22.11.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    21.01.87     Om Shanti     Madhuban


சுய இராச்சிய அதிகாரிகளுக்கு உலக இராச்சியத்திற்கான உரிமை உள்ளது.


இன்று, பாக்கியத்தை அருள்பவரான தந்தை, தனது அதிமேன்மையான, பாக்கியசாலிக் குழந்தைகளைப் பார்க்கிறார். இந்த ஒன்றுகூடல் மட்டும் பாப்தாதாவின் முன்னால் இருக்கவில்லை. ஆனால், எங்கும் உள்ள பாக்கியசாலிக் குழந்தைகளும் இப்போது அவரின் முன்னாலேயே இருக்கிறார்கள். அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும், இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தாலும், எல்லையற்ற தந்தை எல்லையற்ற குழந்தைகளைப் பார்க்கிறார். இந்த பௌதீக உலகில் வெளியின் எல்லை உள்ளது. ஆனால் எல்;லையற்ற தந்தையின் திருஷ்டியின் உலகமும் எல்லையற்றது. பிராமண ஆத்மாக்கள் அனைவரின் உலகமும் தந்தையின் திருஷ்டியில் அமிழ்ந்துள்ளது. எனவே, திருஷ்டி உலகில் அனைவரும் தனிப்பட்ட முறையில் பாபாவின் முன்னால் இருக்கிறார்கள். பாக்கியத்தை அருள்பவரான கடவுள், பாக்கியசாலிக் குழந்தைகள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகள் தந்தையைக் காண்பதில் மகிழ்ச்சி அடைவதைப் போல், தந்தையும் குழந்தைகள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார். குழந்தைகளைப் பார்க்கும்போது, எல்லையற்ற தந்தைக்குத் தனது ஒவ்வொரு குழந்தையும் உலகின் முன்னால் விசேடமான ஆத்மாக்களின் பட்டியலில் இருக்கிறார்கள் என்ற ஆன்மீக போதையும் பெருமையும் ஏற்படுகிறது. ஒருவர் 16000 மணி மாலையில் கடைசி மணியாக இருந்தாலும், தந்தையின் முன்னால் வருவதன் மூலமும் தந்தைக்குச் சொந்தமாகுவதன் மூலமும், அவர் உலகின் முன்னால் விசேடமான ஆத்மாவாக இருக்கிறார். ஆகவே, உங்களால் ஞானத்தின் எந்தவிதமான விவரத்தை அறிய முடியாவிட்டாலும், உங்களின் இதயபூர்வமாக பாபா என்ற ஒரேயொரு வார்த்தையை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களின் இதயபூர்வமாக நீங்கள் அதை மற்றவர்களுக்கு விவரித்தால், நீங்கள் ஒரு விசேடமான ஆத்மா ஆகுவீர்கள். நீங்கள் உலகின் முன்னால் ஒரு மகாத்மா ஆகுகிறீர்கள். நீங்கள் உலகில் ஒரு மகாத்மா என்று நினைவுகூரப்படும் வகையில் நினைவு செய்வதற்குத் தகுதிவாய்ந்த ஓர் ஆத்மா ஆகுகிறீர்கள். இத்தகைய மேன்மையான பாக்கியத்தை நீங்கள் இலகுவாகப் பெற்றுள்ளீர்கள் என நீங்கள் உணருகிறீர்களா? பாபா என்ற வார்த்தையே திறவுகோல் ஆகும். எதற்கான திறவுகோல்? சகல பொக்கிஷங்களுக்கும் மேன்மையான பாக்கியத்திற்கும். ஒரு தடவை நீங்கள் அந்தச் சாவியைப் பெற்றுக் கொண்டால், நீங்கள் நிச்சயமாகப் பாக்கியத்தையும் சகல பொக்கிஷங்களையும் பெறுவீர்கள். எனவே, தாய்மார்களும் பாண்டவர்களுமான நீங்கள் அனைவரும் இந்தச் சாவிக்கான உரிமையைப் பெற்றுள்ளீர்களா? அந்தச் சாவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது, சிலவேளைகளில் உங்களுக்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாதா? அந்தச் சாவியைப் பயன்படுத்தவதற்கான வழிமுறை, உங்களின் இதயபூர்வமாக அதை அறிந்து, ஏற்றுக் கொள்வதாகும். அதை வார்த்தைகளில் மட்டும் நீங்கள் கூறினால், உங்களிடம் சாவி இருந்தாலும், அது வேலைசெய்யாது. அதை உங்களின் இதயபூர்வமாக நீங்கள் கூறும்போது, பொக்கிஷங்கள் அனைத்தும் எப்போதும் உங்களின் முன்னால் இருக்கும். அவை எல்லையற்ற பொக்கிஷங்கள். பொக்கிஷங்கள் எல்லையற்றவை. ஆதலால், எத்தனை குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஓர் உரிமை உள்ளது. இந்தப் பொக்கிஷம் திறந்த பொக்கிஷம் ஆகும். இது நிரம்பி வழியும் பொக்கிஷம். இறுதியில் வந்தவர்களுக்குப் பொக்கிஷம் முடிந்துவிட்டது என்பதல்ல. இதுவரை எத்தனை பேர் வந்திருந்தாலும், அதாவது, எத்தனை பேர் தந்தைக்குச் சொந்தமாக இருந்தாலும், எதிர்காலத்தில் எத்தனை பேர் தந்தைக்குச் சொந்தமாகினாலும், அவர்கள் அனைவருக்கும் போதுமான அளவிற்குப் பல மடங்கு பொக்கிஷங்கள் உள்ளன. இதனாலேயே பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் திறந்த இதயத்துடன் (எந்தவிதமான தயக்கமும் இல்லாமல்) அவர் விரும்பும் அளவிற்குப் பல பொக்கிஷங்களை எடுத்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பை வழங்குகிறார். அருள்பவரிடம் எதுவும் குறைவாக இல்லை. அதை எடுத்துக் கொள்பவர்களின் தைரியத்திலும் முயற்சியிலுமே அனைத்தும் தங்கியுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் அதி பாக்கியசாலியாக இருக்கும் பல குழந்தைகளைக் கொண்ட ஒரு தந்தை கல்பம் முழுவதிலும் இருக்க முடியாது. இதனாலேயே, ஆன்மீக பாப்தாதாவிற்கு ஆன்மீக போதை உள்ளது என உங்களுக்குக் கூறப்பட்டது.

மதுவனத்திற்கு வருகின்ற, சந்திக்கின்ற அனைவரின் ஆசையும் இப்போது நிறைவேறியுள்ளது. பக்தி மார்க்கத்தின் யாத்திரைகளுடன் ஒப்பிடும்போது, இங்கு மதுவனத்தில், குறைந்தபட்சம் உங்களுக்கு அமரவும் சௌகரியமாக இருக்கவும் இடம் உள்ளது. ஆலயங்களில், நின்று கொண்டே அவர்கள் கணநேர தரிசனம் செய்கிறார்கள். இங்கு, குறைந்தபட்சம் நீங்கள் சௌகரியமாக அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு, அவர்களுக்குத் தொடர்ந்து, ஓடுங்கள், ஓடுங்கள், முன்னால் செல்லுங்கள், முன்னால் செல்லுங்கள் எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்கு நீங்கள் சௌகரியமாக அமர்ந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் சௌகரியமாக நினைவில் இருக்கும் மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் இங்கே சங்கமயுகத்தில் சந்தோஷத்தில் கொண்டாடவே வந்துள்ளீர்கள், இல்லையா? எனவே, ஒவ்வொரு கணத்திலும், நடக்கும்போதும் அசையும்போதும், உண்ணும்போதும் பருகும்போதும், நீங்கள் சந்தோஷப் பொக்கிஷத்தைச் சேமித்தீர்களா? நீங்கள் எவ்வளவற்றைச் சேமித்துள்ளீர்கள்? 21 பிறவிகளுக்கு சௌகரியமாக உண்ணக்கூடிய வகையில் நீங்கள் சேமித்துள்ளீர்களா? மதுவனம் சகல பொக்கிஷங்களையும் உங்களால் சேமிக்கக்கூடிய விசேடமான இடமாகும். ஏனென்றால், இங்கு பௌதீகமான முறையிலும் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள். அங்கு, நீங்கள் உங்களின் புத்தியால் இதை அனுபவம் செய்கிறீர்கள். ஆனால் இங்கோ, உங்களின் நடைமுறை வாழ்க்கையில், ஒரேயொரு தந்தையையும் பிராமணக் குடும்பத்தையும் தவிர வேறு எவரையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரேயொரு அன்பான அக்கறையே உள்ளது. ஒரேயொரு குடும்பமும், நிலையான, ஸ்திரமான ஸ்திதியும். உங்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வேறு எதுவும் கிடையாது. கற்பதும், கற்பதனால் சக்திசாலி ஆகுவதும். மதுவனத்தில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரேயொரு வேலை இதுவேயாகும். உங்களுக்கு எத்தனை வகுப்புகள் நடைபெறுகின்றன? எனவே, இங்கே, சேமிப்பதற்கான விசேடமான வழிமுறை உங்களிடம் உள்ளது. இதனாலேயே, நீங்கள் அனைவரும் இங்கே ஓடோடி வந்துள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் குறிப்பாக நினைவூட்டுகிறார்: உங்களின் சுய இராச்சிய அதிகாரி என்ற ஸ்திதியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். சுயஇராச்சிய அதிகாரியாக இருத்தல், உலக இராச்சியத்திற்கான உரிமையுடையவராக ஆகுவதன் அடையாளம் ஆகும்.

தந்தையுடன் இதயபூர்வமாக உரையாடும்போது, சில குழந்தைகள் கேட்கிறார்கள்: எதிர்காலத்தில் நான் என்னவாகுவேன்? நான் ஓர் அரசனாக ஆகுவேனா அல்லது பிரஜையாக ஆகுவேனா? பாப்தாதா குழந்தைகளுக்குப் பதிலளிக்கிறார்: உங்களை ஒரு நாள் சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஓர் அரசர் ஆகுவீர்களா, ஒரு செல்வந்தப் பிரஜை ஆகுவீர்களா அல்லது ஒரு பிரஜை ஆகுவீர்களா என்பதை அறிந்து கொள்வீர்கள். அனைத்திற்கும் முதலில், அமிர்தவேளையில் இருந்து, உங்களின் மூன்று பிரதானமான பணியாட்களை, உங்களின் ஒத்துழைக்கும் சகபாடிகளைச் சோதித்துப் பாருங்கள். அவர்கள் யார்? 1. மனம், அதாவது, உங்களின் எண்ண சக்தி. 2. புத்தி. அதாவது, உங்களின் தீர்மானிக்கும் சக்தி. 3. கடந்தகால மற்றும் நிகழ்கால மேன்மையான சம்ஸ்காரங்கள். இவையே உங்களின் பிரதானமான பணியாளர்கள். தற்காலத்தில் உலகில், ஓர் அரசனுக்கு பிரதம மந்திரி அல்லது விசேடமான ஆலோசகர் ஒருவர் இருப்பார். அவரின் ஒத்துழைப்புடனேயே அந்த இராச்சியம் செயல்படும். சத்தியயுகத்தில், ஆலோசகர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஆனால், நெருங்கிய உறவினர்களும் சகபாடிகளும் இருப்பார்கள். அவற்றை உங்களின் சகபாடிகள் அல்லது ஆலோசகர்கள் என நீங்கள் விரும்பியவாறு கருதிக்கொள்ளுங்கள். ஆனால், சோதியுங்கள்: இந்த மூன்றும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறதா? இந்த மூன்றிலும் உங்களுக்கு சுய இராச்சிய அதிகாரம் உள்ளதா? அல்லது அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் நீங்கள் செயல்படுகிறீர்களா? உங்களின் மனம் உங்களைக் கட்டுப்படுத்துகிறதா? அல்லது நீங்கள் உங்களின் மனதைக் கட்டுப்படுத்துகிறீர்களா? நீங்கள் விரும்பிய நேரத்தில், விரும்பிய வகையான எண்ணத்தை உங்களால் உருவாக்க முடிகிறதா? உங்களின் புத்தியை நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களால் ஒருமுகப்படுத்த முடிகிறதா? அல்லது, உங்களின் புத்தி அரசனான உங்களை அலைய வைக்கிறதா? உங்களின் சம்ஸ்காரங்களை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்களா? அல்லது உங்களின் சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறீர்களா? இராச்சியத்தைக் கொண்டிருத்தல் என்றால் உரிமையைக் கொண்டிருத்தல் என்று அர்;த்தம். இராச்சிய அதிகாரியான உங்களிடம் நீங்கள் கேட்கும் வேளையில் சரியான முறையில் ஒரு பணியை மிகச்சரியாகச் செய்யும்படி கட்டளை இடுவதற்கான சக்தி உள்ளதா? அல்லது, அவற்றிடம் ஒன்றைச் செய்யும்படி நீங்கள் கூற, அவை வேறொன்றைச் செய்கின்றனவா? ஒரு சதா யோகியாக, ஒரு சுயஇராச்சிய அதிகாரியாக, இருப்பதற்கான விசேடமான வழிமுறை, உங்களின் மனதையும் புத்தியையும் பயன்படுத்துவதாகும். நீங்கள் பெற்றுள்ள மந்திரம் மன்மனாபவ என்பதாகும். யோகம் என்பது புத்தியோகம் என்று சொல்லப்படுகிறது. எனவே, ஆதாரத்தின் இந்தப் பிரதான தூண்கள் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாவிட்டால், அல்லது, அவை சிலவேளைகளில் உங்களின் கட்டுப்பாட்டிலும் ஏனைய வேளைகளில் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருந்தால், ஒரு கணம் உங்களின் கட்டுப்பாட்டிலும் மறுகணம் இல்லாமலும் இருந்தால், மூன்றில் ஒன்றேனும் குறைந்தளவில் உங்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், அதிலிருந்து நீங்கள் ஓர் அரசர் ஆகுவீர்களா அல்லது ஒரு பிரஜை ஆகுவீர்களா என உங்களால் சோதித்துப் பார்க்க முடியும். நீண்ட காலத்திற்கு இராச்சிய அதிகாரியாக இருக்கும் சம்ஸ்காரங்களே, எதிர்காலத்திலும் நீண்ட காலத்திற்கு இராச்சிய உரிமையுடையவராக உங்களை ஆக்கும். சிலவேளைகளில் உங்களின் கட்டுப்பாட்டிற்குள்ளும், ஏனைய வேளைகளில் அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டும் நீங்கள் இருந்தால், உங்களால் அரைக்கல்பத்திற்கு இராச்சிய பாக்கியத்தின் முழுமையான உரிமையைப் பெற முடியாதிருக்கும். அரைவாசி நேரம் கடந்ததும், உங்களால் வெள்ளி யுகத்தின் அரசன் ஆகமுடியும். ஆனால், உங்களால் எல்லா வேளைக்குமான இராச்சிய உரிமையைக் கொண்டிருக்க முடியாது. அதாவது, உங்களால் இராச்சியத்தை ஆளும் அரச குடும்பத்துடன் நெருங்கிய உறவுமுறையில் வர முடியாதிருக்கும். நீங்கள் மீண்டும் மீண்டும் ஆதிக்கத்திற்கு உள்ளாகினால், உங்களின் சம்ஸ்காரங்கள் கட்டுப்படுத்தும் சம்ஸ்காரங்களாக இருக்காது. ஆனால், இராச்சிய உரிமையுள்ளவர்களின் இராச்சியத்தில் வருபவர்களின் சம்ஸ்காரங்களாகவே இருக்கும். எனவே, அவை யாருடையவை? அவை பிரஜைகளின் சம்ஸ்காரங்களே. ஆகவே, யார் அரசர்கள் ஆகுவார்கள் என்றும் யார் பிரஜைகள் ஆகுவார்கள் என்றும் உங்களுக்குப் புரிகிறதா? உங்களின் சொந்தக் கண்ணாடியில் உங்களின் பாக்கிய ரூபத்தைப் பாருங்கள். இந்த ஞானமே கண்ணாடி ஆகும். எனவே, உங்கள் அனைவரிடமும் இந்தக் கண்ணாடி உள்ளதல்லவா? உங்களால் உங்களின் சொந்த முகத்தைப் பார்க்க முடிகிறதல்லவா? இப்போது, நீண்ட காலத்திற்கு உரிமை உடையவராக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் இறுதியில் அவ்வாறு ஆகுவீர்கள் என நினைக்காதீர்கள். இறுதியில் நீங்கள் அவ்வாறு ஆகினால், கடைசிப் பிறவியில் உங்களால் குறுகிய காலத்திற்கே ஆட்சி செய்ய முடியும். எவ்வாறாயினும், இப்பொழுதில் இருந்தே நீண்ட காலத்திற்கு நீங்கள் இதைப் பயிற்சி செய்யாவிட்டால், அல்லது, ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை நீங்கள் விருத்தி செய்யாவிட்டால், ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்த விசேடமான பணியாளர்கள் உங்களைக் கட்டுப்படுத்தி வந்தால், அல்லது உங்களின் ஸ்திதியை தளம்பல் அடையச் செய்தால், அதாவது, அவை உங்களை ஏமாற்றினால், நீங்கள் துன்ப அலைகளை அனுபவிக்க அவை காரணமாக இருந்தால், நீங்கள் இறுதியிலும் ஏமாற்றப்படுவீர்கள். ஏமாற்றுதல் என்றால் துன்ப அலைகளை நிச்சயமாக அனுபவம் செய்வதாகும். எனவே, இறுதியிலும், வருந்துகையின் துன்ப அலை காணப்படும். இதனாலேயே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் அரசர்கள் ஆகி, உங்களின் இராச்சியத்தில் பணி செய்யும் விசேடமான ஒத்துழைக்கும் பணியாளர்களையும் சகபாடிகளையும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படச் செய்யுங்கள் என மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார். உங்களுக்குப் புரிகிறதா?

யார் சுய இராச்சிய அதிகாரிகள் ஆகியுள்ளார்கள் என்றும் எந்தளவிற்கு அவ்வாறு ஆகியுள்ளார்கள் என்றும் பாப்தாதா பார்க்கிறார். அச்சா. எனவே, நீங்கள் அனைவரும் என்னவாக விரும்புகிறீர்கள்? நீங்கள் அரசர்கள் ஆக விரும்புகிறீர்களா? எனவே, இப்போது நீங்கள் சுய இராச்சிய அதிகாரிகள் ஆகிவிட்டீர்களா? அல்லது, நான் அவ்வாறு ஆகுவேன், நான் இறுதியில் அவ்வாறு ஆகுவேன் என இன்னமும் கூறுகிறீர்களா? நான் எதிர்காலத்தில் அவ்வாறு ஆகுவேன் எனக் கூறாதீர்கள். எதிர்காலத்தில் அது நிகழும் என நீங்கள் சொன்னால், தந்தையும் கூறுவார்: அச்சா, நாமும் இராச்சிய பாக்கியத்தைக் கொடுக்கும்போது அதைப் பாரப்போம். நீண்ட காலப்பகுதிக்கான சம்ஸ்காரங்கள் இப்பொழுதில் இருந்தே தேவை என உங்களுக்குக் கூறப்பட்டது. உண்மையில், அதிகளவு நேரம் இல்லை. சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது. எவ்வாறாயினும், இதை நீங்கள் நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்யாவிட்டால், இறுதிக் கணத்தில் நான் இறுதியில் அவ்வாறு ஆகுவேன் என நினைத்தேன் என முறைப்பாடு செய்யாதீர்கள். இதனாலேயே, ஏதாவதொரு வேளையில் அல்ல, ஆனால் இப்போதே எனக் கூறப்படுகிறது. ஏதாவதொரு வேளையில் அது நிகழும் என நினைக்காதீர்கள். அது இப்போதே நிகழ வேண்டும். நீங்கள் இப்போதே இவ்வாறு ஆகவேண்டும். உங்களையே ஆளுங்கள். உங்களின் சகபாடிகளை ஆள ஆரம்பிக்காதீர்கள். தங்களின் மீது சுய இராச்சிய அதிகாரம் உள்ளவர்களின் சகல சகபாடிகளும் - அவர்கள் லௌகீகமோ அல்லது அலௌகீகமோ இருக்கலாம் - இப்போதும் அன்பினால், ஆமாம் எனது பிரபுவே, ஹா ஜி எனக் கூறி அவர்களின் சகபாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அன்பான சகபாடிகளாக இருப்பதுடன், ஹா ஜி எனக் கூறுவதன் மூலம் இதை நடைமுறையில் செய்து காட்டுகிறார்கள். எவ்வாறு பிரஜைகள் அரசருக்கு ஒத்துழைப்பவராகவும் அன்பானவராகவும் இருக்கிறார்களோ, அதேபோல், உங்களின் பௌதீகப் புலன்கள் அனைத்தும், குறிப்பாக சக்திகளும் உங்களுடன் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும். இது உங்களின் சேவை சகபாடிகளிலும் லௌகீக உறவினர்களிலும் சகபாடிகளிலும் திட்டவட்டமான முறையில் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். தெய்வீகக் குடும்பத்தில் இருக்கும்போது, கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்குக் கட்டளைகளை இடுவது சரியானதல்ல. உங்களின் சொந்த பௌதீக அங்கங்களை உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருங்கள். நீங்கள் கட்டளை இடுவதற்கு முன்னரே, உங்களின் சகபாடிகள் அனைவரும் இயல்பாகவே உங்களின் பணியில் ஒத்துழைக்க ஆரம்பிப்பார்கள். அவர்களாகவே ஒத்துழைக்க ஆரம்பித்தால், கட்டளைகளைக் கொடுப்பதற்கான தேவை இல்லை. நீங்கள் ஒரு சுய இராச்சிய அதிகாரி என்பதனால் அவர்களாகவே ஒத்துழைப்பார்கள். அரசன் என்றால் அருள்பவர் என்று அர்த்தம். அருள்பவர் எதையும் கூறவேண்டிய தேவையில்லை. அதாவது, அவர் கேட்க வேண்டியதில்லை. எனவே, நீங்கள் இத்தகைய சுய இராச்சிய அதிகாரிகள் ஆகியுள்ளீர்களா? அச்சா, இந்த மேளாவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆஹா நாடகமே! என நீங்கள் கூறுகிறீர்கள், இல்லையா? மற்ற மக்களோ சிலவேளைகளில் ஓ! நாடகமே! என்றும், சிலவேளைகளில், ஆஹா நாடகமே! என்றும் கூறுகிறார்கள். ஆனால், நீங்கள் எல்லா வேளையும் என்ன கூறுகிறீர்கள்? ஆஹா நாடகமே, ஆஹா! உங்களிடம் பேறுகள் இருக்கும்போது, எங்கு பேறுகள் இருக்கிறதோ, அங்கு எதுவும் கஷ்டம் இல்லை. அதேபோன்று, இத்தகைய மேன்மையான குடும்பத்தைச் சந்திக்கும் பேறு இருக்கும்போது, எந்தவொரு கஷ்டமும் கஷ்டமாகத் தெரிவதில்லை. அது கஷ்டமாக உள்ளதா? உங்களின் உணவிற்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா? நீங்கள் உண்ணும்போது, கடவுளின் புகழைப் பாடுங்கள். நீங்கள் ஒரு வரிசையில் நிற்க வேண்டி வந்தாலும், கடவுளின் புகழைப் பாடுங்கள். இதையே நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும், இல்லையா? இதுவும் இடம்பெறுகின்ற ஓர் ஒத்திகையே. இது இன்னமும் எதுவுமே இல்லை. இதைவிட அதிகமான விரிவாக்கம் இடம்பெறும். உங்களால் காலத்திற்கேற்ப செயல்படும் முறையில், உங்களை வளைத்துக் கொள்ளும் பழக்கத்தை இப்போது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் இப்போது நிலத்தில் தூங்கும் பழக்கத்தை விருத்தி செய்து கொண்டீர்கள், இல்லையா? உங்களுக்கு ஒரு கட்டில் இல்லாததால் உங்களால் தூங்க முடியவில்லை என்று இல்லையல்லவா? ஒரு கூடாரத்தில் தங்கும் பழக்கத்தையும் நீங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளீர்கள், இல்லையா? நீங்கள் அதை விரும்புகிறீர்களா? உங்களுக்குக் குளிராக இல்லையல்லவா? இப்போது, அபு முழுவதும் நாங்கள் கூடாரங்களை அமைப்போமா? கூடாரங்களில் தூங்குவதை இரசிக்கிறீர்களா அல்லது உங்களுக்கு ஓர் அறை தேவைப்படுகிறதா? உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆரம்பத்தில் நீங்கள் பாகிஸ்தானில் இருந்தபோது, மகாராத்திகளும் நிலத்திலேயே தூங்க வேண்டியிருந்தது. மிகவும் பிரபல்யமான மகாராத்திகளுக்கும் தரையில் தூங்குவதற்கு மூன்றடி நிலமே கொடுக்கப்பட்டது. பிராமணக் குடும்பம் வளர்ந்தபோது, அது எவ்வாறு ஆரம்பமாகியது? அது கூடாரங்களுடனேயே ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் வந்தவர்கள் கூடாரத்திலேயே வாழ்ந்தார்கள். அவ்வாறு கூடாரத்தில் வாழ்ந்தவர்கள் சாதுக்கள் (மகாத்மாக்கள்) ஆகிவிட்டார்கள். சாகார் பாபாவின் காலத்திலும் அவர்கள் கூடாரங்களிலேயே வசித்தார்கள். எனவே, நீங்கள் அனைவரும் இதை அனுபவம் செய்வீர்கள், இல்லையா? எனவே, அனைவரும் எல்லா வழிகளிலும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? அச்சா, அப்படியென்றால் இன்னுமொரு 10,000 பேரை நாம் வரவழைத்து, அவர்களுக்குக் கூடாரங்களைக் கொடுப்பதற்கு ஒழுங்கு செய்வோம். நீங்கள் அனைவரும் குளிக்கும் வசதிகளைப் பற்றி நினைக்கிறீர்கள். இவையும் ஒழுங்கு செய்து தரப்படும். இந்த மண்டபத்தைக் கட்டும்போது அனைவரும் என்ன சொன்னார்கள் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? இத்தனை குளியலறைகளை வைத்து நாம் என்ன செய்வது? இந்த மண்டபம் இந்த இலக்குடனேயே கட்டப்பட்டது. அது இப்போது சிறியதாகிவிட்டது. நீங்கள் அதை எவ்வளவு பெரியதாகக் கட்டினாலும், அது சிறியதாகிவிடும். ஏனென்றால், இறுதியில், நீங்கள் எல்லையற்றதற்குள் செல்ல வேண்டும். அச்சா.

எங்கும் இருந்து குழந்தைகள் வந்துள்ளார்கள். எனவே, இதுவும் இந்த எல்லையற்ற மண்டபத்தின் அலங்காரம் ஆகும். சிலர் கீழேயும் அமர்ந்திருக்கிறார்கள். (சிலர் ஹிஸ்ரி மண்டபத்திலும், தியான மண்டபத்திலும் இருந்து முரளி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்). இந்த விரிவாக்கம் இடம்பெறுவதும் நல்ல பாக்கியத்தின் அடையாளமே. விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது. ஆனால் நீங்கள் நடைமுறைகளுக்கேற்ப செயல்பட வேண்டும். நீங்கள் மதுவனத்திற்கு வந்துள்ளீர்கள், நீங்கள் பாபாவைக் கண்டீர்கள், நீங்கள் மதுவனத்தைக் கண்டீர்கள், எனவே, இப்போது நீங்கள் விரும்பிய அனைத்தையும் செய்ய முடியும் என நினைக்காதீர்கள். இவ்வாறு செய்யாதீர்கள். சில குழந்தைகள் எத்தகையவர்கள் என்றால், அவர்களுக்கு மதுவனத்திற்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை, அவர்கள் மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள். ஒரு தடவை அவர்கள் மதுவனத்தைக் கண்டபின்னர், அவர்கள் சிறிதளவு கவனக்குறைவாக ஆகிவிடுவார்கள். எனவே, கவனக்குறைவு உடையவர் ஆகாதீர்கள். பிராமணர் ஆகுவதென்றால், ஒரு பிராமண வாழ்க்கை வாழுதல் என்று அர்த்தம். ஒரு வாழ்க்கை என்பது, நீங்கள் உயிருடன் இருக்கும் எல்லா வேளையும் என்று அர்த்தம். நீங்கள் இந்த வாழ்க்கையை உருவாக்கியுள்ளீர்கள், இல்லையா? நீங்கள் இதை உங்களின் வாழ்க்கை ஆக்கியுள்ளீர்களா? அல்லது நீங்கள் குறுகிய காலத்திற்கு ஒரு பிராமணர் ஆகியுள்ளீர்களா? எப்போதும் உங்களின் பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்புகளை உங்களுடன் வைத்திருங்கள். ஏனென்றால், இந்தச் சிறப்பியல்புகளினூடாகவே உங்களின் நிகழ்காலம் மேன்மையாகுவதுடன், உங்களின் எதிர்காலமும் மேன்மையானது ஆகும். அச்சா. வேறு என்ன உள்ளது? தோளி. (ஆசீர்வாதங்கள்). நீங்கள் ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தைகள் ஆகியிருப்பதே ஆசீர்வாதம் ஆகும். ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தைகள் இயல்பாகவே ஒவ்வோர் அடியிலும் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். இந்த ஆசீர்வாதமே உங்களின் பராமரிப்பாகும். நீங்கள் ஆசீர்வாதங்களின் பராமரிப்பால் பராமரிக்கப்படுகிறீர்கள். இல்லாவிட்டால், சிந்தித்துப் பாருங்கள்: நீங்கள் மேன்மையானதொரு பேற்றினைப் பெற்றுள்ளீர்கள். இதற்கு நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்? நீங்கள் சிரமப்படாமல் பெற்ற எதுவும் ஓர் ஆசீர்வாதம் என்றே சொல்லப்படும். எனவே, நீங்கள் என்ன முயற்சியைச் செய்தீர்கள்? எனினும், நீங்கள் பெற்ற பேறானது மிக மேன்மையானது! நீங்கள் பிறவி பிறவியாகப் பேறுகளைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எப்போதும் தொடர்ந்து அவற்றைப் பெறுவீர்கள். திருஷ்டியின் மூலமும் வார்த்தைகளின் மூலமும், உறவுமுறைகளின் மூலமும் நீங்கள் சதா ஆசீர்வாதங்களையும் மேலும் ஆசீர்வாதங்களையும் பெறுகிறீர்கள். அச்சா.

நீங்கள் இப்போது பொன்விழா கொண்டாடுவதற்கான ஆயத்தங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடுகிறீர்கள். அதாவது, சதா தங்க ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதற்கான விழாவைக் கொண்டாடுகிறீர்கள். எப்போதும் சிறிதளவேனும் மாசு கலக்காத நிஜத் தங்கமாக இருங்கள். இது பொன்விழா என்று அழைக்கப்படுகிறது. எனவே, உலகிற்கு, தங்க ஸ்திதியுடைய நிஜத் தங்கமாக வெளிப்படுத்தப்படுவதற்கு, நீங்கள் சேவை செய்வதற்கான இந்த வழிமுறைகளை உருவாக்குகிறீர்கள். ஏனென்றால், உங்களின் தங்க ஸ்திதியானது, தங்க யுகத்தைக் கொண்டுவரும். அது அழகான உலகை ஏற்படுத்தும். அனைவரும் இப்போது உலகம் மாற வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே, நீங்களே சுய மாற்றத்தினூடாக உலக மாற்றத்தை ஏற்படுத்தும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, அழகான, பொன்னுலகம் உண்மையில் வரப் போகிறது என்ற நம்பிக்கையும் தூய எதிர்பார்ப்பும் ஆத்மாக்களில் ஏற்பட வேண்டும்! மாதிரியைப் பார்க்கும்போது, இது நல்ல விடயம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். எனவே, நீங்களே பொன்னுலகின் மாதிரிகள். நீங்கள் தங்க ஸ்திதியைக் கொண்டிருப்பவர்கள். மாதிரிகளான உங்களை அவர்கள் பார்க்கும்போது, அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்க வேண்டும்: ஆமாம், இப்போது மாதிரிகள் தயாராக இருப்பதனால், இத்தகைய உலகம் இப்போது நிச்சயமாக வரவுள்ளது. நீங்கள் பொன்விழாவில் இத்தகைய சேவையைச் செய்வீர்கள், இல்லையா? எந்தவித நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவர்கள் ஆகுங்கள். அச்சா.

சுய இராச்சிய அதிகாரிகளுக்கும், நீண்ட காலத்திற்குத் தங்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் பயிற்சியை விருத்தி செய்திருக்கும் ஆத்மாக்களுக்கும், உலகிலுள்ள விசேடமான ஆத்மாக்கள் அனைவருக்கும், ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்பட்ட மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு அவர்களின் மிகச்சரியான இலக்கைக் காட்டும் உயிர்வாழும் ஒளி மற்றும் சக்தி வீடு ஆகுவீர்களாக.

எந்தவொரு அலைந்து திரியும் ஆத்மாவிற்கும் அவரின் மிகச்சரியான இலக்கைக் காட்டுவதற்கு, ஓர் உயிர்வாழும் ஒளி மற்றும் சக்தி வீடு ஆகுங்கள். இதற்கு, இரண்டு விடயங்களில் கவனம் செலுத்துங்கள்: 1) ஒவ்வோர் ஆத்மாவின் ஆசையை வேறுபிரித்தறிதல். ஒரு தகுதிவாய்ந்த மருத்துவருக்கு எவ்வாறு ஒருவரின் நாடியைப் பிடித்து உணரத் தெரியுமோ, அதேபோல், எப்போதும் உங்களின் வேறுபிரித்தறியும் சக்தியைப் பயன்படுத்துங்கள். 2) எப்போதும் சகல பொக்கிஷங்களின் அனுபவத்தை உங்களுடன் வைத்திருங்கள். மக்களுக்கு எதையும் கூற வேண்டும் என்றில்லாமல், சகல உறவுமுறைகளினதும் சகல சக்திகளினதும் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை எப்போதும் வைத்திருங்கள்.

சுலோகம்:
மற்றவர்களைத் திருத்துவதற்குப் பதிலாக, தந்தையுடன் நல்ல இணைப்பை வைத்திருங்கள்.