத்மாக்களுக்கு, தமது மேன்மையான சிறப்பியல்புகளைப் பயன்படுத்தும் விசேட ஆத்மாக்களுக்கும், ஒரே தந்தையின் சகவாசத்தையும் ஸ்ரீமத் என்னும் கையையும் எப்போதும் அனுபவிக்கும் நெருக்கமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

ஆசீர்வாதம்:
ஒரே ஒருவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஆசீர்வாதங்களை அருள்பவரைத் திருப்திப்படுத்துவதும் என்பதன் அர்த்தம் உணர்ந்து முழு வெற்றியின் சொரூபமாக ஆகுவீர்களாக.

ஆசீர்வாதங்களை அருளும் தந்தையின் ஆசீர்வாதங்கள் முடிவற்றவை. எவரும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பொக்கிஷக் களஞ்சியம் திறந்திருக்கிறது. சில குழந்தைகள் திறந்த பொக்கிஷக் களஞ்சியத்தால் நிறைகிறார்கள். மற்றவர்களோ தமது இயலுமைக்கு ஏற்ப நிறைகிறார்கள். ஆசீர்வாதங்களை அருள்பவர் என்ற வடிவில் கள்ளமில்லாத பிரபு உங்கள் மடிகளை உச்ச அளவில் நிறைக்கிறார். அவரைத் திருப்திப்படுத்தும் முறையை அறிந்து கொண்டால் போதும், முழு வெற்றி கிடைக்கும். ஆசீர்வாதங்களை அருள்பவர் ஒரு வாசகத்தை மிக அதிகமாக விரும்புகிறார், அதாவது: ஒருவருக்கே விசுவாசமாக இருப்பது. உங்கள் எண்ணங்களிலோ கனவுகளிலோ கூட வேறு எவரும் இல்லாதிருக்கட்டும். நீங்கள் ஒருவருக்கே சொந்தம், வேறு யாருக்கும் அல்ல என்பது உங்கள் மனோபாவத்தில் இருக்கட்டும். இதன் அர்த்தம் புரிந்தவர்களது மடிகள் எப்போதும் நிறைந்தே இருக்கும்.

சுலோகம்:
உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் ஒரே சமயத்தில் சேவையாற்றுங்கள், அப்போது உங்களுக்கு இரட்டைப் பலாபலன் கிடைக்கும்.