22.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, தந்தை சுவர்க்கத்திற்கான அத்திவாரத்தை இடுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அவரின் உதவியாளர்கள் ஆகுவதுடன் உங்கள் பங்கையும் சேமித்துக் கொள்ள வேண்டும். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி உங்களின் மேன்மையான வெகுமதியை உருவாக்குங்கள்.

கேள்வி:
எந்த வகையான குழந்தைகளை பாப்தாதா எப்பொழுதும் தேடுகின்றார்?

பதில்:
மிக, மிக இனிமையான, குளிர்மையான சுபாவமுள்ள, சேவாதாரிக் குழந்தைகளைத் தந்தை எப்பொழுதும் தேடுகின்றார். சேவாதாரிக் குழந்தைகள் மாத்திரமே தந்தையின் பெயரைப் புகழடையச் செய்வார்கள். நீங்கள் தந்தையின் உதவியாளராகவும், கீழ்ப்படிவானவர்களாகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் ஆகுவதற்கேற்ப ஆஸ்திக்கு உரிமையைக் கோருகின்றீர்கள்.

பாடல்:
சிவனுக்கு வந்தனங்கள்..

ஓம் சாந்தி.
ஓம் என்பதன் கருத்தை யார் விளங்கப்படுத்தினார்? தந்தையே. அவரை நீங்கள் பாபா என அழைப்பதால், அவருக்கு நிச்சயமாக ஒரு பெயர் இருக்க வேண்டும். அவர் சரீரதாரியானாலும், அசரீரியானாலும் நிச்சயமாக அவருக்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். ஏனைய ஆத்மாக்களுக்குப் பெயர்கள் கொடுக்கப்பட முடியாது. ஆத்மாக்கள் மனிதர்கள் ஆகும்பொழுது, சரீரங்களுக்குப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. பிரம்ம தேவருக்கு வந்தனங்கள் எனக் கூறப்படுகிறது. விஷ்ணுவும் ஒரு தேவர் என அழைக்கப்படுகின்றார், ஏனெனில் அவர்களுக்கு ஒரு சூட்சும வடிவம் உள்ளது. அத்துடன் சூட்சும சரீரங்களுக்கும் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு சரீரத்திற்கே எப்பொழுதும் ஒரு பெயர் கொடுக்கப்படுகின்றது. அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தைக்கு மாத்திரம் சிவன் என்னும் பெயர் கொடுக்கப்படுகிறது. அந்த ஆத்மாவுக்கு மாத்திரம் ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. ஏனைய அனைவருக்கும் அவர்களுடைய சரீரங்களுக்கு மாத்திரம் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓர் ஆத்மா ஒருமுறை ஒரு சரீரத்தை நீக்கியதும், பெயர் மாறுகின்றது. ஆனால் கடவுளாகிய பரமாத்மாவிற்கு ஒரு பெயர் மாத்திரம் கொடுக்கப்படுகின்றது, அது ஒருபொழுதும் மாறுவதில்லை. இது அவர் பிறப்பு, இறப்பிற்குள் பிரவேசிப்பதில்லை என்பதை நிரூபிக்கின்றது. அவர் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் பிரவேசித்தால், அவரால் மறுபிறவிகள் எடுப்பதில் இருந்து மற்றவர்களை விடுவிக்க முடியாது. அமரத்துவ பூமியில் பிறப்பு, இறப்பு என்னும் வார்த்தைகள் உபயோகிக்கப்படுவதில்லை. ஏனெனில் அங்குள்ள அனைவரும் இலகுவாக ஒரு சரீரத்தை நீக்கி, அடுத்ததை எடுக்கின்றார்கள். இறப்பு என்னும் வார்த்தை இங்கேயே உபயோகிக்கப்படுகி;ன்றது. சத்தியயுகத்தில், இன்னார் மரணித்துள்ளார் எனக் கூறமாட்டார்கள். மரணம் என்னும் வார்த்தை துன்பத்தைக் குறிக்கின்றது. அங்கே, முதிய சரீரத்தை ஓர் ஆத்மா நீக்கி, பின்னர் ஓர் இளம் சரீரத்தை எடுக்கின்றர், அதனை அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றார்கள். பழைய உலகில் பெருமளவில் மனிதர்கள்; உள்ளனர். அவர்கள் அனைவரும் அழியவுள்ளனர். யாதவர்களும், கௌரவர்களும் யுத்தத்தில் அழிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே பாண்டவர்கள் துன்பத்தை அனுபவித்திருப்பார்களா? இல்லை. பாண்டவர்களின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் பிரம்மாவின் குலத்தைச் சேர்ந்த பிராமணர்களாகிய பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். பிரம்மாவிற்குப் பல குழந்தைகள் உள்ளனர். எனவே, அவர் நிச்சயமாக மக்களின் தந்தையாவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் தந்தை சிவன் ஆவார். அவர் ஒருவரே கடவுள் என அழைக்கப்படுகின்றார். இப்பொழுது நாங்கள் இறைகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் நிர்வாண தாமமான பாபாவின் வீட்டிற்கு பாபாவுடன் திரும்பவுள்ளோம். பாபா இப்பொழுது வந்துள்ளார். அவர் மணவாளன் எனவும் அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும் அவருடனான சரியான உறவுமுறை தந்தையாகும். ஏனெனில் மணவாட்டிகள் ஓர் ஆஸ்தியைப் பெறுவதில்லை. குழந்தைகளே ஆஸ்தியைக் கோருகின்றார்கள். எனவே, அவரைத் தந்தை என அழைப்பது சரியானதே. தந்தையை மறந்து விட்டதனால் மக்கள் நாஸ்திகர்கள் ஆகிவிட்டனர். கிருஷ்ணருடைய செயல்பாடுகள் நினைவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை முக்கியமான செயல்கள் அல்ல. கிருஷ்ணரின் தெய்வீகச் செயற்;பாடுகள் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அவை சிவபாபாவின் தெய்வீகச் செயற்பாடுகளாகவே இருக்கவேண்டும். அவர் தந்தையும், ஆசிரியரும், சற்குருவுமாக இருப்பதால் இதில் விளையாட்டுச் செயல்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. ஸ்ரீகிருஷ்ணரும் அத்தகைய விஷமச்செயல்களைச் செய்திருக்க மாட்டார். அவர் ஒரு சிறு குழந்தை, அத்துடன் சிறு குழந்தைகள் எப்பொழுதும் குறும்புத்தனம் செய்வார்கள். அவர்கள்; அனைவராலும் விரும்பப்படுவார்கள். அவர்கள் கிருஷ்ணர் குடத்தை உடைத்தார் என உருவாக்கியுள்ளனர். ஆனால் அது அவ்வாறு இல்லை. இப்பொழுது நீங்கள் சிவபாபாவின் செயல்கள் என்ன எனப் பார்க்கின்றீர்கள். அவர் உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தூய்மையற்றவர்களிருந்து இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். அவர் கூறுகின்றார்: பக்தி மார்க்கத்தில், நான் உங்கள் பக்தியின் உணர்வுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகின்றேன். ஆனால் இங்கு நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். இந் நேரத்தில், எனது குழந்தைகள் மாத்திரம் என்னை நினைவு செய்கிறார்கள். அவர்கள் ஏனைய அனைவரையும் மறந்து ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவு செய்ய முயற்சி செய்கிறார்கள். நான் சர்வவியாபி என்பதல்ல. என்னை நினைவு செய்பவர்களை நான் நினைவு செய்கிறேன். குழந்தைகளே நினைவு செய்யப்படுகின்றார்கள். அதில் ஒரு முக்கிய விடயம்: பிரபல்யமான ஒருவருக்கு விளங்கப்படுத்தி, அவருக்குப் புரியுமாறு செய்தால், நீங்கள் தைரியசாலிகள். அனைத்துமே கீதையில் தங்கியுள்ளன. அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையினால் கீதை பாடப்பட்டது, ஒரு மனிதனால் அல்ல. கடவுள், உருத்திரன் எனவும் அறியப்படுகின்றார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் உருத்திரன் என அழைக்கப்படுவதில்லை. விநாசத்தின் சுவாலை உருத்திர ஞான யாகத்தில் இருந்து தோன்றுகின்றது. மக்கள் பலர் கடவுளை அதிபதியாக நினைவு செய்கின்றார்கள். அதிபதிக்கு ஒரு பெயர் இல்லை என அவர்கள் கூறுகின்றார்கள். நல்லது. அந்த அதிபதி எங்கே உள்ளார்? அவர் முழு உலகினதும் அதிபதியா? பரமாத்மாவாகிய பரமதந்தை முழுஉலகினதும் அதிபதியல்ல. தேவர்களே உலகின்; அதிபதிகள் ஆகுகிறார்;கள். பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாந்தின்; அதிபதியாவார். பிரம்மாந் தந்தையின் வீடாகும். ஆகவே அது குழந்தைகளினதும் வீடாகும். ஆத்மாக்களாகிய நாங்கள் கோல (ஓவல்) வடிவில் வாழ்கின்ற பிரம்மாந்தே தந்தையின் வீடாகும். அது உண்மையில் அவ்வாறில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் ஒளிப் புள்ளிகளைப் போல் அங்கு வாழ்கின்றோம். பின்னர் நாங்கள் எங்கள் பாகங்களை நடிப்பதற்கு பிரம்மாந்திலிருந்து இறங்கி வருகின்றோம். ஆத்மாக்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே வரும்போது விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. பாபா விதையாவார். இது தேவர்களின் அத்திவாரம் என்றா அல்லது பிராமணர்களின் அத்திவாரம் என்றா அழைக்கப்படவேண்டும்? பிராமணர்களே விதையை விதைக்கின்றார்கள். பிராமணர்களே பின்னர் தேவர்கள் ஆகி இராச்சியத்தை ஆளுகின்றார்கள். சிவபாபா இப்பொழுது எங்கள் மூலம் அத்திவாரத்தை இடுகின்றார். நாங்கள் தேவதர்மத்தின், அதாவது, சுவர்க்கத்தின் அத்திவாரத்தை இடுகின்றோம். எந்தளவிற்கு நீங்கள் ஓர் உதவியாளராகுவீர்களோ அந்தளவிற்கு உங்கள் பங்கைக் கோருவீர்கள். வேறு எவ்வாறு நீங்கள் சூரியவம்சத்தில் ஓர் அங்கமாக முடியும்? நீங்கள் இப்பொழுது அந்த மேன்மையான வெகுமதியை உருவாக்குகின்றீ;ர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த முயற்சியின் மூலம் உங்கள் வெகுமதியை உருவாக்குகின்றீர்கள். உங்கள் வெகுமதியை உருவாக்குவதற்கு நல்ல செயல்கள் செய்யப்பட வேண்டும். அவர்கள் தர்மம் செய்கின்றார்கள், புண்ணிய காரியங்களைச் செய்கின்றார்கள், அத்துடன் கடவுளின் பெயரால் யாத்திரிகர்கள் தங்கும் விடுதிகளையும் கட்டுகின்றார்கள். ஏனெனில் அவரே அவை அனைத்தினதும் பலனைக் கொடுப்பவர்; ஆவார். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத்தின் அடிப்படையில் முயற்சி செய்கிறீர்கள். ஆயினும் உலகில் எஞ்சியுள்ள அனைவரும் மனிதர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையில் முயற்சி செய்கின்றார்கள். அவை அசுர வழிகாட்டல்கள் ஆகும். இறை வழிகாட்டல்களின் பின்னர் தேவ வழிகாட்டல்களும் அதன் பின்னர் அசுர வழிகாட்டல்களும் வருகின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இறை வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். அவரின் வழிகாட்டல்களின் மூலம் மம்மாவும் பாபாவும்; மேன்மையானவர்கள் ஆகினார்கள். ஒரு மனிதனாலும் தேவரை போல மேன்மையானவராக ஆகமுடியாது. தேவர்களை மிக மேன்மையானவர்களாக ஆக்குவது யார்? இங்கே மேன்மையானவர் எவருமே இல்லை. ஸ்ரீ ஸ்ரீ ஒருவர் மாத்திரமே. அவர் ஒருவரே மிக மேன்மையான தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவரே ஸ்ரீ இலக்ஷ்மியையும் ஸ்ரீ நாராயணனையும் உருவாக்குகின்றார். இராமர், சீதையும் ஸ்ரீ இராமர், ஸ்ரீ சீதா என அழைக்கப்படுகின்றார்கள். ஆனாலும் அவர்களின் பட்டத்திற்குப் பின்னால் சந்திர வம்சத்து சத்திரியர்கள் என்பது சேர்க்கப்படுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள். அவர்கள் சூரிய வம்சத்துக்குரியவர்கள். அவர்களுடையது தேவ குலமாகும். ஆனால் இராமரும் சீதையும் 14 சுவர்க்கக்கலைகள் உடையவர்கள்;. அவர்கள் சந்திர வம்சத்திற்குரியவர்கள். எனவே அவர்கள் 2 கலைகள் குறைவானவர்கள். எவ்வாறாயினும் இது தவிர்க்க முடியாதது. உலகம் எவ்வாறு இறங்கும் ஸ்திதியை அடைந்தது என்பது மக்களுக்குத் தெரியாது. அது 16 சுவர்க்கக் கலைகளில் இருந்து 14லாக இறங்கியது. எனவே அது சீரழிந்ததாகி விட்டது. இந்தக் காலத்திலேயே அது முழுமையாக சீரழிந்ததாகியுள்ளது. இது இராவணனின் குலமாகும். இது இராவணனின் இராச்சியமாகும். இராவணனின் வழிகாட்டல்கள் அசுர வழிகாட்டல்கள் என அழைக்கப்படுகின்றன. அனைவருமே தூய்மையற்றவர்கள். இந்தத் தூய்மையற்ற உலகில் எவருமே தூய்மையாக இருக்க முடியாது. பாரதவாசிகள் தூய்மையானவர்களாக இருந்து இப்பொழுது தூய்மையற்றவர்களாகி உள்ளனர். நான் வந்து மீண்டும் ஒருமுறை அவர்களைத் தூய்மை ஆக்குகின்றேன். கிருஷ்ணர் தூய்மையாக்குபவர் என நினைவு செய்யப்படுவதில்லை. எனவே அவரது செயல்கள் நினைவு செய்யப்படுகின்ற கேள்விக்கே இடமில்லை. பரமமாத்மா மாத்திரமே தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகின்றார். இறுதியில் அனைவரும் கூறுவார்கள்: ஓ கடவுளே! உங்கள் வழிகாட்டல்களும் இலக்கும் தனித்துவமானவை. உங்கள் படைப்பைப் பற்றி வேறு எவருமே அறிய மாட்டார்கள். எவ்வாறாயினும் இப்பொழுது நீங்கள் இதனைப் புரிந்து கொண்டுள்ளீர்கள்;. இந்த ஞானம் முற்றிலும் புதியதாகும். ஏதாவதொன்று புதியதாகத் தோன்றினால், அது மிக அரிதாக இருக்கும். ஆனால் பின்னர் அது அதிகரிக்கிறது. எனவே தொடக்கத்தில் நீங்களும் ஒரு மூலையில்தான் இருந்தீர்கள், ஆனால் இப்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் விரிவாக்கம் ஏற்பட்டு, இராச்சியம் நிச்சயமாக ஸ்தாபிக்கப்படும். ஸ்ரீ கிருஷ்ணர் கீதையின் கடவுள் அல்ல என நிரூபிக்கப்பட வேண்டியதே பிரதான விடயமாகும். ஆஸ்தி தந்தையினாலேயே அளிக்கப்படுகின்றது, ஸ்ரீ கிருஷ்ணரினால் அல்ல. இலக்ஷ்மி நாராயணன் தங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே ஆஸ்தியைக் கொடுக்கின்றார்கள். அதுவும் அவர்களது தற்போதைய முயற்சிக்கான வெகுமதியாகும். சத்திய, திரேதா யுகங்களில் எல்லையற்ற ஆஸ்தி உள்ளது. மக்கள் பொன், வெள்ளி விழாக்களைக் கொண்டாடுகின்றார்கள். இங்கே அவர்கள் ஒரு நாளை மாத்திரம் கொண்;டாடுகின்றார்கள். ஆனால் நாங்கள் 1250 ஆண்டுகளுக்குப் பொன் விழாவைக் கொண்டாடுகின்றோம். நாங்கள் சந்தோஷமாகக் கொண்டாடுகின்றோம் அத்துடன் அனைத்துச் செல்வங்களாலும் நிறைந்தவர்கள் ஆகுகின்றோம். எனவே அங்கே இந்த உள்ளார்ந்த சந்தோஷம் இருக்கிறது. அங்கே விளக்குகள் போன்றவற்றால் புற அலங்காரங்கள் இருக்கும் என்பதல்ல. சுவர்க்கத்தில் நாங்கள் மிகுந்த செழிப்பும் மிகுந்த சந்தோஷமும் நிறைந்தவர்கள். தேவதர்மத்தைச் சேர்ந்தவர்களைப் போல சந்தோஷமானவர்கள் வேறு எவரும் இல்லை. வெள்ளிவிழா போன்றவற்றைப் பற்றி மக்கள் முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது நீங்கள் அரைக் கல்பத்திற்கு விழாக்கள் கொண்டாடுவதற்கான ஆஸ்தியை பாபாவிடமிருந்து கோருகின்றீர்கள். எனவே இந்த முக்கியமான விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: சிவனே கீதையின் கடவுள். அவரே இராஐயோகத்தைக் கற்பித்தார் எனவே அவர் இப்பொழுது மீண்டும் ஒருமுறை அதனைக் கற்பிக்கின்றார். அவர் இராச்சியம் மறைந்ததன் பின்னர் இதனைக் கற்பிக்கின்றார். இப்பொழுது மக்கள் மக்களை ஆளுகின்றார்கள். அத்துடன் அவர்கள் ஒருவருடைய பட்டத்தை ஒருவர் அபகரிக்க அதிகக் காலம் எடுப்பதில்லை! அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளாகிய நீங்கள் சந்தோஷ பூமியின் அதிபதிகள் ஆகுவீர்கள். நிலையங்களுக்குத் தொடர்ந்தும் சென்றாலும், ஞானத்தை முழுமையாகக் கிரகிக்க முடியாத பலர் இருக்கின்றார்கள். அவர்களுடைய இதயத்தில் ஒரு குழந்தை வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. திருமணம் செய்து, குழந்தையைப் பெறும் சந்தோஷம் வேண்டும் எனும் மாயையின் தூண்டுதல் அவர்களுக்கு உள்ளது. எவ்வாறாயினும் அக்குழந்தை சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களுடைய குழந்தை இரண்டு அல்லது நான்கு வருடங்களில் மரணித்தால் அவர்கள் இன்னும் அதிகத் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். இன்று அவர்கள் கொண்டாடுவார்கள், ஆனால் நாளை அதைச் சிதையில் இட்டதும் அவர்கள் அழுது புலம்புவார்கள். இது துன்ப பூமியாகும். அவர்கள் என்ன வகையான உணவை உண்கின்றார்கள் எனப் பாருங்கள்! இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் அத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கக் கூடாது. மாயை பல புயல்களைக் கொண்டுவருவாள். அவள் உங்களை உடனேயே விகாரத்தில் ஈடுபடச் செய்வாள், பின்னர் நீங்கள் இங்கு வருவதற்கு வெட்கப்படுவீர்கள். நீங்கள் குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டீர்கள் என அனைவரும் கூறுவார்கள். பின்னர் என்ன ஆஸ்தியை நீங்கள் கோர முடியும்? நீங்கள் மம்மா, பாபா எனக் கூறுகின்றீர்கள். எனவே பிரம்மகுமார், குமாரிகள், சகோதரர்களும் சகோதரிகளும் ஆவார்கள். பின்னரும் நீங்கள் விகாரத்தில் ஈடுபட்டால், நீங்கள் குடும்பத்தை அவதூறு செய்வதால் உங்கள் அந்தஸ்தையும் நீங்கள் அழிக்கின்றீர்கள். அத்துடன் நூறுமடங்கு தண்டனையும் கிடைக்கும். சிலர் விகாரத்தில் ஈடுபடுகிறார்;களாயினும் அதை பாபாவுக்குக் கூறுவதில்லை. எனவே அவர்கள் அதிகளவு தண்டனையை அனுபவிப்பார்கள். பாபாவாகிய தர்மராஐ; எவரையும் விட்டு விடுவதில்லை. உலகில் உள்ள மக்கள் தண்டிக்கப்படுவதற்குச் சிறைக்கு அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் இங்கு உள்ளவர்களுக்குத் தண்டனை இன்னும் கடுமையாக இருக்கும். அத்தகைய பலர் நிலையங்களுக்குச் செல்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அத்தகைய செயல்களைச் செய்யாதீர்கள். உங்களைக் கடவுளின் குழந்தை எனக் கூறிய பின்னர் விகாரத்தில் ஈடுபட்டால், உங்களிடம் உள்ள உண்மைகள் அனைத்தையும் முழுமையாக அழித்தல் என்பதாகும். நீங்கள் ஏதாவது தவறு செய்தால், உடனடியாகத் தந்;தையிடம் கூறுங்கள். விகாரத்தில் ஈடுபடாது உங்களால் இருக்க முடியாவிட்டால், இங்கு வராதிருப்பது நல்லது, அல்லாவிட்டால் சூழல் மாசடையும். ஒரு நாரை அல்லது தூய்மையற்ற உணவை உண்ணும் எவரேனும் உங்களிடையே அமர்ந்திருந்தால், அது மிகவும் முறையற்றதே. தந்தை கூறுகின்றார்: அத்தகையவர்களை அழைத்து வருபவர்கள் மீதே குற்றம் சாட்டப்பட வேண்டும். அத்தகைய பல ஆன்மீக ஒன்றுகூடல்கள் உலகில் இருக்கின்றன. அவர்கள் அங்கே சென்று பக்தி செய்யலாம். நீங்கள் பக்தி செய்வதை நாங்கள் தடை செய்யவில்லை. உங்களைத் தூய்மையாக்கி, வைகுந்தமாகிய தூய உலகினை ஆஸ்தியாக உங்களுக்குக் கொடுப்பதற்காகவே கடவுள் வருகிறார். தந்தை கூறுகின்றார்: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள், அவ்வளவே தான். அவர் உங்கள் உணவில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பது என யுக்திகளையும் தருகின்றார். நீங்கள் பலவகையாக யுக்திகளால் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்: எனது ஆரோக்கியம் நன்றாக இல்லை. இதனை உண்ண வேண்டாம் என வைத்தியர் கூறிவிட்டார். அல்லது அச்சா, இதனை நீங்கள் தருவதால் சில பழங்களை ஏற்றுக் கொள்கின்றேன். இவ்விதமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது சரியாகும கொள்வது சரியாகும். பாபா இதனை எதிர்ப்பதில்லை. மிக இனிமையான, பழைய சுபாவங்கள் இல்லாத குழந்தைகளையே பாபா தேடுகின்றார். சேவாதாரிகளாகவும், கீழ்ப்படிவானவர்களாகவும், நம்பகரமானவர்களாகவும் ஆகுங்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த மாயையின் உலகி;லுள்ள அனைத்திலும் துன்பமே உள்ளது. ஆகவே இந்தப் பழைய உலகத்துடன் தொடர்புள்ள எந்தவிதமான விருப்பங்களையும் கொண்டிருக்கக் கூடாது. மாயையின் புயல்கள் வந்தாலும் குடும்பத்தை அவதூறு செய்யாதீர்கள்.

2. உங்கள் உணவில் முன்னெச்சரிக்கையாக இருங்கள். வைபவங்கள் போன்றவற்றிக்குச் செல்லும்பொழுது மிகுந்த யுக்தி உடையவர்களாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
எவற்றிலும் எந்தத் தீயதையும் பார்க்காத, ஆனால் அதிலும் ஏதாவது நன்மையை மாத்திரமே கற்றுக் கொள்கின்ற ஓர் அனுபவ சொரூபம் ஆகுவீர்களாக.

ஏதாவது ஒன்று முற்றிலும் தீயதாக இருந்தாலும், அதற்குள் ஓரிரு நல்லவை நிச்சயமாக இருக்கும். அனைத்திற்குள்ளும் உங்களுக்கு பாடம் கற்பிக்கும் நல்லது ஒன்று அமிழ்ந்திருக்கும், ஏனெனில், அனைத்துமே உங்களை அனுபவசாலியாக ஆக்குவதற்கான கருவிகளே. அது உங்களுக்கு பொறுமை என்ற பாடத்தைக் கற்பிக்கின்றது. ஒருவர் பலவந்தப்படுத்துபவராக இருக்கலாம், எனவே அந்த நேரத்தில், நீங்கள் பொறுமை, சகித்தல் என்ற பாடத்தைக் கற்கிறீர்கள். ஆகையாலேயே கூறப்படுகின்றது: எது நடந்தாலும் நல்லது, எது நடக்க இருக்கிறதோ அது இன்னமும் நல்லதாகவே இருக்கும். அதிலிருந்து நீங்கள் நல்லதை கற்கின்ற புத்தியுடையவராக இருக்க வேண்டும். எதையும் தீயது எனப் பார்க்காதீர்கள், நல்லதை எடுத்துக் கொண்டால் நீங்கள் முதல் இலக்கமுடையவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
சதா சந்தோஷமாக இருப்பதற்கு, மௌசக்தியினால் தீயது எதனையுமே நல்லதாக மாற்றுங்கள்.