22.03.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    14.12.85     Om Shanti     Madhuban


தற்போதைய வாழ்க்கையே எதிர்காலத்தின் கண்ணாடியாகும். அவ்யக்த பாப்தாதா மதுவன வாசிகளை சந்திக்கின்றார்.


இன்று, உலக படைப்பாளியான தந்தை தனது மாஸ்டர் படைப்பாளி குழந்தைகளைப் பார்க்கின்றார். மாஸ்டர் படைப்பாளிகளான குழந்தைகள் எந்தளவிற்கு தாம் படைப்பாளிகள் என்ற விழிப்புணர்வை பேணுகிறார்கள் எனப் பார்க்கின்றார். படைப்பாளிகளான உங்கள் அனைவரதும் விசேடமான முதல் படைப்பு உங்கள் சரீரங்கள் ஆகும். நீங்கள் எந்தளவிற்கு அந்த படைப்பான சரீரங்களின் படைப்பாளிகள் ஆகியுள்ளீர்கள்? படைப்பான சரீரம் சிலவேளைகளில் படைப்பாளியான உங்களை தன்பால் கவர்ந்து, படைப்பாளியான உங்களையே மறக்கச் செய்கின்றதா? ஒரு மாஸ்டராக, உங்கள் படைப்பான இதனை நீங்கள் தொடர்ந்தும் சேவைக்காக பயன்படுத்துகிறீர்களா? ஒரு மாஸ்டராக, நீங்கள் விரும்பியவாறு, விரும்பிய நேரத்தில் பயன்படுத்த உங்களால் செய்ய முடிகின்றதா? அனைத்திற்கும் முதலில், அந்த சரீரத்தின் அதிபதி என்ற பயிற்சியை நீங்கள் செய்யும் போது, அது உங்களை சடப்பொருளின் அதிபதிகளாகவும், உலக அதிபதிகளாகவும் ஆக்குகின்றது. உங்கள் சரீரத்தின் அதிபதிகளாக இருப்பதில் உங்களால் முழுமையாக வெற்றியீட்ட முடியாது விட்டால், உலக அதிபதிகள் ஆகவேண்டிய நேரத்தில், உங்களால் சம்பூர்ணம் அடைய முடியாது. தற்போதைய வாழ்க்கையே எதிர்காலத்தின் கண்ணாடியாகும். இந்த கண்ணாடியினூடாக, உங்களால் மிகத் தெளிவாக உங்கள் எதிர்காலத்தை உங்களால் பார்க்க முடியும். முதலில் அந்த சரீரத்தின் உறவுமுறைகள் மற்றும் சம்ஸ்காரங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் சகல உரிமையின் மூலமே நீங்கள் அதன் அதிபதி என்பதற்கான சம்ஸ்காரங்களை உருவாக்குகிறீர்கள். உங்;கள் உறவுமுறைகளில் அன்பாகவும் பற்றற்றும் இருப்பதுவே அதிபதியாக இருப்பதன் அடையாளமாகும். பணிவைக் கொண்டிருப்பதும், உங்கள் சம்ஸ்காரங்களை கட்டியெழுப்புதல் என்ற இரண்டும் அதிபதியாக இருப்பதன் அடையாளங்கள் ஆகும். அத்துடன், நீங்கள் அன்பாகவும் இருக்க வேண்டும். ஆத்மாக்கள் அனைவரது தொடர்பிலும் வரும் போது, அவர்கள் அனைவரது இதயத்திலிருந்தும் உங்களுக்கான அன்பான ஆசீர்வாதங்கள் அதாவது நல்லாசிகள் வெளிப்படட்டும். உங்களுக்கு தெரிந்தவர் அல்லது தெரியாதவர், மிக நெருக்கமான உறவுமுறையில் இருப்பவர் அல்லது சாதாரணமான தொடர்பில் இருப்பவரென உங்களை பார்ப்பவர்கள் யாராக இருப்பினும், அன்பின் காரணமாக நீங்கள் அவருக்கு உரி;யவர் என்ற அனுபவத்தை அவர்கள் பெறட்டும். அன்பின் இனங்காணுதலுடன் தாம் உரிமையுடையவர்கள் என உணரட்டும். தூரத்து உறவுமுறையாயினும், அன்பு நிறைவாக இருப்பதன் அனுபவத்தைக் கொடுக்கும். உலக அதிபதிகள் மற்றும் தமது சரீரங்களின் அதிபதிகள் என்பதனை பயிற்சி செய்கின்ற ஆத்மாக்களிடம் மக்கள் இந்த சிறப்பியல்புகளை அனுபவம் செய்வார்கள். அத்தகைய ஆத்மாக்களின் தொடர்பில் எவர் வந்தாலும், அந்த ஆத்மாவை அவர்கள் ஒரு தானியாக அனுபவம் செய்வார்கள். இந்த ஆத்மா பெற்றுக் கொள்கின்ற ஒருவர் என எவரது மனதிற்கும் எட்ட மாட்டாது. பிறர் அந்த ஆத்மாவிடமிருந்து ஒரு தானியாக, சந்தோஷம், அமைதி, அன்பு, பேரானந்தம், மகிழ்ச்சி, ஒத்துழைப்பு, தைரியம், உற்சாகம் என ஏதாயினும் ஒரு சிறப்பியல்பையே அனுபவம் செய்வார்கள். அந்த ஆத்மா ஒரு எல்லையற்ற புத்தியையும் எல்லையற்ற இதயத்தையும் கொண்டிருக்கின்றார் என்றே உணர்வார்கள். இதனையே நீங்கள் பரந்த இதயம் கொண்டிருத்தல் என அழைக்கின்றீர்கள். இப்பொழுது, இந்த சிறப்பியல்புகளின் அடிப்படையில் நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என்பதை காண்பதற்கான சோதனையை செய்யுங்கள். உங்கள் அனைவரிடத்திலும் ஒரு கண்ணாடி உள்ளது, அப்படித்தானே? உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்கும் அளவில் வேறு எவரும் உங்களைப் பற்றி அறிந்திருக்க முடியாது. எனவே, உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அச்சா.

இன்று, பாபா உங்களை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார். இருப்பினும், நீங்கள் அனைவரும் வந்திருக்கின்றீர்கள் என்பதால் பாப்தாதாவிற்கு குழந்தைகளாகிய உங்கள் அனைவரின் மீதும் அன்பு உள்ளதுடன் மரியாதையும் உள்ளது என்பதாலேயே பாப்தாதா ஒரு உரையாடலை கொண்டிருந்தார். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் உரிமையை நீங்கள் விட்டு கொடுக்க மாட்டீர்கள், எனவே நீங்கள் நெருக்கமாக அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் கவலையற்றவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள், பல விடயங்களிலிருந்து விடுபட்டிருக்கிறீர்கள். வெளியில் இருப்பவர்கள் இன்னமும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. உண்பதற்காக உழைப்பது என்பது சிறியதோர் முயற்சி அல்ல. மதுவனத்தில், நீங்கள் பணம் உழைக்க வேண்டுமென எவ்வகையான கவலையையும் கொண்டிருக்க வேண்டியதில்லை. தமது குடும்பங்களுடன் வாழ்பவர்கள் சகித்துக் கொள்ளவும், அனைத்தையும் முகங்கொடுக்க வேண்டியுள்ளதையும் பாப்தாதா அறிவார். நாரைகளின் மத்தியில் வாழ்கின்ற அன்னங்கள் தத்தமது முயற்சியினால் முன்னேறுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் இயல்பாகவே பல விடயங்களுக்கு அப்பால் இருக்கிறீர்கள். நீங்கள் சௌகரியமாக வாழ்கிறீர்கள், சௌகரியமாக உண்கிறீர்கள், அத்துடன் ஓய்விலும் இருக்கிறீர்கள். வேலைக்கு செல்பவர்கள் பகலில் ஓய்வெடுக்கிறார்களா? இங்கே, உங்கள் சரீரத்திற்கும் புத்திக்கும் ஓய்வு கிடைக்கின்றது. எனவே, மதுவனத்தில் உள்ளவர்களின் ஸ்திதி முதற்தரமாக உள்ளது. அப்படித்தானே? ஒரேயொரு பணி மட்டுமே உங்களுக்கு உள்ளதாலேயே இது சாத்தியமாக உள்ளது. நீங்கள் கற்பதாக இருந்தாலுமே, தந்தை உங்களை அதனை செய்யச் செய்கின்றார். நீங்கள் சேவை செய்யும் போது, அது யக்ஞத்திற்கான சேவையாகும். இது எல்லையற்ற தந்தையின் எல்லையற்ற சேவை ஆகும். வேறு எதுவுமே அல்லாது, ஒரேயொரு விடயமும், ஒரேயொரு அக்கறையும் மாத்திரமே உள்ளது. நீங்கள் இவ்வாறேனும் சிந்திக்க வேண்டியதில்லை: இது எனது நிலையம். ~எனக்கு இந்த பொறுப்பு உள்ளது|. மதுவன வாசிகள் பல வழிகளில், இலகுவான முயற்சியையும் இலகுவான பேறுகளையும் பெற்றிருப்பவர்கள். அச்சா. மதுவன வாசிகளாகிய நீங்கள் அனைவரும் பொன்விழாவை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிநிரலை தயாரித்திருக்கிறீர்கள். அப்படித்தானே? விழாவிற்கானதல்ல. நீங்கள் அதற்கான துண்டுபிரசுரங்கள் போன்றவற்றை அச்சடித்திருக்கின்றீர்கள். அது உலக சேவைக்கானதாகும். உங்களுக்கான திட்டங்கள் என எதனை வகுத்திருக்கின்றீர்கள். உங்கள் சொந்த மேடையில் என்ன பாகத்தை நடிப்பீர்கள்? அந்த மேடைக்கான சொற்பொழிவாளர்கள், நிகழ்ச்சிகள் உங்களிடம் இருக்கின்றன. உங்கள் சொந்த ஸ்திதிக்கு என்ன நிகழ்ச்சிநிரலை கொண்டிருக்கின்றீர்கள்? ~வீட்டிலேயே புண்ணியம் ஆரம்பமாகின்றது|. மதுவனவாசிகளாகிய நீங்கள் இதனை செய்வீர்கள், அப்படித்தானே? ஒரு விழாவின் போது நீங்கள் செய்வீர்கள்? (மெழுகுவர்த்தி ஏற்றுவோம்) எனவே, பொன்விழாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றப் போவது யார்? அனைத்தையும் ஆரம்பிக்கப் போவது யார்? மதுவன வாசிகள் தைரியம், உற்சாகம், சூழல் அத்துடன் சகல உதவிகளையும் கொண்டிருக்கின்றீர்கள். அனைவரதும் ஒத்துழைப்பு இருக்கும் போது, அனைத்தும் இலகுவாகும். நீங்கள்; ஒரேயொரு விடயத்தை மட்டும் செய்தால் போதும். அது என்ன? அனைவரை இட்டும் பாப்தாதா இந்த ஒரு மேன்மையான நம்பிக்கையை கொண்டிருக்கின்றார், அதாவது அனைவரும் தந்தைக்குச் சமம் ஆக வேண்டும். திருப்தியாகவிருந்து, பிறரையும் திருப்தியடையச் செய்வது ஒரு சிறப்பியல்பாகும். உங்கள் முயற்சியிலும், உங்கள் சுபாவத்திலும், சம்ஸ்காரங்களிலும் உங்களையிட்டு நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா என தந்தையை உங்கள் முன்னிலையில் வைத்திருந்தவாறு, நேர்மையுடன் சோதிப்பதே முதலாவதும் முக்கியதுமான விடயமாகும். ஆம், உங்கள் சொந்த சக்திக்கு ஏற்ப, நீங்கள் திருப்தியாக இருப்பது வேறொரு விடயமாகும். எவ்வாறாயினும், உண்மையான வடிவத்தை பொறுத்தவரையில், தன்னையிட்டு திருப்தியாக இருந்து, பிறரையும் திருப்திபடுத்துவதுமே ஒரு சிறப்பாகும். நீங்கள் உண்மையிலேயே திருப்தியானதொரு ஆத்மா என ஏனையோரும் அனுபவம் செய்யட்டும். அனைத்துமே திருப்தியிலேயே உள்ளடக்கப்படுகின்றது. குழப்பம் அடையாதிருப்பதும், பிறருக்கு குழப்பம் விளைவிக்காமல் இருப்பதுமே திருப்தியாக இருப்பது என அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு குழப்பம் விளைவிப்பதற்கு பலர் இருப்பார்கள், ஆனால் நீங்கள் குழப்பம் அடைய உங்களை அனுமதிக்கக் கூடாது. நீங்கள் தொலைவில் இருந்தவாறு, நெருப்பின் வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பிறரை பார்க்காதீர்கள். உங்களையே பாருங்கள். நான் என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கருவியாகவிருந்து, மற்றவர்களுக்கு நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுவே கிரகிக்க வேண்டிய விசேடமான தெய்வீகக்குணமாகும். இதிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது. இதற்கான பொன்விழாவை நீங்கள் கொண்டாடலாம். உங்களால் கொண்டாட முடியுமா? இதனை பாபா மதுவனத்தை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக கூறினாலும், உண்மையில் பாபா அனைவரையுமே குறிக்கின்றார். பற்றை வென்ற அரசரைப் பற்றிய கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், அப்படித்தானே? திருப்தியையிட்டு அத்தகைய கதையை உருவாக்குங்கள். உங்கள் எவரிடத்திலேனும் எவர் வந்தாலும், அவர் உங்களை எந்தளவிற்கு குறுக்கு கேள்விகளுடன் சோதித்தாலும், அனைவருமே திருப்தியின் சிறப்பியல்பை தமது மனதில் கூறிக் கொள்வதுடன் அதனை அனுபவமும் செய்யட்டும். ~இவர் இவ்வாறானவர்தான்| என்றிருக்கக் கூடாது, ஆனால், ~நான் எவ்வாறு இவ்வாறு ஆகுவதுடன், பிறரையும் இவ்வாறாக ஆக்குவது?| என்றே இருக்க வேண்டும். அவ்வளவே. இந்த ஒரு சிறிய விடயத்தை மேடையில் காண்பியுங்கள். அச்சா.

பாப்தாதா தாதிகளை சந்திக்கின்றார்:
உங்கள் அனைவரதும் இயத்திலுள்ள எண்ணங்கள் பாப்தாதாவை வந்தடைகின்றன. அவை மேன்மையான ஆத்மாக்களாகிய உங்கள் பலரின் மிக மேன்மையான எண்ணங்கள் ஆகும். ஆகையால் நிச்சயமாக அவை நடைமுறையில் சாத்திமாகும். நீங்கள் மிக நல்ல திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள். அந்த திட்டங்களே அனைவரையும் தெளிவடையச் செய்கிறது. முழு உலகிலும், விசேட ஆத்மாக்கள் அனைவரதும் சக்தி ஒன்றாகவே உள்ளது. விசேட ஆத்மாக்கள் நிறைந்த இத்தகையதொரு ஒன்றுகூடல் வேறு எங்கும் இருக்க முடியாது. இந்த ஒன்றுகூடலின் சக்தி விசேடமானதாகும். ஆகையாலேயே அனைவரது பார்வையும் குறிப்பாக இந்த ஒன்றகூடலின் மீதுள்ளது, ஆனால் ஏனைய அனைவரும் தளம்பல் அடைகின்றார்கள். அவர்களின் சிம்மாசனங்கள் ஆட்டம் காண்கின்றன. ஆனால் இந்த இராச்சியத்தின் சிம்மாசனம் உருவாக்கப்படுகின்றது. இங்கே, இது ஒரு குருவின் சிம்மாசனம் அல்ல. இதனாலேயே இது ஆட்டம் காண்பதில்லை. இது சுய-ராச்சியத்தினதும் உலக இராச்சியத்தினதும் சிம்மாசனம் ஆகும். அனைவரும் இதனை அசைக்க முயற்சிப்பார்கள், ஆனால் ஒன்றுகூடலின் சக்தியே இதன் விசேட பாதுகாப்பாகும். சில இடங்களில், ஒற்றுமை இருக்கும் போது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரித்து, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி, அதன் பின்னர் அசைப்பார்கள். இங்கே, ஒன்றுகூடலின் சக்தியினால், உங்களை அவர்களால் அசைக்க முடிவதில்லை. எனவே, எப்பொழுதும் தொடர்ந்தும் இந்த ஒன்றுகூடலின் சக்தி என்ற சிறப்பியல்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்யுங்கள். இந்த ஒன்றகூடலே உங்கள் கோட்டையாகும். இதனாலேயே எவராலும் உங்களை தாக்க முடியாதுள்ளது. வெற்றிக்கான உத்தரவாதம் உள்ளது. அது மீண்டும் ஒருமுறை இடம்பெறவே வேண்டும். அதனை மீண்டும் இடம்பெறச் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பவர்கள், வெற்றியாளர்கள் ஆகுவதுடன் மேடையில் பிரபல்யமாகவும் உள்ளார்கள். ஒன்றுகூடலின் சக்தியானது வெற்றிக்கான விசேட அடிப்படையாகும். இந்த ஒன்றுகூடலே சேவை வளர்ச்சியடைவதில் உங்களை வெற்றியீட்ட செய்துள்ளது. தாதிகளாகிய நீங்கள் பெற்ற பராமரிப்பிற்கான பிரதிபலனை மிக நன்றாகக் கொடுத்திருக்கிறீர்கள். ஒன்றுகூடலின் சக்திக்கு அடிப்படையாக இருப்பது என்ன? மரியாதையை கொடுப்பது என்றால் மரியாதையை பெறுவதாகும் என்ற பாடத்தில் உறுதியாக இருங்கள். கொடுப்பது என்றால் பெறுவதாகும். பெறுவது என்றால் உண்மையில் பெறுவது அல்ல. பெறுவது என்றால் இழப்பது என்று அர்த்தமாகும். கொடுப்பது என்றால் பெறுவதாகும். ஒருவர் ஒன்றைக் கொடுத்தால் மட்டுமே நீங்கள் கொடுப்பீர்கள் என்பதற்கு இது வியாபாரம் அல்ல. இங்கே, இது தானியாவிருப்பது என்பதற்கான விடயமாகும். ஒரு தானி, பெற்ற பின்னரே கொடுப்பார் என்றில்லை. ஒரு தானி தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டிருப்பார் என்பதாலேயே இந்த ஒன்றுகூடல் வெற்றி அடைகின்றது. எவ்வாறாயினும், கைசங்கிலியானது இப்பொழுது ஆயத்தமாக உள்ளது. மாலை இன்னமும் தயாராகவில்லை. எந்த வளர்ச்சியும் இல்லாதிருந்தால், யாரை நீங்கள் ஆட்சி செய்யப் போகிறீர்கள்? வளர்ச்சியின் பட்டியலில் இப்பொழுது ஏதோ ஒன்று குறைவாக உள்ளது. 900,000 இன்னமும் ஆயத்தமாகவில்லை. அவர்கள் ஏதோ வழியில் ஒருவரையொருவர் சந்திப்பார்கள். சந்திக்க மாட்டார்களா? வழிமுறை தொடர்ந்தும் மாற்றமடையும். முதலில் நீங்கள் பாபாவை சரீர வடிவில் சந்தித்தீர்கள், இப்பொழுது அவரை அவ்யக்த வடிவில் சந்திக்கிறீர்கள். வழிமுறை மாறியுள்ளது, அப்படித்தானே? எதிர்காலத்திலும் வழிமுறை தொடர்ந்தும் மாற்றமடையும். வளர்ச்சிக்கு ஏற்ப, சந்திப்பின் வழிமுறையானது தொடர்ந்தும் மாற்றமடையும். அச்சா.

பாப்தாதா குழுக்களை சந்தித்தல்:
1) தெய்வீகக் குணங்களின் சொரூபமாகவிருப்பதன் மூலம், எப்பொழுதுமே பிறருக்கு தொடர்ந்தும் தானம் செய்யுங்கள். பலவீனமான ஆத்மாக்களுக்கு, சக்திகளின், தெய்வீகக் குணங்களின், ஞானத்தின் தானத்தை செய்தால் நீங்கள் சதா மகாதானி ஆத்மாக்கள் ஆகுவீர்கள். நீங்கள் அருள்பவரின் குழந்தைகளான அருள்பவர்களே அல்லாது பெறுபவர்கள் அல்ல. ~மற்றவர் செய்தால் நான் இதனை செய்வேன்| என நீங்கள் நினைத்தால், அதுவே பெறுவராக இருப்பதாகும். ~நானே இதனை செய்ய வேண்டும்| என நீங்கள் நினைத்தால், அதுவே கொடுப்பவராக இருப்பது என்று அர்த்தமாகும். ஆகையால், பெறுபவராக இருக்காதீர்கள், ஆனால் கொடுப்பவர்களான தேவர்களாக இருங்கள். நீங்கள் பெற்று கொண்டவற்றை தொடர்ந்தும் கொடுங்கள். நீங்கள் எந்தளவிற்கு தொடர்ந்தும் கொடுக்கிறீர்களோ, அந்தளவிற்கு தொடர்ந்தும் அது அதிகரிக்கும். எப்பொழுதும் கொடுப்பவர்களான தேவியராக இருங்கள். அச்சா.

2) நீங்கள் அதிகளவு செவிமடுத்து விட்டீர்கள். நீங்கள் ஏறத்தாழ எந்தளவிற்கு செவிமடுத்திருக்கிறீர்கள் என கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் செவிமடுப்பதும் செய்வதும் ஒரேயளவாக உள்ளதா? அல்லது, நீங்கள் செவிமடுப்பதிலும் செய்வதிலும் வேறுபாடு உள்ளதா? நீங்கள் ஏன் செவிமடுக்கிறீர்கள்? அதனை பின்னர் செய்வதற்கே ஆகும். நீங்கள் செவிமடுப்பதும் செய்வதும் சமமாக இருக்கும் போது என்ன நடக்கும்? நீங்கள் சம்பூரணம் அடைவீர்கள். அப்படித்தானே? எனவே, சம்பூர்ண ஸ்திதியின் முதல் மாதிரியாக இருக்கப் போவது யார்? ஏன் நீங்கள் எவருமே ~நான் அவ்வாறு ஆகுவேன்!| எனக் கூறவில்லை? இதில் முன்னோடியாக இருப்பவரே அர்ஜுனா ஆவீர்கள். தந்தை தன்னை ஒரு கருவியாக ஆக்கியிருப்பதைப் போன்றே, கருவிகள் ஆகுபவர்கள் அர்ஜுனாக்கள் ஆகுகிறார்கள், அவர்கள் முதல் இலக்கத்தை கோருகிறார்கள். அச்சா. யார் அவ்வாறு ஆகுவது எனப் பார்ப்போம். குழந்தைகள் அவ்வாறு ஆகுவதை பார்க்கவே பாப்தாதா விரும்புகிறார். வருடங்கள் கடந்து செல்கின்றன. வருடங்கள் கடந்து செல்வதைப் போன்றே, பழைய வழிமுறைகளும் கடந்து செல்லட்டும். எப்பொழுதும் புதிய உற்சாகமும் புதிய எண்ணங்களும் இருக்கட்டும். இதுசே சம்பூர்ணத்தின் ஓர் அடையாளமாகும். நீங்கள் அனைவரும் பழையவை அனைத்தையும் முடித்துவிட்டீர்கள். இப்பொழுது அனைத்தும் புதிதாக இருக்கட்டும். அச்சா.

கேள்வி:
தந்தைக்கு நெருக்கமாக வருவதற்கு அடிப்படையானது என்ன?

விடை:
சிறப்பியல்புகள் ஆகும். ஏதோ ஒரு சிறப்பியல்பே உங்களை தந்தையிடம் நெருங்கச் செய்துள்ளது. நீங்கள் சேவை செய்வதன் மூலம் இந்த சிறப்பியல்புகள் விருத்தியடைகின்றன. தந்தை எந்தச் சிறப்பியல்புகளினால் உங்களை நிரப்பியுள்ளாரோ, அவை அனைத்தையும் சேவைக்காக பயன்படுத்துங்கள். இந்த சிறப்பியல்புகளை நடைமுறையில் இடுவதிலேயே சேவை என்ற பாடத்திற்கான புள்ளிகளை நீங்கள் பெறுகிறீர்கள். உங்கள் அனுபவங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, அவர்களின் ஆர்வமும் உற்சாகமும் அதிகரிக்கும்.

கேள்வி:
ஆன்மிக குறைபாட்டிற்கான காரணம் என்ன?

விடை:
உங்களையும் நீங்கள் யாருக்கு சேவை செய்கிறீர்களோ, அவர்களையும் உங்கள் பொறுப்பிலுள்ள பெறுமதிமிக்கவர்கள் என நீங்கள் கருதவில்லை. உங்கள் சரீரமும் மற்றும் ஏனையோரும் உங்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன என நீங்கள் கருதினால், நீங்கள் கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருப்பீர்கள், கவர்ச்சியிலிருந்து விடுபட்டிருபட்டிருந்தால் ஆன்மிகம் இருக்கும்.

கேள்வி:
உலகிலுள்ள பெரும்பான்மையான ஆத்மாக்களிடம் இருக்கின்ற இரண்டு விடயங்கள் என்ன?

விடை:
1.பயம் 2. கவலை. குறிப்பாக இந்த இரண்டு விடயங்களும் அனைவரிலும் உள்ளன. எவ்வாறாயினும், அவர்கள் எந்தளவிற்கு கவலையடைந்து அக்கறை கொண்டிருக்கிறார்களோ அந்தளவிற்கு நீங்கள் நல்லாசி கொண்டிருக்கிறீர்கள். கவலை மாற்றமடைந்து, நல்லாசிகள் என்ற உணர்வின் வடிவத்தை எடுத்துள்ளது. பயப்படுவதற்கு பதிலாக, நீங்கள் சந்தோஷ பாடலை பாடிக் கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா அத்தகைய கவலையற்ற சக்கரவர்த்திகளை பார்க்கின்றார்

கேள்வி:
இப்போதைய பருவகாலம் என்ன? அத்தகைய காலத்தில் குழந்தைகளாகிய உங்களுடைய கடமை என்ன?

விடை:
இப்பொழுது, இது அகால மரணத்திற்கான காலமாகும். சடுதியாக வருகின்ற புயல் காற்றைப் போன்றும், கடலில் ஏற்படும் புயலைப் போன்றும் அகால மரணம் என்ற புயல் சடுதியாக ஏற்பட்டு, பலரையும் மிக வலிமையுடன் எடுத்துச் செல்லும். அந்த நேரத்தில், அமரத்துவ சொரூபங்கள் ஆகி, அகால மரணத்தை அனுபவம் செய்யும் ஆத்மாக்களுக்கு, அமைதியினதும், சக்தியினதும் ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்க வேண்டியது குழந்தைகளாகிய உங்களுடைய கடமையாகும். எனவே, சதா நல்லாசிகள் கொண்டிருந்து, உங்கள் மனதினால் நல்லாசிகளையும், சந்தோஷத்தையும் அனைவருக்கும் கொடுக்கின்ற சேவையை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
வளமற்ற நிலத்தில் பலனை அறுவடை செய்யும் திடசங்கற்பத்தைக் கொண்டிருக்கும் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

எந்த சந்தர்ப்பத்திலும், வெற்றி சொரூபங்கள் ஆகுவதற்கு, திடசங்கற்பமும் அன்பான ஒன்றுகூடலும் அவசியமாகும். இந்த திடசங்கற்பம் வளமற்ற நிலைத்திலும் பலனை அறுவடை செய்ய உதகின்றது. விஞ்ஞானிகள் மணலில் பழத்தை பயிரிட முயற்சிப்பதைப் போன்றே, உங்கள் மௌனசக்தியினால், அன்பு என்ற தண்ணீரை நீங்கள் வழங்கி, பலனடையச் செய்யுங்கள். திடசங்கற்பத்தின் மூலம், விரக்தி அடைந்திருப்பவர்களில், உங்களால் நம்பிக்கை விளக்கை ஏற்ற முடியும், ஏனெனில், உங்களுக்கு தைரியம் இருக்கும் போது, நீங்கள் தந்தையின் உதவியை பெறுவீர்கள்.

சுலோகம்:
கடவுளின் பெறுமதிமிக்க சொத்தென உங்களை சதா கருதி தொடர்ந்தும் முன்னேறினால், உங்கள் செயல்களில் ஆன்மிகம் நிலைத்திருக்கும்.