26.07.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    27.02.86     Om Shanti     Madhuban


ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியாளராக இருக்கும் ஆன்மீக சேனை.


ஆன்மீக சக்தி சேனையினதும், ஆன்மீக சேனையான பாண்டவ சேனையினதும் பாகமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எப்போதும் வெற்றியின் நம்பிக்கையும் போதையும் இருக்கிறதல்லவா? வேறு ஏதாவது இராணுவம் யுத்தத்திற்குச் செல்லும்போது, அவர்களுக்கு வெற்றியின் உத்தரவாதம் இருக்காது. வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது என்ற நம்பிக்கை அவர்களிடம் கிடையாது. எவ்வாறாயினும், சக்தி சேனை, ஆன்மீக சேனையான உங்களிடம் இந்த நேரத்தில் நீங்கள் வெற்றியாளர் ஆகுவது மட்டுமல்ல, கல்பம் கல்பமாக நீங்கள் வெற்றியாளர்களே என்ற நம்பிக்கையின் போதையும் எப்போதும் உள்ளது. பக்தி மார்க்கத்தில், சென்ற கல்பத்தில் உங்களின் வெற்றிக் கதைகளை நீங்கள் செவிமடுத்தீர்கள். இப்போதும், பாண்டவர்களின் வெற்றிக் கதைகளை நீங்கள் கேட்கிறீர்கள். உங்களின் வெற்றிப் படங்களை நீங்கள் இப்போதும் காண்கிறீர்கள். அதைத் தவிர, பக்தியில் அவர்கள் உங்களை அஹிம்சாவாதிகளாகக் காட்டுவதற்குப் பதில், வன்முறையாளர்களாகவே காட்டியுள்ளார்கள். அவர்கள் ஆன்மீக சேனையை ஒரு பௌதீகமான, சாதாரண இராணுவமாகவே காட்டியுள்ளார்கள். இப்போதும் உங்களின் பக்தர்களிடமிருந்து உங்களின் வெற்றியின் புகழைக் கேட்கும்போது, நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். கடவுளிடம் அன்புள்ள புத்திகளைக் கொண்டிருப்பவர்கள் வெற்றியாளர்கள் என்றும், கடவுளிடம் அன்பில்லாத புத்தியைக் கொண்டிருப்பவர்கள் விநாசம் அடைவார்கள் என்றும் நினைவுகூரப்படுகிறது. எனவே, சென்ற கல்பத்தின் உங்களின் ஞாபகார்த்தம் மிகவும் பிரபல்யமானது. வெற்றிக்கு உத்தரவாதம் இருப்பதனால், நீங்களே புத்தியில் நம்பிக்கை வைத்திருக்கும் வெற்றியாளர்கள் ஆவீர்கள். இதனாலேயே, இந்த மாலை வெற்றிமாலை என்று அழைக்கப்படுகிறது. எனவே, உங்களிடம் நம்பிக்கையும் போதையும் இரண்டும் உள்ளன. யாராவது உங்களிடம் கேட்டால், வெற்றி ஏற்கனவே கிடைத்துவிட்டது என்று நம்பிக்கையுடன் நீங்கள் கூறுவீர்கள். உங்களின் கனவுகளிலேனும், உங்களுக்கு வெற்றி ஏற்படுமா இல்லையா என்ற ஓர் எண்ணமும் இருக்கமாட்டாது. அது ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. உங்களுக்குக் கடந்தகாலச் சக்கரத்தைப் பற்றியும் தெரியும். எதிர்காலத்தைப் பற்றியும் தெரியும். நீங்கள் திரிகாலதரிசியாகி, அந்த போதையுடன் பேசுகிறீர்கள். நீங்கள் அனைவரும் இதில் உறுதியாக இருக்கிறீர்கள், இல்லையா? அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள் என யாராவது உங்களிடம் சொன்னால், நீங்கள் என்ன கூறுவீர்கள்? நீங்கள் ஏற்கனவே பல தடவைகள் அதைக் கண்டுள்ளீர்கள் என்றே கூறுவீர்கள். ஏதாவது புதியதாக இருந்தால் மட்டுமே, நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது பல தடவைகள் நிகழ்ந்த ஒன்று. நீங்கள் மீண்டும் அதைச் செய்கிறீர்கள். எனவே, நீங்கள் புத்திகளில் நம்பிக்கையுள்ள ஞானிகளும் யோகி ஆத்மாக்களும் ஆவீர்கள், இல்லையா?

இன்று, ஆபிரிக்காவில் இருந்து வந்திருக்கும் குழுவின் முறையாகும். உண்மையில், இந்த வேளையில் அனைவரும் மதுவனவாசிகளே. உங்களின் நிரந்தர முகவரி மதுவனமே, இல்லையா? அந்த இடங்கள் எல்லாம் உங்களின் சேவைத்தலங்களே. ஒரு சேவைத்தலம் உங்களின் அலுவலகம். ஆனால் மதுவனமே உங்களின் வீடு. நீங்கள் நானா திசைகளிலும் உள்ள ஆபிரிக்கா, யுகே போன்ற இடங்களுக்குச் சென்றது, சேவைக்காகவே ஆகும். நீங்கள் உங்களின் மதத்தையும் உங்களின் நாட்டையும் மாற்றினாலும், அங்கு சேவை செய்வதற்காகவே நீங்கள் சென்றுள்ளீர்கள். நீங்கள் எந்த வீட்டை நினைவு செய்கிறீர்கள்? மதுவனத்தையா அல்லது பரந்தாமத்தையா? உங்களின் சேவைத்தலங்களில் சேவை செய்யும்போது, நீங்கள் எப்போதும் மதுவனத்தையும் முரளியையும் மட்டுமே நினைவு செய்கிறீர்கள், இல்லையா? நீங்கள் சேவைக்காகவே ஆபிரிக்காவிற்குச் சென்றுள்ளீர்கள், இல்லையா? சேவை செய்வது உங்களை ஞான கங்கைகள் ஆக்கியுள்ளது. ஞான கங்கைகளின் ஞானத்தில் குளிப்பதனால், நீங்கள் இன்று தூய்மை ஆகியுள்ளீர்கள். பல்வேறு இடங்களில் குழந்தைகள் சேவை செய்வதைப் பார்க்கும்போது, எவ்வாறு சேவைக்காக இந்த இடங்களுக்குச் சென்றுள்ள குழந்தைகள் அங்கே பயமில்லாமலும், மிகுந்த அன்புடனும் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து பாப்தாதா வியப்படைகிறார். ஆபிரிக்காவில் சூழலும் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. ஆனால் நீங்கள் அங்கு சேவை செய்வதற்காகத் தங்கியிருக்கிறீர்கள். சேவை செய்வதன் மூலம் நீங்கள் தொடர்ந்து சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் சேவையின் நடைமுறையான, புலப்படும் பலனைப் பெறுகிறீர்கள். அந்த சக்தி உங்களைப் பயமற்றவர் ஆக்கியுள்ளது. நீங்கள் ஒருபோதும் பயப்படுவதில்லை, அல்லவா? முதலாவது உத்தியோகபூர்வமான அழைப்பிதழ் ஆபிரிக்காவில் இருந்தே வந்தது. வெளிநாட்டில் சேவை செய்வதற்காக அழைப்பிதழைப் பெற்றதனால், நீங்கள் ஏனைய இத்தகைய நாடுகளுக்கும் சென்றீர்கள். அழைப்பின் மூலம் சேவை செய்வதன் அத்திவாரம் ஆபிரிக்காவிலேயே ஆரம்பம் ஆகியது. அங்குள்ள குழந்தைகள் சேவை செய்வதற்கான ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் நடைமுறையான, புலப்படும் பலனைக் காட்டியுள்ளார்கள். மறைந்துள்ள இரத்தினங்களை வெளிப்படச் செய்த ஒரு கருவி ஆத்மாவிற்கே இதற்கான புகழ் செல்கிறது. இப்போது அதிகளவு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தக் கருவி ஆத்மா மறைந்திருக்க, நீங்கள் வெளிப்படுத்தப்படுகிறீர்கள். ஓர் அழைப்பினால், நீங்கள் முன்னணியில் ஓர் இலக்கத்தைக் கோருகிறீர்கள். எனவே, ஆபிரிக்காவில் இருப்பவர்களை, பாப்தாதா நன்றியைப் பெறுபவர்கள் என்று அழைக்கிறார். இது நன்றிகளைப் பெறுவதற்கான இடம் ஆகும். ஏனெனில் அங்குள்ள சூழல் தூய்மையற்றது. ஒரு தூய்மையற்ற சூழலில் வளர்ச்சி இடம்பெறுகிறது. இதனாலேயே, பாப்தாதா நன்றி கூறுகிறார்.

சக்தி சேனையினர் மற்றும் பாண்டவ சேனையினர் என்ற இருவரும் சக்திசாலிகள். உங்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் இருந்து தொலைவில் வந்துவிட்டீர்கள். நீங்கள் தொலைவில் இருந்தாலும். உங்களின் உரிமையை உங்களால் கைவிட முடியாது. அங்கு நீங்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றீர்கள். நீங்கள் தந்தைக்குரியவர்கள் ஆகினீர்கள். நைரோபியில் எந்தவித முயற்சியும் வேண்டியிருக்கவில்லை. பிரிந்து சென்றவர்கள் இலகுவாகத் திரும்பி வந்தார்கள். இது குஜராத்திகளின் விசேடமான சம்;ஸ்காரம் ஆகும். அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி விசேடமான நடனம் ஆடுவது அவர்களின் சம்பிரதாயம் ஆகும். அவர்கள் அதைத் தனியாகச் செய்வதில்லை. பௌதீகமாகச் சிறியதோ அல்லது பெரியதோ, அனைவரும் நிச்சயமாக இந்த விசேடமான கர்பா நடனத்தை ஒன்றாகவே ஆடுவார்கள். இது ஒன்றுகூடலின் அடையாளம் ஆகும். சேவையிலும், குஜராத்திகள் குழுக்களாகச் செல்வதைக் காணலாம். ஒருவர் வந்தால், அவர் நிச்சயமாக மேலும் பத்து பேர்களைக் கொண்டு வருவார். ஒன்றாகக் கூடுகின்ற இந்த நல்ல சம்பிரதாயம் அவர்களிடம் உள்ளது. இதனாலேயே, அங்கு விரைவான விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது. சேவையில் வளர்ச்சியும் உள்ளது. விரிவாக்கமும் உள்ளது. இத்தகைய இடங்களுக்கு அமைதி சக்தியைக் கொடுத்தல், பயத்திற்குப் பதிலாக சந்தோஷத்தைக் கொடுத்தல் மேன்மையான சேவை ஆகும். இத்தகைய இடங்களுக்கு இதற்கான தேவை உள்ளது. நீங்கள் உலக உபகாரிகள். எனவே, உலகில் எங்கும் சேவை அதிகரிக்க வேண்டும். நீங்கள் அதற்குக் கருவிகள் ஆகவேண்டும். ஏதாவதொரு மூலை தவறவிடப்பட்டால், ஒரு முறைப்பாடு வந்துவிடும். இது நல்லது. தைரியம் உள்ள குழந்தைகள் தந்தையின் உதவியைப் பெறுவார்கள். அங்கு சேவை செய்வதற்கு கரங்களும் அங்கேயே வெளிப்படுகிறார்கள். இதுவும் ஒத்துழைப்பே ஆகும். நீங்கள் விழித்தெழுந்துள்ளீர்கள். அது மிகவும் நல்லது. ஆனால் நீங்கள் மற்றவர்களை விழித்தெழச் செய்வதற்கும் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, அது இரட்டை நன்மை ஆகும். பொதுவாக, கரங்களும் அங்கிருந்தே வந்துள்ளார்கள். இது நல்லதொரு சிறப்பியல்பாகும். வெளிநாட்டுச் சேவையில், பெரும்பாலானோர் அங்கிருந்தே வெளிப்படுகிறார்கள். பின்னர் அங்கு சேவை செய்வதற்கு அவர்கள் கருவிகள் ஆகுகிறார்கள். வெளிநாடுகள் பாரதத்திற்குக் கரங்களைக் கொடுக்கவில்லை. பாரதம் வெளிநாடுகளுக்குக் கரங்களைக் கொடுத்துள்ளது. பாரதம் மிகப் பெரியது. இங்கு வெவ்வேறு பிராந்தியங்கள் உள்ளன. பாரதத்தையே சுவர்க்கம் ஆக்க வேண்டும். வெளிநாடுகள் சுற்றுலாத் தலங்கள் ஆகிவிடும். எனவே, நீங்கள் அனைவரும் என்றும் தயாராக இருக்கிறீர்கள், இல்லையா? இன்று யாரையாவது எங்கேயாவது அனுப்பினால், நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் தைரியத்தைப் பேணினால், உதவியையும் பெறுவீர்கள். நீங்கள் நிச்சயமாக என்றும் தயாராக இருக்க வேண்டும். பின்னர், இத்தகையதொரு நேரம் வரும்போது, ஒரு கட்டளை கொடுக்கப்படும். தந்தையிடமிருந்து ஒரு கட்டளை வரும். அவர் எப்போது அதைச் செய்வார் என உங்களுக்கு அதற்கான திகதியைக் கூற மாட்டார். உங்களுக்கு அந்தத் திகதியைக் கூறினால், அனைவரும் சித்தி எய்தி முதலாம் இலக்கத்தவர் ஆகிவிடுவார்கள். இங்கு, சடுதியாக திகதியைப் பற்றிய ஒரேயொரு கேள்வியே உள்ளது. நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்கள், அல்லவா? பாபா உங்களை இங்கே இருக்கச் சொன்னால், நீங்கள் உங்களின் குழந்தைகள், உங்களின் வீடு போன்றவற்றை நினைவு செய்வீர்களா? அங்கு சந்தோஷத்திற்கான வசதிகளும் சௌகரியமும் உள்ளன. ஆனால் இங்கேயே சுவர்க்கம் உருவாக்கப்படும். எனவே, சதா என்றும் தயாராக இருப்பதே பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு ஆகும். உங்களின் புத்திகளின் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும். தந்தை அந்த இடங்களைச் சேவைக்காகவே தந்துள்ளார். அதனால், நீங்கள் கருவிகளாக சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். பின்னர், நீங்கள் தந்தையின் சமிக்கையைப் பெற்றதும், எதைப் பற்றியும் நினைக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் வழிகாட்டல்களுக்கேற்ப நல்ல சேவை செய்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் பற்றற்றவர்களாகவும் தந்தையிடம் அன்பானவர்களாகவும் இருக்கிறீர்கள். ஆபிரிக்காவில் நல்லதொரு விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. விஐபி களுக்கு நல்ல சேவை இடம்பெறுகிறது. அரசாங்கத்துடனும் நல்லதொரு தொடர்பு உள்ளது. சகல துறைகளைச் சேர்ந்த ஆத்மாக்களுடனும் உள்ள தொடர்பானது, நிச்சயமாக யாராவது ஒருவரை ஏதாவதொரு வேளையில் நெருக்கமாகக் கொண்டுவரும் சிறப்பியல்பு உள்ளது. இன்று, அவர்கள் தொடர்பில் உள்ளார்கள். நாளை, அவர்கள் உங்களுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் தொடர்ந்து அவர்களை விழித்தெழச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தமது கண்களைச் சிறிதளவு திறந்துவிட்டுப் பின்னர் மீண்டும் நித்திரைக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் கும்பகர்ணர்கள். நித்திரையின் போதை இருக்கும்போது, நீங்கள் எதையாவது உண்டு அல்லது பருகிவிட்டுப் பின்னர் அதை மறந்துவிடுவீர்கள். கும்பகர்ணனும் இப்படிப்பட்டவனே. ஆமாம், நான் மீண்டும் வருவேன், நான் அதைச் செய்வேன் என அவர்கள் கூறுவார்கள். பின்னர் அவர்களை நீங்கள் கேட்டால், தமக்கு எதுவும் நினைவில்லை என அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களை மீண்டும் மீண்டும் எழுப்ப வேண்டியுள்ளது. தந்தைக்குச் சொந்தமாகுவதிலும், தமது சரீரங்கள், மனங்கள், செல்வத்தின் மூலம் சேவை செய்வதில் ஈடுபட்டிருப்பதிலும் குஜராத்திகள் நல்லதோர் இலக்கத்தைக் கோரியுள்ளனர். அவர்கள் இலகுவாக ஒத்துழைக்கிறார்கள். அதுவும் ஒரு பாக்கியமே. குஜராத்திகளின் எண்ணிக்கையும் நன்றாக உள்ளது. தந்தைக்குச் சொந்தமாகும் அதிர்ஷ்டலாபத்தை வெல்வதென்பது சிறிய விடயம் அல்ல!

ஒவ்வோர் இடத்திலும், தந்தையிடமிருந்து பிரிந்த இரத்தினங்கள் இருக்கிறார்கள். நீங்கள் எங்கே காலடி வைத்தாலும், அங்கு யாராவதொருவர் வெளிப்படுகிறார். கவலையற்றவராகவும் பயமற்றவராகவும் இருந்தவாறு, நீங்கள் அன்புடன் சேவை செய்வதில் முன்னேறினால், நிச்சயமாக நீங்கள் பலமில்லியன் மடங்கு உதவியைப் பெறுவீர்கள். அங்கிருந்தே உத்தியோகபூர்வமான அழைப்பு ஆரம்பமாகியது. எனவே, குறைந்தபட்சம் அது சேவையில் சேமிக்கப்பட்டுள்ளது. அந்த சேமிப்புக் கணக்கு அவர்களை நிச்சயமாகச் சரியான நேரத்தில் ஈர்க்கும். எனவே, நீங்கள் அனைவரும் வாழ்த்துக்களைப் பெறுகின்ற முதலாம் இலக்கத் தீவிர முயற்சியாளர்கள் ஆவீர்கள். உறவுமுறையைப் பூர்த்தி செய்வதில் முதலாம் இலக்கம். சேவையின் அத்தாட்சியைக் காட்டுவதில் முதலாம் இலக்கம். நீங்கள் அனைத்திலும் முதலாம் இலக்கத்தவர் ஆகவேண்டும். அப்போதே நீங்கள் வாழ்த்துக்களைப் பெறுவீர்கள். அதன்பின்னர் நீங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களுக்கு மேல் வாழ்த்துக்களைப் பெறுவீர்கள். அனைவரின் தைரியத்தைப் பார்க்கும்போதும், பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் ஆத்மாக்கள் பலருக்கும் தந்தையின் ஆதாரத்தைக் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். அங்கு மிக நல்ல முழுமையான குடும்பங்கள் உள்ளன. ஒரு குடும்பத்தை ஒரு பூங்கொத்து என பாபா அழைக்கிறார். இதுவும் நல்லதொரு சிறப்பியல்பே ஆகும். உண்மையில், அனைத்தும் பிராமணர்களின் இடங்களே. நைரோபிக்கு அல்லது வேறு எங்கேயாவது செல்லும் ஒருவர், இது எமது நிலையம், இது பாபாவின் நிலையம் என்றே கூறுவார். இது எமது குடும்பம். ஆகவே, நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஒவ்வோர் இரத்தினத்தைப் பார்க்கும்போதும் பாப்தாதா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் எந்தவிடத்திற்குச் சொந்தமாக இருந்தாலும், நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்கள். தந்தையும் குழந்தைகளுக்குச் சொந்தமானவர். இதனாலேயே, பிராமண ஆத்மாக்கள் ஆழமாக நேசிக்கப்படுகிறார்கள். அவர்கள் விசேடமானவர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரை விட அதிகமாக நேசிக்கப்படுகிறீர்கள். அச்சா.

அனைவருக்கும் உங்களின் ஆன்மீக ஆளுமையால் சேவை செய்யுங்கள்
(அவ்யக்த முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மையான வாசகங்கள்)

இந்த முழுக் கல்பத்திலும், பிராமணர்களான உங்களைப் போல் ஆன்மீக ஆளுமை கொண்டவர்கள் எவரும் இல்லை. இது ஏனெனில், உங்களின் ஆளுமையை உருவாக்கும் ஒரேயொருவர் அதிமேலான, பராமாத்மா ஆவார். அனைவரிலும் மகத்தான ஆளுமையைக் கொண்ட உங்களின் எண்ணங்களிலும் கனவுகளிலும் சம்பூரணமான தூய்மை உள்ளது. இந்தத் தூய்மையுடன், தனித்தன்மை வாய்ந்தவர்களான உங்களின் முகங்களிலும் உங்களின் செயல்பாடுகளிலும் ஆன்மீகம் உள்ளது. தனித்தன்மை வாய்ந்த நீங்கள் இந்தத் தூய்மையில் சதா ஸ்திரமாக இருக்கும்போது, உங்களால் அனைவருக்கும் இயல்பாக சேவை செய்யக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆன்மீக ஆளுமையின் பிரகாசம் அல்லது உங்களின் சந்தோஷப் பார்வை, எந்தவொரு துன்பப்படும் அல்லது அமைதியற்ற ஆத்மாக்களையும் சந்தோஷப்படுத்தும். உங்களின் கணப் பார்வையால் அவர்களால் அப்பால் செல்லக்கூடியதாக இருக்கும். காலம் நெருங்கி வருவதற்கேற்ப, மற்றவர்களை ஒரு கணப்பார்வையால் அப்பால் எடுத்துச் செல்வதன் மூலம் அவர்களுக்குச் சேவை செய்யும் காலம் இதுவே ஆகும். உங்களின் ஒரு கணப்பார்வையால் அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். மனநிறைவு அடைவார்கள். ஏனெனில், அவர்களின் இதயபூர்வமான ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகிவிடும்.

நீங்கள் அனைவரும் தந்தை பிரம்மாவின் முகத்தினதும் நடத்தையினதும் ஆளுமையால் கவரப்பட்டீர்கள். அதேபோன்று தந்தையைப் பின்பற்றுங்கள். உங்களின் புத்திகளில் உங்களின் பேறுகள் அனைத்தினதும் முழுமையான பட்டியல் வெளிப்பட வேண்டும். அத்துடன் உங்களின் சந்தோஷத்தின் ஆளுமை உங்களின் முகங்களிலும் உங்களின் நடத்தையிலும் புலப்பட வேண்டும். இந்த ஆளுமை அனைவரையும் கவரும். உங்களின் ஆன்மீக ஆளுமையால் சேவை செய்வதற்கு, எப்போதும் உங்களின் மனோநிலையைக் கவனமாகவும் மலர்ச்சியானதாகவும் வைத்திருங்கள். என்ன நிகழ்ந்தாலும், உங்களின் மனோநிலை மலர்ச்சியானதாக இருக்க வேண்டும். என்னவொரு பிரச்சனை வந்தாலும், அதைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஒரு வழிமுறையைக் காண வேண்டும். சதா உங்களின் சந்தோஷம் மற்றும் திருப்தியின் ஆளுமையைப் பேணுங்கள். மனநிறைவுடன் இருப்பதனால் நீங்கள் மிக நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள். அனைவரும் சந்தோஷமான, திருப்தியான ஆத்மாக்களின் சகவாசத்தில் இருப்பதை விரும்புவார்கள். அவர்களுடன் அமர்ந்திருப்பதையும் அவர்களுடன் பேசுவதையும் மற்றவர்கள் விரும்புவார்கள். எனவே, சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கும் இலக்கைக் கொண்டிருங்கள். எந்தவிதக் கேள்விகளும் இருக்கக்கூடாது.

வெளியே, குழந்தைகளான நீங்கள் பதவியைப் பொறுத்தவரை சாதாரணமான ஆளுமை கொண்டவர்களாக இருக்கிறீர்கள். ஆனால், உள்ளே, உங்களிடம் அதியுன்னத ஆன்மீக ஆளுமை உள்ளது. உங்களின் தூய்மையான ஆளுமையை உங்களின் முகங்களிலும் உங்களின் நடத்தையிலும் காணக்கூடியதாக உள்ளது. எந்தளவிற்கு நீங்கள் தூய்மையானவர்களாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு மற்றவர்கள் உங்களின் ஆளுமையைப் பார்ப்பது மட்டுமன்றி, அவர்கள் அதை அனுபவமும் செய்வார்கள். அதனால் உங்களின் தூய்மையான ஆளுமை அனைவருக்கும் சேவை செய்யும். மகத்தான ஆளுமை உடையவர்களின் கண்கள் ஒருபோதும் எதனாலும் கவரப்பட மாட்டாது. ஏனெனில், இத்தகைய ஆளுமை உடையவர்கள் சம்பூரணமாக சகல பேறுகளாலும் நிறைந்திருப்பார்கள். அவர்களின் சகல பேறுகளின் பொக்கிஷக் களஞ்சியம் சதா நிரம்பி வழிவதனால், அவர்களின் மனங்களில் ஒருபோதும் எதுவும் குறைவாக இருக்காது. ஆனால், அவர்கள் எப்போதும் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பார்கள். இத்தகைய திருப்தியான ஆத்மாக்களால் மட்டுமே மற்றவர்களைத் திருப்திப்படுத்த முடியும்.

உங்களிடம் எவ்வளவு தூய்மை இருக்கிறது என்பதைப் பொறுத்து, அதேயளவு பிராமண வாழ்க்கையின் ஆளுமையும் உங்களிடம் இருக்கும். தூய்மை குறைவாக இருந்தால், ஆளுமையும் குறைவாகவே இருக்கும். தூய்மை என்ற இந்த ஆளுமை இலகுவாக சேவையில் வெற்றி பெறச் செய்யும். எவ்வாறாயினும், ஏதாவதொரு விகாரத்தின் சிறிதளவு சுவடேனும் இருந்தால், அதன் சகபாடிகளும் நிச்சயமாக இணைந்து கொள்ளும். தூய்மை ஆழமாக அமைதியுடனும் சந்தோஷத்துடனும் தொடர்புடையதாக இருப்பதைப் போல், தூய்மையின்மை ஐந்து விகாரங்களுடனும் ஆழமாகத் தொடர்புடையது. உங்களுக்குள் சிறிதளவு விகாரத்தின் சுவடேனும் இல்லாதபோதே, நீங்கள் தூய்மையின் ஆளுமையால் மற்றவர்களுக்குச் சேவை செய்கிறீர்கள் எனக் கூற முடியும்.

தற்காலத்தில், வெளியுலகில், இரண்டு வகையான ஆளுமைகள் உள்ளன: பௌதீகமான ஆளுமை, ஏதாவது பதவியின் ஆளுமை. எவ்வாறாயினும், பிராமண வாழ்க்கையில், தமது முகங்களிலும் தமது முகச்சாயல்களிலும் திருப்தியின் மகத்துவம் புலப்படுகின்ற பிராமண ஆத்மாக்கள், தமது மேன்மையான ஸ்திதியினதும் திருப்தியினதும் ஆளுமையை வெளிப்படுத்துவார்கள். தமது நடத்தையிலும் முகத்திலும் கண்களிலும் திருப்தியின் ஆன்மீக ஆளுமை புலப்படும் தபஸ்விகள், சதா உள்ளே சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களின் மனங்களும் இதயங்களும் சதா சாந்தமாக இருப்பதனால், அவர்கள் சந்தோஷ ஸ்திதியுடன் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் அமைதியற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் தமது ஒவ்வொரு வார்த்தையாலும் செயலாலும் கணநேரப் பார்வையாலும் மனோபாவத்தாலும் மற்றவர்களை இராஜரீகத்தையும் ஆன்மீக ஆளுமையையும் அனுபவம் பெறச் செய்வார்கள்.

உலகின் உயர்நிலை ஆளுமை உடையவர்கள் விசேடமான, மகத்தான ஆத்மாக்கள் ஆவார்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் மகத்துவத்தால் நிரம்பியிருப்பதே, உங்களின் தூய்மையான ஆளுமையின் சிறப்பியல்பாகும். இந்த ஆன்மீக ஆளுமையைக் கொண்டுள்ள ஆத்மாக்களான நீங்கள், உங்களின் சக்தி, காலம் அல்லது எண்ணங்களை வீணாக்குவதில்லை. ஆனால் அனைத்தையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துகிறீர்கள். இத்தகைய ஆளுமையைக் கொண்டுள்ள ஆத்மாக்களான நீங்கள் ஒருபோதும் உங்களின் மனங்களை அல்லது புத்திகளை அற்ப விடயங்களில் மும்முரமாக்க அனுமதிப்பதில்லை. உங்களின் விசேடமான தூய்மையின் ஆளுமையால் விசேடமான ஆத்மாக்களான உங்களின் திருஷ்டி, மனோபாவம், வார்த்தைகளும் எப்போதும் தனித்துவமாக ஆன்மீகமாகவே உள்ளன. அவை சாதாரணமானவையாக இருப்பதில்லை. நீங்கள் சாதாரணமான பணிகளைச் செய்யும்போதும், மற்றவர்களை ஒரு சக்திவாய்ந்த கர்ம யோகி ஸ்திதியை அனுபவம் பெறச் செய்கிறீர்கள். தந்தை பிரம்மா காய்கறி வெட்டும்போது அல்லது குழந்தைகளுடன் விளையாடும்போது, எவ்வாறு அவரின் ஆளுமை சதா கவரும்படியாக இருந்தது என்பதை நீங்கள் கண்டீர்கள். ஆகவே, தந்தையைப் பின்பற்றுங்கள்.

பிராமண வாழ்க்கையின் ஆளுமை சந்தோஷமே. இந்த ஆளுமையை அனுபவம் செய்வதுடன், மற்றவர்களும் அதை அனுபவம் அடையச் செய்யுங்கள். முற்றிலும் நல்லாசிகளால் நிறைந்திருங்கள். அனைவருக்கும் நல்லாசிகள் கொடுப்பதுடன், உங்களின் அன்பான ஒத்துழைப்பால் அவர்களுக்குச் சேவை செய்யுங்கள். நல்லாசிகள் உள்ள இத்தகைய ஆத்மாக்களால் மட்டுமே, சதா தமது சந்தோஷ ஆளுமையை வைத்திருப்பதுடன், உலகின் முன்னால் விசேடமான ஆளுமைகளாகவும் ஆகமுடியும். தற்காலத்தில், விசேடமான ஆளுமையைக் கொண்டவர்கள் மட்டுமே பிரபல்யம் அடைகிறார்கள். அவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன என்பதே இதன் அர்த்தம். ஆனால், விசேடமான, ஆன்மீக ஆளுமைகளைக் கொண்ட நீங்கள் பிரபல்யம் அடைவது மட்டுமல்ல. நீங்கள் புகழத் தகுதிவாய்ந்தவர்களாக ஆகுவது மட்டுமல்ல. ஆனால் நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுகிறீர்கள். இன்றுள்ள மகத்தான ஆளுமை கொண்டவர்கள் விஞ்ஞானம், அரசாங்கம், மதம் போன்ற துறைகளில் எத்தனை பிரபல்யமானவர்களாக ஆகினாலும், ஆன்மீக ஆளுமையைக் கொண்டுள்ள ஆத்மாக்களான உங்களைப் போல், 63 பிறவிகளுக்கு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக ஆகமாட்டார்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதன் மூலம் சதா நிரம்பியவர்கள் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், சிவனும் சக்தியும் என்ற ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வில் நீங்கள் இருக்கும்போது, ஒவ்வொரு அசாத்தியமான செயலும் உங்களுக்குச் சாத்தியமாகும். இதுவே அதிமேன்மையான ரூபம் ஆகும். இந்த ரூபத்தில் ஸ்திரமாக இருப்பதன் மூலம், நீங்கள் சம்பூரணம் ஆகுவதற்கான ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்கள். பாப்தாதா எப்போதும் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் ஸ்திதி என்ற ஆசனத்தை வழங்குகிறார். சதா இந்த ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருங்கள். நீங்கள் தொடர்ந்து அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுவீர்கள். மறக்கும் சம்ஸ்காரத்தை முடித்துவிடுங்கள்.

சுலோகம்:
உங்களின் சக்திவாய்ந்த மனோபாவத்தால், ஆத்மாக்களைத் தகுதிவாய்ந்தவர்களாகவும் யோகிகளாகவும் ஆக்குங்கள்.