24.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
கடவுள் சிவன் பேசுகிறார்: இனிய குழந்தைகளே, என்னை நினைவுசெய்து, என் மீது அன்பு செலுத்துங்கள், ஏனெனில் நான் மாத்திரமே உங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்கு வருகின்றேன்.

கேள்வி:
தொடர்ந்தும் கவனயீனமாக இருக்கின்ற குழந்தைகளின் உதடுகளிலிருந்து இயல்பாகவே வெளிவருகின்ற வார்த்தைகள் என்ன?

பதில்:
எனது பாக்கியத்தில் என்ன இருக்கின்றதோ, அதை நான் பெறுவேன்! எப்படியாயினும் நான் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வேன்! பாபா கூறுகின்றார்: இவை முயற்சி செய்கின்ற குழந்தைகளின் வார்த்தைகளல்ல. நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முயற்சிக்க வேண்டும். தந்தை உங்களுக்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளதால், கவனயீனமாக இருக்காதீர்கள்!

பாடல்:
உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்துவிடாதீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, நீங்கள் அந்தப் பாடல் வரியின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் உயிர்வாழும்வரை தந்தைக்குரியவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் கல்பம் முழுவதும் எல்லைக்குட்பட்ட தந்தையர்களுக்கு உரியவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தைக்கு மாத்திரம் உரியவர்களாக இருக்கின்றீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தந்தையை விட்டுச் சென்றால், உங்களால் உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெற இயலாது. நீங்கள் விளங்கப்படுத்தினாலும், எவரும் சிறிதளவுடன் திருப்தியடைவதில்லை. மக்களுக்குச் செல்வம் வேண்டும். செல்வம் இல்லாது சந்தோஷம் இருக்க முடியாது. செல்வம் தேவைப்படுகிறது, அமைதி தேவைப்படுகிறது, நோயற்ற சரீரமும் தேவைப்படுகிறது. இன்று உலகில் என்ன இருக்கின்றது என்பதும், நாளை என்ன இடம்பெறப் போகின்றது என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே தெரியும். விநாசம் முன்னே நிற்கின்றது. இந்த விடயங்கள் வேறு எவர் புத்தியிலும் இருப்பதில்லை. விநாசம் முன்னே நிற்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொண்டாலும், அதற்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. யுத்தம் எந்நேரத்திலும் இடம்பெறலாம் எனக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கிறீர்கள். சிறிய பொறி (யுத்தத்தின்) இருந்தாலும், அந்தத் தீ பரவலாகப் பரவுவதற்கு அதிக நேரம் எடுக்காது. இந்தப் பழைய உலகம் அழிவடைய உள்ளது என்பதையும், அதனால் நீங்கள் உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து விரைவாகப் பெறவேண்டும் என்பதையும் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சதா தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்தால், மிகவும் முகமலர்ச்சியுடன் இருக்கிறீர்கள். சரீர உணர்வுடையவர் ஆகியதால், நீங்கள் தந்தையை மறந்து, துன்பத்தைப் பெறுகின்றீர்கள். நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகத் தந்தையை நினைவுசெய்கின்றீர்களோ, அந்தளவுக்கு அதிகமாக எல்லையற்ற தந்தையிடமிருந்து சந்தோஷத்தைப் பெறுவீர்கள். இலக்ஷ்மி நாராயணன் போல் ஆகுவதற்காகவே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். ஓர் அரசர், அரசியினுடைய வேலையாட்களாகவும் பணிப்பெண்களாகவும் ஆகுவதற்கும், பிரஜைகளின் வேலையாட்களாகவும் பணிப்பெண்களாகவும் ஆகுவதற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது செய்கின்ற முயற்சியானது ஒவ்வொரு கல்பத்திலும் காலம் முழுவதற்கும் நிச்சயிக்கப்படுகின்றது. இறுதியில், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்துள்ளீர்கள் என்ற காட்சியைப் பெறுவீர்கள். உங்களுடைய ஸ்திதியைச் சோதிக்குமாறு தந்தை இப்பொழுதும் கூட தொடர்ந்தும் உங்களுக்குக் கூறுகின்றார். சுவர்க்க ஆஸ்தியை எனக்குக் கொடுக்கின்ற இனிமையிலும் இனிமையான பாபாவை நான் எந்தளவு நினைவுசெய்கின்றேன்? உங்களுடைய அனைத்தும் நினைவிலேயே தங்கியுள்ளது. நீங்கள் அதிகமாக நினைவில் நிலைத்திருக்குமளவுக்கு, அதிகமாகச் சந்தோஷமாக இருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் மிகவும் அண்மையில் வந்துவிட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இலக்கு இன்னும் எவ்வளவு தூத்தில் உள்ளதென்று சிலர் மிகவும் களைப்படைந்து, அதிசயிக்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய இலக்கை அடைந்தால், அவர்கள் செய்த முயற்சி, தகுதிவாய்ந்ததாக இருக்கும். உங்கள் இலக்கு என்ன என்பது உலகிற்குத் தெரியாது. கடவுள் என அழைக்கப்படுபவரையும் உலகிற்குத் தெரியாது. அவர்கள் கடவுளைப் பற்றிப் பேசுகின்றார்கள், பின்னர் அவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். நீங்கள் தந்தைக்குரியவர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தெரியும். நீங்கள் இப்பொழுது தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தந்தையை நினைவுசெய்யவே வேண்டும். நீங்கள் ஸ்ரீமத்தைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். நினைவு செய்யாமல் ஓர் ஆத்மாவினால் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக முடியாது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெற்றுக்கொள்வேன். எங்கள் மம்மாவும் பாபாவும் ஆஸ்தியைப் பெற்றுக் கொண்டதைப் போன்றே, நானும் முயற்சி செய்து அவர்களின் சிம்மாசனத்தில் நிச்சயமாக அமர்வேன். மம்மாவும், பாபாவும் இளவரசரும் இளவரசியும் ஆகுகின்றார்கள். நானும் அவ்வாறு ஆகுவேன். பரீட்சை அனைவருக்கும் ஒன்றே. உங்களுக்குச் சிறிதளவே கற்பிக்கப்பட்டுள்ளது: ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்! இதுவே இலகு இராஜயோகத்தின் சக்தி என அறியப்படுகின்றது. நினைவுசெய்வதனால், நீங்கள் பெருமளவு சக்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் பாவச் செயலைச் செய்தால், பெருமளவு தண்டனையை அனுபவம் செய்வதுடன், அந்தஸ்தும் அழிந்து விடுகின்றது என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் நினைவுசெய்வதிலேயே மாயை தடைகளை ஏற்படுத்துகின்றாள். சற்குருவை அவதூறு செய்பவர்களால் தங்களின் இலக்கை அடைய முடியாது என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அம்மக்கள் கூறுகின்றார்கள்: குருவை இழிவுபடுத்துபவர்கள்... அசரீரியானவரை எவரும் புரிந்துகொள்வதில்லை. கடவுள் மாத்திரமே பக்தர்களின் பக்திக்கான பலனை அவர்களுக்குக் கொடுக்கின்றார் என்பது நினைவுகூரப்படுகின்றது. சாதுக்கள், புனிதர்கள் போன்றோரும் பக்தர்கள் ஆவார்கள். பக்தர்கள் கங்கையில் நீராடச் செல்கிறார்கள். பக்தர்களால் பக்தர்களுக்கு எந்தப் பலனையும் கொடுக்க முடியாது. பக்தர்கள் பக்தர்களுக்குப் பலனைக் கொடுப்பார்களாயின், அவர்கள் ஏன் கடவுளை நினைவுசெய்ய வேண்டும்? அது பக்தி மார்க்கமாகும். அனைவரும் பக்தர்கள். கடவுளால் மாத்திரமே பக்தர்களுக்குப் பலனைக் கொடுக்க முடியும். பெருமளவு வழிபாடுகள் போன்றவற்றைச் செய்பவர்கள், குறைந்தளவு வழிபாடு செய்பவர்களுக்குப் பலனைக் கொடுக்கிறார்கள் என்பதல்ல. இல்லை, பக்தி என்றால் பக்தியே! எவ்வாறு அவர்களால் படைப்புக்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க முடியும்? ஆஸ்தியானது படைப்பவரிடமிருந்து மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நேரத்தில் அனைவரும் பக்தர்களே. நீங்கள் ஞானத்தைப் பெறும்பொழுது, பக்தி செய்வதை இயல்பாகவே நிறுத்தி விடுகிறீர்கள். ஞானத்திற்கே வெற்றி கிடைக்கின்றது. ஞானம் இல்லாது எவ்வாறு சற்கதி இருக்க முடியும்? அனைவரும் தமது கர்மக் கணக்குகளை முடித்து, திரும்பிச் செல்கிறார்கள். விநாசம் உங்கள் முன்னால் இருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அதற்கு முன்னரே முயற்சி செய்து, உங்கள் முழுமையான ஆஸ்தியையும் தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்! நீங்கள் தூய உலகிற்குச் செல்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பிராமணர்களாக ஆகுபவர்கள் கருவிகளாகுவார்கள். நீங்கள் பிரம்மாவின் வாய்வழித்தோன்றலான, ஒரு பிராமணர் ஆகாமல் உங்களால் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற முடியாது. குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கே தந்தை அவர்களைப் படைக்கிறார். எவ்வாறாயினும், நீங்கள் சிவபாபாவிற்குரியவர்களே. குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பதற்கே அவர் உலகைப் படைக்கிறார். அவர் சரீரதாரிகளுக்கே ஆஸ்தியைக் கொடுக்கிறார். ஆத்மாக்கள் மேலே வசிக்கிறார்கள். அங்கு, ஆஸ்தி அல்லது வெகுமதி என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து, உங்கள் வெகுமதியைப் பெறுகிறீர்கள்; உலகிற்கு இதில் எதுவுமே தெரியாது. நேரம் இப்பொழுது நெருங்குகிறது. குண்டுகள் சேமித்து வைப்பதற்காக உருவாக்கப்படவில்லை. பல ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. தந்தை இப்பொழுது எங்களுக்குக் கட்டளையிடுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! இல்லாவிடின் நீங்கள் இறுதியிலே பெருமளவு அழ வேண்டி ஏற்படும். எவராவது உயர் கல்விப் பரீட்சையில் சித்தி எய்தாதபொழுது கோபத்தினால் அவர் தன்னைத் தானே மூழ்கடிக்கிறார். இங்கு கோபம் என்ற கேள்விக்கே இடமில்லை. இறுதியிலே நீங்கள் பல காட்சிகளைப் பெறுவீர்கள். நீங்கள் என்னவாகுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்களை முயற்சி செய்யத் தூண்டுவதே தந்தையின் கடமையாகும். குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் செயல்கள் செய்யும்பொழுது, நினைவுசெய்ய மறந்து விடுகிறோம். சிலர் தங்களுக்கு நினைவுசெய்வதற்கே நேரமில்லை என்று கூறுகிறார்கள்;. அப்பொழுது பாபா கூறுவார்: அப்படியாயின், நினைவில் அமர்ந்திருப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது, முயற்சிசெய்து பாபாவை நினைவு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஞாபகப்படுத்துங்கள். ஒன்றாக அமர்ந்திருப்பதனால், உங்களால் மிக நன்றாக நினைவில் நிலைத்திருக்க இயலும்; உங்களுக்கு உதவியும் கிடைக்கும். பிரதான விடயம் தந்தையை நினைவுசெய்வதாகும். வெளிநாட்டிற்குச் செல்பவர்களும் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: தந்தையின் நினைவின் மூலமே உங்களால் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக முடியும். தந்தை கூறுகிறார்: ஒரு விடயத்தை நினைவில் வைத்திருங்கள்;; தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். யோக சக்தி மூலம் அனைத்துப் பாவங்களும் எரிக்கப்படும். தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் உலக அதிபதிகளாகுவீர்கள். பிரதான விடயம் நினைவாகும். இதில் வேறெங்கும் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. வீட்டில் இருந்தவாறே தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் தூய்மையாகாது விட்டால் உங்களால் நினைவில் இருக்க முடியாது. அனைவரும் வந்து, வகுப்பில் கற்க மாட்டார்கள். அவர்கள் ஒரு மந்திரத்தை எடுத்துப் பின்னர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வார்கள். தந்தை உங்களுக்குச் சதோபிரதான் ஆகுவதற்கான வழியை ஏற்கனவே காட்டியுள்ளார். உண்மையில், நீங்கள் உங்கள் நிலையத்திற்குச் செல்லும்பொழுது, பல புதிய கருத்துக்களைக் கேட்கிறீர்கள். ஏதாவது ஒரு காரணத்தால் உங்களால் செல்ல முடியாது விட்டால், பலத்த மழை அல்லது ஊரடங்குச் சட்டம் காரணமாக எவராலும்; வெளியே செல்ல முடியாதிருப்பின், நீங்கள் என்ன செய்வீர்கள்? தந்தை கூறுகிறார்: அது பரவாயில்லை! நீங்கள் ஆலயத்தில் மாத்திரமே சிவனுடைய உருவத்திற்குத் தண்ணீரையும், பாலையும் படைக்க முடியும் என்பதல்ல. நீங்கள் எங்கிருந்தாலும், நினைவில் இருங்கள்! நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் நினைவில் நிலைத்திருங்கள். பிறருக்கும்; கூறுங்கள்: தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தேவர்களாகுவீர்கள். இரண்டு வார்த்தைகளே இருக்கின்றன. நீங்கள் படைப்பவராகிய தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். ஒரேயொருவரே படைப்பவர். அவர் உங்களுக்கு அத்தகையதோர் இலகுவான பாதையைக் காட்டுகிறார்! தந்தையை நினைவுசெய்யுங்கள் என்ற மந்திரம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: இந்தக் குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள்! இன்று, நீங்கள் சிரிக்கிறீர்கள், நாளை நீங்கள் தந்தையை மறந்தீர்களேயாயின், அழவேண்டி ஏற்படும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் முழுமையான ஆஸ்தியையும் பெற வேண்டும். தாங்கள் நிச்சயமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வார்கள் என்றும், எங்கள் பாக்கியத்தில் என்ன இருக்கிறதோ அதை நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்றும் கூறுகின்ற பலர் இருக்கிறார்கள்! அத்தகையோரை முயற்சியாளர்கள் என அழைக்க முடியாது. மக்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இப்பொழுது உங்களால் தந்தையிடமிருந்து உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் கவனயீனமாக இருக்க வேண்டும்? நீங்கள் பாடசாலை ஒன்றில் கற்காவிடின், கற்றவர்களின் முன்னால் தலை வணங்க வேண்டும். தந்தையை முழுமையாக நினைவுசெய்யாதவர்கள், பிரஜைகளின் பணிப்பெண்களாகவும், வேலையாட்களாகவும் ஆகுவார்கள். நீங்கள் அத்துடன் சந்தோஷமடையக்கூடாது. குழந்தைகள் இங்கு தனிப்பட்ட முறையில் வந்து புத்துணர்ச்சி பெற்று மீண்டும் திரும்பிச் செல்கிறார்கள். பலர் பந்தனத்தில் இருக்கின்றார்கள்; அவர்கள் வீட்டில் இருந்தவாறே தந்தையை நினைவுசெய்ய முடியும் என்பதால் அது பரவாயில்லை. மரணம் உங்கள் முன்னால் இருக்கிறது, திடீரென யுத்தம் நடைபெறலாம் எனத் தந்தை அதிகளவு விளங்கப்படுத்துகிறார். யுத்தம் நடைபெறப் போகின்றது என்பதை எங்களால் பார்க்க முடியும். உங்களால் அனைத்தையும் வானொலியின் மூலம் அறிந்துகொள்ள முடியும். அவர்கள் ஒருவரையொருவர் பயமுறுத்துவார்கள்: நீங்கள் தவறாக ஏதாவது ஒன்றைச் செய்தீர்களேயாயின், நாம் இப்படிச் செய்வோம். இவ்வாறு அவர்களுக்கு முற்கூட்டியே எச்சரிக்கை செய்கின்றார்கள். அவர்கள் தமது குண்டுகளையிட்டுப் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, யோக சக்தி மூலம் நீங்கள் இன்னமும் அந்தளவு திறமைசாலிகள் ஆகவில்லை. நாடகத்திற்கு அமைய, யுத்தம் அவ்வாறு ஆரம்பிக்கும் என்றல்ல. குழந்தைகள் இன்னமும் தங்கள் முழு ஆஸ்தியையும் பெற்றுக் கொள்ளவில்லை. முழு இராச்சியமும் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. இன்னமும் சிறிதளவு நேரம் தேவைப்படுகிறது. பாபா உங்களை முயற்சி செய்வதற்குத் தூண்டுகிறார். ஒரு விடயம் எப்பொழுது நடக்கும் என உங்களால் என்றுமே தெரியாது: விமானங்கள்; நொறுங்குகின்றன, புகையிரதங்கள் நொறுங்குகின்றன! மரணமானது மிக இலகுவாகவே முன்னால் இருக்கிறது. நில நடுக்கமும் இருக்கிறது. பூமி அதிர்ச்சிகள் பெரும் பணியைச் செய்ய வேண்டும். நிலம் நடுங்கும்பொழுதே, கட்டடங்கள் போன்றன வீழ்கின்றன. மரணம் வருவதற்கு முன்னர் உங்கள் முழு ஆஸ்தியையும் பெறுங்கள்! எனவே, தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள். பாபா, எனக்கு உங்களைத் தவிர வேறு எவரும் இல்லை! தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் சிறு குழந்தைகளுக்கு இலகுவாக விளங்கப்படுத்துவதைப் போல், தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். அவர் உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. அவரை நினைவுசெய்யுங்கள். காமச் சிதையில் அமர்ந்ததால், நீங்கள் எரிந்து விட்டீர்கள். இப்பொழுது ஞானச் சிதையில் அமர்ந்து, தூய்மையாகுங்கள்! உங்கள் இலக்கு என்ன என மக்கள் உங்களை வினவும்பொழுது அவர்களுக்குக் கூறுங்கள்: அனைவரதும் தந்தையாகிய சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். கலியுகத்தில், அனைவரும் தமோபிரதானாக இருக்கிறார்கள். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார். தந்தை கூறுகிறார்: இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், துரு அகற்றப்படும். உங்களால் குறைந்தபட்சம் இந்தச் செய்தியையேனும் கொடுக்க முடியும்! நீங்கள் நினைவில் இருந்தாலே, உங்களால் மற்றவர்களுக்கும் இதனை நினைவுபடுத்த முடியும். நீங்கள் நினைவில் இருந்தாலேயே, நீங்கள் மற்றவர்களுக்கும் இதைக் கூறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். இல்லாவிடின் இது உங்களின் இதயத்திலிருந்து வரமுடியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் எங்கிருப்பினும், உங்களுக்கு இயலுமானவரை நினைவில் இருங்கள். நீங்கள் யாரையெல்லாம் சந்திக்கிறீர்களோ அவர்களுக்கு இந்த ஆலோசனையைக் கொடுங்கள்: மரணம் உங்கள் முன்னால் இருக்கிறது! தந்தை கூறுகிறார்: நீங்கள் அனைவரும் தமோபிரதானாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது என்னை நினைவுசெய்து, தூய்மையாகுங்கள்! ஆத்மாக்களே தூய்மையற்றவர்களாகி விட்டார்கள். சத்திய யுகத்திலே ஆத்மாக்கள் தூய்மையானவர்கள். தந்தை கூறுகிறார்: நினைவின் மூலமாக மாத்திரமே ஆத்மாக்கள் தூய்மையாகுகின்றார்கள்; வேறெந்த வழியும் இல்லை. அனைவருக்கும் தொடர்ந்து இச்செய்தியைக் கொடுங்கள், பலரும் நன்மை அடைவார்கள். பாபா உங்களுக்கு வேறெந்தச் சிரமத்தையும் கொடுப்பதில்லை. தூய்மையாக்குபவரான தந்தையே ஆத்மாக்கள் அனைவரையும் தூய்மையாக்குகிறார். தந்தை அனைவரையும் அதிமேன்மையானவர்கள் ஆக்குகின்றார். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் பூஜிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். இராவண இராச்சியத்தில் நாங்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றோம். இராம இராச்சியத்திலே நாங்கள்; பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருக்கிறோம். இது இப்பொழுது இராவண இராச்சியத்தின் இறுதி. தந்தையை நினைவுசெய்வதனால், நாங்கள் இப்பொழுது பூஜிப்பவர்களிலிருந்து பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றோம். பிறருக்கும் இப்பாதையைக் காட்டுங்கள். வயது முதிர்ந்த தாய்மார்களும் சேவை செய்ய வேண்டும். உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் இச்செய்தியைக் கொடுங்கள். பல்வகையான ஆன்மீக ஒன்றுகூடல்கள், ஆலயங்கள் போன்றன இருக்கின்றன. உங்களுடையதோ ஒரே வகையானது. தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். சிவபாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். அனைவருக்கும் சற்கதியை அருள்பவராகிய, அசரீரியான சிவபாபா ஆத்மாக்களுக்குக் கூறுகிறார்: என்னை நினைவுசெய்வதனால், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இதனை விளங்கப்படுத்துவது இலகுவானது, இல்லையா? வயோதிபத் தாய்மார்களும் சேவை செய்ய முடியும். இதுவே பிரதான விடயம். நீங்கள் திருமணங்கள் போன்றவற்றிற்குச் செல்லும்பொழுது இதனை அவர்களின் காதுகளில் கூறுங்கள். கீதையின் கடவுள் கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள்! அனைவரும் இதனை விரும்புவார்கள். இதில் மேலதிகமாகக் கூறுவதற்கு எதுவுமேயில்லை. தந்தையின் செய்தியை மாத்திரமே கூறுங்கள்: என்னை நினைவுசெய்யுங்கள்! அச்சா, கடவுள் உங்களுக்குத் தூண்டுதல்களைக் கொடுக்கின்றார் என நினைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் கனவுகளில் காட்சிகளைக் காண்கின்றீர்கள். உங்களால் குரலைச் செவிமடுக்க முடியும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். இதனைப் பற்றி நீங்கள் தொடர்ந்தும் சிந்தித்தீர்களேயானால், உங்கள் படகு அக்கரைக்குச் செல்லும். இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு நடைமுறை ரீதியில் சொந்தமானவர்களாக இருக்கிறோம், தந்தையிடமிருந்து நாங்கள் 21 பிறவிகளுக்கான எங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறோம். எனவே, அந்தச் சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தையை நீங்கள் மறக்கின்றபொழுதே உங்களுக்குச் சிரமங்கள் ஏற்படுகின்றன. தந்தை உங்களுக்கு மிக இலகுவாகக் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்தால், ஆத்மாக்களாகிய நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். உண்மையிலேயே நீங்கள் சரியான பாதையையே கண்டுள்ளீர்கள் என அனைவரும் நினைப்பார்கள். வேறு எவராலும் உங்களுக்கு இப்பாதையைக் காட்ட முடியாது. சாதுக்கள் போன்றோர் சிவபாபாவை நினைவுசெய்யுமாறு கூறினால், யார் அவர்களிடம் செல்வார்கள்? உங்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல முடியாத ஒரு காலமும் வரும். நீங்கள் தந்தையை நினைவுசெய்தவாறே உங்கள் சரீரங்களைத் துறப்பீர்கள். தங்கள் இறுதிக் கணங்களிலே சிவபாபாவை நினைவுசெய்பவர்கள் நாராயணனின் குலத்திற்குள்ளே செல்வார்கள்; அவர்கள் இலக்ஷ்மி நாராயணனது வம்சத்தினுள்ளே செல்வார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவார்கள், அவ்வளவுதான்! தந்தையை நினைவுசெய்து, அவரை நேசியுங்கள். அவரை நினைவுசெய்யாமல், உங்களால் எவ்வாறு அவரை நேசிக்க முடியும்? நீங்கள் சந்தோஷத்தைப் பெறும்பொழுது மாத்திரமே அவரை நேசிக்கிறீர்கள். உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பவரை நீங்கள் நினைவுசெய்ய மாட்டீர்கள். தந்தை கூறுகிறார்: நானே உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறேன். எனவே, என் மீது அன்பு செலுத்துங்கள்! நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சந்தோஷமாக இருப்பதற்கு, நினைவில் நிலைத்திருக்க முயற்சி செய்யுங்கள். யோக சக்தி ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குகிறது. ஒரேயொரு தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்யுங்கள்.

2. ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கு, கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். உங்கள் பாக்கியத்தில் எது உள்ளதோ அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணாதீர்கள். கவனயீனமாக இருப்பதை நிறுத்தி, உங்கள் முழு ஆஸ்திக்குமான உரிமையைக் கோருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய சிந்தித்தலிலும், உங்கள் செயலாற்றுதலிலும் இடையிலுள்ள வேறுபாடு எதனையும் முடித்து விடுவதால், சுயத்தை மாற்றுபவர்களாகவும், உலகை மாற்றுபவர்களாகவும் ஆகுவீர்களாக.

எச் சம்ஸ்காரமோ, சுபாவமோ, வார்த்தையோ அல்லது தொடர்போ மிகச்சரியாக இல்லாவிடின், அது வீணானது ஆகும்: அந்த வீணானதை மாற்றுவதற்கான இயந்திரத்தை விரைவாக்குங்கள். சிந்தித்துச் செயலாற்றுங்கள்: அப்பொழுது மாத்திரமே உலக மாற்றம் எனும் இயந்திரம் விரைவாகும். தற்பொழுது, ஸ்தாபனைக்குக் கருவிகளாக இருக்கின்ற ஆத்மாக்கள் சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும் ஒரு வேறுபாடு தென்படுகின்றது. எனவே, அவ்வேறுபாட்டை முடித்து விடுங்கள். அப்பொழுதே சுயத்தை மாற்றுபவர்களான நீங்கள், உலகை மாற்றுபவர்களாக இயலும்.

சுலோகம்:
தங்கள் வாழ்வுகளில் அனுபவம் எனும் வெகுமதியைப் பெற்றுள்ளவர்களே, அனைவரிலும் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள்.