23.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, இங்கு உங்களிடம் உள்ள பலமில்லியன்களினால், அங்கு எவ்விதப் பயனும் இருக்கமாட்டாது. அனைத்துமே மண்ணோடு மண்ணாகப் போகின்றது. ஆகவே, இப்பொழுது சத்திய உலகிற்கான உண்மையான வருமானத்தைச் சம்பாதியுங்கள்.

கேள்வி:
பிராமணர்களாகிய நீங்கள் எந்த விடயத்தினால், தேவர்களிலும் மேலானவர்களாகக் கருதப்படுகின்றீர்கள்?

பதில்:
பிராமணர்களாகிய நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் ஆன்மீக ரீதியாகச் சேவை செய்கின்றீர்கள். நீங்கள், பரமாத்மாவாகிய தந்தையைச் சந்திக்கின்ற அனுபத்தை ஆத்மாக்களுக்குச் சாத்தியமாக்குகின்றீர்கள். தேவர்கள் பொதுச் சேவை செய்வதில்லை. அங்கு அரசனும் அரசியும் எவ்வாறோ அவ்வாறே பிரஜைகளும் இருப்பார்கள். அவர்கள் இங்கு செய்த முயற்சியின் பலனை அனுபவம் செய்கின்றார்கள். அவர்கள் எவ்விதச் சேவையையும் செய்வதில்லை. இதனாலேயே பிராமண சேவையாளராகிய நீங்கள், தேவர்களிலும் மிகவும் மேன்மையானவர்கள்.

ஓம் சாந்தி.
இது யாருடைய ஒன்றுகூடல்? இது மனித ஆத்மாக்களினதும், பரமாத்மாவினுடையதும் ஆகும். சரீரமுடைய ஒருவர், சரீரத்திலுள்ள ஒரு மனிதர் எனக் கூறப்படுகிறார். எனினும் மற்றவர் பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். பரமாத்மாவிடமிருந்து மனித ஆத்மாக்கள் நீண்ட காலமாகப் பிரிக்கப்பட்டிருந்தனர், அத்துடன் இப்பொழுது இது ஓரு மங்களகரமான சந்திப்பு எனக் கருதப்படுகிறது. பரமாத்மாவாகிய பரமதந்தையை மனித ஆத்மா என அழைக்கமுடியாது ஏனெனில் அவர் ஒரு சரீரத்தைக் கடனாகவே எடுக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஒரு சரீரத்தின் ஆதாரத்தை எடுக்கின்றார். அவரே வந்து கூறுகின்றார்: குழந்தைகளே, நானும், இந்தத் தத்துவங்களின் உதவியை எடுக்க வேண்டியுள்ளது. நான் ஒரு கர்ப்பப்பையினுள் பிரவேசிப்பதில்லை. நான் இவரில் அவதாரம் எடுத்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். மனித ஆத்மாக்களாகிய உங்களுக்கு உங்கள் சொந்தச் சரீரங்கள் உள்ளன. எனக்கு, எனக்கெனச் சொந்தச் சரீரம் இல்லை, எனவே இது ஒரு தனித்துவமான ஒன்றுகூடலாகும். எங்களுக்கு ஒரு குரு, சீடர்கள் அல்லது பின்பற்றுபவர்கள் இருக்கின்றார்கள் என்பதல்ல. இல்லை, இது ஒரு பாடசாலை ஆகும். குரு விட்டுச் சென்றதும் உங்களுக்குச் சிம்மாசனம் கிடைக்கும் என்பதல்ல. இங்கு சிம்மாசனம் என்ற கேள்விக்கே இடமில்லை. யார் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்குள்ளது. நம்பிக்கையில்லாத எவரும் இங்கு வருவதில்லை. பிராமண குலம் மனித ஆத்மாக்களின் குலம் ஆகும். ஏனெனில் பரமாத்மாவாகிய பரமதந்தை பிரம்மாவின் மூலம் பிராமணர்களை உருவாக்குகின்றார். பிராமணர்களாகிய நீங்கள் மிகவும் மேன்மையானவர்கள், தேவர்களிலும் மிக மேன்மையானவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவர்கள் பொதுச் சேவை செய்வதில்லை. அங்கே அரசன் அரசி எப்படியோ பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள். அவர்கள் தாங்கள் செய்த முயற்சிக்கேற்ப வெகுமதியை அனுபவம் செய்வார்கள். அங்கு எவருமே சேவை செய்வதில்லை. பிராமணர்களே சேவை செய்கின்றார்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செய்ததைப் போன்றே, எல்லையற்ற தந்தையிடமிருந்து இராஜயோகம் கற்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் குழந்தைகள். சீடர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை மீண்டும் மீண்டும் உங்களை குழந்தைகளே, என அழைத்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுள்ளவர்களாக ஆகியுள்ளீர்கள். ஆத்மா அழிவற்றவர். எனினும் சரீரம் அழியக்கூடியது. சரீரம் ஆடை எனக் கூறப்படுகிறது. அது அழுக்கான தூய்மையற்ற ஆடை, ஏனெனில் ஆத்மா அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றியதுடன் பாவத்தில் ஈடுபட்டு அதனால் தூய்மையற்றவர் ஆகிவிட்டார். தூய, தூய்மையற்ற என்னும் சொற்கள் முக்கியமாக விகாரங்களுடன் தொடர்புள்ளவை. தந்தை கூறுகின்றார்: இனிமேலும் தூய்மையற்றவர்கள் ஆகாதீர்கள். இந்தநேரத்தில், அனைவரும் இராவணனின் சங்கிலியில் சிக்குண்டுள்ளனர், ஏனெனில் இது இராவணனின் இராச்சியமாகும். ஆகவே தந்தை உங்களை இராவணனின் இராச்சியத்தில் இருந்து விடுதலை செய்து இராம இராச்சியத்திற்கு அனுப்புகின்றார். அவர்கள் கூறுகின்றார்கள்: தந்தையாகிய கடவுளே, விடுதலை அளிப்பவர் ஆவார். அவர் கூறுகின்றார்: நான் அனைவரையும் துன்பத்தில் இருந்து விடுவித்;து அவர்களை மீண்டும் அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அங்கிருந்த குழந்தைகளாகிய நீங்கள் கீழே வந்து, புதிதாக உங்கள் பாகங்களை மீண்டும் நடிக்கின்றீர்கள். முதலில் தேவர்கள் தங்கள் பாகத்தை மீண்டும் நடிக்கவேண்டும். அவர்களே முதலில் வந்தவர்கள். ஆதி சனாதன தேவ தர்மமானது பிரம்மாவினால் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகின்றது. கலியுகத்தின் விநாசம், முன்னிலையிலேயே உள்ளது. அனைவரும் காரிருளில் இருக்கின்றார்கள். பலர் கோடீஸ்வரர்களாகவும். பல் கோடீஸ்வரர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் இது உங்களைக் கவருவதற்கான இராவணனின் மிகப் பெரிய பகட்டாகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அது மண்னோடு மண்ணாக அழியப் போகும் போலியான வருமானமாகும். அவர்கள் எதனையுமே பெறுவதில்லை. உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுவதற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். இது சத்திய உலகிற்கான உண்மையான வருமானமாகும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். அனைவரும் ஓய்வு ஸ்திதியில் இருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அனைவருக்கும் சற்கதி அருளும் நானே சற்குரு ஆவேன். நான் சாதுக்களையும் தூய்மையற்றவர்களையும் ஈடேற்றுகின்றேன். சிறு குழந்தைகளும் சிவபாபாவை நினைவு செய்வதற்குக் கற்பிக்கப்படுகின்றார்கள். நீங்கள் ஏனைய படங்கள் அனைத்தையும் வீசி விடலாம்: ஒரேயொரு சிவபாபாவே அன்றி வேறு எவரும் இல்லை! எல்லையற்ற சந்தோஷமெனும் ஆஸ்தியை மீண்டும் ஒருமுறை தந்தையிடமிருந்து பெறுவதற்காக வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்திகளை எல்லைக்குட்பட்ட தந்தையர்களிடமிருந்து பிறவிபிறவியாகப் பெற்று வந்துள்ளீர்கள் அத்துடன் நீங்கள் இராவணனின் அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றித் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். மக்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். எனவே அவன் எரிக்கப்பட்டதும் அழிந்திருக்க வேண்டும். அவர்கள் மனித சரீரங்களை எரித்ததும், அவர்களுடைய பெயர்களினதும், உருவங்களினதும் சுவடுகளும் அழிந்துவிடுகின்றன. ஆனால் இராவணனின் பெயரும் உருவமும் அழிவதில்லை. அவர்கள் அவனது கொடும்பாவியை மீண்டும் மீண்டும் எரிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த ஐந்து விகாரங்களும் இராவணனே. அவை 63 பிறவிகளுக்கும் உங்கள் எதிரிகள். பாரதத்தின் எதிரி என்றால் உங்களது எதிரியும் ஆகும். நீங்கள் பாவப்பாதையைப் பின்பற்றத் தொடங்கியதும், இராவணனின் சிறையில் வீழ்ந்தீர்கள். சரியாக அரைக்கல்பமாக, இது இராவணனின் இராச்சியமாகும். இராவணன் எரிக்கப்படுவதும் இல்லை, அவன் மரணிப்பதும் இல்லை. இராவணனின் இராச்சியத்தில் நீங்கள் அதிகளவு துன்பத்தை அனுபவித்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இது துன்பத்திற்கும் சந்தோஷத்திற்குமான ஒரு நாடகமாகும். இப்படிப் பாடப்படுகின்றது: நீங்கள் மாயையினால் தோற்கடிக்கப்பட்டால், நீங்கள் அனைத்தினாலும் தோற்கடிக்கப்படுகிறீர்கள். அத்துடன் நீங்கள் மாயை வெற்றி கொண்டால், உங்களால் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும். நாங்கள் மீண்டும் ஒருமுறை மாயையை வெற்றி கொள்வதுடன், இராம இராச்சியத்தையும் கோருகின்றோம். இராமர் சீதையின் இராச்சியம் திரேதாயுகத்திலும், சத்தியயுகத்தில் இலக்ஷ்மி. நாராயணனின் இராச்சியமும் உள்ளன. அங்கு ஆதி சனாதன தேவதர்மமே இருந்தது. அது தந்தையினால் ஸ்தாபிக்கப்பட்ட இறை இராச்சியம் என அழைக்கப்படுகின்றது. தந்தையை நீங்கள் சர்வவியாபி என அழைக்கமுடியாது, ஏனெனில் இது சகோதரத்துவமாகும். ஒரேயொரு தந்தையே இருக்கின்றார், மற்றும் நீ;ங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆகுவீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து ஆத்மாக்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தையின் கட்டளை: என்னை நினைவு செய்யுங்கள்! நான் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கு வந்துள்ளேன். யாருக்கு? ஆரம்பம் முதல் இறுதி வரை பக்தி செய்தவர்களுக்கு ஆகும். ஆரம்பத்தில், நீங்கள் சிவபாபா ஒருவருக்கே பக்தி செய்தீர்கள். சோமநாதரின் (அமிர்தத்தின் அதிபதி) ஆலயம் எவ்வளவு பெரியது! நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள் என்பதையும், எவ்வாறு நீங்கள் இப்பொழுது சிப்பியின் பெறுமதியளவிற்;கு ஏழையாகியுள்ளீர்கள் என்பதையும், நீங்கள் சிந்திக்க வேண்டும். இப்பொழுது 84 பிறவிகளுக்கான விழிப்புணர்வு உங்களிடம் உள்ளது. எப்படி இருந்த நீங்கள், எவ்வாறு ஆகியுள்ளீர்கள் என்பது இப்பொழுது உங்கள் உணர்வில் பதிந்துள்ளது. விழிப்புணர்வின் சொரூபம் என்னும் வார்த்தைகள் இந்த நேரத்தையே குறிக்கும். இது கடவுள் வந்து கீதையை சமஸ்கிருதத்தில் பேசுகின்றார் என்ற கருத்தல்ல. அது சமஸ்கிருதத்தில் இருந்திருந்தால், குழந்தைகளாகிய உங்களுக்கு எதுவுமே புரியாது. இந்தியே புpரதான மொழி ஆகும். அனைத்தும் பிரம்மாவின் மொழியிலேயே உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சக்கரத்திலும் அவர் இதே மொழியில் விளங்கப்படுத்துகின்றார். பாப்தாதாவின் முன்னால் நீங்கள் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது மம்மா, பாபா, சகோதரர்கள், சகோதரிகளின் குடும்பம் ஆகும். அவ்வளவு தான். அங்கு வேறு எந்த உறவு முறையும் இல்லை. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவுக்கு உரியவர்களாகிய பின்னரே சகோதர, சகோதரி என்னும் உறவுமுறை உள்ளது. ஆத்மாக்களைப் பொறுத்தவரையில், அனைவரும் சகோதரர்கள். நீ;ங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆத்மா அவருடைய தந்தை வந்துள்ளார் என்பதை அறிவார். நீங்கள் பிரம்மாந்தின் (பரந்தாமம்) அதிபதிகள், தந்தையும் பிரம்மாந்தின் அதிபதியாவார். எவ்வாறு ஆத்மாக்கள் அசரீரியானவர்களோ அதே போல் பரமாத்மாவும் அசரீரியானவர். அவரது பெயர் பரமாத்மாவாகிய பரமதந்தை, அதாவது அப்பால் தொலைதூரப் பிரதேசத்தில், வாழும் ஆத்மா. பரமாத்மா என்றால் கடவுள். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இங்கே சாதுக்களோ, சந்நியாசிகளோ அல்லது மகாத்மாக்களோ இல்லை. அனைவரும் குழந்தைகளே. அவர்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருகின்றார்கள். வேறு எவருமே ஒர் ஆஸ்தியை கொடுக்க முடியாது. தந்தை ஒருவரே சத்தியயுகத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் சதா சந்தோஷத்தை மாத்திரம் கொடுக்கின்றார். அவர் சந்தோஷத்தையும் துன்பத்தையும் இரண்டையுமே தருவார் என்பதல்ல. அது நியதி அல்ல. தந்தையே விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் 21 பிறவிகளுக்குத் தேவர்களாகுவதற்காக முயற்சி செய்வதற்கு, நான் உங்களைத் தூண்டுகின்றேன். ஆகவே அவர் சந்தோஷத்தை அருள்பவராவார். அவர் சந்தோஷத்தை அருள்பவரும், துன்பத்தை நீக்குபவரும் ஆவார். உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவர் யார் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அது இராவணன் ஆகும். இது விகார உலகம் என அழைக்கப்படுகின்றது. ஆண்கள், பெண்கள் இருபாலருமே விகாரம் உடையவர்களாக உள்ளனர்.. சத்தியயுகத்தில் இருபாலரும் விகாரமற்றவர்களாக இருந்தனர். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. இராச்சியம் சட்டத்துக்கமைய ஆளப்பட்டது. தத்துவங்கள் உங்கள் கட்டளைகளின்படி செயலாற்றின. அங்கு ஆபத்துக்கள் எதுவும் இல்லை. ஸ்தாபனையின் காட்சிகளைக் குழந்தைகளாகிய நீங்கள் கண்டீர்கள். விநாசம் நிச்சயமாக இடம் பெற வேண்டும். ஹோலி தினத்தன்று அவர்கள் சிலைகளையும், அலங்கார உருவங்களையும் செய்து ஒருவரையெருவர் கேட்பார்கள்: இவரின் வயிற்றிலிருந்து என்ன வெளிவரும்? பின்னர் அவர்கள் பதில் சொல்வார்கள்: ஏவுகணைகள்! உங்களுக்கு எது சரி என்பது தெரியும். அவர்களின் அறிவியல் மிகவும் சக்தி வாய்ந்தது. அது புத்தியின் வேலையாகும். அங்கே விஞ்ஞானத்தின் அகங்காரம் அதிகளவு உள்ளது. அவர்கள் சந்தோஷத்துக்காக ஆகாய விமானம் போன்ற பலவற்றைச் செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் அவற்றினால் விநாசத்துக்கே கொண்டு செல்லப்படுகின்றார்கள். இறுதியில் அவர்கள் தங்கள் சொந்தக் குலத்தையே அழிப்பார்கள். நீங்கள் மறைமுகமானவர்கள். நீங்கள் எவருடனும் ஒரு யுத்தம் செய்வதில்லை. நீங்கள் எவருக்கும் துன்பத்தை விளைவிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் உங்கள் மனம், வார்த்தைகள், அல்லது செயல்களினால் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது. தந்தை எப்போதாவது, எவருக்கேனும், துன்பம் விளைவிக்கின்றாரா? அவர் உங்களை சந்தோஷ உலகிற்கு அதிபதி ஆக்குகின்றார், எனவே நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். பாபா விளங்கப்படுத்தியுள்ளார்: எவராவது எதையாவது உங்களுக்குக் கூறினால், நீங்கள் அமைதியாகவும், முகமலர்;ச்சியாகவும் இருங்கள். யோகத்தில் நிலைத்திருந்து புன்னகை செய்யுங்கள், உங்கள் யோகசக்தியினால் அவர்கள் அமைதியாகி விடுவார்கள். குறிப்பாக ஆசிரியர்களுடைய நடத்தை மிக நன்றாக இருக்க வேண்டும். எவரிலும் வெறுப்பு இருக்கக் கூடாது. தந்தை கூறுகின்றார்: நான் எவர் மீதும் வெறுப்புக் கொள்வதில்லை. நீ;ங்கள் தூய்மையற்றவர்கள். ஆனால் நாடகமே அவ்வாறு ஆக்கியுள்ளது என்பதை நான் அறிவேன். ஒருவரின் நடவடிக்கை எவ்வாறானது என்பதையும், அவருடைய உணவும் பானமும் தூய்மையற்றது என்பதையும் நான் அறிவேன். அவர் தனக்குக் கிடைக்கும் எதையும் உண்பார். அனைவரும் வாழ்க்கையை விரும்புகின்றார்கள். நானும் வாழ்க்கையை விரும்புகின்றேன். இந்த வாழ்க்கையின் மூலம் உங்கள் ஆஸ்தியை பாபாவிடமிருந்து கோர வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். யோகத்தில் இருப்பதனால் உங்கள் ஆயுட்காலம் நீடிக்கும். அத்துடன் சிறிதளவு பாவச்செயல்களே இருக்கும் அதனால் உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கான ஆயுட்காலம் நீடிக்கும். ஒரு வெகுமதி அளிக்கும் முயற்சி இப்பொழுது செய்யப்படுகின்றது. யோகசக்தியின் மூலம் ஆரோக்கியமானவர்களாக ஆகுவதுடன் ஞானத்தின் மூலம் செல்வந்தர்கள் ஆகுகின்றோம். ஆரோக்கியமும் செல்வமும் இருக்கும் போது அங்கே சந்தோஷம் இருக்கும். உங்களிடம் செல்வம் இருக்கின்றது ஆனால் ஆரோக்கியம் இல்லை என்றால், அங்கு சந்தோஷம் இருக்க முடியாது. செல்வம் நிறைந்த பல அரசர்கள் இருக்கின்றார்கள் ஆனால் முடவர்களாகவும் நோயாளிகளாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் ஏதோ பாவச்செயல்களைச் செய்திருக்க வேண்டும், இது அதன் பலனே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தந்தை பல விடயங்களைக் கூறுகின்றார், ஆனால் இங்கு செவிமடுத்தவற்றை நீங்கள் வெளியில் சென்றவுடன் இங்கே விட்டுச் செல்வதாக இருக்கக் கூடாது. நீங்கள் ஞானத்தைக் கிரகிக்கவேண்டும். உங்களால் வேறு எதனையும் நினைவு செய்ய முடியாதுவிடில், சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அவரை மிகவும் மறைமுகமான முறையில், உள்ளுரப் போற்றுங்கள்: பாபா நீங்கள் வந்து, எங்களுக்குக் கற்பிப்பீர்கள் என்பது எனது மனதிலோ அல்லது எனது உணர்விலோ ஒருபொழுதும் தோன்றவில்லை. அசரீரியான, பரமாத்மாவாகிய பரமதந்தை வந்து எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது எந்தச் சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. பாபா, இப்பொழுது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தந்தையின் பெயருக்குப் பதிலாகக் குழந்தையின் பெயரைப் புகுத்தி, கீதையை பொய்யாக்கி விட்டனர். அது கிருஷ்ணரின் தெய்வீக செயல்களாக இருக்க முடியாது. கீதை சங்கமயுகத்தின் சமயநூலாகும், ஆனால் அவர்கள் அதனைத் துவாபரயுகத்திற்குரியதாக்கி உள்ளனர். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, அனைத்தையும் துறந்து, உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் நினைவில் இருக்காமலும், உங்கள் கல்வியில் முழுமூச்சாக ஈடுபடாமலும் இருந்தால் அது நேரத்தை வீணாக்குதல் ஆகும். உங்கள் நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது எனவே நீங்கள் அதனை வீணாக்கக்கூடாது. நீங்கள் உங்கள் ஜீவாதாரத்திற்குச் சம்பாதிக்க வேண்டும். ஆனால் நீங்கள் வீணான எண்ணங்களில் நேரத்தை வீணாக்கக்கூடாது. உங்களின் ஒவ்வொரு வினாடியும் ஒரு வைரத்தைப் போல் பெறுமதி வாய்ந்தவையாகும். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! இதில் செலவு செய்யும் நேரம் நன்மையைத் தரும். எனினும் ஏனைய அனைத்தும் நேரம் வீணாக்குதல் ஆகும். ஓர் அட்டவனையை வைத்து எவ்வளவு நேரம் நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள் எனப் பாருங்கள். அது ஒரேயொரு வார்த்தை மாத்திரமே: மன்மனபவ. அரைக்கல்பமாக உங்களுக்கு விடுதலை வாழ்வும், அத்துடன் அரைக்கல்பத்திற்கு உங்களுக்கு பந்தன வாழ்வும் இருக்கின்றன. நீங்கள் சத்தோபிரதான் ஸ்திதிக்கும் பின்னர் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிக்கும் வந்தீர்கள். நாங்கள் வாழ்க்கையில் விடுதலையாகி வருகின்றோம்;. எங்களை இவ்வாறு ஆக்குபவர் தந்தையாவார். அனைவரும் ஜீவன்முக்தியை பெறுகிறார்கள். அவர்களுடைய சொந்தச் சமயத்துக்கேற்ப, அவர்கள் முதலில் சந்தோஷத்தையும், பின்னர் துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். கீழே இறங்கி வரும் புதிய ஆத்மாக்கள் முதலில் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். சிலர் பெருமளவில் புகழப்படுகின்றார்கள். அவர்கள் புதிய ஆத்மாக்கள், ஆகையால் அவர்களிடம் பலம் உள்ளது. உங்களுக்குள் சந்தோஷத்தின் சங்கீதம் இசைக்க வேண்டும். நாங்கள் பாப்தாதாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றோம். ஒரு புதிய படைப்பு உருவாக்கப்படுகின்றது. இந்நேரத்தில் உங்கள் புகழ் சத்தியயுகத்துப் புகழிலும் மேலானது. சங்கமயுகத்தில் ஜெகதாம்பாளும், இறைவிகளும் இருந்தார்கள். பின்னர் பிராமணர்களும் இருந்தார்கள். இந்த நேரத்தில், நீங்கள் பிராமணர்கள் என்பதையும் பின்னர் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்கள் ஆகுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய ஞாபகார்த்தமாகக் கோயில்கள் கட்டப்படும். நீங்கள் உயிருள்ள தேவர்கள் ஆகுவீர்கள். அவை உயிரற்ற உருவங்கள். அவர்களிடம் கேளுங்கள்: இவர் எவ்வாறு ஒரு தேவர் ஆகினார்? எவராவது ஒருவர் உங்களுடன் பேச வந்தால், விளங்கப்படுத்துங்கள்: நாங்கள் பிராமணர்களாக இருந்தோம், பின்னர் தேவர்கள் ஆகினோம். நீங்கள் உயிர் உள்ளவர்கள். நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள்: இந்த ஞானம் முதற்தரமானது. நீங்கள் ஸ்தாபனையைக் கொண்டுவருகின்றீர்கள். குழந்தைகள் கூறுகின்றார்கள்: இலக்ஷ்மி, நாராயணனின் அந்தஸ்திலும் பார்க்கக் குறைவான எதனையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாங்கள் முழு ஆஸ்தியையும் கோருவோம். நாங்கள் புராதன இராஜயோகம் கற்பதற்கு வந்துள்ளோம் என அனைவரும் கூறுகின்ற அத்தகைய பாடசாலை இதுவாகும். நீங்கள் யோகத்தின் மூலம் தேவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், பின்னர் பிராமணர்களில் இருந்து தேவர்கள் ஆகுவீர்கள். நினைவே பிரதான விடயம் ஆகும். நினைவு செய்வதற்கே மாயை தடைகளை உருவாக்குகின்றாள். நீங்கள் கடுமையாக முயற்சி செய்தாலும், புத்தி இங்கும் அங்கும் அலைகின்றது. இதிலேயே அனைத்து முயற்சிகளும் உள்ளன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையைப் போல சந்தோஷத்தை அருள்பவர் ஆகுங்கள். உங்கள் மனதினாலோ வார்த்தைகளாலோ செயல்களினாலோ எவருக்கும் துன்பம் கொடுக்காதீர்கள். உங்கள் உணர்வில் அமைதி நிறைந்திருக்கச் செய்வதுடன் எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருங்கள்.

2. வீணான எண்ணங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உள்ளுரத் தந்தையைப் போற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
மேன்மையான வழிகாட்டல்களால், எந்தக் கர்ம பந்தனங்களிலிருந்தும் விடுதலையடைந்து, ஒவ்வொரு செயலையும் ஒரு கர்மயோகியாக செய்வீர்களாக.

மேன்மையான வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு செயலையும் செய்யும் குழந்தைகள் எல்லையற்ற ஆன்மிக போதையை கொண்டிருக்கின்றார்கள். செயல்களை செய்யும் போது, அவர்கள் எந்தக் கர்ம பந்தனத்தினாலும் கவரப்படுவதில்லை. அவர்கள் பற்றற்றவர்களாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள். கர்மயோகிகளாக செயல்களை செய்வதால், துன்ப அலைகள் அவர்களை நெருங்க மாட்டாது, அவர்கள் சதா பற்றற்றவராகவும் அன்பாகவும் இருக்கின்றார்கள். எந்த செயலின் பந்தனமும் அவர்களை ஈர்ப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் அதிபதிகளாகவே செயல்களை செய்கின்றார்கள், ஆகையாலேயே அவர்கள் எந்த பந்தனத்திலிருந்தும் விடுபட்டவர்களான ஸ்திதியை அனுபவம் செய்கின்றார்கள். அத்தகைய ஆத்மாக்கள் சதா தாமும் சந்தோஷமாக இருந்து பிறருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்றார்கள்

சுலோகம்:
அனுபவத்தின் அதிகாரி ஆகினால், நீங்கள் என்றுமே ஏமாற்றப்பட மாட்டீர்கள்.