02-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் உலகில் அமைதியை ஸ்தாபனை செய்ய நிமித்தமாகி உள்ளீர்கள். ஆகையால் ஒரு போதும் நீங்கள் அமைதியற்றவராக ஆகிவிடக்கூடாது.

கேள்வி:
பாபா எந்தக் குழந்தைகளை கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்று கூறுகிறார்?

பதில்:
குழந்தைகளே! அமிர்தவேளையில் (அதிகாலையில்) எழுந்து தந்தையை நினைவு செய்யுங் கள் என்பது பாபாவின் முக்கிய கட்டளையாகும். யார் பாபாவின் இந்த முக்கிய கட்டளையைப் பின்பற்றுகிறார்களோ, அதிகாலையில் எழுந்து, குளித்து, புத்துணர்ச்சியடைந்து குறிப்பிட்ட நேரத்தில் நினைவின் யாத்திரை செய்கிறார் களோ அப்படிப்பட்ட குழந்தைகளை நல்ல குழந்தைகள் மற்றும் கட்டளையைப் பின்பற்றக்கூடிய குழந்தைகள் என்று பாபா கூறுகிறார். அவர்கள் தான் சத்யுகத்தில் ராஜா ஆவார்கள். கெட்ட குழந்தைகள் துடைப்பத்தை எடுத்து சுத்தப்படுத்தும் சாதாரண வேலை செய்யக் கூடியவர்களாக ஆவார்கள்.

ஓம் சாந்தி.
இதனுடைய அர்த்தம் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஓம் என்றால் நான் ஆத்மா என்பதாகும். கண்டிப்பாக ஜீவ ஆத்மாக்களாக உள்ளோம் மற்றும் அனைத்து ஆத்மாக் களுக்கும் ஒரு தந்தை உள்ளார் என்று அனைவரும் கூறுகின்றனர். சரீரங்களின் தந்தையர் வேறு வேறாக உள்ளனர். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி மற்றும் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக் கப்பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது என்பது கூட குழந்தைகளின் புத்தியில் உள்ளது. உலகில் அமைதி உண்டாகட்டும் என்று இந்த நேரம் அனைவரும் விரும்புகின்றனர். ஓருவேளை படங்களின் மூலம் புரிய வைக்கப்படுகிறது என்றால் அமைதிக்காக கலியுகத்தின் இறுதி மற்றும் சத்யுகத்தின் தொடக்கத்தின் சங்கமத்திற்கு அழைத்து வர வேண்டும். இது சத்யுகம் புதிய உலகமாக உள்ளது, இதில் ஒரு தர்மம் மட்டுமே இருக்கும், ஆகவே தூய்மை, அமைதி, சுகம் இருக்கும். இதற்கு தான் சொர்க்கம் என்று சொல்லப்படுகிறது. இதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். புதிய உலகில் சுகம் இருக்கும், துக்கம் இருக்க முடியாது. இதை யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். சாந்தி மற்றும் அசாந்தியின் விஷயங்கள் இந்த உலகத்தில் தான் இருக்கும். அதுவோ (நிர்வாண தாமமாக) சரீரமற்ற உலகமாக இருக்கிறது, சாந்தி மற்றும் அசாந்தியின் கேள்வியே எழ முடியாது. குழந்தை கள் சொற்பொழிவாற்றும் போது உலகில் அமைதியைப் பற்றிய விஷயத்தைத்தான் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும். மனிதர்கள் அமைதியை ஏற்படுத்துவதற்காக மிகவும் முயற்சிக் கின்றனர், அதற்காக அவர்களுக்குப் பரிசும் கிடைத்தபடி இருக்கிறது. உண்மையில் இதில் போட்டிக் கான விஷயம் எதுவும் இல்லை. தன்னுடைய சுயதர்மத்தில் நிலைத்திருந்தீர்கள் என்றால் போதும், பாவ கர்மங்கள் அழியும் என்று பாபா கூறுகிறார். சுயதர்மத்தில் நிலைத்தீர்கள் என்றால் அமைதி ஏற்பட்டு விடும். நீங்களோ எப்போதும் அமைதியில் இருக்கும் தந்தையின் குழந்தைகள். இந்த ஆஸ்தி அவரிடமிருந்து கிடைக்கிறது. அதனை மோட்சம் என்று சொல்வதில்லை. மோட்சமோ பகவானுக்கும் கூட கிடைக்க முடியாது. பகவானும் கூட நடிப்பில் கண்டிப்பாக வர வேண்டும். கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் நான் வருகிறேன் என்று பாபா கூறுகிறார். ஆக, மோட்சம் பகவானுக்கே இல்லை எனும்போது குழந்தைகள் மோட்சத்தை எப்படி அடைய முடியும்? இவை முழு நாளும் மனன சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்கள் ஆகும். தந்தையோ குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்குப்புரிய வைக்கக்கூடிய பயிற்சி அதிகமாக உள்ளது. சிவபாபா புரிய வைக்கிறார் என்றால் பிராமணர் களாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். மனன சிந்தனை நீங்கள் தான் செய்ய வேண்டும். சேவையில் குழந்தைகளாகிய நீங்கள் உள்ளீர்கள். நீங்கள் மிகவும் அதிக அளவில் புரியவைக்க வேண்டியுள்ளது. இரவும் பகலும் சேவையில் இருக்கின்றனர். கண்காட்சிக்கு முழு நாளும் வந்தபடி இருப்பார்கள். சில இடங்களில் இரவு 10-11 மணி வரை கூட வந்தபடி இருக்கின்றனர். அதிகாலை 4 மணியிலிருந்தே சிற்சில இடங்களில் சேவை செய்யத் தொடங்கி விடுகின்றனர். இதுவோ வீடாக உள்ளது, எப்போது வேண்டுமானாலும் உட்கார முடியும். சென்டர்களிலோ வெளியிலிருந்து மிக தூரத்திலிருந்து வருகின்றனர் என்றால் நேரத்தைக் குறிப்பிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இங்கேயோ குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் எழ முடியும். ஆனால் குழந்தைகள் எழுந்து, தூங்கி விழுந்து கொட்டாவி விடக் கூடிய நேரத்தில் படிக்கக்கூடாது, ஆகவே தான் அதிகாலை நேரம் குறிக்கப்படுகிறது. யார் அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்துணர்ச்சி யடைந்து வந்தாலும் குறித்த நேரத்தில் வருவதில்லையோ அவர்களைக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த குழந்தைகள் என்று சொல்ல முடியாது. லௌகீகத் தந்தைக்கும் கூட நல்ல மற்றும் கெட்ட குழந்தைகள் உள்ளனர் அல்லவா? எல்லைக்கப்பாற்பட்ட தந்தைக்கும் அப்படி இருப்பார்கள். நல்ல குழந்தைகள் புதிய உலகத்தில் ராஜாக்கள் ஆவார்கள், கெட்ட குழந்தைகள் சென்று துடைப் பத்தை எடுத்து சுத்தப்படுத்தும் சாதாரண வேலை செய்யக் கூடியவர்களாக ஆவார்கள். அனைத்தும் தெரிந்து விடுகிறதல்லவா!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி பற்றியும் புரிய வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனுடைய பிறவி உண்டாகும் போது சொர்க்கம் இருக்கின்றது. ஒரு இராஜ்யம் தான் இருக்கின்றது. உலகில் அமைதி இருக்கின்றது. சொர்க்கத்தில் மிகவும் குறைவானவர்கள் தான் இருப்பார்கள். அதுதான் புதிய உலகம் எனப்படுகிறது. அங்கே அசாந்தி இருக்க முடியாது. ஒரு தர்மம் இருக்கும்போது அமைதி இருக்கும். அந்த தர்மத்தை பாபா ஸ்தாபிக்கிறார். பின்னர் வெவ்வேறு தர்மங்கள் வரும்போது அசாந்தி உண்டாகிறது. அங்கே அமைதிதான் இருக்கும், 16 கலைகள் நிரம்பியவர்கள் தான் இருப்பார்கள் அல்லவா? சந்திரனும் கூட முழுமையடைந்திருக்கும் போது அழகாக இருக்கும், அதற்கு முழு நிலா என்று சொல்லப்படுகிறது. திரேதாவில் முக்கால் பாகமாக இருக்கும், தேய்ந்து விடுகிறது அல்லவா? 2 கலைகள் குறைந்துவிட்டது. முழுமையான அமைதி சத்யுகத்தில் இருக்கும். 25 சதவீதம் உலகம் பழையதாகிவிடும்போது கொஞ்சம் குழப்பம் ஏற்படும். 2 கலைகள் குறைவதால் அழகு குறைந்து விடுகிறது. சொர்க்கத்தில் முழுமையான அமைதியும், நரகத்தில் முழுமையான துக்கமும் இருக்கின்றது. இந்த சமயத்தில் மனிதர்கள் அமைதியை விரும்பு கின்றனர், இதற்கு முன்னால் உலகில் அமைதி உண்டாகட்டும் என்ற சப்தங்கள் இருக்கவில்லை. இப்போது சப்தம் எழுந்துள்ளது, ஏனென்றால் உலகில் இப்போது அமைதி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உலகில் அமைதி ஏற்பட வேண்டும் என்று ஆத்மா விரும்புகின்றது. மனிதர்களோ தேக அபிமானத்தில் இருப்பதால் உலகத்தில் அமைதி ஏற்படட்டும் என்று சொல்லிக் கொண்டு மட்டும் இருக்கின்றனர்.

84 பிறவிகள் இப்போது முடிந்துள்ளது. இதை தந்தையே வந்து புரியவைக்கிறார். தந்தையைத்தான் நினைவு செய்கிறார்கள். அவர் எப்போதாவது ஏதாவது ரூபத்தில் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வார். அவரின் பெயரே சொர்க்கத்தை உருவாக்கும் இறை தந்தை ஆகும். சொர்க்கத்தை எப்படிப் படைக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஸ்ரீகிருஷ்ணர் படைக்க முடியாது. அவர் தேவதை எனப்படுகிறார். மனிதர்கள் தேவதைகளுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். அவர்களுக்குள் தெய்வீக குணங்கள் இருப்பதால் தேவதைகள் எனப்படுகின்றனர். நற்குணங்கள் நிறைந்தவர்களை - இவர் தேவதை போன்றவர் என்று கூறுகின்றனர் அல்லவா? சண்டை சச்சரவு செய்பவர்களை இவர் அசுரனைப் போன்றவர் என்று கூறுகின்றனர். நாம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் முன்பு அமர்ந்துள்ளோம் என குழந்தைகள் அறிந்துள்ளனர். எனவே குழந்தைகளின் நடத்தை எவ்வளவு நன்றாக இருக்க வேண்டும்! அஞ்ஞானகாலத்திலும் கூட - 6-7 குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்திருந் தாலும் முழுக்க முழுக்க பால் பாயசமாகி (இனிமையாக) இருந்தனர் என்பதை பாபா பார்த்துள்ளார். மற்ற இடங்களில் வீட்டில் இருவர் இருந்தால்கூட சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களோ ஈஸ்வரிய குழந்தைகளாக உள்ளீர்கள். மிகவும் இனிமையாக பால் பாயசம் போன்றவர்களாக இருக்க வேண்டும். சத்யுகத்தில் இனிமையானவர்களாக இருப்பார்கள். இங்கே நீங்கள் பால் பாயாசமாக ஆவதற்கு கற்றுக் கொண்டிருப்பதால் மிகவும் அன்பானவராக இருக்க வேண்டும். நாம் ஏதும் பாவ கர்மம் செய்யவில்லை தானே? யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லை தானே? என்று உள்ளுக்குள் சோதனை செய்யுங்கள். இப்படி யாரும் அமர்ந்து நம்மை சோதித்துக் கொள்வதில்லை. இது புரிந்துக் கொள்ள வேண்டிய பெரிய விஷயம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்பவர்கள் ஆவீர்கள். ஒருவேளை வீட்டிலேயே அசாந்தியை உருவாக்கக் கூடியவர்களாக இருந்தால் அமைதியை எப்படி ஏற்படுத்த முடியும். லௌகீக தந்தையின் குழந்தை தொந்தரவு கொடுக்கிறது என்றால் இந்தக் குழந்தை பேசாமல் அமைதியாக இருந்தால் நல்லது என்று கூறுவார்கள். ஏதாவது பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அது மிகவும் உறுதியானதாகி விடுகிறது. நாமோ எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் குழந்தை களாவோம். நாம் உலகத்தில் அமைதியை ஸ்தாபனை செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வ தில்லை. சிவபாபாவின் குழந்தையாக உள்ளீர்கள். ஒருவேளை, அசாந்தி ஏற்படுகிறது என்றால் சிவபாபா விடம் வாருங்கள். அவரோ வைரத்தைப்போன்றவர் சட்டென்று அவர் உங்களுக்கு இப்படி செய்வதால் அமைதி ஏற்படும் என்று யுக்திகளைக் கூறுவார். அமைதிக்கான ஏற்பாடுகளைச் செய்வார். தேவதை குலத்திற்கேற்ற நடத்தையற்றவர்கள் பலர் இருக்கின்றனர். மணம் வீசக்கூடிய உலகத்திற்கு செல்வதற்காக நீங்கள் இப்போது தயார் ஆகிக்கொண்டிருக்கீர்கள். இது அழுக்கான உலகம். விஷ உலகமாகத் தான் உள்ளது. இதன் மீது வெறுப்பு உண்டாகிறது. உலக அமைதியோ புதிய உலகத்தில் தான் உண்டாகும். சங்கமயுகத்தில் ஆக முடியாது, இங்கே அமைதியாக ஆவதற்காக முயற்சி செய்கின்றனர். முயற்சியை முழுமையாகச் செய்யாவிட்டால் பின்னர் தண்டனை அடைய வேண்டியிருக்கும். என்னுடன் கூடவே தர்மராஜா இருக்கிறார் அல்லவா! கணக்கு வழக்குகளை முடிக்கக்கூடிய சமயம் வந்தால் நன்றாக அடி வாங்குவார்கள். கர்மத்தின் சுமை கண்டிப்பாக உள்ளது. நோயாளி ஆகிறார்கள் அதுவும் கூட கர்மச்சுமை அல்லவா! பாபாவுக்கும் மேலாகவோ யாரும் இல்லை. குழந்தைகளே! மணம் வீசும் மலர்கள் ஆவீர்கள் என்றால் உயர்ந்த பதவியை அடைவீர்கள் இல்லையென்றால் எந்த லாபமும் இல்லை என்று புரியவைக்கிறார். பகவான் (தந்தை) என்று யாரை அரைக்கல்ப காலம் நினைவு செய்தோமோ அவரிடமிருந்து ஆஸ்திகளை எடுக்கவில்லையென்றால், குழந்தைகள் பயனற்றவர் ஆகின்றனர். ஆனால், நாடகத்தின்படி இதுவும் கண்டிப்பாக ஆகவே வேண்டும். ஆக, புரிய வைப்பதற்கான பல யுக்திகள் உள்ளன. உலகில் அமைதியோ சத்யுகத்தில் இருந்தது அங்கே இந்த லக்ஷ்மி நாராயணரின் இராஜ்யம் இருந்தது சண்டையும் கண்டிப்பாக ஏற்படப்போகிறது. ஏனென்றால் அமைதியற்ற நிலை உள்ளதல்லவா! பிறகு கிருஷ்ணர் சத்யுகத்தில் வருவார். கலிகத்தில் தேவதை களின் நிழல் விழமுடியாது என்று கூறுகிறார். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் இப்பொழுது கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். சிவபாபா நம்மைப் படிக்கவைக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். தாரணை செய்ய வேண்டும். முழு ஆயுளும் பிடிக்கிறது. ஆயுள் முழுக்க புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதில்லை என்று கூறுகின்றனர் அல்லவா!

முதன் முதலில் முக்கியமான விஷயத்தைப் புரிய வையுங்கள் - ஞானமும் பக்தியும் வேறு வேறான விஷயங்கள் ஆகும் என்று எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கூறுகிறார். அரைக்கல்ப காலம் பகல், அரைக்கல்பகாலம் இரவு. சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுளையே தலைகீழாக எழுதி விட்டார்கள். ஆக, பாதி பாதி என்று கூட ஆக முடியாது. உங்களுக்குள் யாராவது சாஸ்திரங்கள் முதலானவைகளை படிக்கவில்லை என்றால் நல்லது. படித்தவர்களாக இருந்தால் சந்தேகங்கள் எழும். கேள்வி கேட்டபடி இருப்பார்கள். உண்மையில் வானபிரஸ்த நிலை உண்டாகும் போது ஏதாவது ஒரு வழியில் பகவானை நினைவுசெய்கின்றனர், பிறகு, குருவைப்போல சொல்லிக் கொடுப்பார்கள், பக்தியையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். பக்தியை கற்றுக் கொடுக்காதவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்குள் பக்தியின் சக்தி உள்ளது. ஆகையால் தான், இவ்வளவு பின்பற்றக் கூடியவர்கள் ஆகின்றனர். பின்பற்றக்கூடியவர்களை பக்தர்கள் பூஜாரி என்று சொல்வார்கள், இங்கு அனைவரும் பூஜாரிகளாக உள்ளார்கள், அங்கே பூஜாரியாக யாரும் இருப்பதில்லை. பகவான் ஒருபோதும் பூஜாரியாக ஆவதில்லை. அனைத்து ஞானக் கருத்துகளும் புரிய வைக்கப்படுகிறது. மெல்ல மெல்ல குழந்தைகளாகிய உங்களுக்குக் கூட புரிய வைக்கக்கூடிய சக்தி வந்து கொண்டே யிருக்கும்.

கிருஷ்ணர் வந்து கொண்டிருக்கிறார் என்று இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள். சத்யுகத்தில் கண்டிப்பாக கிருஷ்ணர் இருப்பார். இல்லையென்றால் உலகின் சரித்திர பூகோளம் எப்படி மீண்டும் நடக்கும். வெறும் ஒரு கிருஷ்ணர் மட்டும் இருப்பதில்லை, ராஜா ராணியைப்போல பிரஜைகளும் ஆவார்கள். இது கூட புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் ஆகும். நாமோ தந்தையின் குழந்தைகளாக உள்ளோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா ஆஸ்தி கொடுக்க வந்திருக் கிறார். சொர்க்கத்திற்கு அனைவரும் வரமாட்டார்கள். திரேதாயுகத்திற்கும் அனைவரும் வர முடியாது. மரம் போகப்போக பெரியதாகிக் கொண்டே போகிறது. மனித சிருஷ்டி என்ற மரம் ஆகும். அங்கே (பரந்தாமம்) ஆத்மாக்களின் மரம் இருக்கிறது. இங்கே பிரம்மா மூலமாக ஸ்தாபனை, பிறகு சங்கரரின் மூலமாக வினாசம், பிறகு பாலனை... வார்த்தைகளைக் கூட இப்படி விதிப்படி சொல்ல வேண்டும். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது, எப்படி படைப்பு ஏற்படு கிறது என்று குழந்தைகளின் புத்தியில் போதை இருக்கிறது. இப்போது புதிய சிறிய படைப்பாக இருக்கிறது அல்லவா! இது குட்டிக்கரண விளையாட்டு போன்றதாகும். முதலில் சூத்திரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். பின் பாபாவந்து பிரம்மா மூலமாக பிரமாணர்களின் படைப்பை படைக்கிறார். பிராமணர்கள் குடுமி உடையவர்களாக இருக்கின்றனர். (குடுமி மற்றும் பாதம்) பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் தங்களுக்குள் சந்திக்கின்றனர். முதலில் பிராமணர்கள் வேண்டும். பிராமணர்களின் யுகம் மிகச்சிறியதாக இருக்கிறது. பிறகு தேவதைகள் வருகின்றனர். இந்த வர்ணங்களைக் காட்டும் படமும் தேவைப்படுகிறது. இந்த படம் புரிய வைப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களின் பலதரப்பட்ட ரூபமாக இருக்கிறது. புரிய வைப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பிராமணர்கள் இருக்கும் போது அனைத்து தர்மங் களும் இருக்கின்றன. சூத்திரர்களிலிருந்து பிராமணர்களின் நாற்று நடப்படுகிறது. மனிதர்களோ மரத்தின் நாற்று நடுகிறார்கள். பாபா கூட உலகத்தில் அமைதி ஏற்படுவதற்காக நாற்று நடுகிறார். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் சென்று கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும்தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நாம் ஈஸ்வரிய குழந்தைகள் என்ற நினைவு எப்போதும் இருக்க வேண்டும். நாம் பால் பாயசமாக இனிமையாக இருக்க வேண்டும், யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.

2) நம் மூலமாக எந்த ஒரு பாவ கர்மம் ஏற்படவில்லை தானே? அசாந்தி ஆவது மற்றும் அசாந்தியை பரப்பக்கூடிய பழக்கம் இல்லை தானே? என்று உள்ளுக்குள் தனக்குத்தானே சோதனை செய்ய வேண்டும்.

வரதானம்:
தூய்மையின் சக்தி மூலமாக எப்பொழுதும் சுகமான உலகத்தில் வசிக்கக் கூடிய துக்கமில்லாத நகரத்தின் சக்கரவர்த்தி ஆவீர்களாக.

சுகம் சாந்தியின் அஸ்திவாரம் தூய்மை ஆகும். எந்த குழந்தைகள் மனம் சொல் செயல் மூன்றிலும் தூய்மை ஆகிறார்களோ அவர்களே மிகவும் உயர்ந்தவர்களும், புனிதமானவர்களும் ஆவார்கள். எங்கு தூய்மையின் சக்தி இருக்கிறதோ அங்கு சுகம் சாந்தி இருக்கும். தூய்மை சுகம் சாந்தியின் தாய் ஆகும். தூய்மையான ஆத்மாக்கள் ஒருபோதும் மனசோர்வடைய மாட்டார்கள். அவர்கள் துக்கமில்லாத நகரத்தின் சக்கரவர்த்தி ஆவார்கள். அவர்களது கிரீடம் கூட தனிப்பட்டது. மேலும் பீடம் கூட தனிப்பட்டது. ஒளியின் கிரீடம் தூய்மையினுடைய அடையாளம் ஆகும்.

சுலோகன்:
நான் ஆத்மா ஆவேன், சரீரம் அல்ல, இந்த சிந்தனை செய்வதுதான் சுயசிந்தனை ஆகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

சக்திசாலி யோகம் என்றால் ஈடுபாட்டின் அக்னி, ஜ்வாலா ரூபத்தின் நினைவு தான் பிரஷ்ட்டா சாரம், கொடுமை ஆகியவற்றின் அக்னியை முடித்து விடும் மற்றும் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கும். இதன் மூலமாகத்தான் எல்லையில்லாத வைராக்கிய உள்ளுணர்வை ப்ரஜ்வலிக்க செய்யும். நினைவினுடைய அக்னி ஒருபக்கம் அந்த அக்னியை முடித்து விடும், மற்றொரு பக்கம் ஆத்மாக்களுக்கு பரமாத்ம செய்தியின், தணிந்த சொரூபத்தின் அனுபவம் செய்விக்கும். இதன் மூலம் ஆத்மாக்கள் பாவங்களின் நெருப்பிலிருந்து விடுபட்டவர்களாக ஆகிவிட முடியும்.