21-11-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, இந்தச் சங்கமயுகமே அதிமேன்மையானவர் ஆகுவதற்கான மங்களகரமான நேரமாகும். ஏனெனில், தந்தை இந்த நேரத்திலேயே உங்களுக்குச்; சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாறுவதற்கான கல்வியைக் கற்பிக்கின்றார்.

கேள்வி:

குழந்தைகளாகிய உங்களிடம் எந்த ஞானம் உள்ளதால், எச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் அழுவதில்லை?

பதில்:

இது முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டுள்ள நாடகம் என்ற ஞானம் உங்களிடம் உள்ளது. இந்த நாடகத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் தனது சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீPர்கள். தந்தை எங்களுடைய சந்தோஷ ஆஸ்தியை எங்களுக்குக் கொடுக்கின்றார், எனவே நாங்கள் எவ்வாறு அழ முடியும்? அப்பால் பிரம்ம தத்துவத்தில் வாழ்ந்தவரை காண்பதற்கு நாங்கள் அக்கறை கொண்டிருந்தோம். இப்பொழுது நாங்கள் அவரைக் கண்டு விட்டோம், எனவே எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? பாக்கியசாலிக் குழந்தைகள் ஒருபொழுதும் அழுவதில்லை.

ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்குச் சிலவற்றை விளங்கப்படுத்துகின்றார். படங்களில், நீங்கள் எழுத வேண்டும்: திரிமூர்த்தி சிவபாபா குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தும் பொழுது, ‘சிவபாபாவே இதனைக் கூறுகின்றார்’ என ஆத்மாவாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். இந்தத் தந்தையும் கூறுகின்றார்;: பாபாவே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இங்கே, மனிதர்கள் மனிதர்களுக்கு விளங்கப்படுத்துவதில்லை, ஆனால் பரமாத்மாவே ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் அல்லது ஓர் ஆத்மா ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா மாத்திரமே ஞானக்கடல், அவரே ஆன்மீகத் தந்தையும் ஆவார். இந்த நேரத்திலேயே ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இங்கு, நீங்கள் லௌகீகப் பெருமைகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் செயல்களில் ஈடுபட்டு, உங்கள் வியாபாரத்தைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும், ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதி, தந்தையை நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சிவபாபா இவரினுள் பிரவேசித்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரே சத்தியமும், உயிருள்ளவரும் ஆவார்; அவர் சத்தியமும், உயிருள்ளவரும் பேரானந்த சொரூபமும் என அழைக்கப்படுகின்றார். இது பிரம்மாவினதோ, விஷ்ணுவினதோ, சங்கரரினதோ அல்லது எந்த மனிதரினதோ புகழாக இருக்க முடியாது. அதிமேலான கடவுள் ஒரேயொருவரே, அவரே பரமாத்மாவும் ஆவார். இந்த நேரத்தில் மாத்திரமே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இதனை மீண்டும் எப்பொழுதும் பெறுவதில்லை. தந்தை 5000 வருடங்களுக்கு ஒருமுறை வந்து, நீங்கள் அவரை நினைவு செய்வதற்காக, உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குகின்றார். நீங்கள் இதனைச் செய்வதனால். தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள்;, இதற்கு வேறு எவ்வழிமுறையும் இல்லை. ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ என மனிதர்கள் கூவி அழைத்தாலும், அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் ‘சீதையைத் தூய்மையாக்கும் இராமரே’ எனக் கூறினாலும், அது நன்றாகவிருக்கும். நீங்கள் அனைவரும் சீதைகள், அதாவது, பக்தர்கள் ஆவீர்கள். அந்த ஒரேயொருவர் கடவுளான இராமர் ஆவார். பக்தர்களாகிய நீங்கள் கடவுளிடமிருந்து உங்கள் பக்திக்கான பலனைக் கேட்கின்றீர்கள். முக்தியும் ஜீவன்முக்தியுமே பலனாகும். ஒரேயொரு தந்தை மாத்திரமே முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவர் ஆவார். ஒரு நாடகத்தில் பிரதான பாகங்;களைக் கொண்டவர்களும் சிறிய பாகங்களைக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள். இந்த நாடகம் எல்லையற்றதாகும்;, இதனை வேறு எவராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்நேரத்தில், தமோபிரதானாகவும், மிகவும் சீரழிந்தவர்களாகவும் இருக்கின்ற நீங்கள் சதோபிரதானான, மிகவும் மேன்மையான மனிதர்களாக ஆகுகின்றீர்கள். சதோபிரதானானவர்களே, அதிமேன்மையானவர்கள் எனக் கூறப்;படுகின்றார்கள். இந்த நேரத்தில் நீங்கள் அதிமேன்மையானவர்கள் அல்ல. தந்தையே உங்களை அதிமேன்மையானவர் ஆக்குகின்றார். இந்த நாடகச் சக்கரம் எவ்வாறு தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதை எவரும் அறியமாட்டார்கள். கலியுகம், சங்கமயுகம், பின்னர் சத்தியயுகம் என்பன உள்ளன. பழைய உலகைப் புதிதாக்குபவர் யார்? வேறு எவராலும் அன்றி தந்தையால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும். தந்தை சங்கமயுகத்திலேயே உங்களுக்குக் கற்பிக்க வருகின்றார். தந்தை சத்தியயுகத்திலோ அல்லது கலியுகத்திலோ வருவதில்லை. தந்தை கூறுகின்றார்;: எனது பாகம் சங்கமயுகத்திலேயே உள்ளது. ஆகையாலேயே சங்கமயுகம் நன்மைபயக்கும் யுகம் என அழைக்கப்படுகின்றது. இதுவே மங்களகரமான யுகமாகும்; குழந்தைகளாகிய உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காகத் தந்தை வருகின்ற இந்த நேரம், சங்கமயுகத்தின் அதிமங்களகரமான நேரம் எனக் கூறப்படுகின்றது. மனிதர்கள் மனிதர்களே, ஆனால் அவர்கள் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்கள் ஆகுவதால், அவர்கள் ஆதிசனாதன தேவதேவியரின் தர்மத்துக்கு உரியவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்;: நானே இத் தர்மத்தை ஸ்தாபிக்கின்றேன், நீங்கள் நிச்சயமாக மிகவும் தூய்மையானவர்கள் ஆகவேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். ஏனைய அனைவரும் பக்தர்களாகிய, மணவாட்டிகள். ‘சீதையைத் தூய்மையாக்கும் இராமரே’ எனக் கூறுவது சரியே. எவ்வாறாயினும், அதன் பின்னர், அவர்கள் இவர் சத்திரிய குலத்தைச் சேர்ந்த அரசர் இராமர் எனக் கூறுகின்றார்கள். ஆகையால் அது பிழையாகுகின்றது. மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால், தாங்கள் விரும்பிய அனைத்தையும் தொடர்ந்தும் கூறுகின்றார்கள்;. இதனையே அவர்கள் தொடர்ந்தும் ஓதுகின்றார்கள். இப்பொழுதே சந்திர வம்சத்திற்கான தர்மமும் ஸ்தாபிக்கப்படுகின்றது என நீங்கள் அறிவீர்கள். தந்தை வந்து பிராமண குலத்தை ஸ்தாபிக்கின்றார்;, அது ஒரு வம்சம் என அழைக்கப்படுவதில்லை. இது ஒரு குடும்பம் ஆகும். இங்கே பாண்டவர்களின் அல்லது கௌரவர்களின் இராச்சியம் எதுவும் இல்லை. கீதையைக் கற்றவர்கள் இவ்விடயங்களை மிகவும் விரைவில் புரிந்துகொள்வார்கள். இதுவும் கீதையே. அதனைப் பேசுபவர் யார்? கடவுள்! முதலில், கீதையின் கடவுள் யார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் கூறுகின்றார்கள்: பகவான் கிருஷ்ணர் பேசுகின்றார். எவ்வாறாயினும், சத்தியயுகத்திலேயே கிருஷ்ணர் இருக்கின்றார். அவரில் உள்ள அந்த ஆத்மா அழிவதில்லை. சரீரத்தின் பெயரே மாறுகின்றது. ஆத்மாவின் பெயர் என்றுமே மாறுவதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் சரீரத்தின் ஆத்மா, சத்தியயுகத்தில் மாத்திரமே அந்த வடிவத்தில் இருக்கின்றார். அவர் முதல் இலக்கத்தைப் பெறுகின்றார். முதலாம் இலக்ஷ்மி நாராயணன், இரண்டாம் இலக்ஷ்மி நாராயணன், மூன்றாம் இலக்ஷ்மி நாராயணன் ஆகியோர் உள்ளனர். எனவே அதற்கேற்ப அவர்களுக்குப் புள்ளிகள் குறைவாக இருக்கும். மாலை உருவாக்கப்படுகின்றது. உருண்டா மாலையும், உருத்திர மாலையும் உள்ளன எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் உருண்டா மாலையை விஷ்ணுவின் கழுத்தில் காட்டுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக விஷ்ணுவின் உலகிற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அது நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகுவதைப் போன்றதாகும். முதலில் நீங்கள் சிவனின் கழுத்து மாலை ஆகுகின்றீர்கள்; அதுவே மக்கள் செபிக்கின்ற உருத்திர மாலை என அழைக்கப்படுகின்றது. எவரும் மாலையை என்றும் வழிபடுவதில்லை. மாலையின் மணிகளே, நினைவு செய்தவாறு உருட்டப்படுகின்றன. விஷ்ணுவின் உலக இராச்சியத்திற்கு வரிசைக்கிரமமாக வருகின்றவர்களே மாலையில் மணிகள் ஆகுகின்றார்கள். ஒரு மாலையில் முதலில் குஞ்சமும் (மலர்), அதன்பின்னர் இரட்டை மணிகளும் உள்ளன. அது இல்லறப் பாதையைக் குறிக்கின்றது. இல்லறப்பாதை பிரம்மாவுடனும், சரஸ்வதியுடனும் குழந்தைகளுடனும் ஆரம்பமாகுகின்றது. அவர்களே பின்னர் தேவர்கள் ஆகுபவர்;கள். இலக்ஷ்மியும் நாராயணனும் முதலாமவர்கள். அவர்களுக்கு மேல் சிவபாபாவைக் குறிக்கும் குஞ்சம் (மலர்) உள்ளது. மாலையின் மணிகளை உருட்டிய பின்னர் மக்கள் குஞ்சத்தை (மலரை) வழிபடுகின்றார்கள். மறுபிறவி எடுக்காத சிவபாபாவே குஞ்சம் (மலர்) ஆவார்; அவர் இவரினுள் பிரவேசிக்கின்றார். அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவரின் ஆத்மா இவருடையதே. இவர் தனது சரீரத்தின் ஜீவனோபாயத்திற்குத் தேவையானதைத் தொடர்ந்தும் செய்கின்றார், ஆனால் உங்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டியது அந்த ஒரேயொருவரின் கடமையாகும். ஒருவரின் மனைவியோ அல்லது தந்தையோ மரணிக்கும் பொழுது, அந்த ஆத்மா ஒரு பிராமணப் புரோகிதரின் சரீரத்தினுள்; வரவழைக்கப்படுகின்றார். ஆரம்ப நாட்களில் அந்த ஆத்மா வருவதுண்டு. எவ்வாறாயினும், அந்த ஆத்மா அச் சரீரத்தை விட்டு வருவதில்லை. அது நாடகத்தில் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை. அந்த ஆத்மா சென்று வேறொரு சரீரத்தை எடுத்தார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானம் முழுவதையும் பெறுகின்றீர்கள். ஆகையால், ஒருவர் மரணிக்கும் பொழுது, நீங்கள் எதனையிட்டும் கவலைப்படுவதில்லை. உங்கள் தாயே மரணித்தாலும் நீங்கள் அல்வா உண்ணுகின்றீர்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குச் சென்ற புத்திரி ஒருவர் (சாந்தாபென்) அவர்களிடம் வினவினார்;: நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்? அந்த ஆத்மா சென்று வேறொரு சரீரத்தைப் பெற்றிருப்பார். நீங்கள் அழுவதால் அந்த ஆத்மா திரும்பி வரப் போவதில்லை. பாக்கியசாலிகள் அழுவதில்லை. அவ்வாறு கூறி, அவர் அனைவரது அழுகையையும் நிறுத்தி, அவர்களுக்கு விளங்கப்படுத்த ஆரம்பித்தார். இவ்வாறாகப் பல புத்திரிகள் விளங்கப்படுத்துகின்றார்கள்: இப்பொழுது அழுவதை நிறுத்துங்கள்! போலிப் பிராமணர்களுக்குப் படைக்காதீர்கள். நான் உண்மையான பிராமணர்களை இங்கு அழைத்து வருகின்றேன். பின்னர் அவர்கள் ஞானத்தைச் செவிமடுக்க ஆரம்பிக்கின்றார்கள். அத்துடன் அவர் கூறுவது சரியென அவர்கள் புரிந்து கொள்கின்றார்;கள். இந்த ஞானத்தைச் செவிமடுப்பதால், அவர்கள் அமைதி நிறைந்தவர்கள் ஆகுகின்றார்கள். மக்கள் பாகவதத்தை ஏழு நாட்களுக்கு வாசித்த பொழுதும், அவர்களின் துன்பம் அகற்றப்படுவதில்லை. எவ்வாறாயினும், புத்திரிகளாகிய உங்களால் அனைவரது துன்பத்தையும் அகற்ற முடியும். அழ வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். இந்த நாடகம் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. அவரவர் தனது சொந்தப் பாகத்தை நடிக்க வேண்டும். எச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் அழக்கூடாது. நீங்கள் அதிகளவு அலைந்து திரிந்து தேடிய, எல்லையற்ற தந்தையையும், ஆசிரியரையும், குருவையும் கண்டுகொண்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது அப்பால், பிரம்ம தத்துவத்தில் வாழும் பரமாத்மாவாகிய பரமதந்தையைக் கண்டுகொண்டுள்ளீர்கள். எனவே, உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? தந்தை மாத்திரமே சந்தோஷ ஆஸ்தியைக் கொடுக்கின்றார். நீங்கள் தந்தையை மறக்கும் பொழுதே அழுகின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்வதால், சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். ஓ! நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றோம்! நாங்கள் அதன்பின்னர் 21 தலைமுறைகளுக்கு அழ வேண்டியதில்லை. 21 தலைமுறை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் வயோதிப வயதை அடையும் வரைக்கும் உள்ள காலமாகும். அங்கு என்றுமே அகால மரணம் இருக்க மாட்டாது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே, உங்களுக்குள் அதிகளவு மறைமுகமான சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் மாயையை வெற்றி கொண்டு, உலகையும் வெற்றி கொள்பவர்கள் ஆகுவீர்கள் என்பதை நீங்கள் அறிவீPர்கள். ஆயுதங்கள் போன்றவற்றிற்கான கேள்விக்கே இடமில்லை. நீங்கள் சிவசக்திகள். உங்களிடம் ஞான வாளும், ஞான அம்பும் உள்ளன. பக்தி மார்க்கத்துக்குரிய மக்கள் தேவியரைப் பௌதீக அம்புகளுடனும், திரிசூலத்துடனும்; சித்தரித்துள்ளார்கள். தந்தை கூறுகின்றார்;: நீங்கள் விகாரத்தை ஞான வாளினால் வெற்றி கொள்ள வேண்டும்;. தேவியர் வன்முறையில் ஈடுபடுபவர்களாக இருக்க முடியாது. அவை அனைத்தும் பக்திமார்க்கத்திற்குரியவை. சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் துறவறப்பாதைக்கு உரியவர்கள்;, அவர்களுக்கு இல்லறப்பாதையில் நம்பிக்கையில்லை. நீங்கள் பழைய உலகம் முழுவதையும், பழைய சரீரத்தையும் துறக்கின்றீர்கள். இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையை நினைவுசெய்தால், தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் ஞான சம்ஸ்காரங்களை உங்களுடன் எடுத்துச் செல்வதால், அதற்கேற்ப புதிய உலகில் பிறப்பெடுக்கின்றீர்கள். இங்கு நீங்கள் பிறப்பெடுப்பீர்களாயின், உங்கள் சம்ஸ்காரங்கள் உங்களை ஒரு நல்ல குடும்பத்திற்கு, அதாவது, ஓர் அரசருக்கோ அல்லது சமயபற்றுள்ள குடும்பத்திற்கோ அழைத்துச் செல்லும். நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள். உங்களை ஓர் தேவி என அவர்கள் கூறுவார்கள். மக்கள் கிருஷ்ணரின் புகழை அதிகளவில் பாடுகின்றார்கள். அவர் தனது குழந்தைப் பருவத்தில் வெண்ணெயைத் திருடியதாகவும், மண்பானையை உடைத்ததாகவும், அவர் அதை, இதைச் செய்தார் என்றெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளார்கள். அச்சா. அவர்கள் கிருஷ்ணரை கருநீலநிறத்தில் காட்டியிருப்பது ஏன்? அங்கே கிருஷ்ணர் மிகவும் அழகாக இருப்பார். சரீரம் தொடர்ந்தும் மாறுகின்றது, பெயரும் மாறுகின்றது. ஸ்ரீகிருஷ்ணரே சத்தியயுகத்தின் முதல் இளவரசர் ஆவார்;. அவ்வாறாயின் அவரை ஏன் அவர்கள் கருநீலநிறத்தில் காட்டுகின்றார்கள்? எவராலும் உங்களுக்குக் கூற முடியாது. எவரையும் கடித்து நீலநிறமாக்குவதற்கு, அங்கே பாம்புகள் போன்றன இருக்க மாட்டாது. இங்கே, எவராவது நஞ்சை அருந்தும் பொழுது, அவர் நீலநிறமாக ஆகுகின்றார். அங்கே அத்தகைய விடயங்கள் இடம்பெற முடியாது. நீங்கள் இப்பொழுது தேவ சமுதாயத்தில் ஒருவராக ஆகப் போகின்றீர்கள். இந்தப் பிராமண சமுதாயத்தைப் பற்றி எவருக்கும் தெரியாது. முதலாவதாக, தந்தை பிராமணர்களாகிய உங்களைப் பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றார். பிரஜாபிதா இருப்பதால், அவரின் மக்களும் பலர் இருப்பார்கள். சரஸ்வதி பிரம்மாவின் புத்திரி எனக் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதி அவரின் மனைவி அல்ல. எவருக்கும் இது தெரியாது. பிரஜாபிதா பிரம்மாவின் படைப்பு வாய்வழியாக மாத்திரமே இடம்பெறுகின்றது. இங்கே மனைவி என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை இவருக்குள் பிரவேசித்துக் கூறுகின்றார்;: நீங்கள் எனது குழந்தைகள். நான் இவருக்கு ‘பிரம்மா’ எனப் பெயரிட்டுள்ளேன். அவரது குழந்தைகளாகிய அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மாயையை வெற்றி கொள்கின்றீர்கள். இதுவே வெற்றி, தோல்வி நிறைந்த விளையாட்டு என அழைக்கப்படுகின்றது. தந்தை உங்களை அத்தகைய மலிவான பேரத்தையே பேசச் செய்கின்றார்! இருப்பினும், மாயை உங்களைத் தோற்கடித்து உங்களை ஓடச் செய்கின்றாள். மாயையின் ஐந்து விகாரங்களே உங்களை தோற்கடிக்கின்றன. ஐந்து விகாரங்களும் உள்ளவர்கள் அசுர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். மக்கள் ஆலயங்களில் தேவியரின் விக்கிரகங்களின் முன்னிலையில் சென்று அவர்களின் புகழைப் பாடுகின்றார்கள்: நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள்….. தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள், அதன்பின்னர் 63 பிறவிகளுக்குப் பூஜிப்பவர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை உங்களைப் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகின்றார், ஆனால் இராவணன் உங்களைப் பூஜிப்பவர்கள்; ஆக்குகின்றான். இவ் விடயங்கள் சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. தந்தை எந்தச் சமயநூலையும் கற்கவில்லை. அவர் ஞானக்கடல் ஆவார். அவர் உலக சர்வசக்திவான் ஆவார். சர்வசக்திவான் என்றால் சகல சக்திகளும் நிறைந்தவர் என்று அர்த்தமாகும். தந்தை கூறுகின்றார்: எனக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தும் தெரியும். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகும். எனக்கு அவ்விடயங்கள் அனைத்தும் தெரியும். நீங்கள் துவாபரயுகத்திலே பூஜிப்பவர்கள்; ஆகினீர்கள். சத்திய, திரேதா யுகங்களில் வழிபாடு இடம்பெறுவதில்லை. அது பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களின் வம்சமாகும். அதன் பின்னர், பூஜிப்பவர்களின் வம்சம் உள்ளது. இந்நேரத்தில் அனைவருமே பூஜிப்பவர்கள் ஆவார்கள். எவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. தந்தை வந்து, உங்களுக்கு 84 பிறவிகளின் கதையைக் கூறுகின்றார். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களையும் பூஜிப்பவர்களையும் பற்றிய நாடகம் உங்களை அடிப்படையாகக் கொண்டதேயாகும். மக்கள் இந்துசமயத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். உண்மையில், பாரதத்தில் ஆதிசனாதன தேவதேவியரின் தர்மமே இருந்தது, இந்துசமயம் இருக்கவில்லை. பல விடயங்கள் விளங்கப்படுத்தப்பட வேண்டும். இக் கல்வி ஒரு விநாடிக்கானதாகும். இருப்பினும் அதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது. ‘கடலை மையாக்கினாலும், காட்டை எழுதுகோல்களாக ஆக்கினாலும் இந்த ஞானத்திற்கு ஒரு முடிவு இருக்க முடியாது’ எனக் கூறப்படுகின்றது. நான் இறுதிவரை உங்களுக்கு இந்த ஞானத்தைத் தொடர்ந்தும் கூறுவேன். நீங்கள் இதனைக் கொண்டு எத்தனை புத்தகங்களை ஆக்குவீர்கள்? ஆரம்ப காலத்தில், பாபா அதிகாலையில் விழித்தெழுந்து எழுதுவார், பின்னர் மம்மா அதனை வாசிப்பார். அப்பொழுதிலிருந்து அவை அச்சடிக்கப்படுகின்றன. அதிகளவு தாள்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கீதை சின்னஞ்சிறியதாகும். அவர்கள் கீதையை பேழையாகக் கூட செய்கின்றார்கள். கீதை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது, ஆனால் அவர்கள் ஞானத்தை அருள்பவரான, கீதையின் கடவுளை மறந்து விட்டார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. விகாரங்களை ஞான வாளினால் வெற்றி கொள்ளுங்கள். ஞான சம்ஸ்காரங்களினால் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். பழைய உலகத்தையும், உங்கள் பழைய சரீரத்தையும் துறந்து விடுங்கள்.
  2. பாக்கியசாலிகளாக இருக்கின்ற சந்தோஷத்தைப் பேணுங்கள். எதனையிட்டும் கவலைப்படாதீர்கள். ஒருவர் தனது சரீரத்தை நீங்கிச் செல்லும் பொழுது கூட, துன்பக் கண்ணீர் சிந்தாதீர்கள்.

ஆசீர்வாதம்:

உங்களுடைய கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் எப்பொழுதும் உங்களுடனேயே வைத்திருக்கும் ஒரு நிலையான, இயல்பான யோகி ஆகுவீர்களாக.

தற்போதைய நேரத்தில், குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் தந்தையிடமிருந்து ஒரு கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் பெற்றிருக்கிறீர்கள். இப்போதைய கிரீடமும் சிம்மானமும் எதிர்காலத்திற்கு, பல பிறவிகளுக்கு ஒரு கிரீடத்தையும் சிம்மாசனத்தையும் பெற உதவுகிறது. நீங்கள் சதா உலக மாற்றத்திற்காக பொறுப்பெடுத்தல் என்ற உங்களுடைய கிரீடத்தையும், பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தையும் உங்களுடனேயே வைத்திருந்தால், நீங்கள் நிலையான, இயல்பான யோகி ஆகுவீர்கள். அதன் பின்னர் எந்த முயற்சியும் எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு இடமிருக்க மாட்டாது, ஏனெனில், முதலில் நீங்கள் நெருக்கமான உறவுமுறையில் இருக்கிறீர்கள், இரண்டாவது உங்கள் பேறுகள் அளவற்றவையாகும். பேறுகள் எங்கிருக்கின்றதோ, அங்கே இயல்பான நினைவும் இருக்கும்.

சுலோகம்:

தெளிவான புத்தியினால் உங்கள் திட்டங்களை நடைமுறையில் இடுவதிலேயே வெற்றி அமிழ்ந்துள்ளது.


---ஓம் சாந்தி---