30.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகி, அமைதி தாமத்தினதும், சந்தோஷதாமத்தினதும் பாதையை ஏனைய சமயத்தவர்கள் அனைவருக்கும் காட்டுங்கள். நீங்களே உண்மையான வழிகாட்டிகள்.

கேள்வி:
தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால் எக் குழந்தைகள் முழுச்சக்தியையும் பெறுகின்றார்கள்?

பதில்:
தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதுடன், அவரிடம் முற்றிலும் நேர்மையாகவிருந்து எதனையும் மறைக்காமல் இருக்கின்ற குழந்தைகள். உண்மையான தந்தையிடம்;, உண்மையாக இருப்பதுடன் பாவம் எதனையும் செய்யாதிருப்பவர்களே தங்கள் நினைவினால் சக்தியைப் பெறுகிறார்கள். சில குழந்தைகள் தொடர்ந்து தவறுகளைச் செய்து விட்டு, பின்னர் மன்னிப்புக் கேட்கிறார்கள். பாபா கூறுகின்றார்: மன்னிப்புக் கிடைக்க மாட்டாது. ஒவ்வொரு செயலுக்கும் மிகச் சரியான கர்மக் கணக்கு உண்டு.

பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது..

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். குழந்தைகள் ஞானக் கருத்துக்களை எவ்வாறு பிரித்தறிகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் அத்தகைய பாடல்களை தேர்ந்தெடுத்து அப் பாடல்கள் ஒவ்வொன்றினதும் உண்மையான அர்த்தத்தை பிரித்தெடுக்குமாறு அவர்களிடம் கேளுங்கள், ஏனெனில் இப்பாடல்களும் திருத்தம் செய்யப்பட வேண்டும். கவலையுடன் அமர்ந்திருக்கின்ற ஒருவருக்கு சந்தோஷமளித்து, அதிகளவு உதவக் கூடிய மிகவும் நல்ல சில பாடல்கள் உள்ளன என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இப்பாடல்கள் மிகவும் பயனுள்ளவை. இப்பாடல்களை நீங்கள் செவிமடுக்கும் போது, விரைவாக நீங்கள் விழிப்படைவீர்கள். நீங்களே பூமியின் உண்மையான அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எங்களுடைய இந்த யாத்திரையானது, பக்தி மார்க்கத்தவர்களின் யாத்திரையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நீங்களே பாண்டவ சேனை. அந்த யாத்திரைகளில், அவர்களிடம் வழிகாட்டிகளுக்கான சேனை ஒன்றுண்டு. ஒவ்வொரு குழுவினரும் வெவ்வேறு வழிகாட்டியினால் வழி நடத்தப்படுகின்றார்கள். அவர்கள் பதிவேடுகளை வைத்திருப்பதுடன், நீங்கள் எக் குலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் உங்களிடம் வினவுவார்கள். ஒவ்வொரு வழிகாட்டியும் தனது சொந்தக் குலத்தை அழைத்துச் செல்வார். மக்களை அழைத்துச் செல்கின்ற பல வழிகாட்டிகள் உள்ளனர். நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். உங்கள் பெயர் பாண்டவசேனையாகும். பாண்டவர்களுக்கு இராச்சியம் எதுவும் இல்லை. வழிகாட்டிகள் பாண்டவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தந்தை எல்லையற்ற வழிகாட்டியாவார். வழிகாட்டிகள் உங்களை யாத்திரையில் அழைத்துச் செல்கிறார்கள். அந்த வழிகாட்டிகள் யாத்திரீகர்களை அழைத்து வந்துள்ளார்கள் என பக்தர்கள் புரிந்து கொள்கிறார்;கள். ஞானப் பாதையில் நீங்கள் வழிகாட்டிகள் ஆகியுள்ளீர்கள். எவரையும் எங்கும் அழைத்துச் செல்வதென்ற கேள்விக்கே இடமில்லை. வீட்டில் அமர்ந்திருந்தவாறே உங்களால் எவருக்கும் பாதையைக் காட்ட முடியும். பின்னர் நீங்கள் எவருக்கு பாதையைக் காட்டினீர்களோ, அவராலும் வழிகாட்டி ஆக முடியும். நீங்கள் இந்தப் பாதையை ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்: மன்மனாபவ! நிச்சயமாக உங்களிலும் பலர் யாத்திரையில் சென்றிருப்பீர்கள். பத்திரிநாத் அல்லது அமர்நாத் போன்றவற்றிக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை உங்கள் புத்திக்குத் தெரியும். அந்த வழிகாட்டிகளுக்கும் அது தெரியும். நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள். நீங்கள் அதி மேன்மையான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் ஒரு விடயம் மாத்திரமே உள்ளது: நீங்களே முக்திக்கும் ஜீவன்முக்திக்குமான வழிகாட்டிகள் என்பதாகும். சுவர்க்கத்திற்கான வழிகாட்டிகள் முக்திக்கான வழிகாட்டியிலிருந்து வேறுபட்டவர்கள் என்றில்லை. நீங்கள் முக்திதாமத்திற்குச் சென்று, பின்னர் புதிய உலகிற்குச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வழிகாட்டிகளாகிய நீங்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். பலவகையான வழிகாட்டிகள் உள்ளனர். நீங்கள் முதற்தரமான வழிகாட்டிகள். நீங்கள் அனைவருக்கும் தூய்மைக்கான வழியைக் காட்டுகின்றீர்கள். அனைவரும் தூய்மையாக இருக்க வேண்டும். அனைவரது பார்வையும் முற்றாக மாற வேண்டும். ஒரேயொருவரைத் தவிர வேறு எவரையும் நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்கள் என சத்தியம் செய்துள்ளீர்கள். பாபா, நான் உங்களை மாத்திரமே, உங்கள் ஒருவரை மாத்திரமே நினைவு செய்வேன். நான் உங்களுக்குரியவனாகும் பொழுது, எனது படகு அக்கரைக்குச் செல்லும். எதிர்காலத்தில் சந்தோஷம் மாத்திரமே இருக்கும், சந்தோஷத்தைத் தவிர வேறெதுவுமில்லை, இப்பொழுது தந்தை எங்களைச் சந்தோஷ உறவுமுறைக்குள் அழைத்துச் செல்கிறார். இங்கு துன்பம் மாத்திரம் உள்ளது, துன்பத்தைத் தவிர வேறெதுவுமில்லை. இங்கு சந்தோஷம் ஏதாவது இருந்தாலும், அது காக்கையின் எச்சத்தைப் போன்றதே. இப்பொழுது நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கின்றீர்கள். முதலில் நீங்கள் முக்திதாமத்திற்குச் சென்று, பின்னர் இங்கு வருவீர்கள் என உங்களுக்குத் தெரியும். நீங்கள் நிச்சயமாக வீட்டிற்குச் செல்வீர்கள். இது நினைவு சக்தியின் யாத்திரையாகும். அமைதிதாமம் நினைவு கூரப்படவேண்டும். தந்தையும் நினைவு கூரப்பட வேண்டும். தந்தையுடன் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: உங்கள் ஒவ்வொருவரிலும் என்ன இருக்கின்றது என்பதை நான் அறிவேன் என்றி;ல்லை. இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் என்னென்ன செயல்களைச் செய்கிறீர்கள் என்பதைப் பற்றி பாபா விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். எனினும், நீங்கள் அவருக்குக் கீழ்படியாதுவிட்டாலோ அல்லது ஏதேனும் பாவம் செய்தாலோ நீங்கள் கேட்கப்படுகின்றீர்கள்: நீங்கள் ஏதாவது பாவச் செயல் செய்துள்ளீர்களா? கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியவை என பாபா உங்களுக்குக் கூறியுள்ளார். நீங்களும் பாபாவிடம் கூற வேண்டும்: பாபா, இன்று எனது கண்கள் என்னை நன்றாக ஏமாற்றிவிட்டன. நான் இங்கிருக்கும் வேளையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றேன், ஆனாலும் வீட்டுக்குச் செல்லும் போது, எனது புத்தி விஷமம் செய்கின்றது. பாபா, நான் பெரிய தவறு செய்து விட்டேன், தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்! பாபா கூறுகின்றார்: இதில் மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. உலக மக்கள் அதைச் செய்கிறார்கள். ஒருவரையொருவர் அறைந்து விட்டு, பின்னர் மன்னிப்புக் கேட்டால், எல்லாமே மீண்டும் சரியாகி விடுகின்றது. அவ்வாறாக மன்னிப்புக் கேட்பதற்கு அதிக நேரம் எடுக்க மாட்டாது. நீங்கள் தொடர்ந்தும் பிழையான செயல்களைச் செய்து விட்டு, நான் வருந்துகிறேன் எனக் கூற முடியாது. அவ்வாறு செய்வதில் பயனில்லை. அனைத்தும் சேமிக்கப்படுகின்றது. நீங்கள் சரியான செயல்கள் செய்தாலும், பிழையான செயல்கள் செய்தாலும் அது சேமிக்கப்படுகின்றது அந்தச் சரியான அல்லது பிழையான செயல்களுக்கான பலனை நிச்சயமாக நீங்கள் அடுத்த பிறவியில் பெறுகிறீர்கள். மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருவர் என்னென்ன செய்கின்றாரோ அதற்கேற்ற பலனைப் பெறுகின்றார். பாபா மீண்டும், மீண்டும் இதனை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அது உங்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து, மத்தியினூடாக இறுதிவரை துன்பத்தை விளைவிக்கின்றது. பாபா தூய்மையாக்குபவர் என அழைக்கப்படுகிறார். விகாரத்தில் ஈடுபடுபவர்கள் தூய்மையற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் இங்கிருந்து வெளியேறும் போது, உங்களால் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாதிருப்பின் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது. பாபா செய்திகள் அனைத்தையும் பெறுகிறார். சிலர் இங்கிருக்கும் வரையில், இது மிகவும் நல்லது எனக் கூறினாலும், பின்னர் வெளியே செல்லும்போது அவர்களால் அவற்றை பயிற்சியில் இட முடிவதில்லை. சத்தியயுகத்தில் விகாரம் எதுவும் இல்லை. இப்பொழுது இதுவே பாரதத்தின்; நிலையாகும். அங்கு அவர்கள் பெரிய மாளிகைகளில் வாழ்கிறார்கள். அவர்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். பாபா அனைத்தையும் பற்றிக் குழந்தைகளிடம் வினவுகின்றார். பாபாவிற்குச் செய்திகள் அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும். சிலர் பொய்யும் பேசுகிறார்கள். உங்களையே வினவுங்கள்: நான் எவ்வளவு பொய் பேசுகின்றேன்? எவருமே பாபாவிடம் எப் பொய்யும் பேசக்கூடாது. தந்தை ஒருவரே உங்களை உண்மையானவர் ஆக்குகின்றார். அங்கு பொய் எதுவும் இல்லை. அங்கு அதன் பெயரோ அல்லது சுவடோ இருப்பதில்லை. இங்கோ, அதற்கு மாறாக உண்மையின் பெயரோ அல்லது அதன் சுவடோ இல்லை. ஒரு வேறுபாடு உள்ளது. தந்தை கூறுகின்றார்: இது ஒரு முட்காடாகும். எனினும், எவருமே தங்களை ஒரு முள்ளாகக் கருதுவதில்லை. தந்தை கூறுகின்றார்: காமவாளைப் பயன்படுத்துவதே மிகப் பெரிய முள்ளாகும். இதனாலேயே நீங்கள் சந்தோஷமற்றவராகுகின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு அளவற்ற சந்தோஷத்தைக் கொடுப்பதற்காகவே பாபா வந்துள்ளார். முன்பு உண்மையாகவே உங்களிடம் அளவற்ற சந்தோஷம் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகம் சந்தோஷதாமம் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு நோய் போன்ற எதுவும் இல்லை. அங்கு மருத்துவமனைகள் அல்லது சிறைகள் போன்ற எதுவும் இல்லை. சத்தியயுகத்தில் துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. திரேதாயுகத்தில் இரண்டு கலைகள் குறைவாக இருக்கும். ஆகவே அங்கு ஏதோவொன்று இடம்பெறுகிறது. எனினும் அதுவும் சுவர்க்கம் என்றே அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்ற அதீந்திரிய சுகத்தில் இருக்க வேண்டும். உங்களுக்குக் கற்பிக்கின்ற ஒரேயொருவரையே நினைவு செய்யுங்கள். கடவுளே எங்கள் ஆசிரியர், அனைவரும் தங்கள் ஆசிரியரை நினைவு செய்கிறார்கள். இங்கிருக்கும் குழந்தைகளாகிய உங்களுக்கு அது மிக இலகுவானது. இங்கு பந்தனம் எதுவும் இல்லை. நீங்கள் எல்லாவகையான பந்தனத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டுள்ளீர்கள். ஆரம்பத்தில் பத்தி உருவாக்கப்பட்ட பொழுது, அவர்கள் பந்தனத்திலிருந்து விடுபட்டார்கள். சேவையும், எவ்வாறு சேவையை அதிகரிப்பது என்ற அக்கறையும் மாத்திரமே இருந்தது. பாபா தொடர்ந்தும் அதிகளவு விளங்கப்படுத்துகின்றார். பாபாவிடம் வருகின்ற சிலர், ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களுக்கு அதிகளவு உற்சாகத்துடன் இருந்தாலும், பின்னர் பின்னடைகின்றார்கள். பின்பு அவர்கள் தங்கள் நிலையங்களுக்கும் செல்வதில்லை. நல்லது. அப்பொழுது என்ன செய்யப்பட வேண்டும்;? நீங்கள் அவர்களுக்கு ஏன் வருவதில்லை எனக் கேட்டுக் கடிதம் எழுதலாம். அவர்களிடம் கூறுங்கள்: உங்களை மாயை தாக்கி விட்டாளோ, அல்லது நீங்கள் தீயசகவாசத்தில் அகப்பட்டு விட்டீர்களோ அல்லது பிழையான செயல்களைச் செய்து விழுந்து விட்டீர்களோ என நான் எண்ணினேன். எது எவ்வாறிருப்பினும் அவர்கள் ஈடேற்றப்பட வேண்டும். நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுடைய இதயங்களை வெல்ல வேண்டும். நீங்கள் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம். பலரும் வெட்கத்தினால், நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டிற்குத் திரும்பிச் சென்றாலும் அவர்கள் வீட்டில் வெறுமனே முடங்கிவிடுகின்றார்கள் என்ற செய்திகள் வருகின்றன. தங்கள் இதயம் இனியும் இதில் நிலைத்திருக்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். சிலர் கடிதம் எழுதியும் கூறுகிறார்கள்: உங்கள் ஞானம் மிகவும் நல்லது, ஆனால் என்னால் தூய்மையாக இருக்க முடியவில்லை. ஆதலால் நான் ஞானத்தை விட்டு விலகி விட்டேன். என்னிடம் அந்தளவிற்குத் துணிச்சல் இல்லை. இவ்வாறு அவர்கள் எழுதுகிறார்கள். அவர்களை விகாரம் எவ்வாறு வீழ்துகின்றதெனப் பாருங்கள்! அவர்கள் இங்கே வந்த பொழுது, தாங்கள் ஒரு சாதாரண மனிதரிலிருந்து ஒரு சூரிய வம்ச நாராயணனாக ஆகுவோம் எனக் கூறித் தங்கள் கைகளையும் உயர்த்தினார்கள். இந்த ஞானம் ஒரு சாதாரண மனிதரிலிருந்து இலக்ஷ்மியாகவோ அல்லது நாராயணனாகவோ மாறுவதற்கானதேயாகும். தந்தை கூறுகின்றார்: சர்க்கரைக்கும் சக்கரை வைக்கப்பட்ட பாத்திரத்திற்குமே தெரியும். இவர் பாபாவின் பாத்திரம் (டியப) ஆவார். இவர் அனைத்தையும் பற்றி மிகத் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர் அனைத்துச் செய்திகளையும் பெறுகிறார். சிவபாபா கூறுகின்றார்: உங்களுக்குக் கற்பிக்கவே நான் வந்துள்ளேன். கற்பவர்கள் அதிபதிகள் ஆகுவார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் பார்வை அதிகளவில் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். இந்த நினைவின் மூலம் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் பல மில்லியன்களைச் சம்பாதிக்கலாம். பல குழந்தைகள் தோல்வியடைகிறார்கள். சேவையில் ஈடுபட்டிருக்கும் வழிகாட்டிகளும் தோல்வியடைகிறார்கள். யாத்திரையில் செல்கின்ற மக்கள் தூய்மையாக இருப்பார்கள். எனினும் சில மக்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டதால், அவர்கள் யாத்திரைகளுக்குச் செல்லும் போது தங்களுடன் மதுபானத்தையும் எடுத்துச் செல்கின்றார்கள். அவர்கள் அதனை மறைத்து வைத்திருக்கிறார்கள். பெரும் முக்கியஸ்தர்களும் அதனை நிறுத்த முடியாதுள்ளனர். அந்த யாத்திரையில் என்ன பயன் உள்ளது? போர் புரியச் செல்பவரும் முதலில் மதுபானம் அதிகளவில் அருந்தி விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் மதுபானத்தை அருந்தி விட்டுப் பின்னர் தங்கள் விமானங்களை நீராவிக்கப்பலுடன் மோதி நொறுங்க வைக்கிறார்கள். அவர்கள் நீராவிக் கப்பலையும் அழித்து விடுவதுடன் தங்களையும் கொன்று விடுகின்றார்கள். இப்பொழுது நீங்கள் ஞான அமிர்தத்தைப் பெறுகின்றீர்கள். எனினும், நினைவு தான் பிரதான விடயமாகும். இதன் மூலமே நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், என்றும் செல்வந்தர்களாகவும் இருப்பீர்கள். பாபா உங்களை எழுதுமாறு கூறியுள்ளார்: எவ்வாறு நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகலாம்; என்பதை இங்கு வந்து புரிந்து கொள்ளுங்கள். பாரதத்தில் உண்மையில் நீங்களே நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டவர்கள் என்பது பாரத மக்களாகிய உங்களுக்குத் தெரியும். சத்தியயுகத்தில் எவருமே நோயுற்றிருக்க மாட்டார்கள். சத்தியயுகத்தில் தேவர்களின் ஆயுட் காலம் கிட்டத்தட்ட 150 வருடங்களாகும். அவர்கள் 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்கள். இது எவ்வாறு சாத்தியமாகும் எனச் சிலர் வினவுகின்றனர். அவர்களிடம் கூறுங்கள்: ஐந்து விகாரங்களும் அங்கிருப்பதில்லை. அங்கு ஐந்து விகாரங்களும் இருக்குமானால், எவ்வாறு அது இராம இராச்சியமாக இருக்க முடியும்.? தேவர்கள் பாவப் பாதையில் வீழ்வதை நீங்கள் அந்தச் சிலைகளில் கண்டிருப்பீர்கள். அவை மிகவும் தூய்மையற்ற உருவங்கள். இந்த பாபா கூறுகின்றார்: நான் பார்த்தவற்றையே நான் உங்களுக்குக் கூறுகின்றேன். சிவபாபா கூறுகின்றார்: நான் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றேன். சிவபாபா உங்களுக்கு ஞான விடயங்களைக் கூறுவார், இவர் தனது சொந்த அனுபவத்தைக் கூறுவார். இங்கே இருவர் இருக்கிறார்கள். இவர் தொடர்ந்தும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வார். ஒவ்வொருவரும் தத்தமது சொந்த வாழ்க்கையையைப் பற்றி அறிவார்கள். அரைச் சக்கரமாக நீங்கள் பாவத்தைச் செய்து வந்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு எவரும் எந்தப் பாவமும் செய்வதில்லை. இங்கு எவருமே தூய்மையாக இல்லை. உண்மையான பகவத் இப்பொழுது இடம் பெறுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கடவுள் இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். உண்மையில், ஒரு கீதையே இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சிவபாபாவின் சுயசரிதத்தைப் பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள்? விநாசம் விரைவில் இடம்பெறும் என்பதால் புத்தகங்கள் போன்ற எவையும் இருக்க மாட்டாது. என்பதை நீங்கள் அறிவீர்கள். முயற்சி செய்வதற்கான இந்த ஞானமும் முடிவடைந்துவிடும், பின்னர் வெகுமதி ஆரம்பமாகும். அதேபோன்று நாடகத்தில் என்னென்ன நடிக்கப்பட்டதோ, அவை தொடர்ந்தும் சுருளில் சுற்றப்பட்ட பின்னர் வெகுமதி புதிதாக ஆரம்பமாகும். நாடகத்தில், ஆத்மாக்கள் அனைவரிலும், அவரவருக்குரிய சொந்தப் பாகங்கள் நிச்சயிக்கப்படு;ள்ளன. இவ்விடயங்களைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவ்வாறு செய்வார்கள். இது ஓர் எல்லையற்ற நாடகமாகும். இந்த எல்லையற்ற நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை உங்களால் கூற முடியும் என்பதை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். அது அசரீரி உலகம். இது பௌதீக உலகம். இந்தச் சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது என்ற இரகசியத்தை நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம். நீங்கள் எவருக்கு விளங்கப்படுத்தினாலும் அவர் அதிகளவில் சந்தோஷப்படுவார். எவரும் உங்களைச்; செவிமடுக்கவில்லை என நினைக்காதீர்கள். அனேக பிரஜைகள் உருவாக்கப்பட வேண்டும். சேவையில் உங்களுக்கு இதய வழுவல் ஏற்படக் கூடாது. தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். வியாபாரியான உங்களிடம் அனேக வாடிக்கையாளர்கள் வருவார்கள். வியாபாரிகளான நீங்கள் கூறுகிறீர்கள்: வாருங்கள், நான் உங்களிடம் எல்லையற்ற பேரம் பேசுவேன். பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது: அது எங்கு சென்று விட்டது? வாருங்கள், அவர்கள் எவ்வாறு 84 பிறவிகளை எடுத்தார்கள் என்பதனை நாங்கள் விளங்கப்படுத்துவோம். கடவுள் கூறுகின்றார்: நீங்கள் உங்கள் சொந்தப் பிறவிகளை அறிந்திருக்கவில்லை. உங்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். உங்களுக்கு நேரமுள்ள போது, வந்தால், நாங்கள் உங்களுக்கு உலகின் சரித்திரத்தையும் புவியியலையும் கூறுவோம். தந்தையைத் தவிர வேறு எவராலும் இதனை விளங்கப்படுத்த முடியாது. வாருங்கள், நாங்கள் படைப்பவரதும், படைப்பினதும் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். இது உங்கள் இறுதிப் பிறவியாகும். இப்போது நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காகச் சம்பாதிக்க முடியும். பாபா, குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்யும் வழிகளை விளங்கப்படுத்துகின்றார். உங்கள் வாடிக்கையாளர்கள் இவ்விடயங்களைச் செவிசாய்க்கும் போது மிகவும் சந்தோஷமடைவார்கள். அவர்கள் உங்களுக்குத் தலைவணங்கி, நன்றி கூறுவார்கள். வியாபாரிகளால் அதிகளவு சேவை செய்யமுடியும்! வியாபாரிகள் சிலவற்றைப் புண்ணியத்துக்கென ஒதுக்கி வைப்பார்கள். நீங்கள், சிறந்த தர்மாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். தந்தை வந்து, உங்கள் புத்தியை அழியாத ஞான இரத்தினங்களினால் நிரப்புகின்றார். பாபா, அனைத்தையும் எவ்வாறு செய்வது எனப் பலவகையான் புத்திமதிகளையும் கொடுக்கின்றார். செய்தியைத் தொடர்ந்தும் கொடுங்கள்! களைப்படையாதீர்கள்! அனேகருக்கு நன்மையை ஏற்படுத்துவதில் உங்களை ஈடுபடுத்துங்கள்! சோர்வடைந்து விடாதீர்கள்! உங்கள் பார்வை நல்லதாக இருக்கட்டும்! கோபமடையாதீர்கள்! அனைவருடனும் பெருமளவு தந்திரமாகத் தொடர்பு வைத்திருங்கள். தந்தை தொடர்ந்தும் பல வித்தியாசமான வழிமுறைகளை விளங்கப்படுத்துகின்றார். கடை உரிமையாளர்களுக்கு இது மிகவும் இலகுவானதாகும். அவை ஒரு பேரங்களாகும். இதுவும் ஒரு பேரமாகும். அந்த மக்கள் கூறுகிறார்கள்: இது மிகவும் நல்ல பேரமாகும். பலர் மிக விரைவில் வாடிக்கையாளர்கள் ஆகுவார்கள். அவர்கள் கூறுவார்கள்: அந்தளவு பேரம் செய்யும் அத்தகைய மாமனிதருக்கு பெருமளவு உதவி கொடுக்கப்பட வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: சாதாரண மனிதரில் இருந்து மீண்டும் ஒருமுறை தேவராக மாறுகின்ற உங்கள் கடைசிப்பிறவி இதுவாகும். அவர்கள் செய்யும் அளவிற்கேற்ப ஒவ்வொருவரும் வெகுமதியைப் பெறுவார்கள். உங்களையே சோதனை செய்யுங்கள்: இன்று எனது பார்வை எவ்விதத்திலும் பிழையானதாக இருந்ததா? அது பெண்களினால் ஈர்க்கப்பட்டதா? எவராவது வெட்கப்பட்டால், அவர் இங்கு வருவதை நிறுத்திவிடுவார். உலக அதிபதியாகுவது ஒரு சிறிய விடயமல்ல. பக்தராக இருக்கும் வரை ஒருவர், சந்தோஷமாக இருப்பார். குறைவாகப் பக்தி செய்பவர்கள் குறைவான சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். இந்தக் கணக்கும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். புத்தி கூறுகின்றது: இப்போது நான் வீடு திரும்ப வேண்டும். பின்னர் நான் புதிய உலகத்திற்குச் செல்வேன். நான் ஆடையைப் புதிதாக மாற்றி, எனது பாகத்தை நடிப்பேன். நான் இந்தச் சரீரத்தை நீக்கிய பின்னர், வாயில் தங்கக் கரண்டியை வைத்திருப்பேன். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் பார்வையினூடாக பிழையான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். முதலில் உங்கள் பார்வை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கையாக இருந்து, பல மில்லியன் வருமானத்தைச் சேமியுங்கள்.

2. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இந்த எல்லையற்ற பேரத்தைப் பேசுங்கள். சேவையில் மனந்தளர்வடையாதீர்கள். அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள், களைப்படையாதீர்கள்.

ஆசீர்வாதம்:
சகல உள்ளார்ந்த சந்தோஷத்தையும், சகல சக்திகளையும் அன்பு என்ற மடியில் அனுபவம் செய்கின்றதொரு ஒரு மிகச்சரியான முயற்சியாளர் ஆகுவீர்களாக.

உண்மையான முயற்சியாளர்கள் கடின உழைப்பையோ களைப்படைவதையோ அனுபவம் செய்ய மாட்டார்கள். ஆனால் அன்பின் போதையில் திளைத்திருப்பார்கள். தமது எண்ணங்களினாலுமே அவர்கள் அர்ப்பணித்திருப்பதால், கடின உழைப்பு என்ற பாதங்களினால் அல்லாது தாம் அன்பு என்ற மடியில் பாப்தாதாவினால் வழிநடத்தப்படுவதாகவே அனுபவம் செய்கிறார்கள். அன்பு என்ற மடியில் சகல பேறுகளையும் அனுபவம் செய்வதால், அவர்கள் வெறுமனே முன்னேறிச் செல்லாது, ஆனால் சதா சந்தோஷ அனுபவத்திலும், உள்ளார்ந்த களிப்பிலும், சகல சக்திகளினாலும் அவர்கள் தொடர்ந்தும் பறக்கின்றார்கள்.

சுலோகம்:
நம்பிக்கை என்ற அத்திவாரம் உறுதியாக இருக்கும் போது, உங்கள் வாழ்க்கை மேன்மையானது என்பதை இயல்பாகவே அனுபவம் செய்வீர்கள்.