01-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் எல்லையில்லாத தந்தையிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி பெறுவதற்காக வந்துள்ளீர்கள். இங்கு எல்லைக்குட்பட்ட எந்த ஒரு விஷயமும் கிடையாது. நீங்கள் மிகவும் ஊக்கத்துடன் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பழைய உலகம் மறந்து போய் விடும்.

கேள்வி:
எந்த ஒரு விஷயத்தை நீங்கள் திரும்பத் திரும்ப அரைத்து (சிந்தனை செய்து) பக்குவப்படுத்த வேண்டும்?

பதில்:
நாம் ஆத்மாக்கள் ஆவோம். நாம் பரமாத்மா தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்று கொண்டி ருக்கிறோம். ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகள் ஆவோம். பரமாத்மா தந்தை ஆவார். இப்பொழுது குழந்தைகள் மற்றும் தந்தையினுடைய மேளா (சந்திப்பு) நடந்துள்ளது. இந்த விஷயத்தைத் திரும்பத் திரும்ப அரைத்து அரைத்து பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த அளவு ஆத்ம உணர்வுடையவர்களாக ஆகிக் கொண்டு செல்வீர்களோ அந்த அளவு தேக அபிமானம் நீங்கி கொண்டே போகும்.

பாடல்:
யார் தலைவனுடன் கூட இருக்கிறாரோ.. .. ..

ஓம் சாந்தி.
நாம் பாபாவுடன் கூடவே அமர்ந்துள்ளோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பாபா அனைவருக்கும் பாபா (தந்தை) ஆவார். பாபா வந்து விட்டுள்ளார். தந்தையிட மிருந்து என்ன கிடைக்கிறது என்ற கேள்வியே எழுவதில்லை. தந்தை யிடமிருந்து கிடைப்பதே ஆஸ்தி ஆகும். இவர் அனைவருடைய எல்லையில்லாத தந்தை ஆவார். அவரிடமிருந்து எல்லையில்லாத சுகம், எல்லையில்லாத சொத்து கிடைக்கிறது. அது எல்லைக் குட்பட்ட சொத்து ஆகும். ஒருவரிடம் ஆயிரம் மற்றொருவரிடம் 5 ஆயிரம் இருக்கும். ஒருவரிடம் 10-20-50 கோடி, 100 கோடி கூட இருக்கும். இப்பொழுது அவர்களோ அனைவரும் லௌகீக தந்தைகள் ஆவார்கள் மற்றும் எல்லைக்குட்பட்ட குழந்தைகள் ஆவார்கள். நாம் எல்லையில்லாத தந்தை யிடம் எல்லையில்லாத ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்துள்ளோம் என்பதை இங்கு குழந்தை களாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். உள்ளத்தில் விருப்பமோ இருக்கும் தானே! பள்ளிக் கூடத்தைத் தவிர வேறு சத்சங்கம் ஆகியவற்றில் எந்த ஒரு விருப்பமும் இருப்பதில்லை. அமைதி வேண்டும் என்பார்கள். அதுவோ கிடைக்க முடியாது. நாம் விஷ்வ அதாவது புது உலகிற்கு அதிபதி ஆவதற்காக வந்துள்ளோம் என்பதை இங்கு குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இல்லை என்றால் இங்கு ஏன் வர வேண்டும்? குழந்தைகள் எவ்வளவு விருத்தி அடைந்து கொண்டே போகிறார்கள். பாபா நாங்களோ உலகிற்கு அதிபதி ஆக வந்துள்ளோம். எல்லைக்குட் பட்ட எந்த விஷயமும் கிடையவே கிடையாது என்று கூறுகிறீர்கள். பாபா நாங்கள் உங்களிடமிருந்து எல்லை யில்லாத சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுவதற்காக வந்துள்ளோம். கல்ப கல்பமாக நாங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுகிறோம். பிறகு மாயை என்ற பூனை பறித்து விடுகிறது. எனவே தான் இதற்கு வெற்றி தோல்வியின் விளையாட்டு என்று கூறப்படுகிறுது. தந்தை வந்து குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகளும் வரிசைக்கிரமமாகப் புரிந்துள்ளார்கள். இவர் ஒன்றும் சாது சந்நியாசி அல்ல. நீங்கள் எந்த மாதிரி துணி அணிந்துள்ளீர்களோ அதே போலத் தான் இவரும் அணிந்துள்ளார். இவரோ பாபா (தந்தை) ஆவார் அல்லவா? நீங்கள் யாரிடம் செல்கிறீர்கள் என்று யாராவது கேட்டார்கள் என்றால், நாங்கள் பாப்தாதாவிடம் செல்கிறோம் என்று கூறுவீர்கள். இதுவோ குடும்பம் (ஃபேமிலி) ஆகும். எதற்கு செல்கிறீர்கள், என்ன பெறுவதற்காக செல்கிறீர்கள்? என்று வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் பாப்தாதாவிடம் செல்கிறோம், ஆஸ்தி அவரிடமிருந்து கிடைக்கிறது என்று வேறு யாரும் கூற முடியாது. பாட்டனாரின் ஆஸ்திக்கு அனைவரும் அதிகாரி ஆவார்கள். சிவபாபாவின் அவினாஷி குழந்தைகளாக (ஆத்மாக்கள்) இருக்கவே இருக்கிறீர்கள். பிறகு பிரஜாபிதா பிரம்மாவினுடையவராக ஆகும் பொழுது நீங்கள் அவருக்கு பேரன் பேத்திகள் ஆவீர்கள். இப்பொழுது நாங்கள் ஆத்மாக்கள் ஆவோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். இதையோ மிகவும் உறுதியாக மனதில் நிறுத்த வேண்டும். ஆத்மாக் களாகிய நாம் பரமாத்மா தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்கிறோம். ஆத்மாக்களாகிய நாம் தந்தையை வந்து சந்தித்துள்ளோம். இதற்கு முன்பு சரீர உணர்வு இருந்தது. இன்னின்ன பெயர் உடையவர்கள் தான் சொத்து பெறுகிறார்கள். இப்பொழுதோ ஆத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறார்கள். ஆத்மாக் கள் குழந்தைகள் ஆவார்கள். பரமாத்மா தந்தை ஆவார். குழந்தைகள் மற்றும் தந்தையினுடைய மேளா (சந்திப்பு) வெகுகாலம் கழித்து நடக்கிறது. ஒரே ஒரு முறை. பக்தி மார்க்கத்தில் பின் அனேக செயற்கையான மேளாக்கள் நடந்து கொண்டே இருக் கின்றன. இது எல்லாவற்றையும் விட அற்புதமான மேளா. ஆத்மாக்கள், பரமாத்மா வெகுகாலமாக பிரிந்திருந்தனர்.... யார்? ஆத்மாக்களாகிய நீங்கள்! ஆத்மாக்களாகிய நாம் நமது (ஸ்வீட் சைலன்ஸ் ஹோம்) இனிமையான அமைதி இல்லத்தில் இருப்பவர்கள் ஆவோம் என்பதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.இப்பொழுது இங்கு உங்களது பாகத்தை நடித்து நடித்து களைத்துப் போயுள்ளார்கள். எனவே சந்நியாசி குரு ஆகியோரிடம் சென்று அமைதி வேண்டுகிறார்கள். அவர்கள் வீடு வாசலை விட்டு விட்டு காட்டிற்குச் செல்கிறார்கள். அவர்களிடமிருந்து சாந்தி கிடைக்கும் என்று நினைக் கிறார்கள். ஆனால் அவ்வாறு அல்ல. இப்பொழுதோ அவர்கள் எல்லோரும் நகரத்திற்குள் வந்து விடுகின்றனர். காட்டில் குகைகள் எல்லாம் காலியாக கிடக்கின்றன. பெரிய குருவாகி அமர்ந்துள் ளார்கள். அவர்கள் துறவறமார்க்கத்தின் ஞானம் அளித்து தூய்மையைக் கற்பிக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் பார்த்தீர்கள் என்றால், திருமணங்களை செய்வித்து கொண்டிருக் கிறார்கள்.

குழந்தைகளாகிய நீங்களோ உங்களது யோக பலத்தினால் தங்களது கர்ம இந்திரியங்களை வசப்படுத்து கிறீர்கள். கர்ம இந்திரியங்கள் யோக பலத்தினாலே குளிர்ந்துவிடும். கர்ம இந்திரியங் கள் சஞ்சலமடைகின்றன அல்லவா? இப்பொழுது எந்த ஒரு சஞ்சலத்தன்மையும் ஏற்படாதவாறு கர்ம இந்திரியங்கள் மீது வெற்றி அடைய வேண்டும். யோக பலமின்றி கர்ம இந்திரியங்கள் மீது வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம். கர்ம இந்திரியங்களின் சஞ்சலத்தன்மை யோக பலத்தினால் தான் விடுபடும் என்று தந்தை கூறுகிறார். யோக பலத்தின் ஆற்றலோ இருக்கிறது அல்லவா? இதில் மிகுந்த உழைப்பு தேவை. இனி போகப்போக கர்ம இந்திரியங்களின் சஞ்சலத்தன்மை இருக்காது. சத்யுகத்திலோ எந்த ஒரு அசுத்தமான வியாதியும் இருக்காது. இங்கு நீங்கள் கர்ம இந்திரியங்களை வசப்படுத்திச் செல்கிறீர்கள். எனவே எந்த ஒரு அசுத்தமான விஷயமும் அங்கு இருப்பதில்லை. பெயரே சொர்க்கம் என்பதாகும். அதை மறந்து விட்ட காரணத் தால் லட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விடுகிறார்கள். இது வரை கூட கோவில்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை லட்சக்கணக்கான வருடங்கள் ஆகி இருந்தது என்றால் பின்னர் விஷயங்கள் கூட நினைவிருக்க முடியாது. இந்த கோவில்கள் ஆகியவைகளை ஏன் கட்டுகிறார்கள்? அங்கு கர்ம இந்திரியங்கள் குளிர்ந்ததாக இருக்கும். எந்த ஒரு சஞ்சலத் தன்மை இருக்காது. சிவபாபாவிற்கோ கர்ம இந்திரியங்கள் இல்லை. மற்றபடி ஆத்மாவில் ஞானமோ முழுமையாக உள்ளது அல்லவா? அவரே அமைதியின் கடல் மற்றும் சுகத்தின் கடல் ஆவார். அந்த ஜனங்கள் கர்ம இந்திரியங்களை வசப்படுத்த முடிவதில்லை என்பார்கள். யோக பலத்தினால் நீங்கள் கர்ம இந்திரியங்களை வசப்படுத்துங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தையின் நினைவில் இருங்கள். கர்மேந்திரியங்கள் மூலமாக எந்த ஒரு சட்டத்திற்கு புறம்பான காரியம் செய்யாதீர்கள். இப்பேர்ப்பட்ட (லவ்லி) அன்பான தந்தையை நினைத்து நினைத்து அன்புக் கண்ணீர் வர வேண்டும். ஆத்மா பரமாத்மாவுடன் கலந்து விடுவது ஒன்றும் இல்லை. சரீரத்தின் கடன் எடுக்கும் பொழுது ஒரே ஒரு முறை தந்தை சந்திக்கிறார். எனவே இப்பேர்ப்பட்ட தந்தை யுடன் எவ்வளவு அன்பாக நடக்க வேண்டும். பாபாவிற்கு உத்வேகம் வந்ததல்லவா? எந்தளவு! பாபா உலகத்தின் அதிபதியாக ஆக்குகிறார். பின் இந்த பணம், செல்வம் அனைத்தையும் என்ன செய்வது. விட்டு விடலாம் அனைத்தையும்! எப்படி பைத்தியம் போல் ஆகி விட்டார் அல்லவா? உட்கார்ந்த படியே இவருக்கு என்ன ஆகி விட்டது என்று எல்லோரும் கூற முற்பட்டார்கள். தொழில் ஆகிய அனைத்தையும் விட்டு விட்டு வந்து விட்டார். அளவு கடந்த குஷி ஏற்பட்டது. சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) ஏற்பட ஆரம்பித்தது. பிறகு மெது மெதுவாக நாலேஜ் (ஞானம்) கிடைத்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் இங்கு பள்ளிக் கூடத்திற்கு வந்துள்ளீர்கள். ஏய்ம் ஆப்ஜெக்ட் - லட்சியமோ இருக்கிறது அல்லவா? இது இராஜயோகம் ஆகும். எல்லையில்லாத தந்தையிடமிருந்து ராஜ்யத்தைப் பெறுவதற்காக வந்துள்ளீர்கள். நாம் பாபா வந்து எங்களது துக்கத்தை நீக்குங்கள். சுகத்தை அளியுங்கள் என்று யாரை நினைவு செய்து கொண்டிருந்தோமோ அவரிடம் நாம் இப்பொழுது படிக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். எங்களுக்கு கிருஷ்ணர் போல குழந்தை கிடைக்க வேண்டும் என்று பெண் குழந்தைகள் கூறுகிறார்கள். அட! அவரோ வைகுண்டத்தில் கிடைப்பார் அல்லவா? கிருஷ்ணர் வைகுண்டத்தில் இருப்பவர் ஆவார். அவரை நீங்கள் ஊஞ்சலாட்டுகிறீர்கள். எனவே அவரைப் போன்ற குழந்தையோ வைகுண்டத்தில் தான் கிடைப்பார் அல்லவா? இப்பொழுது நீங்கள் வைகுண்டத்தில் அரசாட்சியைப் பெறுவதற்காக வந்துள்ளீர்கள். அங்கு அவசியம் இளவரசர் இளவரசிகள் தான் கிடைப்பார்கள். தூய்மையான குழந்தை கிடைக்க வேண்டும் என்ற இந்த விருப்பம் கூட நிறைவேறுகிறது. பார்க்கப்போனால் இளவரசர் இளவரசிகள் இங்கு கூட நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் நரகவாசி ஆவார்கள். நீங்கள் சொர்க்கவாசியை விரும்புகிறீர்கள். படிப்போ மிகவும் சுலபமானது ஆகும். நீங்கள் நிறைய பக்தி செய்துள்ளீர்கள். அடி வாங்கி உள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் எவ்வளவு குஷியுடன் புண்ணிய தீர்த்த இடங்களுக்குச் செல்கிறீர்கள். அமரநாத் யாத்திரை செல்கிறார்கள். சங்கரன் பார்வதிக்கு அமரகதை கூறினார் என்று நினைக்கிறார்கள். அமரநாத்தின் உண்மையான கதையை நீங்கள் இப்பொழுது கேட்கிறீர்கள். இதுவோ தந்தை வந்து உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர் கள். இவர் பாக்கியசாலி ரதம் ஆவார். இவர் (சிவபாபா) இதை கடனாக எடுத்துள்ளார் என்று அறிந்துள்ளீர்கள். பாபா எங்களால் பேச முடிவதில்லை என்று கூறுகிறார்கள். இதுவோ நீங்கள் தான் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும். இதில் பாபா என்ன செய்ய முடியும்?

தந்தை குழந்தைகளாகிய உங்களை சிறந்தவர்களாக ஆக்குவதற்கான எளிய வழியைக் கூறுகிறார் - ஒன்று கர்ம இந்திரியங்களை வசப்படுத்துங்கள். இரண்டாவது தெய்வீக குணங்களை நடைமுறையில் கொண்டு வாருங்கள் (தாரணை). யாராவது கோபப்பட்டு பேசினார்கள் என்றால் கேட்காதீர்கள். ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியேற்றி விடுங்கள். விரும்பத்தகாத எந்த தீய விஷயங்களையும் கேட்கவே கேட்காதீர்கள். பாருங்கள், கணவர் கோபப்படுகிறார், அடிக்கிறார் என்றால் என்ன செய்ய வேண்டும்? கணவன் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது அவர் மீது மலர் பொழியுங்கள். சிரித்து கொண்டே இருங்கள். யுக்திகளோ (வழிமுறைகள்) நிறைய உள்ளன. காமம், கோபம் உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? அபலைகள் முறையிடுகிறார்கள். ஒரு திரௌபதி அல்ல. எல்லோருமே ஆவார்கள். இப்பொழுது தந்தை மானபங்கப்படுவதிலிருந்து காப்பாற்ற வந்துள்ளார். இந்த மரண உலகத்தில் இது உங்களுடைய கடைசி பிறவி ஆகும் என்று தந்தை கூறுகிறார். நான் குழந்தைகளாகிய உங்களை சாந்திதாமம் அழைத்துச் செல்ல வந்துள்ளேன். அங்கு பதீதமான (தூய்மையற்ற) ஆத்மாக்கள் போக முடியாது. எனவே நான் வந்து அனைவரையும் பாவனமாக ஆக்குகிறேன். யாருக்கு என்ன பாகம் கிடைத் துள்ளதோ அதை முடித்து விட்டு இப்பொழுது எல்லோரும் திரும்பிச் செல்ல வேண்டும். முழு விருட்சத்தின் ரகசியம் புத்தியில் உள்ளது. மற்றபடி விருட்சத்தின் இலைகளை கணக்கிட்டு கொண்டிருக்க முடியுமா என்ன? எனவே தந்தை கூட அடிப்படை விஷயத்தைப் புரிய வைக்கிறார் - விதை மற்றும் விருட்சம், அடுத்து மனிதர் களோ ஏராளமாக உள்ளார்கள். ஒவ்வொருவருக்குள்ளேயும் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு இருப்பாரா என்ன? மனிதர்கள் பகவானோ அந்தர்யாமி ஆவார், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் விஷயத்தை அறிந்திருப்பார் என்று நினைக்கிறார்கள். இவை எல்லாமே குருட்டு நம்பிக்கை ஆகும்.

நீங்கள் வந்து எங்களை பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள், இராஜயோகத்தைக் கற்பியுங்கள் என்று என்னை அழைக்கிறீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்பொழுது நீங்கள் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை இந்த வழியை அளிக்கிறார் அல்லவா? தந்தை யினுடைய ஸ்ரீமத் மற்றும் விதி முறை எல்லாவற்றையும் விட தனிப்பட்டது ஆகும். வழி என்றால் ஆலோசனை . அதன் மூலம் நமது சத்கதி கிடைக்கிறது. அதே ஒரு தந்தை மட்டுமே நமக்கு சத்கதி அளிப்பவர் ஆவார். வேறு யாருமில்லை. இச்சமயத்தில் தான் அழைக்கிறார்கள். சத்யுகத் திலோ அழைப்பதில்லை. இப்பொழுது தான் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரு இராமன் என்று கூறுகிறார்கள். மாலை உருட்டும் பொழுது உருட்டியபடியே (மாலையிலுள்ள) பூ வரும் பொழுது அதனை ராம் என்று கூறி கண்களில் ஒத்திக்கொள்கிறார்கள். ஒரு மலரை மட்டும் தான் ஜபிக்க வேண்டும். மற்றது அவருடைய தூய்மையான படைப்பு. மாலையை நீங்கள் நல்ல முறையில் அறிந்துள்ளீர்கள். யார் தந்தையுடன் சேர்ந்து சேவை செய்கிறார்களோ அவர் களுடையது இந்த மாலை ஆகும். சிவபாபாவை படைப்பு கர்த்தா என்று கூற மாட்டார்கள். படைப்பவர் என்று கூறினால் எப்பொழுது படைத்தார் என்ற கேள்வி எழும். பிரஜாபிதா பிரம்மா இப்பொழுது சங்கமத்தில் தான் பிராமணர்களைப் படைக்கிறார் அல்லவா? சிவபாபாவின் படைப்போ அனாதியாக இருக்கவே இருக்கிறது. பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக்குவதற்காக தந்தை வருகிறார். இப்பொழுதோ இருப்பது பழைய சிருஷ்டி புதியதில் இருப்பவர் கள் தேவதைகள் ஆவார்கள். இப்பொழுது சூத்திரர்களை யார் தேவதையாக ஆக்குவது? இப்பொழுது நீங்கள் மீண்டும் ஆகிறீர்கள். பாபா நம்மை சூத்திரரிலிருந்து பிராமணராக மற்றும் பிராமணரி லிருந்து தேவதையாக ஆக்குகிறார் என்பதை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் தேவதையாக ஆக வேண்டும் என்பதற்காக முதலில் பிராமணராக ஆகி உள்ளீர்கள். மனித சிருஷ்டியைப் படைப்பவர் பிரம்மா ஆகிறார். அவர் மனித சிருஷ்டியின் தலைவர் ஆவார். மற்ற ஆத்மாக்களின் அவினாஷி (அழியாத) தந்தை சிவனோ இருக்கவே இருக்கிறார். இந்த எல்லா புதிய விஷயங் களையும் நீங்கள் கேட்கிறீர்கள். யார் புத்திசாலியாக இருக்கிறார்களோ அவர்கள் நல்ல முறையில் தாரணை செய்கிறார்கள். மெல்ல மெல்ல உங்களுடையதும் விருத்தி ஆகிக் கொண்டே போகும். இப்பொழுது குழந்தை களாகிய உங்களுக்கு நினைவு வந்துள்ளது. நாம் உண்மையில் தேவதைகளாக இருந்தோம். பிறகு 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் - எல்லா ரகசியங்களையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதிகமான விஷயங்களில் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்காக முக்கியமான விஷயம் தந்தை கூறுகிறார் - ஒன்று என்னை நினைவு செய்யுங்கள். மற்றொன்று தூய்மை ஆகுங்கள். சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள் மற்றும் தனக்கு சமமாக ஆக்குங்கள். எவ்வளவு சுலபமானது ! நினைவு நிலைப்பது இல்லை. அவ்வளவு தான். (நாலேஜ்) ஞானமோ மிகவும் சுலபமானது. இப்பொழுது பழைய உலகம் முடியப் போகிறது. பிறகு சத்யுகத்தில் புதிய உலகத்தில் தேவி தேவதைகள் ஆட்சி புரிவார்கள். இந்த உலகத்தில் பழையதிலும் பழையது இந்த தேவதை களின் படங்கள் ஆகும் அல்லது இவர் களுடைய அரண்மனைகள் ஆகியவை ஆகும். பழையதிலும் பழைய விஷ்வ மகாராஜா மகாராணி யாக இருந்தோம் என்று நீங்கள் கூறுவீர்கள். சரீரமோ அழிந்து போய் விடுகின்றது. மற்றபடி படங்களை வரைகிறார்கள். இங்கு ஆட்சி புரிந்து கொண்டிருந்த லட்சுமி நாராயணர் எங்கு சென்றார்கள் என்பது இப்பொழுது யாருக்காவது தெரியுமா என்ன? ராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள்? பிர்லா இவ்வளவு கோவில்கள் கட்டுகிறார். ஆனால் தெரியாமல் இருக்கிறார்கள். பணம் சேர்ந்து கொண்டே போகிறது. மேலும் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இது தேவதை களின் கிருபை ஆகும் என்று நினைக்கிறார்கள். ஒரு சிவனின் பூஜை என்பது ஒருவர் மீதான ஒரே அன்புடைய பக்தி ஆகும். ஞானம் அளிப்பவரோ ஞானக் கடலான ஒரே ஒருவர் ஆவார். மற்றது பக்தி மார்க்கம் ஆகும். ஞானத்தினால் அரைகல்பம் சத்கதி ஆகிறது.பிறகு பக்தியின் அவசியம் இருப்ப தில்லை. ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம்.இப்பொழுது பக்தி மீது பழைய உலகத்தின் மீது வைராக்கியம். பழையது இப்பொழுது முடியப் போகிறது. இதன் மீது என்ன பற்று வைப்பது. இப்பொழுதோ நாடகம் முடிவடைகிறது. நாம் வீட்டிற்குச் செல்கிறோம். இந்த குஷி இருக்கிறது. ஒரு சிலர் மோட்சம் பெறுவதோ நல்லது, பிறகு வரவே வேண்டாம் என்று நினைக்கிறார்கள். ஆத்மா நீர்க் குமிழி போல அது கடலில் கலந்து விடுகிறது என்பார்கள். இவை எல்லாமே பொய் ஆகும். நடிகர் என்றால் அவசியம் நடிப்பார். வீட்டிலேயே இருப்பவர் நடிகர் ஆகிறாரா என்ன? மோட்சம் என்பது ஆவது இல்லை. இந்த நாடகம் முடிவில்லாததாக (அனாதி) அமைக்கப் பட்டுள்ளது. இங்கு உங்களுக்கு எவ்வளவு (நாலேஜ்) ஞானம் கிடைக்கிறது. மனிதர் களினுடைய புத்தியிலோ எதுவும் இல்லை. உங்களுக்கு தான் தந்தையிடமிருந்து ஞானம் மற்றும் ஆஸ்தி பெறுவதற்கான பாகம் உள்ளது. நீங்கள் நாடகத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கிறீர்கள். புருஷார்த்தம் (முயற்சி) அவசியம் செய்ய வேண்டும். அப்படி இன்றி நாடகத்தில் இருந்தால் கிடைக்கும் என்பதல்ல. அப்படி இருந்தால் பின் உட்கார்ந்து விடுங்கள். ஆனால் கர்மம் செய்யாமல் யாரும் இருக்க முடியாது. கர்ம சந்நியாசம் என்பது நடக்க முடியாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யோக பலத்தின் ஆற்றல் மூலமாக தங்களது கர்ம இந்திரியங்களை குளிர்ந்ததாக ஆக்கிக் கொள்ள வேண்டும். வசப்படுத்தி வைக்க வேண்டும். தீய விஷயங்களைக் கேட்கவும் கூடாது. கூறவும் கூடாது. எந்த விஷயங்கள் விருப்பமில்லாதவையோ அவற்றை ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியேற்றி விட வேண்டும்.

2. தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி பெறுவதற்காக சுய தரிசன சக்கரதாரி ஆக வேண்டும். தூய்மையாக ஆகி தனக்குச் சமமாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:
முரளி என்ற (இசை) கருவியின் மூலமாக மாயாவினை சமர்ப்பணம் செய்ய வைக்கக்கூடிய முரளிதரன் ஆகுக.

நிறைய முரளிகளை நீங்கள் கேட்டுள்ளீர்கள், இப்பொழுது அப்படியொரு முரளிதரனாக ஆகுங்கள்; அதாவது மாயா சதா காலத்திற்கு சமர்ப்பணம் ஆகி விட வேண்டும். முரளி என்ற இரகசியத்தின் (இசை) கருவியை சதா வாசித்து வந்தீர்கள் என்றால், சதா காலத்திற்கு மாயா சமர்ப்பணம் ஆகிவிடும். மாயா என்பது காரணம் என்ற முக்கிய ரூபத்தில் வருகின்றது. எப்பொழுது முரளி மூலமாக காரணத்திற்கு நிவாரணம் கிடைத்து விடுகின்றதோ, அப்பொழுது சதா காலத்திற்கு மாயை முடிவடைந்து விடுகின்றது. காரணம் முடிவுக்கு வருகின்றது என்றால் மாயை முடிவுக்கு வருவதாகும்.

சுலோகன்:
அனுபவத்தின் சொரூபமாக ஆகுங்கள், அப்பொழுது முகத்தின் மூலமாக அதிர்ஷ்டம் நிறைந்த விதியின் ஜொலிப்பு தென்படும்.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக ராயல்டி (தெய்வீகத்தன்மை) மற்றும் ப்யூரிட்டி(தூய்மை) என்ற பெர்சனாலிடியை (ஆளுமையை) தாரணை செய்யுங்கள்

சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சிறப்புத்தன்மை - பவித்ரதா (தூய்மை) ஆகும். இல்லறத் தில் இருந்து கொண்டே, அபவித்ரதாவை துறவறம் செய்து இருப்பது, கனவில் கூட அபவித்திர தமான எண்ணங்களிலிருந்து முக்தி பெற்று இருப்பது என்பது உலகிற்கு சவால் விடுவதற்கான சாதனமாகும். இதுவே பிராமணர்களாகிய உங்களின் ஆன்மீக ராயல்டி மற்றும் பெர்சனாலிடி ஆகும்.