01-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தினமும் ஞான
சிந்தனை (விச்சார் சாகர் மந்தன்) செய்தீர்கள் என்றால் குஷியின்
அளவு அதிகரிக்கும், நடகக்கும்போதும்-சுற்றும்போதும், நாம்
சுயதரிசன சக்கரதாரிகள் என்பது நினைவிருக்கட்டும்
கேள்வி:
தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கான
சுலபமான வழி என்ன?
பதில்:
தங்களை முன்னேற்றிக் கொள்ள
தினமும் கணக்கு (சார்ட்) வையுங்கள். இன்று முழு நாளும் எந்த
அசுர செயலும் (கர்மமும்) செய்யவில்லை தானே என்று சோதனை
செய்யுங்கள். எப்படி மாணவர்கள் குறிப்பேடு (ரிஜிஸ்டர்)
வைக்கிறார்களோ, அதுபோல் குழந்தைகளாகிய நீங்களும் கூட தெய்வீக
குணத்தின் (கணக்கு வழக்கின்) குறிப்பேடு வைத்தீர்கள் என்றால்
முன்னேற்றம் ஆகிக் கொண்டே இருக்கும்.
பாடல்:
தூர தேசத்தில் வசிக்கக் கூடியவரே.........
ஓம் சாந்தி.
தூரதேசம் என்று எதைச் சொல்லப்படுகிறது என்பதை குழந்தைகள்
தெரிந்துள்ளீர்கள். உலகத்தில் எந்த மனிதனும்
தெரிந்திருக்கவில்லை. எவ்வளவு தான் பெரிய வித்வானாக இருந்தாலும்,
பண்டிதராக இருந்தாலும் இதனுடைய அர்த்தத்தைப் புரிந்து
கொள்வதில்லை. தந்தையை மனிதர்கள் அனைவரும் ஹே பகவான்........
என்று நினைவு செய்கிறார்களோ, அவர் நிச்சயமாக மேலே மூலவதனத்தில்
இருக்கின்றார், வேறு யாருக்கும் இது தெரியாது. இந்த நாடகத்தின்
இரகசியத்தைக் கூட குழந்தைகளாகிய நீங்கள் தான் இப்போது
புரிந்துகொள்கிறீர்கள். ஆரம்பத்திலிருந்து இப்போது வரை என்ன
நடந்ததோ, எது நடக்கப்போகிறதோ, அனைத்தும் புத்தியில் இருக்கிறது.
இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது புத்தியில்
இருக்க வேண்டும் அல்லவா. இதை குழந்தைகளாகிய உங்களில் கூட
வரிசைக்கிரமமாகத் தான் புரிந்து கொள்கிறீர்கள். ஞானத்தை சிந்தனை
செய்வதில்லை ஆகையினால் தான் குஷியின் அளவு அதிகரிப்பதில்லை.
எழும்பொழுதும் அமரும் போதும், நாம் சுயதரிசன சக்கரதாரிகள்
என்பது புத்தியில் இருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து கடைசி
வரை ஆத்மாவாகிய எனக்கு முழு சிருஷ்டி சக்கரமும் தெரியும்.
நீங்கள் இங்கே அமர்ந்திருக்கலாம், ஆனால் உங்களுடைய புத்தியில்
மூலவதனம் நினைவு வருகிறது. அது இனிய அமைதியான வீடு,
நிர்வாணதாமம், அமைதியான இடம், அங்கே ஆத்மாக்கள் இருக்கின்றன.
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உடனே வந்து விடுகிறது, வேறு
யாருக்கும் இது தெரியாது. எத்தனையோ சாஸ்திரங்கள் போன்றவற்றை
படிக்கிறார்கள், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், பலன் எதுவும்
இல்லை. அவர்கள் அனைவரும் இறங்கும் மார்க்கத்தில் இருக்கிறார்
கள். நீங்கள் இப்போது உயர்ந்து கொண்டிருக்கிறீர்கள். திரும்பிச்
செல்வதற்காக தாங்களே ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த பழைய ஆடையை விட்டு விட்டு நாம் வீட்டிற்குச் செல்ல
வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா! வீட்டிற்குச்
செல்வதற்காக அரைக்கல்பம் பக்தி செய்தீர்கள் இருந்தும்
ஏணிப்படியில் இறங்கித் தான் வந்துள்ளீர்கள். இப்போது பாபா
நமக்கு சகஜமாகப் புரிய வைக்கின்றார். குழந்தை களாகிய உங்களுக்கு
மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். பாபா பகவான் நமக்கு
படிப்பிக்கின்றார், என்ற மகிழ்ச்சி அதிகம் இருக்க வேண்டும்.
பாபா நேரடியாக கற்பித்துக் கொண்டிருக்கின்றார். பாபா அனைவருக்
கும் தந்தையாக இருக்கக் கூடியவர், அவர் நமக்கு மீண்டும்
கற்பிக்கின்றார். அனேக முறை கற்பித்திருக்கின்றார். நீங்கள்
சக்கரத்தை முழுமையாக சுற்றிவிட்டு வரும்போது பாபா மீண்டும்
வருகின்றார். நீங்கள் இந்த சமயத்தில் சுயதரிசன
சக்கரதாரிகளாவீர்கள். நீங்கள் விஷ்ணுபுரியின் தேவதைகளாக ஆவதற்கு
முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். உலகத்தில் வேறு யாரும்
இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. சிவபாபா நமக்கு
கற்பிக்கின்றார் என்ற குஷி எவ்வளவு இருக்க வேண்டும்! இந்த
சாஸ்திரம் போன்ற அனைத்தும் பக்திமார்க்கத் தினுடையவைகளாகும்.
இது சத்கதிக்கானது அல்ல. பக்திமார்க்கத்தின் பொருட்களும்
வேண்டும் அல்லவா. அளவற்ற பொருட்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம்
நீங்கள் இறங்கியே தான் வந்துள்ளீர்கள் என்று பாபா கூறுகின்றார்.
எவ்வளவு வாசல்-வாசலாக (கோவில்-கோவிலாக) அலைகிறார்கள். இப்போது
நீங்கள் அமைதியாக அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் ஏமாற்றம்
அடைவதெல்லாம் நின்று விட்டது. இன்னும் கொஞ்ச காலம் தான் இருக்
கிறது, ஆத்மாவை தூய்மையாக்குவதற்கு பாபா முன்பு போலவே கூறிக்
கொண்டிருக்கின்றார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள்
தமோபிர தானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள் பிறகு
சதோபிரதான உலத்திற்கு சென்று இராஜ்யம் செய்வீர்கள். இந்த வழியை
பாபா கல்பம்-கல்பமாக அனேக முறை கூறியுள்ளார். பிறகு தங்களுடைய
நிலையை யும் பார்க்க வேண்டும், மாணவர்கள் முயற்சி செய்து தங்களை
புத்திசாலிகளாக்கிக் கொள்கிறார்கள் அல்லவா. படிப்பின்
குறிப்பேடு (பதிவு) கூட இருக்கிறது, மேலும் நடத்தைகளுக்கும்
குறிப்பேடு இருக்கிறது. இங்கே நீங்களும் கூட தெய்வீக குணங்களை
தாரணை செய்ய வேண்டும். தினமும் கணக்கு வைப்பதின் மூலம் அதிக
முன்னேற்றம் ஏற்படும் - இன்று முழு நாளும் ஏதாவது அசுர காரியம்
செய்தேனா? நாம் தேவதைகளாக ஆக வேண்டும். லஷ்மி-நாராயணனுடைய
சித்திரம் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு எளிமையான
சித்திரமாக இருக்கிறது. மேலே சிவபாபா இருக்கின்றார். பிரஜாபிதா
பிரம்மாவின் மூலம் இந்த ஆஸ்தியை கொடுக்கின்றார் என்றால்
கண்டிப்பாக சங்கமயுகத்தில் பிராமண-பிராமணிகள் இருப்பார்கள்
அல்லவா. தேவதைகள் சத்யுகத்தில் இருக்கிறார்கள். கலியுகத்தில்
சூத்திர வர்ணத் தவர்கள் இருக்கிறார்கள். விராட ரூபத்தைக் கூட
புத்தியில் தாரணை செய்யுங்கள். இப்போது நாம் பிராமணர்கள் உச்சி
குடுமி போன்றவர்கள், பிறகு தேவதைகளாக ஆவோம். பாபா பிராமணர்
களுக்கு தேவதைகளாக ஆவதற்கு படிப்பிக்கின்றார். எனவே தெய்வீக
குணங்களையும் தாரணை செய்ய வேண்டும், அந்தளவிற்கு
இனிமையானவர்களாக ஆக வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக்
கூடாது. எப்படி சரீர நிர்வாகத்திற்காக ஏதாவது காரியம்
செய்யப்படுகிறதோ, அதுபோல் இங்கேயும் கூட யக்ஞ சேவை செய்ய
வேண்டும். யாராவது நோயுற்றிருக்கிறார்கள், சேவை செய்வதில்லை
என்றால் பிறகு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டியிருக்கிறது.
யாராவது நோயுற்றிருக்கிறார்கள், சரீரத்தை விட்டு விடுகிறார்கள்
என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் துக்கமடைவதோ அல்லது
அழுவதற்கான விசயமோ இல்லை. நீங்கள் முற்றிலும் அமைதியாக பாபாவின்
நினைவில் இருக்க வேண்டும். எந்த சப்தமும் இருக்கக் கூடாது.
அவர்கள் சுடு காட்டிற்குச் எடுத்துச் செல்கிறார்கள் என்றால்
ராம் ராம் சங் என்று சொல்லிக் கொண்டே செல் கிறார்கள். நீங்கள்
எதையும் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் அமைதியின் மூலம்
உலகத்தின் மீது வெற்றி அடைகிறீர்கள். அவர்களுடையது அறிவியல் (சயின்ஸ்),
உங்களுடையது அமைதி யாகும் (சைலன்ஸ்).
குழந்தைகளாகிய நீங்கள் ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் யதார்த்த
அர்த்தத்தையும் தெரிந்துள்ளீர்கள். ஞானம் என்றால் புரிதல்
மற்றும் விஞ்ஞானம் என்றால் அனைத்தையும் மறந்து விடுவதாகும்.
ஞானத்திலிருந்து கூட விடுபட்டிருப்பதாகும். எனவே ஞானமும்
இருக்கிறது, விஞ்ஞானமும் இருக்கிறது. நாம் சாந்திதாமத்தில்
இருக்கக் கூடியவர்கள் என்பதை ஆத்மா தெரிந்திருக்கிறது பிறகு
ஞானமும் இருக்கிறது. ரூப் மற்றும் பஸந்தாக இருக்கிறார்கள். (யோகம்
மற்றும் ஞானம் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள்). பாபா கூட
பிந்து மற்றும் சிந்துவாக இருக்கின்றார் (ரூப்-பஸந்தாக
இருக்கின்றார்). ரூபமாகவும் இருக்கின்றார் பிறகு அவரிடத்தில்
முழு சிருஷ்டி சக்கரத்தின் ஞானமும் இருக்கிறது. அவர்கள்
விஞ்ஞான் பவன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். அர்த்தம்
எதையும் புரிந்து கொள்வதில்லை. இந்த சமயத்தில் அறிவியலின் மூலம்
துக்கமும் இருக்கிறது என்றால் சுகமும் இருக்கிறது என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். அங்கே
சுகமோ சுகம் ஆகும். இது அல்பகால சுகமாகும். மற்றபடி துக்கமே
துக்கமாகும். வீட்டில் மனிதர்கள் எவ்வளவு துக்க முடையவர்களாக
இருக்கிறார்கள். இறந்து விட்டால் இந்த துக்கமான உலகத்திலிருந்து
விடுபட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். பாபா நம்மை
சொர்க்கவாசிகளாக்க வந்திருக்கின்றார் என்று குழந்தை களாகிய
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். எவ்வளவு பரவசம் ஆக வேண்டும்.
கல்பம்-கல்பமாக பாபா நம்மை சொர்க்க வாசியாக்க வருகின்றார். எனவே
இப்படிப்பட்ட பாபாவின் வழிப்படி நடக்க வேண்டும் அல்லவா.
பாபா கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே, ஒருபோதும் யாருக்கும்
துக்கம் கொடுக்காதீர்கள். குடும்ப விவகாரங்களில் இருந்து கொண்டே
தூய்மையாக ஆகுங்கள். நாம் சகோதர-சகோதரிகள், இது அன்பான உறவாகும்.
வேறு எந்த தீய பார்வையும் வரக் கூடாது. ஒவ்வொருவருடைய (மன)
நோயும் தனிப்பட்டதாகும், அதன்படி வழியும் சொல்லிக் கொடுக்கப்
பட்டுக் கொண்டிருக்கிறது. பாபா இந்த-இந்த சூழ்நிலை ஏற்படுகிறது,
இந்த நிலையில் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். சகோதர-சகோதரி
என்ற பார்வை கெட்டுவிடக் கூடாது என்று பாபா புரிய வைக்கின்றார்.
எந்தச் சண்டையும் இருக்கக் கூடாது. நான் ஆத்மாக்களாகிய
உங்களுடைய தந்தை அல்லவா. சிவபாபா பிரம்மாவின் உடலின் மூலம்
பேசிக் கொண்டிருக் கின்றார். பிரஜாபிதா பிரம்மா சிவபாபாவின்
குழந்தையாவார், சாதாரண உடலில் தான் வருகின்றார் அல்லவா. விஷ்ணு
சத்யுகத்தில் இருப்பவர் ஆவார். நான் இவருக்குள் பிரவேசித்து
புதிய உலகத்தை படைக்க வந்துள்ளேன் என்று பாபா கூறுகின்றார்.
நீங்கள் உலகத்தின் மகாராஜா-மகாராணிகளாக ஆவீர்களா? என்று பாபா
கேட்கின்றார். ஆமாம் பாபா, ஏன் ஆகமாட்டோம். சரி, இதில்
தூய்மையாக இருக்க வேண்டும். இது கடினமானதாகும். அட, உங்களை
உலகத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றேன் என்றால் நீங்கள்
தூய்மையாக இருக்க முடியாதா? வெட்கமாக இல்லை? தீய காரியங்களைச்
செய்யாதீர்கள் என்று லௌகீக தந்தையும் புரிய வைக்கின்றார் அல்லவா.
இந்த விகாரத்தில் தான் தடை ஏற்படுகிறது. ஆரம்பத்திலிருந்து
இதற்காக அடிதடி நடந்து வருகிறது. பாபா கூறுகின்றார் - இனிமையான
குழந்தைகளே, இதன்மீது வெற்றி அடைய வேண்டும். நான்
தூய்மையாக்குவதற்காக வந்துள்ளேன். குழந்தைகளாகிய உங்களுக்கு
சரி-தவறு, நல்லது- கெட்டதை சிந்திப்பதற்கான புத்தி கிடைத்
திருக்கிறது. இந்த லஷ்மி-நாராயணனாக ஆவது தான் குறிக்கோளாகும்.
சொர்க்கவாசிகளிடம் தெய்வீக குணங்கள் இருக்கின்றன, நரகவாசி
களிடம் அவகுணங்கள் இருக்கின்றன. இப்போது இராவண இராஜ்யமாக
இருக்கிறது, என்பதை கூட யாரும் புரிந்து கொள்ள முடியாது.
இராவணனை ஒவ்வொரு ஆண்டும் எரிக்கிறார்கள். எதிரி அல்லவா.
எரித்துக் கொண்டே வருகிறார்கள். இது யார் என்று புரிந்து
கொள்வதே இல்லை. நாம் அனைவரும் இராவண இராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள்
அல்லவா, எனவே நாமும் அசுரர்களே ஆவோம். ஆனால் தங்களை யாரும்
அசுரர்கள் என்று புரிந்து கொள்வதில்லை. இது இராட்சத இராஜ்யம்
என்று நிறைய பேர் சொல்கிறார்கள். எப்படி ராஜா-ராணியோ அப்படியே
பிரஜைகளும் ஆவர். ஆனால் அந்தளவிற்குக் கூட புரிதல் இல்லை. இராம
இராஜ்யம் தனியாக இருக்கிறது, இராவண இராஜ்யம் தனியாக இருக்கிறது
என்று பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். நீங்கள் இப்போது சர்வ
குணங்களும் நிறைந்த வர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
என்னுடைய பக்தர்களுக்கு, யார் கோயிலுக்குச் சென்று தேவதைகளின்
பூஜை செய்கிறார்களோ, அவர்களுக்குச் சென்று ஞானத்தை சொல்லுங்கள்
என்று பாபா கூறுகின்றார். மற்றபடி இப்படி-அப்படி இருக்கும்
மனிதர்களிடம் மண்டை உடைத்துக் கொள்ளாதீர்கள். கோயில்களில்
உங்களுக்கு நிறைய பக்தர்கள் கிடைப்பார் கள். நாடியையும்
பார்க்க வேண்டியிருக்கிறது. மருத்துவர்கள் பார்த்தவுடனேயே
இவர்களுக்கு என்ன வியாதி என்று கூறி விடுகிறார்கள். தில்லியில்
அஜ்மல்கான் என்ற ஒரு வைத்தியர் புகழ்பெற்றவராக இருந்தார். பாபா
உங்களை 21 பிறவிகளுக்கு எப்போதைக்கும் ஆரோக்கிய மானவர்களாக,
செல்வந்தர்களாக ஆக்குகின்றார். இங்கே அனைவரும் நோயுற்ற வர்களாக,
ஆரோக்கியமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அங்கே ஒருபோதும் நோய்
ஏற்படுவதே இல்லை. நீங்கள் எப்போதும் ஆரோக்கியமானவர்களாக,
எப்போதும் செல்வந்தர் களாக ஆகின்றீர்கள். நீங்கள் தங்களுடைய
யோகபலத்தின் மூலம் கர்மேந்திரியங்களின் மீது வெற்றி அடைந்து
விடுகிறீர்கள். உங்களை இந்த கர்மேந்திரியங்கள் ஒருபோதும்
ஏமாற்ற முடியாது. நல்ல விதத்தில் நினைவில் இருந்தீர்கள், ஆத்ம-
அபிமானியாக இருந்தீர்கள் என்றால் கர்மேந்திரியங்கள் ஏமாற்றாது
என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இங்கேயே தான் நீங்கள்
விகாரங்கள் மீது வெற்றி அடைகிறீர்கள். அங்கே கெட்ட பார்வை
இருப்பதில்லை. இராவண இராஜ்யமே இருப்பதில்லை. அது அஹிம்சை
யாளர்களான தேவி-தேவதைகளின் தர்மமாகும். சண்டை போன்றவற்றின்
விசயம் இல்லை. இந்த சண்டை கூட கடைசியில் நடக்க வேண்டும், இதன்
மூலம் தான் சொர்க்கத்தின் நுழைவாயில் திறக்க வேண்டும். பிறகு
ஒரு போதும் சண்டை நடப்பதே இல்லை. யக்ஞம் கூட இது இறுதி
யானதாகும். பிறகு அரைக் கல்பத்திற்கு எந்த யக்ஞமும் நடக்கவே
நடக்காது. இதில் குப்பைகள் அனைத்தும் சுவாஹா ஆகி விடுகிறது.
இந்த யக்ஞத்திலிருந்து தான் வினாசத்தின் ஜுவாலை வந்தது,
அனைத்தும் சுத்தமாகி விடுகிறது. அங்கே இருக்கும் சூபிரசம் (சுவை
மிகுந்த பழ ரசம்) போன்றவைகளும் மிகவும் சுவையுள்ள முதல்தரமான
பொருட்களாக இருக்கின்றன என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு
காட்சியும் காட்டப்பட்டுள்ளது. அந்த இராஜ்யத்தை இப்போது நீங்கள்
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் எவ்வளவு குஷி
இருக்க வேண்டும்.
உங்களுடைய பெயர் கூட சிவ சக்தி பாரத தாய்மார்கள் என்பதாகும்.
நீங்கள் சிவனிட மிருந்து நினைவின் மூலம் மட்டுமே சக்தியைப்
பெறுகிறீர்கள். ஏமாற்றம் அடைவதற்கான விசயம் எதுவும் இல்லை. யார்
பக்தி செய்ய வில்லையோ அவர்கள் நாத்திகர்கள் என்று
உலகத்திலுள்ளவர்கள் நினைக்கிறார்கள். யார் பாபா மற்றும் படைப்பை
தெரிந்திருக்க வில்லையோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று நீங்கள்
கூறுகிறீர்கள், நீங்கள் இப்போது ஆஸ்திகர்களாக ஆகியுள்ளீர்கள்.
திரிகாலதரிசியாகவும் ஆகியுள்ளீர்கள். மூன்று லோகங்கள், மூன்று
காலங்களை தெரிந்து கொண்டுள்ளீர்கள். இந்த லஷ்மி- நாராயணனுக்கு
பாபாவிட மிருந்து இந்த ஆஸ்தி கிடைத்திருக் கிறது. இப்போது
நீங்கள் லஷ்மி-நாராயணனாக ஆகின்றீர்கள். இந்த விசயங்கள்
அனைத்தையும் பாபா தான் புரிய வைக்கின்றார். நான் இவருக்குள்
பிரவேசித்து புரிய வைக்கின்றேன் என்று சிவபாபா அவரே
கூறுகின்றார். இல்லையென்றால் நிராகாரமான நான் எவ்வாறு புரிய
வைப்பேன். பிரேரணையின் (தூண்டுவதின்) மூலம் கல்வி கற்பிக்க
முடியுமா என்ன? கற்பிக்க வாய் வேண்டும் அல்லவா. கவ் முக் (பசுவின்
வாய்) என்பது இவர் அல்லவா. இவர் பெரிய தாய் அல்லவா, மனிதர்களின்
தாய். பாபா கூறு கின்றார், நான் இவரின் மூலம் குழந்தைகளாகிய
உங்களுக்கு சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் இரகசியத்தைப்
புரிய வைக்கின்றேன், யுக்தியைக் கூறுகின்றேன். இதில்
ஆசிர்வாதத்தின் விசயம் எதுவும் இல்லை. தந்தை வழிப்படி நடக்க
வேண்டும். ஸ்ரீமத் கிடைக்கிறது. கருணை என்ற விசயம் இல்லை. பாபா
அடிக்கடி மறந்து விடுகிறது என்று கூறுகிறார்கள், கருணை
காட்டுங்கள் என்று கூறுகிறார்கள். அட, நினைவு செய்வது
உங்களுடைய காரியமாகும். நான் என்ன கருணை காட்டுவது. எனக்கு
அனைவருமே குழந்தைகளாவர். கருணை காட்டினேன் என்றால் அனைவரும்
சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவார்கள். பதவி என்பது படிப்பின்
ஆதாரப் படி அடைவார்கள். நீங்கள் தான் படிக்க வேண்டும் அல்லவா.
முயற்சி செய்து கொண்டே இருங்கள். மிகவும் அன்பான தந்தையை நினைவு
செய்ய வேண்டும். தூய்மையற்ற ஆத்மா வீட்டிற்கு திரும்பிச் செல்ல
முடியாது. எந்தளவிற்கு நீங்கள் நினைவு செய்வீர்களோ, அந்தளவிற்கு
நினைவு செய்து-செய்து தூய்மையாகி விடுவீர்கள் என்று பாபா
கூறுகின்றார். தூய்மையான ஆத்மா இங்கே இருக்க முடியாது.
தூய்மையாக ஆகிவிட்டால் புதிய சரீரம் வேண்டும். தூய்மையான
ஆத்மாவிற்கு தூய்மையற்ற சரீரம் கிடைப்பது என்பது விதியே அல்ல.
சன்னியாசிகள் கூட விகாரத்தின் மூலம் பிறவி எடுக்கிறார்கள்
அல்லவா. சன்னியாசம் செய்வதற்கு இந்த தேவதைகள் விகாரத்தின் மூலம்
பிறவி எடுப்பதில்லை, இவர்கள் உயர்ந்தவர்கள் அல்லவா. உண்மையிலும்
உண்மையான மகாத்மாக்கள் இவர்களே, இவர்கள் எப்போதும் சம்பூரண
நிர்விகாரிகளாக இருக்கிறார்கள். அங்கே இராவண இராஜ்யம் இல்லை.
அங்கு நடப்பதே சதோபிரதான இராம இராஜ்யமாகும். உண்மையில்
இராமனுடையது என்று கூட சொல்லத் தேவை யில்லை. சிவபாபா அல்லவா.
இது இராஜஷ்வ அஷ்வமேத அழிவற்ற ருத்ர ஞான யக்ஞமாகும். ருத்ரன்
அல்லது சிவன் இரண்டும் ஒன்றே ஆகும். கிருஷ்ணருடைய பெயரே அல்ல.
சிவபாபா வந்து ஞானத்தைக் கூறுகின்றார் பிறகு அவர்கள் ருத்ர
யக்ஞத்தை உருவாக்குகிறார்கள் என்றால் மண்ணால் லிங்கம் மற்றும்
சாலிகிராமங்களை உருவாக்கு கிறார்கள். பூஜை செய்து விட்டு பிறகு
உடைத்து விடுகிறார்கள். பாபா தேவிகளின் உதாரணம் சொல்வதைப்
போலாகும். தேவிகளை அலங்கரித்து படையலிட்டு பூஜை செய்து பிறகு
தண்ணீரில் மூழ்கச் செய்து விடுகிறார்கள். எப்படி சிவபாபா
மற்றும் சாலிகிராமங்களை மிகவும் அன்போடும் சுத்தத்தோடும் பூஜை
செய்து பிறகு அழித்து விடுகிறார்கள் அல்லவா. இவையனைத்தும்
பக்தியின் விஸ்தார மான விசயங்களாகும். இப்போது பாபா
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் - எந்தளவிற்கு பாபாவின்
நினைவில் இருப்பீர்களோ அந்தளவிற்கு மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.
தவறு எதுவும் செய்ய வில்லை தானே? என்று தினமும் இரவு தங்களுடைய
கணக்கைப் பார்க்க வேண்டும். தங்களுடைய காதுகளை பிடித்துக்
கொள்ள வேண்டும் - பாபா இன்று என் மூலம் இந்த தவறு நடந்தது,
மன்னித்துக் கொள்ளுங்கள். உண்மையை எழுதினீர்கள் என்றால் பாதி
பாவம் அழிந்து விடும், என்று பாபா கூறுகின்றார். பாபா
அமர்ந்திருக்கின்றார் அல்லவா. தங்களுக்கு நன்மை செய்ய
விரும்புகிறீர்கள் என்றால் ஸ்ரீமத்படி நடந்து கொள்ளுங்கள்.
கணக்கு வைப்பதின் மூலம் அதிக முன்னேற்றம் ஏற்படும். செலவு
எதுவும் இல்லை. உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்றால் மனம், சொல்,
செயலின் மூலம் யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. யாரும்
எதுவும் சொன்னார்கள் என்றால் கேட்டும் கேட்காமல் இருந்து விட
வேண்டும். இந்த ஒரு முயற்சி செய்ய வேண்டும். பாபா வருவதே
குழந்தைகளாகிய உங்களுடைய துக்கத்தை நீக்கி எப்போதைக்கும்
சுகத்தை அளிப்பதற்காக ஆகும். எனவே குழந்தைகளும் அப்படி ஆக
வேண்டும். கோயில்களில் அனைத்தையும் விட நல்ல சேவை நடக்கும்.
அங்கே தர்ம சிந்தனையுடையவர்கள் உங்களுக்கு அதிகம் கிடைப்பார்கள்.
கண் காட்சியில் நிறைய பேர் வருகிறார்கள். புரொஜக்டரை விட
கண்காட்சி, மேளாவில் நல்ல சேவை நடக்கிறது. மேளா வைப்பதற்கு
செலவாகிறது என்றால் பலனும் இருக்கிறது அல்லவா. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபா எது சரியானது எது தவறானது என்பதைப் புரிந்து
கொள்வதற்கான புத்தியை கொடுத்திருக்கிறார், அந்த புத்தியின்
ஆதாரத்தில் தான் தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும்,
யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது, தங்களுக்குள் சகோதரன் -
சகோதரி என்ற உண்மையான அன்பு இருக்க வேண்டும், ஒருபோதும் கெட்ட
பார்வை செல்லக் கூடாது.
2) பாபாவினுடைய ஒவ்வொரு அறிவுரையின் படி நடந்து நன்றாகப்
படித்து தங்கள் மீது தாங்களே கருணைகாட்ட வேண்டும். தங்களுடைய
முன்னேற்றத்திற்காக கணக்கு (சார்ட்) வைக்க வேண்டும், யாராவது
துக்கம் கொடுக்கக் கூடிய விசயங்களைப் பேசுகிறார்கள் என்றால்
கேட்டும் கேட்காமல் இருந்து விட வேண்டும்.
வரதானம்:
ஈஸ்வரிய ராயல் தன்மையெனும் சம்ஸ்காரத்தின் மூலம் ஒவ்வொருவரின்
விசேஷத் தன்மைகளை வர்ணனை செய்யும் புண்ணிய ஆத்மா ஆகுக !
தன்னை எப்பொழுதும் விசேஷ ஆத்மா என்றுணர்ந்து ஒவ்வொரு
எண்ணத்தையும், செயலையும் செயல் படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் சிறப்பம்சங்களையே பார்க்க வேண்டும். வர்ணனை
செய்ய வேண்டும். அனைவரையும் சிறப்பானவர்களாக மாற்றுவதற்கான
நன்மை செய்யும் எண்ணம் வைக்க வேண்டும். இதுவே ஈஸ்வரிய ராயல்
தன்மை. இராயலான ஆத்மாக் கள் அடுத்தவர் வீசிய பொருளை எடுத்து
தன்னிடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே பிறரது பலவீனம்
மற்றும் தீய குணங்களை பார்க்கும் கண்கள் சதா மூடியிருக்க
வேண்டும் என்பதில் கவனம் வையுங்கள். ஒருவர் மற்றவரின்
குணத்தினையே பாடுங்கள். அன்பு, ஒத்துழைப்பு எனும் மலரையே
பரிமாறிக் கொள்ளுங்கள். அப்போதே புன்னிய ஆத்மா ஆவீர்கள்.
சுலோகன்:
வரதானத்தின் சக்தி இன்னலெனும் நெருப்பையும் நீராக மாற்றி விடும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
நிராகாரி சொரூபத்தின் முக்கிய அறிவுரைக்கான வரதானம் கர்மாதீத்
பவ என்பதாகும். ஆகார சொரூபத்தின் அதாவது பரிஸ்தா நிலையின்
வரதானம் டபுள் லைட் பவ என்பதாகும். டபுள் லைட் என்பது அனைத்து
கர்ம பந்தனங்களி-ருந்தும் லேசாக மற்றும் பிரகாசமான மனோ நிலையில்
நிலை பெறுவதகும். அவ்வாறு டபுள் லைட்டாக இருப்பவரே சுலபமாக
கர்மாதீத் நிலையை அடைய முடியும். எனவே சேவைகளில் ஈடுபடும்
பொழுதும் இப்போது நான் முழுமை பெற்று கர்மாதீத் நிலையடைய
வேண்டும் என்பதிலேயே ஆர்வம் வையுங்கள்.