31.07.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இது அற்புதமானதொரு பாடசாலையாகும். இங்கே கற்கின்ற ஆத்மாக்களும் கண்களுக்கு புலப்படுவதில்லை, கற்பிக்கின்ற கடவுளும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. இது புதியதொரு விடயமாகும்.

கேள்வி:
எவரும் வேறு எந்தப் பாடசாலையிலும் பெறாத எப்பிரதான கற்பித்தல்களை நீங்கள் இப்பாடசாலையில் பெறுகின்றீர்கள்?

பதில்:
இங்கு, தந்தை தனது குழந்தைகளுக்குக் கொடுக்கின்ற கற்பித்தல்கள்: குழந்தைகளே, உங்கள் பௌதீக அங்கங்களைக் கட்டுப்படுத்துங்கள். ஒரு சகோதரி மீது ஒருபோதும் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிராதீர்கள். ஆத்மாக்கள் என்ற வகையில் நீங்கள் அனைவரும் சகோதரர்கள், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்ற வகையில் நீங்கள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள். நீங்கள் ஒருபோதும் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கக்கூடாது. இக்கற்பித்தல்கள் இப்பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு எங்கும் கொடுக்கப்படுவதில்லை.

பாடல்:
தொலைதூரவாசி அந்நிய நாட்டிற்கு வந்துள்ளார்.

ஓம் சாந்தி.
தொலைதூரவாசியான ஆத்மாக்களோ, அல்லது தொலைதூரவாசியான பரமாத்மாவோ கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஒரேயொரு பரமாத்மாவையும், ஆத்மாக்களையும் இக்கண்களால் பார்க்க முடியாது. ஏனைய அனைத்தையும் பார்க்க முடியும். நான் ஓர் ஆத்மா என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆத்மா சரீரத்திலிருந்து வேறுபட்டவர் என்பதை மனிதர்கள் புரிந்துகொள்கின்றனர். ஓர் ஆத்மா தொலைதூரத்திலிருந்து வந்து, ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். எவ்வாறு ஆத்மாக்கள் தொலைதூரத்தில் இருந்து வருகின்றார்கள் என்பது உட்பட நீங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களும் கண்களுக்குப் புலப்படுவதில்லை, எங்களுக்குக் கற்பிக்கின்ற பரமாத்மாவான தந்தையும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களிலோ அல்லது சமய நூல்களிலோ நீங்கள் இதைக் கேட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் அதைக் கேட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ மாட்டீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் கண்களுக்குப் புலப்படாதவர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவே கற்கவேண்டும். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். இது, வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாத புதிய விடயமாகும். ஞானக்கடலான பரமாத்மாவான பரமதந்தை கண்களுக்குப் புலப்படாதவர். எவ்வாறு அசரீரியான ஒருவரால் கற்பிக்க முடியும்? ஆத்மாக்கள் ஒரு சரீரத்தில் பிரவேசிப்பது போன்றே, பரமாத்மாவான தந்தையும் அதிர்ஷ்ட இரதமான, பாக்கியரதத்தில் பிரவேசிக்கின்றார். இந்த இரதமும் தனது சொந்த ஆத்மாவைக் கொண்டுள்ளார். அவரால் தனது சொந்த ஆத்மாவையேனும் பார்க்க முடியாது. தந்தை வந்து, இந்த இரதத்தின் ஆதாரத்துடன் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். ஓர் ஆத்மாவை புரிந்துகொள்ள முடியுமே அன்றி, பார்க்க முடியாது. கண்களால் பார்க்க முடியாத தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இது முற்றிலும் புதிய விடயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் நாடகத்திட்டத்திற்கேற்ப எனக்குரிய நேரத்தில் வந்து, இச்சரீரத்தைத் தத்தெடுக்கின்றேன். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களை வேறு எவ்வாறு நான் துன்பத்திலிருந்து விடுவிக்க முடியும்? குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது விழித்தெழுந்துவிட்டீர்கள். உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் இன்னமும் உறக்கத்திலேயே உள்ளனர். அவர்கள் உங்களிடம் வந்து, இவ்விடயங்களைப் புரிந்துகொண்டு, பிராமணர்கள் ஆகும்வரைக்கும் உறக்கத்திலேயே இருப்பார்கள். எவரும் ஏனைய சத்சங்கங்களுக்குச் சென்று அமரலாம், ஆனால் அதுபோன்று எவராலும் இங்கு வரமுடியாது. ஏனெனில் இது ஒரு பாடசாலையாகும். நீங்கள் ஒரு சட்ட நிபுணராகுவதற்கான பரீட்சைக்குச் சென்று அமர்ந்தால், உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். இது முற்றிலும் புதிய விடயமாகும். கற்பிப்பவரைக் கண்களால் பார்க்க முடியாது. கற்பவர்களுமே கண்களுக்குப் புலப்படுவதில்லை. உள்ளேயிருக்கின்ற ஆத்மாக்களே செவிமடுத்து அனைத்தையும் கிரகிக்கின்றனர். பரமாத்மாவையோ, ஆத்மாக்களையோ கண்களால் பார்க்க முடியாது என்பது முற்றிலும் சரியானதே என்ற நம்பிக்கை தொடர்ந்தும் உங்களுக்குள் வளர்ச்சியடைகின்றது. நான் ஓர் ஆத்மா என்பது புத்தியால் புரிந்துகொள்ளப்படுகின்றது. சிலர் இதனையுமே நம்பாமல், இது இயற்கையாகும் எனக் கூறுகின்றனர். அவர்கள் அதனை விபரிப்பதற்கும் முயற்சி செய்கின்றார்கள். பல அபிப்பிராயங்கள் உள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தில் மும்முரமாக இருக்க வேண்டும். உங்களை ஏமாற்றுகின்ற பௌதீக அங்கங்களையும் நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கண்களே பிரதானமானவை, அவை அனைத்தையும் பார்க்கின்றன. உங்களது கண்கள் உங்களுடைய குழந்தையைப் பார்க்கும்போதே நீங்கள் கூறுகின்றீர்கள்: இது எனது குழந்தை. வேறு எவ்வாறு இதனை புரிந்து கொள்ள முடியும்? ஒருவர் குருடராகப் பிறக்கும்போது, இவர் உங்களது சகோதரர் என அவருக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது. அவரால் அவரை (சகோதரனை) பார்க்க முடியாது, ஆனால் அவரது புத்தியால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், ஒருவர் சுர்தாஸைப் (தன்னைத்தானே குருடாக்கியவர்) போன்று குருடராக இருந்தால், அவரால் இந்த ஞானத்தை மிக நன்றாக எடுத்துக்கொள்ள முடியும். ஏனெனில், அவரை ஏமாற்றுவதற்கு, அவருக்குக் கண்களில்லை. அவரால் வேறு எதுவுமே செய்ய முடியாவிட்டாலும், இந்த ஞானத்தை மிக நன்றாக எடுத்துக்கொள்ள அவரால் முடியும். அவரால் எந்தப் பெண்ணையும் பார்க்க இயலாது. ஒருவர் எவரையாவது பார்க்கும்போதே அவரது புத்தி ஈர்க்கப்பட்டு, அந்நபரது கரத்தைப் பிடிக்கவும் விரும்பக்கூடும். அவரால் அவளைப் பார்க்க முடியாவிட்டால், எவ்வாறு அவரால் சென்று, அவளது கரத்தைப் பிடிக்க முடியும்? எனவே, தந்தை கூறுகின்றார்: உங்கள் பௌதீக அங்கங்கள்மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருங்கள். ஒரு சகோதரியை குற்றமான, தூய்மையற்ற பார்வையுடன் பார்க்காதீர்கள். நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். தூய்மையற்ற பார்வைக்கான எண்ணம் சற்றேனும் இருக்கக் கூடாது. தற்காலத்தில், கலியுகத்தில், சிலவேளைகளில் ஒரு சகோதரனுக்கும், சகோதரிக்கும் இடையிலுள்ள உறவுமுறையுமே சரியாக இருப்பதில்லை. எவ்வாறாயினும், நியதிக்கு ஏற்ப, சகோதர சகோதரிகளாகிய நீங்கள் ஒருவர்மீது ஒருவர் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கக்கூடாது. நாங்கள் ஒரே தந்தையின் குழந்தைகளாவோம். பாபா வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்: நீங்கள் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். எனவே, நீங்கள் சகோதர சகோதரிகள் என்ற உண்மையை மிகவும் உறுதியாக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் சகோதரர்கள், கடவுளின் குழந்தைகள். பின்னர், நீங்கள் அச் சரீரங்களில் உள்ளபோது, சகோதர சகோதரிகள் ஆவீர்கள். ஏனெனில், நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் மூலமாகத் தத்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தூய்மையற்ற பார்வை இருக்கக்கூடாது. இதை மிக உறுதியுடன் புரிந்து கொள்ளுங்கள்: நான் ஓர் ஆத்மா. பாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார், ஆத்மாவாகிய நான் இச்சரீரத்தின் மூலமாகக் கற்கின்றேன். இவை எனது அங்கங்கள்;. ஆத்மாவாகிய நான் அவற்றிலிருந்து வேறுபட்டவன். நான் இந்த பௌதீக அங்கங்களினால் செயல்களைச் செய்கின்றேன். நான் பௌதீகப் புலன்கள் அல்ல. ஆத்மாவாகிய நான் அவற்றிலிருந்து வேறுபட்டவன். நான் எனது பாகத்தை நடிப்பதற்காகவே இச்சரீரத்தை எடுத்துள்ளேன், இதுவும் ஆன்மீகமான பாகமாகும். உங்களைத் தவிர வேறு எந்த மனிதராலும் இப்பாகத்தை நடிக்க முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, தந்தையை நினைவு செய்யுங்கள். அவர் எங்களது ஆசிரியரும் குருவும் ஆவார். அந்த லௌகீகத் தந்தையர், ஆசிரியர்கள் குருமார் அனைவரும் வெவ்வேறானவர்கள். அந்த அசரீரியான ஒருவரே தந்தையாகவும், ஆசிரியராகவும் அத்துடன் குருவாகவும் உள்ளார். இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் புதிய கற்பித்தல்களைப் பெறுகின்றீர்கள். தந்தை, ஆசிரியர் குரு மூவருமே அசரீரியானவர்கள். இந்த அசரீர ஆத்மாவாகிய நான் கற்கின்றேன். ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து நீண்ட காலமாக எவ்வாறு பிரிந்திருந்தனர் என்பதை இப்பொழுது மாத்திரமே புரிந்து கொள்ள முடிகின்றது. உங்களைத் தூய்மையாக்குவதற்காக அவர் இங்கு வருகின்ற இவ்வேளையிலேயே நீங்கள் தந்தையை மீண்டும் சந்திக்கின்றீர்கள். ஆத்மாக்கள் சென்று, அசரீர உலகில் மீண்டும் சந்திப்பார்கள். அங்கு நாடகம் எதுவும் கிடையாது, அது எங்களது வீடாகும். அது சகல ஆத்மாக்களினதும் வதிவிடமாகும். இறுதியில், சகல ஆத்மாக்களும் அங்கு திரும்பிச் செல்வார்கள். ஆத்மாக்கள் தங்களது பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வருகின்றனர். அவர்களால் இடையில் திரும்பிச் செல்ல முடியாது. பாகங்கள் இறுதிவரைக்கும் நடிக்கப்பட வேண்டும். சகல ஆத்மாக்களும் கீழிறங்கி வரும்வரைக்கும், ஆத்மாக்கள் தொடர்ந்தும் மறுபிறவி எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் சதோபிரதானிலிருந்து சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்கின்றனர். பின்னர் இறுதியில், நாடகம் முடிவுக்கு வரும்போது, ஆத்மாக்கள் மீண்டும் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகவேண்டும். தந்தை அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். ஞான மார்க்கமே சத்தியமாகும். சத்தியம், சிவம், சுந்தரம் (சத்தியமானவர், நன்மைபயப்பவர், அழகானவர்) எனக் கூறப்படுகின்றது. ஒரேயொரு தந்தையே உண்மை பேசுபவர். இந்த சங்கமயுகத்தில் ஒரு முயற்சியாளராகுவதற்கு, நீங்கள் சத்தியமான ஒருவரின் சகவாசத்தை மாத்திரம் வைத்திருக்கின்றீர்கள். இதுவே தந்தை வந்து தனது குழந்தைகளைச் சந்திக்கின்ற சத்சங்கம் ஆகும். ஏனைய சகவாசம் அனைத்தும் தீயதாகும். சத்தியத்தின் சகவாசம் உங்களை அக்கரைக்குக் கொண்டுசெல்லும், தீய சகவாசம் உங்களை மூழ்கடித்துவிடும் எனக் கூறப்படுகின்றது. தீய சகவாசம் என்றால், இராவணனின் சகவாசம் ஆகும். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அக்கரைக்கு அழைத்துச் செல்கின்றேன். எனவே, அதன் பின்னர் உங்களை மூழ்கடிப்பது யார்? நீங்கள் எவ்வாறு தமோபிரதானாகின்றீர்கள் என்பதும் உங்களுக்குக் கூறப்பட வேண்டும். எதிரியான மாயை உங்கள் முன்னால் இருக்கின்றாள், சிவபாபாவோ உங்கள் நண்பராவார். அவர் கணவன்மாருக்கெல்லாம் கணவர் என அழைக்கப்படுகின்றார். இப்புகழ் இராவணனுக்குரியதல்ல. அவன் இராவணன் என அவர்கள் வெறுமனே கூறுகின்றார்கள், அவ்வளவுதான். அவர்கள் ஏன் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர்? நீங்கள் அங்கு (இராவணனை அவர்கள் எர்pக்கும் இடத்தில்) அதிகளவு சேவை செய்ய முடியும். இராவணன் யாரென்பதையோ, அவன் எப்பொழுது வருகின்றான் என்பதையோ, அவனை ஏன் எரிக்கின்றனர் என்பதையோ எந்த மனிதரும் அறியமாட்டார்கள். குருட்டு நம்பிக்கை காணப்படுகின்றது. அம்மக்கள் சமய நூல்களை அதிகளவு அதிகாரத்துடன் எடுத்துரைப்பது போன்று, குழந்தைகளாகிய நீங்களும் இதனை விளங்கப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளீர்கள். அவற்றைச் செவிமடுப்பவர்கள் மிகவும் போதையடைகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் பணத்தைக் கொடுத்து, சமஸ்கிருதம், கீதை போன்றவற்றைத் தங்களுக்குக் கற்பிக்குமாறும் கேட்கின்றார்கள். அவர்கள் அதற்காக அதிகளவு பணத்தைக் கொடுக்கின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் அதிகளவு நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்கின்றீர்கள். இந்த பிராமண குலத்திற்குரியவர்கள் தொடர்ந்தும் உங்களிடம் வருவார்கள். இதனாலேயே நீங்கள் கண்காட்சிகள் போன்றவற்றை நடாத்துகின்றீர்கள். இவ்விடத்திற்குச் சொந்தமான மலர்கள் நிச்சயமாக வருவார்கள். இவ்விருட்சம் தொடர்ந்தும் வளர்கின்றது. பிரம்மா என்ற ஒரு விதையை தந்தை விதைத்தார், பின்னர் அதிலிருந்து பிராமண குலம் தோன்றியது, ஒன்றிலிருந்து தொடர்ந்தும் அது வளர்கின்றது. முதலில், குடும்ப அங்கத்தவர்கள் வந்தனர், பின்னர் நண்பர்களும், அதன் பின்னர் அவர்களது உறவினர்களும் வர ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து, இதைக் கேள்விப்பட்டு பலரும் வர ஆரம்பித்தனர். இதுவும் ஒரு சத்சங்கமே என அவர்கள் நம்பினர். எவ்வாறாயினும், இங்கு, தூய்மையாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளதால், அதிக குழப்பம் ஏற்பட்டது. இப்பொழுதும், இவ்வாறு தொடர்ந்தும் நிகழ்கிறது. இதனாலேயே அவதூறுகளும் ஏற்படுகின்றன. அவர்கள் கூறுகின்றனர்: அவர் பெண்களைத் தனது இராணிகளாக்குவதற்காகக் கடத்துகின்றார். எவ்வாறாயினும், அவர்கள் சுவர்க்கத்தில் இராணிகள் ஆகுவார்கள், இல்லையா? எனவே, அவர்கள் நிச்சயமாக இங்கு தூய்மையாக்கப்பட வேண்டும். இது, சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் ஆகுவதற்கான ஞானம் என நீங்கள் அனைவருக்கும் கூறுங்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து சத்திய நாராயணனாகின்ற உண்மைக் கதையை உண்மையான கடவுளிடம் செவிமடுக்கின்றீர்கள். இந்த இலக்ஷ்மியையும், நாராயணனையும் இறைவன், இறைவி என அழைக்க முடியாது. எவ்வாறாயினும், பூஜிப்பவர்கள், கிருஷ்ணரின் உருவத்தில் நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நாராயணனின் உருவத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. பலர் கிருஷ்ணரின் படங்களை வாங்குகின்றனர். கிருஷ்ணருக்கு ஏன் அதிக மரியாதை கொடுக்கப்படுகின்றது? ஏனெனில், அவர் ஒரு சிறிய குழந்தையாவார். சிறிய குழந்தைகள் மகாத்மாக்களை விடவும் அதி மேன்மையானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஏனெனில், மகாத்மாக்கள் பொதுவாக ஓர் இல்லறத்தைக் கொண்டிருந்து, பின்னரே அதைத் துறக்கின்றார்கள். சிலர் பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரிகளாக உள்ளனர். எனினும், அவர்களும் காமம், கோபம் என்பன பற்றி அறிந்தவர்களாகவே உள்ளனர். சிறு குழந்தைகள் அவ்விகாரங்களைப் பற்றி அறியாதவர்கள். இதனாலேயே அவர்கள் மகாத்மாக்களை விடவும் அதி மேன்மையானவர்களாகக் கருதப்படுகின்றனர். இதனாலேயே கிருஷ்ணருக்கு அதிக மரியாதை வழங்கப்படுகின்றது. பூஜிப்பவர்கள் கிருஷ்ணரின் உருவத்தைக் காணும்போது மிகவும் சந்தோஷம்; அடைகின்றனர். பாரதத்தில் அவர்கள் பிரபு கிருஷ்ணரைப் பற்றிப் பேசுகின்றனர். புத்திரிகள்கூட கிருஷ்ணர் மீது பெருமளவு அன்பு வைத்துள்ளனர். அவர்கள் அவரைப் போன்ற கணவனை அல்லது குழந்தையைக் கொண்டிருக்க விரும்புகின்றனர். கிருஷ்ணர் சதோபிரதானாக உள்ளதால், அவரிடம் அதிக கவர்ச்சி உள்ளது. தந்தை தொடர்ந்தும் கூறுகின்றார்: நீங்கள் எந்தளவிற்கு நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு தமோபிரதானிலிருந்து தமோவாகவும், பின்னர் ரஜோவாகவும் சந்தோஷமானவராகவும் ஆகுவீர்கள். முதலில், நீங்கள் சதோபிரதானாக இருந்தபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். பின்னர், படிப்படியாக உங்கள் கலைகள் தொடர்ந்து குறைவடைந்தன. நீங்கள் எந்தளவிற்கு நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிக சந்தோஷத்தை உணர்வதுடன் தொடர்ந்தும் மாற்றப்படுவீர்கள் தமோவிலிருந்து நீங்கள் தொடர்ந்தும் ரஜோ, சதோ நிலைகளைக் கடந்து செல்வீர்கள். உங்களது பலம், சந்தோஷம், நற்குணங்கள் போன்றனவும் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன. இந்நேரத்தில் உங்கள் ஸ்திதி ஏறுகின்றது. சீக்கியர்கள் பாடுகின்றனர்: உங்கள் ஸ்திதி ஏறும்போது, அனைவரும் நன்மையடைகின்றார்கள். நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் உங்கள் ஸ்திதி இப்பொழுது ஏறுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு நினைவில் இருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் ஸ்திதி உயர்வடைந்து செல்லும். நீங்கள் முழுமையானவர்கள் ஆகவேண்டும். ஒரு மெல்லிய கோடு போன்ற பிறைச் சந்திரன், பூரண சந்திரன் ஆகும்வரை தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. நீங்களும் அவ்வாறே ஆகுகின்றீர்கள். சந்திர கிரகணம் ஏற்படும்போது, கூறப்படுகின்றது: தானம் செய்தால், தீய சகுனங்கள் அகற்றப்படும். உங்களால் ஐந்து விகாரங்களையும் உடனடியாகவே தானம் செய்துவிட முடியாது. உங்கள் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. சிலர் தங்களது பார்வை தூய்மையற்றது என்பதையேனும் புரிந்துகொள்ளாமலுள்ளனர். நீங்கள் பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் ஆகியுள்ளதால், நீங்கள் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள். எனவே, ஒருவரைத் தொடவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட்டால், உங்களது சகோதர அன்பு முடிவடைந்து, அது குற்றமான அன்பாகி விட்டது என்றே அர்த்தமாகும். சிலரின் மனச்சாட்சி அவர்களை உறுத்துவதால், அவர்கள் நினைக்கின்றனர்: நான் இப்பொழுது தந்தைக்குச் சொந்தமாகிவிட்டதால், எவரும் என்னைத் தூய்மையற்ற பார்வையுடன் பார்க்கவோ அல்லது என்னைத் தொடவோ கூடாது. பின்னர் அவர்கள் கூறுகின்றனர்: பாபா, இவர் என்னைத் தொட்டுவிட்டார், அது எனக்குப் பிடிக்கவில்லை. பாபா பின்னர் முரளியில் கூறுவார்: அவ்வாறு செய்வதால் உங்களது ஸ்திதி நன்றாக இருக்காது. அவர்களால் மற்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து, மிக நன்றாக விளங்கப்படுத்த முடிந்தாலும், அவர்கள் நல்ல ஸ்திதியைக் கொண்டிருக்கமாட்டார்கள். அங்கு தீய பார்வை உள்ளது. இவ்வுலகம் மிகவும் தீயது! இந்த இலக்கு மிக உயர்வானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் மிகவும் விவேகமானவர்களாகி தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். நாங்கள் பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் ஆவோம். நாங்கள் இரத்தத் தொடர்பை அன்றி ஆன்மீகத் தொடர்பையே கொண்டிருக்கின்றோம். உண்மையில், அனைவரும் இரத்தத்தினூடாகவே பிறக்கின்றார்கள். சத்திய யுகத்திலும் இரத்தத் தொடர்பு உள்ளது. எவ்வாறாயினும், அங்கு, நீங்கள் யோக சக்தி மூலமே ஒரு சரீரத்தைப் பெறுகின்றீர்கள். சிலர் வினவுகின்றார்கள்: விகாரமில்லாது எவ்வாறு குழந்தைகள் பிறக்க முடியும்? தந்தை கூறுகின்றார்: அது விகாரமற்ற உலகாகும். அங்கு விகாரங்கள் இருப்பதில்லை. நீங்கள் அங்கு துகிலுரியப்பட்டால் அதுவும் இராவண இராச்சியமாகவே இருப்பதோடு, அங்கும் இங்கும் எவ்வித வேறுபாடும் இல்லாது போய்விடும். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தூய்மையற்ற பார்வையை நிறுத்துவதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. கல்லூரியில் பெண்களும், ஆண்களும் ஒன்றாகக் கற்கும்;போது, பலர் குற்றமான கண்ணைக் கொண்டுள்ளனர். நீங்கள் தந்தையாகிய கடவுளின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எனவே, நீங்கள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள். எனவே, நீங்கள் ஏன் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்கின்றீர்கள்? நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்று நீங்கள் அனைவரும் கூறுகின்றீர்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்கள் அசரீரியான குழந்தைகளே. பின்னர், தந்தை தனது குழந்தைகளை உருவாக்கும்போது, அவர் நிச்சயமாக பௌதீக பிராமணர்களை உருவாக்குகின்றார். பிரஜாபிதா பிரம்மா பௌதீகமானவராகவே இருக்க வேண்டும், இல்லையா? அது தத்தெடுத்தல் ஆகும். நீங்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். எவ்வாறு பிரஜாபிதா பிரம்மாவினூடாக உலகம் படைக்கப்பட்டது என்பது மனிதர்களின் புத்தியில் புகுவதேயில்லை. நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளான பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் ஆவீர்கள். எனவே, நீங்கள் சகோதர சகோதரிகள் ஆவீர்கள். நீங்கள் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருப்பதையிட்டு மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பலர் இதைச் சிரமமாகவே உணர்கின்றனர். நீங்கள் அனைத்திலும் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், முயற்சி செய்யவேண்டும். தந்தை கூறுகின்றார்: தூய்மையாகுங்கள்! சிலர் இவர் (பிரம்மா) கூறுவதையும் செவிமடுக்கின்றர், வேறு சிலரோ அவ்வாறில்லை. இதற்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் முயற்சி செய்யாவிட்டால், எவ்வாறு மேன்மையானவர்கள் ஆகமுடியும்? குழந்தைகளாகிய நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சகோதர, சகோதரியாக இருப்பதென்றால், ஒரே தந்தையின் குழந்தைகளாக இருப்பதாகும். எனவே, ஏன் தூய்மையற்ற பார்வை இருக்கவேண்டும்? குற்றப் பார்வை உள்ளதை பாபா உங்களுக்குச் சரியாகக் கூறும்போது, குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். பெண்களும், ஆண்களும் தூய்மையற்ற பார்வையைக் கொண்டுள்ளனர். உங்கள் இலக்கு மிக உயர்வானது. உங்களில் பலரால் ஞானத்தை எடுத்துரைக்க முடியும், ஆனால் உங்கள் நடத்தையில் தூய்மை நிறைந்திருக்க வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: கண்களே அதிகமாக ஏமாற்றுபவை. கண்கள் எதையாவது பார்க்கும்போது, வாயூறுவதால், நீங்கள் அதை உண்ண விரும்புகின்றீர்கள். எனவே, நீங்கள் உங்களது பௌதீகப் புலன்களை வெற்றிகொள்ள வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் நடத்தையில் தூய்மை நிறைந்திருக்க வேண்டும். எந்த தூய்மையற்ற பார்வையையும், தீய எண்ணங்களையும் நிறுத்துவதற்கு, உங்களை பௌதீகப் புலன்களிலிருந்து வேறுபட்ட ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள்.

2. உங்களுக்கிடையில் உள்ள தொடர்பை ஆன்மீகமானதாக்குங்கள். இரத்த உறவுகள் எதனையும் கொண்டிராதீர்கள். உங்களது நேரமும், பணமும் விலைமதிப்பற்றவை. அவற்றை வீணாக்காதீர்கள்! நீங்கள் கொண்டிருக்கின்ற சகவாசத்தின் ஆதிக்கத்தையிட்டு மிகவும் கவனமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையை போன்று, ஓர் ஆசீர்வாதங்கள் அருள்பவராகவும், மகாதானியாகவும் ஆகி, பிரம்ம முகூர்த்த வேளையில் ஆசீர்வாதங்களைப் பெற்று, தானம் செய்வீர்களாக.

பிரம்ம முகூர்த்த Nவைளயில், பிரம்மலோக வாசியான தந்தை, ஞான சூரிய ஒளிக்கதிர்களினாலும், சக்திக்கதிர்களினாலும் குழந்தைகளாகிய உங்களை விசேடமாக ஆசீர்வதிக்கின்றார். அத்துடன் தந்தை பிரம்மா, பாக்கியத்தை அருள்பவராக, பாக்கிய அமிர்தத்தையும் வழங்குகிறார். அந்த அமிர்தத்தை கிரகிப்பதற்கு உங்கள் புத்தி என்ற கலசம் ஆயத்தமாக உள்ளதா என்பதை மாத்திரம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எவ்விதமான தடையோ, இடையூறோ இல்லாதிருக்கட்டும். அப்பொழுது, அந்த மங்களகரமான நேரத்தை உங்கள் ஸ்திதியை மேன்மையாக்குவதற்கு பயன்படுத்தி, அதனூடாக மேன்மையான செயல்களை நாள் முழுவதும் செய்யுங்கள். அமிர்தவேளை சூழலால் உங்கள் மனோபாவத்தை மாற்ற முடியும் என்பதால் அந்த நேரத்தில் ஆசீர்வாதங்களைப் பெற்று, தானம் செய்யுங்கள். அதாவது, ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் மகாதானியான ஒருவராகவும் ஆகுங்கள்.

சுலோகம்:
கோபப்படுவது கோபமான மனிதரின் கடமையாகும், அன்பைக் கொடுப்பது உங்கள் கடமையாகும்.