21.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சந்தோஷமும், ஓய்வும், சௌகரியமும் நிறைந்த உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லவே, தந்தை வந்துள்ளார். அமைதிதாமத்திலும், சந்தோஷதாமத்திலுமே ஓய்வும் சௌகரியமும் உள்ளன.

கேள்வி:
இந்த யுத்தகளத்தில் உங்களுடைய எவ்விடயத்தை மாயை முதலில் தாக்குகின்றாள்?

பதில்:
உங்கள் நம்பிக்கையையாகும்.. நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது உங்கள் நம்பிக்கையை முறியடித்து, அதன் மூலம் அவள் உங்களைத் தோற்கடிக்கின்றாள். அனைவரது துன்பத்தையும் அகற்றி, சந்தோஷத்தை அருள்பவரான தந்தையே எங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார் மற்றும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொடுப்பவர், அவரே என்னும் நம்பிக்கை, உங்களுக்கு உறுதியாக இருந்தால் நீங்கள் ஒருபோதும் மாயையினால் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள்.

பாடல்:
இப்பாவ உலகில் இருந்து எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்!

ஓம் சாந்தி.
எங்களை வேறு எங்கேயாவது அழைத்துச் செல்லுங்கள் என்று நீங்கள் யாரிடம் கூறுகின்றீர்கள்? அவரால் எவ்வாறு உங்களை அழைத்துச் செல்ல முடியும்? இவ்வுலகில் உள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. புpராமணக் குலத்தின் அலங்காரங்களான நீங்கள் மட்டுமே, நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப இதனை வரிசைக்கிரமமாக அறிந்திருக்கின்றீர்கள். இவருக்குள் பிரவேசித்து எங்களுக்குத் தன்னை பற்றியும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தையும் கொடுப்பவரே, அனைவரது துன்பத்தையும் அகற்றுவதுடன், சந்தோஷத்தை அருள்பவர்களாகவும் எங்களை ஆக்குகின்றார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இவ் விடயம் புதியது அல்ல. தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, எங்கள் அனைவருக்கும் ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். தந்தையும் அவரே நாங்களும,; அவர்களே என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அமைதி தாமத்திற்கும் சந்தோஷதாமத்திற்கும் அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றேன். எனினும் மாயை உங்களை நம்பிக்கை கொண்டிருப்பதற்கு அனுமதிப்பதில்லை. நீங்கள் சந்தோஷ உலகை நோக்கி முன்னேறும் போது, அவள் உங்களை தோற்கடிக்கின்றாள். இது ஒரு யுத்தகளமாகும். அந்த யுத்தங்கள் பௌதீக சக்தியினால்; நடைபெறுகின்றன, ஆனால், இந்த யுத்தமோ யோகசக்தியினால் இடம்பெறுகின்றது. இந்த யோகசக்தி, மிகவும் பிரபல்யமானது. ஆகையாலேயே அனைவரும் யோகம் பற்றிப் பேசுகின்றார்கள். நீங்கள் இந்த யோகத்தைத் தந்தையிடம் இருந்து ஒரேயொரு முறை மாத்திரமே கற்கின்றீர்கள். ஏனையோர் பல்வேறு வகையான ஹத்தயோகத்தைக் கற்பிக்கின்றார்கள். தந்தை எவ்வாறு வந்து, யோகம் கற்பிக்கின்றார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களால் இந்தப் புராதன யோகத்தைக் கற்பிக்க முடியாது. அதே தந்தையே வந்து உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள். ஓ! தூய்மையாக்குபவரே வாருங்கள்! எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மக்கள் கூறும்போது அவரையே நினைவு செய்தார்கள். அமைதிதாமத்திலும் சந்தோஷதாமத்திலும் மாத்திரமே ஓய்வும் சௌகரியமும் உள்ளன. துன்ப உலகில் உங்களால் எவ்வாறு ஓய்வையும் சௌகரியத்தையும் அனுபவம் செய்ய முடியும்? இங்கே ஒய்வும் சௌகரியமும் இல்லாததாலேயே, நாடகத்திட்டத்திற்கு ஏற்ப தந்தை வருகின்றார். இது துன்ப உலகமாகும். இங்கே துன்பமே, துன்பம் மாத்திரமே உள்ளது. மலை போன்று துன்பம் வரவுள்ளது. ஒருவர் எவ்வளவு செல்வம் நிறைந்தவராக இருந்தாலும், ஒருவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் அவருக்கும் நிச்சயமாக ஏதோ ஒருவகை துன்பம் இருக்கின்றது. நீங்கள் இங்கு வந்துள்ள இனிமையான தந்தையுடன் இப்பொழுது அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் நாடகத்தின் இரகசியங்களை அறிந்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது வந்துள்ளார், அவர் வந்து எங்களை அழைத்துச் செல்வார். ஆத்மாக்களாகிய எங்கள் அனைவருக்கும் அவர் கற்பிக்கின்றார், ஏனெனில் அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தையாவார். ஆத்மாக்கள் எவ்வாறு நீண்டகாலம் பரமாத்மாவிடம் இருந்து பிரிந்திருந்தார்கள் என்பதையிட்டு ஒரு பாடலும் உள்ளது. அமைதிதாமத்தில் ஆத்மாக்கள் ஒன்றாகவே இருக்கின்றார்கள். தந்தை இப்பொழுது இங்கு வந்துள்ளார். இன்னமும் வராமல், அங்கே எஞ்சியிருக்கின்ற வெகுசில ஆத்மாக்களும் கீழே வருவார்கள். இங்கே தந்தை உங்களுக்குப் பல விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். எவ்வாறாயினும் நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றதும், நீங்கள் அவற்றை மறந்து விடுகின்றீர்கள். இவ்விடயங்கள் மிகவும் இலகுவானவையாகும். சந்தோஷத்தை அருள்பவரும், அமைதியை அருள்பவருமான தந்தையே இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். உங்களில் வெகுசிலரே இருக்கின்றீர்கள். உங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். உங்களுக்குத் தந்தையின் மீது மறைமுகமான முறையில் அன்பு உள்ளது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், பாபா மதுவனத்தில் இருக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை கூறுகின்றார்: என்னை மேல்நோக்கியே (ஆதி இல்லம்) நினைவு செய்யுங்கள். அதுவே உங்களது வசிப்பிடமும் ஆகும். நீங்கள் தாய் தந்தை என்று அழைக்கின்றவரை நீங்கள் நிச்சயமாக நினைவு செய்வீர்கள். அவர் உண்மையிலேயே உங்களிடம் வந்துள்ளார். தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது உங்களை மீண்டும் அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றேன். இராவணன் உங்களை தூய்மையற்றவராகவும் தமோபிரதானாகவும் ஆக்கியுள்ளான். எனவே நீங்கள் இப்பொழுது தூய்மையாகவும் சதோபிரதானாகவும் ஆக வேண்டும். தூய்மையற்றவர்களால் எவ்வாறு திரும்பிச் செல்ல முடியும்? நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆக வேண்டும். இப்பொழுது, ஒரு சதோபிரதான் மனிதருமே இல்லை. இது தமோபிரதான் உலகமாகும். இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளின் முக்கியத்துவம் மனிதர்களுக்கு மட்டுமே விளங்கப்படுத்தப்படுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். இது மிகவும் இலகுவாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தீர்கள். தூய ஆத்மாக்கள் மாத்திரமே அங்கே வசிக்கின்றார்கள். தூய்மையற்றவர்களால் அங்கே இருக்க முடியாது. அதன் பெயரே முக்திதாமம் ஆகும். தந்தை இப்பொழுது உங்களைத் தூய்மையாக்கி, அங்கு அழைத்துச் செல்வார். அதன் பின்னர் நீங்கள் சந்தோஷதாமத்தில் உங்கள் பாகங்களை நடிக்கச் செல்வீர்கள். அதன் பின்னர் நீங்கள் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளை கடந்து செல்கின்றீர்கள். நீங்கள் அவரை அழைத்தீர்கள்: பாபா, எங்களை ஓய்வும் சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். சாதுக்கள், புனிதர்கள் போன்றோருக்குமே ஒய்வையும், சௌகரியத்தையும் எங்கு பெறலாம் என்பது தெரியாது. அமைதியினதும் சந்தோஷத்தினதும் ஓய்வையும் சௌகரியத்தையும் எங்கு பெறலாம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாபா எங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தை அருள வந்திருக்கின்றார். தாமதித்து வருகின்றவர்களுக்கு முக்தியை அருளவே தந்;தை வந்திருக்கின்றார். தாமதித்து வருபவர்களுக்குக் குறுகிய பாகங்களே உள்ளன. உங்கள் பாகங்களே அதிகளவு நீண்டதாகும். உங்கள் 84 பிறவிகளின் பாகங்களை நீங்கள் இப்பொழுது நிறைவேற்றி விட்டீர்கள் என்பதையும், இச் சக்கரம் நிறைவு பெறுகின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பழைய விருட்சம் முழுமையாக அழியவுள்ளது. உங்கள் மறைமுகமான அரசாங்கம் தேவ விருட்சத்தின் நாற்றை இப்பொழுது நடுகின்றது. அவர்களோ தொடர்ந்தும் காட்டு மரங்களின் நாற்றுக்களையே நடுகின்றார்கள். ஆனால், இங்கே தந்தை முட்களை தெய்வீக மலர்களின் மரமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். அது ஓர் அரசாங்கம், இதுவோ ஒரு மறைமுகமான அரசாங்கமாகும். அவர்கள் என்ன செய்கின்றார்கள்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? இரண்டிற்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு உள்ளது என்று பாருங்கள்! அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் நாற்றுக்களை நடுகின்றார்கள், ஆனால் பல்வேறு வகையான காட்டு மரங்கள் உள்ளன. சிலர் ஒரு வகையான நாற்றையும், ஏனையோர் வேறு வகையான நாற்றையும் நடுகின்றார்கள். தந்தை உங்களை மீண்டும் தேவர்களாக ஆக்குகின்றார். நீங்கள் சதோபிரதான் தேவர்களாக இருந்தீர்கள். அதன் பின்னர் 84 பிறவி சக்கரத்தைச் சுற்றி வந்த போது, நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். எதுவும் எக்காலத்திற்கும் (அநாதியாக) சதோபிரதானாக இருப்பது சாத்தியமில்லை. அனைத்தும் புதியதில் இருந்து பழையதாக வேண்டும். நீங்கள் 24 கரட் தங்கமாக இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் ஒன்பது கரட்டில் செய்யப்பட்ட நகையாக இருக்கின்றீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை 24 கரட் தங்கமாக ஆக வேண்டும். ஆத்மாக்களும் அந்த நகைகளைப் போலாகியுள்ளார்கள். தங்கம் எவ்வாறோ அதில் செய்யப்பட்ட நகையும் அவ்வாறே இருக்கும். அனைவரும் இப்பொழுது களங்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் கௌரவத்தைப் பேண வேண்டுமாயின், நீங்கள் முற்றிலும் அவலட்சணம் ஆகியுள்ளீர்களென கூறவில்லை, ஆனால் மாசுபட்டுள்ளீர்கள் என்று மட்டுமே கூறப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையானவர்களாகவும், சதோபிரதான் ஆனவர்களாகவும் இருந்தீர்கள். ஆனால் உங்களுக்குள் அதிகளவு கலப்படம் சேர்ந்துள்ளதால், நீங்கள் மீண்டும் தூய்மையாகுவதற்கான வழியை பாபா காட்டுகின்றார். அது இந்த யோகத்தீயினால் இடம்பெறும். இந்த யோகத்தீயினால் மாத்திரமே உங்கள் கலப்படத்தை அகற்ற முடியும். நீங்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தையே கூறுகின்றார்: இவ்வாறாக என்னை நினைவு செய்யுங்கள். நான் தூய்மையாக்குபவர் ஆவேன். நான் பல தடவைகள் உங்களை தூய்மையற்றவரில் இருந்து தூய்மையானவராக ஆக்கியுள்ளேன் உங்களுக்கு இது முன்னர் தெரியாது. இன்று நீங்கள் தூய்மையற்றவராக இருக்கின்றீர்கள் என்பதையும் நாளை தூய்மையானவர் ஆகிவிடுவீர்கள் என்பதையும்; இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சக்கரத்தின் காலஎல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் என்று அவர்கள் எழுதியுள்ளதன் மூலம் அவர்கள் மக்களை கார் இருளுக்குள் தள்ளியுள்ளார்கள். தந்தை வந்து அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பது யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஞானக் கடலும், தூய்மையாக்குபவரான தந்தையும், அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவரும் ஆவார். பக்திமார்க்கத்தில் அவர்கள் அதிகளவு புகழ்ந்து பாடிய போதிலும், அவற்றின் அர்த்தத்தை அவர்கள் புரியாதுள்ளார்கள். அவர்கள் புகழ்ந்து பாடும் போது, அவர்கள் அனைவரது புகழையும் கலந்து விடுகின்றார்கள். அவர்கள் அனைத்தையும் மேலதிக இனிமையுடன் கலந்து விடுகின்றார்கள். யாராவது அவர்களுக்குக் கற்பித்தவற்றை அவர்கள் அவ்வாறே பாடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இன்றுவரை நீங்கள் கற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். நீங்கள் வாழும் வரை எனக்குரியவராக வாழுங்கள். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் வீட்டில் வாழும் போது, அவர்களுடன் தொடர்ந்தும் சாதுர்யமாக நடந்து கொள்ளுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள். அவர்களுடையது ஹத்த யோகமாகும், ஆனால் நீங்கள் இராஜயோகிகள் ஆவீர்கள். நீங்கள் இதனை இல்லறத்தினருக்கும் கற்பிக்க வேண்டும். உங்கள் செயற்பாடுகளைப் பார்த்து அவர்களும் பின்பற்றுவார்கள். எனவே, உங்கள் மத்தியில் சண்டையிடவோ விவாதம் செய்யவோ வேண்டாம். நீங்கள் சண்டையிட்டால் அவர்கள் அனைவரும் என்ன நினைப்பார்கள்? உங்களிடம் அதிகளவு கோபம் உள்ளது என்றே நினைப்பார்கள். உங்களுக்குள் எந்த விகாரமும் இருக்கக் கூடாது. சினிமாவினால் மக்களின் புத்தி முற்றிலும் சீரழிந்துள்ளது. சினிமா நரகத்தைப் போன்றதாகும். அங்கே செல்பவர்களுக்குப் புத்தி சீரழிகின்றது. இவ்வுலகில் பல அழுக்கான விடயங்கள் உள்ளன. 18 வயதிற்குட்;பட்ட எவரும் திருமணம் செய்யக் கூடாது என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் பல திருமணங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. கைக்குழந்தைகளும் திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றார்கள். பாபா இப்பொழுது இந்த தூய்மையற்ற உலகிலிருந்து உங்களை அப்புறப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: பற்றை வென்றவர் ஆகுங்கள்! என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! உங்கள் குடும்பத்துடன், உங்கள் வீட்டில் வாழும் போது என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் ஏதோ ஒரு முயற்சி செய்யும் போதே, உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்து, அசுரத்தனங்களைத் துறந்திடுங்கள். ஒவ்வொரு இரவும் உங்கள் அட்டவணையை நிரப்புங்கள். இதுவே உங்கள் வியாபாரமாகும். இந்த வியாபாரத்தை அரிதாக சிலரே செய்யத் தயாராக உள்ளார்கள். இது ஏழ்மையில் வாடுபவர்களை ஒரு விநாடியில் கிரீடம் சூட்டுபவர்கள் ஆக்குகின்ற வியாபாரமாகும். எனவே இது வித்தையாகும். எனவே யோகசக்தியினால் உங்களைத் தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக்குகின்ற அத்தகைய மந்திரவாதியின் கரங்களை பிடித்துக் கொள்ள வேண்டும். வேறு எவராலும் உங்களை இவ்வாறு ஆக்க முடியாது. எவராலும் கங்கை நீரினால் தூய்மையாக முடியாது. குழந்தைகளாகிய உங்களிடம் அதிகளவு ஞானம் உள்ளது. பாபா மீண்டும் ஒருமுறை வந்துள்ளார் என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும். தேவர்களின் பல விக்கிரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆயுதங்களுடனும், பயங்கரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பிரம்மாவும் பல கரங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரம்மாவிற்கு எவ்வாறு ஆயிரமாயிரம் கரங்கள் இருந்தன என்பதை நீங்கள் இப்பொழுத புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பிரம்மகுமாரர்களும் பிரம்மகுமாரிகளுமாகிய நீங்கள் அனைவரும் பாபாவின் படைப்புகள் ஆவீர்கள். இவ்வாறே பிரஜாபிதா பல கரங்களுக்குரியவர் ஆனார். நீங்கள் இப்பொழுது ரூப்பும் பசான்ட்டும் (ஞான இரத்தினங்களை பொழிகின்ற ஒரு யோகி சொரூபம்) உங்கள் வாய்களிலிருந்து தொடர்ந்து இரத்தினங்கள் மாத்திரமே வெளிப்பட.ட்டும். ஞான இரத்தினங்களைத் தவிர வேறு எதுவும் வெளிப்படக் கூடாது. இந்த இரத்தினங்களுக்கு எவராலும் பெறுமதி கொடுக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! நீங்கள் தந்தையை நினைவு செய்தால் தேவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பற்றை வென்றவர்கள் ஆகித் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வசிக்கும் போதும் உலக அதிபதிகள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். தொடர்ந்தும் விகாரங்களை துறந்திடுங்கள்.

2. உங்களை பார்க்கின்ற அனைவரும் உங்களை பின்பற்றும் வகையில் உங்கள் செயற்பாடுகள் இருக்க வேண்டும். உங்களுக்குள் எந்த விகாரங்களும் இல்iலை என்பதைச் சோதித்துப் பாருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் ஒவ்வொரு மேன்மையான வழிகாட்டலையும் (ஸ்ரீமத்) பின்பற்றுகின்ற ஓர் உணமையான, அன்பிற்கினிய அன்பான ஆத்மா ஆகுவீர்களாக.

ஒரேயொரு தந்தையின் அன்பில்; மூழ்கியிருக்கும் குழந்தைகள், தந்தையால் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் நேசிக்கிறார்கள். அவர்களின் கேள்விகள் முடிவடையும். பிராமணப் பிறப்பின் அத்திவாரம் அன்பு ஆகும். அன்பிற்கினிய அன்பான ஆத்மாக்கள், தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் எந்த சிரமத்தையும் அனுபவிப்பதில்லை. அவர்களின் அன்பின் காரணமாக பாபா என்ன சொன்னாலும் அவர்களுக்கு எப்போதும் உற்சாகம் இருக்கும். அது தனிப்பட்ட முறையில அவர்களுக்குக் கூறியது என்றும் அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். அன்பான ஆத்மாக்களுக்குப் பரந்த இதயங்களுண்டு. ஆகையால் அவர்களுக்கு எந்தவொரு பெரிய விடயமும் சிறியதாகவே தோன்றும்.

சுலோகம்:
எதனையிட்டும் உணர்ச்சிவசப்படுகின்ற ஓர் உணர்வைக் கொண்டிருப்பது தோல்வியின் அறிகுறியாகும்.