03-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தைக்குச் சமமாக
கருணையுள்ளம் கொண்டு அநேகருக்கு வழி கூறுங்கள். எந்த குழந்தைகள்
இரவு பகலாக சேவையில் ஈடுபட்டு இருக்கிறார்களோ அவர்களே தைரியசாலி
ஆவார்கள்.
கேள்வி:
உயர்ந்த பாக்கியத்திற்கான
முக்கிய ஆதாரம் எந்த விஷயத்தை பொருத்துள்ளது?
பதில்:
நினைவு யாத்திரையைப்
பொருத்துள்ளது. யார் எந்த அளவு நினைவு செய்கிறாரோ அந்த அளவு
உயர்ந்த பாக்கியத்தை அமைக்கிறார். சரீர நிர்வாகத்திற்காக கர்மம்
செய்கையிலும் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து கொண்டே
இருந்தீர்கள் என்றால் பாக்கியம் உயர்ந்ததாக ஆகிக் கொண்டே போகும்.
பாடல்:
அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்..
.. ..
ஓம் சாந்தி.
குழந்தைகள் பிறக்கும்பொழுது அவர்களுடைய கர்மங்களுக்கேற்ப
தங்களுடைய பாக்கியத்தை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஒரு
சிலர் செல்வந்தரிடம், ஒரு சிலர் ஏழை களிடம் ஜன்மம்
எடுக்கிறார்கள். வாரிசு வந்துள்ளார் என்று தந்தையும்
புரிந்திருப்பார். எப்படி எப்படி தான புண்ணியம் செய்துள்ளார்களோ
அதற்கேற்ப ஜன்மம் கிடைக்கிறது. இப்பொழுது இனிமையான அருமையான
குழந்தைகளுக்கு கல்பத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை வந்துப்
புரிய வைத்துள்ளார். நாங்கள் எங்களுடைய பாக்கியத்தை எடுத்துக்
கொண்டு வந்துள்ளோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். யார்
நல்ல முறையில் அறிந்திருக்கிறார்களோ மற்றும் தந்தையை நினைவு
செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தின் அரசாட்சியின்
பாக்கியத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்கள். நினைவுடன்
பாக்கியத்தின் தொடர்பு உள்ளது. ஜன்மம் எடுத்திருக்கிறீர்கள்
என்றால் தந்தையின் நினைவும் இருக்க வேண்டும். எந்த அளவு நினைவு
செய்வீர்களோ அந்த அளவு அதிர்ஷ்டமும் உயர்ந்ததாக இருக்கும்.
எவ்வளவு சுலபமான விஷயம்! ஒரு நொடியில் ஜீவன் முக்தி கிடைத்து
விடுகிறது. நீங்கள் சுக தாமத்தின் பாக்கியத்தைப் பெறுவதற்காக
வந்துள்ளீர்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் முயற்சி செய்து கொண்டி
ருக்கிறீர்கள். நாம் எப்படி முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்
என்று ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். எப்படி மம்மா, பாபா மற்றும் சேவை செய்யக்
கூடிய குழந்தைகள் முயற்சி செய்கிறார்களோ, அவர்களைப் பின்பற்ற
வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை அளிக்க வேண்டும்.
தந்தையின் அறிமுகம் அளித்தீர்கள் என்றால் படைப்பினுடைய முதல்
இடை கடை கூட அதில் வந்துவிடும். ரிஷி முனிவர்கள் ஆகிய யாருமே
படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானத்தை
அளிக்க முடியாது. இப்பொழுது உங்களுடைய புத்தியில் முழு சக்கரம்
நினைவில் இருக்கிறது. உலகத்தில் யாருக்குமே தந்தை மற்றும் ஆஸ்தி
பற்றித் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தை
மற்றும் தங்களது பாக்கியத்தை அறிந்துள்ளீர்கள். இப்பொழுது
தந்தையை நினைவு செய்ய வேண்டும். சரீர நிர்வாகத்தின் பொருட்டு
கர்மம் கூட செய்ய வேண்டும். வீடு வாசலைக் கூட பராமரிக்க
வேண்டும். யாராவது பந்தனமில்லாமல் இருக்கிறார்கள் என்றால்
அவர்களால் நல்ல முறையில் சேவை செய்ய முடியும். குழந்தை
குட்டிகள் யாருமே இல்லை என்றால் அவர்களுக்கு சேவை செய்யக்
கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது. மனைவிக்கு கணவன் அல்லது
குழந்தைகளின் பந்தனம் இருக்கும். குழந்தைகள் இல்லை என்றால்
பந்தனத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகிறார் கள் அல்லவா? அவர்கள்
வானப்பிரஸ்திகள் போல ஆகி இருப்பார்கள். பிறகு முக்தி தாமம்
செல்வதற்காக சகவாசம் கூட வேண்டும். பக்திமார்க்கத்திலோ
சாதுக்கள் ஆகியோரின் துறவற மார்க்கத்தினரின் சகவாசம்
கிடைக்கிறது. அந்த துறவற மார்க்கத்தினர் இல்லற
மார்க்கத்தினருக்கு ஆஸ்தி அளிக்க முடியாது. குழந்தைகளாகிய
நீங்கள் தான் அளிக்க முடியும். உங்களுக்கு தந்தை வழி கூறி
இருக்கிறார். பாரதத்தின் பூகோளம் மற்றும் 84 பிறவிகளின்
சரித்திரம் பற்றி அமர்ந்து கூறுங்கள். பாரதவாசிகள் தான் 84
பிறவிகள் எடுக்கிறார்கள். ஒருவரின் விஷயம் கிடையாது. சூரிய
வம்சத்தினரே பிறகு சந்திர வம்சம், பிறகு வைசிய வம்சத்தின்
குடும்பத்தில் வருகிறார்கள். வரிசைக்கிரமமாக இருப்பார்கள்
அல்லவா? பாரதத்தினுடைய முதல் நம்பர் இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர்
ஆவார். அவரை ஊஞ்சலில் ஊஞ்சலாட்டு கிறார்கள். இரண்டாவது நம்பர்
உடைய வரை ஊஞ்சலாட்டுவது இல்லை. ஏனெனில் கலை குறைந்துவிட்டது.
யார் முதல் நம்பர் உடையவரோ அவருக்கு பூஜை நடக்கிறது. கிருஷ்ணர்
ஒருவரோ இல்லை இருவரோ அல்லது மூவரோ என்பதை மனிதர்கள் புரியாமல்
உள்ளார்கள். கிருஷ்ணருடைய பரம்பரை நடக்கிறது என்பது யாருக்குமே
தெரியாது. பூஜை முதல் நம்பர் உடையவருக்கு மட்டுமே ஆகிறது.
மதிப்பெண்கள் வரிசைக் கிரமமாகவே கிடைக்கிறது. எனவே நாம் ஏன்
முதல் நம்பரில் வரக் கூடாது என்று முயற்சி செய்ய வேண்டும்.
மம்மா பாபாவைப் பின்பற்ற வேண்டும். அவர்களுடைய இராஜதானியை
பெற்றுக் கொண்டு விட வேண்டும். யார் நல்ல சேவை செய்வார்களோ
அவர்கள் நல்ல மகாராஜாக்கள் வீட்டில் ஜன்மம் எடுப்பார்கள். அங்கு
மகாராஜா மகாராணி தான் இருப்பார்கள். அங்கு ஒன்றும் இராஜா
இராணியின் பட்டம் இருப்பதில்லை. அது பின்னால் ஆரம்ப மாகிறது.
துவாபர முதல் பதீதமாக ஆகிவிடும் பொழுது அவர்களில் பெரிய சொத்து
உடையவர் களுக்கு இராஜா என்று கூறப்படுகிறது. பிறகு மகாராஜாவின்
பட்டப் பெயர் குறைந்துவிடுகிறது. மறைந்து போய்விடுகிறது. பிறகு
பக்தி மார்க்கம் வரும்பொழுது ஏழைகள் செல்வந்தர் களுக்கிடையே
வித்தியாசம் இருக்கும் அல்லவா? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள்
தான் சிவபாபாவை நினைவு செய்கிறீர்கள். மேலும் அவரிடமிருந்து
ஆஸ்தியைப் பெற்று கொண்டிருக் கிறீர்கள். மற்ற சத்சங்கங்களில்
மனிதர்கள் அமர்ந்து கதை கூறுகிறார்கள். மனிதர்கள் மனிதர்
களுக்கு பக்தி கற்பிக்கிறார்கள். அவர்களால் ஞானத்தை அளித்து
சத்கதி வழங்க முடியாது. வேதங் கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்துமே
பக்தி மார்க்கத்தினுடையவை ஆகும். சத்கதியோ ஞானத் தினால் ஆகிறது.
புனர்ஜென்மத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இடையிலோ யாரும்
திரும்பிச் செல்ல முடியாது. கடைசியில் தான் தந்தை வந்து
அனைவரையும் அழைத்துச் செல்கிறார். இத்தனை அனைத்து ஆத்மாக்களும்
எங்கு போய் இருப்பார்கள்? அனைத்து தர்மத்தினர்களின் பிரிவுகளோ
தனித்தனியாக இருக்கும் அல்லவா? எனவே இதையும் புரிய வைக்க
வேண்டும்.
ஆத்மாக்களினுடையது விருட்சம் உள்ளது என்பது யாருக்குமே தெரியாது.
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் முழு விருட்சத்தினுடைய
ஞானம் இருக்கிறது. ஆத்மாக்களின் விருட்சம் கூட இருக்கிறது. ஜீவ
ஆத்மாக்களினுடையதும் விருட்சம் உள்ளது. நாம் இந்த பழைய உடலை
விட்டு விட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை
குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நான் ஆத்மா இந்த சரீரத்திலிருந்து
தனிப்பட்டவன்! இதைப் புரிந்திருப்பது என்றால் உயிருடனிருந்தே
இறப்பது. நீங்கள் இறந்தால் உலகமே இறந்தது போல. உற்றார்
உறவினர்கள் ஆகிய அனைவரையும் விட்டுவிட்டார். முதலில் முழுமையாக
கல்வி பெற்று பதவிக்கு அதிகாரி ஆகி பிறகு செல்ல வேண்டும்.
தந்தையை நினைவு செய்வதோ மிகவும் சுலபம் ஆகும். ஒருவர்
நோய்வாய்ப்பட்டிருந்தாலும் சரி, அவருக்குக் கூட சிவபாபாவை
நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும்
என்று கூறிக் கொண்டே இருக்க வேண்டும். யார் பக்குவமான யோகியாக
இருக்கிறார்களோ அவர்கள் சீக்கிரம் சரீரம் விடுவது கூட நன்றாக
இல்லை. ஏனெனில் அவர்கள் யோகத்தில் இருந்து கொண்டு ஆன்மீக சேவை
செய்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என்றால் சேவை செய்ய முடியாது.
சேவை செய்வதால் தங்களுடைய உயர்ந்த பதவியை அமைத்துக் கொண்டே
இருப்பார்கள். மேலும் சகோதர சகோதரிகளின் சேவை கூட ஆகிவிடும்.
அவர்களும் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டு விடுவார்கள்.
நாம் நமக்குள் சகோதர சகோதரர்கள் ஆவோம். ஒரு தந்தையின்
குழந்தைகள் ஆவோம்.
என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும்
என்று தந்தை கூறுகிறார். இதற்கு முன்பும் அவ்வாறே கூறி
இருந்தார். யாருக்கும் புரிய வைக்கலாம். சகோதரி அவர்களே,
சகோதரர் அவர்களே, உங்களுடைய ஆத்மா தமோபிரதானமாக ஆகிவிட்டுள்ளது.
யார் சதோபிர தானமாக இருந்தார்களோ அவர்கள் மீண்டும் தமோபிரதான
நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகி சதோபிரதானமான உலகிற்குச்
செல்ல வேண்டும். ஆத்மாவை நினைவு யாத்திரை மூலமாக சதோபிரதானமாக
ஆக்க வேண்டும். நினைவினுடைய முழு சார்ட் வைக்க வேண்டும். ஞானத்
தினுடைய சார்ட் வைக்க முடியாது. தந்தையோ ஞானம் அளித்துக் கொண்டே
இருக்கிறார். நம் மீது இருக்கும் விகர்மங்களின் சுமையை எப்படி
இறக்க வேண்டும் என்று சோதிக்க வேண்டும். எனவே நினைவினுடைய
சார்ட் வைக்கப்படுகிறது. நாம் எவ்வளவு மணி நேரம் நினைவு
செய்தோம்? மூல வதனத்தைக் கூட நினைவு செய்கிறோம். பின் புது
உலகத்தையும் நினைவு செய்கிறோம். சீர்க்கேடுகள் ஏற்பட
வேண்டியுள்ளது. அதற்கான ஏற்பாடும் நடந்துக் கொண்டே இருக்கிறது.
குண்டுகள் ஆகியவை கூட தயாராகிக் கொண்டே போகும். நாம் இது போல
மரணத் திற்கான சாமான்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம் என்று
ஒருபுறம் கூறுகிறார்கள். மறுபுறம் சாவிற்கான சாமான்களைத்
தயாரிக்காதீர்கள் என்று கூறுகிறார்கள். கடலுக்குக் கீழே கூட
கொல்வதற்கான சாமான்கள் வைத்துள்ளார்கள். மேலே வந்து குண்டுகளை
வீசி விட்டு பின் கடலுக்குள் சென்றுவிடுவார்கள். இது போன்ற
பொருட்களை தயாரித்துக் கொண்டே இருக் கிறார்கள். இது தங்களுடைய
அழிவிற்காக செய்து கொண்டிருக்கிறார்கள். மரணம் எதிரிலேயே உள்ளது.
இவ்வளவு பெரிய பெரிய மாளிகைகள் எல்லாம் அமைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாமே மண்ணோடு மண்ணாகப் போய்விடும்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஒரு சிலருடையது மண்ணோடு
புதைந்து போய் விடும் .. .. .. சண்டை அவசியம் ஏற்படும். முயற்சி
செய்து எல்லோருடைய பைகளையும் காலி செய்துவிடுவார்கள்.
திருடர்கள் கூட எவ்வளவு நுழைந்துவிடுகிறார்கள். யுத்தத்திற்காக
எவ்வளவு செலவு செய்கிறார்கள். இவை அனைத்தும் மண்ணோடு சேர்ந்து
விடப் போகிறது. வீடுகள் ஆகிய எல்லாமே விழுந்துவிடும். குண்டுகள்
ஆகியவை விழுவதால் சிருஷ்டியினுடைய 3 பங்கு அழிந்துவிடுகிறது.
மீதி ஒரு பாகம் மிஞ்சி விடுகிறது. பாரதம் ஒரு பாகத்தில்
இருக்கிறது அல்லவா? மற்றதோ எல்லாமே பின்னால் வந்தவை ஆகும்.
இப்பொழுது பாரதத்தின் பாகம் தான் மிஞ்சும். மரணமோ எல்லோருக்கும்
ஆகத் தான் போகிறது. பின் ஏன் நாம் தந்தை யிடமிருந்து முழுமையாக
ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. எனவே தந்தை கூறுகிறார்,
லௌகீக உறவினர்களிடம் கூட கடமையை நிறைவேற்ற வேண்டும். மற்றபடி
பந்தனம் இல்லை என்றால் ஏன் சேவையில் ஈடுபடக் கூடாது என்று பாபா
ஆலோசனை அளிப்பார். பாபா கருணை காட்டுங்கள் என்று முன்பெல்லாம்
கூறிக் கொண்டி ருந்தீர்கள் அல்லவா? இப்பொழுதோ உங்களுக்கு வழி
கிடைத்துள்ளது. எனவே மற்றவர்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்.
எப்படி தந்தை கருணை காட்டுகிறார். என்னை நினைவு செய்தீர்கள்
என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகிறார்.
சந்நியாசிகளோ ஹடயோகம் ஆகியவற்றில் எவ்வளவு உழைப்பு
செய்கிறார்கள். இங்கோ இவை எதுவும் கிடையாது. நினைவு மட்டும்
செய்தீர்கள் என்றால் பாவங்கள் சாம்பலாகிவிடும். இதில் எந்த
கஷ்டமும் கிடையாது. நினைவு யாத்திரையின் விஷயம் மட்டுமே ஆகும்.
எழுந்திருங்கள், அமருங்கள், கர்ம இந்திரி யங்களால் கர்மம் கூட
தாராளமாகச் செய்யுங்கள். புத்தியின் யோகம் (தொடர்பு) மட்டும்
தந்தை யிடம் ஈடுபடுத்துங்கள். உண்மையிலும் அந்த பிரியதரிசனரின்
உண்மையான பிரியதரிஷினி ஆக வேண்டும். சுயம் அவரே கூறுகிறார், ஹே
பிரியதரிஷினிகளே, ஹே குழந்தைகளே, பக்தி மார்க்கத்திலோ நிறைய
நினைவு செய்தீர்கள். ஆனால் இப்பொழுது பிரியதரிஷனராக என்னை
நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் சாம்பாலாகும். நான்
உத்தரவாதம் அளிக்கிறேன். ஒரு சில விஷயங்கள் சாஸ்திரங்களில்
வந்துவிட்டுள்ளன. பகவான் மூலமாக கீதை கேட்பதால் நீங்கள் ஜீவன்
முக்தியை அடைகிறீர்கள். மனிதர்கள் மூலமாக கீதையைக் கேட்பதால்
ஜீவன் பந்தனத்தில் வந்துவிட்டுள்ளீர்கள். படி இறங்கியபடியே
வந்துள்ளீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் ஞான மனனம் செய்ய வேண்டும்.
தங்களுடைய புத்தியை செலுத்த வேண்டும். இது புத்தியின் யாத்திரை
ஆகும். இதனால் விகர்மங்கள் விநாசம் ஆகும். வேதம் சாஸ்திரங்கள்,
வேள்வி தவம் ஆகியவை செய்வதால் பாவங்கள் அழிந்து போகாது. கீழேயே
இறங்கி வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் மேலே செல்ல வேண்டும்.
ஏணிப்படி பற்றி யாராவது புரிய வைக்காத வரை யாருமே அது பற்றி
புரிந்து கொள்ள முடியாது. எப்படி சிறிய குழந்தைகளுக்கு
படங்களைக் காண்பித்து கற்பிக்க வேண்டி இருக்கும் இது யானை -
யானையைப் பார்க்கும் பொழுது படம் கூட நினைவிற்கு வரும். எப்படி
உங்களுடைய புத்தியில் வந்துவிட்டுள்ளது. படத்தில் எப்பொழுதும்
சிறிய பொருள் காண்பிக்கப் படுகிறது. வைகுண்டமோ பெரியதாக
இருக்கும் அல்லவா என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பெரிய
இராஜதானி இருக்கும். அங்கும் வைரம் வைடூரியங்களின் அரண்மனைகள்
இருக்கும். அவை பிறகு மறைந்து போய்விடும். எல்லா பொருட்களும்
மறைந்து போய்விடுகின்றன. இல்லை என்றால் பாரதம் எப்படி ஏழை
ஆகியது? செல்வந்தரிலிருந்து ஏழை, ஏழையிலிருந்து செல்வந்தர் ஆக
வேண்டும். இந்த நாடகம் அமைந்த அமைக்கப்பட்ட ஒன்றாகும். எனவே
ஏணிப்படி மீது புரிய வைக்கப்படுகிறது. புதிது புதியதாக
வருபவர்களுக்குப் புரிய வைப்பதால் அப்பியாசம் ஏற்பட்டு விடும்.
வாய் திறந்துவிடும். குழந்தைகளை சேவைக்கு தகுதியுடையவர்களாக
ஆக்கப்படுகிறது. ஒரு சில சென்டர்களிலோ நிறைய குழந்தைகள்
அசாந்தியைப் பரப்பி கொண்டே இருக்கிறார்கள். புத்தியோகம்
வெளியில் அலைகிறது. பின் தீங்கு ஏற்படுத்தி விடுகிறார்கள். வாயு
மண்டலத்தைக் கெடுத்து விடுகிறார்கள். வரிசைக்கிரமமாகவோ
இருக்கிறார்கள் அல்லவா? பிறகு தந்தை கூறுகிறார், நீங்கள்
படிக்கவே இல்லை, எனவே உங்களுடைய நிலைமையை பாருங்கள். நாளுக்கு
நாள் அதிகமான சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கும். பாவம்
செய்பவர்களுக்குத் தண்டனை கள் கூட கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பிறகு வீணாக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்பார்கள்.
தந்தைக்குக் கூறி பிராயச்சித்தம் செய்வதால் கொஞ்சம் குறையக்
கூடும். இல்லை என்றால் விருத்தி ஆகிக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு ஆகிக் கொண்டே இருக்கும். சுயம் தாங்களும் உணருவார்கள்.
பிறகு கூறுவார்கள், என்ன செய்வது - எங்களுடைய இந்த பழக்கம்
நீங்குவதே இல்லை. இதை விட வீட்டில் போய் இருக்கலாம். ஒரு சிலரோ
நன்றாக சேவை செய்கிறார்கள். ஒரு சிலர் சேவைக்குத் தீங்கு (டிஸ்சர்விஸ்)
கூட விளைவிக்கிறார்கள். நமது சேவையில் யார் யார் தைரியசாலிகளாக
இருக்கிறார்கள் என்று தந்தை வந்து பெயர்களை கூறுகிறார். மற்றபடி
சண்டை ஆகியவற்றின் விஷயம் இங்கு எதுவும் இல்லை. இது எல்லை
யில்லாத விஷயங்கள் ஆகும். நல்ல குழந்தைகளாக இருந்தார்கள்
என்றால் தந்தை அவசியம் மகிமை கூட செய்வார். குழந்தைகள் மிகவும்
கருணையுள்ளம் கொண்டவர்களாக, நன்மை செய்பவர் களாக ஆக வேண்டும்.
குருடர்களின் கைத்தடி ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்தீர்கள்
என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று அனைவருக்கும் வழி கூற
வேண்டும். பாவ ஆத்மா மற்றும் புண்ணிய ஆத்மா என்று கூறுகிறார்கள்
அல்லவா? அப்படியின்றி உள்ளுக்குள் பரமாத்மா இருக்கிறார் அல்லது
ஆத்மாவே பரமாத்மா ஆகிவிடுகிறார் என்பதல்ல. இவை எல்லாம் தவறு
ஆகும். பரமாத்மா மீது பாவம் ஏற்படுமா என்ன? அவருக்கோ நாடகத்தில்
சேவை செய்வதற்கான பாகம் உள்ளது. மனிதர்கள் தான் பாவ ஆத்மா,
புண்ணிய ஆத்மா ஆகிறார்கள். யார் சதோபிரதானமாக இருந்தாரோ அவரே
தமோபிரதானமாக ஆகி உள்ளார். அவருடைய உடலில் தந்தை வந்து
சதோபிரதானமாக ஆக்குகிறார். எனவே அவருடைய வழிப்படி நடக்க
வேண்டும் அல்லவா?
இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களை விசால புத்தி உடையவராக
ஆக்கி உள்ளார். இராஜதானி எப்படி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது
என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை தான்
பிரம்மாவின் உடலில் வந்து பிரம்மா வம்சாவளி குழந்தைகளுக்கு
இராஜயோகம் கற்பித்து தேவி தேவதையாக ஆக்குகிறார். மீண்டும்
புனர்ஜன்மம் எடுத்து படி இறங்குகிறார்கள். இப்பொழுது மீண்டும்
எல்லாமே திரும்ப நடைபெறும். தந்தை மீண்டும் பிரம்மா மூலமாக
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். யோக பலத்தினாலே நீங்கள் 5
விகாரங்கள் மீது வெற்றி அடைந்து உலகத்தை வென்றவராக ஆகிறீர்கள்.
மற்றபடி யுத்தங்கள் போன்ற எந்த விஷயமும் கிடையாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. பந்தனத்திலிருந்து விடுபட்டவராக ஆகி தந்தையின் சேவையில்
ஈடுபட்டு விட வேண்டும். அப்பொழுது தான் உயர்ந்த பாக்கியம்
அமையும். கருணையுள்ளம் உடையவராக ஆகி வழி காட்ட வேண்டும்.
குருடர்களுக்கு கைத்தடி ஆக வேண்டும்.
2. இந்த சரீரத்தின் மீதுள்ள பற்றை நீக்கி உயிருடனிருந்தே இறக்க
வேண்டும். ஏனெனில் இப்பொழுது வீடு செல்ல வேண்டும்.
நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது கூட ஒரு தந்தையின் நினைவு
இருந்தது என்றால் பாவங்கள் அழிந்து போய்விடும்.
வரதானம்:
நன்மைக்கான பாவனையின் மூலம் ஆத்மாவின் சன்ஸ்காரங்களை மாற்றக்
கூடிய நிச்சய புத்தியுடையவர் ஆகுக.
தந்தையின் மீது 100 சதவிகித நிச்சய புத்தியிருப்பது போன்று,
ஒருவர் எவ்வளவு தான் குழப்பு வதற்கு முயற்சி செய்தாலும் அது
முடியாது, அதே போன்று தெய்வீக குடும்பம் அல்லது உலக
ஆத்மாக்களின் மூலம் ஒருவர் எவ்வளவு வேண்டுமென்றாலும் சோதனை
செய்யட்டும், கோபப் பட்டு எதிர்ப்பு செய்யட்டும் அல்லது நிந்தனை
செய்யட்டும் - அதிலும் குழப்பமடையக் கூடாது. இதில் ஒவ்வொரு
ஆத்மாவின் மீதும் நன்மைக்கான பாவனை இருக்க வேண்டும். இந்த பாவனை
அவர்களது சன்ஸ்காரங்களை மாற்றி விடும். இதில் தைரியத்தை இழந்து
விடக் கூடாது, நேரம் வரும் போது அவசியம் பலன் கிடைக்கும் - இது
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது.
சுலோகன்:
தூய்மை சக்தியின் மூலம் தனது சங்கல்பங்களை சுத்தமானதாக, ஞான
சொரூபமாக ஆக்கி பலவீனங்களை அழித்து விடுங்கள்.
அவ்யக்த இஷாரா - மகான் ஆவதற்காக இனிமை மற்றும் பணிவு என்ற
குணங்களை தாரணை செய்யுங்கள்
வார்த்தைகளில் சதா சத்தியம் மற்றும் இனிமை இருந்தது எனில்
வார்த்தைகளுக்கான மதிப்பெண் சேமிப்பாகிக் கொண்டே இருக்கும்.
இனிமை என்ற குணம் வாழ்க்கையில் இருந்தது எனில் ஒவ்வொரு
வார்த்தையும் முத்து போன்று இருக்கும். இவர் பேசவில்லை, முத்து
மழை பொழிந்து கொண்டிருப்பதாக தோன்றும். இப்படிப்பட்ட
வார்த்தைகள் நாமும் பேச வேண்டும் என்று கேட்பவர்களும் பேசும்
அளவிற்கு அவர்களது வார்த்தைகள் இருக்கும். அனைவரும் கேட்டு
கற்றுக் கொள்ளும், பின்பற்றக் கூடிய தூண்டுதல் கிடைக்கும்.
இப்படிப்பட்ட இனிய வார்த்தையின் வாயு மண்டலம் அனைவரையும்
தானாகவே ஈர்க்கும்.