03.05.26    காலை முரளி            ஓம் சாந்தி 18.01.2010      பாப்தாதா,   மதுபன்


பிரம்மா பாபாவுக்கு சமமாக நஷ்டோமோகா ஸ்மிருதி சொரூபம் ஆவதற்காக மனதின் டைம் டேபிள் தயார் செய்து கர்மம் செய்யும் போதும் கர்மயோகி அசரீரி ஆவதற்கான அப்பியாசம் செய்யுங்கள்

இன்று நாலாபுறம் உள்ள குழந்தைகளிடம் விஷேமாக சிநேகம் நிறைந்துள்ளது. இன்றைய தினம் ஸ்மிருதி திவஸ் (நினைவு நாள்) எனவும் சொல்லப்படுகின்றது. பாப்தாதா அமிர்தவேளை யிலிருந்து நாலாபுறமும் பார்த்தார். இந்த தேசத்திலும் வெளி தேசங்களிலும் குழந்தைகள் அனைவரின் மனதிலும் பாபாவின் அன்பின் சித்திரம் காணப்பட்டது. மேலும் பாபாவின் மனதிலும் கூட ஒவ்வொரு குழந்தையின் அன்பின் சித்திரம் நிறைந்திருந்தது. இன்றைய நாளை விசேஷ அன்பின், ஸ்மிருதியின் நாள் எனச் சொல்கிறீர்கள். பாப்தாதா அமிர்தவேளைக்கு முன்பிருந்தே குழந்தைகளின் பக்கமிருந்து அநேக முத்துகளின் மாலைகளைப் பார்த்தார். ஒவ்வொரு குழந்தை யின் மனதிலும் தானாகவே இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது - மேரா பாபா, பிரம்மா பாபா, மீட்டா பாபா. பாப்தாதாவின் மனதிலிருந்து இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது - மீட்டே பச்சே, ப்யாரே பச்சே (இனிமையான குழந்தாய், அன்பான குழந்தாய்) இன்று ஒவ்வொருவருக்குள்ளும் மற்ற சக்திகளைத் தவிரவும், அன்பின் சக்தி அதிகமாக நிறைந்துள்ளது. இந்தப் பரமாத்ம அன்பு, ஈஸ்வரிய அன்பு சங்கமயுகத்தில் மட்டுமே அனுபவம் ஆகிறது. இந்தப் பரமாத்ம அன்பை அனுபவிகள் மட்டுமே அறிவார்கள். அது ஒவ்வொரு குழந்தை யையும் சகஜ யோகி ஆக்கி விடுகின்றது. பாப்தாதா பார்த்தார் - குழந்தைகள் அனைவரின் அன்பின் அனுபவம் மிகமிக அதிகமாக நிறைந்துள்ளது. உங்கள் அனைவரின் ஜென்மத்திற்கான ஆதாரம் அன்பு தான். அந்த மாதிரி எந்த ஒரு குழந்தையும் காணப்படவில்லை - மற்ற சக்திகள் குறைவாக இருந்தாலும், பாபாவின் அன்பு அல்லது நிமித்தமாகியுள்ள விசேஷ ஆத்மாக்களின் அன்பின் அனுபவம் பெரும்பான்மையாக அனைவரின் மனதிலும் முகத்திலும் காணப்படுகின்றது. இப்போது உங்கள் அனைவரையும் இன்று விசேஷமாக இங்கு வரை யார் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்? எந்த விமானத்தில் வந்தீர்கள்? இரயிலில் வந்தீர்களா, விமானத்தில் வந்தீர்களா? அனைவரின் முகங்களிலும் அன்பு நிறைந்துள்ளது. எனவே சிநேகத்தின் விமானத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? எதுவும் செய்ய வேண்டி இருந்திருக்கலாம். ஆனால் சிநேகத்தின் விமானத்தில் அனைவரும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

இன்றைய தினம் ஸ்மிருதி திவஸ் எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் ஸ்மிருதி திவஸ் - உடன் கூடவே சமர்த்தி திவஸ் (சக்திசாலி நாள்) என்றும் சொல்லப்படுகின்றது. இன்றைய நாள் பட்டாபிஷேக நாள் என்றும் சொல்லப்படுகின்றது. ஏனென்றால் இன்றைய தினம் பாப்தாதா, விசேஷமாக பிரம்மா பாபா நிமித்தமாகியுள்ள மகாவீர் குழந்தைகளுக்கு விசேஷ சேவைக்கான கிரீடத்தை அணிவித்திருக்கிறார். பிரம்மா பாபா தாம் வெளியில் தெரியாதவாறு மறைந்திருந்து கொண்டு, குழந்தைகளுக்கு உலக சேவைக்கான ஸ்மிருதியின் திலகத்தைக் கொடுத்திருக்கிறார். குழந்தைகளைச் செய்பவராக ஆக்கினார் மற்றும் சுயம் செய்விப்பவராக ஆனார். தமக்கு சமமாக ஃபரிஸ்தா ரூபத்தின் வரதானம் கொடுத்து ஒளிக்கிரீடம் அணிவித்தார் மற்றும் பாப்தாதா என்ன கிரீடம், திலகம் அல்லது வரதானம் கொடுத்தாரோ, அதே பிரமாணம் குழந்தைகளின் காரியத்தைப் பார்த்துக் குஷி அடைகிறார். குழந்தைகள் சேவைக்கான வரதானத்தைக் காரியத்தில் கொண்டு வந்தனர். இதைப் பார்த்து பாப்தாதா குஷியடைகிறார். இது வரை என்ன பார்ட் நடித்திருக் கிறீர்களோ, இனிமேலும் நடிக்க வேண்டுமோ, அதற்காகப் பல கோடி மடங்கு பிரம்மா பாபா வாழ்த்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஹா குழந்தைகளே, ஆஹா! வெளிநாடுகளிலும் சுற்றி வந்தார் என்றால் என்ன பார்த்தார்? ஒவ்வொரு குழந்தையும் அன்பில் மூழ்கி யிருந்ததைப் பார்த்தார். ஆக, பாபா மூலம் சக்திகள் கிடைத்துள்ளன. ஏனென்றால் அந்த நாள் விசேஷமாக அன்பினால் சக்திகளின் வரதானம் பெறுவதற்கான நாளாகும். பாப்தாதா பார்த்தார் - குழந்தைகள் சிலர் மிக நல்ல நினைவின் ஈடுபாட்டில், சேவையில் ஈடுபட்டுள்ளனர். அமிர்தவேளை மிக நல்ல முறையில் அனுபவம் செய்கின்றனர். அசரீரி நிலையின் அனுபவமும் செய்கிறார்கள். ஆனால் எப்போது கர்மயோகி ஆவதற்கான சமயம் வருகிறதோ, அப்போது இரண்டு காரியங்களையும், கர்மயோகியின் மற்றும் கர்மத்தின் காரியம், இரண்டையும் சேர்ந்தாற்போல் செய்வதில் வித்தியாசம் ஆகி விடுகின்றது. புருஷார்த்தம் செய்கிறார்கள் - கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆனால் எப்படி அமிர்தவேளை சக்திசாலி அவஸ்தாவின் அனுபவம் செய்கிறீர்கள், அது போல் கர்மத்தில் வித்தியாசம் ஆகி விடுகிறது, முயற்சி செய்ய வேண்டி உள்ளது மற்றும் பாப்தாதா குழந்தைகள் அனைவர்க்கும் சொல்லி யிருக்கிறார் - உலக விநாசம் திடீரென நடைபெறப் போகின்றது. நாள் முழுவதும் கவனம் வைப்ப தற்கு பதிலாக, ஏதேனும் ஒரு தாரணையின் குறைவு ஏற்படுகிற காரணத்தால் கர்மயோகி ஸ்டேஜில் வித்தியாசம் வருகிறது. ஆக, உலகத்தின் விநாசத்திற்கான தேதியோ பாப்தாதா அறிவிக்கப் போவதில்லை. ஆனால் தனது வாழ்க்கைக் காலம் எப்போது முடியப் போகிறது என்பது தெரியுமா? யாருக்காவது தெரியுமா - எனது மரணம் இன்ன தேதி நடக்கப் போகிறது என்று? தெரியுமா? அவர்கள் கை உயர்த்துங்கள். திடீரென எதுவும் நடக்கலாம். ஏதேனும் இயற்கையின் காரணம் உருவாகி விடுமானால் எவ்வளவு பேரின் மரணம் ஒரே நேரத்தில் நடந்து விடுகிறது! எனவே உலகத்தின் தேதி பற்றிய சங்கல்பத்தினால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்கள் ஜெகதம்பாவின் ஸ்லோகனாக இருந்தது - ஒரு போதும் எப்போது என்று சொல்லாதீர்கள், இப்போது எனச் சொல்லுங்கள். நாளை எதுவும் நடக்கலாம், ஆனால் நான் எவர்-ரெடியாக இருந்தே ஆக வேண்டும். ஆக, இவ்வளவு தயார் நிலை அனைவரின் கவனத்தில் உள்ளதா? தங்களின் கர்மங்களின் கணக்கை முடித்து விட்டீர்களா? நான்கு பாடங்களிலும், ஞானம், யோகம், சேவை, தாரணை, நான்கு தரப்பிலும், நான்கிலும் அந்த மாதிரி தயாராகி இருக்கிறீர்களா? முழுமையாக எல்லையற்ற வைராக்கியத்தின் அனுபவத்தை சோதித்துப் பார்த்தீர்களா? தனது மனதில் இதை சோதித்துப் பாரத்தீர்களா - எவர்-ரெடியாக இருக்கிறேனா? நஷ்டோமோகா ஸ்மிருதி சொரூபம், ஏனென்றால் பிரம்மா பாபாவும் கூட புருஷார்த்தம் செய்து தம்மை அந்த மாதிரி ஆக்கிக் கொண்டார் - அனுபவி குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள் - எந்தத் தரப்பிலும் எந்த ஒரு கணக்கு-வழக்கின் சூழ்நிலையும் இருந்ததில்லை. திடீரென அசரீரி ஆவதற்கான அப்பியாசம் அவரை அசரீரி ஆக்கியதால் அவர் பறந்து விட்டார். பிரம்மா பாபா போகப் போகிறார் என யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? ஆனால் நஷ்டோமோகா, குழந்தைகளின் கையோடு கை சேர்ந்து இருக்கும் போது எங்காவது கவர்ச்சி இருந்ததா? ஃபரிஸ்தா ஆகி விட்டார். குழந்தைகளுக்கு ஃபரிஸ்தா ஆவதற்கான திலகத்தைத் தந்து சென்றார். இதற்கான காரணம், நீண்ட காலத்தின் அசரீரி நிலையின் அப்பியாசமாக இருந்தது. பாபாவுடன் கூடவே இருந்த அனுபவி குழந்தைகள் அனுபவம் செய்தார்கள் - கர்மம் செய்து கொண்டிருக்கும் போதே அந்த மாதிரி அசரீரி ஆகி விட்டார். ஆக, கர்மயோகத்தில் ஏற்படும் இந்த வித்தியாசத்திற்கான காரணம், கர்மம் செய்து கொண்டிருக்கும் போது நான் ஆத்மா என்பது ஸ்மிருதியில் இமர்ஜ் ஆகி இருப்பதில்லை. இதையோ அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால் நான் ஆத்மா என்றால், எத்தகைய ஆத்மா? நான் செய்விப்பவனாகிய ஆத்மா. மற்றும் இந்தக் கர்மேந்திரியங்கள் செய்பவை யாகும். இந்த செய்விப்பவர் என்ற சுவமான் கர்மம் செய்யும் போதும் ஸ்மிருதியில் இருக்க வேண்டும். கர்மேந்திரியங்கள் மூலமாகக் காரியம் செய்விக்க வேண்டும் என்றாலும் நான் செய்விப்பவன், மாலிக், இந்த இருக்கையின் மீது செட்டாகி இருந்தால் எந்த ஒரு கர்மேந்திரியமும் கட்டளைப்படி நடக்கும். இருக்கையில் செட்டாகி இருக்கவில்லை என்றால் யாரும் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். எனவே செய்விப்பவனாகிய ஆத்மா நான். இந்தக் கர்மேந்திரியங்கள் செய்பவையே தவிர செய்விப்பவை கிடையாது.

எப்படி பிரம்மா பாபா அனுபவம் சொன்னார் - பிரம்மா பாபா ஆரம்பத்தில் இந்த அப்பியாசம் செய்தார் - ஒவ்வொரு நாளின் இறுதி நேரத்திலும் இந்தக் கர்மேந்திரியங்களின் ராஜ-தர்பாரைக் கூட்டினார். பழைய குழந்தைகள் அந்த டைரியைப் பார்த்திருப்பார்கள், தினந்தோறும் தர்பாரைக் கூட்டினார் மற்றும் செய்விப்பவராகிய மாலிக் ஆகி, ஒவ்வொரு கர்மேந்திரியத்தின் தகவலையும் பெறவும் கொடுக்கவும் செய்தார். அந்த அளவு கவனத்தை ஆரம்பத்திலேயே பிரம்மா பாபா கொடுத்தார். எனவே நீங்களும் கூட செய்விப்பவராகிய மாலிக் நான் என உணர்ந்து, கர்மேந்திரி யங்கள் மூலம் கர்மங்களைச் செய்விக்க வேண்டும். ஏனென்றால் ஆத்மா ராஜா, இந்தக் கர்மேந்திரி யங்கள் அவருக்குத் துணையாக இருப்பவை. எனவே இதை சோதித்துப் பார்க்க வேண்டும் - இன்றைய நாளில் விசேஷமாக மனம்-புத்தி சம்ஸ்காரம், சுபாவம் என்றாலும் சரி, சம்ஸ்காரம் என்றாலும் சரி, இவற்றின் நிலை என்னவாக இருந்தது? உடனே சோதித்துப் பார்ப்பதன் மூலம் கர்மேந்திரியங் களுக்கு கவனம் இருக்கும் - நம்முடைய ராஜா நமது நிலையின் செய்தியை எடுத்துப் பார்ப்பார். அதனால் ஆத்மா ராஜா செய்பவையாகிய கர்மேந்திரியங்களிடம் செய்விப்பவராகி சோதித்துப் பாருங்கள். இல்லையென்றால் அநேகக் குழந்தைகள் சொல்கிறார்கள் - நான் கர்மேந்திரியங்களுக்குக் கட்டளை இடுகிறேன், ஆனால் பிறகு இப்படி நடந்து விடுகிறது. புருஷார்த்தம் செய்கின்றனர், ஆனால் சில சம்ஸ்காரங்கள் அல்லது சுபாவங்கள் கட்டளைப்படி நடப்பதில்லை. அதற்கான காரணம் இந்தத் தனது சுபாவத்தின் இருக்கை மீது செட்டாகி இருப்ப தில்லை. இருக்கையில் அமராமல் எவ்வளவு தான் கட்டளையிட்டாலும் கட்டளையை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே கர்மம் செய்யும் போது தனது செய்விப்பவர் என்ற எஜமான் தன்மையின் இருக்கையில் செட்டாகி இருங்கள். குழந்தைகள் பலர் இப்படியும் பாப்தாதாவிடம் ஆன்மிக உரையாடல் செய்கின்றனர் - பாபா, நீங்கள் என்னை சர்வசக்திவான் ஆக்கினீர்கள். சக்திவான் கூட இல்லை, சர்வசக்திவான் என்ற வரதானம் ஒவ்வொரு குழந்தைக்கும் பிராமண ஜென்மம் எடுத்ததுமே கொடுத்தீர்கள். நினைவிருக்கிறதா உங்கள் ஜென்மத்தின் வரதானம்? ஒவ்வொரு குழந்தைக்கும் பாபா மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக என்ற வரதானம் கொடுத்துள்ளார். வரதானம் கொடுத்தவர் யார்? அல்மைட்டி அத்தாரிட்டி! ஆனால் புகார் செய்கின்றனர் - எந்தச் சமயம் எந்த சக்தி வேண்டுமோ, அது வருவதில்லை. கட்டளையை ஏற்று நடப்பதில்லை. அது ஏன்? அது அல்மைட்டி அத்தாரிட்டியின் வரதானம் எனும் போது அதை விடப் பெரியது எதுவும் கிடையாது. எனவே வரதானத்தின் ஸ்திதியில் நிலைத்திருந்து கட்டளையிடு வீர்களானால், நீங்கள் கட்டளை இடுகிறீர்கள், மற்றும் சக்தி ஏற்பதில்லை என்பது நடக்க முடியாத தாகும். ஒன்று, ஆத்மா மாலிக், சர்வ சக்திவானின் வரதானம் கிடைத்துள்ளது. அந்த சொரூபத்தில் நிலைத்திருந்து, நான் மாலிக், வரதானம் உள்ளது, இரண்டு சொரூபங்களின் ஸ்மிருதியின் ஸ்திதியில் இருந்தவாறு கட்டளை இடுங்கள். சக்தி உங்கள் கட்டளையை ஏற்காது என்பது அசம்பவம். ஏனென்றால் வரதானம் மற்றும் பாபாவின் ஆஸ்திக்கான உரிமை. சங்கமயுகத்தில் உங்கள் அனைவர்க்கும் சர்வசக்திவான் என்ற டைட்டில் கிடைத்துள்ளது. அந்த ஸ்திதியில் மட்டும் நிலைத்திருப்பதில்லை, சதா இருப்பதில்லை. எப்போதாவது வந்து விடுகிறது. இந்த எப்போதாவது என்ற சொல்லை உங்கள் பிராமண டிக்ஷனரியில் இருந்து நீக்கி விடுங்கள். இப்போதே ஆஜர். நீங்கள் சொல்கிறீர்கள் இல்லையா, பாபா உங்களை நாங்கள் நினைவு செய்கிறோம் என்றால் நீங்கள் ஆஜராகி விடுகிறீர்கள். அனுபவம் உள்ளதா? இப்போது பாருங்கள், கைகளையோ உயர்த்து கிறீர்கள். பாபா ஆஜராகி விடுகிறார். ஹஜுர் (பிரபு) ஆஜராகி விடுகிறார். அப்போது இந்த சக்தி என்பது என்ன? இந்த சக்திகளும் கூட உங்களுக்கு பாபாவிடமிருந்து சொத்தாகக் கிடைத்துள்ளன. எனவே மாலிக் ஆகிக் கட்டளை இடுங்கள். ஆனால் மாலிக் ஆகிக் கட்டளை இடுவதில்லை, சக்தி காணாமல் போய் விடுகிறது இல்லையா, அப்போது அதே ஸ்திதியில் இருந்தவாறு கட்டளை இடுகிறீர்கள். ஆக, மாலிக்கே இல்லையென்றால் கட்டளையை ஏன் ஏற்க வேண்டும்?

பாப்தாதா இப்போது எதை விரும்புகிறார்? தெரியும் இல்லையா? பாபா இப்போது இதைத் தான் விரும்புகிறார் - என்னுடைய ஒவ்வொரு குழந்தையும் கர்மம் செய்யும் போதும் ராஜா குழந்தை ஆகி, சுயராஜ்ய அதிகாரி ஆகி, சுயராஜ்யத்தின் இருக்கையை விடாமல் இருக்க வேண்டும். ராஜா நாள் முழுவதும் ராஜாவாகத் தான் இருப்பார் இல்லையா? அல்லது சில நேரம் ராஜாவாக இருப்பார், சில நேரம் இல்லை என்று அப்படியா? சிம்மாசனத்தில் அமர்வது, அல்லது அமராமல் இருப்பது என்பது வேறு விஷயம். ஆனால் வீட்டில் இருக்கும் போதும் நான் ராஜா என்பதை மறக்கக் கூடாது. எனவே கர்மயோகி மற்றும் அமிர்தவேளையின் யதார்த்த யோகம் சக்திசாலி ஸ்திதி அதில் வித்தியாசம் வரக்கூடாது. இரட்டை வேலை ஆனால் நீங்கள் யார்? நீங்களோ உலகை மாற்றுபவர். உலக நன்மை செய்பவர். எனவே பாபா இதைத் தான் விரும்புகிறார் - நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் ராஜா என்ற நிலையை மறக்காதீர்கள். இருக்கையை விடாதீர்கள். இருக்கையில் இல்லாத போது கட்டளையை யாரும் ஏற்று நடப்பதில்லை. தற்காலம் பாருங்கள், இருக்கைக்குப் பின்னால் என்னவெல்லாம் செய்கிறார்கள்! தங்கள் உரிமையைப் பெறுவதற்காக எவ்வளவு முயற்சி செய்கிறார்கள்! தனது உரிமையை விட்டுவிட யாரும் விரும்புவதில்லை. ஆக, நீங்கள் உங்கள் பரமாத்ம உரிமை - நான் யார்? ஒவ்வொரு நேரமும் என்ன காரியம் செய்கிறீர்களோ, அப்போது காரியம் செய்து கொண்டே தனது மனதின் நேர அட்டவணையை (டைம் டேபுள்) தயார் செய்து வையுங்கள். இந்தக் காரியம் செய்யும் போதும் மனதின் சுவமான் என்னவாக இருந்தது? இன்றைய தினம் என்ன லட்சியம் வைப்பேன்? ஒவ்வொரு காரியத்தின் நேரத்திலும், தன்னுடைய சுவமான்களின் பட்டியல் என்ன உள்ளதோ, அதற்காகப் பல்வேறு டைம் டேபுள்களை உருவாக்குங்கள். எப்படி ஸ்தூல காரியங்களின் டைம் டேபுளைத் தீர்மானிக்கிறீர்களோ, அது போல் மனதின் டைம் டேபுளை நிர்ணயம் செய்யுங்கள். இச்சமயம் இந்தக் காரியம் செய்ய வேண்டும் என்பது தெரியவே செய்கிறது. அதோடு சுவமான் என்ன வைக்க வேண்டும்? மாலிக் தன்மையின் அதிகாரத்தை எந்த சுவமான் ரூபத்தில் வைக்க வேண்டும்? இந்த மனதின் டைம் டேபுள் உருவாக்குங்கள். நல்ல உணவைச் சமைக்க வேண்டும், அச்சமயம் எந்த சுவமானைத் தனது புத்தியில் வெளிப்படுத்தி வைக்க வேண்டும்? சுவமான்களின் மாலைகள் அநேகம் உள்ளன. அவ்வளவு பெரிய மாலை - சுவமான்களை எண்ணிக் கொண்டே செல்லுங்கள் மற்றும் மாலையில் மூழ்கி விடுங்கள். ஆக, இப்போது நீண்ட காலத்தின் அப்பியாசம் தேவை. குழந்தைகள் சிலர் சொல்கிறார்கள் - இது வரையிலும் கூட விநாசத்தைப் பற்றிய எதுவும் காணப் படவில்லை. இப்போதோ தேதி நிர்ணயிக்கப்படவில்லை. செய்து விடுவோம், ஆகி விடும் - இந்த அலட்சியம் உள்ளது. செய்தி கொடுப்பதிலும் விஷ்வ கல்யாண்காரி என்றால், குழந்தைகள் பலர் நினைக்கிறார்கள் - இன்னும் சமயம் உள்ளது, இனி வரப்போகும் சமயங்களில் செய்தி கொடுத்து விடுவோம். ஆனால் அப்படி இல்லை. யாருக்கு நீங்கள் பின்னால் செய்தி கொடுக்கிறீர்களோ, அவர் களும் உங்கள் மீது புகார் தெரிவிப்பார்கள். என்ன புகார் செய்வார்கள்? நீங்கள் முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் நாங்களும் ஏதாவது செய்திருப்போமே! இப்போது நீங்கள் கடைசி நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அதனால் நாங்களோ வெறுமனே அறிந்து கொண்டு அஹோ பிரபு! உங்கள் லீலையே லீலை என்று மட்டும் தான் சொல்ல முடியும். ஏன்? நீண்ட காலத்தின் சகயோகமும் வேண்டும். நீங்கள் அனைவரும் வாரிசுகள் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? தங்களை வாரிசுகள் எனப் புரிந்து கொண்டிருப்பவர்கள் கை உயர்த்துங்கள். வாரிசுகளா? நல்லது. வாரிசுகள் என்றால் நீங்கள் முழு ஆஸ்தி பெற வேண்டுமா அல்லது கொஞ்சமா? அனைவரும் சொல்வார்கள், முழு ஆஸ்தி பெற வேண்டும் என்று. ஆக, முழு ஆஸ்தி என்றால் 21 பிறவிகளுக்கும் முழுமையாக. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ராயல் பிரஜா இல்லை, ராயல் குடும்பத்தில் வர வேண்டும். ராஜ குடும்பத்தில் வர வேண்டும். சிம்மாசனத்திலோ ஒருவர் தாம் அமர்வார் இல்லையா? யுகல் அமர்வார்கள். ஆனால் அங்குள்ள சபை கூடும் போதெல்லாம் ராயல் குடும்பத்தின் விசேஷ நிமித்த ஆத்மாக்கள் கிரீடதாரி ஆகி அமர்ந்திருப் பார்கள். கிரீடம் இல்லாமல் அமர மாட்டார்கள். மேலும் ஒவ்வொரு காரியத்திலும் அறிவுரை ஆலோசனை கொடுப்பவர்கள், வேறுமனே ராஜ்யம் மட்டும் தான் செய்வார்கள் என்பதில்லை. அதோடு ஆலோசனை மூலம் தான் செய்கிறார்கள். எனவே முழு ஆஸ்தி பெற வேண்டுமானால் முதல் பிறவியில் தொடங்கி, கடைசி வரை 21 பிறவிகளுக்கு முழுமையாக, பாதி இல்லை, இடையிலோ போக முடியாது. ஆக, முழு ஆஸ்தி பெற வேண்டுமா அல்லது கொஞ்சம் போதும் என்று குஷியடைந்து விட வேண்டுமா? உங்கள் மாதேஷ்வரி ஜெகத் அம்பா சதா இந்த லட்சியம் வைத்தார்கள் - பாப்தாதா என்ன ஸ்ரீமத் கொடுத்தார்களோ. மனதாலோ, சொல்லாலோ. செயலாலோ என்னென்ன ஸ்ரீமத் கொடுத்தார்களோ, அதை நாம் செய்தே ஆக வேண்டும். அது போல் முழு ஆஸ்தி பெறக்கூடியவர்கள் இதே லட்சியத்தை புத்தியில் வையுங்கள் - திடீரென எதுவும் நடக்கலாம், எவர்-ரெடியாக இருக்க வேண்டும் மற்றும் நீண்ட கால அப்பியாசம். இந்த மூன்று சொற்களையுமே ஒன்றாக நினைவு வையுங்கள். எனவே பாப்தாதாவின் ஆசைகளின் தீபங்களாகிய குழந்தைகள் அனைவர்க்காகவும் இந்த வரதானம் --- சதா இந்த மூன்று சொற்களையும் நினைவில் வைத்து அனைவரும் ஆசைகளின் தீபம் ஆவதற்கான பிரத்தியட்ச நிரூபணத்தைக் காண்பியுங்கள்.

வெளிநாட்டினரும்கூட மனசா சேவையின் மூலம் சகயோகிகள் இல்லையா? பாப்தாதா பார்த்தார் - விருத்தி அனைத்து தர்மங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தர்மம் மட்டுமில்லை, ஹிந்து தர்மம் மட்டு மில்லை, ஆனால் முஸ்லிம், பௌத்தர், கிறிஸ்தவர் என்று அனைத்து தர்மங்களும் மெது-மெதுவாக ஆன்மிகத்தில் ருசி பெற்றுக் கொண்டு வருகின்றனர். முதலில் பாருங்கள், பிரம்மா குமாரிகள் என்ற பெயரைக் கேட்டாலே பயந்தார்கள். இவர்கள் என்ன விநாசம்-விநாசம் என்று பேசுகிறார்கள்? மற்றும் இப்போது என்ன சொல்கிறார்கள்? விநாசம் எப்போது நடக்கும், எப்படி நடக்கும், என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். எனவே நடந்தே ஆக வேண்டும். இது கேரண்டி. உங்கள் அனைவர்க்கும் கேரண்டி இல்லையா? வெளி நாட்டினரானாலும் பாரதவாசிகள் ஆனாலும் கேரண்டி இல்லையா? பாப்தாதா என்ன சமிக்ஞை கொடுத்துள்ளாரோ, அதன்படி புருஷார்த்தத்தைத் தீவிரப் படுத்துங்கள். புருஷார்த்தம் இல்லை, புருஷார்த்தத்திற்கான சமயம் கடந்து விட்டது. இப்போது தீவிர புருஷார்த்தத்திற்கான சமயம். மேலும் எப்போதாவது என்பதில் நிற்காதீர்கள். இப்போது! இப்போதே செய்ய வேண்டும். நல்லது.

நாலாபுறம் உள்ள தீவிர புருஷார்த்தி, சதா ஊக்கம்-உற்சாத்துடன் முன்னால் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளுக்கு பாப்தாதா நினைவுதினத்தின் அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதாவின் இதயத்தில் ஒவ்வொரு குழந்தையும் நிறைந்திருக்கிறார். வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகளோடு கூடவே நமஸ்தேயும்!

ஆசீர்வாதம்:
சக்திசாலி ஸ்திதி மூலம் படைப்பின் அனைத்துக் கவர்ச்சிகளில்
இருந்தும் தூர விலகி இருக்கக் கூடிய மாஸ்டர் படைப்பவர் ஆகுக.

எப்போது மாஸ்டர் படைப்பவர் மற்றும் மாஸ்டர் ஞானம் நிறைந்தவரின் சக்திசாலி ஸ்திதி மற்றும் நஷாவில் நிலைத்திருக்கிறீர்களோ, அப்போது படைப்பின் அனைத்துக் கவர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டு இருக்க முடியும். ஏனென்றால் இப்போது படைப்பு இன்னும் பலவித நிறங்கள்-வகைகள், வடிவங்களைப் படைக்கும். எனவே இப்போது குழந்தைப் பருவ தவறுகள், அலட்சியத்தின் தவறுகள், அக்கறையற்ற தன்மையின் பிழைகள் என்னென்ன மிஞ்சியுள்ளனவோ, அவற்றை மறந்து தனது சக்திசாலி, சக்தி-சொரூபம், , சஸ்த்ரதாரி சொரூபம், சதா விழிப்புடன் கூடிய ஜோதி சொரூபத்தைப் பிரத்தியட்சம் செய்யுங்கள். அப்போது மாஸ்டர் படைப்பவர் எனச் சொல்வார்கள்.

சுலோகன்:
மனதின் ஸ்திதியில் அந்த மாதிரி கடினமாக ஆகுங்கள் -
எந்த ஒரு பரிஸ்திதியும் அதை உருக்கி விட முடியாத படி.


அவ்யக்த இஷாரா - சதா ஆடாத, அசையாத, ஒரே சமநிலையின்

ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்

எந்த ஒரு சூழ்நிலை அல்லது வாயுமண்டலத்தில் இருந்தாலும், ஸ்திதி சதா ஆடாத, அசையாத ஏக்ரஸ் நிலையில் இருக்க வேண்டும். எப்போதாவது நிமித்தமாகி யிருப்பவர்கள் ஏதேனும் அறிவுரை தருகிறார்கள் என்றால் அதில் குழப்பமடையக் கூடாது. ஏனென்றால் யார் நிமித்தமாகி யிருக்னகிறார்களோ, அவர்கள் அனுபவி ஆகி விட்டவர்கள். அவர்களின் ஏதேனும் வழிகாட்டுதல் தெளிவாக இல்லை என்றாலும் கூட குழப்பத்தில் வரக்கூடாது. பொறுமையுடன் சொல்லுங்கள் - இதைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கிறேன். அப்போது ஸ்திதி ஏக்ரஸ், ஆடாத, அசையாத தாக இருக்கும்.