01-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தைக்கு குழந்தைகளாகிய நீங்கள் தான் பிடித்தமானவர்கள் (அன்பானவர்கள்), தந்தை உங்களைத்தான் முன்னேற்றுவதற்கான ஸ்ரீமத் (உயர்ந்த வழி) கொடுக்கிறார், எப்போதும் ஈஸ்வரிய வழிப்படி நடந்து தன்னை தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

கேள்வி:
உலகில் அமைதியின் ஸ்தாபனை எப்போது மற்றும் எந்த விதிப்படி நடக்கிறது?

பதில்:
உலகில் அமைதியானது மகாபாரதச் சண்டைக்குப் பிறகு தான் ஏற்படும் என நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதற்காக நீங்கள் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். தனது கர்மங் களை வென்ற நிலையை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானத்தை சிந்தனை செய்து தந்தையின் நினைவின் மூலம் முழுமையாக தூய்மை அடைய வேண்டும், அப்போது இந்த சிருஷ்டியில் மாற்றம் ஏற்படும்.

பாடல்:
இன்று இருளில் இருக்கின்றான் மானிடன். . .

ஓம் சாந்தி.
இந்த பாடல் பக்தி மார்க்கத்தில் பாடப்பட்டுள்ளது. நாங்கள் இருளில் இருக்கிறோம், இப்போது ஞானத்தின் மூன்றாம் கண்ணைக் கொடுங்கள் என சொல்கின்றனர். ஞானக்கடலிட மிருந்து ஞானத்தை வேண்டுகின்றனர். மற்றபடி அஞ்ஞானம் நிறைந்துள்ளது. கலியுகத்தில் அனைவரும் அஞ்ஞானத்தின் அசுர தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கும்பகர்ணர்கள் என சொல்லப் படுகிறது. ஞானம் மிகவும் சுலபமானது என தந்தை சொல்கிறார். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு வேத சாஸ்திரங்கள் முதலானவைகளை படிக்கின்றனர், ஹடயோகம் செய்கின்றனர், குரு முதலானவர்களைப் பின்பற்றுகின்றனர். இப்போது அவர்கள் அனைவரையும் விட்டு விட வேண்டும், ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. தந்தைதான் இராஜ்யத்தை கொடுப்பார். மனிதர்கள், மனிதர்களுக்கு கொடுக்க முடியாது. ஆனால் அதைத்தான் காகத்தின் எச்சத்திற்குச் சமமான சுகம் என்று சன்னியாசிகள் சொல்கின்றனர், ஏனெனில் அவர்கள் வீடு வாசலை விட்டு காட்டிற்கு ஓடிச் சென்று விடு கின்றனர். இந்த ஞானத்தை ஞானக் கடலாகிய தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது. இந்த இராஜயோகத்தை பகவான்தான் கற்பிக்கிறார். மனிதர்கள், மனிதர்களைத் தூய்மையாக்க முடியாது. பதித பாவனர் (தூய்மை யற்றவர்களைத் தூய்மைப்படுத்துபவர்) ஒரே ஒரு தந்தையாவார். மனிதர்கள் பக்தி மார்க்கத்தில் எவ்வளவு சிக்கிக் கொண்டிருக்கின்றனர். பிறவி பிறவிகளாக பக்தி செய்தபடி வந்துள்ளனர். ஸ்நானம் செய்வதற்காகச் செல்கின்றனர். கங்கையில் மட்டும் ஸ்நானம் செய்வதில்லை. எங்காவது நீர் நிறைந்த குளம் முதலானவற்றைப் பார்த்தார்கள் என்றால் அவைகளையும் தூய்மை யாக்கக் கூடியது என புரிந்து கொள்கின்றனர். இங்கும் கூட கௌமுக் (பசுவின் வாய்) இருக்கிறது. நீர் வீழ்ச்சியிலிருந்து நீர் வருகிறது. கிணற்றிலிருந்து நீர் வந்தால் அதனை பதித பாவனி கங்கை என சொல்வதில்லை. இதுவும் தீர்த்தம் என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். பல மனிதர்கள் பாவனையோடு அங்கே சென்று ஸ்நானம் முதலானவை செய்கின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஞானம் கிடைத்துள்ளது. நீங்கள் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வ தில்லை. தம்முடைய தேக அகங்காரம் நிறைய உள்ளது. நாங்கள் இவ்வளவு சாஸ்திரங்கள் படித்திருக்கிறோம்...! படித்துள்ள இவையனைத்தையும் மறந்து விடுங்கள் என தந்தை கூறுகிறார். இப்போது இந்த அனைத்து விசயங்கள் குறித்தும் மனிதர்களுக்கு எப்படி தெரிய வரும்? ஆகையால் இப்படிப்பட்ட விசயங்களை எழுதி ஆகாய விமானத்திலிருந்து போடுங்கள் என பாபா சொல்கிறார். உலகில் அமைதி எப்படி ஏற்படும்? என்று இன்றைய நாட்களில் கூறுகின்றனர் - யாராவது வழி கூறினார்கள் என்றால் அவர்களுக்கு பரிசு கிடைத்தபடி இருக்கிறது. இப்போது அவர்கள் அமைதியை ஸ்தாபனை செய்ய முடியாது. அமைதி எங்கே? பொய்யான பரிசுகள் கொடுத்தபடி இருக்கின்றனர்.

உலகில் அமைதியோ சண்டைக்குப் பிறகு ஏற்படும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த சண்டை எந்த சமயத்திலும் தொடங்கலாம். அப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளாகிய உங்களால்தான் தாமதம். குழந்தைகளாகிய நீங்கள் கர்மாதீத நிலை அடையும் போதுதான். அதில் தான் முயற்சி தேவைப்படுகிறது. தந்தை சொல்கிறார் - என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், இல்லற விசயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல் தூய்மையாகுங்கள் மற்றும் சிருஷ்டியின் முதல், இடை, கடைசியின் ஞானத்தை சிந்தனை செய்தபடி இருங்கள். நாடகத்தின்படி கல்பத்திற்கு முன்பு போல உலகில் அமைதியின் ஸ்தாபனை ஏற்பட்டு விடும் என்று நீங்கள் எழுதவும் முடியும். உலகில் அமைதி சத்யுகத்தில் தான் ஏற்படும் என்பதையும் நீங்கள் புரிய வைக்க முடியும். இங்கே கண்டிப்பாக அசாந்தி தான் இருக்கும். ஆனால் பலர் நீங்கள் சொல்வதன் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் சொர்க்கத்தில் வரவே போவதில்லை எனும்போது ஸ்ரீமத்படி நடக்கவும் மாட்டார்கள். இங்கும் கூட பலர் தூய்மை யாக இருக்க முடிவதில்லை. உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவானின் வழி உங்களுக்கு கிடைக் கிறது. யாருடைய நடத்தையாவது நன்றாக இல்லையென்றால் உனக்கு ஈஸ்வரன் நல்ல வழி காட்டட்டும் என சொல்கிறார்கள் அல்லவா. இப்போது நீங்கள் ஈஸ்வரிய வழிப்படி நடக்க வேண்டும். நீங்கள் 63 பிறவிகள் விஷக்கடலில் ஏமாற்றத்தை அடைந்தீர்கள் என தந்தை சொல்கிறார். குழந்தைகளிடம் பேசுகிறார். குழந்தைகளைத்தான் தந்தை முன்னேற்றுவார் அல்லவா. முழு உலகத்தை எப்படி முன்னேற்றுவார். குழந்தைகளிடமிருந்து புரிந்து கொள்ளுங்கள் என வெளியிலிருந்து வருபவர்களுக்கு தந்தை சொல்வார். தந்தை வெளியாட்களிடம் பேச முடியாது. தந்தைக்கு குழந்தைகளைத்தான் பிடிக்கும். மாற்றாந்தாய் குழந்தைகளைப் பிடிக்காது. லௌகிக தந்தை கூட நல்ல குழந்தைகளுக்குத்தான் பணம் கொடுப்பார். அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. யார் என்னுடையவர்கள் ஆகின்றனரோ அவர்களுக்குத்தான் நான் ஆஸ்தி கொடுப்பேன் என தந்தையும் சொல்கிறார். யார் என்னுடையவர்களாக ஆவதில்லையோ அவர்கள் (ஞானத்தை) ஜீரணம் செய்ய முடியாது. ஸ்ரீமத்படி நடக்க மாட்டார்கள். அவர்கள் பக்தர்கள். (பிரம்மா) பாபா நிறைய பார்த்திருக்கிறார். யாராவது பெரிய சன்னியாசி வருகிறார் என்றால் பலர் அவருடைய சீடர்களாக ஆகின்றனர். நிதி திரட்டுவார்கள். தம் தம்முடைய சக்திக்குத் தக்கவாறு நிதி கொடுப்பார்கள். இங்கே நிதி திரட்டச் சொல்லி தந்தை சொல்வதில்லை. இங்கே யார் விதை விதைக்கின்றனரோ அவர்கள் 21 பிறவிகளுக்கு அதனுடைய பலனை அடைவார்கள். மனிதர்கள் தானம் செய்தார்கள் என்றால் ஈஸ்வரன் பெயரால் நாம் செய்கிறோம் என புரிந்து கொள்கின்றனர். ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் என்று சொல்கின்றனர், அல்லது கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் என சொல்கின்றனர். கிருஷ்ணருடைய பெயரை ஏன் எடுக்கிறார்கள்? ஏனென்றால் அவர் கீதையின் பகவான் என புரிந்து கொள்கின்றனர். ஸ்ரீராதைக்கு அர்ப்பணம் என ஒரு போதும் சொல்வதில்லை. ஈஸ்வரா அல்லது கிருஷ்ணா அர்ப்பணம் என்று சொல்கின்றனர். பலனைக் கொடுப்பவர் ஈஸ்வரன்தான் என்று தெரிந்திருக்கின்றனர். யாராவது செல்வந்தரின் வீட்டில் பிறவி எடுத்தால் முற்பிறவியில் நிறைய தான புண்ணியங்கள் செய்திருப்பார், அதனால் இப்படி ஆகியுள்ளார் என்று சொல்கின்றனர் அல்லவா. ராஜாவாகவும் ஆக முடியும். ஆனால் அது அல்ப காலத்திற்கான காகத்தின் எச்சத்திற்குச் சமமான சுகம். ராஜாக்களைக் கூட சன்னியாசிகள் சன்னியாசம் செய்விக்கின்றனர், அப்போது பெண் என்பவள் பாம்பு போன்றவள் என்று சொல் கின்றனர், ஆனால் திரௌபதியோ துச்சாதனன் என்னை மான பங்கப்படுத்துகிறார் என (பகவானை) கூப்பிட்டார். இப்போதும் கூட அபலைகள் எவ்வளவு கூப்பிடுகின்றனர் - என் மானத்தைக் காப்பாற்றுங்கள் என்று. பாபா இவர் என்னை மிகவும் அடிக்கிறார். விஷத்தைக் கொடு இல்லா விட்டால் அடிப்பேன் என்று சொல்கிறார். பாபா, இந்த பந்தனங் களிலிருந்து விடுவியுங்கள். பந்தனம் விடுபடத்தான் போகிறது, பிறகு 21 பிறவிகளுக்கு ஒருபோதும் மானத்தை இழக்க மாட்டீர்கள். அங்கே விகாரமே இருக்காது. இந்த மரண லோகத்தில் இது இறுதிப் பிறவியாகும். இது விஷம் நிறைந்த உலகமாகும்.

மற்றொரு விஷயத்தை தந்தை புரிய வைக்கிறார் - இந்த சமயம் மனிதர்கள் எவ்வளவு புரியாத வர்களாக ஆகி விட்டுள்ளனர். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று சொல்கின்றனர். ஆனால் சொர்க்கம் எங்கே இருக்கிறது? இது நரகமாக உள்ளது. சொர்க்க வாசி ஆகினார் என்றால் கண்டிப்பாக நரகத்தில் இருந்திருக்கிறார். ஆனால் யாருக்காவது நேரடியாக நீங்கள் நரகவாசி என்று சொன்னீர்கள் என்றால் கோபத்தில் வந்து ஆத்திரப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் எழுத வேண்டும். இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்றால் நீங்கள் நரகவாசியாக உள்ளீர்கள் என்று தானே அர்த்தம். நீங்கள் உண்மையிலும் உண்மையான சொர்க்கத்திற்குச் செல்வதற்கான யுக்தியை நாங்கள் சொல்கிறோம். இந்த பழைய உலகம் இப்போது முடியவுள்ளது. இந்த சண்டைக்குப் பிறகு 5 ஆயிரம் வருடத்திற்கு முன்பு போல உலகில் அமைதி ஏற்பட உள்ளது என செய்தித்தாள்களில் வெளியிடுங்கள். அங்கே ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. பிறகு அவர்கள் சொல்கின்றனர் - அங்கும் கூட கம்சன், ஜராசந்தன் முதலான அசுரர்கள் இருந்தனர், திரேதாவில் இராவணன் இருந்தார். இப்போது அவர்களிடம் யார் மண்டையை உடைத்துக் கொள்வது? ஞானம் மற்றும் பக்திக்கிடையில் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. இவ்வளவு சகஜமான விசயம் கூட யாருடைய புத்தியிலும் பதிவது கடினமாக உள்ளது. ஆக இப்படிப்பட்ட சுலோகன்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த சண்டைக்குப் பிறகு நாடகத்தின் படி உலகில் அமைதி ஏற்பட உள்ளது. ஒவ்வொரு கல்பமும் உலகில் அமைதி ஏற்படுகிறது, பிறகு கலியுகத்தின் இறுதியில் அசாந்தி ஏற்படுகிறது. சத்யுகத்தில் தான் அமைதி ஏற்படுகிறது. கீதையில் தவறு செய்ததால்தான் பாரதத்திற்கு இந்த நிலை ஏற்பட்டது என்பதையும் நீங்கள் எழுத முடியும். 84 பிறவிகளை முழுமையாக எடுக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டீர்கள். ஸ்ரீ நாராயணரின் பெயரைக்கூட போடவில்லை. என்றாலும், அவருடைய 84 பிறவிகளில் கொஞ்ச நாட்கள் குறைகிறது என்று சொல்லலாம். கிருஷ்ணரு டையது முழுமையாக 84 பிறவிகள் ஏற்படுகின்றன. குழந்தைகளை வைரத்திற்குச் சமமாக ஆக்குவதற்காக சிவபாபா வருகிறார் எனும்போது பெட்டியும் கூட அதற்கேற்றாற்போல் தங்கத்தாலானது தேவைப்படுகிறது - அதில் வந்து பிரவேசம் செய்வதற்காக. இப்போது இவர் (பிரம்மா பாபா) எப்படி தங்கப்பெட்டி (ரதமாக) ஆனார் என்றால் உடனே காட்சி தெரிய வைத்தார் - நீ உலகின் எஜமான் ஆகப்போகிறாய். இப்போது என்னை மட்டும் நினைவு செய், தூய்மை அடைவாயாக என்ற போது உடன் தூய்மையடையத் தொடங்கினார். தூய்மை ஆகாமல் ஞானத்தின் தாரணை ஆகாது. சிங்கத்தின் பால் வைக்க தங்கப் பாத்திரம் தேவை. தூய்மை தேவை, தாரணை செய்வதற்கு. தூய்மையின் உறுதி மொழி கொடுத்து பிறகு விழுந்து விடும்போது நினைவு யாத்திரையே நின்று போய் விடுகிறது. ஞானமே முடிந்து போய் விடுகிறது. காமம் மிகப் பெரிய எதிரி இது பகவான் மகாவாக்கியம் என்று யாருக்கும் சொல்ல முடியாது. அவர் களுக்கு அம்பு தைக்காது (புரியாது). பிறகு அவர்கள் பெயரளவு ஞானி ஆகி விடுகின்றனர். (உங்களுக்குள்) எந்த விகாரமும் இருக்கக் கூடாது. தினம்தோறும் கணக்கு பாருங்கள். தந்தை சர்வசக்திவான் என்பது போல மாயையும் சர்வ சக்திவானாக உள்ளது. அரைக் கல்ப காலம் இராவணனின் இராஜ்யம் நடக்கிறது. தந்தை இல்லாமல் அவர் மீது வெற்றி அடைய முடியாது. நாடகத்தின்படி இராவண இராஜ்யமும் நடக்கத்தான் வேண்டும். வெற்றி மற்றும் தோல்வியின் இந்த நாடகம் பாரதத்தில்தான் நடக்கிறது. இதை தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குத்தான் புரிய வைக்கிறார். தூய்மை அடைவது முக்கியமான விசயம். நான் வருவதே தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்கு என தந்தை சொல்கிறார். மற்றபடி சாஸ்திரங்களில் பாண்டவர் மற்றும் கௌரவர்களின் சண்டை, சூதாட்டம் முதலானவைகளை காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட விசயங்கள் எப்படி நடக்கும்? ராஜயோகத்தின் படிப்பு இப்படி நடக்குமா என்ன? யுத்த மைதானத்தில் கீதா பாடசாலை நடக்குமா? பிறப்பு இறப்பற்ற சிவபாபா எங்கே, 84 பிறவிகளை முழுமையாக எடுக்கும் கிருஷ்ணர் எங்கே? அவருடைய கடைசி பிறவியில் தந்தை வந்து பிரவேசம் செய்கிறார். எவ்வளவு தெளிவாக உள்ளது! இல்லற விசயங்களில் இருந்தபடி தூய்மையாகவும் ஆக வேண்டும். சன்னியாசிகள் சொல்கின்றனர் - இருவரும் ஒன்றாக இருந்தால் தூய்மையாக இருக்க முடியாது. உங்களுக்கு எந்த பிராப்தியும் (பலன் கிடைக்கும் அதிர்ஷ்டம்) இல்லை என்றால் எப்படி இருப்பீர்கள் என சொல்லுங்கள். இங்கேயோ உலகின் இராஜ்யம் கிடைக்கிறது. எனக்காக குலத்தின் மரியாதையை காப்பாற்றுங்கள் என்று தந்தை சொல்கிறார். இவருடைய (பிரம்மாவின்) தாடிக்கு (வயதிற்கு) மரியாதை வையுங்கள் என சிவபாபா சொல்கிறார். இந்த ஒரு கடைசி பிறவியில் தூய்மையாக இருந்தால் சொர்க்கத்தின் எஜமான் ஆவீர்கள். தமக்காகவே முயற்சி செய்கிறோம். மற்ற யாரும் சொர்க்கத்தில் வர முடியாது. உங்களுடைய இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் அனைவரும் தேவை அல்லவா. அங்கே அமைச்சர்கள் இருப்ப தில்லை. ராஜாக்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியதில்லை. தூய்மையற்ற ராஜாக்களுக்குக் கூட ஓர் அமைச்சர் இருப்பார். இங்கே பாருங்கள், எவ்வளவு அமைச்சர்கள் இருக்கின்றனர். தங்களுக்குள் சண்டை போட்டபடி இருக்கின்றனர். தந்தை அனைத்து போராட்டங்களிலிருந்தும் விடுவிக்கிறார். பிறகு 3 ஆயிரம் வருடங்களுக்கு எந்த சண்டையும் நடக்காது. சிறைச்சாலை முதலானவை இருக்காது. நீதிமன்றம் முதலான எதுவும் இருக்காது. அங்கே சுகமோ சுகமாக இருக்கும். இதற்காக முயற்சி செய்ய வேண்டும். மரணம் தலை மீது நின்றிருக்கிறது. நினைவின் யாத்திரையின் மூலம் விகர்மாஜீத் (பாவ கர்மங்களை வென்றவர்கள்) ஆக வேண்டும்.நீங்கள் தான் செய்தியாளர்கள், அனைவருக்கும் மன்மனாபவ என்ற தந்தையின் செய்தியைக் கொடுக்கிறீர்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானத்தின் தாரணை செய்வதற்காக தூய்மையடைந்து புத்தி எனும் பாத்திரத்தை சுத்த மாக்க வேண்டும். வெறும் பெயரளவு ஞானி ஆகக் கூடாது.

2. தந்தைக்கு முன்னால் நேரடியாக அனைத்தும் அர்ப்பணம் செய்து ஸ்ரீமத் படி நடந்து 21 பிறவிகளுக்கு இராஜ்ய பதவியை அடைய வேண்டும்.

வரதானம்:
ஒவ்வொரு சக்தியையும் காரியத்தில் பயன்படுத்தி விருத்தி செய்யக் கூடிய சிரேஷ்ட செல்வந்தர் அல்லது புத்திசாலி ஆகுக.

புத்திசாலி குழந்தைகள் ஒவ்வொரு சக்தியையும் காரியத்தில் பயன்படுத்தும் விதியை அறிவார்கள். ஒருவர் எந்த அளவிற்கு சக்திகளை காரியத்தில் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவிற்கு அந்த சக்திகள் விருத்தி அடையும். எனவே அவ்வாறு ஈஸ்வரிய பட்ஜெட் தயார் செய்யுங்கள், உலகின் ஒவ்வொரு ஆத்மா உங்கள் மூலம் ஏதாவது பிராப்தியாக அடைந்து உங்களது குணங்களின் மகிமை பாட வேண்டும். அனைவருக்கும் ஏதாவது கொடுத்தே ஆக வேண்டும். முக்தி கொடுங்கள் அல்லது ஜீவன்முக்தி கொடுங்கள். ஈஸ்வரிய பட்ஜெட் தயாரித்து சர்வசக்திகளையும் சேமியுங்கள் மற்றும் சேமித்த சக்திகளின் மூலம் அனைத்து ஆத்மாக்களையும் யாசிப்பதிலிருந்து, துக்கம், அசாந்தியிலிருந்து விடுவியுங்கள்.

சுலோகன்:
சுத்த சங்கல்பங்களை தனது வாழ்க்கையின் விலை மதிப்பற்ற பொக்கிஷமாக ஆக்கிக் கொண்டீர்கள் எனில் செல்வந்தர்களாக ஆகிவிடுவீர்கள்.

மாதேஸ்வரிஜீயின் விலைமதிப்பற்ற மகாவாக்கியம் - இப்பொழுது விகர்மம் செய்வதில் போட்டி போடாதீர்கள்

நான் எப்படியாவது எனது விகாரங்களை வசப்படுத்த வேண்டும் என்ற இலட்சியம் அவசியம் முதலில் வைக்க வேண்டும். அப்போது தான் ஈஸ்வரிய சுகம் மற்றும் அமைதியாக இருக்க முடியும். தனது முக்கிய முயற்சியே சுகம், அமைதியாக இருந்து மற்றவர்களையும் அமைதியில் கொண்டு வருவதாகும். இதற்கு பொறுமை சக்தி அவசியம் தேவை. அனைத்திற்கும் ஆதாரம் தன் மீது தான் இருக்கிறது. ஒருவர் ஏதாவது கூறிவிட்டால் அசாந்தி வந்து விடுவது என்று இருக்கக் கூடாது. ஞானத்தின் முதல் குணம் பொறுமை சக்தி தாரணை செய்வதாகும். அஞ்ஞான காலத் திலும் கூறுவர் - ஒருவர் எவ்வளவு தான் திட்டினாலும், எனக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டது? என்று நினையுங்கள். திட்டக் கூடியவர் சுயம் அசாந்தியில் வந்து விட்டார், அவரது கணக்கு வழக்கு உருவாகி விடுகிறது. ஆனால் நானும் அசாந்தியில் வந்து விட்டேன், ஏதாவது கூறி விட்டேன் எனில் அது எனது விகர்மமாக ஆகிவிடும். எனவே விகர்மம் செய்யும் போட்டி போடாதீர்கள். நான் விகர்மங்களை அழிக்க வேண்டுமே தவிர உருவாக்கக் கூடாது. பல பிறவிகளாக விகர்மங்கள் செய்து வந்தேன் மற்றும் துக்கம் அடைந்து வந்தேன். இப்பொழுது ஞானம் அடைந்து கொண்டிருக் கிறேன். இந்த ஐந்து விகாரங்களை வெல்லுங்கள். விகாரங்களின் விஸ்தாரமும் இருக்கிறது. மிக சூட்சும முறையில் வருகிறது. சில நேரம் பொறாமை வந்து விடுகிறது எனில் இவர் இவ்வாறு செய்திருக்கின்றார், நானும் ஏன் இவ்வாறு செய்யக் கூடாது? என்று நினைக்கின்றனர். இது மிகப் பெரிய சூட்சுமமாக தவறாகும். தன்னை தவறற்றவர்களாக ஆக்க வேண்டும். ஒருவர் ஏதாவது கூறி விட்டால் இதுவும் என்னுடைய பரீட்சை என்று நினையுங்கள்- எனக்குள் எவ்வளவு பொறுமை சக்தி இருக்கிறது? நான் அதிகம் பொறுத்து விட்டேன் என்று கூறி ஒருமுறை ஆவேசத்தில் வந்து விட்டால் கடைசியில் தோல்வி அடைந்து விட்டார். யார் கூறினாரோ அவர் தன்னை கெடுத்துக் கொண்டார், ஆனால் தன்னை சீராக்க வேண்டுமே தவிர கெடுத்துக் கொள்ளக் கூடாது. ஆகையால் நன்றாக முயற்சி செய்து ஜென்ம ஜென்மங்களுக்கு நல்ல பிராப்திகளை உருவாக்க வேண்டும். மற்றபடி யார் விகாரங்களுக்கு வசமாகி இருக்கிறார்களோ, யாரிடத்தில் பூதம் பிரவேசமாகி இருக்கிறதோ, பூதங்களில் வார்த்தைகள் இவ்வாறு தான் வெளிப்படும். ஆனால் யார் தெய்வீக ஆத்மாவாக இருக்கிறார்களோ, அவர்களது மொழி தெய்வீகமானதாகத் தான் வெளிப் படும். எனவே தன்னை தெய்வீகமாக ஆக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அசுரர்களாக அல்ல. நல்லது, ஓம்சாந்தி.

அவ்யக்த சமிக்ஞை - சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

பரமாத்ம அன்பின் அனுபவியாக ஆகின்ற பொழுது, இந்த அனுபவத்தின் மூலம் சகஜயோகி ஆகி பறந்து கொண்டே இருப்பீர்கள். பரமாத்ம அன்பு பறக்க வைக்கும் சாதனமாகும். பறக்கக் கூடியவர் கள் ஒருபோதும் பூமியின் ஈர்ப்பில் வர முடியாது. மாயை எவ்வளவு தான் ஈர்க்கக் கூடிய ரூபத்தில் இருந்தாலும் அந்த ஈர்ப்பு பறக்கும் கலையில் உள்ளவர்களிடம் சென்றடையாது.