20-11-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது கரையில் நிற்கின்றீர்கள், நீங்கள் மறுபுறத்திற்குக் கடந்துசெல்ல வேண்டும். வீடு திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்.

கேள்வி:

எந்த விடயத்தை நினைவு செய்வதனால் உங்கள் ஸ்திதி ஆட்ட, அசைக்க முடியாததாகின்றது?

பதில்:

கடந்தது கடந்துவிட்டது. கடந்ததையிட்டுக் கவலைப்படாமல் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லுங்கள். சதா சிவபாபா ஒருவரை மாத்திரம் தொடர்ந்தும் பார்த்தால், உங்கள் ஸ்திதி ஆட்ட அசைக்க முடியாதாகும். நீங்கள் இப்பொழுது கலியுகத்தின் எல்லையைத் தாண்டி விட்டீர்கள் என்பதால் நீங்கள் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? அதனை நோக்கி உங்கள் புத்தி ஈர்க்கப்படவே கூடாது. இது மிகவும் சூட்சுமமான கல்வியாகும்.

ஓம் சாந்தி. நாட்கள் தொடர்ந்தும் மாறுகின்றன, நேரமும் தொடர்ந்தும் கடந்து செல்கின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்: சத்தியயுகத்திலிருந்து கலியுகத்தின் இறுதியான இன்றுவரை நேரம் கடந்து சென்றுள்ளது. இப்பொழுது நீங்கள் கரையில் நிற்கின்றீர்கள். சத்திய, திரேதா, துவாபர, கலியுகத்தின் சக்கரம் ஒரு மாதிரியைப் போன்றதாகும். இவ் உலகம் மிகப் பெரியதாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த மாதிரியை புரிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது இது கலியுகத்தின் இறுதி என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இதனைப் புரிந்திருக்கின்றீர்கள். ஆகையால், உங்கள் புத்தி சத்தியயுகத்திலிருந்து இன்றுவரையில், முழு உலகச் சக்கரத்தையும் சுற்றிய பின்னர், கலியுக இறுதியான கரையில் வந்து நிற்கவேண்டும். நேரம் தொடர்ந்தும் நகர்கின்றது, நாடகச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாடகம் இன்னமும் எவ்வளவு எஞ்சியுள்ளது? இன்னமும் சிறிதளவே உள்ளது. முன்னர் உங்களுக்கு இது தெரியாது. இன்னமும் சிறிதளவு மூலையே எஞ்சியுள்ளது எனத் தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்கள் இவ் உலகை விட்டு, மறு உலகிற்குச் செல்வதற்கு இன்னமும் சிறிது காலமே உள்ளது. இப்பொழுது நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். நாங்கள் சத்தியயுகத்திலிருந்து சக்கரத்தைச் சுற்றி வந்த பின்னர் இப்பொழுது கலியுகத்தின் இறுதிக்கு வந்திருக்கின்றோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்குமான வாசல்கள் உள்ளன. இங்கும் அவ்வாறே. கரையை கடக்க இன்னும் சிறிதளவு பகுதியே உள்ளது. இது அதிமேன்மையான சங்கமயுகமாகும். நாங்கள் இப்பொழுது கரையில் நிற்கின்றோம். இன்னமும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. இப் பழைய உலகத்தின் மீதுள்ள பற்றுக்கள் இப்பொழுது அகற்றப்பட வேண்டும். நாங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்லவேண்டும். உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். உங்கள் புத்தியில் நீங்கள் சக்கரத்தைத் தொடர்ந்தும் சுழற்றிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது கலியுகத்தில் இல்லை. நீங்கள் அந்தப் பக்கத்தைக் கடந்து விட்டீர்கள். ஆகையால், நீங்கள் பழைய உலகத்திலிருந்து வெளியேறிவிட்டதால், மறுபுறத்தில் உள்ளவற்றை நீங்கள் ஏன் நினைவுசெய்ய வேண்டும்? நாங்கள் இப்பொழுது மேன்மையான சங்கமயுகத்தில் இருக்கின்றோம், ஆகையால் நாங்கள் ஏன் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்? எங்கள் புத்தியின் யோகம் விகார உலகத்தோடு ஏன் இணைக்கப்பட வேண்டும்? இவை மிகவும் சூட்சுமமான விடயங்களாகும். சில குழந்தைகள் சதப்பெறுமதியான அளவையேனும் புரிந்துகொள்ளாதிருக்கின்றார்கள் என்பதை பாபா அறிவார்! அவர்கள் ஏதாவது ஒன்றை செவிமடுத்தாலும் அதனை அவர்கள் உடனேயே மறந்து விடுகின்றார்கள்! நீங்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது! அனைத்திற்கும் உங்கள் புத்தியையே நீங்கள் பயன்படுத்த வேண்டும். நாங்கள் மறுபுறத்திற்குச் செல்வதால், நாங்கள் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? கடந்தது கடந்து விட்டதே! தந்தை கூறுகின்றார்: நான் அத்தகைய தெளிவான விடயங்களையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். இருப்பினும், குழந்தைகளாகிய நீங்கள் ஏன் தொடர்ந்தும் திரும்பிப் பார்க்கின்றீர்கள்? நீங்கள் இன்னமும் கலியுகத்திலேயே இருக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் தலையை இப்பக்கம் திருப்புங்கள். அப் பழைய உலகத்தினால் உங்களுக்குப் பலனில்லை. பழைய உலகத்தின் மீது உங்களுக்கு விருப்பமின்மை ஏற்பட பாபா உங்களைத் தூண்டுகின்றார். புதிய உலகம் உங்கள் முன்னிலையில் உள்ளது, பழைய உலகத்தின் மீது உங்களுக்கு விருப்பமின்மை ஏற்பட வேண்டும். அந்த ஸ்திதியை நான் அடைந்து விட்டேனா?’ எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தந்தை கூறுகின்றார்;: கடந்தது கடந்து விட்டதே! கடந்ததை நினைக்க வேண்டாம்! பழைய உலகத்தைப் பற்றிய ஆசைகள் எதனையும் கொண்டிருக்காதீர்கள். சந்தோஷ உலகிற்குச் செல்கின்ற மேன்மையானதொரு ஆசை மாத்திரமே உங்களுக்கு இருக்க வேண்டும். சந்தோஷ உலகத்தை மாத்திரமே உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? எவ்வாறாயினும் உங்களில் பலர் திரும்பிப் பார்க்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அதி மேன்மையான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் பழைய உலகத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள். இது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும். நீங்கள் எங்குமே ஸ்தம்பிதம் அடைந்து நிற்கக்கூடாது. அங்கும் இங்கும் சுற்றிப் பார்க்க வேண்டாம்! கடந்ததை நினைக்க வேண்டாம்! தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள், திரும்பிப் பார்க்காதீர்கள். ஒரே திசையை நோக்கியே பாருங்கள், அப்பொழுதே உங்கள் ஸ்திதி ஆட்ட அசைக்க முடியாததாக, உறுதியாக இருக்கும். அப் பக்கத்தை தொடர்ந்தும் பார்ப்பதால், நீங்கள் தொடர்ந்தும் பழைய உலகத்தைச் சேர்ந்த உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரையே நினைவு செய்வீர்கள். அது வரிசைக்கிரமமாகவே உள்ளது. இன்று, ஒருவர் நன்றாக முன்னேறிச் செல்கின்றார், அவர் நாளேயே விழுந்து, மனவிரக்தி அடைகின்றார். அவரால் முரளியைக்கூட செவிமடுக்க விருப்பமில்லாமல் ஆகுமளவிற்கு அத்தகைய தீய சகுனங்கள் உள்ளன. அதனைப் பற்றி சிந்தியுங்கள்! அவ்வாறு நடக்கின்றது, அப்படித்தானே? தந்தை கூறுகின்றார்: நீங்கள் இப்பொழுது சங்கமத்தில் நிற்கின்றீர்கள். ஆகையால் நீங்கள் முன்னால் மாத்திரமே பார்க்கவேண்டும். புதிய உலகம் உங்கள் முன்னிலையிலேயே உள்ளது என்பதை நீங்கள் நினைவு செய்தால் மாத்தி;ரமே உங்களால் சந்தோஷமாக இருக்க முடியும். நீங்கள் இப்பொழுது கூவியழைக்கும் தூரத்திலேயே இருக்கின்றீர்கள். ‘எங்கள் ஊரின் மரங்கள் எங்களுக்குத் தெரிகின்றன’ என்று கூறப்படுகின்றது. நீங்கள் கூவியழைத்தால், உடனே, அவர்களுக்கு உங்கள் அழைப்பு கேட்கும். கூவியழைக்கும் தூரம் என்றால், அவர்கள் உங்கள் முன்னிலையிலேயே இருக்கின்றார்கள் என்று அர்த்தமாகும். நீங்கள் தேவர்களை நினைத்தவுடனேயே அவர்கள் வருவார்கள். முன்னர், அவர்கள் வரவில்லை. முன்னர், உங்கள் புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்கள்; சூட்சும உலகிற்கு வந்தனரா? இப்பொழுது உங்கள் பிறந்த வீட்டைச் சேர்ந்தவர்களும், உங்கள் புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்கின்றனர். இருப்பினும், முன்னேறிச் செல்லும்போது, சில குழந்தைகள் மறக்கின்றார்கள். அவர்களின் புத்தியின் யோகம் பின்னோக்கிச் செல்கின்றது. தந்தை கூறுகின்றார்: இதுவே உங்கள் அனைவரதும் இறுதி பிறவியாகும். நீங்கள் பின்னோக்கி நகரக்கூடாது. நீங்கள் மறுபுறமே செல்ல வேண்டும். நீங்கள் இப் புறத்திலிருந்து இருந்து மறுபுறத்திற்குச் செல்ல வேண்டும். மரணமும் நெருங்குகின்றது. நீங்கள் ஒரு அடி மாத்திரமே எடுத்து வைக்க வேண்டும்! படகு கரை சேர்ந்த பின்னர், நீங்கள் அப்பக்கத்தை நோக்கி ஒரு அடியெடுத்து வைக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கரையில் நிற்க வேண்டும். உங்கள் இனிய வீட்டிற்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இந்தச் சந்தோஷத்தை நினைவு செய்தாலே, அது உங்களை ஆட்ட அசைக்க முடியாதது ஆக்குகின்றது. தொடர்ந்தும் ஞானக்கடலை கடையுங்கள். இது புத்திக்கானதொரு விடயமாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் விட்டுச் செல்கின்றோம். நாங்கள் இப்பொழுது கூவியழைக்கும் தூரத்திலே மிகவும் அண்மையில் இருக்கின்றோம். இன்னமும் சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. இதுவே நினைவு யாத்திரை எனப்படுகின்றது. இதனை நீங்கள் மறக்கின்றீர்கள். உங்கள் அட்டவணையை எழுதுவதற்குக்கூட நீங்கள் மறக்கின்றீர்கள். உங்கள் இதயத்தில் கையை வைத்துக் கூறுங்கள்: கூவியழைக்கும் தூரத்தில் உள்ளது என்று பாபா விபரிக்கின்ற அந்த ஸ்திதியை நான் அடைந்து விட்டேனா? உங்கள் புத்திகளில் பாபாவின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். பாபா உங்களுக்கு பல வழிகளில் நினைவு யாத்திரையை கற்பிக்கின்றார். நினைவு யாத்திரையின் போதையில் இருங்கள். அவ்வளவே. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இங்குள்ள உறவுமுறைகள் அனைத்தும் பொய்யாகும். சத்தியயுகத்தின் உறவுமுறைகள் உண்மையாகும். நீங்கள் எங்கே நிற்கின்றீர்கள் என்பதை அறிய உங்களையே பாருங்கள். சத்தியயுகத்திலிருந்து இன்றுவரை இச்சக்கரத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள். நீங்கள் சக்கரத்தைச் சுற்றிய பின்னர் இப்பொழுது சத்தியயுகத்தின் கரையில் நிற்கின்றீர்கள். அது கூவியழைக்கும் தூரத்திலேயே உள்ளது. அல்லவா? சில குழந்தைகள் அதிகளவு நேரத்தை வீணாக்குகின்றார்கள். அவர்கள் அரிதாக, ஐந்து, பத்து நிமிடங்களே நினைவு செய்கின்றார்கள். நீங்கள் முழு நாளும் சுயதரிசனசக்கரத்தை சுழற்ற வேண்டும். எவ்வாறாயினும், அது நடப்பதில்லை. பாபா உங்களுக்கு பற்பல வழிகளைக் காட்டுகின்றார். இது ஆத்மாவையே குறிக்கின்றது. சக்கரம் உங்கள் புத்திகளில் சுற்றி வர வேண்டும். ஏன் இந்த நினைவு உங்கள் புத்திகளில் நிலைத்திருப்பதில்லை? நாங்கள் இப்பொழுது கரையில் நிற்கின்றோம். கரையை நீங்கள் ஏன் உங்கள் புத்திகளில் வைத்திருப்பதில்லை? நீங்களே அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிந்திருப்பதால், கரையில் போய் நில்லுங்கள்! ஒரு பேனைப் போன்று தொடர்ந்தும் நகர்ந்து செல்லுங்கள். இப் பயிற்சியை நீங்கள் ஏன் செய்வதில்லை? உங்கள் புத்தியில் ஏன் நீங்கள் சக்கரத்தை வைத்திருப்பதில்லை? இது சுயதரிசனச் சக்கரமாகும். பாபா முழுச் சக்கரத்தையும் அதன் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். உங்கள் புத்தி முழுச் சக்கரத்தையும் சுற்றி வந்து, கரையில் வந்து நிற்கவேண்டும். வெளியில் உள்ள குழப்பங்களோ அல்லது வெளிச்சூழலோ இருக்கக்கூடாது. நாளுக்கு நாள், குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் மௌனத்திற்குள் செல்ல வேண்டும். உங்கள் நேரத்தை நீங்கள் வீணாக்கக்கூடாது! பழைய உலகத்தை மறந்து, உங்கள் புத்தியின் யோகத்தை நீங்கள் புதிய உறவினருடன் தொடர்புபடுத்துங்கள். நீங்கள் யோகம் செய்யாதிருந்தால், எவ்வாறு உங்கள் பாவங்கள் அழியும்? இவ் உலகம் அழியவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் மாதிரி மிகவும் சிறியதாகும்! உலகம் 5000 வருடங்களுக்கானதாகும். அஜ்மீரில் சுவர்க்கத்தின் மாதிரி ஒன்றுள்ளது. ஆனால் அம்மக்கள் சுவர்க்கத்தை நினைவு செய்கின்றார்களா? அவர்களுக்கு சுவர்க்கத்தைப் பற்றி என்ன தெரியும்? சுவர்க்கம் 40,000 வருடங்களின் பின்னர் வரும் என அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப் படுத்துகின்றார்: இவ் உலகில் நீங்கள் செய்பவை அனைத்தையும் செய்யும் போதும், இவ் உலகம் முடிவடையப் போகின்றது என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் இப்பொழுது இறுதியில் நிற்கின்றோம். நாங்கள் ஒவ்வொரு அடியையும் ஒரு பேனைப் போன்றே எடுக்கின்றோம். இலக்கு மிகவும் உயர்ந்ததாகும். தந்தைக்கு இலக்குத் தெரியும். தந்தையுடன் தாதாவும் இருக்கின்றார். அவர் (சிவபாபா) விளங்கப்படுத்தும்போது, இவரால் (பிரம்மா) விளங்கப்படுத்த முடியாதா? இவரும் (பிரம்மா) அவர் கூறுவதை செவிமடுக்கின்றார். இவர் ஞானக்கடலை கடையமாட்டாரா? தந்தை நீங்கள் கடைவதற்கென தொடர்ந்தும் உங்களுக்குக் கருத்துக்களைக் கொடுக்கின்றார். பாபா (பிரம்மா) மிகவும் பின்னால் இருக்கின்றார் என்றில்லை. அவர் சற்று என் பின்னால், ஒரு வாலைப் போன்று இருப்பதால், அவர் எவ்வாறு மிகவும் தொலைவில் இருக்க முடியும்? நீங்கள் ஆழமான இவ்விடயங்கள் அனைத்தையும் கிரகிக்க வேண்டும். கவனயீனமாக இருப்பதை துறந்திடுங்கள்! குழந்தைகள் இரண்டு வருடங்களின் பின்னரே இங்கே பாபாவிடம் வருகின்றார்கள். குழந்தைகள்; தாம் மிகவும் மிகவும் நெருக்கமாக இருப்பதை, அதாவது தாம் கரையில் நிற்பதை நினைவு செய்கின்றார்களா? நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அத்தகைய ஸ்திதியில் நீங்கள் இருந்தால் அதனைவிட வேறு என்ன வேண்டும்? ‘இரட்டைக் கிரீடம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது, ஆனால் அங்கே ஒளிக்கிரீடம் இருப்பதில்லை. அது தூய்மைக்கான அடையாளமே. சமய ஸ்தாபகர்கள் விகாரமற்றவர்களாகவும், சதோபிரதானாகவும் இருப்பதால், நிச்சயமாக அவர்களின் படங்களில் ஒளிவட்டம் காட்டப்படுகின்றன. பின்னர் அவர்கள் இரஜோவாகவும் தமோவாகவும் ஆகுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றிருப்பதால், நீங்கள் அப் போதையில் இருக்க வேண்டும். நீங்கள் இவ் உலகில் இருந்த போதிலும், உங்கள் புத்தியின் யோகம் அங்கு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இங்கு, உங்கள் பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். இக் குலத்திற்குரியவர்கள் வருவார்கள். நாற்று நடப்பட வேண்டும். ஆதி, சனாதன, தேவதர்மம் நிச்சயமாக விரைவிலோ அல்லது பின்னரோ வரும். பின்னர் வருபவர்கள், முதலில் வந்தவர்களை முந்திச் செல்வார்கள். இறுதிவரை இது தொடர்ந்தும் நடக்கும். புதியவர்கள் பழையவர்களை விரைவாக முந்திச் செல்வார்கள். நினைவு யாத்திரையே பரீட்சையின் அடிப்படையாகும். ஒருவர் தாமதித்து வந்திருந்தாலும், ஏனைய அனைத்தையும் துறந்து, அவர் நினைவு யாத்திரையில் மும்முரமாக இருப்பாராயின், எவ்வாறாயினும் அவர் உண்ண வேண்டும், ஆனால் அவர் அதிகளவு நினைவு யாத்திரையில் இருப்பாராயின், அவருக்கு சந்தோஷத்தைத் தவிர வேறு போஷாக்கு இருக்கமாட்டாது. வீடு திரும்புவது மாத்திரமே உங்கள் ஒரேயொரு அக்கறையாக இருக்க வேண்டும். உங்கள் 21 பிறவிகளுக்கான இராச்சியம் என்ற பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். அதிர்ஷ்டலாபச் சீட்டை வெல்பவர்களுக்கு சந்தோஷ பாதரசம் அதிகரிக்கின்றது. நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். இதுவே இறுதியான, பெறுமதி அளவிட முடியாத, பிறவி என அறியப்பட்டுள்ளது. நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதால், அதிகளவு சந்தோஷம் அனுபவம் செய்யப்படுகின்றது. அனுமனும் முயற்சி செய்ததாலே உறுதியானவர் ஆகினார். வைக்கோற் புதர் எரியூட்டப்பட்டது. இராவண இராச்சியம் எரிக்கப்பட்டது. அவர்கள் ஒரு கதையை உருவாக்கியுள்ளார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து உண்மையான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். இராவண இராச்சியம் முடிவடையும். இதுவே உறுதியான புத்தி எனப்படுகின்றது. நாங்கள் இப்பொழுது கூவியழைக்கும் தூரத்திலே இருப்பதுடன் வீடு திரும்புகின்றோம். இந்த சந்தோஷத்தில் இருக்க முயற்சி செய்தால், உங்கள் சந்தோஷ பாதரசம் அதிகரிக்கும். யோகசக்தியினால் உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும். இப்பொழுது கிரகிக்கப்படும் தெய்வீகக் குணங்கள் அரைக்கல்பத்திற்கு தொடர்ந்திருக்கும். இந்த ஒரு பிறவியில் நீங்கள் அதிகளவு முயற்சி செய்வதால், நீங்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆகுகின்றீர்கள். எனவே நீங்கள் அதற்கேற்ற முயற்சியை செய்ய வேண்டும். இப்பொழுது தவறு செய்யவோ அல்லது நேரத்தை வீணாக்கவோ வேண்டாம். எதனையும் ஒருவர் செய்யும் போது அதற்கான வெகுமதியை அவர் பெற்றுக்கொள்கின்றார். தந்தை தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதங்கள் நிகழ்த்துகின்றீர்கள்! நீங்கள் முழு உலகத்தையும் மாற்றுகின்றீர்கள். தந்தைக்கு இது பெரியதொரு விடயமல்ல. அவர் இதனை ஒவ்வொரு கல்பத்திலும் செய்கின்றார். தந்தை கூறுகின்றார்: நடந்து திரியும்பொழுதும், உண்ணும், பருகும் பொழுதும் உங்கள் புத்தியின் யோகத்தை தந்தையுடன் இணையுங்கள். தந்தை இங்கமர்ந்திருந்து அந்த மறைமுகமாகவுள்ள விடயங்களை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உங்கள் ஸ்;திதியை மிகவும் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள். இல்லாவிடின், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் வரிசைக்கிரமமாவே முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் கரையில் நிற்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? நீங்கள் முன்னோக்கியே அடியெடுத்து வைக்க வேண்டும். இதற்கு அதிகளவு சுயபரிசோதனை தேவையாகும். ஆகையாலேயே ஆமையின் உதாரணமும் உள்ளது. இந்த உதாரணங்கள் போன்றன அனைத்தும் உங்களுக்கானதே. சந்நியாசிகள் ஹத்த யோகிகள். அவர்களால் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர்கள் நீங்கள் கூறுவதை செவிமடுக்கும் போது, நீங்கள் அவர்களை இழிவுபடுத்துகிறீர்கள் என அவர்கள் நினைக்கின்றார்கள். ஆகையாலேயே இவ்விடயங்களை நீங்கள் மிகவும் சாதூரியமாக எழுதவேண்டும். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர்கள் குழப்பம் அடையாதவாறு நீங்கள் இவற்றை மறைமுகமாகவே அவர்களுக்குக் கூறவேண்டும். பாம்பு இறந்தபோதும், தடி உடையாத வகையில் நீங்கள் சாதூர்யமாகவே தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தின் மீது அன்பு கொண்டிருங்கள். ஆனால், உங்கள் புத்தியின் யோகத்தை நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் இணைத்திடுங்கள். நீங்கள் இப்பொழுது ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வழிகாட்டல்கள் தேவர்கள் ஆகுவதற்காகும். இதுவே பிரிவினையற்ற வழிகாட்டல்கள் எனப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் தேவர்கள் ஆகவேண்டும். நீங்கள் இவ்வாறாக எத்தனை தடவைகள் வந்திருக்கின்றீர்கள்? எண்ணற்ற தடவைகள்! நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இது உங்களது இறுதிப் பிறவியாகும். நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? நீங்கள் திரும்பிப் பார்த்தாலும்கூட, மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கை மறந்துவிடாதீர்கள்! நீங்கள் மாயையை வெற்றி கொண்ட மகாவீரர்கள். வெற்றியும் தோல்வியும் நிறைந்த இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாபாவின் இந்த ஞானம் மிகவும் சிறப்பானதாகும்! முன்னர் உங்களுக்கு இது தெரியுமா? உங்களை ஓர் புள்ளியென, நீங்கள் கருதவேண்டும். அந்தச் சின்னஞ்சிறிய புள்ளியில் மிகப்பெரியதொரு பாகம் பதியப்பட்டுள்ளது என்பதால் இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. இது மிகவும் அற்புதமானதொரு விடயமாகும்! நீங்கள் இது அற்புதமே எனக் கூறி அதனை விட்டுவிட வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. உங்கள் தலையை திருப்பி, உங்கள் பின்னால் பார்க்க வேண்டாம். எக் காரணத்தைக் கொண்டும், நீங்கள் ஸ்தம்பிதம் அடைந்து நின்றுவிடக்கூடாது. தந்தையை மாத்திரம் தொடர்ந்தும் பார்ப்பதனால் உங்கள் ஸ்திதியைத் நீங்கள் ஸ்திரமாக வைத்திருக்க வேண்டும்.
  2. நீங்கள் இப்பொழுது கரையில் நிற்கின்றீர்கள் என்பதை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகையால், கவனயீனமாக இருப்பதை நிறுத்துங்கள். அத்தகைய ஸ்திதியை அடைய மறைமுகமான முயற்சியை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

சேவையை விரைவான வேகத்தில் செய்வதன் மூலம் உலகை மாற்றுதல் என்ற பணியை நிறைவேற்றுகின்ற ஓர் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

விரைவான வேகத்தில் சேவையை செய்வதற்கு, நீங்கள் ‘ருப்’ ‘பசாட்’ இரண்டினதும் சமநிலையை, குழுவாகக் கொண்டிருக்க வேண்டும். ‘பசாட்டின்’ வடிவத்தில் ஒரே நேரத்தில் பல ஆத்மாக்களுக்கு செய்தியை கொடுக்கின்ற பணியை உங்களால் மேற்கொள்ள முடியும். அவ்வாறாகவே ‘ருப்’ ஆக அதாவது நினைவு சக்தியினூடாகவும், மேன்மையான எண்ணங்களின் சக்தியினூடாகவும் நீங்கள் சேவையை விரைவான வேகத்தில் செய்ய வேண்டும். இதற்கு ஒரு கண்டுபிடிப்பை உருவாக்குங்கள். இத்துடன், குழுவாக, திடசங்கற்பத்துடன் பழைய சம்ஸ்காரங்கள், பழைய சுபாவம், பழைய செயற்பாடுகள் என்ற கடுகு விதைகளையும், பார்லி விதைகளையும் அர்ப்பணியுங்கள். அப்பொழுது உலக மாற்றம் என்ற பணி நிறைவேறி யாகம் முடிவடையும்.

சுலோகம்:

அதிபதியும் குழந்தையும் என்ற சமநிலையை கொண்டிருந்து, உங்கள் திட்டங்களை நடைமுறை வடிவத்தில் இடுங்கள்.


---ஓம் சாந்தி---