26.03.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களின் சரீர வடிவில் ஒரு சிம்மாசனத்தைப் பெற்றுள்ளதைப் போன்றே, தனக்கென சுயமாக சிம்மாசனத்தைக் கொண்டிராத தந்தை, இந்த தாதாவின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

கேள்வி:
கடவுளின் குழந்தைகளாக இருக்கும் உணர்வுள்ளவர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:
அவர்கள் தந்தையொருவர் மீது உண்மையான அன்பைக் கொண்டிருப்பார்கள். கடவுளின் குழந்தைகள் ஒருபொழுதும் ஒருவரோடொருவர் சண்டையிடுவதோ அல்லது வாக்குவாதம் செய்வதோ கிடையாது. அவர்கள் ஒருபொழுதும் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் பிரம்ம குமாரர்களும் குமாரிகளும் ஆகிவிட்டதால், அதாவது, அவர்கள் சகோதர சகோதரிகள் ஆகிவிட்டதால் அவர்கள் தூய்மையற்ற பார்வையுடன் ஒருவரையொருவர் பார்க்க முடியாது.

பாடல்:
உங்கள் ஆகாய சிம்மாசனத்தை விட்டு நீங்கி பூமிக்குக் கீழிறங்கி வாருங்கள்

ஓம் சாந்தி.
பாபா இப்பொழுது தன்னுடைய ஆகாய சிம்மாசனத்தை விட்டு நீங்கி இந்த தாதாவின் சரீரத்தைத் தன்னுடைய சிம்மாசனம் ஆக்கியுள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர் அந்தச் சிம்மாசனத்தை விட்டு நீங்கி இங்கு வந்து இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கிறார். ஆகாய தத்துவம் மனிதர்களின் சிம்மாசனம் ஆகும். சரீரமின்றி ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் பெரும் ஒளித் தத்துவம் ஆத்மாக்களின் சிம்மாசனம் ஆகும். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் உள்ளதைப் போன்றே, அங்கு சின்னஞ்சிறிய ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கிறீர்கள். தெய்வீகப் பார்வை இல்லாது ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஒளிப்புள்ளிகளைப் போன்று, ஆத்மாக்கள் சின்னஞ் சிறிய நட்சத்திரங்களாவர் எனும் ஞானம் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது. தந்தை இப்பொழுது அந்தச் சிம்மாசனத்தை விட்டு நீங்கியுள்ளார். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்களும் அந்தச் சிம்மாசனத்தை விட்டு நீங்கி, உங்கள் சரீரத்தை உங்கள் சிம்மாசனமாக ஆக்கவேண்டும். எனக்கும் ஒரு சரீரம் நிச்சயமாகத் தேவையாகும். நீங்கள் என்னைப் பழைய உலகத்தினுள் அழைக்கிறீர்கள். பாடல் உள்ளது: தூரதேசவாசி அந்நிய தேசத்தினுள் வந்துள்ளார். ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கும் இடமும் பாபா வசிக்கும் இடமுமே ஆத்மாக்களின் வதிவிடம் ஆகும். பின்னர், அங்கிருந்து, நீங்கள் பாபா ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்ற, சுவர்க்கத்துக்குச் செல்கிறீர்கள். தந்தை சுவர்க்கத்துக்குள் பிரவேசிப்பதில்லை. அவர் ஓய்வுபெறும் ஸ்திதியில், சப்தத்துக்கு அப்பால் வசிக்கிறார். சுவர்க்கத்தில் அவர் தேவைப்படுவதில்லை. அவர் சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் அனுபவத்திற்கு அப்பாற்பட்டவர். நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வதுடன் துன்பத்தையும் அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் சகோதர சகோதரிகள் என்பதை இப்பொழுது பிரம்மகுமாரர்களும் குமாரிகளுமாகிய நீங்கள் அறிவீர்கள், ஆகவே ஒருபொழுதும் நீங்கள் ஒருவர்மீதொருவர் தூய்மையற்ற பார்வைக்கான ஓர் எண்ணத்தையேனும் கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள், இங்கு நீங்கள் தந்தையின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் அமர்ந்திருக்கிறீர்கள். தூய்மையாக இருப்பதற்கான இந்த வழிமுறையைப் பாருங்கள். இவ்விடயங்கள் சமய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. அனைவரதும் தந்தை ஒருவரே ஆவார். ஆகவே நீங்கள் அனைவரும் அவருடைய குழந்தைகள் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் உங்கள் மத்தியில் சண்டையிடவோ அல்லது வாக்குவாதம் செய்யவோ கூடாது. தற்பொழுது, நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்னர், நீங்கள் அசுரக் குழந்தைகளாக இருந்தீர்கள். இப்பொழுது, சங்கமயுகத்தில், நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆகிவிட்டீர்கள். பின்னர் சத்தியயுகத்தில், நீங்கள் தேவ குழந்தைகளாக இருப்பீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இச்சக்கரத்தை அறிந்துகொள்கிறீர்கள். நீங்கள் பிரம்மகுமார்களும் குமாரிகளும் ஆவீர்கள். ஆகவே, ஒருபொழுதும் தூய்மையற்ற பார்வை இருக்க முடியாது. சத்தியயுகத்தில் தீய பார்வை இல்லை. இராவண இராச்சியத்திலேயே தூய்மையற்ற பார்வை உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவுசெய்யக்கூடாது. தந்தை ஒருவர்மீதே பெருமளவு அன்பு இருக்கவேண்டும்: என்னுடையவர் ஒரு சிவபாபாவே அன்றி வேறு எவருமல்லர். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும். சிவபாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். அரைக் கல்பமாக, இராவண இராச்சியம் இருந்து வந்துள்ளது, அதன் மூலம் நீங்கள் சீரழிவையே அடைந்தீPர்கள். இராவணன் யார் என்றோ அல்லது நீங்கள் ஏன் அவனை எரிக்கிறீர்கள் என்றோ எவருக்கும் தெரியாது. அவர்களுக்கு சிவபாபாவையும் தெரியாது. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அலங்கரித்து, அவற்றைப் பூஜித்து, பின்னர் அவற்றை மூழ்கடிப்பதைப் போன்றே, அவர்கள் சிவபாபாவின் களிமண் இலிங்க வடிவத்தையும் உருவாக்கி, அதைப் பூஜித்துப் பின்னர் அக்களிமண்ணை மீண்டும் களிமண்ணுடன் கலந்துவிடுகிறார்கள். அதேபோன்று, அவர்கள் இராவணனின் கொடும்பாவியையும் உருவாக்கிப் பின்னர் அதை எரித்துவிடுகிறார்கள். அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது இராவண இராச்சியம் உள்ளதென்றும் இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். காந்திஜியும் இராம இராச்சியத்தை விரும்பினார். ஆகவே, இது இராவண இராhச்சியம் என்பதே அதன் அர்த்தமாகும். தந்தை வந்து, இராவண இராச்சியத்தில் காமச்சிதையில் அமர்ந்ததால் எரிக்கப்பட்டிருந்த குழந்தைகளாகிய உங்கள்மீது ஞான மழையைப் பொழிகிறார். அவர் அனைவருக்கும் நன்மையளிக்கிறார். வறண்ட நிலத்தின்மீது மழை பொழியும்பொழுது, புற்கள் வளர ஆரம்பிப்பதைப் போன்றே, உங்களிடம் ஞான மழை இல்லாத காரணத்தால், நீங்கள் முற்றிலும் வறண்டுபோய்விட்டீர்;கள். மீண்டும் ஒருமுறை உங்கள் மீது ஞானம் பொழியப்படுகிறது, அதன் மூலம் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வசித்தாலும், நீங்கள் அதிகளவில் உள்ளார்ந்த சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். சில ஏழைக் குழந்தைகள் கற்பதால் சட்ட நிபுணர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் பின்னர் முக்கிய பிரமுகர்களுடன் அமர்ந்திருந்து, ஒன்றாக உண்டு, அருந்துகிறார்கள். இதுவே சமய நூல்களில் உள்ள பில்லின் (டீhடைசுதேசிப்பெண்) கதை ஆகும். அதிகூடியளவு பக்தி செய்துள்ளவர்களே வந்து அதிகூடியளவுக்கு ஞானத்தைப் பெறுவார்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆரம்பத்திலிருந்து நாங்களே அதிகூடியளவுக்குப் பக்தி செய்துள்ளவர்கள் ஆவோம். ஆகவே, அனைவருக்கும் முதலில் பாபா எங்களையே சுவர்க்கத்துக்கு அனுப்புகிறார். இவை ஞானம் நிறைந்த மிகச்சரியான விடயங்கள் ஆகும். நாங்களே பூஜிக்கத் தக்கவர்களாக இருந்தோம், பின்னர் நாங்கள் பூஜிப்பவர்கள் ஆகினோம். நாங்கள் தொடர்ந்தும் கீழிறங்கினோம். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் அனைத்தும் விளங்கப்படுத்தப்படுகிறது. தற்பொழுது முழு உலகிலுள்ள அனைவரும் நாஸ்திகர்கள் ஆவார்கள்; அவர்களுக்குத் தந்தையைத் தெரியாது. அவர்கள் நேற்றி, நேற்றி (இதுவுமல்ல, அதுவுமல்ல) என்று கூறுகிறார்கள். நீங்கள் தொடர்ந்தும் முன்னேறுகையில், சந்நியாசிகள் வந்து, நிச்சயமாக ஆஸ்திகர்கள் ஆகுவார்கள். இங்கு ஒரு சந்நியாசி வந்திருந்தாலும், அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் அவரை நம்புவார்கள் என்பதல்ல. பிரம்மகுமாரர்களும் குமாரிகளும் அவர் மீது மந்திர ஜாலத்தைப் போட்டுவிட்டார்கள் என்றே அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அந்தச் சந்நியாசியை கதியிலிருந்து அகற்றிவிட்டு, அவருடைய சிஷ்யர்களில் ஒருவரை அவருக்குப் பதிலாக அமர்த்துவார்கள். அத்தகைய பல சந்நியாசிகள் உங்களிடம் வந்தார்;கள், ஆனால் பின்னர் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். இது மிகவும் அற்புதமான நாடகம்! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆரம்பத்திலிருந்து இறுதிவரையான அனைத்து விடயங்களையும் அறிவீர்கள். நீங்களும் இதை உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே கிரகிக்கிறீர்கள். தந்தை முழு ஞானத்தையும் கொண்டுள்ளதால், நீங்களும் அதைக் கொண்டிருக்க வேண்டும். நாளுக்கு நாள், தொடர்ந்தும் பல நிலையங்கள் திறக்கப்படும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் கருணை நிறைந்தவர்;;கள் ஆகவேண்டும். தந்தை கூறுகிறார்: உங்கள்மீது கருணை கொண்டிருங்கள். கருணையற்றவர்களாக இருக்காதீர்கள். உங்கள்மீது கருணை கொண்டிருங்கள். எவ்வாறு? அவர் தொடர்ந்து இதையும் விளங்கப்படுத்துகிறார்: தந்தையை நினைவுசெய்து தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாகுங்கள். நீங்கள் ஒருபொழுதும் மீண்டும் தூய்மையற்றவராக முயற்சி செய்யக்கூடாது. உங்கள் பார்வை மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவோம். கடவுள் எங்களைத் தத்தெடுத்துள்ளார். நாங்கள் இப்பொழுது சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறவேண்டும். முதலில், நாங்கள் சூட்சும உலகில் வசிக்கும் தேவதைகள் ஆகுவோம். நீங்கள் இப்பொழுது தேவதைகள் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குச் சூட்சும உலகின் இரகசியம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இது பேசும் உலகம் ஆகும். சூட்சும உலகில், அசைவு (அழஎநை) உள்ளது. அசரீரி உலகில் மௌனம் மட்டுமே உள்ளது. சூட்சும உலகம் தேவதைகளுக்குரியதாகும். ஓர் ஆவிக்கு நிழல் சரீரம் (உருவம்) உள்ளது; ஓர் ஆத்மா ஒரு புதிய சரீரத்தைப் பெறாதபொழுது, அவர் அலைந்து திரிகிறார். அது ஓர் ஆவி என்று அழைக்கப்படும். உங்கள் பௌதீகக் கண்கள் மூலம் உங்களால் அதைப் பார்க்க முடியும். பின்னர், சூட்சும உலகில் வசிப்பவர்களான தேவதைகள் உள்ளார்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உங்களிடம் அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகத்தின் ஞானம் உள்ளது. நீங்கள் நடந்தும் உலாவியும் திரிகையில், இந்த ஞானம் அனைத்தையும் உங்களின் புத்தியில் வைத்திருங்கள். நாங்;கள் உண்மையிலே அசரீரி உலக வாசிகள் ஆவோம். இப்பொழுது நாங்கள் சூட்சும உலகினூடாக அங்கு திரும்பிச் செல்லவுள்ளோம். இந்நேரத்தில் மட்டுமே பாபா சூட்சும உலகை உருவாக்குகிறார். முதலில், சூட்சும உலகம் தேவைப்படுகிறது; பின்னர் பௌதீக உலகம் தேவைப்படுகிறது. இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். இது இறை யுகம் என்று அழைக்;கப்படுகிறது, புதிய உலகமோ தேவர்களின் யுகமாகிய, தெய்வீக யுகம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருந்தால், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். நீங்கள் வீடு திரும்;பியதும், இதை மறந்துவிடக்கூடாது. நீங்கள் தீய சகவாசத்தினுள் செல்லும்பொழுதே, இதை மறக்கிறீர்கள். அன்னங்களாகிய நீங்கள் கடவுளின் குழந்தைகள் ஆவீர்கள். இனியும் நீங்கள் எவருடனும் உள்ளார்த்தமாக எந்தவொரு பற்றின் இழைகளையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. உங்களுக்குப் பற்றின் இழைகள் இருப்பின், நீங்கள் ஒரு பற்றுடைய குரங்கு என்றே அழைக்கப்படுவீர்கள். அனைவரையும் தூய்மையாக்குவதே, உங்கள் பணி ஆகும். நீங்களே இவ்வுலகைச் சுவர்க்கம் ஆக்குபவர்கள் ஆவீர்கள். இராவணனின் அசுரக் குழந்தைகளுக்கும் கடவுளின் குழந்தைகளாகிய உங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. உங்கள் ஸ்திதியை நிலையானதாக்குவதற்கு, குழந்தைகளாகிய நீங்கள் அனைத்தையும் பார்த்தும் பார்க்காமலிருப்பதைப் பயிற்சிசெய்ய வேண்டும். உங்கள் புத்தியை உறுதியாகவும், நிலையாகவும் வைத்திருப்பதற்கு உங்களுக்கு தைரியம் தேவை. சம்பூரணம் ஆகுவதற்கு முயற்சி தேவையாகும். நீங்கள் சம்பூரணமாகுவதற்கு உங்களுக்கு காலம் தேவைப்படுகிறது. உங்கள் கர்மாதீத நிலையை நீங்கள் அடையும்பொழுது மட்டுமே, இந்தப் பார்வை ஸ்திரமாக இருக்க முடியும். அதுவரைக்கும், ஏதோவொரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நீங்கள் முற்றாகவே அதற்கு அப்பால் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தெளிவான இணைப்பு தேவையாகும். அனைத்தையும் பார்க்கையில், நீங்கள் எதையும் பார்க்காதது போன்று இருக்க வேண்டும். இப்பயிற்சியைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். இன்னமும் நாங்கள் அந்த ஸ்திதியை அடையவில்லை. சந்நியாசிகள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்வதில்லை. இங்கு, நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் பழைய உலகைத் துறந்து விட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இலகுவாக உங்கள் இனிய மௌன வீட்டுக்கு நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். உங்கள் புத்திகளில் இருப்பதைப் போன்று, இது வேறு எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. நீங்கள் இப்பொழுது வீடு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். கடவுள் சிவன் பேசுகிறார். அவரே தூய்மையாக்குபவரும், விடுதலையாக்குபவரும், வழிகாட்டியும் ஆவார். கிருஷ்ணர் வழிகாட்டி அல்லர். எவ்வாறு அனைவருக்கும் இந்தப் பாதையைக் காண்பிப்பது என்று இந்நேரத்திலேயே நீங்கள் கற்கிறீர்கள். இதனாலேயே நீங்கள் பாண்டவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளீர்கள். நீங்களே பாண்டவ சேனை ஆவீர்கள். இப்பொழுது நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதை அதாவது உங்கள் பழைய சரீரத்தை நீக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாம்பினதும் ரீங்காரமிடும் வண்டினதும் உதாரணங்கள் இவ்வேளையில் உங்களுக்குப் பொருந்துகின்றன. இப்பொழுது நீங்கள் அவற்றின் நடைமுறை வடிவங்களாக இருக்கிறீர்கள். அவைகளால் இதைச் செய்யமுடியாது. இவ்வுலகம் ஒரு மயானபூமி என்பதையும் அது தேவதைகளின் பூமியாக வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டகரமானவை ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். ஒரு பாடசாலையில் புதிய குழந்தைகள் வியாழக்கிழமையிலே பதிவு செய்யப்படுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து இது சம்பிரதாயம் ஆகியுள்ளது. விருட்சத்தின் பிரபுவே இப்பொழுது உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். பிறவிபிறவியாக உங்கள்மீது வியாழ சகுனங்களே இருக்கின்றன. இச்சகுனங்கள் எல்லையற்றவை ஆகும். பக்தி மார்க்கத்தின் சகுனங்கள் எல்லைக்குட்பட்டவை ஆகும். இப்பொழுது எல்லையற்ற சகுனங்கள் உள்ளதால், நீங்கள் முழு முயற்சி செய்யவேண்டும். ஒருவர் மட்டும் இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவார் என்பதல்ல் அங்கு அவர்களின் வம்சமும் இருக்கும். அங்கு நிச்சயமாகப் பலர் ஆட்சி செய்வார்கள். இலக்ஷ்மி நாராயணனின் சூரிய-வம்ச இராச்சியம் உள்ளது. இவ்விடயங்கள் உங்கள் புத்தியில் உள்ளன. எவ்வாறு அவர்கள் தங்கள் இராச்சியத் திலகத்தைப் பெறுகிறார்கள், எவ்வாறு சூரிய-வம்சத்து மக்கள் இராச்சியத்தைச் சந்திர-வம்ச மக்களுக்குக் கையளிக்கிறார்கள் என்றவோர் காட்சியையும் குழந்தைகளாகிய உங்களிற் சிலர் கண்டுள்ளீர்கள். பெற்றோர் குழந்தையின் பாதங்களைக் கழுவி இராச்சிய திலகத்தையும் இராச்சிய பாக்கியத்தையும் அவருக்கு அளிக்கிறார்கள்.இக்காட்சிகள் அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளன. இது பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் குழப்பமடையக்கூடாது. தந்தையை இலகுவில் நினைவுசெய்து சுயதரிசனச் சக்கரதாரிகளாகி ஏனையோரையும் இவ்வாறு ஆக்குங்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றும் உண்மையான பிராமணர்களாகிய, பிரம்மாவின் வாய்வழித் தோன்றல் குழந்தைகள் ஆவீர்கள். சமய நூல்களில் சுயதரிசனச் சக்கரத்தைப் பயன்படுத்துவதில் அதிக வன்முறை காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தந்தை உண்மையான கீதையைக் குழந்தைகளாகிய உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆகவே, நீங்கள் அதை உங்கள் இதயத்தால் கற்க வேண்டும். இது மிகவும் இலகுவானதாகும். உங்கள் முழுத் தொடர்பும் கீதையுடனேயே உள்ளது. கீதையில், ஞானமும் யோகமும் உள்ளன. நீங்கள் ஒரு நூலை மட்டுமே உருவாக்க வேண்டும். நீங்கள் ஏன் யோகத்தைப் பற்றிய நூல்களையும் வெவ்வேறாக உருவாக்க வேண்டும்? எவ்வாறாயினும், இந்நாட்களில், யோகம் மிகவும் பிரபல்யமானதாகும். ஆகவே, மக்களை வந்து புரிந்துகொள்ளச் செய்வதற்காக வேறுபட்ட பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தாங்கள் ஒரு தந்தையுடனேயே யோகம் செய்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் இறுதியில் புரிந்து கொள்வார்கள். இதைச் செவிமடுப்பவர்கள், பின்னர் தங்கள் சொந்த சமயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மீது கருணை கொண்டிருங்கள். உங்கள் பார்வையை மிகவும் சிறந்ததாகவும் தூய்மையானதாகவும் ஆக்குங்கள். உங்களை சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்காகக் கடவுள் உங்களைத் தத்தெடுத்துள்ளார். ஆகவே, நீங்கள் ஒருபொழுதும் தூய்மையற்றவர் ஆகுவதற்கான எந்த எண்ணத்தையும் கொண்டிருக்கக் கூடாது.

2. முழுமையான கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு, சதா அப்பால் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இப்பழைய உலகிலுள்ள அனைத்தையும் பார்த்தும் பார்க்காதிருங்கள். இதைச் சதா பயிற்சி செய்வதால், நீங்கள் உங்களுடைய ஸ்திதியை நிலையானதாக ஆக்குவீர்கள்.

ஆசீர்வாதம்:
பராமரித்தல் என்ற மேன்மையான வழிமுறையினால், அனைவரிடமும் ஆசீர்வாதங்களைப் பெறும் தகுதியுடையவராகி, வளர்ச்சியை அனுபவம் செய்வீர்களாக.

சங்கமயுகம் பாராட்டுகளுடன் வளர்வதற்கான யுகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையினதும், குடும்பத்தினதும் பாராட்டுக்களினால் பராமரிக்கப்படுகின்றீர்கள். இந்த பாராட்டுகளினாலேயே, நீங்கள் ஆடுகிறீர்கள், பாடுகிறீர்கள், பராமரிக்கப்பட்டு பறக்கிறீர்கள். இந்த பராமரிப்பு அற்புதமானதாகும். குழந்தைகளாகிய நீங்கள் பரந்த இதயத்தினாலும், கருணை உணர்வுகளினாலும் அருள்பவர்கள் ஆகி, ஒருவருக்கொருவர் ~~மிக நன்று மிக நன்று|| எனக் கூறி, ஒவ்வொரு கணமும் தொடர்ந்தும் பாராட்டுகளைத் தெரிவிக்கிறீர்கள். இது பராமரிப்பை கொடுப்பதற்கான மேன்மையானதொரு வழியாகும். இவ்வாறாக தொடர்ந்தும் அனைவரையும் பராமரித்தால் நீங்கள் பாராட்டுக்களை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆகுவீர்கள்.

சுலோகம்:
உங்கள் சுபாவத்தை மிக இலகுவாக ஆக்குவதே தீர்வின் சொரூபம் ஆகுவதற்கான வழியாகும்


மாதேஸ்வரிஜியின் பெறுமதி அளவிட முடியாத வாசங்கள்

அரைக் கல்பத்திற்கு, பிரம்மாவின் பகலான ஞானம் உள்ளது, அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் இரவான பக்தி உள்ளது.

அரைக்கல்பத்திற்கு, பிரம்மாவின் பகலாகும், அரைக்கல்பத்திற்கு பிரம்மாவின் இரவாகும். இரவு இப்பொழுது முடிய வேண்டும், பகல் வரவேண்டும். கடவுள் இப்பொழுது வந்து, இருளை அகற்றி, ஒளியேற்ற ஆரம்பிக்கின்றார். ஞானத்தினூடாக ஒளி ஏற்றப்படுகின்றது. பக்தியினூடாக இருள் நிலவுகின்றது. பாடலில், கூறப்படுகின்றது: எங்களை இந்த பாவ உலகில் இருந்து அப்பால், இதயத்திற்கு சௌகரியமும் ஓய்வும் கிடைக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். இது சௌகரியம் இல்லாததோர் ஓய்வற்ற உலகமாகும். முக்தி நிலையில், ஓய்வோ ஓய்வின்மையோ இருப்பதில்லை. சத்திய, திரேதா யுகங்களே ஓய்வும் சௌகரியமும் உடைய உலகமாகும். அனைவருமே இந்த சந்தோஷ உலகை நினைவு செய்கிறார்கள். எனவே, நீங்கள் இப்பொழுது ஓய்வும் சௌகரியமும் நிறைந்த உலகிற்குச் செல்கிறீர்கள். எந்த ஒரு தூய்மையற்ற ஆத்மாவும் அங்கே செல்ல முடியாது. இறுதி நேரத்தில், அவர்கள் தர்மராஜிடமிருந்து தண்டனையை அனுபவம் செய்து, கர்மாவின் எந்த பந்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு, தமது தூய சம்ஸ்காரங்களை எடுத்துச் செல்வார்கள், ஏனெனில் அங்கே எந்தத் தூய்மையற்ற சம்ஸ்காரங்களோ அல்லது பாவங்களோ இருப்பதில்லை. ஆத்மாக்கள் தமது உண்மையான தந்தையை மறக்கும் போது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வெற்றியும் தோல்வி அடங்கிய விளையாட்டு, வழிதெரியாத அநாதியான நாடகம் அரங்கேறுகின்றது. ஆகையாலேயே நாங்கள் இப்பொழுது சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்தியை பெற்று, விகாரத்தை வெற்றி கொண்டு, 21 பிறவிகளின் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றோம். அச்சா.