01-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா என்னவாக
இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ, இதை அப்படியே குழந்தைகளாகிய
உங்களில் கூட வரிசைக்கிரமமாகவே அறிந்து கொள்கிறீர்கள், ஒருவேளை
அனைவரும் அறிந்து கொண்டார்கள் என்றால் அதிக கூட்டம் கூடிவிடும்.
கேள்வி:
நாலாபுறமும் வெளிப்பாட்டின் குரல்
எப்போது பரவும்?
பதில்:
சுயம் பகவான் இந்த பழைய உலகத்தை
அழித்து புதிய உலகத்தை ஸ்தாபனை செய்ய வந்திருக்கின்றார் என்பது
மனிதர்களுக்கு எப்போது தெரியவருமோ அப்போது ஆகும். 2. நம் அனை
வரையும் சத்கதி அடையச் செய்யும் பாபா நமக்கு பக்தியின் பலனைக்
கொடுக்க வந்துள்ளார் என்ற நிச்சயம் இருந்தால் வெளிப்படுதல்
நடந்துவிடும். நாலாப்புறமும் கூச்சல் அதிகமாகிவிடும்.
பாடல்:
யார் தலைவனோடு இருக்கிறார்களோ.........................
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டின் இந்த வரிகளைக் கேட்டீர்கள். யார் தலைவனோடு
இருக்கிறார் களோ..... தலைவனோடு இருப்பது யார்! உலகம் இதை
தெரிந்திருக்கவில்லை. நிறைய குழந்தை கள் இருக்கிறார்கள்,
அதிலும் எந்த விதத்தில் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று
தெரியாதவர்கள் நிறைய பேர் இருக் கிறார்கள். நினைவு செய்வது
அவர்களுக்கு வருவதில்லை. அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். பாபா
புரிய வைக்கின்றார், குழந்தைகளே உங்களை ஆத்மா, புள்ளி என்று
புரிந்து கொள்ளுங்கள். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார், அவரைத்
தான் நினைவு செய்ய வேண்டும். நிரந்தரமாக நினைவு நிற்கும்
அளவிற்கு நினைவினுடைய பயிற்சி ஏற்பட வேண்டும். கடைசி வரை நான்
ஆத்மா என்பதே நினைவிருக்க வேண்டும், சரீரம் என்பதோ இருக்கிறது
ஆனாலும் நான் ஆத்மா என்ற ஞானம் புத்தியில் வைக்க வேண்டும்.
பாபாவின் டைரக்ஷன் கிடைத் திருக்கிறது, நான் என்னவாக
இருக்கிறேனோ, அந்த ரூபத்தில் வெகு சிலரே நினைவு செய்கிறார் கள்.
குழந்தைகள் அதிகம் தேக-அபிமானத்தில் வந்துவிடுகிறார்கள்.
யாருக்குமே எதுவரை பாபாவின் அறிமுகம் கொடுக்கவில்லையோ அதுவரை
எதையும் புரிந்து கொள்ள முடியாது என்று பாபா புரிய
வைத்திருக்கிறார். முதலில் அந்த நிராகாரமானவர் நம்முடைய தந்தை,
கீதையின் பகவான், அவர் தான் அனைவருக்கும் சத்கதியை வழங்கும்
வள்ளல் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும், அவர் இந்த
சமயத்தில் சத்கதி அடைய வைப்பதற்கான நடிப்பை நடித்துக்
கொண்டிருக்கிறார். இந்த கருத்தில் நிச்சயபுத்தியுடையவர்களாக
ஆகிவிட்டால் பிறகு இருக்கின்ற இவ்வளவு சாது-சன்னியாசிகள்
அனைவரும் ஒரு வினாடியில் வந்துவிடுவார்கள். பாரதத்தில் பெரிய
குழப்பம் ஏற்பட்டுவிடும். இப்போது இந்த உலகம் அழியப் போகிறது
என்பது தெரிந்துவிட்டால், இந்த விசயத்தின் மீது நம்பிக்கை
ஏற்பட்டு விட்டால் மும்பையிலிருந்து அபுமலை வரை (க்யூ) வரிசை
நின்றுவிடும். ஆனால் அவ்வளவு விரைவாக யாருக்கும் நம்பிக்கை
ஏற்பட முடியாது. வினாசம் நடக்க வேண்டும் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள், இவர்கள் அனைவரும் காரிருள் உறக்கத்தில்
உறங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும். பிறகு கடைசி நேரத்தில்
உங்களுடைய பிரபாவம் (தாக்கம்) ஏற்படும். கீதையின் பகவான்
பரமபிதா பரமாத்மா சிவன் என்ற விசயத்தில் நம்பிக்கை ஏற்படுவது
ஒன்றும் சித்தி வீடு போல் கிடையாது. இது பிரசித்தி
பெற்றுவிட்டால் முழு பாரதத்திலும் குரல் எழும்பிவிடும். இப்போது
நீங்கள் ஒருவருக்குப் புரிய வைத்தீர்கள் என்றால் மற்றொருவர்
உனக்கு மந்திரம் போடப்பட்டுவிட்டது என்று சொல்வார். இந்த
மரமானது மிக மெது-மெதுவாகத் தான் வளர வேண்டும். இப்போது கொஞ்ச
காலம் இருக்கிறது முயற்சி செய்வதற்கு, ஒன்றும் கவலை இல்லை.
நீங்கள் பெரிய-பெரிய மனிதர் களுக்குப் புரிய வைக்கின்றீர்கள்,
ஆனால் அவர்கள் எதையாவது புரிந்து கொள்கிறார்களா என்ன.
குழந்தைகளிலும் கூட நிறைய பேர் இந்த ஞானத்தை புரிந்து
கொள்வதில்லை. பாபாவின் நினைவு இல்லையென்றால் அந்த நிலை
ஏற்படுவதில்லை. நிச்சயம் என்று எதை சொல்லப்படுகிறது என்பதை பாபா
தெரிந்திருக்கிறார். இப்போது சிலர் 1-2 சதவீதம் கூட கஷ்டப்பட்டு
பாபாவை நினைவு செய்கிறார்கள். இங்கே அமர்ந்திருக்கிறார்கள்,
ஆனால் பாபாவோடு அந்த அன்பு இருப்ப தில்லை. இதில் அன்பு வேண்டும்,
அதிர்ஷ்டம் வேண்டும். பாபாவோடு அன்பு இருந்தால், நாம் ஒவ்வொரு
அடியிலும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், என்று புரிந்து கொள்வர்.
நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம். அரைக் கல்பத்தின்
தேக-அபிமானம் அமர்ந்திருக்கிறது. ஆகவே இப்போது ஆத்ம-அபிமானியாக
ஆவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. தங்களை ஆத்மா என்று
புரிந்து மிகவும் அன்பான தந்தையை நினைவு செய்வது ஒன்றும் சித்தி
வீடுபோல் அல்ல. அவர்களுடைய முகத்திலேயே அழகு வந்துவிடும்.
கன்னிகை திருமணம் செய்கிறார் என்றால், நகை போன்றவற்றை அணிகிறார்
என்றால் முகத்தில் ஒரேயடியாக குஷி வந்துவிடுகிறது. ஆனால் இங்கே
பிரியதர்ஷனை நினைவு செய்வதே இல்லையென்றால் அந்த முகம் வாடிப்
போன தாக இருக்கிறது. கேட்கவே கேட்காதீர்கள். கன்னிகை திருமணம்
செய்கிறார் என்றால் முகம் மகிழ்ச்சியானதாகி விடுகிறது.
சிலருக்கு திருமணத்திற்கு பிறகு கூட முகம் வாடிப் போய்
இருக்கிறது. பலவிதமாக இருக்கிறார்கள். சிலர் மற்றவருடைய
வீட்டிற்கு சென்று குழம்பிவிடு கிறார்கள். ஆக இங்கேயும் கூட
அப்படி இருக்கிறது. பாபாவை நினைவு செய்வதற்கு உழைப்பு
தேவைப்படுகிறது. அதீந்திரிய சுகத்தைப் பற்றி கோபி வல்லபரின்
கோப-கோபியரிடம் என்பது கடைசி நேரத்தின் புகழாகும். தங்களை
கோப-கோபியர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும் மற்றும்
நிரந்தரமாக தந்தையை நினைவு செய்ய வேண்டும், அந்த நிலை ஏற்பட
வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க
வேண்டும். பாபா வந்திருக்கிறார், அவர் ஆஸ்தியை கொடுத்துக்
கொண்டிருக்கிறார். இதில் ஞானம் முழுவதும் வந்துவிடுகிறது.
இலஷ்மி-நாராயணன் 84 பிறவிகள் முடித்த போது தான் பாபா கடைசியில்
வந்து அவர்களுக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுத்து இராஜ்யத்தைக்
கொடுத்தார். இந்த இலஷ்மி-நாராயண படம் தான் முதலாவதாகும்.
அவர்கள் முற்பிறவியில் அப்படிப்பட்ட கர்மம் செய்திருக்கிறார்கள்,
அந்த கர்மத்தை பாபா இப்போது கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர் கள். மன்மனாபவ,
தூய்மையாக இருங்கள் என்று கூறுகின்றார். எந்தவொரு பாவத்தையும்
செய்யாதீர்கள் ஏனென்றால் நீங்கள் இப்போது சொர்க்கத்தின்
எஜமானர்கள், புண்ணிய ஆத்மாக் களாக ஆகின்றீர்கள். அரைக் கல்பம்
மாயை இராவணன் பாவம் செய்ய வைத்து வந்திருக்கிறது. இப்போது
நீங்களே தன்னைத்தான் கேட்க வேண்டும் - என் மூலம் பாவம் எதுவும்
நடக்க வில்லையே? புண்ணிய காரியம் செய்து கொண்டிருக்கிறேனா?
கண்ணில்லாதவர்களுக்கு ஊன்று கோலாகி இருக்கிறேனா? பாபா
கூறுகின்றார், மன்மனாபவ. மன்மனாபவ என்று சொன்னது யார்? என்று
கேட்கப்படுகிறது? அவர்கள் கிருஷ்ணர் சொன்னார் என்று சொல்வார்கள்.
பரமபிதா பரமாத்மா சொன்னார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. சிவஜெயந்தியின்
கூடவே கீதை ஜெயந்தியும் இருக்கிறது. கீதை ஜெயந்தியின் கூடவே
கிருஷ்ண ஜெயந்தியும் நடக்கிறது.
நாம் எதிர்காலத்தில் இளவரசர்களாவோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். யாசிக்கும் நிலை யிலிருந்து இளவரசர்களாவோம்.
இது தான் இராஜயோகத்தின் குறிக்கோளாகும். கீதையின் பகவான்
ஸ்ரீகிருஷ்ணர் அல்ல, நிராகாரமானவர் என்பதை நிரூபித்துக்
கூறுங்கள். அப்போது சர்வவியாபி என்ற ஞானம் மறைந்துவிடும்.
அனைவருக்கும் சத்கதியை வழங்கும் வள்ளல், தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர் பாபா ஆவார். அவர் விடுவிப்பவர் என்றும்
சொல்கிறார்கள், பிறகு சர்வவியாபி என்று சொல்லிவிடுகிறார்கள்.
என்ன பேசு கிறார்களோ, அதை புரிந்து கொள்வதே இல்லை. தர்மத்தைப்
பற்றி என்ன தோன்றுகிறதோ, அதை பேசி விடுகிறார்கள். முக்கியமான
தர்மங்கள் மூன்றாகும். தேவி-தேவதா தர்மம் அரைக் கல்பம்
நடக்கிறது. பாபா பிராமண, தேவதா, சத்திரிய தர்மத்தை ஸ்தாபனை
செய்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இதை உலகம்
தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சத்யுகத்தையே இலட்சக்கணக்கான
ஆண்டுகள் என்று சொல்லிவிடு கிறார்கள். ஆதி சனாதன தேவி-தேவதா
தர்மம் அனைத்திலும் உயர்ந்ததாகும், ஆனால் இவர்கள் தங்களுடைய
தர்மத்தை மறந்து தர்மமற்றவர்களாக ஆகிவிட்டார்கள்.
கிறிஸ்துவர்கள் தங்களுடைய தர்மத்தை விடுவதில்லை. கிறிஸ்து
நம்முடைய தர்மத்தை ஸ்தாபனை செய்தார் என்பதை அவர்கள்
தெரிந்துள்ளார்கள். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், பிறகு
கிறிஸ்துவர்கள், இவை தான் முக்கிய தர்மங்களாகும். மற்ற
சிறு-சிறு தர்மங்கள் நிறைய இருக்கின்றன. எங்கிருந்து வளர்ந்தன,
என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. முகமது வந்து கொஞ்ச காலமே
ஆகிறது, இஸ்லாமியர்கள் பழமையானவர்களாவர். கிறிஸ்துவர்களும்
புகழ்பெற்றவர்களாவர். மற்றபடி எவ்வளவு பேர் இருக்கிறார்கள்.
அனைவருக்கும் அவரவருடைய தர்மம் இருக்கிறது. தங்களுடைய
வித-விதமான தர்மம், வித-விதமான பெயர் இருக்கிறது எனும் போது
குழம்பிவிட்டார்கள். முக்கிய தர்ம சாஸ்திரங்களே நான்கு தான்
என்பதை தெரிந்திருக்க வில்லை. இதில் தேவதா, பிராமண தர்மமும்
வந்துவிடுகிறது. பிராமணனிலிருந்து தேவதை, தேவதையிலிருந்து
சத்திரியர், என்பது யாருக்கும் தெரியவில்லை. பிராமண தேவதாய நமஹ:
என்று பாடுகிறார்கள். பரமபிதா பிராமண, தேவதா, சத்திரிய தர்மத்தை
ஸ்தாபனை செய்தார் என்ற வார்த்தை இருக்கிறது ஆனால் கிளிப்
பிள்ளையைப் போல் படிக்கிறார்கள்.
இது முட்கள் நிறைந்த காடாகும். பாரதம் அல்லாவின் தோட்டமாக
இருந்தது, என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அது எப்போது,
எப்படி யார் உருவாக்கியது, பரமாத்மா என்ன பொருளாக இருக்கிறார்
என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. எனவே அனாதைகளாகி
விட்டார்கள் அல்லவா, எனவே தான் இந்த சண்டை போன்றவைகளெல்லாம்
நடக்கிறது. வெறும் பக்தியிலேயே மகிழ்ச்சி அடைந்து
கொண்டிருக்கிறார்கள். இப்போது பாபா வெளிச்சமாக்க (ஒளி தருவதற்கு)
வந்திருக்கின்றார், ஒரு வினாடியில் ஜீவன்முக்தர்களாக
ஆக்கிவிடுகின்றார். ஞான அஞ்சனம் (மை) சத்குரு அளித்தார் அஞ்ஞான
இருள் அழிந்தது. இப்போது நாம் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா மூன்றாவது கண் கொடுத்துள்ளார்.
தேவதைகளுக்கு மூன்றாவது கண்ணை காட்டியுள்ளார்கள். ஆனால்
அர்த்தத்தை தெரிந்திருக்கவில்லை. உண்மை யில் மூன்றாவது கண்
உங்களுக்குத் தான் இருக்கிறது. அவர்கள் தேவதைகளுக்கு கொடுத்து
விட்டார்கள். கீதையில் பிராமணர்களுடைய விசயம் எதுவுமில்லை.
அதில் கௌரவர்கள்- பாண்டவர்களின் சண்டை குதிரை வண்டி போன்றவற்றை
எழுதிவிட்டார்கள், எதையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள்
புரிய வைத்தீர்கள் என்றால் நீங்கள் சாஸ்திரங்களை ஏற்பதில்லை
என்று சொல்வார்கள். நாங்கள் ஏன் சாஸ்திரங்களை ஏற்கமாட்டோம்,
எங்களுக்கு சாஸ்திரம் தெரியும் - இவை அனைத்தும் பக்தி
மார்க்கத்தின் பொருட்களாகும். ஞானம் மற்றும் பக்தி என்று பாடப்
பட்டுள்ளது. இராவண இராஜ்யமாகும் போது தான் பக்தி ஆரம்பமாகிறது.
பாரதவாசிகள் இறங்கும் மார்க்கத்தில் சென்று தர்மம் கீழானதாகவும்
கர்மமும் கீழானதாக செயல்படுபவர்களாக ஆகி விட்டார்கள், ஆகையினால்
தான் இப்போது இந்துக்கள் என்று சொல்லிவிட்டார்கள். தூய்மை
யற்றவர்களாக ஆகிவிட்டார்கள். தூய்மையற்றவர்களாக ஆக்கியது யார்?
இராவணன் ஆவான். இராவணனை எரிக்கவும் செய்கிறார்கள், பரம்பரையாக
நடந்து வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் சத்யுகத்தில்
இராவண இராஜ்யமே இருக்கவில்லை. எதையும் புரிந்து கொள்வதில்லை.
மாயை முற்றிலும் கல் புத்தியுடையவர்களாக்கி விடுகிறது.
கல்லிலிருந்து தங்கமாக பாபா தான் ஆக்குகின்றார். கலியுகத்தில்
வந்தால் தான் சத்யுகத்தை ஸ்தாபனை செய்ய முடியும். பாபா புரிய
வைக்கின்றார், இருந்தாலும் கஷ்டப்பட்டு யாருடைய புத்தியிலாவது
தான் நிற்கிறது.
குமாரிகளாகிய உங்களுக்கு இப்போது நிச்சயதார்த்தம் நடக்கிறது.
உங்களை பட்டத்து இராணியாக ஆக்கு கின்றார். உங்களை விரட்டினார்
அதாவது ஆத்மாக்களாகிய உங்களுக்கு கூறுகின்றார் - நீங்கள்
என்னுடையவர்களாக இருந்தீர்கள் பிறகு என்னை மறந்துவிட்டீர்கள்.
தேக-அபிமானிகளாக ஆகி மாயையினுடையவர்களாக ஆகிவிட்டீர்கள்.
மற்றபடி விரட்டுவது போன்ற விசயங்கள் எதுவுமில்லை. என்னை மட்டும்
நினைவு செய்யுங்கள். நினைவு தான் உழைப்பாகும். அதிகம்
தேக-அபிமானத்தில் வந்து விகர்மங்கள் செய்கிறார்கள். இந்த ஆத்மா
என்னை நினைவு செய்வதே இல்லை என்பதை பாபா தெரிந்துள்ளார்.
தேக-அபிமானத்தில் வந்து நிறைய பாவம் செய்கிறார்கள் என்றால்
பாவக்குடம் நூறுமடங்கு நிரம்பிவிடுகிறது. மற்றவர்களுக்கு வழி
சொல்வதற்குப் பதிலாக அவர்களே மறந்துவிடுகிறார்கள். இன்னும்
அதிகமாக துர்கதியை அடைந்துவிடுகிறார்கள். மிக உயர்ந்த
குறிக்கோளாகும். உயர்ந்தால் வைகுண்டம், விழுந்தால்
சுக்குநூறாகிவிடுவர். இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. இதில் எவ்வளவு வித்தியாசம் வந்துவிடுகிறது.
சிலர் படித்து வானம் அளவு உயர்ந்துவிடு கிறார்கள், சிலர்
தரையில் விழுந்துவிடுகிறார்கள். புத்தி மந்தமாகிவிட்டால்
படிக்க முடியாது. பாபா என்னால் யாருக்கும் புரிய வைக்க முடியாது
என்று சிலர் கூறுகிறார்கள். நல்லது தன்னை ஆத்மா என்று புரிந்து
கொள்ளுங்கள், தந்தையாகிய என்னை நினைவு செய்தீர்கள் என்றால்,
நான் உங்களுக்கு சுகம் அளிப்பேன், என்று கூறுகின்றேன், ஆனால்
நினைவு செய்வதே இல்லை. நினைவு செய்தால் மற்றவர்களுக்கு
நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள். பாபாவை நினைவு செய்தீர்கள்
என்றால் பாவம் அழிந்துவிடும். அவருடைய நினைவு இல்லாமல் நீங்கள்
சுகதாமத்திற்குச் செல்ல முடியாது. 21 பிறவிகளுக்கான ஆஸ்தி
நிராகார தந்தையிடமிருந்து கிடைக்கும். மற்றவர்கள் அனைவரும்
அல்பகால சுகமளிப்பவர் களாவர். சிலருக்கு ரித்தி-சித்தியின்
மூலம் குழந்தை கிடைத்துவிட்டது அல்லது ஆசிர்வாதத்தால் லாட்டரி
கிடைத்துவிட்டது என்றால் அவ்வளவு தான் நம்பிக்கை வந்துவிடுகிறது.
சிலருக்கு 2-4 கோடிகள் லாபம் கிடைத்துவிட்டால் அவ்வளவு தான்
அதிகம் மகிமை பாடுவார்கள். ஆனால் அது அல்பகாலத்திற்காகும். 21
பிறவிகளுக்கு ஆரோக்கியம் செல்வம் கிடைக்க முடியாது அல்லவா.
ஆனால் மனிதர்கள் தெரிந்திருக்கவில்லை. குற்றம் கூறவும் முடியாது.
அல்பகால சுகத்திலேயே குஷியாகிவிடுகிறார்கள். பாபா
குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுத்து
சொர்க்கத்தின் இராஜ்யத்தை கொடுக்கின்றார். எவ்வளவு சகஜமாக
இருக்கிறது. சிலர் முற்றிலும் புரிய வைக்க இயலுவதில்லை. சிலர்
புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள் ஆனால் முழுமையான யோகம்
இல்லாத காரணத்தினால் யாருக்கும் அம்பு தைப்பதில்லை.
தேக-அபிமானத்தில் வருவதின் மூலம் ஏதாவது பாவம் நடந்துக் கொண்டே
இருக்கிறது. யோகம் தான் முக்கிய மானதாகும். நீங்கள் யோக
பலத்தின் மூலம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். பழமை
யான யோகத்தை பகவான் தான் கற்றுக் கொடுத்தார், கிருஷ்ணர் அல்ல.
நினைவு யாத்திரை மிகவும் நல்லதாகும். நீங்கள் நாடகம்
பார்த்துவிட்டு வந்தீர்கள் என்றால் புத்தியில் முழுவதும்
முன்னால் (காண்பது போல்) வந்துவிடும். யாருக்காவது
சொல்வதென்றால் சற்று நேரம் பிடிக்கும். இதுவும் அதுபோலவே ஆகும்.
விதை மற்றும் மரம். இந்த சக்கரம் மிகவும் தெளிவாக இருக்கிறது.
சாந்திதாமம், சுகதாமம், துக்கதாமம்........................ ஒரு
வினாடி வேலையல்லவா. ஆனால் நினைவும் இருக்க வேண்டும் அல்லவா.
முக்கியமான விசயம் தந்தையின் அறிமுகமாகும். என்னை நினைவு
செய்வதின் மூலம் நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்வீர்கள்
என்று பாபா கூறுகின்றார். நல்லது!
சிவபாபா குழந்தைகளாகிய உங்களை நினைவு செய்கின்றார், பிரம்மா
பாபா நினைவு செய்வ தில்லை. நம்முடைய சொல்படி கேட்கும்
குழந்தைகள் யார்-யார் என்பதை சிவபாபா தெரிந்திருக் கிறார்.
நல்ல சேவாதாரி குழந்தைகள் நினைவு செய்கிறார். இவர் (பிரம்மா)
யாரையாவது நினைவு செய்வாரா என்ன? இவருடைய ஆத்மாவிற்கு டைரக்ஷன்
என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்பதாகும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அதிர்ஷ்டசாலியாக ஆவதற்கு ஒரு தந்தையிடம் உண்மையிலும்
உண்மையான அன்பு வைக்க வேண்டும். அன்பு வைப்பது என்றால் ஒவ்வொரு
அடியிலும் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருப்பதாகும்.
2) தினமும் அவசியம் புண்ணிய காரியம் செய்ய வேண்டும்.
அனைத்திலும் பெரிய புண்ணியம் அனைவருக்கும் தந்தையின்
அறிமுகத்தைக் கொடுப்பதாகும். தந்தையை நினைவு செய்ய வேண்டும்
மற்றும் அனைவருக்கும் தந்தையின் நினைவை ஏற்படுத்த வேண்டும்.
வரதானம்:
தனது திருஷ்டி மற்றும் உள்ளுணர்வு மாற்றத்தின் மூலம் சிருஷ்டியை
மாற்றக்கூடிய சாட்சாத்கார மூர்த்தி ஆகுக.
தனது உள்ளுணர்வின் மாற்றத்தின் மூலம் அநேக ஆத்மாக்கள் தங்கள்
உண்மையான வடிவத்தை, உண்மையான வீட்டை மற்றும் உண்மையான
ராஜதானியைப் பார்ப்பார்கள். அத்தகைய யதார்த்த சாட்சாத்காரம்
செய்விப்பதற்காக உள்ளுணர்வில் ஒரு சிறிதும் தேக அபிமானத்தின்
சஞ்சலம் இருக்கக் கூடாது. உள்ளுணர்வைச் சீர்திருத்துவதன் மூலம்
திருஷ்டியை தெய்வீகமாக்குங்கள். அப்போது இந்த சிருஷ்டி மாறி
விடும். பார்ப்பவர்கள் அனுபவம் செய்வார்கள் - இவை கண்கள் அல்ல,
ஆனால் மாய மந்திரத்தின் பெட்டகங்கள். இந்தக் கண்கள்
சாட்சாத்காரத்தின் சாதனமாகி விடும்.
சுலோகன்:
சேவையின் ஊக்கம்-உற்சாகத்துடன் கூடவே எல்லையற்ற வைராக்கிய
உள்ளுணர்வு தான் வெற்றிக்கான ஆதாரமாகும்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும் பணிவு என்ற
குணங்களை தாரணை செய்யுங்கள்
இனிமையின் குணத்தை தாரணை செய்பவர் இங்கேயும் மகான் ஆகிறார்
மற்றும் அங்கேயும் (சத்யுகத்தில்) பதவி பெறுகிறார். இனிமையானவரை
அனைவரும் மகான் வடிவத்தில் பார்ப்பார் கள். ஆக, இந்த இனிமையின்
விசேஷ குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்க வேண்டும். இனிமையின்
மது (தேன்) யாரிடம் உள்ளதோ, அவருக்கு ஒவ்வொரு காரியத்திலும்
வெற்றி மேல் வெற்றி தான். அவரது வாழ்க்கையிலிருந்து தோல்வி
என்பது விலகிப் போய் விடும்.