01-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! இப்போது
உங்களுடைய புத்தியில் அனைத்து ஞானத்தின் சாரமும் இருக்கிறது.
ஆகவே உங்களுக்கு படங்களின் அவசியம் கூட தேவையில்லை. நீங்கள்
தந்தையை நினைவு செய்யுங்கள், பிறரையும் நினைக்க வையுங்கள்.
கேள்வி:
கடைசி நேரத்தில் குழந்தைகளாகிய
உங்களின் புத்தியில் எந்த ஞானம் இருக்கும்?
பதில்:
அச்சமயம் புத்தியில் நாம்
வீட்டிற்குத் திரும்பி போகிறோம் என்பது இருக்கும். பிறகு
அங்கிருந்து சக்கரத்தில் வருவோம். மெல்ல மெல்ல படியில்
இறங்குவோம். பிறகு ஏறும் கலையில் அழைத்துச் செல்ல பாபா வருவார்.
முதலில் நாம் சூரிய வம்சத்தினராக இருந்தோம். பிறகு சந்திர
வம்சத்தினர்..... என அறிகிறீர்கள். இதில் படங்களின் அவசியம்
இல்லை.
ஓம் சாந்தி.
குழந்தைகளே! ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கிறீர்களா? 84 பிறவியின்
சக்கரம் புத்தியில் இருக்கிறதா? அதாவது தன்னுடைய பலவிதமான
பிறவிகளின் ஞானம் இருக்கிறதா? விராட ரூபத்தின் சித்திரம் கூட
இருக்கிறது அல்லவா! நாம் எவ்வாறு 84 பிறவிகளை எடுக்கிறோம்
என்பதைப் பற்றிய ஞானம் குழந்தைகளிடம் இருக்கிறது. முதன் முதலில்
மூல வதனத்திலிருந்து தேவி தேவதா தர்மத்தில் வருகிறார்கள். இந்த
ஞானம் புத்தியில் இருக்கிறது. இதில் எந்த ஒரு படத்தின்
அவசியமும் இல்லை. நாம் எந்த ஒரு படத்தையும் நினைக்க
வேண்டியதில்லை. கடைசியில் நாம் ஆத்மா மூல வதனத்தில் வசிக்கக்
கூடியவர்கள், இங்கே நம்முடைய பாகம் இருக்கிறது என்பது மட்டும்
இருக்கும். இதை மறக்கக் கூடாது. இது மனித சிருஷ்டி, சக்கரத்
தினுடைய விஷயங்கள் ஆகும். மேலும் மிகவும் எளிதாகும். இதில்
படங்களின் அவசியம் இல்லை. ஏனெனில் இவை பக்தி மார்க்கத்தின்
விஷயங்களாகும். ஞான மார்க்கத்தில் இருப்பதோ கல்வி. படிப்பில்
படங்களின் அவசியமே இல்லை. இந்த படங்களில் சில திருத்தங்கள்
மட்டும் செய்துள்ளனர். எப்படி யென்றால் கீதையின் பகவான்
கிருஷ்ணர் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் சிவன் என்று
கூறுகிறோம். இதுவும் புத்தியால் புரிந்துக் கொள்ள வேண்டிய
விஷயம் ஆகும். நாம் 84 பிறவி சக்கரத்தில் வந்துவிட்டோம் என்ற
ஞானம் புத்தியில் இருக்கிறது. இப்போது நாம் தூய்மையாக வேண்டும்.
தூய்மையாகி, பிறகு புதியதாக சக்கரத்தில் சுழல ஆரம்பிப்போம்.
இந்த சாரத்தை புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். பாபாவின்
புத்தியில் உலகத்தின் வரலாறு புவியியல் மற்றும் 84 பிறவிகளின்
சக்கரம் எப்படி சுழல்கிறதோ அவ்வாறே உங்களுடைய புத்தி யிலும்
முதலில் நாம் சூரிய வம்சத்திலும், பிறகு சந்திர
வம்சத்தினராகவும் மாறுகிறோம் என்பது இருக்கிறது. படங்களின்
அவசியம் இல்லை. மனிதர்களுக்குப் புரிய வைப்பதற்காக மட்டுமே இது
உருவாக்கப்பட்டிருக்கிறது. ஞான மார்க்கத்தில் மன்மனாபவ என்று
மட்டுமே பாபா கூறுகின்றார். நான்கு கைகளை உடைய படம் இருக்கிறது.
இராவணனின் சித்திரம் இருக்கிறது. இது அனைத்தும் புரிய
வைப்பதற்காக காண்பிக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய புத்தியில்
உண்மையான ஞானம் இருக்கிறது. நீங்கள் படங்கள் இல்லாமல் கூட
புரிய வைக்கலாம். உங்களுடைய புத்தியில் 84 பிறவியின் சக்கரம்
இருக்கிறது. படங்கள் மூலமாக எளிதாக்கி புரிய வைக்கப்படுகிறது.
அவ்வளவு தான்! இவைகளின் அவசியம் இல்லை. முதலில் நாம் சூரிய
வம்சத்தினராக இருந்தோம், பிறகு சந்திர வம்சத்தினரானோம் என்பது
புத்தியில் இருக்கிறது. அங்கே நிறைய சுகம் இருக்கும். அதற்கு
சொர்க்கம் என்று பெயர். இந்த சித்திரங்களில் புரிய
வைக்கிறார்கள். கடைசியில் இந்த ஞானம் புத்தியில் இருக்கும்.
இப்போது நாம் செல்கிறோம், திரும்ப சக்கரத்தில் வருவோம்.
ஏணிப்படியில் புரிய வைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு எளிதாகி
விடும். நாம் எப்படி ஏணிப்படியில் இறங்கு கிறோம், பிறகு பாபா
ஏறும் கலையில் அழைத்துச் செல்கிறார் என்பது பற்றிய முழு ஞானம்
உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நான் உங்களுக்கு இந்த
சித்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கிறேன் என பாபா
கூறுகின்றார். நாடக சக்கரத்தில் கூட இது 5000 வருடங்களின்
சக்கரம் என புரிய வைக்கலாம். ஒரு வேளை லட்சக்கணக்கான வருடங்கள்
என்றால் மக்கள் தொகை அதிகரிக்கிறது. கிறிஸ்துவர்களுடையது 2000
வருடங்கள் என காண்பிக்கிறார்கள். இதில் எவ்வளவு மனிதர்கள்
இருக்கிறார்கள். 5000 வருடத்தில் எவ்வளவு மனிதர்கள்
இருக்கிறார்கள். இந்த கணக்கு முழுவதும் நீங்கள்
தெரிவிக்கிறீர்கள். சத்யுகத்தில் தூய்மையாக இருக்கும்
காரணத்தால் குறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள். இப்போது எவ்வளவு
நிறைய இருக்கிறார்கள். லட்சக்கணக்கான வருடங்கள் என்றால், மக்கள்
தொகை கணக்கிட முடியாத ஆகிவிடும்.. கிறிஸ்தவர்களுடன் ஒப்பிட்டு
மக்கள் தொகை கணக்கு எடுக்கிறார்கள் அல்லவா! இந்துக் களின்
எண்ணிக்கை குறைவாக காண்பிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் நிறைய
உருவாகி விட்டார்கள். யார் நன்கு புத்தி சாலி குழந்தைகளோ
படங்கள் இல்லாமல் கூட புரிய வைக்கலாம். எவ்வளவு மனிதர்கள் இருக்
கிறார்கள் என சிந்தியுங்கள். புது உலகத்தில் எவ்வளவு குறைவான
மனிதர்கள் இருப்பார்கள். இதுவோ பழைய உலகம். இதில் இவ்வளவு
மனிதர்கள் இருக்கிறார்கள்? பிறகு புது உலகம் எப்படி உருவாகிறது?
யார் உருவாக்குகிறார்கள்? இதை பாபா தான் புரிய வைக்கிறார். அவரே
ஞானக்கடல் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த 84 பிறவிகளின்
சக்கரத்தை மட்டும் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது
நாம் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குப் போகிறோம் என்றால்
உள்ளுக்குள் மகிழ்ச்சி இருக்கும் அல்லவா? சத்யுகத்தில்
துக்கப்படுவதற்கான விஷயம் எதுவும் இல்லை. கிடைக்காத பொருள்
என்று அதற்காக முயற்சி செய்ய வேண்டியது இல்லை. இங்கே முயற்சி
செய்ய வேண்டியிருக்கிறது. இந்த இயந்திரம் வேண்டும், இது
வேண்டும்..... அங்கேயோ அனைத்து சுகமும் ஆஜராகி இருக்கிறது.
யாராவது மகாராஜா என்றால், அவர்களிடம் அனைத்து சுகமும்
அமைந்திருக்கும். ஏழைகளிடம் அனைத்து சுகமும் இருக்காது. ஆனால்
இதுவோ கலியுகம் ஆகும். எனவே அனைத்து நோய்களும் இருக்கிறது.
இப்போது நீங்கள் புது உலகத்திற்குச் செல்வதற்காக முயற்சி
செய்கிறீர்கள். இங்கே தான் சொர்க்கம் - நரகம் உருவாகிறது.
இந்த சூட்சும வதனத்தின் இனிய காட்சிகள் கூட பொழுது
போக்கிற்காகவே ஆகும். கர்மாதீத் நிலையை அடையும் வரை நேரம்
கடத்துவதற்காக இந்த விளையாட்டுகள் இருக்கின்றன. கர்மாதீத் நிலை
வந்து விடும், அவ்வளவு தான். ஆத்மாக்களாகிய நாம் இப்போது 84
பிறவிகள் முடித்து விட்டோம். இப்போது நாம் வீட்டிற்குப்
போகிறோம் என்ற நினைவு உங்களுக்கு இருக்கும். பிறகு வந்து
சதோபிரதானமான உலகத்தில் சதோபிரதானமான பாகத்தில் நடிப்போம்.
இந்த ஞானத்தை புத்தியில் பதித்து விட்டீர்கள். இதில் படங்கள்
போன்றவைகளின் அவசியம் இல்லை. வக்கீல் எவ்வளவு படிக்கிறார்கள்.
வக்கீலாகி விட்டனர். அவ்வளவு தான், என்ன பாடம் படித்தார் களோ
அது முடிந்தது. பலன் கிடைக்கிறது. நீங்களும் படித்து பிறகு
இராஜ்யம் செய்வீர்கள். அங்கே ஞானத்தின் அவசியம் இல்லை. இந்த
படங்களில் கூட சரி தவறு என்ன என்பது உங்களின் புத்தியில்
இருக்கிறது. லஷ்மி நாராயணன் யார், இந்த விஷ்ணு யார் என்பதை பாபா
புரிய வைக்கிறார். விஷ்ணுவின் படத்தில் மனிதர்கள் குழம்பிப்
போகிறார்கள். புரியாமல் செய்யும் பூஜை கூட வீணாகி விடுகிறது.
எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. விஷ்ணுவையும் புரிந்துக்
கொள்ளா ததைப் போலவே லஷ்மி நாராயணனையும் புரிந்துக் கொள்ளவில்லை.
பிரம்மா விஷ்ணு சங்கர ரையும் புரிந்துக் கொள்ளவில்லை. பிரம்மாவோ
இங்கே இருக்கிறார். இவர் தூய்மையாகி சரீத்தை விட்டு விட்டுச்
சென்று விடுவார். இந்த பழைய உலகத்தில் இருந்து வைராக்கியம்
ஏற்படுகிறது. இங்கே கர்ம பந்தனம் துக்கம் கொடுக்கக் கூடியது
ஆகும். தன்னுடைய வீட்டிற்குச் செல்லுங்கள் என பாபா இப்பொழுது
கூறுகின்றார். அங்கே துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது.
முதலில் உங்களுடைய வீட்டிலிருந்தீர்கள். பிறகு இராஜ்யத்திற்கு
வந்தீர்கள். இப்போது தூய்மையாக்கு வதற்காக மீண்டும் பாபா
வந்திருக் கிறார். இச்சமயம் மனிதர்களின் உணவு பழக்கங்கள்
எவ்வளவு அழுக்காக இருக்கிறது? என்னென்ன பொருட் களைச்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கே தேவதைகள்
இப்படிப்பட்ட அழுக்கான பொருட்களை சாப்பிட மாட்டார்கள். பக்தி
மார்க்கம் எப்படி இருக்கிறது பாருங்கள். மனிதர்களைக் கூட
பலியிடுகிறார்கள். இவ்வாறு நாடகம் உருவாக்கப் பட்டிருக்கிறது.
பழைய உலகம் மீண்டும் நிச்சயமாக புதியதாக வேண்டும். நாம்
தூய்மையாக மாறிக் கொண்டிருக்கிறோம் என இப்போது நீங்கள்
அறிகிறீர்கள். இதை புத்தி புரிந்துக் கொள்கிறது அல்லவா? இதில்
சித்திரம் இல்லை என்றாலும் நல்லது. இல்லையெனில் மனிதர்கள்
நிறைய கேள்வி கேட்கிறார்கள். பாபா 84 பிறவிகளின் சக்கரத்தைப்
புரிய வைத்திருக்கிறார். நாம் தான் சூரிய வம்சத்தினராக, சந்திர
வம்சத்தினராக வைசிய வம்சத்தினராக மாறுகிறோம், இத்தனை பிறவிகள்
எடுக்கிறோம் என்பதெல்லாம் புத்தியில் இருக்க வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள் சூட்சும வதனத்தின் ரகசியத்தையும்
புரிந்துக் கொள்கிறீர்கள். தியானத்தில் சூட்சும வதனத்திற்குச்
செல்கிறீர்கள். ஆனால் இதில் யோகமும் இல்லை, ஞானமும் இல்லை. இது
ஒரு பழக்கம் மட்டுமே! எப்படி ஆத்மா அழைக்கப்படுகிறது, ஆத்மா
வரும் போது அழுகிறது. நாங்கள் பாபா கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை
என பச்சதாபப்படுகிறது என்பதெல்லாம் புரிய வைக்கப்
பட்டிருக்கிறது. இது அனைத்தும் முயற்சி செய்ய வேண்டும். தவறு
செய்யக் கூடாது என குழந்தைகளுக்குப் புரிய வைப்பதற்காகவே.
குழந்தைகள் எப்போதும் தனது நேரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்த
வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வீணாக்க வில்லை
யென்றால் மாயையும் தவறு செய்ய வைக்காது. குழந்தைகளே, நேரத்தை
வீணாக்காதீர்கள் என பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கிறது.
பலருக்கு வழி காண்பிப்பதற்கு மகாதானி ஆகுங்கள். பாபாவை
நினைத்தால் விகர்மங்கள் வினாசம் ஆகும். யார் வந்தாலும்
அவர்களுக்கு 84 பிறவியின் சக்கரத்தைப் பற்றி விளக்கமளியுங்கள்..
உலகத்தின் வரலாறு புவியியல் எப்படி மீண்டும் நடக்கிறது?
சுருக்கமாக முழு சக்கரமும் புத்தியில் இருக்க வேண்டும்.
இப்போது நாம் இந்த அழுக்கான உலகத்திலிருந்து விடுபடுகிறோம்
என்ற மகிழ்ச்சி குழந்தை களுக்கு இருக்க வேண்டும். சொர்க்கமும்
நரகமும் இங்கே தான் இருக்கிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள்.
யாருக்கு நிறைய பணம் இருக்கிறதோ அவர்கள் சொர்க்கத்தில்
இருப்பதாக நினைக்கிறார்கள். நல்ல கர்மம் செய்திருக்கிறார்கள்.
ஆகவே சுகம் கிடைக்கிறது. இப்போது நீங்கள் மிகவும் நல்ல
கர்மங்களை செய்கிறீர்கள், அதனால் 21 பிறவிகளுக்கு சுகம்
கிடைக்கிறது. அவர்களோ ஒரு பிறவியை எடுத்து நாம் சொர்க்கத்தில்
இருக்கிறோம் என நினைக்கிறார்கள், உங்களுடையது 21 பிறவிகளுக்கான
சுகம் என பாபா கூறுகின்றார். அனைவருக்கும் வழியை காட்டிக்கொண்டே
இருங்கள் என பாபா கூறுகிறார். பாபாவின் நினைவினால் தான் நோயற்ற
வராகலாம், மேலும் சொர்கத்திற்கு அதிபதியாகி விடலாம்.
சொர்க்கத்தில் இராஜ்யம் இருக்கிறது. அதையும் நினையுங்கள்.
இராஜ்யம் இருந்தது. இப்போது இல்லை. இது பாரதத்தின் விஷயம் ஆகும்.
மற்ற அனைத்தும் உப கதைகள் ஆகும். கடைசியில் அனைவரும் சென்று
விடுவார்கள். பிறகு நாம் புது உலகில் வருவோம் இப்போது இதை
புரிய வைப்பதில் சித்திரங்களின் அவசியம் இல்லை. புரிய
வைப்பதற்காக மட்டுமே மூலவதனம் மற்றும் சூட்சும வதனத்தை காண்பிக்
கிறார்கள். மற்றபடி பக்தி மார்க்கத்தினர் இந்த சித்திரங்களை
உருவாக்கி யிருக்கிறார்கள் என புரிய வைக்கப்பட்டிருக்கிறது.
எனவே நாமும் சில திருத்தங்கள் செய்து உருவாக்க
வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் நாத்திகராகி
விட்டீர்கள் என்று கூறுவார்கள். ஆகவே திருத்தங்கள் செய்து
உருவாக்கப் பட்டிருக்கிறது. பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கர்
மூலமாக அழிவு..... உண்மையில் இதுவும் நாடகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியாது.
விஞ்ஞானிகள் தனது புத்தியினால் இது அனைத்தை யும்
உருவாக்குகிறார்கள். இந்த அணு குண்டுகளை உருவாக்காதீர்கள் என
எவ்வளவு தான், யார் சொன்னாலும், யாரிடம் நிறைய இருக்கிறதோ
அவர்கள் கடலில் போட்டுவிட்டால் யாரும் உருவாக்க மாட்டார்கள்.
அவர்கள் வைத்திருந்தால் நிச்சயம் மற்றவர்களும் உருவாக்குவார்கள்.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இந்த சிருஷ்டி அழியத்தான்
வேண்டும் என்று அறிகிறீர்கள். நிச்சயம் போர் நடக்கும். அழிவு
ஏற்படும். பிறகு நீங்கள் உங்கள் இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள்.
குழந்தைகளே! அனைவருக்கும் நன்மை செய்பவராக ஆகுங்கள் என பாபா
கூறுகின்றார்.
இனிமையான குழந்தைகளே, தங்களுடைய அனைத்தையும் பதிகளுக்கெல்லாம்
பதி என்ற பெயரில் (பாபாவிடம்) அர்ப்பணியுங்கள் என
குழந்தைகளுக்கு உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கு வதற்காக பாபா
ஸ்ரீமத் அளிக்கிறார். சிலருடையது மண்ணோடு போய்விடும்,
சிலருடையதை இராஜா எடுத்துக் கொள்வார்...... பாபா கூறுகின்றார்-
குழந்தைகளே! இதில் செலவிடுங்கள். அதாவது ஆன்மீக மருத்துவமனை,
பல்கலைகழகத்தை திறந்தால் பலருக்கு நன்மை நடக்கும். பாபாவின்
பெயரில் செலவிடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு
(பிரதிபலன்) திரும்ப கிடைக்கிறது. இந்த உலகமே முடியப்போகிறது.
ஆகவே பதிக்களுக்கெல்லாம் பதி பெயரில் எவ்வளவு முடியுமோ
அர்ப்பணம் செய்யுங்கள். சிவபாபா (கணவர்) பதி அல்லவா? பக்தி
மார்க்கத் தில் கூட கணவரின் பெயரில் செய்தனர். இப்போதோ
நேரடியாக இருக்கிறார். கணவரின் (சிவபாபா) பெயரில் பெரிய பெரிய
பல்கலைகழகங்களை திறந்துக் கொண்டே சென்றால் நிறைய பேருக்கு நன்மை
நடக்கும். 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியம் பெறலாம்.
இல்லையென்றால் இந்த பணம், செல்வம் அனைத்தும் அழிந்து போகும்.
பக்தி மார்க்கத்தில் அழிவதில்லை. இப்போது அழியப் போகிறது.
நீங்கள் செலவு செய்தால் உங்களுக்குத் தான் திரும்ப கிடைக்கும்.
கணவரின் பெயரில் அனைவருக்கும் நன்மை செய்தால் 21 பிறவிகளுக்கு
சொத்து கிடைக்கும். எவ்வளவு நன்கு புரிய வைக்கிறார். யார்
யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்கள் செலவு செய்துக்
கொண்டே இருக்கிறார்கள். தங்களுடைய வீட்டையும் பார்த்துக் கொள்ள
வேண்டும். இவருடைய (பாபா) பாகமும் இப்படித் தான் இருந்தது.
ஒரேயடியாக வேகமாக போதை ஏறிவிட்டது. பாபா இராஜ்ய பதவியைக்
கொடுக்கிறார் என்றால், இந்த அற்பமான ஸ்தூல செல்வம் எதற்கு,
நீங்கள் அனைவரும் இராஜ்ய பதவி அடைவதற்காக அமர்ந்திருக்கிறீர்கள்
என்றால் பின்பற்றுங்கள். இவர் எப்படி அனைத்தையும்
விட்டுவிட்டார் என அறிகிறீர்கள். போதை ஏறிவிட்டது. ஆகா இராஜ்யம்
கிடைக்கிறது. தந்தைக்கு அல்லா கிடைத்தார் என்றால்,
பங்குதாரருக்கும் இராஜ்யம் அளித்து விட்டார். இராஜ்யம் இருந்தது
குறைவில்லை. நல்ல செழிப்பான வேலை (தொழில்) இருந்தது. இப்போது
உங்களுக்கு இந்த இராஜ்யம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எனவே
பலருக்கு நன்மை செய்யுங்கள். முதலில் பட்டி உருவாகியது. சிலர்
உறுதியாகி தயாராகினர். சிலர் அரைகுறை யாகவே இருந்து விட்டனர்.
அரசாங்கம் நோட்டுக்களை அச்சடித்தனர். பிறகு சரியாக இல்லை
யென்றால், அரசாங்கமே எரிக்க வேண்டியதாக இருக்கிறது.
முன்பெல்லாம் வெள்ளி நாணயங்கள் வழக்கத்தில் இருந்தன. தங்கம்
மற்றும் வெள்ளி நிறைய இருந்தது. இப்போது என்னவாகிக்
கொண்டிருக்கிறது. சிலருடையதை இராஜா சாப்பிடுகிறார், சிலருடையதை
கொள்ளைக் காரர்கள் சாப்பிடுகின்றனர், கொள்ளைக் காராகள் கூட
எவ்வளவு பேர் இருக்கிறார்கள். பஞ்சம் ஏற்படும். இது இராவண
இராஜ்யம் ஆகும். சத்யுகத்திற்கு இராம இராஜ்யம் என்று பெயர்.
உங்களை இவ்வளவு உயர்ந்தவராக மாற்றினேன். பிறகு எப்படி
ஏழையானீர்கள் என பாபா கேட்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு
இவ்வளவு ஞானம் கிடைத்திருக்கிறது என்றால், மகிழ்ச்சி ஏற்பட
வேண்டும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அதிகரித்துக் கொண்டே போகும்.
எந்தளவு யாத்திரையில் அருகில் போதும்போது அவ்வளவு மகிழ்ச்சி
ஏற்படும். சாந்திதாமம் சுகதாமம் எதில் இருக்கிறது என
அறிகிறீர்கள். வைகுண்டத்தின் மரம் தெரிந்துக் கொண்டிருக்கிறது.
அவ்வளவு தான்! இப்போது அங்கு போய் சேர்ந்தே விட்டோம். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தனது நேரத்தைப் பயன்படுத்துவதில் கவனம் வைக்க வேண்டும். மாயை
தவறு செய்வித்து விடக் கூடாது. அதற்காக மகாதானியாக இருந்து
பலருக்கும் வழிகாட்டுவதில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
2. தனது உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள பாபாவிடம்
அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆன்மீகப் பல்கலைக் கழகம்
திறக்க வேண்டும்.
வரதானம்:
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை வெளிப்படுத்த கூடிய சுபமான
மற்றும் சிறந்த கர்மயோகி ஆவீர்களாக.
எப்படி வலது கரத்தின் மூலமாக எப்பொழுதும் சுபமான மற்றும்
சிறந்த செயல்கள் செய்கிறீர்கள். அதே போல வலது கரங்களாகி
இருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுதும் சுபமான மற்றும்
சிறந்த செயல்களை செய்பவர் ஆகுங்கள். உங்களது ஒவ்வொரு செயலும்
உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையை வெளிப்படுத்த கூடியதாக
இருக்கட்டும். ஏனெனில் செயல்கள் தான் எண்ணங்கள் அல்லது
வார்த்தைகளை கண்கூடான நிரூபணத்தில் ரூபத்தில் தெளிவுபடுத்த
கூடியதாக இருக்கும். செயல்களை எல்லோரும் பார்க்க முடியும்.
செயல்கள் மூலமாக அனுபவம் செய்ய முடியும். எனவே ஆன்மீக பார்வை
மூலமாகட்டும், தங்களது மகிழ்ச்சியில் ஆத்மீகம் நிறைந்த
முகத்தின் மூலமாக ட்டும் தந்தையை வெளிப்படுத்துங்கள். இது கூட
கர்மமே ஆகும்.
சுலோகன்:
ஆத்மீகம் என்பதன் பொருளாவது - கண்களில் தூய்மையின் ஜொலிப்பு
மற்றும் வாயில் தூய்மையின் புன்முறுவல் இருக்கட்டும்.
அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த
சேவைக்கு கருவி ஆகுங்கள்.
எப்படி தற்காலத்தில் சூரியனின் சக்தியை சேமிப்பு செய்து நிறைய
காரியங்களை பயனுள்ளதாக செய்கிறார்கள். அதே போல எண்ணங்களின்
சக்தியை சேமிப்பு செய்தீர்கள் என்றால் மற்றவர்களுக் குள்ளும்
பலத்தை நிரப்ப முடியும். அநேக காரியங்களை பயனுள்ளதாக
செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள். தைரியம் இல்லாதவர்களுக்கு
வார்த்தைகளின் கூட கூடவே சிறந்த எண்ணங்களின் சூட்சும சக்தி
மூலமாக தைரியம் உடையவர்களாக ஆக்குவது, இதுவே நிகழ்காலத்தின்
அவசியம் ஆகும்.