20.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, உங்கள் சரீரம் உட்பட உங்கள் கண்களால் பார்க்கும் அனைத்தையும் மறந்து விடுங்கள், இவை அனைத்தும் அழிய உள்ளதால், ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்யுங்கள்.

கேள்வி:
சத்தியயுகத்தில் இராஜ அந்தஸ்தாகிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வெல்வதற்கு நீங்கள் என்ன முயற்சியைச் செய்ய வேண்டும்?

பதில்:
1. சத்தியயுகத்தில் இராஜ அந்தஸ்தைக் கோருவதற்கு, உங்கள் மீது முழுக் கவனம் செலுத்துங்கள். உங்களுக்குள் எந்தத் தீய ஆவியும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீய ஆவியேதும் இருக்குமாயின் உங்களால் இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய முடியாது. ஓர் அரசனாக வேண்டுமாயின், இங்கே நீங்கள் பிரஜைகளை உருவாக்க வேண்டும். 2. இங்கே நீங்கள் அழுவதில் இருந்து விடுபட்டவர் ஆகவேண்டும். நீங்கள் வேறு எவரையேனும் நினைவு செய்தவாறு அதிர்ச்சியுடன் உங்கள் சரீரத்தை விட்டு நீங்கினால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படுகின்றது. இதனாலேயே நீங்கள் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.

பாடல்:
இன்று இல்லையேல், நாளை மேகங்கள் கலையும்.

ஓம் சாந்தி.
ஒம் சாந்தி என்று சிவபாபா கூறுகிறார். இவருடைய ஆத்மாவும் ஒம் சாந்தி என்று கூறுகிறார். அந்த ஒருவர் பரமாத்மாவும் இவர் பிரஜாபிதாவும் ஆவார்கள். இவருடைய ஆத்மாவும் ஒம் சாந்தி என்று கூறுகிறார், குழந்தைகளும் ஒம் சாந்தி என்று கூறுகிறார்கள். நீங்கள் சுய தர்மத்தை அறிந்திருக்க வேண்டும். மக்கள் தங்கள் சுயதர்மத்தை அறியாதுள்ளார்கள். ஓம் சாந்தி என்பதன் அர்த்தம்: ஆத்மாவாகிய நான், அமைதி சொரூபம். ஆத்மாவில் மனமும் புத்தியும் உள்ளடங்கியுள்ளன. அவர்கள் இதனை மறந்து மனதை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். ஆத்மாவினால் எவ்வாறு அமைதியை அடைய முடியும்? என அவர்கள் வினவினால், அவர்களுக்குக் கூறுங்கள்: மிகவும் அற்புதமான கேள்வி! ஆத்மா அமைதி சொரூபமும், அமைதிதாமம் ஆத்மாவின் வசிப்பிடமும் ஆகும். அங்கே உங்களுக்கு அமைதி கிடைக்கும். ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கும் போது அவர் நிசப்தமானவராக ஆகுகின்றார். இதுவே முழு உலகமும் ஆகும். ஆத்மாக்கள் அனைவரும் தங்களுடைய பாகங்களை நடிக்க வேண்டும். நீங்கள் செயல்களை எவ்வாறு சப்தமின்றிச் செய்ய முடியும்? மனிதர்கள் அமைதியை வேண்டி எங்கும் அலைந்து திரிகிறார்கள். ஆத்மாக்களாகிய எங்களின் ஆதிதர்மம் அமைதி என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்பொழுது உங்களுக்கு ஆத்மாக்களின் தர்மத்தைப் பற்றித் தெரியும். ஆத்மா ஒரு புள்ளியைப் போன்றவர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அசரீரியான பரமாத்மாவிற்கு வந்தனங்கள் என்று அனைவரும் கூறுகிறார்கள். அந்த ஒரே ஒருவரை மாத்திரமே பரமதந்தை என அழைக்க முடியும். அவர் அசரீரியானவர் என்பதால், அவரை நோக்கியே பரமாத்மாவாகிய சிவனுக்கு வந்தனங்கள்; என்று கூற முடியும். இப்பொழுது உங்கள் புத்தியின் யோகம் அத்திசை நோக்கியுள்ளது. மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தந்தையுடன் யோகம் செய்வதில்லை. குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகிறது. பிரம்ம தேவருக்கு வந்தனம் என்று கூறப்படுகிறது. பரமாத்மா பிரம்மாவிற்கு வந்தனங்கள்; என்று கூறப்படுவதில்லை. அந்த ஒரே ஒருவரை மாத்திரமே பரமாத்மா என்று அழைக்க முடியும். அவரே படைப்பவர். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பிரம்மாவினூடாக உங்களைப் படைத்து உங்களைத் தனக்குரியவர் ஆக்குகிறார். பிரம்மாவிற்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக அவர் பிரம்மாவின் ஆத்மாவையும் தனக்குரியவராக ஆக்கியுள்ளார். பாபா பிரம்மா ஆத்மாவிற்கும் கூறுகிறார்: என்னையே நினைவு செய்யுங்கள். அவர் பிரம்மகுமார், பிரம்மகுமாரிகளிடமும், தன்னையே சதா நினைவு செய்து, சரீர உணர்வைத் துறந்திடுங்கள் என்றே கூறுகிறார். இவை ஞான விடயங்கள் ஆகும். நாங்கள் 84 பிறவிகளை எடுத்ததால் எங்களது சரீரங்கள் பழையதாகி விட்டன. அவர்கள் உடநலமின்றி, நோய்வாய்ப்பட்டவர்களாகி விட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் முற்றிலும் நோயற்று இருந்தீPர்கள். சத்தியயுகத்தில் நோய்கள் இருக்கவில்லை. அனைவரும் என்றும் ஆரோக்கியமாகவே இருந்தார்கள். எவரும் ஒருபோதும் கடனாளியாகுவதில்லை. இங்கு அனைவரும் தொடர்ந்தும் கடனாளியாகுகிறார்கள். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அதனால் நீங்கள் கடனாளியாகுகிறீர்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனிற்கு வந்தனங்கள் எனக் கூறப்பட்டுள்ளது என்று குழந்தைகளுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பிரம்மாவை பரமாத்மா என்று கூறமாட்டார்கள். அவர் பிரஜாபிதா (மக்களின் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் சூட்சும உலகத்தில் இருக்கிறார்கள். இந்தப் பிரஜாபிதா பின்னர் தேவதையாக ஆகுகிறார் என எவருக்கும் தெரியாது. சூட்சுமவாசி ஆகுவது எனில் சூட்சும சரீரத்தைக் கொண்டிருப்பதாகும். இப்பொழுது, தந்தை தொடர்ந்து தன்னை நினைவு செய்யுமாறு குழந்தைகளுக்குக் கூறியுள்ளார். நீங்களும் அசரீரியானவர்கள், நானும் அசரீரியானவன். நீங்கள் சதா என்னை நினைவு செய்வதுடன் உங்களின் புத்தியின் யோகத்தைச் சரீரதாரிகள் அனைவரிடமிருந்தும் அகற்றுங்கள். உங்கள் சரீரம் உட்பட கண்களால் பார்க்கும் அனைத்தும் அழியப் போகின்றது. பின்னர், அமைதி தாமத்தின் ஊடாக சந்தோஷதாமத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் சந்தோஷதாமத்தை விரும்புகிறீர்கள். அதாவது கிருஷ்ணதாமத்தை விரும்புகிறீர்கள். ஆகவே தந்தை கூறுகிறார்: அமைதிதாமத்தையும் சந்தோஷதாமத்தையும் நினைவு செய்யுங்கள். சத்தியயுகத்தில் தூய்மை, அமைதி, சந்தோஷம் இருந்தாலும் அதை நீங்கள் அமைதிதாமம் என்று அழைக்க முடியாது. நீங்கள் செயல்கள் செய்ய வேண்டும். நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் பாவச்செயல்கள் அல்ல. ஏனெனில் அங்கு மாயை இல்லை. இதைப் புரிந்து கொள்வது இலகுவானது. இது பிரம்மாவின் பகல் என்பதால் நீங்கள் பகலில் தடுமாறுவதில்லை. நீங்கள் இரவில் தடுமாறுகிறீர்கள். எனவே அரைக்கல்பத்திற்குப் பக்தி நிலவுகிறது. அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் இரவும் அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் பகலும் உள்ளன. பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: ஆறுமாதத்திற்கு இரவும், ஆறுமாதத்திற்கு பகலும் உள்ள ஓர் இடமுள்ளது. எவ்வாறாயினும் இது சமயநூல்களில் விளங்கப்படுத்தப்படவில்லை. சமயநூல்களில் அவர்கள் பிரம்மாவின் பகலும் பிரம்மாவின் இரவும் பற்றி விளங்கப்படுத்தியுள்ளார்கள். விஷ்ணு இரவு என்று ஏன் கூறப்படவில்லை? அங்கே அவரிடம் (விஷ்ணு) ஞானம் இல்லை. இது பிரம்மாவினதும் பிரம்மகுமார், பிரம்மகுமாரிகளிதும்; எல்லையற்ற பகலும் இரவும் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். சிவபாபாவின் இரவும் பகலும் என்று உங்களால் கூறமுடியாது. குழந்தைகளே, எங்களுக்கு அரைக்கல்பத்திற்குப் பகலும், அரைக்கல்பத்திற்கு இரவும் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். அதுவே விளையாட்டாகும். சந்நியாசிகளுக்கு இல்லறப் பாதையைப் பற்றித் தெரியாது; அவர்கள் துறவறப்பாதையில் உள்ளார்கள். அவர்களுக்குச் சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் விடயம்; பற்றித் தெரியாது. அவர்கள் சுவர்க்கம் எங்கிருந்து வந்தது என்று கேட்கின்றார்கள். ஏனெனில், சமயநூல்களில் கூட சுவர்க்கத்தை நரகமாக மாற்றியுள்ளார்கள். பாபா இப்பொழுது மிகவும் இனிமையான விடயங்களைக் கூறுகின்றார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, நான் அசரீரியானவன். ஞானக்கடல். இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற எனது பாகம் இந்நேரத்தில் வெளிப்படுகின்றது. தந்தை தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். எனது இந்த ஞானம் பக்திமார்க்கத்தில் வெளிப்படமாட்டாது. அந்நேரத்தில் தொடரும் சம்பிரதாயங்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். நாடகத்தின்படி, பக்தர்கள் என்ன உணர்வுடன் எவரை வழிபடுகின்றார்களோ, அவரின் காட்சியை அவர்களுக்குக் கொடுப்பதற்கு நானே கருவியாவேன். அந்த நேரத்தில் ஞானத்திற்கான பாகம் எனது ஆத்மாவிலிருந்து வெளிப்படுவதில்லை. இப்போதே அது வெளிப்படுகின்றது. உங்கள் படச்சுருள் 84 பிறவிகளினால் நிரப்பப்பட்டிருப்பது போன்று, எனக்கு நாடகத்தில் எனது பாகமாக என்ன நிச்சயிக்கப்பட்டிருக்கின்றதோ அது தானாகவே தனக்குரிய நேரத்தில் வெளிப்படும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை. பக்தி மார்க்கத்தில் ஞானம் என்னிடமிருந்து வெளிப்பட்டிருந்தால், நான் அதனைப் பேசி இருப்பேன். அங்கு இலக்ஷ்மி நாராயணனுக்குக் கூட இந்த ஞானம் இருக்கமாட்டாது: இது நாடகத்தில் நிச்சயிக்கப்படவில்லை. இன்ன இன்ன குருமார்கள் தங்;களுக்கு ஜீவன்முக்தி அளிப்பதாக மக்கள் கூறுகின்றார்கள்; ஆனால் குருமார்களால் எப்படி ஜீவன்முக்தியைக் கொடுக்கமுடியும்? அவர்களுக்கும் பாகம் இருக்கின்றது. சிலர் கூறுகின்றார்கள்: உலகம் நிச்சயமாக மீண்டும் சுழலும். சக்கரம் தொடர்ச்சியாகச் சுழலும். அவர்கள் சுழலும் சக்கரத்தைக் காட்டி உள்ளார்கள். உலகச் சக்கரத்தின் அதிசயத்தைப் பாருங்கள்: சுழலும் சக்கரத்தைச் சுழற்றுவதன் மூலம் உங்கள் வாழ்வாதாரத்தைத் தேட முடியும். உலகச் சக்கரத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். பாபா மிகச்சரியான கருத்தை விளங்கப்படுத்துகின்றார்: ஏனையோர் பிழையாகவே விளங்கப்படுத்துகின்றார்கள். உங்கள் புத்தியின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது. கடவுளே, மிக மேன்மையானவர். அடுத்து வருவோர் சூட்சும உலகவாசிகளாகிய பிரம்மா, விஷ்ணு, சங்கர்; ஆவர். பின்னர், சரீர உலகில் முதலில் இலக்ஷ்மி நாராயணனும் பின்னர் ஜெகதாம்பா, ஜெகத்பிதாவும் உள்ளார்கள். அவர்கள் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் மனிதர்களே. அவர்களுக்கு மேலதிகக் கரங்கள் இல்லை. பிரம்மாவிற்குக் கூட இரு கரங்களே உண்டு. பக்திமார்க்கத்தின் படங்களில் அதிகக் கரங்கள் உள்ளன. ஒருவருக்கு எட்டுக் கரங்கள் இருக்குமாயின் அவருக்கு எட்டுக் கால்கள் இருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறல்ல. அவர்கள் இராவணனைப் பத்துத் தலைகளுடன் காட்டியுள்ளார்கள்;, ஆகவே அவனுக்கு 20 கால்கள் காணப்பட வேண்டும். அவை அனைத்தும் பொம்மை விளையாட்டுக்களாகும். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. இராமாயணம் வாசிக்கப்படுகின்ற போது, அநேக மக்கள் அழுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை ஆகும். பாவப் பாதையைப் பின்பற்றியதால், நீங்கள் காமச்சிதையில் அமர்ந்ததன் மூலம் அவலட்சணம் ஆகிவிட்டீர்கள். இப்போது ஒரு பிறவிக்கு ஞானச்சிதையில் அமர்வதற்கான பந்தனத்தில் கட்டுப்படுவதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். அங்கு ஆத்ம உணர்வுடன் இருந்தீர்கள். நீங்கள் ஒரு பழைய சரீரத்தை விடுத்து மற்றோர் புதிய சரீரத்தை எடுத்தீர்கள். அங்கு அழுவதற்கான தேவையில்லை. ஒரு குழந்தை பிறந்தவுடன், அவர்கள் வாழ்த்துக் கூறுவதுடன் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால், குழந்தை மறுநாள் மரணி;த்து விட்டால், அழுது புலம்புவார்கள். இது துன்பமிக்க உலகமாகும். முழுப்பாகமும் பாரதத்தைப் பற்றியதே என்பது உங்களுக்குத் தெரியும்: பாரதம் அநாதியான இடமாகும். இங்கு மட்டுமே சந்தோஷமும் துன்பமும் உள்ளன, அதாவது, சுவர்க்கத்தினதும் நரகத்தினதும் ஆஸ்திகள் உள்ளன. நிச்சயமாக, தந்தையாகிய சுவர்க்கக் கடவுள் சுவர்க்கத்தை ஸ்தாபித்திருக்க வேண்டும். நூறாயிரக்கணக்கான வருடங்களுக்கான விடயம் எனில், எப்படி எவராவது எதனையும் நினைவு செய்ய முடியும்? சுவர்க்கம் மீண்டும் எப்போது தோன்றும் என்பது எவருக்கும் தெரியாது. கலியுகத்தில் இன்னும் 40,000 ஆண்டுகள் உள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். 5000 வருடத்தில் 84 பிறவிகள் நீங்கள் எடுத்தால், 40,000 வருடங்களில் நீங்கள் எத்தனை பிறவிகள் எடுப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்போது வெளிச்சத்தில் உள்ளீர்கள். ஆனால் ஞானம் அற்றவர்கள் அறியாமையில் உறங்குகிறார்கள். இது அறியாமை என்ற இரவாகும். எவருக்கும் உலகச் சக்கரத்தைப் பற்றிய ஞானம் இல்லை. நாங்கள் நடிகர்கள். உலக நாடகச் சக்கரம் நான்கு பாகங்களாக உள்ளது. மனிதர்கள் மட்டுமே இதனைப் புரிந்து கொள்வார்கள். இப்போது, குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை ஞானம் நிறைந்தவர் என்பது தெரியும். அவர் தன்னிடமுள்ள சிறப்பியல்புகளை உங்களுக்குத் தானமாக கொடுக்கிறார். நீங்கள் ஞானக்கடலிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். பாபா எப்போதும் கூறுகின்றார்: சரீரதாரிகளை நினைவு செய்ய வேண்டாம். சரீரதாரி மூலம் நான் பேசினாலும், நீங்கள் அசரீரியான என்னையே நினைவு செய்ய வேண்டும். தொடர்ச்சியான நினைவு இருக்குமாயின், உங்களுக்குத் தாரணை இருப்பதுடன் உங்கள் புத்தியின் பூட்டும் திறக்கப்படும். 15 நிமிடங்கள் அல்லது அரை மணித்தியாலத்திற்கு ஆரம்பித்து, பின்னர் தொடர்ச்சியாக அதனை அதிகரியுங்கள். இறுதியில் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யக்கூடாது. இதற்காகவே, சந்நியாசிகள் அனைத்தையும் துறந்து, தபஸ்யாவில் அமர்கின்றார்கள். எனவே அவர்கள் சரீரத்தை நீக்கும் போது, அச்சூழல் முழுவதிலும் அமைதி நிலவுகின்றது, அதாவது, அந்நகரத்தில் ஒரு மகாத்மா தனது சரீரத்தை நீங்கிச் சென்றதைப் போன்று இருக்கும். ஆத்மாக்கள் அநாதியானவர்கள் என்றும், அவர்கள் ஒளியுடன் இரண்டறக் கலப்பதில்லை என்பதும் பற்றிய ஞானம் உங்களிடம் இப்போதுள்ளது. அவர்களுக்கு இந்த ஞானமில்லை. ஆத்மாக்கள் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை என்றும், ஆத்மாக்களில் இருக்கும் ஞானமும் அழிவதில்லை என்றும் பாபா விளங்கப்படுத்துகின்றார். நாடகம் அழிவற்றது. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களின் சக்கரம் தொடர்ச்சியாகச் சுழலும். நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றீர்கள், அதன் பின்னர் ஏனைய சமயங்களுக்குரிய ஆத்மாக்கள் வரிசைக்கிரமமாக இறங்குகிறார்;கள். தந்தையாகிய கடவுள் ஒருவரே ஆவர். சத்தியயுகத்தில் இருந்து கலியுகம் வரைக்கும் தொடர்ச்சியான விரிவாக்கம் உள்ளது. இன்னொரு விருட்சம் வளரமாட்டாது. ஒரே ஒரு சக்கரமே உள்ளதுடன் அவர்கள் ஒரே ஒருவரையே நினைவு செய்வார்கள். அவர்கள் குருநானக்கை நினைவு செய்வார்கள். ஆனால் அவர் தனக்கு உரிய காலப்பகுதியிலேயே வருவார். அனைவரும் பிறப்பு இறப்புச் சக்கரத்திற்குள் வரவேண்டும். கிருஷ்ணர் எங்கும் நிறைந்துள்ளார் என்று மக்கள் நம்புகிறார்கள். சிலர் ஒருவரை நம்புவார்கள். சிலர் வேறு எவரையாவது நம்புவார்கள். பாபா விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, அனைவரதும் தந்தை அசரீரியானவர் என்று சாதூரியமாக விளங்கப்படுத்துங்கள். கீதையில் கடவுள் பேசுகிறார் என்று கூறப்படுவதால், கீதை அனைத்துச் சமயநூல்களுக்கும் தாயும் தந்தையும் ஆகும். ஏனெனில் அனைவரும் கீதையின் ஊடாக ஜீவன்முக்தியைப் பெறுகின்றார்கள். தந்தை அனைவரதும் துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். பாரதம் அனைவரதும் யாத்திரைத் தலமாகும். தந்தையின் மூலமே நீங்கள் அனைவரும் ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள். இது அவரது பிறப்பிடம். அனைவரும் அவரை நினைவு செய்கின்றனர். தந்தையே வருகை தந்து இராவண இராச்சியத்தில் உள்ள அனைவருக்கும் விடுதலை கொடுக்கின்றார். இப்போது இது ஆழ் நரகமாகும். தந்தை கூறுகின்றார்: சரீரத்திலுள்ள ஆத்மாக்களே, நீங்கள் இப்போது வீடு திரும்ப வேண்டும். இலகுவாக என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் எந்தச் சரீரதாரிகளிடமும் சிக்கிக்;கொண்டால், நீங்கள் அழ நேரிடும். நீங்கள் ஒரே ஒருவரை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். 21 பிறவிகளுக்கு நீங்கள் அழத் தேவையில்லாத ஓர் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். ஒருவர் மரணித்தால் நீங்கள் அழ ஆரம்பிக்கின்றீர்கள். அழுவதிலிருந்து விடுபடுவது உங்களுக்குக் கடினமாக உள்ளது. எவரையாவது நினைவு செய்தவாறே அதிர்ச்சியுடன் நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கினால் இழப்பு ஏற்படும். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். பலருக்கும் இதய வழுவல் உள்ளது. நடக்கும் போதும் உலாவித் திரிகின்ற போதும், நீங்கள் ஒரே ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதுவும் புத்தியில் பதியச் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் நாள் முழுவதும் பாபாவை நினைவு செய்வதில்லை என்பதால், நீங்கள் ஒன்றுகூடலில் அமரச் செய்யப்படுகின்றீர்கள். அனைவரும் ஒன்றுசேரும் போது கூட்டான சக்தி உண்டு. உங்கள் புத்தியால் நீங்கள் எவரையேனும், நினைவு செய்தால், நீங்கள் மறுபிறவி எடுக்க நேரிடும். என்ன நடந்தாலும் நீங்கள் ஸ்திரமாக இருக்க வேண்டும். சரீர உணர்வுகள் இருக்கக் கூடாது. எவ்வாறாயினும் தந்தையின் நினைவில் நீங்கள் எவ்வளவு இருக்கின்றீர்களோ அது உங்கள் நினைவுப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றது. நீங்கள் விரைவில் இங்கிருந்து சென்று உங்கள் சிம்மாசனத்தில் அமர்வீர்கள் என்பதனைத் தெரிந்து கொள்ளும்போது நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள். தந்தை எப்போதும் கூறுகின்றார்: குழந்தைகளே, ஒருபோதும் நீங்கள் அழக்கூடாது. விதவைகள் மட்டுமே அழுவார்கள். இங்கு நீங்கள் முழுமையாகத் தெய்வீகக்குணம் உள்ளவர்கள் ஆக வேண்டும். பின்பு இது அழிவற்றதாகுகின்றது. முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் உங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்களில் தீய ஆவி எதனையாவது கொண்டிருந்தால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நாரதர் ஒரு பக்தர் ஆவார், அவர் இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய விரும்பினார். அவர் தனது முகத்தைப் பார்த்த போது, அது குரங்கைப் போன்றிருந்தது. நீங்கள் இலக்ஷ்மியைத் திருமணம் செய்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஐந்து விகாரங்களும் நிறைந்துள்ள ஒருவரால் எவ்வாறு இலக்ஷ்மியைத் திருமணம் செய்ய முடியும்;? பெரும் முயற்சி செய்யப்பட வேண்டும். நீங்கள் பெரிய அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வெல்கின்றீர்கள். நாங்கள் நிச்சயமாக, அரசர்களாக வேண்டும். ஆனால், பின்னர் பிரஜைகளும் இருப்பார்கள். நூறாயிரக்கணக்கில் விரிவாக்கம் காணப்படும். எவராவது, வருகை தந்தால் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்: தூய்மையாக்குபவரான பரமாத்மாவாகிய பரமதந்தையுடன் உங்கள் உறவுமுறை என்ன? அவரே தந்தை என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள். அவர் மாத்திரமே அனைவரையும் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்களாக மாற்றுபவர் என எழுதுமாறு அவர்களிடம் வினவுங்கள். அவர்கள் இதனை எழுதுகின்றபோது விவாதம் செய்ய மாட்டார்கள். அவர்களிடம் கூறுங்கள்: இங்கு நீங்கள் செவிமடுக்கவா அல்லது பேசவா வந்தீர்கள்? அனைவருக்கும் சற்கதி;யை அருள்பவர் அசரீரியானவர். அவருக்கு என்றுமே சூட்சுமமான அல்லது சரீர வடிவம் இல்லை. அச்சா, பிரஜா பிதாவுடன் உங்கள் உறவுமுறை என்ன? இவர் சரீரதாரி. அவர் அசரீரியான தந்தையாவார். நாங்கள் ஒரே ஒரு தந்தையையே நினைவு செய்ய வேண்டும். அதுவே இலக்கும் இலட்சியமும் ஆகும். நாங்கள் அவரின் மூலம் இராச்சியத்தைப் பெறுகின்றோம். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியை எந்தச் சரீரதாரிகளிடமும் சிக்க விடாதீர்கள். நீங்கள் நினைவின் மிகச்சரியான பதிவேட்டை வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒருபோதுமே அழக்கூடாது.

2. உங்கள் ஆதிதர்மமான அமைதியில் உங்களை நிலைநிறுத்தி;க் கொள்ள வேண்டும். அமைதியைத் தேடி அலைந்து திரியாதீர்கள். அனைவரையும் அலைந்து திரிவதில் இருந்து விடுதலை செய்யுங்கள். அமைதி தாமத்தையும் சந்தோஷ தாமத்தையும் நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
விரக்தியடைவதிலும் அகங்காரத்திலிருந்தும் விடுபட்டு, பணிவுடன் புதுப்பித்தல் பணியை மேற்கொள்வீர்களாக.

உங்கள் முயற்சியில் என்றுமே விரக்தியடையாதீர்கள். நானே இதனை செய்ய வேண்டும். நானே இவ்வாறு ஆக வேண்டும் வெற்றி மாலை எனது ஞாபகார்த்தமாகும். இந்த விழிப்புணர்வுடன் வெற்றியாளர் ஆகுங்கள். ஒரு நிமிடம் அல்லது ஒரு விநாடியேனும் உங்கள் இதயத்;திற்கு விரக்தி ஏற்பட அனுமதிக்காதீர்கள். அகங்காரம், விரக்தி இரண்டுமே உங்களை பலசாலிகளாக இருக்க அனுமதிப்பதில்லை. அகங்காரமுடையவர்களுக்கு அவமானப்படும் உணர்வும் அதிகளவில் இருக்கும். ஆகையால், இவை இரண்டிலிருந்தும் நீங்கள் விடுபட்டால், உங்களால் புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள முடியும்.

சுலோகம்:
உலக சேவை எனும் ஆசனத்தில் அமர்ந்திருந்தால் உங்களால் உங்கள் இராச்சியத்தின் சிம்மாசனத்தில் அமர முடியும்.