02-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் டபுள்
அஹிம்சாவாதிகள் (தீங்கு இழைக்காதவர்கள்) ஆன்மீக சேனைகள்.
நீங்கள் ஸ்ரீமத்படி உங்களது தெய்வீக இராஜாங்கத்தை ஸ்தாபிக்க
வேண்டும்.
கேள்வி:
ஆன்மீக சேவாதாரி குழந்தைகளாகிய
நீங்கள் எந்த விஷயத்தின் எச்சரிக்கையை எல்லோருக்கும்
கொடுக்கிறீர்கள்?
பதில்:
நீங்கள் இது அதே மகாபாரத போரின்
நேரமாகும் என்று எல்லோருக்கும் எச்சரிக்கை கொடுக்கிறீர்கள்.
இப்பொழுது இந்த பழைய உலகம் அழியப்போகிறது. தந்தை புது உலகத்தின்
ஸ்தாபனை செய்வித்துக் கொண்டிருக்கிறார். விநாசத்திற்குப் பிறகு
வெற்றி முழக்கம் ஏற்படும். விநாசத்திற்கு முன்னதாக அனைவருக்கும்
தந்தையின் அறிமுகம் எப்படி கிடைக்குமாறு செய்யலாம் என்பது பற்றி
நீங்கள் தங்களுக்குள் ஒன்று சேர்ந்து ஆலோசிக்க வேண்டும்.
பாடல்:
நீ இரவெல்லாம் உறங்கியே இழந்தாய்...
ஓம் சாந்தி.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார் என்பதை தந்தை புரிய
வைத்து கொண்டி ருக்கிறார். பிறகு அவரை உயர்ந்ததிலும் உயர்ந்த "கமாண்டர்
இன் சீஃப்" (தளபதி) என்று வேண்டு மானாலும் கூறலாம். ஏனெனில்
நீங்கள் சேனைகள் அல்லவா? உங்களுடைய சுப்ரீம் கமாண்டர் யார்?
இரண்டு சேனைகள் உள்ளன என்பதையும் அறிந்துள்ளீர்கள். அது ஸ்தூல
படை. நீங்கள் ஆன்மீக படை! அது எல்லைக்குட்பட்டது. நீங்கள்
எல்லையில்லாத படையினர். உங்களில் கமாண்டர் கூட இருக்கிறார்.
ஜெனரல் கூட இருக்கிறார். லெஃப்டினென்ட் கூட இருக்கிறார். நாம்
ஸ்ரீமத்படி இராஜாங்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம்
என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். சண்டை ஆகியவற்றின் விஷயமோ
எதுவும் இல்லை. நாம் முழு உலகத்தின் மீது மீண்டும் நம்முடைய
தெய்வீக ராஜ்யத்தை ஸ்ரீமத்படி ஸ்தாபனை செய்து கொண்டி ருக்கிறோம்.
கல்ப கல்பமாக நமது இந்த பாகம் நடிக்கப்படுகிறது. இவை அனைத்துமே
எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஆகும். அந்த யுத்தங்களில்
இந்த விஷயங்கள் கிடையாது. உயர்ந்த திலும் உயர்ந்தவர் தந்தை
ஆவார்.அவரை மந்திரவாதி, ரத்தின வியாபாரி, ஞானக்கடல் என்றும்
கூறுகிறார்கள். தந்தையின் மகிமை அளவற்றது ஆகும். நீங்கள்
புத்தியின் மூலமாக தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும். மாயை
நினைவை மறக்கச் செய்கிறது. நீங்கள் டபுள் அஹிம்சகர்கள்-ஆன்மீக
சேனை ஆவீர்கள். நாம் நமது இராஜ்யத்தை எப்படி ஸ்தாபனை செய்ய
வேண்டும் என்ற இதே சிந்தனை உங்களுக்கு உள்ளது. டிராமா அவசியம்
செய்விக்கும். புருஷார்த்தமோ செய்ய வேண்டி உள்ளது அல்லவா? நல்ல
நல்ல குழந்தைகள் தங்களுக்குள் ஆலோசிக்க வேண்டும். மாயையோடு
யுத்தம் உங்களுடையது கடைசி வரை நடந்து கொண்டே இருக்கும்.
அவசியம் மகாபாரத போர் நிகழப் போகிறது என்பதையும்
அறிந்துள்ளீர்கள். இல்லை என்றால் பழைய உலகத்தின் விநாசம்
எவ்வாறு ஆகும்.பாபா நமக்கு ஸ்ரீமத் அளித்துக் கொண்டி ருக்கிறார்.
குழந்தைகளாகிய நாம் மீண்டும் நமது ராஜ்ய பாக்கியத்தை ஸ்தாபிக்க
வேண்டும். இந்த பழைய உலகத்தின் விநாசம் ஆகி மீண்டும் பாரதத்தில்
வெற்றி முழக்கம் ஆக வேண்டி உள்ளது. அதற்காக நீங்கள் கருவியாக
ஆகி உள்ளீர்கள். எனவே தங்களுக்குள் சந்திக்க வேண்டும். எப்படி
எல்லாம் நாம் சேவை செய்யலாம். இப்பொழுது இந்த பழைய உலகத்தின்
விநாசம் ஆகப் போகிறது என்று அனைவருக்கும் தந்தையின் செய்தியைக்
கூற வேண்டும். தந்தை புதிய உலகத்தின் ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறார். லௌகீக தந்தை கூட புதிய வீடு கட்டுகிறார்
என்றால், குழந்தைகள் குஷி அடைகிறார்கள். பழைய உலகத்தின் விநாசம்
கூட எதிரிலேயே உள்ளது. இது அதே மகாபாரத போர் ஆகும். மகாபாரத
போருக்குப் பின்னால் என்ன என்பதை கூட மனிதர்களோ புரிந்து
கொள்வதில்லை. இப்பொழுது நாம் சங்கமத்தில் புருஷோத்தமர் ஆகி
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் இப்பொழுது உணருகிறீர்கள்.
இப்பொழுது புருஷோத்த மராக ஆக்குவதற்காக தந்தை வந்துள்ளார்.
இதில் யுத்தம் ஆகியவற்றின் எந்த விஷயமும் கிடையாது. குழந்தைகளே!
தூய்மையில்ல்லாத உலகத்தில் ஒருவரும் தூய்மையாக இருக்க முடியாது
மற்றும் தூய்மையான உலகத்தில் பின் ஒருவர் கூட தூய்மையற்றவராக
இருக்க முடியாது என்று தந்தை புரிய வைக்கிறார். இவ்வளவு சிறிய
விஷயத்தைக் கூட யாரும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய
உங்களுக்கு அனைத்து படங்கள் ஆகியவற்றின் சாரம் புரிய
வைக்கப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் ஜபம் தவம்,
தானம்மற்றும் புண்ணியம் ஆகிய என்னவெல்லாம் செய்கிறார்களோ,
அதனால் குறுகிய காலத்திற்கு காக்கை எச்சத்துக்கு சமமான
சுகம்தான் கிடைக்கிறது. ஆனால் யாராவது இங்கு வந்து புரிந்து
கொண்டால் தானே இந்த விஷயங்கள் புத்தியில் பதியும். இது இருப்பதே
பக்தியின் இராஜ்யமாக. ஞானம் சிறிதளவும் கூட கிடையாது. எப்படி
பதீதமான (தூய்மையற்ற) உலகத்தில் தூய்மையானவர் ஒருவரும் கிடையாதோ.
அதே போல ஞானம் கூட ஒருவரைத் தவிர வேறு யாரிடமும் இல்லை. வேத
சாஸ்திரம் ஆகிய அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும்.
ஏணிப்படி இறங்கவே வேண்டி உள்ளது. இப்பொழுது நீங்கள் பிராமணர்
ஆகி உள்ளீர்கள். இதில் வரிசைக் கிரமமான சேனை உள்ளது. மிக
முக்கிய கமாண்டர், கேப்டன், ஜெனரல் ஆகியோராக இருப்பவர்கள்
தங்களுக்குள் சந்தித்து ஆலோசிக்க வேண்டும். நாம் பாபாவின்
செய்தியை எவ்வாறு கொடுக்கலாம். மெஸஞ்ஜர், பைகம்பர் (தூதர்)
அல்லது குரு ஒருவர் தான் என்பது குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது. மற்றது அனைத்துமே பக்தி மார்க்கத்தினுடையது.
நீங்கள் மட்டுமே சங்கம யுகத்தினர் ஆவீர்கள். லட்சியம் நோக்கமான
இந்த லட்சுமி நாராயணர் முற்றிலுமே (அக்யூரேட்) சரியானது ஆகும்.
பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணரின் கதை, மூன்றாவதின் கதை,
அமர கதையைக் கூறுகிறார்கள். இப்பொழுது தந்தை உங்களுக்கு
உண்மையான சத்திய நாராயணரின் கதையைக் கூறி கொண்டிருக்கிறார்.
பக்தி மார்க்கத்தில் இருப்பது கடந்து விட்ட விஷயங்கள். யார்
வாழ்ந்து சென்று விட்டனரோ அவர்களுக்குப் பின்னால் கோவில்கள்
ஆகியவை கட்டு கிறார்கள். எப்படி சிவபாபா இப்பொழுது உங்களுக்குக்
கற்பித்து கொண்டிருக்கிறார். பின்னர் பக்தி மார்க்கத்தில்
நினைவார்த்தம் அமைப்பார்கள். சத்யுகத்தில் சிவன் அல்லது லட்சுமி
நாராயணர் ஆகியோரின் எந்த படமும் இருக்காது. ஞானம் முற்றிலும்
தனியானது, பக்தி தனியாகும். எனவே தந்தை ஹியர் நோ ஈவில், டாக்
நோ ஈவில் (தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பேசாதீர்கள்) என்று
கூறி உள்ளார் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது எவ்வளவு குஷி இருக்கிறது.
புதிய உலகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சுகதாமத்தின்
ஸ்தாபனையின் பொருட்டு பாபா நமக்கு மீண்டும் டைரக்ஷன் (உத்தரவு)
அளித்துக் கொண்டிருக்கிறார். அதில் கூட தூய்மையாகுங்கள் என்ற
முதல் டைரக்ஷன் அளிக்கிறார். எல்லோரும். பதீதமானவர்களே (தூய்மை
அற்றவர்கள்) அல்லவா? எனவே நல்ல நல்ல குழந்தைகள் தங்களுக்குள்
ஒன்று சேர்ந்து சேவையை எப்படி அதிகரிக்கலாம், ஏழைகளுக்கு எப்படி
செய்தி அளிக்கலாம் என்று ஆலோசிக்க வேண்டும். தந்தையோ முந்தைய
கல்பத்தைப் போல வந்துள்ளார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார்.
இராஜாங்கம் அவசியம் ஸ்தாபனை ஆக வேண்டி உள்ளது. அவசியம் புரிந்து
கொள்வார்கள். தேவி தேவதா தர்மத்தினராக இல்லை என்றால் புரிந்து
கொள்ள மாட்டார்கள். விநாச காலத்தில் இறைவனிடம் அன்பில்லாத
புத்தி உடையவர்களாக இருப்பார்கள் அல்லவா? அவர் நமது தலைவர்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே நீங்கள்
விகாரத்திலும் போகக் கூடாது. சண்டை சச்சரவும் செய்யக் கூடாது.
உங்களுடைய பிராமண தர்மம் மிகவும் உயர்ந்தது ஆகும். அவர்கள்
சூத்திர தர்மத்தினர். நீங்கள் பிராமண தர்மத்தினர். நீங்கள் (குடுமி)
உச்சி. அவர்கள் கால். குடுமிக்கும் மேலே இருப்பவர்
உயர்ந்ததிலும் உயர்ந்த நிராகார பகவான் ஆவார். இந்த கண்களால்
பார்க்க முடியாத காரணத்தால் விராட ரூபத்தில் குடுமி (பிராமணர்கள்)
மற்றும் சிவபாபாவைக் காண்பிப்பது இல்லை. தேவதை, க்ஷத்திரியர்,
வைசியர் மற்றும் சூத்திரர் என்று மட்டுமே கூறுகிறார்கள். யார்
தேவதை ஆகிறார் களோ அவர்களே மீண்டும் புனர் ஜென்மம் எடுத்து
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆகிறார்கள். விராட
ரூபத்தின் பொருள் கூட யாருக்கும் தெரியாது. இப்பொழுது நீங்கள்
புரிந்துள்ளீர்கள். எனவே (கரெக்ட்) சரியான சித்திரத்தை
உருவாக்க வேண்டும். சிவபாபாவும் காண்பிக்கப்பட்டுள்ளது மற்றும்
பிராமணர்களையும் காண்பித்துள்ளீர்கள். தன்னை ஆத்மா என்று
உணர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள் என்ற இந்த செய்தியை
நீங்கள் இப்பொழுது அனைவருக்கும் அளிக்க வேண்டும். மெஸேஜ் (செய்தி)
அளிப்பது உங்களுடைய வேலை ஆகும். எப்படி தந்தையின் மகிமை
அளவற்றதோ அதே போல பாரதத்திற்கும் கூட மிகுந்த மகிமை உள்ளது. இது
கூட யாராவது 7 நாட்கள் கேட்டால் தான் புத்தியில் பதியும்.
நேரமில்லை என்கிறார்கள். அட, அரைக் கல்பம் கூப்பிட்டு கொண்டே
வந்துள்ளீர்கள். இவ்பொழுது அவர் பிராக்டிகலாக (நடைமுறையில்)
வந்து விட்டுள்ளார். தந்தை வர வேண்டியதே கடைசியில் தான்!
இதுவும் பிராமணர்களாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக
முயற்சிக்கேற்றபடி புரிந்துள்ளீர்கள். படிப்பு ஆரம்பித்த உடனேயே
நிச்சயம் ஏற்பட்டது. பிரியதரிசனர் வந்துள்ளார். யாரை நீங்கள்
அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவசியம் ஏதாவதொரு சரீரத்தில்
வந்திருக்கக் கூடும். அவருக்கு தனக்கென்று சரீரமோ கிடையாது.
நான் இவருக்குள் பிரவேசம் செய்து குழந்தைகளாகிய உங்களுக்கு
சிருஷ்டி சக்கரத்தின், படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தைத்
தருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இது வேறு யாருக்கும்
தெரியாது. இது கல்வி ஆகும். மிகவும் சுலபமாக ஆக்கி புரிய
வைக்கிறார். நான் உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்குகிறேன்
என்று பாபா கூறுகிறார். கல்ப கல்பமாக உங்களைப் போல
தூய்மையானவர்கள் மற்றும் சுகமானவர்கள் வேறு யாரும் கிடையாது.
குழந்தைகளாகிய நீங்கள் இச்சமயம் அனைவருக்கும் ஞான தானம்
அளிக்கிறீர் கள். தந்தை உங்களுக்கு ரத்தினங்களின் தானம்
அளிக்கிறார்.நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கிறீர் கள். பாரதத்தை
சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். நீங்கள் உங்களுடைய உடல் மனம்
பொருளால் ஸ்ரீமத்படி பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக்
கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு உயர்ந்த காரியம் ஆகும். நீங்கள்
மறைமுகமான சேனை ஆவீர்கள். யாருக்குமே தெரியாது. நாம் உலக
அரசாட்சியைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். ஸ்ரீமத் மூலமாக சிறந்தவர்களாக ஆகிறீர்கள்.
என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று இப்பொழுது தந்தை
கூறுகிறார். கிருஷ்ணரோ கூற முடியாது. அவரோ (பிரின்ஸ்) இளவரசராக
இருந்தார். நீங்கள் இளவரசர் ஆகிறீர்கள் அல்லவா? சத்யுக
திரேதாவில் பவித்திர இல்லற மார்க்கம் இருக்கும். அபவித்திர
இராஜாக்கள் பவித்திர இராஜா இராணியான லட்சுமி நாராயணருக்கு பூஜை
செய்கிறார் கள். பவித்திர (விகாரமற்ற) இல்லற மார்க்கத்தினரின்
இராஜ்யம் நடக்கிறது. பிறகு ஏற்படுவது தூய்மையற்ற (அபவித்திரமான)
இல்லற மார்க்கம். பாதி பாதி ஆகும் அல்லவா? பகல் மற்றும் இரவு.
லட்சக்கணக்கான வருடங்களின் விஷயமாக இருந்திருந்தால் பிறகு பாதி
பாதியாகவோ ஆக முடியாது. லட்சக்கணக்கான வருடங்களாக
இருந்திருந்தால் உண்மையில் தேவதா தர்மத்தினராக இருந்து தங்களை
இந்து என்று அழைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிகவும்
அதிகமாக இருக்க வேண்டும். கணக்கற்றதாக இருக்க வேண்டும்.
இப்பொழுதோ கணக் கிடுகிறார்கள் அல்லவா? இது நாடகத்தில் பொருந்தி
உள்ளது. மீண்டும் நடக்கும். மரணம் எதிரிலேயே உள்ளது. இது அதே
மகா பாரதப் போர் ஆகும்.எனவே தங்களுக்குள் ஒன்று சேர்ந்து
சேவையின் திட்டம் தீட்ட வேண்டும். சேவை செய்து கொண்டே
இருக்கிறீர்கள்? புதுப் புது படங்கள் வெளிப்படுகின்றன.
கண்காட்சி கூட செய்கிறீர்கள். நல்லது. பின் என்ன செய்யலாம்?.
நல்லது. ஆன்மீக மியூசியம் அமையுங்கள். சுயம் தாங்களே பார்த்து
விட்டுச் சென்றார்கள் என்றால் மற்றவர்களை அனுப்புவார்கள்.
ஏழைகள் அல்லது பணக்காரர்கள், தர்மத்திற்கென்று ஒதுக்குகிறார்
கள் அல்லவா? பணக்காரர்கள் அதிகமாக ஒதுக்குவார்கள். இங்கும்
அவ்வாறே. ஒருவர் ஒரு ஆயிரம் தருவார், ஒருவர் குறைவாக! ஒருவரோ 2
ரூபாய் கூட அனுப்பி விடுகிறார். ஒரு ரூபாய்க்கு செங்கல்
வாங்குங்கள் என்று கூறுவார்.. ஒரு ரூபாயை 21 பிறவிகளுக்கு
சேமிப்பு செய்து விடுங்கள். இது இருப்பது மறைமுகமாக. ஏழைகளுடைய
ஒரு ரூபாய், பணக்காரர் களுடைய ஒரு ஆயிரம் சமமானதாக ஆகி
விடுகிறது. ஏழைகளிடம் இருப்பதே கொஞ்சம், பின் என்ன செய்ய
முடியும். கணக்கு உள்ளது அல்லவா? வியாபாரிகள் தர்மத்திற்கென்று
ஒதுக்கு கிறார்கள். இப்பொழுது என்ன செய்ய வேண்டும் தந்தைக்கு
உதவி செய்ய வேண்டும். தந்தை பிறகு பதிலாக 21 பிறவிகளுக்குக்
கொடுக்கிறார். தந்தை வந்து ஏழைகளுக்கு உதவி செய்கிறார்.
இப்பொழுதோ இந்த உலகமே இருக்காது. எல்லாமே மண்ணோடு மண்ணாகி
விடும். முந்தைய கல்பத்தைப் போல அவசியம் ஸ்தாபனை ஆக வேண்டி
உள்ளது என்பதையும் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளே! தேகத்தின்
எல்லா தர்மங்களையும் தியாகம் செய்து ஒரு தந்தையை நினைவு
செய்யுங்கள் என்று நிராகார தந்தை கூறுகிறார். இந்த பிரம்மா கூட
படைப்பு ஆவார் அல்லவா? பிரம்மா யாருடைய குழந்தை? யார் படைத்தார்?
பிரம்மா விஷ்ணு சங்கரனை எப்படிப் படைக்கிறார் (கிரியேட்) என்பது
கூட யாருக்கும் தெரியாது. தந்தை வந்து சத்தியமான விஷயத்தைப்
புரிய வைக்கிறார். பிரம்மா கூட அவசியம் மனித படைப்பில் தான்
இருப்பார். பிரம்மாவின் வம்சாவளி பாடப்பட்டுள்ளது. பகவான் மனித
சிருஷ்டியின் படைப்பை எப்படி படைக்கிறார் என்பது யாருக்குமே
தெரியாது. பிரம்மாவோ இங்கு வேண்டும் அல்லவா? யாருக்குள் நான்
பிரவேசம் செய்துள்ளேனோ அவர் கூட அநேக பிறவிகளின் கடைசியில்
இருப்பவர் ஆவார் என்று தந்தை கூறுகிறார். இவர் முழுமையாக 84
பிறவிகள் எடுத்துள்ளார். பிரம்மா ஒன்றும் கிரியேட்டர் (படைப்பவர்)
கிடையாது. (கிரியேட்டர்) படைப்பவரோ ஒரே ஒரு நிராகாரமானவர் தான்
ஆவார். ஆத்மாக்கள் கூட நிராகாரமானவர்களே ஆவார்கள். அதுவோ அநாதி
ஆகும். யாருமே படைக்க வில்லை. பின் பிரம்மா எங்கிருந்து வந்தார்.
நான் இவருக்குள் பிரவேசம் செய்து பெயரை மாற்றினேன் என்று தந்தை
கூறுகிறார். பிராமணர்களாகிய உங்களுக்குக் கூட பெயர்
மாற்றினார்கள். நீங்கள் இராஜ ரிஷி ஆவீர்கள். ஆரம்பத்தில்
சந்நியாசம் செய்து கூட இருக்க முற்பட்டீர்கள். எனவே பெயர்களை
மாற்றம் செய்து விட்டார். பிறகு பார்த்தார், மாயை சாப்பிட்டு
விடுகிறது. எனவே மாலையை அமைப்பது, பெயரிடுவது எல்லாம் விட்டு
விட்டார்.
தற்காலத்தில் உலகத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மோசடி
உள்ளது. பாலில் கூட மோசடி! உண்மையான பொருளே கிடைப்பதில்லை.
தந்தைக்காகவும் மோசடி. சுயம் தங்களையே பகவான் என்று அழைத்துக்
கொள்ள முற்படுகிறார்கள். இப்பொழுது ஆத்மா யார் பரமாத்மா யார்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களிலும்
கூட வரிசைக் கிரமமாக முயற்சிக்கேற்ப இருக்கிறீர்கள். யார்
எப்படி கற்கிறார்கள் மற்றும் கற்பிக்கிறார்கள் என்ன பதவி
அடைவார்கள் என்பதை தந்தை அறிந்திருக்கிறார். நாம் தந்தை மூலமாக
உலகத்தின் கிரீடமணிந்த இளவரசன் ஆகிக் கொண்டிருக்கிறேன் என்ற
நிச்சயம் உள்ளது என்றால் அது போல புருஷார்த்தம் (முயற்சி)
செய்து காண்பிக்க வேண்டும். நாம் கிரவுன் பிரின்ஸ் ஆனோம். பின்
84 பிறவியின் சக்கரம் சுற்றி வந்தோம். இப்பொழுது மீண்டும்
ஆகிறோம். இது நரகம் ஆகும். இதில் எதுவுமே இல்லை. பிறகு தந்தை
வந்து களஞ்சியங்களை நிரப்பி, கஷ்டம் துக்கத்தை நீக்கி
விடுகிறார். இங்கு பொக்கிஷங்களை நிரப்பி கொள்வதற்காக
வந்துள்ளீர்கள் அல்லவா என்று நீங்கள் எல்லோரையும் கேளுங்கள்.
அமரபுரியில் காலன் வர முடியாது. தந்தை வருவதே களஞ்சியங்களை
நிரம்பியதாகச் செய்து துக்கம் கஷ்டத்தை விலக்குவதற்கு. அது
அமரலோகம் ஆகும். இது மரண உலகம் ஆகும். இது போன்ற இனிமையிலும்
இனிமை யான விஷயங்களைக் கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும்.
வீணானவைகளை அல்ல. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை உலகிற்கு அதிபதியாக ஆக்குவதற்கான கல்வியைக் கற்பிக்க
வந்துள்ளார். எனவே ஒரு பொழுதும் எங்களுக்கு நேரமில்லை என்று
கூறக் கூடாது. ஸ்ரீமத்படி உடல்,மனம் மற்றும் பொருளால் பாரதத்தை
சொர்க்கமாக ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.
2. தங்களுக்குள் மிகவுமே இனிமையிலும் இனிமையான ஞானத்தின்
விஷயங்களைக் கேட்க வேண்டும் மற்றும் கூற வேண்டும். ஹியர் நோ
ஈவில், டாக் நோ ஈவில் -தீயதைக் கேட்காதீர்கள், தீயதை
பேசாதீர்கள் என்ற தந்தையினுடைய இந்த கட்டளை எப்பொழுதும்
நினைவி-ருக்கட்டும்.
வரதானம்:
எல்லைக்குட்பட்ட அனைத்து ஆசைகள் மீதும் வெற்றி பெறக்கூடிய
காமத்தை வென்று, உலகத்தை வென்றவர் ஆகுக.
காம விகாரத்தின் அம்சம் சர்வ எல்லைக்குட்பட்ட ஆசைகள் ஆகும்.
ஆசைகளில் ஒன்று பொருள்களைப் பற்றியது. இரண்டாவது, மனிதர்கள்
மூலமாக எல்லைக்குட்பட்ட பிராப்திகள் பற்றியது. மூன்றாவது
சம்பந்தங்களை அனுசரித்தல் பற்றியது. நாலாவது சேவா பாவனையில்
எல்லைக்குட்பட்ட ஆசைகளின் உணர்வு. எந்த ஒரு மனிதர் அல்லது
பொருள் மீதும் விசேஷமாகக் கவரப்படுவது - ஆசை இல்லை, ஆனால்
பிடித்திருக்கிறது (நல்லதாகத் தோன்றுகிறது) - இதுவும் காம
விகாரத்தின் அம்சம் தான். எப்போது இந்த சூட்சும அம்சமும் கூட
முடிந்து போகிறதோ, அப்போது காமத்தை வென்று உலகை வென்றவர் எனச்
சொல்வார்கள்.
சுலோகன்:
இதயத்தின் உணர்வு மூலம் திலாராம் பாபாவின் ஆசிர்வாதங்களைப்
பெறுவதற்கு அதிகாரி ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த
சேவைக்கு கருவி ஆகுங்கள்.
மனம், தானே ஒரு சூட்சும சக்தியாக உள்ளது. அது கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டும். அதாவது கட்டளைப்படி காரியமாற்ற வேண்டும்.
அப்போது பாஸ் வித் ஆனர் அல்லது ராஜ்ய அதிகாரி ஆகி விடுவீர்கள்.
சங்கல்ப சக்தியைச் சேமிப்பதற்கு எதை யோசிக்கிறீர்களோ, அதையே
செய்யுங்கள். நிறுத்து என்றதுமே நின்று விட வேண்டும். சேவை
பற்றி யோசித்தால் உடனே சேவையில் ஈடுபட்டு விட வேண்டும்.
பரந்தாமத்தைப் பற்றி யோசித்தீர்கள் என்றால் உடனே பரந்தாமம்
சென்று சேர்ந்து விட வேண்டும். அந்த மாதிரி கட்டுப் படுத்தும்
சக்தியை அதிகப் படுத்துங்கள்