21.11.23 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஒரு விநாடியில் முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெறுவதற்கு, “மன்மனாபவ”வாகவும், “மத்தியாஜிபவ”வாகவும் ஆகுங்கள். தந்தையை மிகச்சரியாக இனங்கண்டு கொள்ளுங்கள். தந்தையை நினைவுசெய்து, அவரது அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்.
பாடல்:
எப் போதையின் அடிப்படையில், உங்களால் தந்தையைக் காண்பிக்க (வெளிப்படுத்த) முடியும்?பதில்:
நாங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள், அவரே எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையைக் கொண்டிருங்கள். நாங்கள் மனிதர்கள் அனைவருக்கும் உண்மையான பாதையைக் காட்ட வேண்டும். இப்பொழுது நாங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றோம். நாங்கள் எங்களது இராஜரீகமான நடத்தை மூலம் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும். அனைவருக்கும் தந்தையின் புகழையும், கிருஷ்ணரின் புகழையும் கூறுங்கள்.பாடல்:
நாளைய பாக்கியம் நீங்களே.ஓம் சாந்தி.
இப்பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகப் பாடப்;பட்டது. எவ்வாறாயினும், “உலகின் பாக்கியம்” என்பதன் அர்த்தத்தை பாரத மக்கள் அறியார்கள். அது முழு உலகமும் பற்றிய கேள்வி ஆகும். முழு உலகினதும் பாக்கியத்தை மாற்றவோ அல்லது அதனை நரகத்திலிருந்து சுவர்க்கமாக மாற்றவோ எந்த மனிதராலுமே முடியாது. இப்புகழ் ஒரு மனிதருக்கு உரியதல்ல. இது கிருஷ்ணருக்குக் கூறப்பட்டிருந்தால், எவராலும் அவரை இகழ்ந்திருக்க முடியாது. எவ்வாறு கிருஷ்ணர் நான்காம் பிறைச் சந்திரனைப் பார்த்ததால் இகழப்பட்டார் என்பதை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. உண்மையில், கிருஷ்ணரையோ, கீதையின் கடவுளையோ ஒருபொழுதும் இகழ முடியாது. பிரம்மாவே இகழப்படுகின்றார். கிருஷ்ணர் பெண்களைக் கடத்தியதாகக் கூறப்பட்டதன் மூலமே இகழப்படுகின்றார். சிவபாபாவைப் பற்றி எவருமே அறியார். மக்கள் நிச்சயமாகக் கடவுளின் பின்னால் செல்கின்றார்கள். ஆனால் கடவுளை ஒருபொழுதுமே இகழ முடியாது. கடவுளையோ, கிருஷ்ணரையோ இகழ முடியாது. இருவரது புகழும் மிகவும் சக்திவாய்ந்தது. கிருஷ்ணரின் புகழ் முதலாம் இலக்கத்திற்கு உரியது. இலக்ஷ்மியும், நாராயணனும் திருமணமானவர்கள் என்பதனால் அவர்களுக்கு அந்தளவு புகழ் இல்லை. கிருஷ்ணர் ஒரு குமார்; இதனாலேயே அவருக்கு அதிகளவு புகழ் கிடைக்கின்றது. அவர்கள் இலக்ஷ்மிக்கும் நாராயணனுக்கும் 16 சுவர்க்கக் கலைகளும் முழுமையாக நிறைந்தவர்கள் என்றும், முற்றிலும் விகாரமற்றவர்கள் என்றும் அதே புகழையே பாடுகின்றார்கள், ஆனால் அவர்கள் கிருஷ்ணரைத் துவாபர யுகத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள். அப்புகழ் ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்வதாக அவர்கள் நினைக்கின்றனர். குழந்தைகளான நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். இது இறை ஞானம், கடவுளே இராம (கடவுள்) இராச்சியத்தை ஸ்தாபித்தார். இராமரின் (கடவுள்) இராச்சியம் என்றால் என்ன என்பதை மனிதர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். தந்தை வந்து, இதன் விளக்கத்தைக் கொடுக்கின்றார். அனைத்தும் கீதையிலேயே தங்கியுள்ளது. கீதையில் தவறான விடயங்களே எழுதப்பட்டிருக்கின்றன. கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெறவில்லை, எனவே, அர்ஜுனன் பற்றிய கேள்வியே எழ மாட்டாது. தந்தை இங்கிருந்தவாறு, இப்பாடசாலையில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். யுத்த களம் ஒன்றில் பாடசாலை இருக்க மாட்டாது. ஆம், இராவணனாகிய மாயையுடனான இந்த யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். நீங்கள் மாயையை வென்றவர்களாகவும், உலகை வென்றவர்களாகவும் ஆகவேண்டும். எவ்வாறாயினும், மக்கள் இவ்விடயங்களைச் சிறிதளவு கூட புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தாமதமாகவே வந்து புரிந்துகொள்ள வேண்டும் என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே இவ்விடயங்களை அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். பீஷ்ம பிதாமகர் போன்றோரை நோக்கி வன்முறை அம்பு எய்தல் போன்ற கேள்விக்கே இடமில்லை. சமயநூல்களில் அத்தகைய பல விடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தாய்மாராகிய நீங்கள் அம்மக்களிடம் சென்று, சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: இதனுடன் தொடர்புள்ள விடயங்களைப் பற்றி நாங்கள் உங்களுடன் பேச வேண்டும். கடவுளே கீதையை உரைத்தார். அது கடவுளின் புகழாகும். கிருஷ்ணர் வேறானவர். நாங்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. இது தனது உருத்திர ஞான யாகம் என உருத்திரரான, கடவுள் சிவன் கூறுகின்றார். இது அசரீரியான பரமதந்தை, பரமாத்மாவின் ஞான யாகமாகும். மனிதர்கள் பின்னர் கூறுகின்றனர்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார், ஆனால் உண்மையில் ஒரேயொருவரையே கடவுள் என அழைக்க முடியும். நீங்கள் அவரது புகழையும், பின்னர் கிருஷ்ணரின் புகழையும் எழுத வேண்டும். இப்பொழுது, அவ்விருவரில், கீதையின் கடவுள் யார்? கீதையில் “இலகு இராஜயோகம்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருங்கள். உங்கள் சரீரங்களினதும், உங்கள் சரீர உறவுகள் அனைத்தினதும் உணர்வைத் துறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். மன்மனாபவ! மத்தியாஜிபவ! தந்தை அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். கீதையானது கடவுளால் பேசப்பட்ட ஸ்ரீமத்தைக் கொண்டது. ஸ்ரீ என்றால், அதி மேன்மையானது என்பதால். இது பரமதந்தை, பரமாத்மாவாகிய சிவனுக்கே பொருந்தும். கிருஷ்ணர் தெய்வீகப் பண்புகளைக் கொண்ட மனிதர். சிவனே கீதையின் கடவுளும், இராஜயோகத்தைக் கற்பித்தவரும் ஆவார். இறுதியில், நிச்சயமாக ஏனைய சமயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சத்திய யுகத்தில், ஒரேயொரு ஆதி சனாதன தேவ தர்மம் மாத்திரமே இருந்தது. கிருஷ்ணரன்றி, கடவுளே அதனை ஸ்தாபித்தார். இப்புகழ் கடவுளுக்குரியதாகும். அவர் தாயும் தந்தையுமானவர் என அழைக்கப்படுகின்றார். கிருஷ்ணரை இவ்வாறு அழைக்க முடியாது. நீங்கள் உண்மையான தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். கடவுள் மாத்திரமே விடுதலை அளிப்பவரும், வழிகாட்டியும், அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்பவரும் என்பதனை நீங்கள் விளங்கப்படுத்தலாம். ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போன்று அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வது சிவனின் பணியேயாகும். ‘பரம்’ என்ற வார்த்தையும் மிகவும் சிறந்தது. எனவே, பரமதந்தை, பரமாத்மாவாகிய சிவனின் புகழ் கிருஷ்ணரின் புகழிலிருந்து வேறுபட்டது என்பதனை நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இதனை நிரூபித்து, இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கப்படுத்த வேண்டும். சிவன் பிறப்பு, மறுபிறப்புச் சக்கரத்திற்குள் வருவதில்லை. அவரே தூய்மையாக்குபவர், ஆனால் கிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளையும் எடுக்கின்றார். இப்பொழுது, யாரைப் பரமாத்மா என அழைக்க முடியும்? நீங்கள் இதனையும் எழுத வேண்டும்: எல்லையற்ற தந்தையை அறியாததனால், நீங்கள் சந்தோஷமற்ற, அநாதைகளாகி விட்டீர்கள். சத்திய யுகத்தில், நீங்கள் பிரபுவும், அதிபதியுமானவருக்கு உரியவராகும்பொழுது, நிச்சயமாகச் சந்தோஷமாக இருப்பீர்கள். வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து, உங்களது ஆஸ்தியாகிய ஜீவன்முக்தியை ஒரு விநாடியில் பெற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுதும் கூட சிவபாபா இதனையே கூறுகின்றார். சிவனுக்கு வந்தனங்கள். அவரது முழுப் புகழும் எழுதப்பட வேண்டும். அவரிடமிருந்தே நீங்கள் உங்களது சுவர்க்க ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். உலகச் சக்கரத்தைப் புரிந்துகொள்வதனால். நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவீர்கள். இப்பொழுது, எது சரியெனத் தீர்மானியுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் சந்நியாசிகளின் ஆச்சிரமங்களுக்குச் சென்று, அவர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும், ஏனெனில், அவர்கள் ஒன்றுகூடலில் இருக்கும்பொழுது, பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றார்கள். மக்களுக்கு எவ்வாறு உண்மையான பாதையைக் காட்டலாம் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். கடவுள் பேசுகின்றார்: நான் அந்தச் சாதுக்களையும், புனிதர்களையும் ஈடேற்றுகின்றேன். ‘விடுதலையளிப்பவர்’ என்ற வார்த்தையும் உள்ளது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: எனக்குரியவர்கள் ஆகுங்கள். “தந்தை மகனை வெளிக்காட்டுகின்றார்!” பின்னர், மகன் தந்தையை வெளிக்காட்டுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணரைத் தந்தை என அழைக்க முடியாது. அனைவரும் தந்தையாகிய கடவுளின் குழந்தைகளாக இருக்க முடியும்; அவர்கள் அனைவரும் ஒரு மனிதரின் குழந்தைகளாக இருக்க முடியாது. எனவே, நாங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, குழந்தைகளான நீங்கள் பெரும் போதையைக் கொண்டிருக்க வேண்டும். அரசரின் மகனாக இருக்கின்ற ஓர் இளவரசரின் நடத்தையைப் பாருங்கள்! அது மிகவும் இராஜரீகமானது. எவ்வாறாயினும், பாரத மக்கள் இந்த அப்பாவியை (ஸ்ரீ கிருஷ்ணர்) இகழ்ந்துள்ளார்கள். அவர்கள் கூறுகின்றனர்: நீங்களும் பாரதவாசிகளே. அவர்களிடம் கூறுங்கள்: ஆம், அப்படித்தான், ஆனால் நாங்கள் சங்கம யுகத்தில் இருக்கின்றோம். நாங்கள் கடவுளின் குழந்தைகளாகி, அவரிடம் கற்கின்றோம். கடவுள் பேசுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். கிருஷ்ணர் இவ்வாறு கூறுவது சாத்தியமல்ல. அவர்கள் இதனைப் பின்னர் புரிந்துகொள்வார்கள். ஜனக மன்னரும் ஒரு சமிக்ஞை மூலமாக அனைத்தையும் புரிந்துகொண்டார். அவர் பரமதந்தை, பரமாத்மாவை நினைவுசெய்து, திரான்ஸில் சென்றார். பலர் தொடர்ந்தும் திரான்ஸில் செல்கின்றார்கள். திரான்ஸில் அவர்கள் அசரீரி உலகத்தையும், வைகுந்தத்தையும் பார்க்கின்றனர். நீங்கள் அசரீரி உலகவாசிகள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் உங்களது பாகங்களை நடிப்பதற்காகப் பரந்தாமத்திலிருந்து கீழிறங்கி வருகின்றீர்கள். விநாசம் முன்னாலேயே உள்ளது. விஞ்ஞானிகள் சந்திரனுக்குச் செல்வதற்காகத் தொடர்ந்தும் பிரயத்தனம் செய்கின்றார்கள். அவர்களின் விஞ்ஞானத்தின் உச்சக்கட்ட அகங்காரத்தினால் தங்கள் சொந்த அழிவை ஏற்படுத்திக் கொள்வார்கள். உண்மையில், சந்திரனில் எதுவுமே கிடையாது. இவ்விடயங்கள் மிகவும் சிறந்தவை, ஆனால் நீங்கள் அவற்றைத் திறமையான முறையில் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அதிமேலான தந்தையே இக்கற்பித்தல்களை எங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே உங்கள் தந்தையுமாவார். அவரது புகழ் கிருஷ்ணரது புகழிலிருந்து வேறுபட்டது. இதுவே அழிவற்ற உருத்திர ஞான யாகம், இதில் அனைத்துமே அர்ப்பணிக்கப்பட உள்ளது. இக்கருத்துக்கள் மிகவும் சிறந்தவை, எனினும் இதற்குக் காலம் எடுக்கும். ஒன்று ஆன்மீக யாத்திரை, மற்றையது பௌதீக யாத்திரை என்ற இந்தக் கருத்தும் மிகவும் சிறந்தது. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்களது இறுதி எண்ணங்களே உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். ஆன்மீகத் தந்தையைத் தவிர, வேறு எவராலுமே இவ்விடயங்களை உங்களுக்குக் கற்பிக்க முடியாது. நீங்கள் அத்தகைய கருத்துக்களை எழுத வேண்டும்: மன்மனாபவ! மத்தியாஜிபவ! இந்த யாத்திரை முக்திக்கும், ஜீவன்முக்திக்கும் உரியது. தந்தையால் மாத்திரமே உங்களை இந்த யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முடியும். கிருஷ்ணரால் இதனைச் செய்ய முடியாது. நீங்கள் நினைவுசெய்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமான நினைவைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் சந்தோஷம் இருக்கும். எவ்வாறாயினும், நினைவில் இருப்பதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்பிற்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். நீங்கள் அனைவரும் சேவை செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், மேன்மையான சேவையும் இருக்கின்றது, தாழ்ந்த சேவையும் இருக்கின்றது. தந்தையின் அறிமுகத்தை ஒருவருக்குக் கொடுப்பது மிக இலகுவானது. அச்சா. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.
இரவு வகுப்பு
புத்துணர்;ச்சி பெறும்பொருட்டு, மக்கள் சுத்தமான காற்றைப் பெற மலைகளுக்குச் செல்கின்றார்கள். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கும்பொழுது, அவர்கள் தங்களது கடமைகளை நினைக்கின்றார்கள். வெளியில் செல்வதன் மூலம், அவர்கள் தங்களது அலுவலக எண்ணங்களிலிருந்து விடுபடுகின்றார்கள். குழந்தைகளும் புத்துணர்ச்சி பெறுவதற்காகவே இங்கே வருகின்றார்கள். நீங்கள் அரைக் கல்பமாகப் பக்தி செய்ததனால் களைப்படைந்து விட்டீர்கள். இந்த மங்களகரமான சங்கம யுகத்தில் நீங்கள் ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இந்த ஞானத்தின் மூலமாகவும், யோகத்தின் மூலமாகவும் நீங்கள் புத்துணர்ச்சி பெறுகின்றீர்கள். பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்படவுள்ளது என்பதனையும், புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதனையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பிரளயம் என்பதே கிடையாது. உலகம் முழுமையாக அழிக்கப்படும் என அம்மக்கள் நினைக்கின்றனர், ஆனால்; அது அவ்வாறில்லை; அது மாற்றமே அடைகின்றது. இது பழைய உலகமாகிய, நரகமாகும். பழைய உலகம் என்றால் என்ன, புதிய உலகம் என்றால் என்ன என்பதனை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இது உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. விபரங்கள் அனைத்தும் உங்கள் புத்தியில் உள்ளது. ஆனால் அதுவும் உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகவே உள்ளது. விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குப் பெருமளவு தெளிவு இருக்க வேண்டும். நீங்கள் விளங்கப்படுத்துவது மற்றவர்களின் புத்தியில் உடனடியாகவே பதிகின்ற வழியில் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். சில குழந்தைகள் பலவீனமானவர்கள் என்பதால், முன்னேறிச் செல்லும்பொழுது, நின்று விடுகின்றார்கள். கடவுளின் வாசகங்களும் உள்ளன: அவர்கள் அதிசயிக்கின்றார்கள், அவர்கள் ஞானத்தைச் செவிமடுக்கின்றார்கள். மற்றவர்களுக்கும் இந்த ஞானத்தைப் பற்றிக் கூறுகின்றார்கள்..... இங்கே மாயையுடன் ஒரு யுத்தம் நிகழ்கின்றது. அவர்கள் மாயைக்கு மரணித்து, கடவுளுக்குரியவர்கள் ஆகுகின்றார்கள். அதன்பின்னர் அவர்கள் கடவுளிடமிருந்து மரணித்து, மாயைக்கு உரியவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் தத்தெடுக்கப்பட்ட பின்னர், அவரை விட்டு நீங்குகின்றார்கள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். அவள் பலருக்கும் புயல்களைக் கொண்டு வருகின்றாள். வெற்றியும், தோல்வியும் உள்ளன என்பதனையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இவ் விளையாட்டு வெற்றியையும், தோல்வியையும் கொண்டது. நாங்கள் ஐந்து விகாரங்களினால் தோற்கடிக்கப்படுகின்றோம். அவற்றை வெற்றி கொள்வதற்காகவே நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். இறுதியில், வெற்றி உங்களுக்கே.. நீங்கள் தந்தைக்குரியவர்கள் என்பதால், உறுதியானவர்களாக வேண்டும். மாயை உங்களுக்கு எந்தளவிற்குத் தூண்டல்களைக் கொடுக்கின்றாள் என்பதனையும் நீங்கள் பார்க்கலாம். சிலர் திரான்ஸில் செல்வதாலும் அநேக விளையாட்டுக்கள் முடிவடைந்து விடுகின்றன. நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளின் சக்கரத்;தைப் பூர்த்தி செய்து விட்டீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் உள்ளது. நீங்கள் தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகி, இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகி விட்டீர்கள். நீங்கள் பிராமணர்களாகி, பின்னர் தேவர்கள் ஆகுகின்றீர்கள். இதனை நீங்கள் மறந்து விடக்கூடாது. நீங்கள் இதனை மறந்தால், பின்னோக்கிச் செல்வீர்கள், உங்கள் புத்தியும் லௌகீக விடயங்களில் ஈடுபடுகின்றது. பின்னர் உங்களால் முரளி போன்றவற்றைக் கூட நினைவுசெய்ய முடியாதிருக்கும். நீங்கள் நினைவு யாத்திரையைச் சிரமமானதாக அனுபவம் செய்கின்றீர்கள். இது ஓர் அற்புதம்! சில குழந்தைகள் பட்ஜை அணிவதற்குக் கூட வெட்கப்படுகின்றார்கள். இதுவும் சரீர உணர்வு, இல்லையா? நீங்கள் அவதூறுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்குப் பல அவதூறுகள் கிடைத்தன. அதி;கூடிய அவதூறுகள் சிவபாபாவிற்கும், பின்னர் கிருஷ்ணருக்கும் கிடைத்தன, பின்னர் இராமருக்கு அதிகூடிய அவதூறுகள் கிடைத்தன. அது வரிசைக்கிரமமானது. இந்த அவதூறுகளால் பாரதம் பெருமளவில் இகழப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் அதனையிட்டுப் பயப்படக்கூடாது. அச்சா.
இனிமையிலும், இனிமையான, அன்பிற்கினிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அன்பும், நினைவும், இரவு வந்தனங்களும்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியை எல்லையற்ற துறவறத்தைக் கொண்டிருக்குமாறு செய்து, சதா இந்த ஆன்மீக யாத்திரையில் நிலைத்திருங்கள். நினைவில் நிலைத்திருக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.2. “தந்தை மகனை வெளிக்காட்டுகின்றார்”. “மகன் தந்தையை வெளிக்காட்டுகின்றார்”. தந்தையின் உண்மையான அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள். ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுவதற்கான பாதையை அனைவருக்கும் காண்பியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய எண்ணங்களும், வார்த்தைகளும் இணைந்து சேவை செய்கின்ற புதுமையினாலும், சிறப்பியல்பினாலும் நிறைந்தவர் ஆகுவதால், மந்திர வித்தையைப் புரிவீர்களாக.எண்ணங்களினதும், வார்த்தைகளினதும் இணைப்பானது ஒரு மந்திர வித்தை போல் செயற்படுகின்றது. இதனை நீங்கள் செய்கின்றபொழுது, ஓர் ஒன்றுகூடலில் உள்ள அற்ப விடயங்கள் அனைத்தும் ஒரு மந்திர வித்தை என்று நீங்கள் எண்ணும் அத்தகைய வகையில் முடிவடைந்து விடும். அனைவருக்குமான தூய எண்ணங்களையும், ஆசீர்வாதங்களையும் கொண்டிருப்பதில் உங்கள் மனம் மும்முரமாக இருக்கும்பொழுது, மனக் குழப்பங்கள் எதுவும் முடிவடைந்து விடுவதுடன், உங்கள் முயற்சிகளில் என்றுமே ஏமாற்றமடையவும் மாட்டீர்கள். நீங்கள் ஓர் ஒன்றுகூடலில் என்றுமே பயப்பட மாட்டீர்கள். உங்கள் எண்ணங்களினதும், வார்த்தைகளினதும் இணைந்த செயற்பாட்டினால், சேவையில் ஒரு விரைவான வேகத்தின் அத்தகைய தாக்கம் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, சேவை செய்வதில் இந்தப் புதுமையினாலும், சிறப்பியல்பினாலும் நிறைந்தவர் ஆகுங்கள், அப்பொழுது 900,000 பேர் இலகுவாகத் தயாராகி விடுவார்கள்.
சுலோகம்:
நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாகும்பொழுது, உங்கள் புத்தி மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கும்.மாதேஷ்வரிஜியின் இனிய, மேன்மையான வாசகங்கள்
இந்தக் கலியுகத்து சுவையற்ற உலகிலிருந்து சாராம்சம் நிறைந்த, சத்திய யுகத்து உலகிற்குச் செல்வது யாருடைய கடமை?
இந்தக் கலியுகத்து உலகம் ஏன் சாராம்சம் எதுவுமற்ற உலகம் என அழைக்கப்படுகிறது? ஏனெனில் இவ்வுலகில் சாராம்சம் இல்லை, அதாவது, எதிலும் பலம் எதுவும் எஞ்சியிருப்பதில்லை; சந்தோஷமோ, அமைதியோ அல்லது தூய்மையோ இருப்பதில்லை. ஒரு காலத்தில், இவ்வுலகில் சந்தோஷமும், அமைதியும், தூய்மையும் இருந்தன, அந்தப் பலம் எதுவும் இப்பொழுது இல்லை, ஏனெனில் இவ்வுலகில் ஐந்து விகாரங்கள் உள்ளன. ஆகவே, இவ்வுலகம் பயத்தின் கடலாக உள்ளது, இதனாலேயே அது கர்ம பந்தனங்களின் கடல் என அழைக்கப்படுகின்றது, இதனாலேயே மக்கள் சந்தோஷமற்றுள்ளதுடன், கடவுளைக் கூவியழைக்கின்றார்கள்: கடவுளே, இந்தக் கடலிலிருந்து எங்களை அப்பால் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாகப் பயமற்ற ஓர் உலகம் இருந்திருக்க வேண்டும் என்பதையும், அந்தப் பயமற்ற உலகிற்கே அவர்கள் செல்ல விரும்புகின்றனர் என்பதையுமே இது காட்டுகின்றது. இதனாலேயே இவ்வுலகம் பாவக் கடல் என அழைக்கப்படுகின்றது, அவர்கள் புண்ணியாத்மாக்களின் உலகைச் சென்றடைய விரும்புகின்றனர். இரு உலகங்கள் உள்ளன: ஒன்று சாராம்சம் உள்ள, சத்திய யுகத்து உலகமும், மற்றையது சுவையற்ற, இந்தக் கலியுகத்து உலகமும் ஆகும். இப்பூமியிலேயே இரு உலகங்களும் உள்ளன. அச்சா.