01.03.26 காலை முரளி
ஓம் சாந்தி 09.03.2009 பாப்தாதா,
மதுபன்
பரமாத்ம சேர்க்கையின் நிறத்தினுடைய மற்றும் இணைந்த சொரூபத்தின்
யதார்த்த ஹோலி கொண்டாடுங்கள்
இன்று ஹோலியஸ்ட் (மிகவும் புனிதமான) தந்தை தம்முடைய புனிதமான
குழந்தைகளோடு ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளார். குழந்தைகள்
அனைவருமே ஹோலி குழந்தைகள். நீங்கள் அனைவரும் கூட ஹோலி
கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்கள். யோசியுங்கள் - ஹோலி
ஆத்மாக்களாகிய உங்கள் மீது என்ன நிறம் படிந்தது - நீங்கள்
அதனால் ஹோலி ஆகி விட்டீர்கள்? நிறங்களோ அநேகம் உள்ளன. ஆனால்
உங்கள் மீது என்ன நிறம் படிந்தது? அனைத்திலும் சிறந்த நிறம் எது
- அதன் மூலம் நீங்கள் ஹோலி ஆகி விட்டீர்கள்? அனைத்திலும்
பெரியதிலும் பெரிய நிறம் பரமாத்ம சேர்க்கையின் நிறம். ஆக,
பரமாத்ம சேர்க்கையின் நிறம் படிவதால் சுலபமாக ஹோலி, ஆகி
விட்டீர்கள், ஏனென்றால் பரமாத்ம சேர்க்கை அவிநாசி சேர்க்கையின்
நிறம். மற்ற நிறங்களோ கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே இருக்கும்.
ஆனால் பரமாத்ம சேர்க்கையின் நிறம் படிவதன் மூலம் சுலபமாகவே
ஹோலியாக, அதாவது பவித்திரமாக ஆகி விட்டீர்கள். ஆத்மாவின் நிறம்
அபவித்திரதாவிலிருந்து பவித்திரமாகி விட்டது. ஏனென்றால் நீங்கள்
அனைவரும் பரமாத்மாவைத் தங்களின் கம்பேனியன் ஆக்கிக் கொண்டீர்கள்.
எனவே இணைந்தவர் (கம்பைன்டு) ஆகி விட்டீர்கள். இந்த இணைந்த
சொரூபம் பிரியமானதாக உள்ளது இல்லையா? இந்த இணைந்ந ரூபம் ஒரு
போதும் தனியாக ஆக முடியாது. அனுபவம் உள்ளது இல்லையா? சதா
இணைந்தே இருக்கிறீர்கள் இல்லையா? தனியாக இல்லையே? மாயா தனியாக
ஆக்குவதற்கு முயற்சி செய்கிறது. ஆனால் யார் சதா இணைந்தே
இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு போதும் தனியாக ஆக முடியாது.
ஏனென்றால் மாயா தனியாக ஆக்கிப் பிறகு பழைய சம்ஸ்காரங் களை
இமர்ஜ் செய்யும் மற்றும் பழைய சம்ஸ்காரங்கள் இமர்ஜ் ஆகி
விட்டால் சுத்த சம்ஸ்காரங் கள் மர்ஜ் ஆகி விடும். பழைய
சம்ஸ்காரங்கள் - அலட்சியம், சோம்பல், இவை விதவிதமான ரூபத்தில்
இமர்ஜ் ஆகி விடும். எனவே ஒவ்வொருவரும் தன்னைத்தான் சோதித்துப்
பாருங்கள் - சதா இணைந்த நிலையில் இருக்கிறோமா, அல்லது சில நேரம்
தனியாகவும் ஆகி விடுகிறோமா? மாயாவின் அநேக சொரூபங்களையோ அறிந்து
கொண்டு விட்டீர்கள் இல்லையா? அது சாமர்த்திய மாகத் தனது
நிறத்தைப் படியச் செய்து விடும். தனியாக ஆவது என்றால் மாயாவின்
நிறத்தினால் வண்ணம் பூசப்படுவதாகும். இந்த அலட்சியமும்
சோம்பலும் மிகவும் பலவேறு ரூபங்களில் வருகிறது. மற்றும்
குழந்தைகளும் அவற்றை அறிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் மாயா தன்
பக்கமாகக் கவர்ந்து இழுத்து விடுகிறது. இந்த அலட்சியமும்
சோம்பலும் இராவணனின் கஜானாக் கள், இவை பாபாவின் கஜானாக்கள்
அல்ல. இராவணனின் கஜானாவைக் குழந்தைகளும் மிகுந்த நஷாவுடன்
சொல்கின்றனர் - நான் விரும்பவில்லை, ஆனால் இது என் சம்ஸ்காரம்.
சம்ஸ்காரத்தை எனது எனச் சொல்லத் தொடங்கி விடுகிறார்கள். இது
பரமாத்ம கஜானாவா அல்லது இராவணனின் கஜானாவா? அதை எனது சம்ஸ்காரம்
எனச் சொல்வது சரியா, யோசி யுங்கள். எனது என ஆக்கி விடுவது, இது
மாயாவின் சாமர்த்தியம். பாபாவின் கஜானா பிடித்திருக் கிறதா
அல்லது இராவணனின் கஜானா பிடித்திருக்கிறதா? பொதுவான ரீதியில்
குழந்தைகள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காகச் சொல்கின்றனர் -
எனது சம்ஸ்காரம், நான் விரும்ப வில்லை. ஆக, யோசியுங்கள் - இது
என்னுடையதா? பாபா சொல்கிறார் - இராவணனின் கஜானாவைத்
தனதாக்குவதால், இருக்கும் சுப சம்ஸ்காரமெல்லாம்
கொஞ்சம்-கொஞ்சமாக முடிந்து போகிறது. பரமாத்ம சேர்க்கையின் நிறம்
மங்கலாகி விடுகிறது மற்றும் மாயாவின் நிறம் இமர்ஜ் ஆகி
விடுகிறது. ஆக, போகப்போக தன்னைத் தானே சோதித்துப் பார்க்க
வேண்டும் - என் மீது எந்த ஒரு நிறம் படிந்துள்ளது? மக்களும்
ஹோலியில் என்ன செய்கிறார்கள்? முதலில் அசுத்த மானவற்றை
எரிக்கிறார்கள். பிறகு வண்ணங்களைப் பூசுகிறார்கள்.
கொண்டாடுகிறார்கள். ஆக, உங்கள் மீது பாப்தாதா சேர்க்கையின்
நிறத்தைத் தெளித்தார். ஆனால் அதோடு ஞானத்தின் நிறம், சக்திகளின்
நிறம், குணங்களின் நிறம், இவற்றைத் தெளித்துக் கொண்டே
இருக்கிறார்.
ஆக, அனைவரின் மீதும் இந்த ஆன்மிக நிறங்கள் தெளிக்கப்பட்டுள்ளன
இல்லையா? தெளிக்கப் பட்டுள்ளனவா? கை உயர்த்துங்கள். ஆன்மிக
நிறம் ஏறி விட்டது. அதன் மீது வேறு எந்த ஒரு நிறமும் ஏற
முடியாது. இந்த நிறத்தினால் எவ்வளவு புனிதமாக (ஹோலி)
ஆகியிருக்கிறீர்கள்? முழுக் கல்பத்திலும் உங்களைப் போல் ஹோலி,
பவித்திரமாக வேறு யாருமே ஆக முடியாது. உங்கள் பவித்திரதா, பிரபு
சேர்க்கையின் நிறம், பரமாத்மாவுடன் இணைந்திருப்பதற்கான அனுபவம்
அனைத்திலும் தனிப்பட்டதும் அன்பானதும் ஆகும். இன்னும்
யாரெல்லாம் ஹோலி, பவித்திரமாகிறார்களோ, அவர்களின் சரீரம்
பவித்திரமாவதில்லை. ஆத்மா பவித்திரமாகிறது. ஆனால் நீங்கள் அந்த
மாதிரி ஹோலி, பவித்திரமாகிறீர்கள் - உங்கள் சரீரம் மற்றும்
ஆத்மா இரண்டும் பவித்திரமாக இருக்கின்றன. மேலும் பவித்திரதா
என்பது, சுகம், சாந்தி, அன்பு, ஆனந்தத் தின் தாய் எனச்
சொல்லப்படுகிறது. எங்கே பவித்திரதா உள்ளதோ, அங்கே சுகம், சாந்தி
கூடவே இருக்கும். ஏனென்றால் எங்கே பவித்திரதா ஜனனி இருக்கிறதோ,
அங்கே அதன் குழந்தைகள் இருக்கும். ஏனென்றால் பாபா வந்து உங்களை
அந்த மாதிரி ஹோலி ஆக்குகிறார் - அதனால் உங்கள் ஜட சித்திரங்கள்
எவ்வளவு விதி பூர்வமாகப் பூஜிக்கப் படுகின்றன! கலியுகத்தின்
கடைசிப் பிறவியிலும் கூட நீங்கள் உங்கள் சித்திரங்களைப்
பார்க்கிறீர்கள் - எப்படி விதி பூர்வமாக அவற்றின் பூஜை
நடைபெறுகிறது! இது பவித்திரதாவின் விசேஷதா ஆகும். மேலும்
எவ்வளவு தான் மகான் ஆத்மாக்கள், தர்மாத்மாக்கள்
பவித்திரமாகியிருந்தாலும் கோவில் யாருக்காகவும் உருவாவதில்லை.
அத்தகைய விதி பூர்வ பூஜை யாருக்குமே நடைபெறுவதில்லை. மேலும்
கடைசிப்பிறவி வரை உங்கள் சித்திரங்களும் கூட ஆசிர்வாதங்கள்
கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. கொஞ்ச சமயத்திற்கான சுகம்
சாந்தியை அனுபவம் செய்விக்கின்றன. ஆக, உங்களுடைய ஹோலி மற்றும்
உலகத்தவரின் ஹோலிக்கிடையில் எவ்வளவு வித்தியாசம் ஆகிறது? மன
மகிழ்ச்சிக்காக நீங்களும் .கொஞ்சம் கொண்டாடுகிறீர்கள். ஆனால்
உண்மையான ஹோலி பரமாத்ம சேர்க்கையினுடைய நிறத்தின் மற்றும்
இணைந்த சொரூபத்தின் யதார்த்த ஹோலியை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்.
ஹோலியை மக்களும் பலவித ரூபங்களில் கொண்டாடு கிறார்கள். அது போல்
நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஹோலி என்ற சொல்லிலும் இரகசியம்
உள்ளது. அதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் தாம்
கொண்டாடுகிறீர்கள். ஹோலி என்பதன் அர்த்தம், ஹோ லீ - நடந்தது
நடந்து முடிந்து விட்டது. ஆக, நீங்கள் அனைவரும் பழைய வாழ்க்கை,
பழைய விஷயங்கள், பழைய சம்ஸ்காரங்கள், பழைய வீணான சங்கல்பங்களை
ஹோ லீ செய்து விட்டீர்கள் இல்லையா? நடந்ததை நடந்ததாக ஆக்குவது
என்றால் ஹோ லீ. ஆக, அது போல் செய்து விட்டீர்களா? அல்லது
இப்போதும் கூட தவறுதலாகப் பழைய சம்ஸ்காரங்கள் வந்து
விடுகின்றனவா? எப்போது நமது பிறவியே புதியதோ, நீங்கள் அனைவரும்
மறு பிறவி எடுத்து விட்டீர்கள் இல்லையா? எடுத்து விட்டீர்களா?
மறு பிறவி எடுத்து விட்டீர்களா? கை உயர்த்துங்கள். நல்லது.
புதுப் பிறவி ஆகி விட்டதென்றால் பழைய பிறவி எப்படி நினைவு
வருகிறது? பழையது பழையதாகி விட்டது. கடந்து போன விஷயங்கள்
அல்லது சங்கல்பம், சம்ஸ்காரம் இமர்ஜ் ஆகிறதென்றால் என்ன
சொல்வார்கள்? ஹோலி கொண்டாடினீர்களா? ஹோ லீ (நடந்ததை முடிந்து
போனதாக) செய்யவில்லை. பரமார்த்த சேர்க்கையின் நிறத்தை
நல்லபடியாகப் பூசிக் கொள்ள வில்லை. பரமாத்ம சேர்க்கையின்
நிறத்தைப் பூசுவது என்றால் பழைய பிறவி மறந்து விட வேண்டும்.
பழைய விஷயங்களை மறந்து விட வேண்டும். ஏனென்றால் மறு பிறவி
எடுத்து விட்டீர்கள் இல்லையா? எப்படி சரீரத்திலிருந்து ஒரு
பிறவியை விட்டு வேறொன்றை எடுக்கிறீர்களோ, அப்போது பழைய பிறவி
நினைவில் இருக்கிறதா? ஆக, நீங்கள் அனைவரும் இப்போது பிராமணப்
பிறவியை தாரணை செய்பவர்கள். எனவே பழைய பிறவியின் சம்ஸ்காரங் கள்,
அவற்றைத் தவறுதலாகச் சொல்கிறீர்கள் - என்னுடைய சம்ஸ்காரங்கள்
என்று. அவை உங்களுடைய சம்ஸ்காரங்களா? சில நேரம் கவனக்குறைவு,
சில நேரம் ராயல் சோம்பல், சோம்பலுக்கு மிக அதிகமாக விதவிதமான
ரூபங்கள் உள்ளன. எப்போதாவது இதைப் பற்றி வகுப்பு நடத்த வேண்டும்.
சோம்பல் எத்தனை வகை மற்றும் எத்தனை ராயல் ரூபத்தில் வருகின்றன?
ஆக, பிராமண வாழ்க்கை என்றால் புதிய வாழ்க்கை. இதில் பழையது
எதுவும் இருக்க முடியாது. ஆக, இன்று ஹோலி கொண்டாடுவதற்காக
வந்திருக்கிறீர்கள் இல்லையா? அப்போது ஹோலி என்றால் ஹோ லீ. ஆக,
இன்று ஹோலி கொண்டாடுவது என்றால் பழைய சம்ஸ்காரங்களின் ஹோலியை
எரிப்பது. எரித்த பிறகு தான் கொண்டாடப் படுகிறது. இப்போது
உங்களுக்குக் கொண்டாடும் சொரூபம். எரித்து விட்டீர்கள். இப்போது
கொண்டாட வேண்டும். பிரபுவின் சேர்க்கை யின் நிறத்தினுடைய
மகிழ்ச்சியைப் பெறுபவர்கள். இணைந்து இருப்பதற்கான அனுபவம்
செய்பவர்கள். ஏன்? ஹோலியஸ்ட் பாபா உங்கள் மீது ஹோலி ஆவதற்கான,
பவித்திரமாவதற்கான நிறத்தைப் பூசியிருக்கிறார்.
ஆக, இன்று எந்த ஹோலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்? இன்று
முதல் எந்த ஒரு பழைய சம்ஸ்காரத்தையும் வரவிடக் கூடாது. இந்த
ஹோலியைக் கொண்டாட வேண்டும். கொண்டாட முடியுமா, அல்லது
எப்போதாவது வருமா? நான் செய்ய விரும்பவில்லை, ஆனால் எனது
சம்ஸ்காரம் என்பது ராயல் வார்த்தை. இந்த வார்த்தையை இன்று திட
சங்கல்பத்தின் விதி மூலம் முடித்து விடுங்கள். அத்தகைய ஹோலி
இன்று சதா கொண்டாடுவதற்கான தைரியம் வைக்கிறீர்களா? அல்லது
எப்போதாவது கொண்டாடுவீர்களா? இன்று முதல் பழைய சம்ஸ்காரங் களின்
ஹோலி, ஹோ லீ, நடந்தது நடந்து முடிந்து விட்டது, பிறவி புதியது.
அந்தப் பழைய பிறவி முடிந்தது. அத்தகைய தைரியம் வைப்பவர்களாகிய
நீங்கள் பாபாவின் இனிமையிலும் இனிமை யான, செல்லமான, தேடிக்
கண்டெடுக்கப் பட்ட குழந்தைகள் இல்லையா? ஆக, இந்த சங்கல்பம்
இல்லை, திட சங்கல்பம் செய்வதற்கான தைரியம் உள்ளதா? கை
உயர்த்துங்கள். பாருங்கள், அனைவரும் தைரியம்
வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் மீதி இருந்தாலும் பரவாயில்லை.
ஆனால் நீங்கள் அனைவரும் துணையாக இருக்கிறீர்கள் இல்லையா? பக்கா
துணைவர்கள். இரண்டு கைகளையும் உயர்த்துங்கள். இவர்கள் அனைவரின்
ஃபோட்டோவை எடுங்கள். நல்லது. இரட்டை வெளிநாட்டினரும் கை
உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே பாப்தாதா உங்களுக்குப் பல கோடி மடங்கு வாழ்த்துகளைச்
சொல்கிறார். ஹோலிக்கான, ஹோ லீ கொண்டாடுவதற்கான வாழ்த்துகள்.
இப்போது தவறுதலாகக் கூடத் தன் வாயிலிருந்து இந்த வார்த்தையை
வெளிப்படுத்தக் கூடாது. எனது சம்ஸ்காரம் - இராவணனின்
சம்ஸ்காரத்தை எனது சம்ஸ்காரம் எனச் சொல்கிறீர்கள், அற்புதம்!
இராவணன் விரோதி எனச் சொல்லப் படுகிறான். விரோதியின் கஜானாவைத்
தனதாக்கிக் கொள்வது - இதுவோ ஆச்சரியத்தின் விஷயம். உங்களுக்கும்
கூட ஆச்சரியமாக உள்ளது இல்லையா - நாம் என்ன சொல்கிறோம் என்று?
தவறுதலாகச் சொல்லி விடுகிறீர்கள். சொல்லி விடுகிறீர்கள். பிறகு
உள்ளுக்குள் மனம் உறுத்துகிறது, உணரவும் செய்கின்றனர்,
பாபாவுடன் உரையாடலும் செய்கின்றனர், மன்னிப்பும் கேட்கின்றனர்.
பாபா, நாளை முதல் செய்ய மாட்டோம். பிறகும் செய்து விடுகின்றனர்.
இப்போது பாப்தாதா என்ன செய்வது? பார்த்துக் கொண்டே இருக்கவா?
இப்போது இந்த வார்த்தையின் ஹோலியை எரியுங்கள். பாருங்கள்,
எரிப்பது பற்றியும் ஒரு நல்ல விஷயம் சொல்கின்றனர். கோக்கியை (கோதுமையில்
செய்யப்படும் ஒரு வகை இனிப்பு) நூலில் கட்டி சமைக்கின்றனர்.
கோக்கி வெந்து விட்டால் வெளியில் எடுக்கும் போது கோக்கி வெந்து
விடுகிறது, ஆனால் நூல் எரிவதில்லை. இந்த அடையாளமும் நீங்கள்
படித்த முதல் பாடம் - ஆத்மா அழியாதது, சரீரம் அழியக்கூடியது -
அதற்காக உருவானது. ஆக, பாப்தாதா பார்க்கிறார் - இந்தப் பண்டிகை
அல்லது சாஸ்திரங்களை உருவாக்குகிற குழந்தைகளின் அற்புதமும்
குறைந்தது இல்லை. அவர்களும் பாபாவின் குழந்தைகளே! ஆனால் நீங்கள்
தேடிக் கண்டெடுக்கப்பட்டவர்கள். அதில் மாவில் சிறிது உப்பைப்
போல் கொஞ்சம் உண்மை இருக்கலாம். ஆனால் அதையும் மனதை
மகிழ்விப்பதாக உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள்,
ஒவ்வொரு பண்டிகைக் கான நினைவுச் சின்னத்தையும்
உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் சூட்சுமமான அநேக விஷயங்களுக்கு
ஸ்தூல ரூபம் கொடுத்துள்ளனர். ஆனால் ஞாபகார்த்தமோ
உருவாக்கியிருக்கிறார்கள் இல்லையா? பக்தி யிலும் கூட குறைவாகச்
செய்யவில்லை. பிறகும் பக்தி, துவாபர-கலியுகத்தில் ஏதோ
ஸ்மிருதியின் விஷயங்களை வைத் திருந்தது. அதிக விகாரி
ஆவதிலிருந்து பாதுகாத்தது. ஆக, பாப்தாதா இந்த சாதனங்கள்,
பண்டிகை அல்லது சாஸ்திரங்களை உருவாக்குபவர்களுக்கும்
அவர்களுக்குரிய பலனைக் கொடுக்கிறார். பிறகும் பக்தியில்
கொஞ்சமாவது நினைவு செய்கின்றனர், விகாரங்களில் இருந்து கொஞ்ச
சமயத்திற்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
ஆக, இன்று நீங்கள் என்ன ஹோலி கொண்டாடினீர்கள்? என்ன ஹோலியைக்
கொண்டாடினீ?ர்கள்? ஹோ லீ, அனைவரும் சொல்லுங்கள் - ஹோ லீ. இது
போல் செய்யுங்கள் (கைகளால் சமிக்ஞை) ஹோ லீ! பக்கா தானே?
கொண்டாடினீர்களா? கொண்டாடினீர்களா? நல்லது. பிறகு நாளை மாயா
வரும். ஏனென்றால் மாயாவும் கேட்டுக் கொண்டிருக்கிறது ஆனால்
நீங்கள் அது போல் செய்யக்கூடாது. (தன்னிடம் வருமாறு அழைக்கக்
கூடாது) மகிழ்ச்சி தான் இல்லையா? இதில் மகிழ்ச்சி தான் இல்லையா?
ஆக. மகிழ்ச்சியிலேயே இருங்கள்.
பாபாவை நினைவு வையுங்கள். பாபா நம் மீது எவ்வளவு ஆன்மிக
வண்ணங்களைத் தெளித்துக் கொண்டிருக்கிறார்1 அதன் மூலம் நீங்கள்
புனித அன்னப்பறவை ஆகிவிட்டீர்கள். புனித அன்னம் என்றால்
நிர்ணயசக்தி உள்ள புனித அன்னப்பறவை. நீங்கள் எந்த ஒரு காரியம்
செய்தாலும் ஒரு சீட்டை (இருக்கை) நிர்ணயம் செய்து விடுங்கள்.
முதலில் அந்த சீட்டில் செட்டாகிப் பிறகு நிர்ணயம் செய்யுங்கள்.
அந்த சீட் பற்றித் தெரிந்திருக்கிறீர்கள். அந்த சீட்
திரிகாலதரிசியின் சீட். முதலில் திரிகாலதரிசியின் சீட்டில்
செட்டாகி, மூன்று காலங்களையும் பாருங்கள். நிகழ்காலத்தை
மட்டுமில்லை. முதல், இடை, கடை மூன்று காலங்களையும் பாருங்கள்.
மூன்று காலங்களிலும் லாபமா? அல்லது நஷ்டமா? குழந்தைகள் பலர்
மிகவும் சாமர்த்தியமானவர்கள். சாமர்த்தியம் பற்றிச் சொல்லவா?
என்ன சொல்கிறார்கள் என்றால், இப்படிக் காரியம் செய்ய வேண்டியது
இருந்தது இல்லையா, அதற்காக இது போல் செய்து விட்டேன்..
மற்றப்படி இதைச் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்தே இருந்தேன்.
ஆனால் செய்து விட்டேன். ஆனால் செய்து விட்டீர்கள் என்றால்
அதற்கான பலனும் கிடைக்கும் தான் இல்லையா? எனவே சாமர்த்தியத்தைக்
காட்டக் கூடாது. பாபாவுக்கே அதிகம் புரிய வைக்கிறார்கள். தவறு
செய்கிறார்கள் இல்லையா, பிறகு பாப்தாதாவுக்கு இப்படி-இப்படி
விஷயங்களை எல்லாம் புரிய வைக்கிறார்கள் - பாபா, நீங்களோ இரக்க
மனம் உள்ளவர் இல்லையா? நீங்களோ மன்னிக்கும் கடல் இல்லையா?
பாபாவுக்கே நினைவு படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் யார்?
நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா, எனக்குச் சொல்லி விட்டு
அதை முடித்து விடுங்கள். ஆனால் உணர்ந்து பிறகு சொல்லி விட்டு
முடித்து விடுங்கள். ஒரு வார்த்தையைப் பக்காவாகச் சொல்கிறீர்கள்.
சொல்லிவிடவோ செய்கிறீர்கள். ஆனால் முதலில் திட சங்கல்பத்துடன்
தன்னை மாற்றிக் கொண்டு பிறகு சொல்லுங்கள். அதிக மாகத் தாஜா
செய்கிறீர்கள் - நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா.?
பாபாவுக்கும் கூட நினைவு படுத்துகிறீர்கள் - நீங்கள் இதைச்
சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா? நீங்கள் இப்படிச்
சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா? மிகவும் சாமர்த்தியம்
செய்கிறீர்கள். இப்போது சமர்த்தியம் செய்யக்கூடாது. தைரியம்
வைக்க வேண்டும். செய்தே ஆக வேண்டும். கே-கே (பார்க்கலாம்,
செய்யலாம்) என்பதெல்லாம் கூடாது.
பாப்தாதா நாள் முழுவதும் கே-கே என்ற பாடலை அதிகம் கேட்கிறார்.
செய்வோம், காட்டுவோம், ஆவோம். ஆனால் வேகம் என்ன? கே-கே
என்பவர்கள் பாபாவோடு கூடவே செல்ல முடியுமா? பாபாவோ
எவர்-ரெடியாக இருக்கிறார். கே-கே என்பவர்கள் எவர்-ரெடி ஆகவில்லை.
எனவே பாபாவோடு கூட எப்படிச் செல்வார்கள்? பாபாவோ என்னுடைய
குழந்தைகள் என்னொடு கூட வரக் கூடாது என்று விரும்புவதில்லை.
எப்போது வீட்டுக்குத் திரும்பவதற்கான நேரம் வந்து விட்டதோ,
அப்போது வீட்டுக்குச் செல்ல மாட்டார்களா? ஏனென்றால்
வீட்டுக்குச் சென்று விட்டுப் பிறகு இராஜ்யத்தில் வர வேண்டும்.
கூடவே வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள் என்றால் பிரம்மா பாபாவோடு
கூட இராஜ்யத்திலும் வர மாட்டார்கள். பின்னால் வருவார்கள்.
அப்போது உங்கள் உறுதிமொழி என்ன? கூடவே நடப்போம், கூடவே செல்வோம்.
இதிலும் கூட கே-கே என்பார்கள். சென்று சேர்ந்து விடுவோம்,
பாருங்கள் பாபா, சென்று சேர்ந்தே விடுவோம். எனவே இந்த பாஷையை
இப்போது முடித்து விடுங்கள். நல்லது.
நாலாபுறம் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் கூட பாப்தாதா
பார்த்துக் கொண்டிருக்கிறார் - தூரத்தில் அமர்ந்திருந்தாலும்
விஞ்ஞான சாதனங்கள் மூலம் பெரும்பாலான இடங்களில் சென்டர்களில்
அவர்களும் கூட பாப்தாதாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் டோலி சாப்பிடுகிறீர்கள் இல்லையா, அப்போது அவர்களும்
டோலி வழங்குகிறார்கள். ஆக, அனைவரையும் பாப்தாதாவும் பார்த்துக்
கொண்டிருக்கிறார் - எப்படி தூர-தூரத்தில் அமர்ந்திருந்தாலும
அருகில் இருப்பதாக அனுபவம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக,
நாலாபுறம் உள்ள குழந்தைகளுக்கு சதா பாப்-சமான் சம்பன்னம்
மற்றும் சம்பூர்ணம் ஆக வேண்டும் என்ற சங்கல்பத்தை தாரணை செய்து
மேலும் திடத்தன்மை என்ற சக்தியை ஒவ்வொரு சமயமும் இந்த
சங்கல்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இது போல்
நாலாபுறத்தின் சுப சங்கல்பத்தை தாரணை செய்பவர்கள், அதோடு
பாபாவின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய நம்பிக்கை நட்சத்திரங்கள்,
அதோடு தாதியின் வார்த்தை - கர்மாதீத் நிலையை அடைந்தே ஆக
வேண்டும், இது நடந்தே ஆக வேண்டும், நடந்தே ஆக வேண்டும் மேலும்
மம்மாவின் வார்த்தை - எதைச் செய்ய வேண்டுமோ, அதை இன்றே செய்,
நாளைக்கு என்று தள்ளிப் போடாதே., மற்றும் தீதியின் இந்த
வார்த்தை - இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும் - இவை
காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அடிக்கடி இப்போது
வீட்டுக்குச் செல்ல வேண்டும். எனவே முழுமையான நாட்டம்
கொள்ளுங்கள் - கர்மாதீத் ஆக வேண்டும், இப்போது வீட்டுக்குச்
செல்ல வேண்டும். இந்த வார்த்தைகளை அடிக்கடி ஸ்மிருதியில்
கொண்டுவரக் கூடிய சக்திசாலிக் குழந்தைகளுக்கு பாப்தாதாவின்,
ஹோலி குழந்தைகளின் ஹோலிக்கான வாழ்த்துகள். மேலும் அதோடு கூடவே
அனைவருக்கும் பாப்தாதா முதலிலேயே மதுபனின் கேவர் மிட்டாயை
அனைவரின் வாயிலும் போட்டு விட்டார் சாப்பிடுங் கள்.
சாப்பிட்டீர்களா? அனைவருக்கும் மிக-மிக பல கோடி மடங்கு பாப்தாதா
மற்றும் அட்வான்ஸ் பார்ட்டியின் குழந்தைகள் அனைவரின் அன்பு
நினைவுகள் மற்றும் பாபாவின் நமஸ்தே!
ஆசீர்வாதம்:
சர்வ ஆத்மாக்களுக்காகவும் சிநேகம் மற்றும் நலம் விரும்பியின்
பாவனை வைக்கக்கூடிய ஆத்ம உணர்வுள்ளவர் ஆகுக.
எப்படி மகிமை செய்யக்கூடிய ஆத்மாவுக்காக சிநேகத்தின் பாவனை
உள்ளதோ, அது போலவே எப்போது யாராவது அறிவுரை தருவதற்கான சமிக்ஞை
கொடுக்கிறார்களோ, அப்போது அதிலும் கூட அந்த ஆத்மாவுக்காக அதே
போல் சிநேகத்தின் பாவனை இருக்க வேண்டும். - இவர் எனக்குப்
பெரியதிலும் பெரிய நலம் விரும்பி - இத்தகைய ஸ்திதி தான் ஆத்ம
உணர்வுள்ளவரின் ஸ்திதி எனப்படும். ஆத்ம உணர்வுள்ளவர் இல்லை
யென்றால் நிச்சயமாக அபிமானம் உள்ளது. அபிமானம் உள்ளவர்கள் ஒரு
போதும் தனது அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாது.
சுலோகன்:
சதா பரமாத்மா நினைவில் மூழ்கி இருப்பீர்களானால் துக்கங்களின்
உலகம் மறந்து போகும்.
அவ்யக்த இஷாரா - நிச்சயத்தின் அஸ்திவாரத்தை உறுதியாக்கி சதா
பயமற்றவராக, கவலையற்றவராக இருங்கள்
எப்போது யாராவது பெரியவர்களின் கையோடு கை இணைகிறதோ, அப்போது
சிறியவர்களின் ஸ்திதி கவலையற்றதாக இருக்கும். உங்களுக்கு
நிச்சயம் உள்ளது - ஒவ்வொரு கர்மத்திலும் பாப்தாதா என்னோடு
கூடவும் இருக்கிறார், மேலும் எனது இந்த அலௌகிக வாழ்க்கையின் கை
அவரோடு இணைந்துள்ளது. அதாவது வாழ்க்கை அவரிடம் ஒப்படைக்கப்
பட்டு விட்டதென்றால், பொறுப்பு அவருடையதாகி விட்டது. அனைத்து
சுமைகளையும் பாபா மீது வைத்து விட்டுத் தன்னை லேசாக்கிக்
கொள்வீர்களானால் சதா கவலையற்று இருப்பீர்கள் மற்றும் ஒவ்வொரு
காரியமும் மிகச் சரியாக இருக்கும்.