27.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களில் கருணை கொண்டு, தந்தை உங்களுக்குக் கொடுக்;கும் ஸ்ரீமத்தைத் தொடர்ந்தும் பின்பற்றுங்கள். தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, நேரத்தை வீணாக்காதீர்கள்! சரியான வழியில் செயற்படுங்கள்.

கேள்வி:
பாக்கியசாலிக் குழந்தைகளின் பிரதான தாரணை என்ன?

பதில்:
பாக்கியசாலிக் குழந்தைகள் அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்கிறார்கள். அவர்கள் பாபாவுடன் இனிமையாகச் சம்பாஷணை செய்கிறார்கள். அவர்கள் ஒருபொழுதும் தங்கள் மீது கருணையற்றவர்களாக இருப்பதில்லை. அவர்கள் திறமைச்சித்தி எய்துவதற்கு முயற்சி செய்வதுடன், தங்களை ஓர் இராச்சியத்தினைக் கோருவதற்குத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆக்குகிறார்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடைய எல்லையற்ற தந்தை என்பதையும், அவர் உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்திற்காக ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் கருணைநிறைந்தவர் என்றும், விடுதலையளிப்பவர் என்றும் அவரைப் பற்றிப் பாடப்படுகிறது. மக்கள் அவரின் பெருமளவு புகழைப் பாடுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இது வெறுமனே புகழைப் பற்றிய கேள்வியன்று. தனது குழந்தைகளுக்கு வழிகாட்டல்களை வழங்குவது ஒரு (லௌகீக) தந்தையின் கடமையாகும். எல்லையற்ற தந்தையும் வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். அந்தத் தந்தையே அதிமேன்மையானவர். எனவே, அவர் கொடுக்கின்ற வழிகாட்டல்களும் நிச்சயமாக அதிமேலானவையாகவே இருக்கும். ஆத்மாக்களே வழிகாட்டல்களைப் பெறுபவர்கள். ஆத்மாக்களே நல்ல, தீய செயல்களைச் செய்பவர்கள். இவ் வேளையில், உலகிலுள்ள அனைவரும் இராவணனிடமிருந்தே வழிகாட்டல்களைப் பெறுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கடவுளாகிய, இராமரிடமிருந்து வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் கருணையற்றவர்கள் ஆகித் தவறாகச் செயற்பட்டீர்கள். தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கிறார்: நல்ல, சரியான செயல்களைச் செய்யுங்கள். உங்களில் கருணை கொள்வதே மிகச்சிறந்த செயலாகும். நீங்கள் சதோபிரதானாக இருந்தபொழுது, மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள் என்றும், நீங்கள் இராவணனிடமிருந்து வழிகாட்டல்களைப் பெற்றபொழுது, தமோபிரதான் ஆகினீர்கள் என்றும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை இப்பொழுது இந்த வழிகாட்டல்களைக் கொடுக்கிறார்: முதலில், தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்! இரண்டாவதாக, உங்களில் கருணை கொள்ளுங்கள்! தந்தை உங்களில் கருணை கொள்வதில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற ஸ்ரீமத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். உங்களில் கருணை கொள்ளுங்கள்! உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தூய்மையாக்குபவராகிய தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள்! நீங்கள் எவ்வாறு தூய்மை ஆகமுடியும் எனத் தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார். தந்தை தூய்மையற்றவர்களைத் தூய்மையானவர்கள் ஆக்குகிறார். அவர் உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால், நீங்கள் உங்கள் மீதே கருணையற்றவர்களாக இருக்கிறீர்கள். தந்தை இந்த ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார்: குழந்தைகளே, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற பாடத்தை உறுதியாக்குங்கள். உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்திற்காக உங்கள் வியாபாரத்தைச் செய்யுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி, இதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எவ்வாறு ஒரு காதலியும் அன்பிற்கினியவரும் தங்கள் வேலையைச் செய்கிறார்களோ, அவ்வாறே, உங்கள் வேலையைச் செய்யும்பொழுதும், உங்கள் புத்தி தந்தையின் மீது ஒருமுகப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் அன்புடன் இருக்கின்றார்கள். இங்கு அவ்வாறில்லை. நீங்களும் பக்தி மார்க்கத்திலும் அவரை நினைவுசெய்தீர்கள். சிலர் கேட்கிறார்கள்: நாங்கள் அவரை எவ்வாறு நினைவுசெய்ய முடியும்? ஆத்மாவையும், பரமாத்மாவையும் என்ன ரூபத்தில் நாங்கள் நினைவுசெய்ய வேண்டும்;? ஏனெனில், பக்தி மார்க்கத்தில் பரமாத்மா பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என நினைவுகூரப்படுகிறது. எவ்வாறாயினும், அது அவ்வாறு இல்லை. ஓர் ஆத்மா நெற்றியின் மத்தியில் உள்ள நட்சத்திரம் போன்றவர் எனக் கூறப்படுகிறது. அவ்வாறாயின், ஆத்மா என்றால் என்ன? என்று ஏன் அவர்கள் கேட்கிறார்கள்? ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆனால் அது புரிந்துகொள்ளப்பட வேண்டியதொன்று. ஆத்மாவைப் புரிந்துகொள்ள முடியும், அத்துடன் பரமாத்மாவையும் புரிந்துகொள்ள முடியும். ஆத்மா மிகவும் சூட்சுமமானவர், ஆத்மா மின்மினிப் பூச்சியை விடவும் மேலும் சூட்சுமமானவர். அவர் (ஆத்மா) எவ்வாறு சரீரத்தை விட்டு நீங்குகின்றார் என்பது உங்களுக்குத் தெரியாது. ஓர் ஆத்மா உள்ளார்; ஒருவர் ஆத்மாவின் காட்சியைக் காண்கிறார். ஆத்மாவின் காட்சியை ஒருவர் கண்டால் என்ன? ஆத்மா நட்சத்திரம் போன்று சூட்சுமமானவர். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். ஆத்மாக்களைப் போன்று, பரமாத்மாவும் ஓர் ஆத்மாவே ஆவார். எவ்வாறாயினும், கடவுள் பரமாத்மா என அழைக்கப்படுகிறார். அவர் பிறப்பு, இறப்புச் சக்கரத்திற்குள் பிரவேசிப்பதில்லை. அவர் பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டவர் ஆதலால், அந்த ஆத்மா பரம்பொருள் எனக் கூறப்படுகிறார். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாகி, முக்திதாமமான வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். யார் கதாநாயகர்கள், கதாநாயகிகள் என்ற பாகங்களை உடையவர்கள் என்பதும் வரிசைக்கிரமமானது. ஆத்மாக்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள். நாடகத்தில், சில நடிகர்கள் அதிக வருமானத்தைப் பெறுகிறார்கள். ஆனால் மற்றவர்களோ குறைந்த வருமானத்தைப் பெறுகிறார்கள். இலக்ஷ்மி, நாராயணனின் ஆத்மாக்கள் மனித ஆத்மாக்களில் உயர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். அனைவரும் தூய்மையானவர்கள் ஆகினாலும், ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமான பாகத்தை நடிக்கிறார்கள்; சிலர் பேரரசர்கள் ஆகுகிறார்கள், சிலர் பணியாட்களாகவும், சிலர் பிரஜைகளாகவும் ஆகுகிறார்கள். நீங்கள் நடிகர்கள். அந்தத் தேவர்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் நன்றாக முயற்சி செய்து, மேன்மையான ஆத்மாக்கள் ஆகினால், உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எவ்வாறு எடுத்துள்ளீர்கள் என்பதை இப்பொழுது நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையிடம் செல்ல வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இந்தச் சந்தோஷத்தையும் இந்தப் போதையையும் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சாதாரணமான மனிதனிலிருந்து நாராயணன் ஆகுவீர்கள் எனவும், உலக அதிபதிகள் ஆகுவீர்கள் எனவும் நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். அவ்வாறாயின், நீங்கள் அதற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பெறுகின்ற அந்தஸ்து நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமானது. அனைவரும் வரிசைக்கிரமமாக ஒரு பாகத்தைப் பெற்றுள்ளார்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை இப்பொழுது உங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். எவ்வாறாயினும், உங்கள் பாவங்களை அழிக்கும் வகையிலும், தமோபிரதானில் இருந்து நீங்கள் சதோபிரதான் ஆகும்வகையிலும் நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள் தலை மீது பாரிய பாவச்சுமை உள்ளது. அந்தப் பாவங்கள் சாத்தியமாகக்கூடிய எந்த வழியிலாவது இங்கேயே நீக்கப்பட வேண்டும். அப்பொழுது மாத்திரமே ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். ஆத்மாக்களே தமோபிரதான் ஆகியுள்ளனர். எனவே, ஆத்மாக்களே சதோபிரதான் ஆகவேண்டும். இந்த வேளையில், பாரதம் அதிகூடிய கடனாளியாக உள்ளது. இந்த நாடகம் பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றவர்கள் ஒரு சமயத்தை ஸ்தாபிப்பதற்கு வருகிறார்கள். இறுதியில், மறுபிறவி எடுப்பதனால் அனைவரும் தமோபிரதான் ஆகுகிறார்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். பாரதம் மிக மேன்மையான தேசமாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது இப்பொழுது மிகவும் ஏழ்மையாக உள்ளது. அனைவரும் ஏழைகளுக்கு உதவி செய்கின்றார்;கள். பாரதம் இப்பொழுது தொடர்ந்தும் அனைத்திற்கும் இரக்கிறது. முன்னர், இந்தத் தேசத்தில் இருந்து அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இப்பொழுது அது ஏழ்மை ஆகியதனால், அது பிரதிபலனாகச் சேவையைப் பெறுகிறது. எடுக்கப்பட்டவை அனைத்தும் இப்பொழுது கடனாகத் திரும்ப கொடுக்கப்படுகின்றது. கிருஷ்ணர் மற்றும் கிறிஸ்தவர் என்ற பெயர்கள் ஒத்த ஒலியைக் கொண்டுள்ளன. கிறிஸ்தவர்கள் பாரதத்தைக் கைப்பற்றினார்கள். இப்பொழுது நாடகத்திற்கேற்ப, அவர்கள் தங்கள் மத்தியில் சண்டையிடுவார்கள், குழந்தைகளாகிய நீங்கள் வெண்ணெயைப் பெறுவீர்கள். கிருஷ்ணர் தனது வாயில் வெண்ணையை வைத்திருந்தார் என்பதல்ல் அது சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளது. முழு உலகமும் கிருஷ்ணரின் கரங்களில் வருகிறது. நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! நீங்கள் ஒவ்வொரு அடியிலும் பல மில்லியன்களைக் கொண்டிருக்கிறீர்கள். அது ஓர் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் மாத்திரம் அல்ல. அவர்களின் வம்சமும் இருந்தது, அல்லவா? அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் பல மில்லியன்களைத் தங்கள் ஒவ்வோர் அடியிலும் கொண்டிருந்தார்கள். அங்கு எண்ணற்ற செல்வம் இருந்தது. அங்கு எவரும் பணத்திற்காகப் பாவம் செய்யவில்லை. அங்கு அபரிமிதமான செல்வம் இருந்தது. அலாவுதீனின் அற்புத விளக்கைப் பற்றிய நாடகம் உள்ளது. தேவர்களின் தர்மமான, முதலாவது தர்மத்தை ஸ்தாபிப்பவர் அல்லா ஒருவரே. அவர் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை வழங்குகிறார். ஒரு விநாடியில் ஒரு காட்சி பெறப்படுகிறது. எல்லையற்ற பொக்கிஷங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மீரா தனது காட்சிகளில் கிருஷ்ணருடன் நடனமாடினார். அது பக்தி மார்க்கமாகும். இங்கு பக்தி மார்க்கத்திற்குரிய எதுவும் கிடையாது. நீங்கள் நடைமுறையில் வைகுந்தத்திற்குச் சென்று உங்கள் பாக்கியமாக, இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள். பக்திமார்க்கத்தில் காட்சிகள் மாத்திரம் உள்ளன. இவ்வேளையிலேயே குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய இலக்கு, குறிக்கோளின் காட்சியைக் காண்கிறீர்கள். நீங்கள் இவ்வாறே ஆகவேண்டும் என்பதை அறிவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இதனை மறப்பதனால், உங்களுக்கு பட்ஜுகள் வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், மாயையின் எதிர்ப்பினால், அந்தச் சந்தோஷம் பறந்து விடுகிறது. தொடர்ந்தும் தந்தையையும், எவ்வாறு பாபா உங்களை உலகின் அதிபதிகள் ஆக்குகிறார் என்பதையும் நினைவுசெய்யுங்கள், உங்கள் போதை உயரும். எவ்வாறாயினும், மாயை உங்களை மறக்கச் செய்கிறாள். அதன்பின்னர், ஏதாவதொரு பாவம் செய்யப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்பதை நினைவுசெய்கிறீர்கள். வேறு எவரும் 84 பிறவிகளை எடுப்பதில்லை. நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கிறீர்களோ, அதற்கேற்ப உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் மற்றவர்களை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவதுடன், பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். புண்ணியம் வீட்டில் ஆரம்பிக்கிறது. மக்கள் யாத்திரை செல்லும்பொழுது, தாங்களாகவே புறப்படுகிறார்கள். பின்னர், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் தங்களுடன் வரும்படி கேட்கிறார்கள். நீங்களும் அனைவருக்கும் அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும். அனைவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஒரே வீட்டில், தந்தை புரிந்துகொள்வார். குழந்தை புரிந்துகொள்ள மாட்டார். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் பழைய உலகின் மீது பற்று வைக்க வேண்டாம் என எவ்வளவுதான் கூறினாலும், அக் குழந்தைகள் அவர்களைச் செவிமடுப்பதில்லை. அவர்கள் அதிகளவு விரக்தியை விளைவிக்கிறார்கள். மரக்கன்றுகளானவர்களும், இதற்;குரியவர்களும் வந்து புரிந்துகொள்வார்கள். இந்தத் தர்மம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகிறது எனப் பாருங்கள். ஏனைய சமய ஸ்தாபகர்கள் மரக்கன்றினை உருவாக்குவதில்லை. அவர்கள் மேலிருந்து கீழே வருகிறார்கள். அவர்களின் சீடர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து கீழே வருகிறார்கள். அந்த ஒரேயொருவரே ஸ்தாபனையை மேற்கொள்;கிறார். பின்னர் அவர் அனைவரையும் தூய்மையாக்கி, அவர்களைத் திரும்பவும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். இதனாலேயே, அவர் சற்குரு என்றும், விடுதலையளிப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒரேயொரு உண்மையான குருவே உள்ளார். மனிதர்களால் ஒருபொழுதும் எவருக்கும் சற்கதி அளிக்க முடியாது. ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவர் சற்குரு என அழைக்கப்படுகிறார். அவர் பாரதத்தைச் சத்திய பூமி ஆக்குகிறார். பின்னர் இராவணன் அதனைப் பொய்மைப் பூமி ஆக்குகிறான். அவர்கள் தந்தையைப் பற்றியும், தேவர்களைப் பற்றியும் பொய்களையே கூறுகிறார்கள். இதனாலேயே, தந்தை கூறுகிறார்: தீயதைக் கேட்காதீர்கள்! இந்த உலகம் இப்பொழுது விலைமாதர் விடுதி என அழைக்கப்படுகிறது. சத்தியயுகம் சிவாலயம் என அழைக்கப்படுகிறது. மனிதர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை; அவர்கள் தொடர்ந்தும் தங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள். அதிகளவில் சண்டை சச்சரவுகள் இடம்பெறுகின்றன. மகன் ஒருவன் தனது தாயை அடிப்பதற்குத் தயங்க மாட்டார். ஒரு கணவன் தனது மனைவியை அடிப்பதற்குத் தயங்க மாட்டார். அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் கொல்கிறார்கள். ஒரு மகன், தனது தந்தையிடம் பெருமளவு செல்வம் இருப்பதையும், அதை அவர் தனக்குக் கொடுக்க மாட்டார் என்பதையும் பார்க்கும்பொழுது, தனது தந்தையைக் கொல்லவும் தயங்குவதில்லை. இந்த உலகம் மிக அழுக்கானது! நீங்கள் இப்பொழுது என்னவாகுகிறீர்கள்? உங்கள் இலக்கும், குறிக்கோளும் உங்கள் முன்னால் உள்ளன. ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! என நீங்கள் கூறுவதுண்டு. வந்து எங்களை உலகின் அதிபதிகள் ஆக்குங்கள்! என நீங்கள் கூறவில்லை. தந்தையாகிய கடவுள், சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். எனவே, நாங்கள் ஏன் சுவர்க்கத்தில் இல்லை? இராவணன் உங்களை நரகவாசிகள் ஆக்கிவிட்டான். சக்கரத்தின் காலப்பகுதி நூறாயிரக்கணக்கான வருடங்கள் என்று கூறப்பட்டதால், அனைவரும் மறந்து விட்டார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தீர்கள். சக்கரத்தில் சுற்றி வந்ததனால் நீங்கள் இப்பொழுது நரகத்தின் அதிபதிகள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை தந்தை உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: இனிய ஆத்மாக்களே, குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்யுங்கள், நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். தமோபிரதான் ஆகுவதற்கு உங்களுக்கு அரைக்கல்பம் எடுத்துள்ளது. இது முழுக் கல்பத்திற்கும் கூறப்படலாம். ஏனெனில், உங்கள் கலைகள் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்தும் குறைவடைந்துள்ளன் இப்பொழுது எந்தக் கலைகளும் எஞ்சியிருக்கவில்லை. அவர்கள் (பக்தர்கள்) கூறுகிறார்கள்: எனக்கு நற்குணங்கள் இல்லை, என்னிடம் நற்குணங்கள் இல்லை. இதன் அர்த்தம் மிகத்தெளிவானது. இங்குள்ள ஒரு ஸ்தாபனம் நிர்குண் பாலக் (நற்குணங்கள் அற்ற குழந்தைகள்) என அழைக்கப்படுகிறது. இல்லாவிடின், விகாரத்தைப் பற்றிய அறிவே அற்ற குழந்தைகள் மகாத்மாக்களை விடவும் அதிமேன்மையானவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். மகாத்மாக்கள் விகாரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே அவர்களும் தவறான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். மாயை அனைவரையும் முற்றிலும் அதர்மம் மிக்கவர்கள் ஆக்கி விட்டாள். அவர்கள் கீதையைக் கற்கிறார்கள். காமமே கொடிய எதிரி எனக் கடவுள் கூறுகிறார் என்றும் அவர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். அது அதன் ஆரம்பத்திலிருந்து, மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தை விளைவித்தாலும், நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுவதற்கு மக்கள் பல தடைகளை உருவாக்குகிறார்கள். தங்கள் குழந்தை திருமணம் செய்ய மாட்டார் என்றதும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். மலர்கள் ஆகாதவர்கள், எவ்வளவிற்கு நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தினாலும், உங்களைச் செவிமடுக்க மாட்டார்கள். சிலவேளைகளில், குழந்தைகள் தாங்கள் திருமணம் செய்ய மாட்டார்கள் எனக் கூறும்பொழுது, அவர்களின் பெற்றோர் கொடுமை செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் இந்த ஞான யாகத்தை உருவாக்கும்பொழுது, பல தடைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் உங்களுக்கு மூன்றடி நிலத்தையேனும் கொடுப்பதில்லை. தந்தையின் வழிகாட்டல்களுக்கேற்ப அவரை நினைவுசெய்து, தூய்மையானவர் ஆகுங்கள். உங்களுக்கு வேறு எந்தச் சிரமமும் இல்லை. உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். எவ்வாறு ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சரீரத்தில் அவதரித்துள்ளீர்களோ, அவ்வாறே, தந்தையும் இந்தச் சரீரத்தில் அவதரித்துள்ளார். அவர் எவ்வாறு ஒரு முதலையில் அல்லது மீனில் அவதரிக்க முடியும்? அவர்கள் அவரை அதிகளவில் அவதூறு செய்கிறார்கள்! கடவுள் ஒவ்வொரு துணிக்கையிலும் இருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அவர்கள் என்னையும், தேவர்களையும் அவதூறு செய்கிறார்கள். நான் வரவேண்டும். நான் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை உங்கள் ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். நான் உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுக்கின்றேன், இராவணன் உங்களைச் சபிக்கிறான். இது ஒரு விளையாட்டாகும். ஒருவர் ஸ்ரீமத்தைப் பின்பற்றாவிடின், அவரது பாக்கியம் மிக மேன்மையானது அல்ல எனப் புரிந்துகொள்ளப்படுகின்றது. இந்தப் பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்து பாபாவை நினைவுசெய்வதுடன், பாபாவுடன் பேசுவார்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யும்பொழுது, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உங்கள் சந்தோஷப் பாதரசமும் உயரும். திறமைச்சித்தி எய்துபவர்கள் ஓர் இராச்சியத்தைக் கோருவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரம் இராச்சியத்தை ஆட்சிசெய்வதில்லை; ஒரு வம்சம் உள்ளது. தந்தை கூறுகிறார்: உங்கள் புத்தி இப்பொழுது மிகவும் சுத்தமானதாகி விட்டது! இது சத்தியத்தின் சகவாசம் (சத்சங்கம்) என்று அழைக்கப்படுகிறது. தந்தை உங்களுக்கு உண்மையான ஞானத்தைக் கொடுத்து, உங்களைச் சத்தியபூமியின் அதிபதிகள் ஆக்குகின்ற, ஒரேயொரு சத்சங்கம் இதுவே ஆகும். சக்கரத்தின் சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் சத்தியத்தின் சகவாசத்தைப் பெறுகிறீர்கள். சத்தியயுகத்தில், எந்த வகையான சத்சங்கமும் கிடையாது. நீங்கள் ஆன்மீக மீட்புப் படையினர். நீங்கள் உலகெனும் படகை அக்கரைக்கு எடுத்துச் செல்கிறீர்கள். தந்தையே உங்களை மீட்டு உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். உங்கள் புகழ் மிகவும் மகத்தானது. தந்தையினதும், பாரதத்தினதும் புகழ் எல்லையற்றது. குழந்தைகளாகிய உங்களுடைய புகழும் எல்லையற்றது. நீங்கள் பிரம்மாந்தத்தின் அதிபதிகளாகவும், உலகின் அதிபதிகளாகவும் ஆகுகிறீர்கள். நான் பிரம்மாந்தத்தின் அதிபதியாக மாத்திரமே ஆகுகிறேன். நீங்கள் இரட்டை வழிகளில் பூஜிக்கப்படுகிறீர்கள். நான் இரட்டை வழிகளில் பூஜிக்கப்படும் வகையில், ஒரு தேவர் ஆகுவதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் வரிசைக்கிரமமாக இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டு, அந்தச் சந்தோஷத்துடன் முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு கற்கின்றீர்கள் என்பதில் அதிகளவு வேறுபாடு உள்ளது! சத்தியயுகத்தில், இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் உள்ளது. அங்கு ஆலோசகர்கள் கிடையாது. இலக்ஷ்மியும் நாராயணனும் இறைவி, இறைவர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஆலோசகர்களிடமிருந்து எப்பொழுதாவது ஆலோசனை பெறுவார்களா? அரசர்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுதே ஆலோசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தற்சமயம், இது மக்களின் அரசாங்கமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப் பழைய உலகில் விருப்பமின்மையைக் கொண்டிருக்கிறீர்கள். ஞானம், பக்தி, விருப்பமின்மை எனக் கூறப்படுகிறது. ஆன்மீகத் தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். வேறு எவராலும் இதனைக் கற்பிக்க முடியாது. தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையை நினைவுசெய்வதுடன், மற்றவர்களை உங்களுக்குச் சமமானவர் ஆக்குகின்ற சேவையையும் செய்யுங்கள். புண்ணியம் வீட்டில் ஆரம்பமாகுகின்றது. அனைவருக்கும் அன்புடன் விளங்கப்படுத்துங்கள்.

2. இந்தப் பழைய உலகில் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருங்கள். தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள். எனவே, அவர் உங்களுக்குக் கொடுக்கும் முடிவற்ற பொக்கிஷங்களின் சந்தோஷத்தில் திளைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு விநாடிக்கான இந்தப் பேரத்தின் மூலம் முழுக் கல்பத்திற்குமான உங்கள் பாக்கியத்தை உருவாக்குவதால், பெரும் பாக்கியசாலி ஆகுவீர்களாக.

சங்கமவேளையில் நீங்கள் விரும்புமளவிற்கு, நீங்கள் எவ்வாறு விரும்புகின்றீர்களோ அவ்வாறு ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளீர்கள், ஏனெனில் பாக்கியத்தை அருள்பவராகிய, தந்தை உங்கள் கரங்களில் பாக்கியத்தை உருவாக்குகின்ற திறவுகோலை வைத்துள்ளார். இறுதியில் இருப்பவர்களும் விரைவாகச் சென்று முதலாவதாக வருகின்றார்கள். இதற்கு, ஒரு விநாடியில் சேவையின் விரிவாக்கத்தில் அதன் சாராம்சத்தை உருவாக்குவதைப் பயிற்சி செய்யுங்கள். ஒரு விநாடியில் மாஸ்டர் விதையாகுவதற்கான வழிகாட்டலை நீங்கள் பெறும் கணத்தில், உங்களுக்கு மேலும் காலம் எடுக்கக்கூடாது. ஒரு விநாடிக்கான இந்தப் பேரத்தின் மூலம் உங்களால் முழுக் கல்பத்திற்குமான உங்கள் பாக்கியத்தை உருவாக்க முடியும்.

சுலோகம்:
உங்களுடைய இரட்டைச் சேவை மூலம் சூழலைச் சக்திவாய்ந்ததாக ஆக்குங்கள், அப்பொழுது சடப்பொருளின் தத்துவங்களும் உங்கள் சேவகர்களாக ஆகும்.