02-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! ஒருபோதும் களைப்படைந்து நினைவு யாத்திரையை விடக்கூடாது, எப்போதும் ஆத்ம - அபிமானியாக இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள், பாபாவினுடைய அன்பைப் பெறுவதற்கு அல்லது இனிமையானவர்களாக ஆவதற்காக நினைவில் இருங்கள்

கேள்வி:
16 கலைகள் சம்பூரணமாக அல்லது முழுமையானவர்களாக ஆவதற்கு எந்தவொரு முயற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்?

பதில்:
எந்தளவிற்கு முடியுமோ தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். அன்புக்கடல் பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் முழுமையானவர்களாக ஆகி விடுவீர்கள். ஞானம் மிகவும் சகஜமாகும். ஆனால் 16 கலைகள் சம்பூரணமானவர்களாக ஆவதற்கு நினைவின் மூலம் ஆத்மாவை கறை/குறை ஏதுமில்லாமல் ஆக்க வேண்டும். ஆத்மா என்று புரிந்து கொள்வதின் மூலம் இனிமையானவர்களாக ஆகி விடுவீர்கள். அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடும்.

பாடல்:
நீங்கள் அன்புக்கடலாக இருக்கின்றீர்கள்.........

ஓம் சாந்தி.
அன்புக்கடல் தன்னுடைய குழந்தைகளையும் அவரைப்போல் அன்புக்கடலாக ஆக்கு கின்றார். நாம் இப்படி லஷ்மி-நாராயணனைப் போல் ஆக வேண்டும் என்பது தான் குழந்தை களுடைய குறிக்கோளாகும். இவர்களை அனைவரும் எவ்வளவு அன்பு பாராட்டுகிறார்கள். பாபா நம்மை இவர்களைப் போல் இனிமையானவர் களாக மாற்றுகின்றார் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். இங்கேயே தான் இனிமையானவர்களாக ஆக வேண்டும் மேலும் நினைவின் மூலம் தான் அவ்வாறு ஆக முடியும். பாரதத்தின் யோகம் புகழ் பாடப்பட்டுள்ளது, இது நினை வாகும். இந்த நினைவின் மூலம் தான் நீங்கள் இவர்களைப் போல் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றீர்கள். இந்த முயற்சியைத் தான் குழந்தைகள் செய்ய வேண்டும். நமக்கு அதிக ஞானம் இருக்கிறது என்ற கர்வத்தில் வராதீர்கள். முக்கியமான விசயம் நினைவாகும். நினைவு தான் அன்பைக் கொடுக்கிறது. மிகவும் இனிமையானவர்களாக, மிகவும் அன்பானவர்களாக ஆக விரும்பு கிறீர்கள், உயர்ந்த பதவி அடைய விரும்புகிறீர்கள் என்றால் முயற்சி செய்யுங்கள். இல்லை யென்றால் அதிகம் பச்சாதாபப் படுவீர்கள், ஏனென்றால் பாபாவின் நினைவில் இருப்பதற்கு இயலாமல் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், களைப்படைந்து விடுகிறார்கள் எனும்போது விட்டு விடுகிறார்கள். ஒன்று ஆத்ம-அபிமானிகளாக இருப்பதற்கு அதிக முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் மிகவும் குறைந்த பதவியை அடைந்து விடுவீர்கள். அந்தளவிற்கு இனிமை யாக ஒருபோதும் ஆக மாட்டீர்கள். மிகக்குறைந்த குழந்தைகள் தான் அன்பால் கவரப்படுகிறார்கள், ஏனென்றால் நினைவில் இருக்கிறார்கள். பாபாவினுடைய நினைவு மட்டும் தான் வேண்டும். எந்தளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு இனிமையானவர்களாக ஆவீர்கள். இந்த லஷ்மி-நாராயணன் கூட முற்பிறவியில் அதிகம் நினைவு செய்தார்கள். நினைவின் மூலம் இனிமையானவர்களாக ஆகியுள்ளார்கள். சத்யுக சூரியவம்சத்தவர் முதல் நம்பர், சந்திரவம்சத்தவர் இரண்டாவது இடத்தில் வந்து விட்டார்கள். இந்த லஷ்மி-நாராயணன் மிகவும் பிரிய மானவர்களாக இருக்கிறார்கள். இந்த லஷ்மி-நாராயணனுடைய முகம் மற்றும் ராமர்-சீதையின் முகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்த லஷ்மி நாராயணனின் மீது ஒருபோதும் யாரும் களங்கம் சுமத்தவில்லை. கிருஷ்ணரின் மீது தவறுதலாக களங்கம் சுமத்தியுள்ளார்கள், இராமர்-சீதையின் மீதும் சுமத்தியுள்ளார்கள்.

எப்போது நான் ஆத்மா என்று புரிந்து கொள்வீர்களோ, அப்போது தான் மிகவும் இனிமையானவர் களாக ஆவீர்கள் என்று பாபா கூறுகின்றார். ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்வதில் மிகுந்த ஆனந்தம் இருக்கிறது. எந்தளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்தளவிற்கு சதோபிர தானமாக, 16 கலைகள் முழுமையானவர் களாக ஆவீர்கள். 14 கலைகள் என்பது குறையுடைய தாகிறது பிறகு மேலும் குறையுடையதாகிக் கொண்டே செல்கிறது. 16 கலைகள் முழுமையான வர்களாக ஆக வேண்டும். ஞானம் முற்றிலும் சகஜமாகும். யார் வேண்டு மானாலும் கற்றுக் கொள்வார்கள். 84 பிறவிகள் கல்பம்-கல்பமாக எடுத்து வந்துள்ளீர்கள். முழுமையாக தூய்மையாக ஆகாத வரை யாரும் இப்போது திரும்பிச் செல்ல முடியாது. இல்லை என்றால் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார், எவ்வளவு முடியுமோ முதலில் நான் ஆத்மா என்ற இந்த விசயத்தை உறுதி செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நாம் நம்முடைய வீட்டில் இருக்கிறோம் என்றால் நாம் சதோபிரதானமாக இருக்கிறோம் பிறகு இங்கே வந்து பிறவி எடுக்கின்றோம். ஒவ்வொருவரும் எத்தனை-எத்தனை பிறவிகள் எடுக்கிறார்கள்! கடைசியில் தமோபிரதானமாக ஆகிறார்கள். உலகத்தின் அந்த சுய மரியாதை குறைந்து கொண்டே செல்கிறது. புதிய கட்டிடம் (வீடு) இருக்கிறது என்றால் அதில் எவ்வளவு சுகம் கிடைக்கிறது, பிறகு அதில் குறைகள் ஏறபடும் போது தான் கலைகள் குறைகிறது. குழந்தைகளாகிய நீங்கள் முழுமையான உலகத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்றால் குறை இல்லாதவர்களாக ஆக வேண்டும். வெறும் ஞானம் முழுமை என்று சொல்ல முடியாது. ஆத்மாவை முழுமையானதாக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யுங்கள் - நான் ஆத்மா, பாபாவின் குழந்தையாக இருக்கின்றேன். உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். மனிதர்கள் தங்களை தேகதாரிகள் என்று புரிந்து கொண்டு குஷியாகிறார்கள். நான் இன்னாருடைய குழந்தையாக இருக்கின்றேன்........ அது அல்பகால போதையாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பாபாவோடு முழுமையாக புத்தியின் தொடர்பை ஈடுபடுத்த வேண்டும், இதில் குழப்பமடையக் கூடாது. வெளி நாட்டிற்கு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஒரு விசயத்தை மட்டும் மனதில் உறுதியாக வையுங்கள், பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா அன்புக்கடலாக இருக்கின்றார். இந்த மகிமை எந்த மனிதனுடையதும் இல்லை. ஆத்மா தன்னுடைய தந்தையின் மகிமை பாடுகிறது. ஆத்மாக்கள் அனைத்தும் தங்களுக்குள் சகோதர- சகோதரர்களாகும். அனைவருக்கும் தந்தை ஒருவரே ஆவார். பாபா அனைவருக்கும் கூறுகின்றார் - குழந்தைகளே, நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள் இப்போது தமோபிரதானமாக ஆகியுள்ளீர்கள். தமோபிரதானமாக ஆன காரணத்தினால் நீங்கள் துக்கமுடையவர்களாகியுள்ளீர்கள். இப்போது ஆத்மாவாகிய எனக்கு பரமாத்மா தந்தை கூறுகின்றார், நீங்கள் முதலில் முழுமையானவர்களாக இருந்தீர்கள். ஆத்மாக்கள் அனைத்தும் அங்கே முழுமை யாகத் தான் இருக்கிறது. நடிப்பு தனிப்பட்டதாக இருக்கலாம், ஆனால் எந்த குறையும் இல்லைதான் அல்லவா. தூய்மை இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாது. சுகதாமத்தில் உங்களுக்கு சுகமும் இருக்கிறது என்றால் அமைதியும் இருக்கிறது, ஆகையினால் தான் உங்களுடைய தர்மம் உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருக்கிறது. அளவற்ற சுகம் இருக்கிறது. நாம் என்னவாக ஆகின்றோம் என்று சிந்தனை செய்து பாருங்கள். சொர்க்கத்திற்கு எஜமானர் களாக ஆகின்றோம். அது வைரத்திற்கு ஒப்பான பிறவியாகும். இப்போது சோழியைப் போன்ற பிறவி யாகும். இப்போது பாபா நினைவில் இருப்பதற்காக குறிப்பால் (சைகை) உணர்த்துகின்றார். எங்களை வந்து தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று தான் நீங்கள் அழைக் கிறீர்கள். சத்யுகத்தில் முழுமையாக விகாரமற்றவர்களாக இருக்கின்றீர்கள். இராமர்-சீதையைக் கூட முழுமையானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் இரண்டாமிடத்திற்கு சென்று விட்டார்கள். நினைவு யாத்திரையில் தேர்ச்சி பெறவில்லை. ஞானத்தில் எவ்வளவு தான் கூர்மை யாக இருந்தாலும், ஒருபோதும் பாபாவிற்கு இனிமையானவர்களாக இருக்க மாட்டார்கள். நினை வில் இருந்தால் தான் இனிமையானவர்களாக ஆவீர்கள். பிறகு பாபா கூட உங்களுக்கு இனிமை யானவராக இருப்பார். படிப்பு முற்றிலும் பொதுவானதாகும், தூய்மையாக ஆக வேண்டும், நினைவில் இருக்க வேண்டும். இதை நல்ல விதத்தில் குறித்துக் கொள்ளுங்கள், நினைவு யாத்திரையில் இருப்பதின் மூலம் ஆங்காங்கே சண்டை சச்சரவுகள் நடப்பது, அகங்காரம் வந்து விடுவது, போன்றவை எல்லாம் ஒருபோதும் நடக்காது. முக்கியமான விசயம் தங்களை ஆத்மா என்று புரிந்து தந்தையை நினைவு செய்யுங்கள். உலகத்தில் மனிதர்கள் எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கிறார்கள். வாழ்க்கையையே விஷம் போலாக்கிக் கொள்கிறார்கள். இந்த வார்த்தை சத்யுகத் தில் இருக்காது. இன்னும் போகப்போக இங்கே மனிதர்களின் வாழ்க்கை இன்னும் விஷமாகிக் கொண்டே செல்லும். இது விஷக்கடலாகும். அனைவரும் மோசமான நரகத்தில் இருக்கிறார்கள், மிகவும் அசுத்தம் இருக்கிறது. நாளுக்கு நாள் அசுத்தம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை அசுத்தமான உலகம் என்று சொல்லப்படுகிறது. ஒருவர் மற்றவருக்கு துக்கம் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் தேக-அபிமானம் எனும் பூதம் இருக்கிறது. காமம் எனும் பூதம் இருக்கிறது. இந்த பூதங்களை விரட்டுங்கள் என்று பாபா கூறுகின்றார். இந்த பூதம் தான் உங்களுடைய முகத்தை கருப்பாக்குகிறது. காம சிதையில் அமர்ந்து கருப்பாகி விடுகிறார்கள் அப்போது தான் பாபா கூறுகின்றார், நான் வந்து ஞான அமிர்த மழை பொழிகின்றேன். இப்போது நீங்கள் என்னவாக ஆகின்றீர்கள்! அங்கே வைரங்களால் ஆன மாளிகைகள் இருக்கின்றன, அனைத்து விதமான பொருட்களும் இருக்கின்றன. இங்கே அனைத்தும் கலப்பட பொருட்களாகும். குருமார்களின் உணவைப் பாருங்கள், அனைத்திலுமிருந்து சாரத்தை எடுத்து விட்டு மீதமுள்ளதை கொடுத்து விடுகிறார்கள். பசுவிற்கு சரியான உணவு கூட கிடைப்பதில்லை. கிருஷ்ணருடைய பசுக்களைப் பாருங்கள் எவ்வளவு முதல்தரமானதாக காட்டுகிறார்கள். சத்யுகத்தில் பசுக்கள் அப்படி இருக்கும் கேட்கவே கேட்காதீர்கள். பார்க்கும்போதே சந்தோஷம் வந்து விடுகிறது. இங்கே ஒவ்வொரு பொருளில் இருந்தும் சாரத்தை எடுத்து விடுகிறார்கள். இது மிகவும் மோசமான அசுத்த மான உலகமாக இருக்கிறது. நீங்கள் இதில் மனதை ஈடுபடுத்தக் கூடாது. நீங்கள் எவ்வளவு விகாரிகளாக ஆகிவிட்டீர்கள் என்று பாபா கூறுகின்றார். சண்டையில் ஒருவர் மற்றவரை கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள். அணுகுண்டுகளை உருவாக்குபவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது, இதன்மூலம் அனைவருடைய வினாசம் நடந்து விடுகிறது. இன்றைய மனிதர்கள் என்னவாக இருக்கிறார்கள், நாளைய மனிதர்கள் என்னவாக இருப்பார்கள் என்று பாபா அமர்ந்து கூறுகின்றார். இப்போது நீங்கள் இடையில் இருக்கிறீர்கள். சத்தியமான சேர்க்கை உயர்த்தும் மோசமான சேர்க்கை தாழ்த்தும். நீங்கள் புருஷோத்தமர்களாக ஆவதற்காக பாபாவின் கையை பிடிக்கிறீர்கள். யாராவது நீந்த கற்றுக் கொள்கிறார்கள் என்றால் கற்றுக் கொடுப்பவரின் கையை பிடிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் தடுமாற்றம் வந்து விடும், இதிலும் கூட கையை பிடிக்க வேண்டும். இல்லையென்றால் மாயை இழுத்துக் கொள்கிறது. நீங்கள் இந்த முழு உலகத்தையும் சொர்க்கமாக்குகின்றீர்கள். தங்களை போதையில் கொண்டு வர வேண்டும். நாம் ஸ்ரீமத்தின்படி நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். மனிதர்கள் அனைவரும் தானம் செய்யத்தான் செய்கிறார்கள். ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள். தீர்த்த யாத்திரை செல்லும்போது வழிகாட்டிகளுக்கு தானம் கொடுக்கிறார்கள், பிடி அவலையாவது கண்டிப்பாக தானம் செய்வார்கள். அவை யனைத்தும் பக்தி மார்க்கத்தில் நடந்து வருகிறது. இப்போது பாபா நம்மை இரட்டை தானம் செய்பவர்களாக மாற்றுகின்றார். மூன்றடி நிலத்தில் நீங்கள் இந்த ஈஸ்வரிய பலகலைக்கழகத்தை, ஈஸ்வரிய மருத்துவமனையை திறங்கள் இதில் மனிதர்கள் வந்து 21 பிறவிகளுக்கு ஆரோக்கியம் அடைவார்கள் என்று பாபா கூறுகின்றார். இங்கே எப்படி-எப்படிப்பட்ட வியாதிகள் இருக்கின்றன. வியாதியில் எவ்வளவு நாற்றமாகி விடுகிறது. மருத்துவ மனையில் பாருங்கள் வெறுப்பு வருகிறது. எவ்வளவு கர்மச்சுமை இருக்கிறது. இந்த துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு பாபா கூறுகின்றார் - நினைவு மட்டும் செய்யுங்கள் வேறு எந்த கஷ்டமும் உங்களுக்கு கொடுப் பதில்லை. குழந்தைகள் நிறைய கஷ்டத்தை பார்த்துள்ளார்கள் என்பதை பாபா தெரிந்துள்ளார். விகார மனிதர் களின் முகமே மாறி விடுகிறது. ஒரேயடியாக பிணம் போலாகி விடுகிறார்கள். குடிகாரனால் எப்படி குடிக்காமல் இருக்க முடிவதில்லை. சாராயத்தின் மூலம் அதிக போதை ஏறுகிறது ஆனால் அல்பகாலத்திற்காகும். இதனால் விகார மனிதர்களின் ஆயுள் எவ்வளவு குறைந்து விடுகிறது. நிர்விகார தேவதைகளின் ஆயுள் சராசரியாக 125-150 ஆண்டுகளாக இருக்கிறது. எப்போதும் ஆரோக்கியமானவர்களாக ஆனீர்கள் என்றால் ஆயுளும் கூட அதிகரிக்கும் அல்லவா. நோயற்ற சரீரமாகி விடுகிறது. பாபா அழிவற்ற மருத்துவர் என்று சொல்லப்படுகிறது. சத்குரு ஞான (ஊசி) கண்மை கொடுத்தார் அஞ்ஞான இருள் விளகியது. தந்தையை தெரிந்திருக்கவில்லை எனவே தான் அஞ்ஞான இருள் என்று சொல்லப்படுகிறது, இது பாரதவாசிகளின் விசயமே ஆகும். கிறிஸ்து எந்த ஆண்டு வந்தார் என்பதை தெரிந்துள்ளார்கள். அவர்களுடைய பட்டியல் முழுவதும் இருக்கிறது. போப்பாண்டவர்கள் வரிசைகிரமமாக கதியில் அமருகிறார்கள். ஒரு பாரதம் மட்டும் தான் யாருடைய வரலாறையும் தெரிந்திருக்க வில்லை. ஹே துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவரே பரமாத்மா, ஹே தாயும் தந்தை யுமானவரே............. என்று அழைக்கிறார்கள். நல்லது தாய்-தந்தையரது வாழ்க்கை வரலாற்றை சொல்லுங்கள் என்றால் எதுவும் தெரியாது.

இது புருஷோத்தம சங்கமயுகம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் இப்போது புருஷோத் தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் எனும்போது முழுமையாக படிக்க வேண்டும். உலகாய மரியாதைகளில் கூட நிறைய மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரம்மா பாபா யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. எவ்வளவு திட்டுகளை வாங்கினார், மனதிலும் வைக்கவில்லை புத்தியிலும் வைக்கவில்லை. அவர் வழியில் போகும் போது பிராமணனாக மாட்டிக் கொண்டார். பாபா பிராமணனாக மாற்றினார் என்றால் திட்டு வாங்க ஆரம்பித்து விட்டார். பஞ்சாயத்து முழுவதும் ஒருபக்கம், தாதா மறுபக்கம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று முழு சிந்தி மக்களின் பஞ்சாயத்தும் கேட்டது. கீதையில் பகவானுடைய மகாவாக்கியம் இருக்கிறது அல்லவா - காமம் மிகப்பெரிய எதிரி, இதன்மீது வெற்றி அடைவதின் மூலம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். இது கீதையின் வார்த்தைகளாகும். காம விகாரத்தை வெல்வதின் மூலம் நீங்கள் உலகத்தை வென்றவர்களாக ஆவீர்கள் என்று என்னிடம் கூட யாரோ சொன்னார்கள். இந்த லஷ்மி-நாராயணன் கூட வெற்றி அடைந்துள்ளார்கள் அல்லவா. இதில் சண்டை போன்றவற்றின் விசயம் இல்லை. உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை கொடுக்க வந்துள்ளேன். இப்போது தூய்மை யாகுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள். நான் தூய்மையாக ஆவேன் என்று மனைவி சொல்வார், கணவன் நான் ஆக மாட்டேன் என்று சொல்வார். ஒன்று அன்னப் பறவையாகவும் மற்றொன்று கொக்காகி விடுகிறது. பாபா வந்து ஞான ரத்தினங்களை எடுக்கக் கூடிய அன்னங் களாக மாற்றுகின்றார். ஆனால் ஒன்று ஆகிறது மற்றொன்று ஆவதில்லை எனும்போது சண்டை நடக்கிறது. ஆரம்பத்தில் அதிக சக்தி இருந்தது. இப்போது அந்தளவுக்கு தைரியம் யாரிடத்திலும் இல்லை. நாங்கள் வாரிசு என்று சொல்கிறார்கள், ஆனால் வாரிசாகும் விசயமே வேறாகும். ஆரம்பத்தில் அதிசயமாக இருந்தது. பெரிய-பெரிய வீட்டைச் சேர்ந்தவர்கள் உடனே விட்டு விட்டு ஆஸ்தியை பெற வந்து விட்டார்கள். எனவே அவர்கள் தகுதியானவர்களாகி விட்டார்கள். முதலில் வந்தவர்கள் அதிசயத்தை செய்தார்கள். இப்போது அப்படிப்பட்டவர்கள் குறைவானவர் களே வருவார்கள். உலகாய மரியாதைகள் அதிகம் இருக்கிறது. யார் ஆரம்பத்தில் வந்தார்களோ அவர்கள் அதிக தைரியத்தை காட்டினார்கள். இப்போது அப்படி தைரியம் வைப்பது மிகவும் கடினமாகும். ஏழைகள் வைக்க முடியும். மாலையில் மணியாக ஆக வேண்டும் என்றால் முயற்சியும் செய்ய வேண்டும். மாலை மிகவும் பெரியதாகும். 8 மணிகளுடையதும் இருக்கிறது, 108 மணிகளுடையதும் இருக்கிறது, பிறகு 16108 மணிகளினுடையதும் இருக்கிறது. மிக-மிக அதிகமாக முயற்சி செய்யுங்கள் என்று பாபா அவரே கூறுகின்றார். தங்களை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள். உண்மையை சொல்வதே இல்லை. யார் தங்களை நல்லவர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ, அவர்களின் மூலம் கூட பாவகர்மங்கள் நடந்து விடுகிறது. ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கிறார்கள். புரிய வைப்பது நன்றாக இருக்கிறது ஆனால் யோகம் இல்லை, மனதால் உயருவதில்லை. நினைவிலேயே இருப்பதில்லை எனும்போது மனதிலும் உயருவதில்லை (இடம் பெறுவதில்லை) தனது நினைவின் மூலம் தான் தந்தையின் நினைவு கிடைக்கும் அல்லவா. ஆரம்பத்தில் உடனே பலியாகி விட்டார்கள். இப்போது பலியாவது குறைந்த விசயம் ஒன்றும் கிடையாது. முக்கியமான விசயம் நினைவாகும், அப்போது தான் குஷியின் அளவு அதிகரிக்கும். எந்தளவிற்கு கலைகள் குறைந்து கொண்டே சென்றதோ அந்த அளவிற்கு துக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இப்போது எந்தளவிற்கு கலைகள் அதிகரிக்குமோ அந்த அளவிற்கு குஷியின் அளவு அதிகரிக்கும். அதிகமாக நினைவு செய்பவர்களுக்கு என்ன பதவி கிடைக்கிறது என்பது போன்ற அனைத்தும் கடைசியில் உங்களுக்கு காட்சியாகத் தெரியும். கடைசியாக நிறைய காட்சிகள் ஏற்படும். எப்போது வினாசம் நடக்குமோ அப்போது நீங்கள் சொர்க்கத்தின் காட்சிகள் எனும் அல்வா சப்பிடுவீர்கள். நினைவை அதிகரியுங்கள் என்று பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார். யாருக்காவது கொஞ்சம் புரிய வைத்தால் பாபா அதில் குஷி அடைவதில்லை. ஒரு பண்டிதருடைய கதை கூட இருக்கிறது அல்லவா. ராமா-ராமா என்று சொல்லிக் கொண்டே தண்ணீரை (ஆற்றை) கடந்து விடலாம் என்று சொன்னார். இது நம்பிக்கை யில் தான் வெற்றி இருக்கிறது என்பதை காட்டுகிறது. தந்தையினிடத்தில் சந்தேகம் வருவதினால் அழிந்து விடுகிறார்கள். பாபாவின் நினைவினால் தான் பாவங்கள் அழிகிறது, இரவும் பகலும் முயற்சி செய்ய வேண்டும். பிறகு கர்மேந்திரியங்கள் சஞ்சலம் நின்று விடும். இதில் அதிக உழைப்பு இருக்கிறது. நிறைய பேருடைய நினைவின் சார்ட் இருப்பதே இல்லை. அப்படி யென்றால் அடித்தளமே இல்லை. எவ்வளவு முடியுமோ, எப்படியாவது நினைவு செய்ய வேண்டும் அப்போது தான் சதோபிரதானமாக, 16 கலை முழுமையானவர்களாக ஆவீர்கள். தூய்மையின் கூடவே நினைவு யாத்திரையும் வேண்டும். தூய்மையாக இருப்பதின் மூலம் தான் நினைவில் இருக்க முடியும். இந்த பாயிண்டை நல்ல விதத்தில் தாரணை செய்யுங்கள். பாபா எவ்வளவு அகங்காரமற்றவராக இருக்கின்றார். இன்னும் போகப்போக அனைவரும் உங்களுடைய கால்களில் வந்து வணங்குவார்கள். உண்மையில் இந்த தாய்மார்கள் சொர்க்கத்தின் வாயிலை திறக்கிறார்கள். நினைவின் கூர்மை இப்போது குறைவாக இருக்கிறது. எந்தவொரு தேகதாரியையும் நினைவு செய்யக்கூடாது. தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆவதில் தான் உழைப்பு இருக்கிறது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்த தூய்மையற்ற மோசமான துக்கம் நிறைந்த உலகத்தில் மனதை ஈடுபடுத்தக் கூடாது. ஒரு தந்தையினுடைய கையை பிடித்துக் கொண்டு இதை கடந்து விட வேண்டும்.

2) மாலையின் மணியாக ஆவதற்கு மிகவும் தைரியம் வைத்து முயற்சி செய்ய வேண்டும். ஞான ரத்தினங்களை எடுக்கக் கூடிய அன்னப்பறவையாக வேண்டும். எந்தவொரு பாவகர்மமும் செய்யக் கூடாது.

வரதானம்:
நிமித்த உணர்வு மூலம் சேவையில் வெற்றி அடையக்கூடிய சிரேஷ்ட சேவாதாரி ஆகுக.

நிமித்த உணர்வானது சேவையில் தானாகவே வெற்றியைக் கொடுக்கின்றது. நிமித்த உணர்வு இல்லை யென்றால் வெற்றி இல்லை. சிரேஷ்ட சேவாதாரி என்றால் ஒவ்வொரு அடியும் தந்தை யின் அடி மீது வைக்கக் கூடியவர்கள், ஒவ்வொரு அடியும் சிரேஷ்ட வழிப்படி சிரேஷ்டமாக ஆக்கக் கூடியவர்கள் என்று அர்த்தம். எந்தளவு சேவையில், சுயத்தில் வீணானது சமாப்தி ஆகிவிடு கின்றதோ, அந்தளவே சக்திசாலி ஆகின்றார்கள், மேலும், சக்திசாலி ஆத்மா ஒவ்வொரு அடியிலும் வெற்றி அடைகின்றார்கள். யார் சுயம் தானும் சதா ஊக்கம், உற்சாகத்தில் இருக்கின்றார்களோ மற்றும் பிறருக்கும் கூட ஊக்கம், உற்சாகம் கொடுக்கின்றார்களோ, அவர்களே சிரேஷ்ட சேவாதாரி ஆவார்கள்.

சுலோகன்:
ஈஸ்வரிய சேவையில் சுயத்தை ஆஃபர் (விருப்பமுடன் ஈடுபடுத்துதல்) செய்தீர்கள் என்றால் பரிசு கிடைத்துக்கொண்டே இருக்கும்

அவ்யக்த சமிக்ஞை : சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின் அனுபவி ஆகுங்கள்

இந்த பரமாத்ம அன்பின் கயிறானது தூர தூரத்தில் இருந்து ஈர்த்துக்கொண்டு வருகின்றது. இது அப்பேற் பட்ட சுகமயமான அன்பு ஆகும், இந்த அன்பில் ஒரு வினாடியேனும் மூழ்கிவிட்டீர்கள் என்றால் அனேக துக்கங்களை மறந்துவிடுவீர்கள் மற்றும் சதாகாலத்திற்கும் சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருப்பீர்கள். தந்தைக்கு குழந்தைகளாகிய உங்கள் மீது அந்தளவு அன்பு இருக்கின்றது, அது வாழ்க்கைக்குத் தேவையான சுகம், சாந்தி போன்ற அனைத்து விருப்பங் களையும் பூர்த்தி செய்துவிடுகின்றது. தந்தை சுகம் மட்டும் கொடுக்க வில்லை, ஆனால், சுகத்தின் களஞ்சியத்திற்கு எஜமானன் ஆக்கிவிடுகின்றார்.