02-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இது பாபாவின்
அற்புதமான கடை. இதில் பலவிதமான பொருள்கள் கிடைக்கின்றன. இந்தக்
கடைக்கு முதலாளி நீங்கள்.
கேள்வி:
இந்த அற்புதமான கடைக்காரரை
யாராலும் காப்பியடிக்க முடியாது, ஏன்?
பதில்:
ஏனென்றால் இவர் சுயம் அனைத்துக்
கஜானாக்களின் களஞ்சியமாக உள்ளார். ஞானத்தின், சுகத்தின்,
சாந்தியின், தூய்மையின், அனைத்துப் பொருள்களின் கடலாக உள்ளார்.
யாருக்கு எது வேண்டுமோ, அது கிடைக்கும். துறவற
மார்க்கத்தினரிடம் இந்தப் பொருட்கள் கிடைக்காது. யாருமே தன்னை
பாபாவுக்கு சமமான கடல் எனச் சொல்லிக் கொள்ள முடியாது.
பாடல்:
உங்களை அடைந்ததால்....உலகத்தையே
அடைந்து விட்டோம்....
ஓம் சாந்தி.
இப்போது குழந்தைகள் எல்லையற்ற தந்தைக்கு முன்பாக அமர்ந்துள்ளனர்.
இவரை எல்லையற்ற தந்தை என்றும் சொல்லலாம், எல்லையற்ற தாத்தா
என்றும் சொல்லலாம். மேலும் எல்லையற்ற குழந்தைகள் அமர்ந்துள்ளனர்,
பாபா எல்லையற்ற ஞானத்தைக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்.
எல்லைக்குட்பட்ட விஷயங்கள் இப்போது விடுபட்டு விட்டன. இப்போது
பாபாவிட மிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெற வேண்டும். அதற்கு ஒரே
ஒரு கடைதான் இருக்கின்றது. மனிதர்களுக்குத் தெரியாது, நமக்கு
என்ன வேண்டும் என்று. எல்லையற்ற தந்தையின் கடையோ மிகவும்
பெரியது. அவர் சுகத்தின் கடல், தூய்மைக் கடல், ஆனந்தத்தின் கடல்,
ஞானத்தின் கடல்........ என்றெல்லாம் சொல்லப்படுகின்றார்.
யாரேனும் கடைக்காரர் இருக்கிறார் என்றால் அவரிடம் பலவிதமான
பொருட்கள் இருக்கும். ஆக, இவர் எல்லை யற்ற தந்தை. இவரிடமும்
பலவிதமான பொருட்கள் உள்ளன. என்னென்ன உள்ளன? பாபா ஞானக்கடல்,
சுகத்தின், சாந்தியின் கடலாக இருக் கிறார். இந்த ஒரே ஒரு கடை
மட்டும் தான் இருக்கிறது, வேறெந்த கடையும் கிடையாது, பிரம்மா,
விஷ்ணு, சங்கரிடம் ஒன்றுமே கிடையாது. அவரிடம் இந்த அற்புதமான,
அலௌகிகப் பொருட்கள் உள்ளன. பிறகு புகழ் பாடப்படவும் செய்கிறது
- சுகம் கொடுப்பவர். அனைத்திலும் உயர்ந்த பொருள் பாவிடம் உள்ளது.
அதனால் அவரது மகிமை பாடப்படுகின்றது. த்வமேவ மாதஸ்ச்ச பிதா.........
(நீங்கள் தாம் தாயும் தந்தையும்........) இது போன்ற மகிமை
ஒருபோதும் யாருக்கும் பாடப் படுவதில்லை. மனிதர்கள் சாந்திக்காக
அலைந்து கொண்டே உள்ளனர். சிலருக்கு மருந்து வேண்டும். இன்னும்
சிலருக்கு வேறு ஏதாவது வேண்டியதிருக்கும். அவை அனைத்தும்
எல்லைக் குட்பட்ட கடைகள். இவர் ஒரே ஒரு தந்தை. இவரிடம்
எல்லையற்ற பொருட்கள் உள்ளன. அதனால் அவருக்கு மகிமையும்
பாடுகின்றனர் - தூய்மையாக்குபவர், துன்பங்களிலிருந்து விடுவிப்
பவர் ஞானக்கடல், ஆனந்தக் கடல். இவை அனைத்தும் பலவகையான
பொருட்கள். பட்டியலை எழுதினால் மிக அதிகமாகி விடும். எந்தத்
தந்தையிடம் இந்தப் பொருட்கள் உள்ளனவோ, குழந்தைகளுக்கும் அதில்
உரிமை உள்ளது. ஆனால் இது யாருடைய புத்தியிலும் வருவதில்லை -
அப்படிப்பட்ட தந்தையின் குழந்தைகள் நாம் தான் எனும் போது
தந்தையின் பொருட்களுக்கு நாம் உரிமையாளராக இருக்க வேண்டும்.
பாபா வருவதும் பாரதத்தில் தான். பாபாவிடம் உள்ள அனைத்துப்
பொருட்களையும் அவர் கொண்டு வருவார். அவரிடம் போய்ப் பெற்றுக்
கொள்வதாக இருந்தாலும் நாம் அங்கே செல்ல முடியாது. பாபா
சொல்கிறார், நான் வர வேண்டியுள்ளது. கல்ப-கல்பமாக கல்பத்தின்
சங்கமயுகத்தில் வந்து உங்களுக்கு அனைத்துப் பொருட்களையும்
கொடுத்து விடுகிறேன். அவை பிறகு ஒருபோதும் கிடைக்காது. அரைக்
கல்பத்திற்கு உங்களுடைய கஜானா நிரம்பிவிடும். நாம் கேட்டுப்
பெற வேண்டும் என்கிற மாதிரி எந்த ஒரு கிடைக்காத பொருள் என்பதே
சத்யுகத்தில் இருக்காது. டிராமா பிளான் படி நீங்கள் அனைத்து
ஆஸ்திகளையும் பெற்று பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக ஏணிப்படியில்
இறங்கி வருவீர்கள். புனர்ஜென்மமும் அவசியம் எடுத்தாக வேண்டும்.
84 பிறவிகளையும் எடுத்தாக வேண்டும். 84-இன் சக்கரம் எனச் சொல்
கின்றனர். ஆனால் அதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை.
84-க்கு பதிலாக 84 லட்சம் பிறவி கள் எனச் சொல்லிவிடுகின்றனர்.
மாயா தவறு செய்ய வைத்துவிடுகிறது. இதை இப்போது நீங்கள் புரிந்து
கொண்டிருக்கிறீர்கள். பிறகோ இவையனைத்தையும் மறந்து போவீர்கள்.
இச்சமயம் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர், சத்யுகத்தில்
இராஜ்யம் செய்கின்றனர். ஆனால் அவர் களுக்கு இது தெரியாது -
இந்த இராஜ்யத்தை நமக்கு யார் கொடுத்தார்? இலட்சுமி-நாராயணரின்
இராஜ்யம் எப்போது இருந்தது? சொர்க் கத்தின் சுகம் பாடப்படவும்
செய்கிறது. அனைத்து விதமான சுகத்தையும் தருகின்றது. இதை விட
அதிக சுகம் வேறொன்றும் கிடையாது. பிறகு அந்த சுகமும் மறைந்து
போகும். அரைக் கல்பத்திற்குப் பிறகு இராவணன் வந்து அனைத்தையும்
அபகரித்துக் கொண்டு விடுவான். யார் மீதாவது கோபப்பட்டால்
சொல்வார்கள், உங்களது கலைத் திறமையே அழிந்துவிட்டது என்று.
நீங்களும் சர்வகுண சம்பன்னமாக, 16 கலை சம்பூர்ணமாக இருந்தவர்கள்
தான். அந்தக் கலைகள் அனைத்தும் முடிந்து போயின. ஒரு பாபாவைத்
தவிர வேறு யாருக்கும் இவ்வளவு மகிமை கிடையாது. சொல்கிறார்கள்
இல்லையா, பணம் இருந்தால் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை சென்று
வாருங்கள் என்று?
நீங்கள் சிந்தனை செய்யுங்கள், சொர்க்கத்தில் எவ்வளவு அளவற்ற
செல்வம் நிறைந்திருந்தது! இப்போது அது இல்லை. அனைத்தும்
மறைந்துவிட்டன. தர்மமும் பிரஷ்டமாக (கீழானதாக), கர்ம (செயல்கள்)
கீழானதாகி விடுகின்றன. ஆகவே செல்வம்-பொருட்கள் எல்லாமே மறைந்து
விடுகின்றன. பிறகு கீழே இறங்கிவரத் தொடங்குகின்றனர். பாபா
புரிய வைக்கிறார் - உங்களுக்கு இவ்வளவு செல்வத்தை
அளித்திருந்தேன், உங்களை வைரம் போல் ஆக்கியிருந்தேன். பிறகு
நீங்கள் செல்வம் அனைத்தையும் எங்கே இழந்தீர்கள்? இப்போது பாபா
சொல்கிறார், தங்களின் ஆஸ்தியை முயற்சி செய்து பெற்றுக்
கொள்ளுங்கள். நீங்கள் அறிவீர்கள், பாபா மீண்டும் நமக்கு
சொர்க்கத்தின் இராஜ பதவியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் சொல்கிறார், ஹே குழந்தை களே, என்னை நினைவு
செய்வீர்களானால் உங்கள் மீது படிந்துள்ள கறை நீங்கிவிடும்.
குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, நாங்கள் மறந்து போகிறோம் என்று.
இது என்ன? கன்னியா திருமணம் செய்து கொண்டால், கணவனை எப்போதாவது
மறக்கிறாளா என்ன? குழந்தைகள் எப்போதாவது தந்தையை மறக்கின்றனரா
என்ன? தந்தையோ கொடுக்கின்ற வள்ளல். குழந்தைகள் ஆஸ்தியை அடைய
வேண்டுமானால் அவசியம் நினைவு செய்ய வேண்டும். பாபா புரிய
வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகளே, நினைவு யாத்திரையில் இருப்பீர்களானால் விகர்மங்கள்
விநாசமாகிவிடும். வேறு எந்த ஓர் உபாயமும் கிடையாது. பக்தி
மார்க்கத்தில் தீர்த்த யாத்திரை, கங்கா ஸ்நானம் முதலியவற்றைச்
செய்தே வந்திருக்கிறீர்கள் என்ற போதிலும் ஏணிப்படியில் இறங்கியே
வந்திருக்கிறீர்கள். மேலேயோ போகவே முடியவில்லை. விதி அவ்வாறு
இடம் தருவதில்லை. அனைவருக்கும் கீழே இறங்கும் கலை தான். இன்னார்
முக்தியில் சென்றுவிட்டார்கள் எனச் சொல்கின்றனர் என்றால்,
அவர்கள் பொய் தான் சொல்கின்றனர். திரும்பி யாரும் செல்ல
முடியாது. பாபா வந்துள்ளார், உங்களை 16 கலை சம்பூர்ணமாக
ஆக்குவதற்காக. நீங்கள் தான் பாடி வந்தீர்கள், நற்குணம் இல்லாத
எங்களிடம்.......... இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா குணவான்
ஆக்குகிறார். நாம் தான் குணவான் களாக, பூஜைக்குரியவர்களாக
இருந்தோம். நாம் ஆஸ்தி பெற்றிருந்தோம். 5000 ஆண்டுகள் ஆகிறது.
பாபாவும் சொல்கிறார், உங்களுக்கு நான் ஆஸ்தி கொடுத்துவிட்டுச்
சென்றிருந்தேன். சிவஜெயந்தி, இரக்ஷ்ô பந்தன், தசரா
முதலியவற்றைக் கொண்டாடவும் செய் கின்றனர். பிறகும் கூட எதையும்
புரிந்து கொள்வதில்லை. அனைத்தையும் மறந்துவிடுகின்றனர். பிறகு
பாபா வந்து நினைவுப் படுத்துகிறார். நீங்கள் தான் அதுபோல்
இருந்தீர்கள். பிறகு நீங்கள் தான் இராஜ்ய பாக்கியத்தை
இழந்திருக்கிறீர்கள். பாபா புரிய வைக்கிறார் - இப்போது இந்த
முழு உலகமும் பழைய, இற்றுப் போனதாக உள்ளது. உலகமோ இதே தான். இதே
பாரதம் புதியதாக இருந்தது, இப்போது பழைய தாக ஆகியிருக்கிறது.
சொர்க்கத்தில் சதா சுகம் இருக்கும். பிறகு துவாபர
யுகத்திலிருந்து எப்போது துக்கம் ஆரம்பமாகிறதோ, அப்போது இந்த
வேத-சாஸ்திரங்கள் முதலியவற்றை உருவாக்கு கின்றனர். பக்தி
செய்து-செய்தே எப்போது நீங்கள் பக்தியை முடிக்கிறீர்களோ,
அப்போது பகவான் வந்துள்ளார் இல்லையா? பிரம்மாவின் பகல்,
பிரம்மாவின் இரவு. பாதிப் பாதி இருக்கும் அல்லவா? ஞானம் என்பது
பகல், பக்தி என்பது இரவு. அவர்களோ, கல்பத்தின் ஆயுளைத்
தலைகீழாக ஆக்கி வைத்துள்ளனர்.
ஆக, முதல்-முதலில் நீங்கள் அனைவருக்கும் பாபாவின் மகிமையை
அமர்ந்து சொல்லுங்கள். பாபா ஞானக் கடலாக, சாந்திக் கடலாக
உள்ளார். கிருஷ்ணரைப் தூய்மையாக்குபவர் என்றோ சுகத்தின் கடல்
என்றோ சொல்ல மாட்டார்கள். அவருடைய மகிமையே தனிப்பட்டது.
இரவு-பகலுக்குள்ள வேறுபாடு. சிவனை பாபா என்று தான்
அழைக்கின்றனர். கிருஷ்ண பாபா என்ற வார்த்தையே அழகாக இல்லை.
எவ்வளவு பெரிய பிழை! பிறகு சின்னச் சின்னப் பிழைகள் செய்தே 100
சதவிகிதப் பிழைகள் ஆகிவிட்டன. பாபா சொல்கிறார் -
சந்நியாசிகளிடமிருந்து ஒருபோதும் இந்த வியாபாரம் (பொருட்கள்)
கிடைக்காது. அது துறவற மார்க்கத்தைச் சேர்ந்தது. நீங்கள் இல்லற
மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் சம்பூர்ண நிர்விகாரியாக
இருந்தீர்கள். விகார மற்ற உலகமாக இருந்தது. இது விகாரி உலகம்.
பிறகு கேட்கின்றனர் - சத்யுகத்தில் குழந்தைகள் பிறப்பதில்லையா
என்ன? அங்கேயும் கூட விகாரம் இருந்தது என்கின்றனர். அட, அதுவோ
சம்பூர்ண நிர்விகாரி உலகம். சம்பூர்ண நிர்விகாரி பிறகு எப்படி
விகாரி ஆக முடியும்? பிறகு சத்யுகத்தில் இவ்வளவு மனிதர்கள்
எப்படி இருக்க முடியும்? அங்கே இவ்வளவு மனிதர்கள் இருப்பதில்லை.
பாரதம் தவிர வேறு எந்த ஒரு கண்டமும் இருக்காது. நாங்கள் இதை
ஏற்றுக் கொள்ள முடியாது எனச் சொல்லவும் செய்கின்றனர். உலகமோ
எப்போதுமே நிறைந்திருக்கும், எதையும் அவர்கள் புரிந்து
கொள்வதில்லை. பாபா புரிய வைக்கிறார், பாரதம் கோல்டன் ஏஜாக (சொர்க்கமாக)
இருந்தது. இப்போதோ அயர்ன் ஏஜ் (கலியுகம்), கல் புத்தி! இப்போது
குழந்தைகள் நீங்கள் டிராமா பற்றிப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.
காந்தி முதலிய அனைவரும் இராம இராஜ்யத்தை விரும்பினர். ஆனால்
காட்டுகின்றனர், மகாபாரத யுத்தம் நடந்தது. அவ்வளவு தான், பிறகு
விளையாட்டு முடிந்தது. பிறகு என்னவாயிற்று? எதையும் காட்டவில்லை.
பாபா வந்து இதைப் புரிய வைக்கிறார். இதுவோ முற்றிலும் எளிதாகப்
புரிந்து கொள்ளக்கூடியது. சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர் -
அப்படியானால் நிச்சயமாக சிவபாபா வருகிறார். அவர் ஹெவன்லி காட்
ஃபாதர். ஆகவே நிச்சயமாக சொர்க்கத்தின் கேட்டைத் திறப்பதற்காக
வருவார். அதுவும் நரகம் இருக்கும்போது தான் வருவார்.
சொர்க்கத்தின் கதவைத் திறந்து நரகத்தின் கதவை மூடிவிடுவார்.
சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டால் நிச்சயமாக அனைவரும்
சொர்க்கத்திற்குத் தான் வருவார்கள். இவ்விஷயங்கள் ஒன்றும்
கடினமானவை அல்ல. மகிமை ஒரு தந்தைக்கு மட்டுமே! சிவபாபாவினுடைய
ஒரே ஒரு கடை தான் உள்ளது. அவர் எல்லையற்ற தந்தை. எல்லையற்ற
தந்தை மூலம் பாரதத்திற்கு சொர்க்கத்தின் சுகம் கிடைக்கின்றது.
.எல்லையற்ற தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். நிச்சயமாக
எல்லையற்ற சுகம் இருந்தது. பிறகு நாம் ஏன் நரகத்தில் இருக்
கிறோம்? இதை யாருமே அறிந்திருக்க வில்லை. பாபா புரிய வைக்கிறார்,
அதாவது நீங்கள் தான் இருந்தீர்கள். பிறகு நீங்கள் தான் கீழே
விழுந்திருக்கிறீர்கள். தேவதைகள் தான் 84 பிறவிகள் எடுக்க
வேண்டியுள்ளது. இப்போது வந்து தூய்மையை இழந்துவிட்டனர். அவர்கள்
தான் மீண்டும் தூய்மையாக வேண்டும். பாபாவுக்கும் ஜென்மம்
என்றால் இராவண னுக்கும் ஜென்மம் உள்ளது. இது யாருக்கும்
தெரியாது. யாரிடம் வேண்டு மானாலும் கேளுங்கள் - இராவணனை
எப்போதிருந்து எரிக்கிறீர்கள்? அப்போது சொல்வார்கள், அதுவோ
காலம் காலமாக எரிக்கப்பட்டே வந்துள்ளது. இந்த இரகசியங்கள்
அனைத்தும் பாபா புரிய வைக்கிறார். அந்த பாபாவின் ஒரு கடைக்குத்
தான் மகிமை உள்ளது. சுகம்-சாந்தி-தூய்மை மனிதரிடமிருந்து
மனிதருக்குக் கிடைக்க முடியாது. ஒருவருக்கு மட்டும் சாந்தி
கிடைத்தது என்பதில்லை. இன்னாருக்கு சாந்தி கிடைத்தது என்று பொய்
சொல்கின்றனர். அட, சாந்தியோ சாந்திதாமத்தில் தான் கிடைக்கும்.
இங்கோ ஒருவருக்கு சாந்தி இருக்கும், பிறகு மற்றவர் அசாந்தியை
உருவாக் கினால் பிறகு சாந்தியில் இருக்க முடியாது.
சுகம்-சாந்தி-தூய்மை அனைத்துப் பொருட்களின் வியாபாரி ஒரே ஒரு
சிவபாபா மட்டுமே. அவரிடம் யார் வேண்டு மென்றாலும் வந்து
வியாபாரம் செய்யலாம். அவர் (தந்தை) வியாபாரி என்று
சொல்லப்படுகிறார், தூய்மை, சுகம்-சாந்தி-செல்வம் அனைத்தும்
அவரிடம் உள்ளன. கிடைக்காத எந்த ஒரு பொருளும் இல்லை.
சொர்க்கத்தின் இராஜ்யத்தை நீங்கள் அடைகிறீர்கள். பாபாவோ
கொடுப்பதற்காகவே வந்துள்ளார் எடுத்துக் கொள்பவர்கள்
எடுத்து-எடுத்துக் களைத்துப் போகின்றனர். நான் வருவதே
கொடுப்பதற்காக. நீங்கள் பெற்றுக் கொள்வதில் குளிர்ந்து
விடுகிறீர்கள். குழந்தைகள் சொல்கின்றனர் - பாபா, மாயாவின் புயல்
வருகிறது. ஆம், பதவியும் மிக உயர்ந்ததாகப் பெற வேண்டும்.
சொர்க்கத்தின் எஜமானர் களாக நீங்கள் ஆக வேண்டும். இது குறைந்த
விஷயமா என்ன? ஆகவே முயற்சி செய்ய வேண்டும். ஸ்ரீமத் படி நடந்து
கொண்டே இருங்கள். உங்களுக்கு என்ன பொருட்கள் கிடைக் கின்றனவோ,
அவற்றை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். தானம் செய்ய
வேண்டும். தூய்மையாக வேண்டுமானால் 5 விகாரங்களின் தானம் அவசியம்
கொடுக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். பாபாவை நினைவு
செய்ய வேண்டும். அப்போது தான் கறை நீங்கும். நினைவு தான்
முக்கியமானது. உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம், பாபா, நாங்கள்
விகாரத்தில் ஒருபோதும் செல்லமாட்டோம். யார் மீதும் கோபப்பட
மாட்டோம். ஆனால் நினைவில் அவசியம் இருக்க வேண்டும்.
இல்லையென்றால் இவ்வளவு பாவங்கள் எப்படி விநாசமாகும்? மற்றப்படி
ஞானமோ மிகவும் சுலபம். 84 பிறவிச் சக்கரத்தை எப்படிச் சுற்றி
வந்தோம்? இதை யாருக்கு வேண்டு மானாலும் நீங்கள் புரிய வைக்க
முடியும். மற்றபடி நினைவு யாத்திரையில் முயற்சி தேவைப்படுகிறது.
பாரதத்தின் புராதன யோகம் புகழ் பெற்றது. என்ன ஞானம் தருகிறார்?
மன்மனாபவ, அதாவது என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் உங்கள்
விகர்மங்கள் விநாச மாகிவிடும். நீங்கள் பாடவும் செய்தீர்கள்,
நீங்கள் எப்போது வருகிறீர்களோ, அப்போது நாங்கள் மற்ற சங்கத்தை
எல்லாம் விட்டு உங்களுடைய ஒரு சங்கத்தில் இணைவோம். உங்கள் மீது
பலி (முழு சமர்ப்பணம்) ஆவோம். உங்களைத் தவிர வேறு யாரையும்
நினைவு செய்ய மாட்டோம். உறுதிமொழி எடுத்துக்
கொண்டிருக்கிறீர்கள் பிறகு ஏன் மறந்துவிடு கிறீர்கள்? சொல்லவும்
செய் கின்றனர், கைகள் வேலை செய்து கொண்டி ருந்தாலும் மனம்
அவரிடம் இருக்க வேண்டும்........ கர்மயோகியோ நீங்கள் தான்.
தொழில் முதலியவற்றைச் செய்து கொண்டே புத்தியோகத்தை பாபாவிடம்
ஈடுபடுத்த வேண்டும். நாயகனாகிய பாபா தாமே சொல்கிறார்,
நாயகிகளாகிய நீங்கள் அரைக்கல்பமாக நினைவு செய்திருக்கிறீர்கள்.
இப்போது நான் வந்திருக்கிறேன். என்னை நினைவு செய்யுங்கள். இந்த
நினைவைத் தான் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள். இதில் தான்
முயற்சி உள்ளது. கர்மாதீத் நிலை ஆகிவிட்டாலோ பிறகு இந்த
சரீரத்தையே விட வேண்டியதிருக்கும். எப்போது இராஜதானி ஸ்தாபனை
ஆகிவிடுமோ, அப்போது நீங்கள் கர்மாதீத் நிலையை அடைவீர்கள்.
இப்போதோ அனைவரும் புருஷார்த்திகள் (முயற்சி செய்பவர்கள் தான்).
அனைவரைக் காட்டிலும் அதிகமாக மம்மா-பாபா நினைவு செய்கின்றனர்.
சூட்சும வதனத்திலும் அவர்களைப் பார்க்க முடிகிறது.
பாபா புரிய வைக்கிறார் - நான் யாருக்குள் பிரவேசமாகிறேனோ,
அவருக்கு இது அநேக ஜென்மங் களின் கடைசி ஜென்மம். அவரும் கூட
புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறார். கர்மாதீத் நிலையை
இப்போதே யாரும் அடைய முடியாது. கர்மாதீத் நிலை ஏற்பட்டு
விடுமானால் பிறகு இந்த சரீரம் இருக்க முடியாது. பாபாவோ மிக
நன்றாகப் புரிய வைக்கிறார். இப்போது புரிந்து கொள்பவர்களின்
புத்தியைப் பொருத்து உள்ளது. ஹெவன்லி காட் ஃபாதர் ஒருவர் தான்.
அவரிடம் தான் ஞானத்தின் அனைத்துப் பொருட்களும் உள்ளன. அவர் தான்
மந்திரவாதி. வேறு யாரிடமும் சுகம்-சாந்தி-தூய்மையின் ஆஸ்தி
கிடைக்காது. பாபா மிக நன்றாகப் புரிய வைக்கிறார். குழந்தை கள்
தாரணை செய்து மற்றவர்களை தாரணை செய்ய வைக்க வேண்டும். எவ்வளவு
தாரணை செய்கின்றனரோ, அவ்வளவு ஆஸ்தி பெறுகின்றனர். நாளுக்கு நாள்
மிகவும் புதிதான (மனம் குளிரக்கூடிய) பொருட்கள் கிடைக்கின்றன.
இலட்சுமி-நாராயணரைப் பாருங்கள், எவ்வளவு இனிமையானவர்கள்!
அவர்களைப் போல் இனிமையானவர்களாக ஆக வேண்டும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
வேறு எந்த ஒரு சத்சங்கத்திலும் இதுபோல் சொல்கிறார்களா என்ன? இது
நம்முடைய முற்றிலும் புதியதொரு மொழி (வார்த்தை). இது
ஸ்பிரிச்சுவல் நாலெட்ஜ் (ஆன்மிக ஞானம்) எனச் சொல்லப்படுகின்றது.
நல்லது!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) பாபாவிடமிருந்து கிடைத்துள்ள சுகம்-சாந்தி-தூய்மை ஆவதற்கான
பொருட்களை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். முதலில் விகாரங்களை
தானம் செய்து தூய்மையாக வேண்டும். பிறகு அழிவற்ற ஞான
செல்வத்தின் தானம் செய்ய வேண்டும்.
2) தேவதைகள் போல் இனிமையானவராக ஆக வேண்டும். பாப்தாதாவிடம்
செய்துள்ள உறுதிமொழியை சதா நினைவில் வைக்க வேண்டும். மேலும்
பாபாவின் நினைவில் இருந்து விகர்மங்களையும் விநாசம் செய்ய
வேண்டும்.
வரதானம்:
நிமித்தம் (கருவி) என்ற உணர்வின் நினைவின் மூலமாக, தனது ஒவ்வொரு
சங்கல்பத்தின் மீதும் கவனம் வைக்கக்கூடிய, நிவாரண (தீர்வு)
சொரூபமாக ஆகுக.
நிமித்தமாக (பொறுப்பில்) இருக்கும் ஆத்மாக்கள் மீது அனைவரின்
பார்வையும் இருக்கும், எனவே நிமித்தமாக இருப்பவர்கள் விசேஷமாகத்
தனது ஒவ்வொரு சங்கல்பத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய
கட்டாயம் இருக்கின்றது. நிமித்தமாக இருக்கும் குழந்தைகளே
ஏதேனும் காரணங் களைக் கூறினால், அவர்களைப் பின்பற்றுபவர்களும்
பல காரணங்களைக் கூறுவார்கள். நிமித்த மாக இருப்பவர்களிடம்
ஏதேனும் குறை இருக்கிறது என்றால் அதை மறைக்க முடியாது, எனவே
விசேஷமாகத் தனது எண்ணம், சொல் மற்றும் செயலில் கவனம் செலுத்தி
தீர்வு சொரூபமாக ஆகுங்கள்.
சுலோகன்:
யார் தனது குணங்கள் அல்லது விசேஷங்களின் (சிறப்புகள்) மீதும்
கூட - அகந்தை அற்றவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே ஞானம்
நிறைந்த ஆத்மாக்கள்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும் பணிவு என்ற
குணங்களை தாரணை செய்யுங்கள்
எப்பொழுது, தன்னுடைய அல்லது மற்றவர்களின் - கடந்த காலத்தைப்
பார்க்காமல், உள்ளிருக்கும் சமஸ்காரங்களை - எளிமையாகவும்
பணிவாகவும் மாற்றுகின்றீர்களோ, அப்பொழுது வாழ்க்கை யில் இனிமை
என்ற குணம் வரும். எளிமையான ஆத்மாவின் குணம் - இனிமையானதாகத்
தான் இருக்கும். அவர்களின் கண்களில் இனிமை, முகத்தில் இனிமை
மற்றும் நடத்தையில் இனிமை என்பது வெளிப்படையாகத் தென்படும்.
இனிமை மற்றும் பணிவு - ஆகிய இந்த இரண்டு விஷே குணங்களின்
தாரணையின் மூலம் எப்பொழுதும் - விஷ்வ கல்யாணகாரி, மகாதானி
மற்றும் வரதானி ஆகி விடுவீர்கள் மேலும் மிக எளிதாக அன்பிற்கான
(பாபா மீது கொண்ட அன்பிற்கான) ஆதாரத்தை கொடுக்க முடியும்.