24.05.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.01.86     Om Shanti     Madhuban


ஒரு மலிவான பேரமும் ஒரு சேமிப்பிற்கான வரவுசெலவும்.


நகை வியாபாரியான தந்தை, அனைத்திலும் மகத்தான பேரத்தைச் செய்யும் வர்த்தகர்களான தனது குழந்தைகளைக் கண்டு புன்னகைக்கிறார். இந்தப் பேரம் மிகப் பெரியது. எனினும், உலகுடன் ஒப்பிடுகையில், இந்தப் பேரத்தைச் செய்பவர்கள் சாதாரணமானவர்களும் கள்ளங்கபடமற்றவர்களும் ஆவார்கள். கடவுளுடன் பேரத்தைச் செய்யும் பாக்கியசாலிகளாக எந்த ஆத்மாக்கள் ஆகிறார்கள்? தந்தை இதைப் பார்த்துப் புன்னகைக்கிறார். நீங்கள் ஒரு பிறவியில் பெரியதொரு பேரத்தைச் செய்து, 21 பிறவிகளுக்கு சதா செழிப்பானவர்கள் ஆகிறீர்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள்? எதைப் பெறுகிறீர்கள்? நீங்கள் எண்ணற்ற பலமில்லியன்கள் வருமானத்தைச் சம்பாதித்து, மிக இலகுவாகப் பலமில்லியன்களைப் பேரம் செய்கிறீர்கள். உண்மையில், இந்தப் பேரத்தைச் செய்வதற்கு ஒரு விநாடி மட்டுமே எடுக்கிறது. நீங்கள் செய்த பேரம் எத்தனை மலிவானது? நீங்கள் ஒரு விநாடியில் ஒரு கூற்றுடன் இந்தப் பேரத்தைச் செய்தீர்கள்: உங்களின் இதயபூர்வமாக, எனது பாபா! என நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். இந்த ஒரு கூற்றினால், நீங்கள் மிகப்பெரிய எண்ணற்ற பொக்கிஷங்களின் பேரத்தைச் செய்தீர்கள். இது மலிவானதொரு பேரம், இல்லையா? இது கஷ்டமானதும் இல்லை. விலையுயர்ந்ததும் இல்லை. நீங்கள் நேரத்தை ஒதுக்கவும் தேவையில்லை. எல்லைக்குட்பட்ட பேரங்களைச் செய்யும்போது, நீங்கள் அதிகளவு நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருந்தது. நீங்கள் முயற்சியும் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் அது நாளுக்கு நாள் விலையுயர்ந்து கொண்டே செல்கிறது. அது எவ்வளவு நாள் இருக்கும்? ஒரு பிறவிக்கேனும் உங்களால் அதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது. எனவே, நீங்கள் மேன்மையான பேரத்தைச் செய்தீர்களா? அல்லது, அதைச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் உறுதியான வர்த்தகப் பேரத்தைச் செய்து கொண்டீர்கள், அல்லவா? பாப்தாதா வர்த்தகர்களான தனது குழந்தைகளைப் பார்த்தார். வர்த்தகர்களின் பட்டியலில் யார் பிரபல்யமானவர்கள் என்பதையும் அவர் பார்க்கிறார். உலகிலுள்ள மக்கள், பிரபல்யமானவர்களின் பட்டியலைத் தயாரிக்கிறார்கள், இல்லையா? அவர்கள் விசேடமான அகராதியைத் தயாரிக்கிறார்கள். தந்தையின் அகராதியில் யாருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன? யாரை நோக்கி உலகின் கண்கள் ஈர்க்கப்படவில்லையோ, அவர்களே தந்தையுடன் ஒரு பேரத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் கடவளின் கண்களின் நட்சத்திரமாக, கடவுளின் கண்களின் ஒளிகளாக ஆகியுள்ளார்கள். அவர் நம்பிக்கை இழந்த ஆத்மாக்களை விசேடமான ஆத்மாக்கள் ஆக்கியுள்ளார். கடவுளின் அகராதியில் நீங்கள் இத்தகைய விஐபி கள் என்ற போதை உங்களுக்கு எப்போதும் இருக்கிறதா? இதனாலேயே கடவுள் கள்ளங்கபடமற்றவர்களுக்கே சொந்தமானவர் என நினைவுகூரப்படுகிறது. அவர் அனைவரிலும் அதிபுத்திசாலி ஆவார். ஆனால் அவர் கள்ளங்கபடமற்றவர்களை நேசிக்கிறார். உலகின் கெட்டித்தனமான புறநோக்கில் இருப்பவர்களைத் தந்தை விரும்புவதில்லை. அவர்களின் இராச்சியம் கலியுகத்தில் உள்ளது. அங்கு அவர்கள் ஒரு கணம் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். மறுகணம் எதுவும் அற்றவர்களாக இருப்பார்கள். எவ்வாறாயினும், நீங்களோ எல்லா வேளைக்கும் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளீர்கள். இது பயப்படும் இராச்சியம் இல்லை. இது பயமற்றது.

இன்றைய உலகில் செல்வமும் உள்ளது. பயமும் உள்ளது. அவர்களிடம் எந்தளவிற்கு அதிகமான செல்வம் உள்ளதோ, அந்தளவிற்கு அவர்கள் பயத்துடன் சாப்பிடுகிறார்கள். பயத்துடன் தூங்குகிறார்கள். ஆனால் நீங்களோ கவலையற்ற சக்கரவர்த்திகள். நீங்கள் பயமற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். பயம் ஒரு தீய ஆவி என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அந்தத் தீய ஆவியில் இருந்து விடுபடுகிறீர்கள். நீங்கள் விடுபட்டுள்ளீர்கள், இல்லையா? உங்களுக்குள் ஏதாவது பயம் உள்ளதா? எனது என்ற உணர்வு இருக்கும்போது, நிச்சயமாகப் பயம் இருக்கும். எனது பாபா! சிவபாபா மட்டுமே உங்களைப் பயமற்றவர் ஆக்குகிறார். அவரை விடுத்து, எனது என்ற தங்கமான் இருந்தாலும், அங்கு பயம் நிச்சயமாக இருக்கும். எனவே, எனது, எனது என்ற சம்ஸ்காரம், உங்களின் பிராமண வாழ்க்கையில் சூட்சும ரூபத்திலேனும் எஞ்சியிருக்கிறதா எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் வெள்ளி விழாவையும் பொன் விழாவையும் கொண்டாடுகிறீர்கள். தங்கமும் வெள்ளியும் அவற்றை நீங்கள் நெருப்பில் போட்டு உருக்கி, அவற்றுடன் கலந்திருக்கும் எதையும் நீக்கும்போதே நிஜம் ஆகுகின்றன. இதுவே நிஜமான வெள்ளி விழாவும் நிஜமான பொன்விழாவும், இல்லையா? எனவே, இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு, நீங்கள் நிஜமான வெள்ளியாகவும் நிஜமான தங்கமாகவும் ஆகவேண்டும். வெள்ளி விழாவைக் கொண்டாடுபவர்கள், வெறுமனே வெள்ளி போன்றவர்கள் என்பதல்ல. வருடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நீங்கள் அதை வெள்ளி விழா என்று கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் தங்கயுகத்திற்கு உரியவர்கள். தங்க யுகத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்கள். எனவே, நீங்கள் எந்தளவிற்கு நிஜத்தங்கம் ஆகியுள்ளீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு பேரம் பேசினீர்கள். ஆனால், நீங்கள் எதையாவது பெற்று, அதைப் பயன்படுத்தி முடிப்பதாக இருக்கக்கூடாது. உங்களால் 21 பிறவிகளுக்கு சதா நிறைந்தவர்களாகவும் உங்களின் வம்சமும் செழிப்பானவர்களாகவும் இருக்கும் அளவிற்கு நீங்கள் சேமித்துவிட்டீர்களா? 21 பிறவிகள் மட்டுமல்ல, துவாபர யுகத்திலும் இருக்க வேண்டும். நீங்கள் பக்த ஆத்மாக்களாக இருப்பதனால், உங்களிடம் எந்தவிதக் குறைவும் இருக்காது. உங்களிடம் அதிக செல்வம் இருக்கும். துவாபர யுகத்திலும், உங்களால் மிக நன்றாகத் தான தருமங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும். பாருங்கள், கலியுகத்தின் இறுதியிலும், உங்களின் கடைசிப் பிறவியிலும், நீங்கள் பிச்சைக்காரர்கள் ஆகவில்லை, அல்லவா? குறைந்தபட்சம் பருப்பும் ரொட்டியும் உண்ணக்கூடியவர்களாகவே ஆகியுள்ளீர்கள். உங்களிடம் கறுப்புப் பணம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் பருப்பும் ரொட்டியும் உள்ளன. நீங்கள் எந்தளவைச் சேமித்துள்ளீர்கள் என்ற கணக்கு உங்களிடம் உள்ளதா? உங்களின் வரவுசெலவை எவ்வாறு செய்வது என உங்களுக்குத் தெரியுமா? சேமித்தல் என்று வரும்போது, நீங்கள் புத்திசாலிகள், அல்லவா? இல்லாவிட்டால், நீங்கள் 21 பிறவிகளுக்கு என்ன செய்வீர்கள்? நீங்கள் வருமானத்தைச் சம்பாதிப்பவர்கள் ஆகுவீர்களா? அல்லது, ஓர் இராச்சிய உரிமையுள்ளவர்கள் ஆகி, இராச்சியத்தை ஆளுவீர்களா? அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் சம்பாதிக்க வேண்டியதில்லை. பிரஜைகளே சம்பாதிக்க வேண்டும். அதிலும் வரிசைக்கிரமம் உள்ளது. செல்வந்தப் பிரஜைகளும் சாதாரணமான பிரஜைகளும் இருக்கிறார்கள். அங்கு எவரும் ஏழைகள் கிடையாது. எவ்வாறாயினும், அரச குடுபத்திற்கு அவர்களின் முயற்சிகளின் பலனாக ஓர் இராச்சியம் கிடைக்கிறது. அவர்கள் பிறவி பிறவியாக அரச குடும்பத்திற்கான உரிமையுள்ளவர்கள் ஆகுகிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு பிறவியிலும் இராஜ சிம்மாசனத்திற்கான உரிமை கிடைப்பதில்லை. ஆயினும், பிறவி பிறவியாக அரச குடும்பத்தில் இருப்பதற்கான உரிமையைப் பெறுகிறார்கள். எனவே, நீங்கள் என்ன ஆகுவீர்கள்? இப்போது உங்களின் வரவுசெலவைத் தயாரியுங்கள். சேமிப்புத் திட்டம் ஒன்றைச் செய்யுங்கள்.

இன்றைய உலகில், அவர்கள் வீணானவற்றைப் பயனுள்ளதாக மாற்றுகிறார்கள். வீணாகிப் போவதைக் குறைக்கிறார்கள். எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் சேமிப்புக் கணக்கை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். உங்களின் எண்ண சக்தியையும், உங்களின் வார்த்தை சக்தியையும், உங்களின் செயல்களின் சக்தியையும் உங்களின் நேரத்தின் சக்தியையும் எங்கு, எவ்வாறு பயன்படுத்துவது என்று வரவுசெலவுக் கணக்கைத் தயாரியுங்கள். இந்த சக்திகள் அனைத்தும் வீணாக்கப்படக்கூடாது. உங்களின் எண்ணங்கள் சாதாரணமானதாக அல்லது வீணானதாக இருந்தால், சாதாரணமான மற்றும் வீணானவற்றால் எதையும் சேமிக்க முடியாது. ஆனால் நீங்கள் எதையாவது இழப்பீர்கள். நாள் முழுவதற்கும் உங்களின் அட்டவணையைப் பேணுங்கள். எந்தளவிற்கு நான் இந்தச் சக்திகளைப் பயன்படுத்தி, அவற்றை அதிகரித்தேன்? எந்தளவிற்கு நீங்கள் அவற்றை ஒரு பணிக்காகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அந்தச் சக்தி அதிகரிக்கும். எண்ணம் ஒரு சக்தி என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதைப் பயிற்சி செய்வதில் நீங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். சிலர் அதைப் பணிக்காக உபயோகிப்பதும் இல்லை. பாவச் செயல்களைச் செய்வதற்காக வீணாக்குவதும் இல்லை. எவ்வாறாயினும், சாதாரணமான நேர அட்டவணையில், நீங்கள் சம்பாதிக்கவும் இல்லை. அதை இழக்கவும் இல்லை. ஏனெனில், நீங்கள் எதையும் சேமிக்கவில்லை. சாதாரண சேவைக்கான நேர அட்டவணையைக் கொண்டிருத்தல் அல்லது சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்குரிய நேர அட்டவணையைக் கொண்டிருத்தலை சேமிப்புக் கணக்கில் சேமித்தல் என்று கூற முடியாது. நீங்கள் சேமித்தீர்கள், உங்களின் கொள்ளவிற்கேற்ப படித்தீர்கள், எவருக்கும் நீங்கள் துன்பம் கொடுக்கவில்லை, எந்தவொரு தவறான செயலும் செய்யவில்லை எனச் சோதிக்காதீர்கள். நீங்கள் எவருக்கும் துன்பம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தீர்களா? உங்களால் முடிந்தளவிற்கு சக்திவாய்ந்த சேவையைச் செய்தீர்களா? உதாரணமாக, பாப்தாதா எப்போதும் இந்த வழிகாட்டலை வழங்குகிறார்: நான் மற்றும் எனது என்ற உணர்வைத் துறப்பதே உண்மையான சேவை ஆகும். எனவே, நான் அந்த முறையில் சேவை செய்கிறேனா? நான் தவறான வார்த்தைகளைப் பேசவில்லை. ஆனால், நம்பிக்கை இழந்த ஆத்மாக்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசினேனா? அது தைரியம் இல்லாத ஆத்மாவிற்கு தைரியத்தை ஏற்படுத்தியதா? யாருக்காவது சந்தோஷத்தின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தினேனா? இதுவே சேகரிப்பதும் சேமிப்பதும் ஆகும். சாதாரணமாக இரண்டு அல்லது நான்கு மணிநேரத்தைச் செலவழிப்பது என்றால் எதையும் சேமிப்பதில்லை. நீங்கள் சகல சக்திகளையும் சேகரித்து சேமிக்கும் வகையில் ஒரு வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த வருடம், ஒரு வரவுசெலவுத் திட்டத்துடன் உங்களின் பணியைச் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொரு சக்தியையும் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதற்காக ஒரு திட்டத்தைச் செய்யுங்கள். உலகிலுள்ள ஒவ்வோர் ஆத்மாவும் எதையாவது பெற்று, உங்களின் புகழைப் பாடும் வகையில் ஓர் ஆன்மீக வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குங்கள். நீங்கள் நிச்சயமாக அனைவருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும். அது முக்தியாக அல்லது ஜீவன்முக்தியாக இருக்கலாம். நீங்கள் மனித ஆத்மாக்களை மட்டுமன்றி, பஞ்ச பூதங்களையும் தூய்மையாக்கும் சேவையைச் செய்கிறீர்கள். ஓர் ஆன்மீக (இறை) வரவுசெலவுத் திட்டம் என்றால், ஆத்மாக்கள் அனைவரும், பஞ்ச பூதங்கள் அனைத்தும் சந்தோஷமாகவும் அமைதிநிறைந்தவையாகவும் ஆகவேண்டும். அந்த அரசாங்கமோ, இவ்வளவு நீர் வழங்கப்படும், இவ்வளவு கட்டடங்கள் கட்டப்படும், இவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என்பதற்காக ஒரு வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குகிறது. நீங்கள் என்ன வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குகிறீர்கள்? நீங்கள் அனைவருக்கும் பல பிறவிகளுக்கு முக்தியையும் ஜீவன்முக்தியையும் கொடுப்பீர்கள். அவர்களை ஏழ்மை, துன்பம், அமைதியின்மையில் இருந்து விடுவிப்பீர்கள். அரைக்கல்பத்திற்கு, அவர்கள் சௌகரியமாக வாழ்வார்கள். அவர்களின் ஆசை நிச்சயமாக நிறைவேறும். அந்த மக்களுக்கு முக்தி மட்டுமே தேவையாக உள்ளது. அவர்களுக்கு அது தெரியாது. ஆனால், அவர்கள் அதையே வேண்டுகிறார்கள், இல்லையா? எனவே, ஓர் ஆன்மீக (இறை) வரவுசெலவுத் திட்டத்தை சுயத்திற்காகவும் உலகிற்காகவும் உருவாக்குங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரிகிறதா? இந்த வருடம் நீங்கள் வெள்ளி விழாவையும் பொன் விழாவையும் கொண்டாடுகிறீர்கள், அல்லவா? எனவே, இது ஒரு முக்கியமான வருடம். அச்சா.

எப்போதும் மேன்மையான பேரத்தினைத் தமது விழிப்புணர்வில் வைத்திருப்பவர்களுக்கும், எப்போதும் தமது சேமிப்புக் கணக்கை அதிகரிப்பவர்களுக்கும், தமது ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துவதன் மூலம் அதை அதிகரிப்பவர்களுக்கும், எப்போதும் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, அதனால் மகானாகி மற்றவர்களையும் மகான் ஆக்குபவர்களுக்கும், இத்தகைய மேன்மையான, செல்வந்த, இத்தகைய மேன்மையான, விவேகிக் குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்தேயும்.

பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்: ஒரு குமார் வாழ்க்கை என்பது அதிர்ஷ்டமான வாழ்க்கை. ஏனெனில், நீங்கள் தவறான ஏணியில் ஏறுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். தவறான ஏணியில் ஏறும் எண்ணம் உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை, அல்லவா? மேலே ஏறியவர்களும் இப்போது கீழே இறங்குகிறார்கள். இல்லறத்தவர்களும் தங்களைக் குமார்கள் என்றும் குமாரிகள் என்றும் அழைக்கிறார்கள். இல்லையா? எனவே, அவர்கள் ஏணியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார்கள், அல்லவா? ஆகவே, உங்களுடைய இந்த மேன்மையான பாக்கியத்தை எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். ஒரு குமார் வாழ்க்கை என்றால், நீங்கள் பந்தனத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்று அர்த்தம். இல்லாவிட்டால், நீங்கள் எத்தனை பந்தனங்களில் கட்டுப்பட்டு இருப்பீர்கள் என்று பாருங்கள். எனவே, நீங்கள் பந்தனத்தினால் இழுபடுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் உங்களின் மனதிலும் சுதந்திரமாக இருக்கிறீர்கள். உறவுமுறைகளிலும் சுதந்திரமாக இருக்கிறீர்கள். ஒரு குமார் வாழ்க்கை என்றால் சுதந்திரமான வாழ்க்கை என்று அர்த்தம். உங்களின் கனவுகளிலேனும், உங்களுக்கு ஒரு உதவியாளர் தேவை, உங்களுக்கென ஒரு சகபாடியைத் தேட வேண்டும், உங்களுக்கு நோயுற்ற வேளையில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையல்லவா? எப்போதாவது நீங்கள் இப்படி நினைத்ததுண்டா? இந்த எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா? ஒரு குமார் வாழ்க்கை என்றால் சதா பறக்கும் பறவையாக இருத்தல் என்று அர்த்தம். பந்தனத்தில் அகப்பட்டுக் கொண்டவர் அல்ல. ஒருபோதும் இந்த எண்ணம் இருக்கக்கூடாது. எப்போதும் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருங்கள். தொடர்ந்து துரித கதியில் முன்னேறுங்கள்.

பாப்தாதா குமாரிகளைச் சந்திக்கிறார்: குமாரிகள் சேவையில் முன்னேறுவதற்கான உயர்த்தியைப் பெற்றுள்ளார்கள். இந்த உயர்த்தி ஒரு மேன்மையான உயர்த்தி ஆகும். இந்தப் பரிசை எவ்வாறு பயன்படுத்துவது என உங்களுக்குத் தெரியுமா? உங்களை எந்தளவிற்கு அதி சக்திசாலியாக ஆக்கிக் கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதி சக்திவாய்ந்த சேவையைச் செய்வீர்கள். நீங்கள் எதிலாவது பலவீனமாக இருந்தால், அப்போது சேவையும் பலவீனமாகிவிடும். ஆகவே, சக்திசாலியாகி, சக்திவாய்ந்த சேவையாளர் ஆகுங்கள். தொடர்ந்து இத்தகைய ஆயத்தங்களைச் செய்யுங்கள். அதனால், நேரம் வரும்போது, உங்களால் வெற்றிகரமாகச் சேவையில் ஈடுபட்டு, முன்னால் ஓர் இலக்கத்தைப் பெறமுடியும். தற்சமயம், நீங்கள் இப்போது உங்களின் படிப்பிற்கு நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. பின்னர் உங்களுக்குச் செய்வதற்கு ஒரேயொரு விடயமே இருக்கும். ஆகவே, நீங்கள் எங்கே இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி பெறுங்கள். தொடர்ந்து கருவி ஆத்மாக்களின் சகவாசத்தில் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உலக சேவையாளர் ஆகுவீர்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு அங்கு உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

பாப்தாதா சேவையாளர் ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:

1.ஒரு சேவையாளர் என்றால் எப்போதும் ஒரு கருவி என்று அர்த்தம். கருவியாக இருக்கும் உணர்வு இயல்பாகவே உங்களுக்கு சேவையில் வெற்றியை ஏற்படுத்தும். ஒரு கருவியாக இருக்கும் உணர்வு இல்லாவிட்டால், அங்கு வெற்றி ஏற்பட மாட்டாது. நீங்கள் சதா தந்தைக்குச் சொந்தமாக இருப்பீர்கள், நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள், நீங்கள் எப்போதும் அவருக்குச் சொந்தமானவர்கள் என்ற சத்தியத்தை நீங்கள் செய்துள்ளீர்கள், இல்லையா? ஒரு சேவையாளர் என்றால் தனது ஒவ்வோர் அடியையும் தந்தையின் பாதச்சுவடுகளில் வைப்பவர் என்று அர்த்தம். இது தந்தையைப் பின்பற்றுபவராக இருத்தல் எனப்படுகிறது. நீங்கள் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கும் சேவையாளர்கள், அல்லவா? சேவையில் வெற்றி அடைதலே ஒரு சேவையாளரின் மேன்மையான இலக்காகும். எனவே, நீங்கள் அனைவரும் ஒரு மேன்மையான இலக்கை வைத்திருப்பவர்கள், இல்லையா? உங்களுக்குள்ளும் சேவையிலும் எந்தளவிற்கு சகல வீணானவையும் இல்லாமல் போகிறதோ, அந்தளவிற்கு நீங்களும் சேவையும் சக்திசாலியாக ஆகுவீர்கள். எனவே, வீணானவை அனைத்தையும் முடித்து, சதா சக்திசாலியாக இருத்தலே சேவையாளர்களின் சிறப்பியல்பு ஆகும். கருவி ஆத்மாக்களான நீங்கள் எந்தளவிற்கு சக்திசாலிகளாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்குச் சேவையும் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும். ஒரு சேவையாளர் என்றால் சதா சேவையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துதல் என்று அர்த்தம். ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்களால் மற்றவர்களுக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்க முடியும். எனவே, ஊக்கமும் உற்சாகமும் எப்போதும் நடைமுறையில் புலப்படட்டும். உள்ளே நான் அவ்வாறே இருக்கிறேன், ஆனால் வெளியில் அவ்வாறு புலப்படுவதில்லை என்பதாக இருக்கக்கூடாது. மறைமுகமான முயற்சி என்பது வேறுபட்டது. ஆனால், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மறைத்து வைக்க முடியாது. சதா ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் பிரகாசம் இயல்பாகவே உங்களின் முகத்தில் புலப்பட வேண்டும். நீங்கள் எதையாவது கூறினாலென்ன, கூறாவிட்டாலென்ன, உங்களின் முகமும் அதன் பிரகாசமும் அதைச் சொல்ல வேண்டும். நீங்கள் இத்தகைய சேவையாளர்களா?

சேவையில் பொன்னான வாய்ப்பைப் பெறுவதும் மேன்மையான பாக்கியத்தின் அடையாளம் ஆகும். நீங்கள் ஒரு சேவையாளராக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆனால் இப்போது, நீங்கள் உங்களின் பாக்கியத்தை உருவாக்க வேண்டும். அது முதலாம் இலக்கமா அல்லது இரண்டாம் இலக்கமா எனப் பாருங்கள். ஒரு வகையான பாக்கியத்தைப் பெறுதல் என்றில்லாமல், பாக்கியத்தின் மேல் பாக்கியத்தைப் பெற வேண்டும். எந்தளவிற்கு அதிகமான பாக்கியத்தை நீங்கள் தொடர்ந்து பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் இலக்கமும் இயல்பாகவே முன்னேறிச் செல்லும். இது பலமில்லியன் மடங்கு பாக்கியசாலியாக இருத்தல் எனப்படுகிறது. ஒரு பாடத்தில் மட்டும் வெற்றி சொரூபம் ஆகாமல், சகல பாடங்களிலும் வெற்றி சொரூபம் ஆகுங்கள். அச்சா.

2. யாருக்கு அதிகம் சந்தோஷம் உள்ளது உங்களுக்கா அல்லது தந்தைக்கா? உங்களுக்கே அதிக சந்தோஷம் உள்ளது என நீங்கள் ஏன் சொல்வதில்லை? நீங்கள் பக்தியில் துவாபர யுகத்தில் இருந்து அழைத்துக் கொண்டே இருந்தீர்கள். இப்போது அவரைக் கண்டுவிட்டீர்கள். எனவே உங்களுக்கே அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! 63 பிறவிகளாக, அவரை அடைய வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தீர்கள். இப்போது 63 பிறவிகளுக்கான அந்த ஆசை இப்போது பூர்த்தியாகிவிட்டது. எனவே அதிகளவு சந்தோஷம் உள்ளது. ஏதாவது ஆசை பூர்த்தியாகும்போது, நீங்கள் சந்தோஷம் அடைகிறீர்கள், இல்லையா? இந்த சந்தோஷம் உலகிற்கே சந்தோஷத்தைக் கொடுக்கும். நீங்கள் சந்தோஷம் அடையும்போது, முழு உலகமும் சந்தோஷம் அடைகிறது. நீங்கள் இத்தகைய சந்தோஷத்தைப் பெற்றுள்ளீர்கள், இல்லையா? நீங்கள் மாறும்போது, முழு உலகமும் மாறுகிறது. துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் பெயரோ அல்லது சுவடோ இல்லாத அளவிற்கு அது மாறுகிறது. எனவே, சதா சந்தோஷ நடனம் ஆடுங்கள். எப்போதும் உங்களின் மேன்மையான செயல்கள் என்ற கணக்கில் தொடர்ந்து சேமியுங்கள். அனைவருக்கும் சந்தோஷப் பொக்கிஷங்களைப் பகிர்ந்து அளியுங்கள். இன்றைய உலகில் சந்தோஷமே இல்லை. அனைவரும் சந்தோஷத்தின் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்களைச் சந்தோஷத்தால் நிரப்புங்கள். எப்போதும் இந்தச் சேவையுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். நம்பிக்கை இழந்துள்ள ஆத்மாக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தொடர்ந்து கொடுங்கள். என்னால் எதையும் செய்ய முடியவில்லை, அது சாத்தியம் இல்லை. என நினைத்து அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எனவே, நீங்கள் வெற்றியாளர்கள் ஆகுகிறீர்கள். அவர்களையும் வெற்றியாளர்கள் ஆக்குகிறீர்கள். அவர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நீங்கள் அதிகரிக்கிறீர்கள். எப்போதும் வெற்றியின் விழிப்புணர்வு என்ற திலகத்தை அணிந்திருங்கள். உங்களிடம் திலகமும் உள்ளது. சுய இராச்சிய உரிமையும் உள்ளது. எப்போதும் இந்த விழிப்புணர்வைப் பேணுங்கள். அச்சா.

கேள்வி:
நெருங்கிய நட்சத்திரங்களாக இருப்பவர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் சமமாக இருக்கிறார்கள். பாப்தாதாவின் நற்குணங்களும் அவரின் பணியும் நெருக்கமாக இருக்கும் நட்சத்திரங்களில் தெளிவாகப் புலப்படும். எந்தளவிற்கு அதிகமாக நெருக்கமாக இருக்கிறார்களோ, அந்தளவிற்கு சமநிலையும் காணப்படும். ஒவ்வொருவரின் முகமும் பாப்தாதாவின் தரிசனத்தை அருளும் கண்ணாடியாக இருக்கும். அவர்களைப் பார்க்கும்போது, மக்கள் பாப்தாதாவின் அறிமுகத்தைப் பெறுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்தாலும், அவர்கள் பாப்தாதாவை நோக்கியே கவரப்படுவார்கள். இது, மகன் தந்தையைக் காட்டுகிறார் எனப்படுகிறது. நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ, அவரின் முத்திரை உங்களின் ஒவ்வோர் அடியிலும் புலப்படும். நீங்கள் எந்தளவிற்கு மலர்ச்சியாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு கவரும் ரூபம் ஆகுகிறீர்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆத்மாக்கள் பலரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதன் மூலம் ஒரு மகாதானியாகி, சதா முன்னேறுவீர்களாக.

ஒரு மகாதானியாக இருத்தல் என்றால் மற்றவர்களுக்குச் சேவை செய்தல் என்று அர்த்தம். மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம், உங்களுக்கும் இயல்பாகவே சேவை செய்து கொள்கிறீர்கள். ஒரு மகாதானியாக இருத்தல் என்றால், உங்களைச் சகல பொக்கிஷங்களாலும் நிரப்பிக் கொள்ளுதல் என்று அர்த்தம். எத்தனை ஆத்மாக்களுக்கு நீங்கள் சந்தோஷம், சக்தி, ஞானத்தைத் தானமாகக் கொடுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அவர்களிடமிருந்து வெளிப்படுகின்ற பேற்றின் அல்லது ஆசீர்வாதங்களின் ஒலி உங்களுக்கு ஓர் ஆசீர்வாதத்தின் ரூபத்தைப் பெறும். இந்த ஆசீர்வாதங்கள் உங்களை முன்னேறச் செய்வதற்கான வழிமுறைகள் ஆகுகின்றன. ஆசீர்வாதங்களைப் பெறுபவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். எனவே, தினமும் அமிர்தவேளையில், ஒரு மகாதானி ஆகுவதற்கான நிகழ்ச்சியை உருவாக்குங்கள். ஒரு நாளேனும் நீங்கள் தானம் செய்யாமல் இருக்கக்கூடாது.

சுலோகம்:
தற்சமயத்தின் உடனடியான, நடைமுறைப் பலன், பறக்கும் ஸ்திதி என்ற ஆத்ம சக்தியைக் கொடுக்கும்.