23.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த ஆதியும் அநாதியுமான நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்து செல்லும் எந்தவொரு காட்சியும், ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் நிகழும். எனவே, எப்போதும் கவலையற்றவராக இருங்கள்.

கேள்வி:
இந்த உலகம் இப்பொழுது அதன் தமோபிரதான் ஸ்திதியை அடைந்து விட்டதைக் குறிக்கும் அறிகுறிகள் எவை?

பதில்:
நாளுக்கு நாள், கிளர்ச்சிகள் தொடர்ந்தும் நிகழ்வதுடன், அதிகளவு கலவரங்களும் உள்ளன. கொள்ளையர்கள் மக்களைத் தாக்கிவிட்டு அனைத்தையும் கொள்ளையிடுகிறார்கள். பருவகாலம் தப்பிய மழையால் அதிகளவு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் அனைத்தும் இந்த உலகம் தமோபிரதான் என்பதைக் குறிக்கின்றன. தமோபிரதான் இயற்கை தொடர்ந்தும் துன்பத்தை விளைவிக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தின் இரகசியங்களை அறிவீர்கள். எனவே, இது எதுவும் புதியதல்ல என நீங்கள் கூறுகிறீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய உங்கள் மீது இப்போது ஞான மழை பொழியப்படுகிறது. இப்போது நீங்கள் அனைவரும் சங்கமயுகத்தவர்கள்;. ஏனைய மனிதர்கள் அனைவரும் கலியுகவாசிகள். தற்சமயம், உலகில் உள்ள மக்கள் பல்வேறு கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒரேயொரு வழிகாட்டலை மாத்திரமே கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கடவுளிடமிருந்து மாத்திரமே இந்த ஒரேயொரு வழிகாட்டலைப் பெறுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில், மக்கள் மந்திரங்களை உச்சரித்து, தவமிருந்து, யாத்திரைகள் செல்வது போன்றவற்றைச் செய்கிறார்கள்; இவை கடவுளை அடையும் வழிகள் என அவர்கள் நினைக்கிறார்கள். பக்தி செய்த பின்னரே ஒருவரால் கடவுளை அடைய முடியுமென அவர்கள் கூறுகிறார்கள். ஆனால்;, எப்போது பக்தி ஆரம்பமாகுகின்றது என்றோ அல்லது எவ்வளவு காலம் அது நீடிக்கின்றது என்றோ அவர்களுக்குத் தெரியாது. பக்தியினூடாகத் தாங்கள் கடவுளை அடைவதாக அவர்கள் வெறுமனே கூறுகிறார்கள். இதனாலேயே, அவர்கள் பல வகைகளில் பக்தி செய்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இருந்தே தாங்கள் தொடர்ந்து பக்தி செய்வதாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு நாள் தாங்கள் நிச்சயமாகக் கடவுளை அடைவார்கள் என்றும், ஏதாவதொரு ரூபத்தில் தாங்கள் கடவுளை அடைவார்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன செய்வார்? அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர் என்பதனால், அவர் நிச்சயமாகச் சற்கதியை அருளுவார். கடவுளைத் தூய்மையாக்குபவர் என்றும், ஞானக்கடல் என்றும் அவர்கள் கடவுளைப் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பாடினாலும், அவர்களுக்குக் கடவுள் யார் என்றோ அல்லது அவர் எப்போது வருகிறார் என்பதோ தெரியாது. ஞானத்தினூடாக மாத்திரமே சற்கதியைப் பெறமுடியும். ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரியானவர்களாக இருப்பதைப் போன்று, கடவுளும் அசரீரியானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். பின்னர் நாங்கள் சரீரங்களை எடுக்கிறோம். ஆத்மாக்களாகிய நாங்கள் பரந்தாமத்தில் தந்தையுடன் வசிக்கிறோம்;. நாங்கள் இவ்விடத்து வாசிகள் அல்ல. நீங்கள் ஆதியில் எங்கு வசித்தீர்கள் என்பதை மிகச்சரியாக அவர்களால் உங்களுக்குக் கூறமுடியாது. சிலர் தாங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், எவராலும் இங்கிருந்து நேரடியாகச் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாது. சிலர் தாங்கள் அநாதியான ஒளியுடன் இரண்டறக் கலப்பார்கள் எனக் கூறுகிறார்கள். அதுவும் தவறானதே. அவ்வாறாயின், ஆத்மாக்கள் அழியக்கூடியவர்கள் என்று ஆகிவிடும். அநாதியான முக்தி (மோட்சம்) என்பதும் கிடையாது. அவர்கள் அநாதியான ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட நாடகத்தைப் பற்றிப் பேசுவதனால், அது சக்கரம் தொடர்ந்தும் சுழல்வதையே குறிக்கிறது. வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் நிகழும். எவ்வாறாயினும், இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அவர்களுக்குச் சக்கரத்தைப் பற்றியும் தெரியாது, கடவுளைப் பற்றியும் தெரியாது. அவர்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு அலைந்து திரிகிறார்கள். கடவுள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் கடவுளைத் தந்தை என அழைக்கிறீர்கள். எனவே, எங்களுக்கு ஒரு லௌதீகத் தந்தை இருந்தாலும், நாங்கள் அந்த ஒரேயொருவரை நினைவு செய்வதனால், இரு தந்தையர்கள் - லௌகீகமானவரும் (இந்த உலகிற்குரியவர்), பரலோகத்தில் உள்ளவரும் (இந்த உலகிற்கு அப்பாற்பட்டவர்) - இருக்கிறார்கள் என்பது புத்தியில் புகவேண்டும். அந்தப் பரலோகத் தந்தையை அடைவதற்கு மக்கள் அதிகளவு பக்தி செய்கிறார்கள். அவர் பரலோகத்தில் (அப்பாற்பட்ட உலகில்) வசிக்கிறார். அசரீரி உலகம் என்பது நிச்சயமாக உள்ளது. மக்கள் செய்கின்ற அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். பக்தியே, பக்தி மாத்திரமே இராவண இராச்சியத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. ஞானம் இருக்க முடியாது. பக்தியினூடாக ஒருபோதும் சற்கதி இருக்க முடியாது. சற்கதியை அருளும் தந்தையை மக்கள் நினைவு செய்கிறார்கள். எனவே, அவர் நிச்சயமாக ஏதோவொரு வேளையில் வந்து சற்கதியை அருளியிருக்க வேண்டும். இந்த உலகம் முற்றிலும் தமோபிரதானானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது முன்னர் சதோபிரதானாக இருந்தது; இப்போது அது தமோபிரதான் ஆகிவிட்டது. கிளர்ச்சிகள் பல தொடர்ந்தும் இடம்பெறும். அதிகளவு கலவரங்கள் உள்ளன, கொள்ளையர்கள் தொடர்ந்தும் அனைத்தையும் கொள்ளையடிக்கிறர்கள். அவர்கள் மக்களை அடித்துவிட்டு, அவர்களின் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். மக்களை மயக்கமடையச் செய்வதற்காக அவர்களை அனைத்துவிதமான மருந்து வகைகளையும் நுகரும்படி செய்கிறார்கள். இது இராவண இராச்சியமாகும். இது ஒரு மிகப்பெரிய எல்லையற்ற நாடகமாகும். சக்கரம் சுழன்று வர 5000 வருடங்கள் செல்கின்றன. ஒரு மேடை நாடகம் சினிமாப்; படத்தைப் போன்றது; இதனை மேடை நாடகம் என அழைக்க முடியாது. ஒரு மேடை நாடகத்தில் நடிகர் ஒருவர் சுகயீனமுற்றால், அவருக்காக இன்னொருவர் நடிக்க முடியும், ஆனால் இந்த நாடகத்தில் இது சாத்தியமில்லை. இந்த நாடகம் அநாதியானது. உதாரணமாக, யாராவதொருவர் சுகயீனமுற்றால், அவர் அவ்வாறு நோய்வாய்ப்படுவது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும். இந்த நாடகம் அநாதியாக ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தைப் பற்றி நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது, அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். இந்த நாடகம் எல்லையற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நடிகர்களே ஒரு கல்பத்தின் பின்னரும் இருப்பார்கள். எவ்வாறு இப்போது மழை பொழிகிறதோ, அவ்வாறே ஒரு கல்பத்தின் பின்னரும் மழை பொழியும். அதேபோன்று, அதே கிளர்ச்சிகள் நிகழும். இந்த ஞான மழை அனைவர் மீதும் பொழிவதில்லை எனக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், ஞானக்கடலான கடவுள் வந்து விட்டார் எனும் ஒலி நிச்சயமாக அனைவரையும் சென்றடையும். உங்களுடைய பிரதானமான பாடம் யோகமாகும். நீங்கள் மாத்திரமே இந்த ஞான மழையைச் செவிமடுக்கிறீர்கள். ஆனால் அந்த மழையோ முழு உலகின் மீதும் பொழிகிறது. உங்களுடைய யோகத்தினூடாக சதா அமைதி கிடைக்கிறது. சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்குக் கடவுள் வந்திருக்கிறார் என நீங்கள் அனைவருக்கும் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், பலரும் தங்களைக் கடவுள் என அழைக்கிறார்கள். எனவே, யார் உங்களை நம்புவார்கள்? இதனாலேயே, பலரில் வெகு சிலரே வெளிப்படுவார்கள் எனத் தந்தை கூறுகிறார். உங்கள் மத்தியிலும், தந்தையாகிய கடவுள் வந்துள்ளார் என்பதை நீங்கள் வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெற வேண்டும். நீங்கள் எவ்வாறு தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்றும் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதிக் கொள்ளுங்கள். மக்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டனர். தந்தை கூறுகிறார்: மனித ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகும்போது மாத்திரமே நான் வருகிறேன். நீங்கள் மிகவும் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள்! நான் இப்போது உங்களைச் சதோபிரதான் ஆக்குவதற்காக வந்துள்ளேன். முன்னைய கல்பத்திலும், உங்களால் எவ்வாறு தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகமுடியும் என நான் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன்: என்னை நினைவு செய்யுங்கள்! நான் உங்களுக்கு எனது சொந்த அறிமுகத்தையும், படைப்பின் அறிமுகத்தையும் வழங்குகிறேன். இராவண இராச்சியத்தில் உள்ள அனைவரும் தந்தையை நினைவு செய்கிறார்கள். ஆத்மாக்கள் தங்கள் தந்தையை நினைவு செய்கிறார்கள். தந்தை சரீரமற்றவர். அவர் ஒரு புள்ளி. அவருக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள், சாலிகிராம்கள் என அழைக்கப்படுகிறீர்கள், தந்தை சிவன் என அழைக்கப்படுகிறார். குழந்தைகளாகிய உங்களுடைய சரீரங்களுக்கே பெயர்கள் வழங்கப்படுகின்றன, ஆனால், தந்தையே பரமாத்மா ஆவார்; அவர் சரீரம் ஒன்றை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர் இவரில் பிரவேசித்துள்ளார். இது பிரம்மாவின் சரீரம் ஆகும்; இவர் சிவன் என அழைக்கப்படுவதில்லை. உங்களுடைய பெயர் ஆத்மா என்பதாகும். நீங்கள் ஒரு சரீரத்தில் பிரவேசிக்கிறீர்கள். பரமாத்மாவே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. எனவே, அனைவரும் இரு தந்தையர்களைக் கொண்டிருக்கிறார்கள்: ஒருவர் அசரீரியானவர், மற்றவர் சரீரதாரியாவார். இவர் பின்னர் அலௌகீக அற்புதமான தந்தை என அழைக்கப்படுகிறார். பல குழந்தைகள் இருக்கிறார்கள். பல பிரஜாபிதா பிரம்ம குமாரர்களும் குமாரிகளும் இருப்பதனால், மக்களால் இதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது என்ன வகையான தர்மம் என அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. குமார்களும் குமாரிகளும் என்ற வார்த்தைகள் குடும்பப் பாதைக்குரியவை என நீங்கள் அறிவீர்கள். பெற்றோர்களும் புதல்வர்களும் புதல்விகளும் இருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் அவரை நினைவு செய்கிறார்கள்: நீங்களே தாயும்; நீங்களே தந்தையும்;. நீங்கள் இப்போது தாயும் தந்தையுமானவரைக் கண்டு கொண்டீர்கள், அவர் உங்களைத் தத்தெடுத்துள்ளார். சத்தியயுகத்தில் எவரையும் தத்தெடுப்பதில்லை; அங்கு தத்தெடுப்பது பற்றிய குறிப்பே இல்லை. இந்த வார்த்தை இங்கேயே உள்ளது. ஏனைய தந்தையர் எல்லைக்குட்பட்டவர்கள், ஆனால், அந்த ஒரேயொருவரோ எல்லையற்ற தந்தை. இது ஓர் எல்லையற்ற தத்தெடுத்தல் ஆகும். இது ஒரு மிக ஆழமான இரகசியமும், இதனைப் புரிந்து கொள்வதற்குத் தகுதியானதுமாகும். நீங்கள் எவருக்கும் எதையும் முழுமையாக விளங்கப்படுத்துவதில்லை. யாராவதொருவர் முதற்தடவையாக இங்கு வந்து, எங்கள் குருவின் தரிசனம் பெற வேண்டும் எனக் கேட்டால், அவருக்கு இவ்வாறு கூறுங்கள்: இது ஓர் ஆலயம் அல்ல. பெயர்ப் பலகையில் என்ன எழுதியிருக்கிறது எனப் பாருங்கள். பல பிரம்மகுமார்களும் குமாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பிரஜாபிதாவின் குழந்தைகள் ஆவார்கள். நீங்களும் மக்களில் ஒருவரே. கடவுள் உலகைப் படைக்கிறார். அவர் எங்களையும்; பிரம்மாவின் தாமரை உதடுகளினூடாகப் படைக்கிறார்;. நாங்கள் புதிய உலகிற்கு உரியவர்கள். ஆனால் நீங்கள் பழைய உலகிற்கு உரியவர்கள். சங்கமயுகத்திலேயே, நாங்கள் புது உலகிற்கு உரியவர்கள் ஆக்கப்படுகிறோம். இது அதிமேன்மையான மனிதர்கள் ஆகுவதற்குரிய யுகமாகும். நீங்கள் சங்கமயுகத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள், ஆனால் ஏனைய அனைவரும் கலியுகத்தில் இருக்கிறார்கள். இது பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்றதாகும். இப்போது, எவ்வளவு பிரிவினைகள் உள்ளன எனப் பாருங்கள்! ஒவ்வொரு மதத்தலைவரும் எவரும் தனது நிலையை விட்டு நீங்காத வகையில், தனது சொந்த மக்களைப் பராமரித்து, அவர்களுக்குச் சமமானவர்களையும் தனது சொந்த மதத்தைச் சார்ந்த அனைவரையும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புகிறார். முன்னர், ஓர் அரசர் தனது குடிமக்களின் மீது உரிமையைக் கொண்டிருந்தார். அரசரே பெற்றோராகவும், உணவை அளிப்பவராகவும் கருதப்பட்டார். இப்போது அரசர்களோ அல்லது அரசிகளோ கிடையாது. அனைத்தும் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. அதிகளவு கிளர்ச்சிகளும் கலவரமும் உள்ளன. சடுதியாக வெள்ளப்பெருக்கும் பூமியதிர்ச்சியும் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் துன்பத்தினூடான மரணம் ஆகும். இப்போது நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதைப் பிராமணர்களாகிய நீங்கள்; மாத்திரமே இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். எனவே, நீங்கள் ஒருவரோடு ஒருவர் அதிகளவு அன்புடன், பாலும் சீனியும் போன்று வாழவேண்டும். நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்தைகள். எனவே, உங்களுக்கிடையே பெருமளவு அன்பு இருக்க வேண்டும். ஆட்டுக்குட்டியும் சிங்கமும் மிக வலிமையான எதிரிகள், எனினும், இராம இராச்சியத்தில் அவை ஒரே ஓடையில் நீர் அருந்துகின்றன. இங்கு, ஒவ்வொரு வீட்டிலும் சண்டை நிகழ்கிறது. நாடுகளுக்கிடையே யுத்தங்கள் நிகழ்கின்றன. அவர்களின் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களால், அவர்கள் தங்கள் மத்தியிலும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் பல தடவைகள் தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைக் கோரிப் பின்னர் அதனை இழந்தீர்கள் என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். அதாவது, நீங்கள் இராவணனை வென்றீர்கள், பின்னர் அவனால் தோற்கடிக்கப்பட்டீர்கள். ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் நாங்கள்; உலக அதிபதிகள் ஆகுகிறோம். இதனாலேயே, அவர் அதிமேலான கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைவரின் துன்பத்தையும் அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என அழைக்கப்படுகிறார். அவர் இப்போது உங்களுக்குச் சந்தோஷப் பாதையைக் காட்டுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போன்றிருக்க வேண்டும். உலக மக்கள் உவர்நீரைப் போன்றிருக்கிறார்கள்; அவர்கள் ஒருவரையொருவர் கொல்வதற்கு அதிக காலம் எடுப்பதில்லை. நீங்கள் கடவுளின் குழந்தைகள், எனவே, நீங்கள் பாலும் சீனியும் போன்றிருக்க வேண்டும். கடவுளின் குழந்தைகளாகிய நீங்கள் தேவதேவியர்களை விடவும் உயர்ந்தவர்கள். நீங்கள் அதிகளவில் கடவுளின் உதவியாளர்கள் ஆகியுள்ளீர்கள். மக்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்காக நீங்கள் அவருக்கு உதவி செய்கிறீர்கள். எனவே, நீங்களும் மேன்மையான மனிதர்களே என்பதை உங்கள் இதயத்தில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கிறீர்களா? அசுர குணங்களைக் கொண்ட ஒருவர் தந்தையின் குழந்தை எனக் கருதப்பட மாட்டார். இதனாலேயே, சற்குருவை அவதூறு செய்;பவரால் இலக்கினை அடைய முடியாது எனக் கூறப்படுகிறது. கலியுகக் குருமார்கள் இவ்வாறு தங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, மக்களை அச்சம் கொள்ளுமாறு செய்கிறார்கள். எனவே, தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: தகுதிவாய்ந்த குழந்தைகள் தந்தையின் பெயரைப் புகழடைடையச் செய்வதுடன், பாலும் சீனியும் போன்று ஒன்றாக வாழ்பவர்கள் ஆவார்கள். தந்தை எப்போதும் கூறுகிறார்: பாலும் சீனியும் போன்றிருங்கள். சண்டையிட்டு, உவர்நீர் போன்று ஆகாதீர்கள். இங்கேயே நீங்கள் பாலும் சீனியும் போன்று ஆகவேண்டும். நீங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் ஆதலால், நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பினைக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் அதி அன்பானவராக இருப்பதனாலேயே அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். எனவே, நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமளவு அன்பைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின், நீங்கள் தந்தையின் கௌரவம் இழக்கப்படுவதற்குக் காரணமாகுவீர்கள். கடவுளின் குழந்தைகள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் உவர்நீரைப் போன்றிருக்க முடியும்? அப்போது அவர்களால் எவ்வாறு ஓர் அந்தஸ்தைப் பெற முடியும்? தந்தை கூறுகிறார்: ஒருவரோடு ஒருவர் பாலும் சீனியும் போன்று வாழுங்கள். நீங்கள் உவர்நீரைப் போன்று ஆகினால், உங்களால் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க முடியாது. நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றாவிடின், எவ்வாறு உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியும்? நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுவதனால், ஒருவரோடு ஒருவர் சண்டை செய்கிறீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக இருந்தால், எந்தவிதமான முரண்பாடுகளும் இருக்க மாட்டாது. நீங்கள் தந்தையாகிய கடவுளைக் கண்டு கொண்டீர்கள், எனவே, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையைப் போன்று ஆகவேண்டும். எவ்வாறு தந்தை தூய்மை, சந்தோஷம், அன்பு போன்றவற்றைக் கொண்டிருக்கிறாரோ, அவ்வாறே நீங்களும் அவரைப் போன்று ஆகவேண்டும். இல்லாவிடின், உங்களால் ஓர் உயர்ந்த் அந்தஸ்தைக் கோர முடியாது. தந்தையுடன் கற்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள். பலருக்கும் நன்மையை ஏற்படுத்துபவர்களால் அரசர்களாகவும் அரசிகளாகவும் ஆகமுடியும். எஞ்சிய அனைவரும் பணிப்பெண்களாகவும் வேலையாட்;களாகவுமே ஆகுகிறார்கள். நீங்கள் என்னவாக ஆகுவீர்கள் என உங்களில் எவராலும் புரிந்துகொள்ள முடியும். கற்கின்ற ஒருவரால், அதற்கேற்ப, தான் எவ்வாறு பாபாவின் பெயரைப் புகழடையச் செய்யப் போகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கடவுளின் குழந்தைகளைப் பார்க்கின்ற எவரும் மிகவும் சந்தோஷப்படும் வகையில், அவர்கள் அதி அன்பானவர்களாக இருக்க வேண்டும். பாபாவும் அவர்களை மிக இனிமையானவர்களெனக் கண்டு கொள்வார். அனைத்திற்கும் முதலில், ஒருவரின் சொந்த வீடு சீர்திருத்தப்பட வேண்டும் - முதலில் குடும்பம், பின்னர் மற்றவர்கள். உங்களுடைய இல்லறத்தில் வசிக்கும்போது, தாமரை போன்று தூய்மையாகவும், பாலும் சீனியும் போன்றும் வாழுங்கள். உங்களைப் பார்க்கும் எவரும், ஓ, இதுவே சுவர்க்கம்! எனக் கூறவேண்டும். ஞானத்திற்கு முன்னர், பாபா இத்தகைய குடும்பங்களைக் கண்டுள்ளார், ஆறு அல்லது ஏழு புதல்வர்கள் திருமணம் செய்த பின்னரும் ஒரே குடும்பத்தில் வசிப்பதுடன், அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து பக்தி செய்வதைப் பார்த்திருக்கிறார். அந்த வீட்டில் முழுமையான அமைதி நிலவியது. நீங்கள் கடவுளின் குடும்பத்திற்கு உரியவர்கள். அன்னங்களும் நாரைகளும் ஒன்றாக வாழ முடியாது. நீங்கள் அன்னங்கள் ஆகவேண்டும். நீங்கள் உவர்நீரைப் போன்று ஆகினால் பாபா அதனை விரும்ப மாட்டார். தந்தை இவ்வாறு கூறுவார்: நீங்கள் எனது பெயரை அதிகளவு அவதூறு செய்து விட்டீர்கள்! நீங்கள் பாலும் சீனியும் போன்று வாழாவிட்டால், உங்களால் சுவர்க்கத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் பெருமளவு தண்டனையை அனுபவம் செய்வீர்கள். தந்தைக்குரியவர் ஆகியபின்னர், நீங்கள் உவர்நீரைப் போன்று ஆகினால், நீங்கள் நூறு மடங்கு தண்டனையை அனுபவம் செய்வதுடன், நீங்கள் அடையப் போகும் அந்தஸ்தின் காட்சிகளையும் தொடர்ந்தும் பெறுவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் கடவுளின் குழந்தைகள், நீங்கள் அதி அன்பானவர்கள் ஆகவேண்டும் என்பதில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். நீங்க்ள ஒருவரோடு ஒருவர் உவர்நீரைப் போன்று இருக்கக்கூடாது. முதலில், உங்களைச் சீர்திருத்திப் பின்னர், மற்றவர்களை சீர்திருத்துவதற்கான கற்பித்தல்களை அவர்களுக்கு வழங்குங்கள்.

2. எவ்வாறு தந்தை தூய்மை சந்தோஷம் அன்பு மற்றும் சகல நற்குணங்களையும் கொண்டிருக்கிறாரோ அவ்வாறே நீங்களும் தந்தையைப் போன்று ஆகவேண்டும். சற்குருவை அவதூறு செய்கின்ற எச் செயல்களையும் செய்யாதீர்கள். உங்கள் நடத்தையினூடாக நீங்கள் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்ய வேண்டும்.

ஆசீர்வாதம்:
ஒரு தெளிவான தொடர்பைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் எப்பொழுதும் தயாராக இருந்து முதல் இலக்கத்தில் சித்தி எய்துவீர்களாக.

தொடர்ச்சியாக எப்பொழுதும் தயாராக இருப்பது பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். உங்கள் புத்தியின் ரேகை மிகத்தெளிவாக இருக்கட்டும். தந்தையிடமிருந்து ஒரு சமிக்ஞை கிடைத்ததும் நீங்கள் எப்பொழுதும் தயாரானவராகி விடுவீர்கள். அந்த நேரத்தில் எதனைப் பற்றியும் சிந்திக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கட்டும். சடுதியாக உங்களிடம், ஒரு கேள்வி கேட்கப்படும். உங்களுக்கு ஒரு உத்தரவு கொடுக்கப்படும்.,இங்கே உட்காருமாறும், எங்கேயாவது செல்லுமாறும் உங்களுக்குக் கூறப்படும். அந்த நேரத்தில் நீங்கள் எந்தவொரு சூழ்நிலையையோ உறவினரையோ நினைவு செய்யக்கூடாது. அப்பொழுதே நீங்கள் முதல் இலக்கத்தில் சித்தி எய்துவீர்கள். எவ்வாறாயினும் நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கவேண்டும். ஏனெனில் இது ஒரு சடுதியான வினாத்தாள் ஆகும்.

சுலோகம்:
உங்கள் மனதை சக்திவாய்ந்ததாக ஆக்குவதற்கு ஆத்மாவாகிய சுயத்திற்கு கடவுளின் விழிப்புணர்வையும் சக்தியையும் உணவாகக் கொடுங்கள்.