21.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, உங்களின் தற்போதைய பிராமண வாழ்க்கை தேவர்களின் வாழ்க்கையை விடவும் உயர்வானது, ஏனெனில், இந்நேரத்தில் நீங்கள் மூவுலகங்களைப் பற்றியும், முக்காலங்களைப் பற்றியும் அறிந்துள்ளீர்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள்;.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் ஏறிக் கொண்டிருக்கின்ற செங்குத்தான ஏற்றம் என்ன?

பதில்:
மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதே செங்குத்தான ஏற்றமாகும், நீங்கள் இப்பொழுது அதில் ஏறிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஏறினால், அன்பு என்ற அமிர்தத்தைச் சுவைக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இது மிகவும் செங்குத்தான ஏற்றம், ஆனால் இதிலுள்ள அற்புதம் என்னவென்றால், நீங்கள் அதில் ஏறும்பொழுது ஒரு விநாடியில் ஏறி விடுகின்றீர்கள், இறங்குவதற்கோ காலம் எடுக்கின்றது.

கேள்வி:
பாவக் கலசம் உடையும்பொழுது, வெற்றி முரசு கொட்டும். பக்தி மார்க்கத்தில் இது எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?

பதில்:
சீதை ஒரு கலசத்திலிருந்து தோன்றியதாகக் காட்டப்பட்டுள்ளார், அதாவது, பாவக்; நிறைந்து உடையும்பொழுது, சீதையும், இராதையும் பிறப்பெடுக்கிறார்கள்.

பாடல்:
எங்களை இப்பாவ உலகிலிருந்து ஓய்வும், சௌகரியமும் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் பக்திப் பாடலைக் கேட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் அவர்கள் கூவியழைக்கின்றனர்: எங்களை இத்தூய்மையற்ற உலகிலிருந்து தூய உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்; அமைதியற்ற உலகிலிருந்து அமைதி தாமத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். அமைதியும், சந்தோஷமும் நிலவிய இன்னோர் உலகம் இருந்தது என்பது உங்கள் புத்தியில் உள்ளது. சக்கரவர்த்தினி, சக்கரவர்த்தியாகிய இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது, அவர்களின் விக்கிரகங்களும் இங்குள்ளன. மனிதர்கள் கற்கின்ற வரலாறும், புவியியலும், உலகின் காற் பங்கையே உள்ளடக்குகிறது; அது அரைச் சக்கரத்தையேனும் உள்ளடக்குவதில்லை. சத்திய, திரேதா யுகங்களைப் பற்றி எவருக்குமே தெரியாது. அது, அவர்களின் கண்கள் மூடப்பட்டிருப்பதைப் போன்றும், அவர்கள் ஒற்றைக்கண் கொண்டிருப்பதைப் போன்றும் உள்ளது. உலக வரலாறும், புவியியலும் எவருக்குமே தெரியாது. உலகம் மிகப்பெரியது. புதிய உலகம் எப்பொழுது ஆரம்பமாகியது? அது எப்பொழுது பழையதாகியது?, பின்னர் எப்பொழுது மீண்டும் பழையதிலிருந்து புதியதாகுகிறது? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நிச்சயமாக அது அவ்வாறாக ஆகும். நீங்கள் சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்களைக் கடந்து செல்ல வேண்டும். கலியுகத்திற்குப் பின்னர் நிச்சயமாகச் சத்திய யுகம் வரும். சங்கம யுகத்தில், சத்திய யுகத்தை ஸ்தாபிப்பவர் வருகின்றார். விளங்கப்படுத்துவதற்கு இது மிக நல்லதொரு வழியாகும். தந்தை மாத்திரமே கலியுகத்தைச் சத்திய யுகமாக மாற்றுபவர், எனினும், இந்த இலகுவான கருத்து கூட எவரது புத்தியிலும் பதிவதில்லை, ஏனெனில், அவர்களின் புத்தி மாயையின் பூட்டால் பூட்டப்பட்டுள்ளது. அவர்கள் பரமாத்மா பரமதந்தையின் புகழைப் பாடுகிறார்கள்: ஓ பரமாத்மாவான பரமதந்தையே, நீங்களே விவேகிகளின் புத்தியானவர், முட்டாள்களுக்கு விவேகத்தைக் கொடுங்கள். ஏனைய யாவரும் அசுர வழிகாட்டல்களையே கொடுக்கின்றனர். தந்தை மாத்திரமே மேன்மையான அறிவுறுத்தல்களைக் கொடுக்கின்றார். மக்கள் கூவியழைக்கின்றனராயினும், எதையுமே அவர்கள் புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளாகிய உங்களிடம் இப்பொழுது, மூவுலகங்களைப் பற்றிய ஞானம் உள்ளது. இந்த உலகத்தைப் பற்றிய ஞானம் மாத்திரமன்றி, இந்த உலகத்திற்கு அப்பால் என்ன உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆத்ம உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம் ஆகிய மூவுலகங்களைப் பற்றிய ஞானமும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நன்றாகக் கற்பவர்களின் புத்தியில் இது உள்ளது. இங்கே நீங்கள் ஒரு பாடசாலையில் கற்கின்றீர்கள், எனவே, ஞானம் உங்கள் புத்தியில் முழுமையாக நிலைத்திருக்க வேண்டும். முக்காலங்களையும் பற்றிய ஞானமும் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் திரிகாலதரிசிகள் (முக்காலங்களையும் அறிந்தவர்கள்) ஆகுகின்றீர்கள், ஆனால்;, திரிலோகநாதர்கள் (மூவுலகங்களின் பிரபு) என உங்களை அழைக்க முடியாது. எவருமே திரிலோகநாதர் ஆகுவதில்லை. திரிகாலதரிசி என்ற வார்த்தை மிகச்சரியானது. நீங்கள் மூவுலகங்களைப் பற்றியும், முக்காலங்களைப் பற்றியும் அறிவீர்கள். நிச்சயமாக நாங்கள் ஆத்ம உலகிலேயே வசிக்கிறோம். ஆத்மாக்களாகிய நாங்கள் அங்கே வசிக்கிறோம். வேறு எவருடைய புத்தியிலும் இந்த ஞானம் இல்லை. பரமாத்மா பரம தந்தையே திரிகாலதரிசி என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் ஆரம்பம், மத்தி, இறுதி என்னும் முக்காலங்களையும், அத்துடன் மூவுலகங்களையும் அறிந்தவர். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனை வைகுந்தத்தின் அதிபதிகள் என அழைக்கலாம், ஆனால், அவர்களை மூவுலகங்களுக்கும் அதிபதிகள் என அழைக்க முடியாது; அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள். நீங்கள் தந்தையை வைகுந்தத்தின் அதிபதி என அழைக்க முடியாது. இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம். எந்தவொரு மனிதரும் கடவுளைப் போன்று, ஞானம் நிறைந்தவராக இருக்க முடியாது. கடவுள் ஜனிஜனன்கார் (உள்ளேயிருக்கும் இரகசியங்கள் யாவற்றையும் அறிந்தவர்) என்றும், ஞானம் நிறைந்தவர் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர் உள்ளேயிருக்கும் இரகசியங்கள் யாவற்றையும் அறிந்தவர் என்றால், ஒவ்வொருவருடைய இதயத்தில் உள்ளதையும் கூட அவர் அறிந்தவராகவே இருப்பார். மக்கள் அவரைச் சர்வவியாபகர் என அழைத்து, இகழ்கிறார்கள். நீங்கள் இப்பொழுது இறை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் நீங்கள் தேவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகுவீர்கள். கடவுளா அல்லது சத்திய யுகத்துத் தேவர்களா உயர்ந்தவர்;கள்? சூட்சும உலகத்துத் தேவர்கள் அந்தத் தேவர்களை விடவும் உயர்ந்தவர்கள். சூட்சும உலகவாசியான, பிரம்மாவே அதியுயர்ந்தவர் எனப்படுகிறார்; அவர் அவ்யக்தமானவர். இங்குள்ள இவர் வியக்தமானவர் (சரீரதாரி). அவர் ஒரு தூய தேவதையாகும்பொழுது, புகழப்படுகிறார். பிராமணர்கள் இப்பொழுது ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவார்களாயின், அது அவர்களுக்குப் பொருந்தாது. இதனாலேயே விஷ்ணு சுயதரிசனச் சக்கரத்தை வைத்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளார். சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் என்பனவற்றின் அர்த்தங்களை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். சத்திய யுகத்தில், இலக்ஷ்மி, நாராயணனுக்கு இந்த ஆயுதங்கள் வழங்கப்பட மாட்டாது, ஏனெனில், அவை இக்காலப் பகுதியையே குறிக்கின்றன. உண்மையில், இவை ஞான ஆயுதங்கள்; அது பௌதீக ஆயுதங்களுக்கான கேள்வி இல்லை. சமயநூல்களில் அவர்கள் பௌதீகமான ஆயுதங்கள் போன்றவற்றைக் காண்பிக்கின்றனர். அவர்கள் பாண்டவ, கௌரவ சேனைகளைக்; காண்பிக்கின்றனர். அச்சேனைகளில் அவர்கள் பெண்களைக் காண்பிப்பதில்லை; பாண்டவ சேனையில், அவர்கள் ஆண்களை மாத்திரமே காண்பித்துள்ளனர். சக்தி சேனை எங்கே சென்றது? இது மறைமுகமானது. சிவசக்திகள் எங்கே சென்றனர் என்பது எவருக்குமே தெரியாது. அதைப் பற்றிய விபரங்கள் எதையும் அவர்கள் கொடுக்கவில்லை. சக்திகள் எவ்வாறு போர் புரிந்தனர்? அவர்கள் சேனையொன்றைக் காண்பித்துள்ளனர், ஆனால் எவராலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எவரோ ஒருவர் கூறியதை அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது மிகச்சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் அனைவரும் நடிகர்கள், ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கென ஒரு சொந்தப் பாகத்தைப் பெற்றுள்ளார். நீங்கள் இப்பொழுது படைப்பவராகவும், இயக்குனராகவும், பிரதான நடிகராகவும் உள்ள பாபாவிடமிருந்து நாடகத்தின் அனைத்து இரகசியங்களையும் அறிந்துள்ளீர்கள். நான்கு யுகங்கள், அதாவது, சகாப்தங்கள் என அழைக்கப்படுகின்ற, நான்கு பாகங்கள் உள்ளன. உண்மையில் ஐந்து யுகங்கள் உள்ளன் ஐந்தாவது யுகம், நன்மை பயக்கும் இந்த யுகமாகும். சத்திய, திரேதா யுகங்களுக்கிடையிலான சங்கம காலத்தை நன்மை பயக்கும் யுகம் என அழைக்க முடியாது, ஏனெனில், அக்காலப் பகுதியில் நீங்கள் கீழிறங்குகிறீர்கள். நீங்கள் சதோபிரதானிலிருந்து ரஜோவுக்கும், பின்னர் தமோவுக்கும்; கீழிறங்க வேண்டிய ஏணி இதுவாகும். எனவே, நீங்கள் இந்த ஏணியில் கீழிறங்கவே வேண்டும். நீங்கள் ஞானத்தில் ஒரு தடவை ஏணியில் மேலே பாய்ந்து ஏறிவிடுகிறீர்கள். அதன்பின்னர், மேலேறிய ஏணியிலிருந்து நீங்கள் தொடர்ந்தும் இறங்கி வருகிறீர்கள். ஏணியில் இறங்கி வருவது மிக இலகுவானது, ஆனால் ஏறிச் செல்வது மிகச் சிரமமானது; நீங்கள் பெருமளவு முயற்சி செய்ய வேண்டும். ஒரு மனிதனிலிருந்து தேவனாகுவது செங்குத்தான ஏற்றமாகும். நீங்கள் ஏறிச் சென்றால், அன்பு என்ற அமிர்தத்தைச் சுவைக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது ஏறுகின்றீர்கள், பின்னர் நீங்கள் வீழ்வதுடன், உங்கள் எலும்புகளும் நொருக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கின்றது? இந்த ஏற்றம் மிகவும் செங்குத்தானது. நீங்கள் மீண்டும் ஏறுகிறீர்கள் என்பதையும், பின்னர் இறங்குவீர்கள் என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். ஏறுவதற்கு ஒரு விநாடியே எடுக்கிறது; தாமதமாக வருபவர்கள் ஒரு விநாடியில் ஏறலாம். அப்பாவித் தாய்மார் துன்புறுத்தப்படுகிறார்கள், பாபா, துகிலுரியப்படுவதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! எனப் புதல்விகள் கூவியழைக்கிறார்கள். எத்தனையோ புதல்விகள் உள்ளனர். அப்பாவிகள் பெருமளவு துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தாக்கப்படும்பொழுது, பாவக் கலசம் நிறையும், அது நிறைந்ததும் உடைகின்றது. சீதை ஒரு கலசத்திலிருந்து தோன்றியதாக அவர்கள் காண்பித்துள்ளனர். இப்பொழுது உண்மையான சீதைகளாகிய நீங்கள் தோன்றுகிறீர்கள். இராதையும், சீதையும் தோன்றுகிறார்கள். ரகுபதி ராகவ ராஜாராம் (இராமரின் புகழ்) என எழுதும்பொழுது, அவர்கள் சீதையின் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஜெகதாம்பாளையும், ஜெகத்பிதாவையும் பற்றிப் பேசுகிறார்கள்; பிற்காலத்தில் அவர்கள் இளவரசர், இளவரசி ஆகுகின்றார்கள். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனாக இருந்தார்கள். ஆனால், இறுதியில் இப்பொழுது அவர்கள் என்னவாகியிருக்கிறார்கள் எனப் பாருங்கள்! சத்திய யுகத்தில் 330 மில்லியன் மனிதர்கள் இருக்கவில்லை; வெகுசில மனிதர்களே அங்கு இருந்தார்கள், பிற்காலத்திலேயே விரிவாக்கம் நிகழ்ந்தது. தேவ சமுதாயத்தினர் தொடர்ந்தும் மறுபிறவிகள் எடுத்துப் பின்னர், அசுர சமுதாயத்தினர் ஆகுகின்றார்கள். அசுர சமுதாயத்திற்குரியவர்கள் தேவ சமுதாயத்திற்குரியவர்களாக மாற்றப்படுகிறார்கள். ஒவ்வொரு சக்கரத்திலும் அவர்கள் அவ்வாறு ஆக்கப்படுகிறார்கள். முழு ஞானமும் இப்பொழுது உங்கள் புத்தியில் புகுந்துள்ளது. நீங்களே திரிகாலதரிசிகள் ஆகுகின்றீர்கள், அத்துடன், மூவுலகங்கள் பற்றிய ஞானத்தையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் வைகுந்தத்தின் அதிபதிகளான, பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்றும், இப்பொழுது நரகத்தின் அதிபதிகளான, பூஜிப்பவர்களாகி விட்டீர்கள் என்றும் கூறுகின்றீர்கள். எவ்வாறாயினும், ஹம்ஸோ என்பதன் மிகச்சரியான அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளாததால், தங்களையே ஹம்ஸோ எனக் கூறுகிறார்கள் (அதாவது, தங்களையே கடவுள் என அழைக்கிறார்கள்). அதிக வேறுபாடு உள்ளது! இதுவே உலகின் வரலாறும், புவியியலும் என இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. நீங்கள் இப்பொழுது இந்த எல்லையற்ற சக்கரத்தை அறிந்துள்ளதுடன், மூவுலகங்களையும், முக்காலங்களையும் பற்றிக் கூட அறிந்துள்ளீர்கள். தந்தை உங்களுக்கு மறைமுகமான இவ்விடயங்களைக் கற்பிக்கிறார். எவருக்கும் இதைப் பற்றித் தெரியாது; கீதையில் கூட இவ்விடயங்கள் இல்லை. இந்த ஞானத்தைக் கொண்டிருப்பவர்களால், மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியும். பின்னர், அவர்கள் அனைவரும் வந்து, தமது பாகங்களைத் தமக்குரிய நேரத்தில் மீண்டும் நடிப்பார்கள். கிறிஸ்து தனக்குரிய நேரத்தில் தனது பாகத்தை மீண்டும் நடிப்பார். நீங்கள் சூரிய வம்சத்தவர்களாகவும், சந்திர வம்சத்தவர்களாகவும் ஆகி, பின்னர் வைசிய, சூத்திர சமுதாயத்தினர் ஆகுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இவ்வாறே சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. பௌத்தர்களும், இஸ்லாமியர்களும் தமக்குரிய காலத்தில் வந்து, தமது பாகங்களை மீண்டும் நடிப்பார்கள். ஒரேயொரு ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் உள்ளபொழுது, வேறு சமயங்கள் இருப்பதில்லை. உலகம் ஒன்றே உள்ளது. படைப்பவரினதும், படைப்புகளினதும் இரகசியங்களைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் குழந்தைகளைப் படைத்து, பராமரிக்கின்ற ஓர் எல்லைக்குட்பட்ட பிரம்மா ஆவார். படைப்புக்களே படைப்பவராகிய தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு ஆஸ்தியைக் கொடுப்பதாக எப்பொழுதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? முதலாவதாக, அனைவரும் அறிந்த எல்லைக்குட்பட்ட தந்தையர் உள்ளனர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையே பெறுகிறீர்கள். லௌகீக ஆசிரியர்கள் கற்பிக்கின்ற கல்வியைக் கற்பதால், எவருமே உலக அதிபதிகள் ஆகுவதில்லை. இவ்விடயங்கள் எல்லையற்றவை ஆகும். எல்லைக்குட்பட்டவர்கள் அந்த எல்லையற்ற தந்தையை நினைவுசெய்கிறார்கள். அவர்கள் அவரை பாபா, சிவபாபா என அழைக்கிறார்கள். படைப்பவர், பாபா என்றே அழைக்கப்படுவார். பாபா என்ற வார்த்தை மிகவும் பொதுவானது என்பதால், அவர் சிவபாபா என அழைக்கப்படுகின்றார். அவர் அசரீரியானவர். சிவபாபாவுடன் உங்களுக்கு உள்ள உறவுமுறை என்ன என வினவப்படுகிறது. அவர்கள் கூறுகின்றனர்: சிவபாபா, எங்கள் புத்தியை நிரப்புங்கள்! சிவன் என்பதே பாபாவிற்கான மிகச்சரியான பெயராகும். சங்கரரின் படம் வேறுபட்டது. அவர்கள் சிவனையும் சங்கரரையும் கலந்து விட்டார்கள், எனவே, சிவ-சங்கரர் எனக் கூறுவது மாபெரும் தவறாகும். அதிமேலான தந்தை மறக்கப்பட்டு விட்டார். பல நல்ல படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பொழுது பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெறுகிறது. இந்நேரத்திலேயே நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பிராமணர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? நான் பிரம்மாவைத் தத்தெடுத்தது போன்றே, அவர்களையும் தத்தெடுக்கிறேன். பிரம்மா மூலமே பிராமணர்கள் பிறக்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் பிரஜாபிதா பிரம்மகுமாரர்கள், குமாரிகள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். பிரஜாபிதா என்ற வார்த்தையைப் புகுத்துவது அவசியமாகும். பிரம்மா என்று மாத்திரம் கூறுவது போதாது, ஏனெனில், பலருக்கும் பிரம்மா என்ற பெயர் உள்ளது, ஆனால், பிரஜாபிதா பிரம்மா என்ற பெயர் எவருக்கும் இருக்காது. இவர் ஒரு மனிதன் ஆவார். உருத்திர சிவபாபா இந்த ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். எனவே, நிச்சயமாகப் பிராமணர்கள் தேவைப்படுகின்றனர். பிராமணர்கள் யாரென்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பிராமணர்கள் மூலமே இந்த யாகம் உருவாக்கப்படுகிறது. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள், பின்னர் நீங்கள் தேவர்களாக வேண்டும். அனைவரும் இந்தப் பூமிக்கு இறங்கி வர வேண்டும். எனவே, பின்னர் அனைவரும் எங்கு செல்வார்கள்? அனைவரும் இந்த உருத்திர ஞான யாகத்தில் அர்ப்பணமாக்கப்படுகிறார்கள். பழைய உலகம் முழுவதும் இந்த உருத்திர ஞான யாகத்தில் அர்ப்பணமாக்கப்படுகிறது. இந்த ஞான யாகத்திலிருந்தே விநாசத்திற்கான சுவாலைகள் தோன்றின. சங்கரர் மூலம் விநாசம் எனக் கூறப்படுகின்றது. இதற்கான அடையாளங்களையும் நீங்கள் காண்கிறீர்கள். இதுவே அந்தக் காலமாகும். ஐரோப்பியர்களாகிய யாதவர்கள், பாண்டவர்கள், கௌரவர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாரத மக்களோ தமது தர்மத்தை மறந்துவிட்டனர். இதன் படங்களும் உள்ளன, இருப்பினும், எவருக்கும் அவர்களைத் தெரியாது. தேவர்களின் இராச்சியம் இருந்தது, ஆனால் அவர்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுத்தவர் யார்? தேவ தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது? அவர்கள் முற்றாகவே இதைப் புரிந்துகொள்வதில்லை. தர்மத்தை ஸ்தாபிப்பவரே பின்னர் அதைப் பற்றி விளங்கப்படுத்துகிறார். வேறெவராலும் உலக வரலாற்றையும், புவியியலையும் விளங்கப்படுத்தவும் முடியாது. எவராலும் மூவுலகங்களைப் பற்றிய ஞானத்தைக் கொடுக்கவும் முடியாது. நீங்கள் இப்பொழுது அனைவருடைய பாகத்தையும் புரிந்துகொண்டுள்ளீர்கள். அனைவரும் தமது பாகங்களை நடிப்பதற்காகத் தமக்குரிய நேரங்களில் வருவார்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்Nபொழுது, உங்கள் புகழ் அதிகரிக்கும். விரிவாக்கம் விரைவாக இடம்பெறும், எனவே, நீங்கள் மிகப்பெரிய கட்டடத்தைக் கட்டவேண்டும். இது நாடகத்தின் பாகம் ஆகும். பல குழந்தைகள் வருவார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்; அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும். அவர்கள் கற்பித்தல்களைப் பெறுவதற்கு வருவார்கள். இன்னும் பலர் சுற்றிலும் பார்ப்பதற்கு மட்டுமே வருவார்கள். கல்வியமைச்சர் வந்தால், அவருக்கு நீங்கள் ஞானத்தையும் விளங்கப்படுத்த வேண்டும். எங்களுடைய வரலாறும், புவியியலும் உலகினைப் பற்றியதாகும். முழுக் கல்பத்தினதும் சக்கரத்தை எவரும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் இப்பொழுது ஞானக்கடலால் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆக்கப்பட்டுள்ளீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் எல்லையற்ற வரலாறையும் புவியியலையும் கற்று, பிறருக்கும் கற்பிக்க வேண்டும். உங்களுக்கு ஆபரணங்கள் வழங்கப்படுவதற்கு, நீங்கள் ஒரு தூய தேவதையாக வேண்டும்.

2. ஒரேயொரு தந்தையே விவேகிகளின் புத்தி ஆவார். எனவே, அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்றி, விவேகிகள் ஆகுங்கள். இந்தப் பிராமண வாழ்க்கை பெறுமதி வாய்ந்தது என்ற போதையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நிறம், மற்றும் வடிவத்துடன், முழுமையான தூய்மை எனும் நறுமணத்தைக் கிரகிப்பதால், கவர்கின்ற ரூபமுடையவர் ஆகுவீர்களாக.

பிராமணர்கள் ஆகுவதன் மூலம், நீங்கள் அனைவரும் நிறத்தை விருத்தி செய்வதால், உங்கள் வடிவம் மாற்றம் அடைந்துள்ளது. எவ்வாறாயினும், உங்கள் நறுமணம் வரிசைக்கிரமமாகவே உள்ளது. ஒரு கவர்கின்ற ரூபமுடையவர் ஆகுவதற்கு, நிறம்;, வடிவத்துடன், முழுமையான தூய்மை எனும் நறுமணமும் உங்களுக்குத் தேவையாகும். வெறுமனே பிரம்மச்சாரியம் மாத்திரம் தூய்மை என்று அர்த்தமில்லை, ஆனால் சரீரத்திலிருந்து விடுபட்டிருப்பது என்று அர்த்தமாகும். உங்கள் இதயத்தை, தந்தையைத் தவிர வேறு எதிலும்; பற்ற அனுமதிக்காதீர்கள். உங்கள் சரீரத்தைப் பொறுத்தவரையில் பிரமச்சாரியாகவும், உங்கள் உறவுமுறைகளை பொறுத்தவரையில் பிரமச்சாரியாகவும், உங்கள் சமஸ்காரங்களைப் பொறுத்தவரையில் பிரமச்சாரியாகவும் இருங்கள். அத்தகைய நறுமணம் கொண்ட ஆன்மீக ரோஜாக்கள் மட்டுமே கவர்கின்ற ரூபமுடையவர் ஆகுவார்கள்.

சுலோகம்:
உண்மையான சத்தியத்தை இனங்கண்டால், அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வது உங்களுக்கு இலகுவானதாக ஆகும்.